திரு நெடும் தாண்டகம்-9-வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
மல்லையாய்! மதிள் கச்சி ஊராய்!  பேராய்!
கொங்கத்தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன்
குல வரையன் மடப் பாவை இடப் பால் கொண்டான்
பங்கத்தாய்! பால்  கடலாய்! பாரின் மேலாய்!
பனி வரையின் உச்சியாய்! பவள வண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி
ஏழையேன் இங்கனமே உழி தருகின்றேனே–9-

நாடி நாடி தேடி போவதை மீண்டும் அருளுகிறார்-
கடவுள் கை இல்லை -ஏழை-சொத்தாக அவனை பெற வில்லை–
வங்கம்=கப்பல் திரு கடல் மலை /காஞ்சி புரம்/ திரு பேர் நகர் -அப்பக் குடத்தான்–
பார்வதி தேவிக்கு இடப்பால் கொண்ட சிவனை   தன் உடம்பில் கொண்டவன் /
திரு பாற் கடல்/ பாரின் மேலாய் -விபவம்/ பனி வரை உச்சி-திரு வேம்கடம்–பவள வண்ணனே எங்கு உற்றாய் —
அவன் தான் இருந்த இடத்தில் முகம் காட்ட வில்லை–தான் இருந்த இடம் திரு கோவலூர் ஆக வில்லை–என்ன ஆசை இவருக்கு –
இவர் இருக்கிற இடமே திரு கோவலூர் ஆக வேண்டுமாம்–கல்யாண குணங்களை அனுபவித்தார் முகம் காட்டுவான் என்று —
இதில்-செவ்வி உடன் திரு கோவலூர்  இருந்தமை காட்டிக் கொடுத்து –
ஆசை உடன் இருக்கும் இவர் -அனுபவிக்க வேண்டியது தானே -என்று நினைத்து இருந்தான் போலும்–
நான் அயோக்யன் என்றுமுகம் காட்டாது இருந்தானோ–சங்கித்து –இரண்டாவது காரணம் இருக்க முடியாது
அவன் சௌசீல்யம் -ஆசா லேசம் இருந்தால் போதுமே –யோக்யதை பாராமல் சேவை சாதிப்பானே–
இழக்கைக்கு அடி ஏன் பாபம் தானே- நானே தான் ஆயிடுக —
இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏற்றி சொன்னாலும் ஒத்து கொள்வதே ஸ்ரீ வைஷ்ணவன்—
சேரவும் ஒட்டாமல் முடியவும் முடியாமல்-கிடந்த இடத்திலே இருந்து உழன்று -உழி தருகின்றேனே —
விசேஷணம் -திரு கடல் மல்லைக்கு -ஆஸ்ரிதன் -கடல் வற்றினால் அல்லது சேவை -புண்டரீகன் -மாலை சாத்தி சேவிக்க —
இறைக்க பார்க்க -திரு அநந்த ஆழ்வானை துறந்து மாலை சாத்தி கொண்டு தல சயன பெருமாள்–
அதே போல் எனக்கு சேவை சாதிக்க வில்லையே–

மரக் கலம் ஆகிறது -தீபாந்தர வஸ்துவை தீபாந்தரத்தில் தள்ளும் –
ஆஸ்ரித வாத்சல்யம்–பரம பத்தில் உள்ள ரத்னம்-ஸ்ரீ மன் நாராயணன் -மணியை-கொண்டு வந்து தள்ளிய கப்பல் இது தானே–
லீலா  விபூதியில் தள்ளினதாம்–
கையார் சக்கரத்து கரு மாணிக்கமே — பெரிய திரு மொழி 9-5 வானவர் உச்சி வைத்த பெருமணி–
வந்து சேர்ந்த என்று சொல்லாமல்  -உந்து -தள்ளிற்றாம் –கேட்பார் அற்று கிடக்கிறதாம்–
அந்த மணிக்கு யாரும் வர வில்லை அவன் இடம் வேறு மணியை வாங்க வருகிறார்கள்– சரக்கு வாங்க ஆள் இல்லை–
சூரி போக்ய வஸ்து -சரக்கு போல கொண்டு வந்த தப்பு-பிரயோஜன பரர்கள் தானே —
சோம்பாது கடல் கரையில் கிடக்கிறான்–ரத்னம் கிளம்பாது -இவர் போகலாமே –முந்நீர் மல்லையாய் கிடக்கிறானே –
அசேதனம் போல வாசி அற இட்டது இட்டதாக கிடக்கிறானே–அனந்த சாயி கிடீர் -இங்கு வந்து கிடக்கிறானே —
நித்ய அநபாயினி- அவளையும் விட்டு விட்டு வந்தானே –அரவிந்த பாவையும் தானும் அகம் பட வந்து புகுந்தான் அங்கு —
சீர்மை அறிந்து பேணுவார் இல்லை என்ற தன்மை சொல்கிறார் இந்த விசேஷணம் —

மதிள் கச்சி ஊராய் -கடல் கரையில் வந்த வஸ்து நகரம் போவது போல –நகரேசு காஞ்சி–
தேவ பெருமாளாகி நிற்க –மீண்டும் கச்சி-பிரயோஜன பேதம்–சில தார்மிகர் பேணும் மதிள் கட்டி ரத்னம் வைத்தார்களே —
பெட்டகம் போல -சீர்மை அறிந்து -ஆழ்வார் ஆச்வாசம்–இழவை பற்று அங்கு கூப்பிட்டார் முன் பாசுரம்-இங்கு பரிவுடன்–
இழவிலும் அத் தலைக்கு  என்ன ஆகுமோ என்று அடிமை தனம் தெரிந்தவர் பரிவதே ஸ்வரூபம்-
பிரதி கூலர் கிட்டாமல் இருக்க மதிள்கள்-
மல்லையாய் மதிள் கச்சி ஊராய்-
துறையில் இறங்கிய வஸ்து  நகரத்தில் விலை பெற்ற படி —
சுகுமாரம் பார்த்து பரிகையும் தனிமை பார்த்து கிலாக்கையும் -நித்யர் உடன் சாம கானம் கேட்டு இருந்தவர்–
அவனை வேலை வாங்குவார்-பிரயோஜனாந்த பரர்கள்-

பேராய்–பொருப்பே உறைகின்ற பிரான் என் நெஞ்சுள் பேரென் என்று உறைகின்றான்  —
திரு மால் இரும் சோலை என்றவனுக்கு விமுகரையும் மடி மாங்காய் இட்டு கொள்பவன்–
என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் கோவில் வலம் வந்தாய் அடியார் ஒதுங்க இடம் கொடுத்தாய்–
தன்னை விட்டுப் போகாத என்னை விஷயீ கரிக்காமல்–தானே வந்து முகம் கொடுத்த படியை இம் மூன்றாலும் சொல்லி —
அனைவருக்குமாக தானே இருக்கிறாய் உயர்ந்தவர்  மட்டும் இல்லை-
நாயே கொள் பேயே கொள் -வடிவை கொடுக்கிறாய்–நான் நாயும் பேயும் இல்லை எனக்கு கொடுக்க வில்லை–

ருத்ரன் சுடுகாட்டில் இருப்பதால்- தேன் பரி மளம்-கொன்றை மாலை தரித்த-பார்வதியை தனக்கு –
திரு நாள் எழுந்து அருளுவிகிறது  -கோலா கலம்- விசேஷணம் சொன்னது –துர் மானம்–சொல்பவன்-
நடக்காது பொழுது அவளையும் கூட்டி காலில் விழுவான்-ஈச்வரோஹம் –
மாலை சாத்தி கொண்டவன் -கொன்றை மாலை–துழாய் மாலைக்கு சாம்யம் ஆகாது –பார்வதி ஸ்ரீ தேவிக்கு சாம்யம் இல்லை –
இவனுக்கே இடம் கொடுத்க்து -எனக்கு காட்டாது ஒழியலாமா–
தண்  துழாய் மாலை மார்பன் அவன்–ஈஸ்வரன் சொல்லி கொள்ள மாலை போட்டு கொள்கிறான் ருத்ரனனும்–
குல வரையன் மடப் பாவை-மிதுனமாய் இருக்க வேண்டும் என்று –மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்—
வல மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கு -எதிர் தட்டாய் இடப் பால் கொண்டான்–பங்கத்தாய்–இவனுக்கு இடம் கொடுத்தாய்-
கூறாளும் தனி உடம்பன்–பெரிய பிராட்டி கூட வழக்கு பேசி இருக்கும் படி நித்ய அநபாயினி-
கேட்டு வரம் வாங்கி கொள்ள இவன் -அவள் நமக்கு என்று —
அவன் படியையும் தம் படியையும் அவள் படியையும் –பாராமல் சம்பந்தம் உண்டு என்பதால் தானே —
எனக்கு அருள வில்லையே சம்பந்தம் எனக்கும் உண்டே –பர தந்த்ரனாய் இருக்கும் எனக்கு —
பர ரஷக நியாயம்-அனைவரையும் காக்க பாற் கடலில் சயனம்–கூப்பிடு இடம்–அபேஷா நிர பேஷமாக முகம் கொடுக்க -இருக்கிறவன்–
அபேஷித்து கூப்பிடும் எனக்கு வர வில்லையே –குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் சரணம் புக ராம கிருஷ்ணன் –
மானிடராய் பிறந்து படாதன பட்டாயே –இந்த்ரன் கல் மழை பொழிய பிரம மாடு கன்று அபகரிக்க
சிவன் பாணசுரன்–ச அந்த எம்பெருமான்-பகுவ குண சீர்மை–குணாதிகன் பிறந்தான்—

தேவர்களால் பிரார்த்திக்க -நித்யர்களால் இல்லை- உப்பு சாறு கேட்டவர்கள்–காரியம் கொண்ட பின் எதிர் அம்பு தொடுப்பவர்கள் —
ராவணச்ய வத புழு பூச்சி கொல்ல -செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீற்றம் கொண்டு —
வேண்டியவன் என்று சொல்லி கொண்டே விரோதிகள்– இவர்களுக்கு கார்யம்-
இது கிடீர் அவர்கள் பண்ணிய தபசு–வேண்டி கொண்டதே –மானுஷே லோகே –
கீழ் நோக்கி தேவர்களும் கால் வைக்காத இங்கே வந்து பிறந்தானே -மனுசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவர் போலே –
ஜக்னே  -பன்னிரு திங்கள் மணி வயிறு -விஷ்ணு- வியாபக வஸ்து கிடீர் வியாபிக்க பட்ட ஒரு இடத்தில் –
சனாதனன்- என்றும் இருப்பவன் பிறக்கிறான்– அழித்து கொண்டு பிறந்தாயே —

பனி வரை மேல் உச்சியாய்-  இன்றும் நிகின ஜாதிக்கும் அகப் பட -கானகமும் வானரமும் வேடும் உடை  வேம்கடம் .. 
கண்ணாவான் –எனக்கு முகம் காட்ட வில்லையே –
பவள வண்ணா –ஆறி இருக்கும் படி இல்லையே உன் அழகு–ஆசை தூண்டும் வடிவழகு —

எங்குற்றாய்-கண்ணை சுழல விட்டார்-அனுபவித்து மயங்கி- –
ராம  மே அனுகதா சிருஷ்டி–தசரதன்–என் கண் ராமன் பின் -அழகை பார்த்து -ஆஸ்ராயணம் விட்டு பார்க்க வேண்டிய வஸ்து பின் போனதே —
பிறந்தகத்தில் சம்பந்தம் -கண் கூட போக பெற்றதே நான் விச்லேஷத்தில் அழிய கிடக்க –
கர்த்தா இல்லாமல் கரணமாக இருந்து இருக்கலாமே –இவ் வளவும் மீண்டது இல்லை–
உன்னையும் காண முடியவில்லை கௌசல்யை–நீ வந்தும் பார்க்க முடிய வில்லையே -கையால் தொடு–
அபிஷேகம் பாரித்து இருந்தாய் -காட்டுக்கு போக விட்டேன்- இரங்கி ஸ்பர்சி- தொடு உணர்வும் போனதா என்று தொட்டு சொல் –
இழந்தவற்றை கணக்கு பார்கிறான்-தடவி பார்–

அடியார்களுக்கு தான் சேவை-பக்தாநாம் -எங்குற்றாய் வடிவை ஒழிக்கவோ–ஆசை கிளப்பி விட்டு பறித்தாயே —
தன் ஆற்றாமை செப்பீடாக கொண்டு வருவானோ–கையை நீட்டு எங்குற்றாய்- கைக்கு எட்டும் என்று இருக்கிறார் –
உபக்னம் பெறாத கொடி போல -கோல் தேடி ஓடும் கொழுந்தே போல்  மால் தேடி ஓடும் மனம்  –
என் ஸ்வாமி- சொத்தா ஸ்வாமி தேடும் –உடைமை இருக்கும் இடம் தானே உடையவன் முகம் காட்ட வேண்டும்-
நீ எங்குற்றாய் என் தேடி வர வேண்டும் சோறு இருக்கும் இடம் தானே பசியன் போக வேண்டும் —
உன்னைத் தேடி- உயர்ந்தவன் நிரதிசய போக்கியம்-பிராப்தியும் துவரைக்கு ஹேது –
இத்தனை நாளும் எதிர் சூழல் புக்கு ஒருவனை பிடிக்க ஊரை பிடிப்பாரை போல ஓடினேன் ஓடினேன்
நீயே மேல் விழுந்து உன்னை -தளிர் புரையும் திரு வடி என் தலை மேல் உன் பேறாக வைத்து உன்னை பிரிந்து நோவு பட்டு ஒழியவா —
நீர் தெரிந்து கொண்டீரே மோஷம் செய்வோம் -இருப்பது தானே பிராப்தம் என்று அவன் சொல்வதாக கொண்டு
சீதை போல இருக்க -ஏழையேன் என்கிறார் சபலம் தேடி போவது போல துடிக்கிறேன் —
நப்பாசை–நீ செய்ததை அனுசந்தித்து ஆறி இருக்க முடியவில்லை —
இங்கனமே -சரீரம் காட்டுகிறார்- ரிஷிகள் போல -விரகம் தின்ற உடம்பை காட்டுகிறார் —
முடியவும் தரிக்கவும் முடியாமல் -சொரூபம் நினைந்து ஆறவும் முடிய வில்லை–
சிந்தயந்தி தசரதன்  போல முடியவும் இல்லை–
சீதை போலவும் ஆறி இருக்க முடியவில்லை-
விரக தாபமே யாத்ரையாக இருக்கப் பெற்றேன்-

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: