திரு நெடும் தாண்டகம்–7-வற் புடைய வரை நெடும் தோள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

வற் புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள
வடிவாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த
வேள் முதலா வென்றானூர் விந்தை  மேய
கற்புடைய மடக் கன்னி காவல் பூண்ட
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்புடைய மழை யரையன் பணிய நின்ற
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே–7

நெஞ்சு -சீலன் -மட்டும் இல்லை மழு ஏந்தி இருக்கிறான் கவலை வேண்டாம் -பயப் பட்ட நெஞ்சுக்கு வீர பராக்ரங்கள் காட்ட – –
ஷத்ரிய மன்னர் மாளும் படி-மழு ஏந்தி– பரசுராம -உலகம் ஆண்ட-ஸ்ரீ ராமன்–பாணாசுரனை வென்ற ஸ்ரீ கிருஷ்ணன்–
வேள்-குமரன் கந்தன்-முருகன்–வென்றானூர்- கிருஷ்ண ஷேத்ரம்–
விந்தை-விந்தியா சலம்–காவல் -அவனுக்கும் பெருமை உண்டு மட கன்னி ராஜா இருக்கிறார் கவலை வேண்டாம் என்கிறார்–
திரு உள்ளம் கூட்டி அனுபவிக்க போனவர்–சங்கதி -வியாக்யானம்–

திரி விக்ரமனாக சேவை சாதிக்க -நீசர் பலர் உண்டே -வயிறு பிடிக்கிறார் —
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
பெரியாழ்வார் காலம் முன்பு அங்கு கருட வாகனம் கொண்டு பெரியாழ்வாருக்கு மட்டுமே–சௌசீல்யம் –
தாய் சேயை அணைத்து கொள்ளும் போல வட்சல்யம் காட்ட -அனுபவிக்காமல் பயப் படுகிறாரே–
கடின சித்தம் இல்லை உருகும் ஆழ்வார்- உருகப் பண்ண வைக்கும் பகவான்–பயப் பட்டே தீருகிறார்–
அஸ்தானே பய சங்கை–ப்ரேமம் கண்ணை மறைக்க –சிந்தயந்தி -ப்ரேமம் கண்ணை மறைத்தது போல–
ரஷ்ய ரஷக பாவம் தடு மாறி இருக்கும்–ஞான திசையில் தன் கப்பில் இருக்கும் பிரேம தசையில் மாறி இருக்குமே–
கோபுஷ-பசு ஐம்படை தாலி கொழு மோர் கொடுத்தாளே  யசோதை–
பக்தி –அதிகாரி-உபாசகன்-சாதனம்–அடைவிக்கும் வழி — பிர பன்னன்-பகவத் அனுபவத்துக்கு உப கரணம்– 
ஆழ்வார்–பயப் பட -போக உபகரணம் தவிர்ந்து -உபாய  உபகரணம் -சௌவ்ந்தர்யாதிகளை பார்த்தால்-
இப்படி ஸ்வரூபம் பார்த்தால் இல்லை–மங்களாசாசனம் ஸ்வரூப விருத்தம் இல்லை–வயிறு பிடிக்கிறார்–சௌவ்குமார்யம் பார்த்து–
திரு வாய் மொழி 8-3 அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் உன்னை இனையன்  என்று அறிய கில்லா –
அலற்றி -சோகம் வயிறு பிடித்தார்–அடுத்து 8-4- தன் பெருமை திண் பாகன் செகுத்து– பயம் தீர்ந்தார் —
இவரும் பயப் பட்டார்– மூன்று சரித்ரம் காட்ட வேண்டி இருக்கும் மார்த்வம் உடையவர் திரு மங்கை ஆழ்வார்–அவன் மூன்றும் காட்ட பாடுகிறார்–

ஆழ்வார்  சமாகிதர் ஆனார் -திரு பல்லாண்டு–தோளை காட்ட-மல் ஆண்ட திண் தோள்  பாடினார் –
எதை காட்டினாலும் பயம் போக வில்லை பெரியாழ்வாருக்கு-பொங்கும் பரிவு– —
கொடியார் மாட -கொடி கட்டி இருந்தாலும் பயப் படுவார் –பய நிவர்தகங்களுக்கு பயப் படுவார்கள் —
திரி விக்ரமன்-சௌவ்குமார்யம் அனுசந்தித்து வயிறு பிடிப்பார்கள்–
மகா ராஜர் விபீஷணன் அணு கூலராய் வந்து சரண் புகுந்து நிற்க தம் உடைய ப்ரேமம் கண்ணை மறைக்க
கொன்று விடுங்கள் கட்டி விடுங்கள்- ராமன் வீரம் மறந்து  70 வெள்ளம் வானரம் மறந்து அனுகூலர என்று மறந்து வயிறு பிடித்தான்–
விபரீதம் பகவத் விஷயத்துக்கு -அசுரர்-பயப் பட தன் விருத்தாந்தம் காட்டுவது அவன் -ரஷகன்-
ரஷிக்கை -அநிஷ்டம் போக்கி இஷ்டம் கொடுத்தல் பயம் நீக்கி அனுபவம் கொடுத்தல்- 
ராமன் சுக்ரீவனுக்கு –ராஜ நீதியை காட்டி-இஷ்வாகு குல பெருமை–சொல்லி–சுக்ரீவன் சமானாதம் ஆக வில்லை–
மித்திரன் வேஷம் போட்டு வந்தாலும் கை விட மாட்டேன் இது என் விரதம்–இதற்கும் சமாகீதன் ஆக வில்லை–
தம் தோள் வலியை காட்டினான்–யார் வந்தாலும் விரல் நுனியே போதும்–காட்டி சமாதானம் அடைந்தான்–
தன் மிடிக்கை காட்டி- வழு ஏந்தி -காவல் உறைப்பை காட்டி — தேசம் அரண் -காட்டி–புத்தி பிரதான முகத்தால் காட்ட–
மானச சாஷாத் காரம்–அத தலையில் சௌவ்குமார்யம் அனுசந்தித்து பயப் பட
சௌர்ய வீர்யம் காட்டி பயம் போக்கி-

சாரங்க வில் நாண் ஒலி -சீதை போக்கி/ -சங்கு ஒலி கேட்டு ருக்மிணி –
ஆண்டாள் இரண்டும் சேர்த்து மடுத்து ஊதிய  சங்கு ஒலியும் சாரங்க ஒலியும் —
வற்புடைய-மிடுக்கு-சக்தி-படைத்த மன்னர்களையே முடித்தாரே–
வார் கெடா வருவி போல ஒரு அவதாரம் காட்டி பண்ண முடியாது என்று–அநேக அவதாரம் மிடுக்கை காட்டி போக்க வேண்டும்-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட- நகம் சக்தி கோபம் ஈடு  கொடுக்க வரத்தால் பெருக்க வைத்த –பரியன்–
அத் தலையில் மிடுக்கு காட்ட-பலம் உடைய மலை போல பெருத்து இருக்கும் தோள்கள் உடைய மன்னர்–மாள–
மன்னர் ஈஸ்வரன் பிரதி நிதி—அநு கூல வேஷம்-அசுர ஸ்வாபம்-அவுணர்க்கு சலம்-
ஸ்வபாவத்தால் உயர்ந்தவரை ரஷிப்பான்-பார்த்தோம்-நிச்சேஷமாக நசித்தான்–
வடிவாய மழு ஏந்தி–கையில் ஏந்திய அழகை கண்டதுமே மாய்ந்தனர்–
மழுவின் கூர்மையையும் பிடித்த பிடியையும் கண்டு–ஓர் ஒன்றே போதும் கொல்கைக்கு இரண்டும் சேர்ந்ததே–
நரசிம்கன்-அங்கு அப் பொழுதே வீய தோன்றிய – தோன்றும் பொழுதே வீய்ந்தானே–
சங்கு ஒலி கேட்டே -சித்திர தேர் வலவா- தேர் கடாவிய -மாய போர் தேர் பாகு—

கையும் மழுவும் இருந்த இருப்பு-அழகுக்கு பல்லாண்டு பாடுகிறார் வெறும் புறத்தில் ஆலத்தி கழியும் படி இருக்கும்–
மழு-கொண்டாடுகிறாரே-வடிவாயா -ஏதேனும் ஆயுதம் பிடித்தாலும் தர்சநீயம்–வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு–போல–
திரு ஆழியும் -ஏந்திய அழகாலே தான் –ஏந்த பட்டது வைபவம்–குண கருத தாஸ்யம்–
அது இது உது –உன் செய்கை என்னை நைவிக்கும்–
நீர் செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்னும்-எது பார்க்க வில்லை எப்படி-
அது போல எதை ஏந்தினான் என்று இல்லை அவன் ஏந்தினான்–
உலகு ஆண்டான்–பரசு ராமன் ராஜ்ஜியம் ஆள வில்லை அதனால் ஸ்ரீ ராமன் அவதாரம் —
இவரோ கொன்று தடாகம் ஆக்கி கிரியை பண்ணினாரே–

மழு ஏந்தி உலகு ஆண்டு-சேர்த்தி -சொன்னது-குளித்து சாப்பிடு போல-ஸ்நாத்வா புஞ்சித  போல–
வஸ்து ஐக்கியம் -கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் -போல–
வலது கை -வஸ்து ஐக்கியம் அங்கு சொன்னாரே–
ஏந்தி ஆண்டு வென்றான்–வேற சொன்னாரே-அடுத்து அதனால் தனியாக கொள்ளலாம்–
நடுவில் ராமன் முன் பரசு ராமன் பின் கண்ணன் முடி இழந்த  குலத்தில் பிறந்தான்—
பரசுராமன் பெருமாளை கண்டவாறே -கையில் மழுவை புகட்டி
வில்லை எடுக்க வில்லோடு கூட அவனோடு சக்தியை வாங்கி அவ் வில்லாலே  ராவணன் போன்ற முள்ளை–
சிறியதை பெரியது நலியாத படி–அவன் சக்தி கொண்டு ஆண்டதால் கொள்ளலாம் —
உண்டும் உமிழ்ந்தும் -கடந்தும் இடந்தும் கிடந்ததும் நின்றதும் –
கண்டவாற்றால்  தனதே உலகே என்று நின்றான்-திரி விக்கிரம வராகன் ராமன் சேர்த்தாரே–
ஆழ்வாரும் – வேல்=சுப்ரமண்யன் முருக  வேள்-சேனாபதிகளில் நான் கந்தனாக இருக்கிறான்–
தேவ குமாரன் போன்ற  அழகு-ரிஷி கறி பூசுகிறார் —

வெற்ப்பை தனக்கு உடைய -பர்வதங்கள் சிறகு கொண்டு பறக்க -வஜ்ராயுதம் கொண்டு இந்த்ரன் அளிக்க –
ஓன்று ஒழிந்து கொள்ள அதை தன் வேலால் வென்றான்–
நெடும் கடல்–பர்வதம் எங்கு என்று தெரிய முடியாமல் நெடும் கடல்–
தனி வேல் உய்த்த -வேள் காமன் போல் பருவத்தாலும் வீர்யத்தாலும் இவனும் மன்மதன் போல—
காம வேள் போல–முதலா- முதலில் இவன் வந்தான் பாணாசுர யுத்தம்–மோடியும் வெற்பும் முதுகு இட்டு-
நேர் செறிந்தான் கொடி  கோழி கொண்டான் – -முக் கண் மூர்த்தி கண்டீர் -அப்பன் நேர் செறி வாணன் –
அடையாளம் சொல்லி முக் கண் -ஜெயித்த ஆண் பிள்ளை  விரும்பி வர்த்திக்கும் தேசம்–
தொகை தெரியாதது என்பதால்- முதலா -என்கிறார்–
பெரிய திருவடி மேல் அழிய சென்றான்-கிருஷ்ணனை ஜெயிக்க போகாது என்ற மதி கேடன்-ஆகையால்–
ந நமேயம்- ஈஸ்வரோஹம்  என்ற செருக்கை  காட்டி-தமோ ரஜோ குணம் உந்த —
வைஷ்ணவானாம் அஹம் சம்பு என்றான்- ஸ்ரீ வைஷ்ணவன் ஆக வில்லை இவன்–
அக்கரை போய் வந்த பின் தான் சிறிய திருவடி தாசோஹம் கோசலேந்த்ரஸ்ய –தூதோஹம் மாறி–
என்னை உருவாக்கி கடவுள் அந்தஸ்து கொடுத்தாய் அதனால் பாணாசுரனைக் கொல்ல கூடாது என்று கேட்டான்

அவர் அவர் விதி வழி அடைய நின்றோம்–அதனால் ரஷிக்க வேண்டும்–
செருக்கு அடியான தோள்களை வெட்டி-உஷை கண்ண நீர் பாய்ச்சக் கூடாது என்று –
கட்டி கொண்டு அழுகைக்கும் -காதைப் பிடித்து கொண்டு உன்னால் நான் கெட்டேன்–
வீரன் வர்த்திக்கும் திவ்ய தேசம்–சகலமும் ஆழ்வாருக்கு உத்தேசம்–

விந்தய பர்வதம் சுற்றி உள்ள கானகத்தில் இருந்தவள் அங்கு  தபஸ் இருந்தாள் விஷ்ணு துர்க்கை–
இந்த கானகம் வரை தான் ஸ்வாமி ராமானுஜர் வந்து திரும்பினார் –காவலுக்கு இருக்கிறாள்–உறைப்பை-இதற்கே தபஸ் பண்ணினாள்–
கற்புடைய மட கன்னி–நேராக பேரைச் சொன்னால் -சங்கை வரும்-
கைங்கர்யம் கொண்டே -கோவில் காப்பானே– வாசல் காப்பானே-போல –கைங்கர்யம் இட்டே பெயர்–திரு கரக கையெல்-போல–

அடிமைக்கு ருசி அமையாதோ–தபஸ் வேணுமா –அடிமை பிராப்தம் உண்டு–கற்பு -ஞானம் உடைய–/
ஸ்த்ரீத்வம்-போல காவலை கொள்பவள்–மடப்பம்-பற்றினது விடாமல்- கை தலம் பற்றக் கனாக் கண்டேன்–
கன்னி-அநந்ய பரை என்கை–காவல் பூண்ட -பிறர் நியமிக்க காத்தல் அன்றி தானே -காவல் காக்க இல்லை பூண்ட -ஏற் இட்டு கொண்டவள்–
அவன் ரஷகம் இயல்பு -பரிவு மிகுந்து தான் ஏற் இட்டு கொண்டாள்-
ஞானம் தன் கப்பில் இருக்கும்–ஞானம்  முற்றினால் -பக்தி பிரேமம் வந்தால் தட்டு மாறி இருக்கும் —
கன்னி- போக பிரவணையாய் இருந்தால் காவல் சோர்வு  வரும்– பிறந்த அன்றே -யோக மாயை–
நடை போந்தவள் இவள் பரிவு அன்றே ஆரம்பம்- தம்பி வளைக்காரி அன்றோ– மங்களா சாசனம் பண்ண ஆள் உண்டு–
சேஷ பூதன் பரிவின் மிகுதியால் —நின் செவ்வடி செவ்வி திரு காப்பு என்றார் போலே பொங்கும் பரிவு —

பொழில் பரிமளம்-நித்ய வசந்தம் ஆன தேசம்–போக்கியம் -சொல்ல வில்லை- பய நிவ்ருத்தி-பிரகரணம்–என்பதால்
உள்ளே புகுவார் இதில் மயங்கி -கடி பொழில் சோலையும் -பய நிவ்ருத்திக்கு—
போகம் மோஷம் -இரண்டும் புருஷார்த்தம் தானே -தன் பக்கலில் துவக்கு பட வைக்கும் —
கண்ணன் ரஷிக்கப் படுவான்–நெடு மறுகில்–தப்பி புகுந்தாரை–விஸ்தாரம்-கோபால சமுத்ரம் மன்னார் குடியில் வீதி பெயர்–
அடுத்து –கமல வேலி—காவல் வேண்டாத படி —
பொற்பு உடைய -மலையவான்-அரசன்–காவல் உறைப்பு -மலை வாசிகளுக்கு அரசன் ஆஸ்ரயிக்கும்–
தபஸ் பண்ணாமல் நிலவரால் காக்க படும் தேசம்–
குளம் குட்டை  சோலை யோக மாயை அரசன் -அனைவரும் ஒரே தட்டு ஆழ்வார் எண்ணத்தில் –ரஷிக்கும்-ஏக வசனம்–ஒரே ஜாதி–

பணிய நின்ற -சர்வ சமாஸ்ரியன்–நின்ற –க்ருத க்ருத்யனாய்   காலை வைத்த -அனைவரும் ஆஸ்ரியத்த பின்பு–
விமுகமாய் இருக்கும் பொழுதே சம்பந்தம் உணர்த்தி–சம்பந்தம் தெரிந்து ஆஸ்ரயித்தால் மகிழ் வானே–
ஆயனை தொழுதும் போகு நெஞ்சே இல்லை—
அவனை ஒழிய தேசமே போக்கியம் என்று இவர் திவ்ய தேசங்களில் மண்டிய படி—
ராமன் இருக்கும் இடத்தே விபீஷணன் வந்தான் போலே–
இவருக்கு பய நிவ்ருத்தி வந்த பின்பும் நெஞ்சு-கனிந்தது-அனுபவிக்க போகலாம் என்கிறார்-
உண்ண வா என்று கூப்பிடுகிறாய்–தொழுது எழுவதற்கு–அவன் துயர் அறுக்க –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: