திரு நெடும் தாண்டகம்–10-பொன் ஆனாய்! பொழில் ஏழும் காவல் பூண்ட-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

பொன் ஆனாய்! பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய்! இகழ்வாய் தொண்டனேன் நான்
என்னானாய்! என்னானாய்! என்னல் அல்லால்
என் அறிவன் ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென்னானாய்! வடவானாய்! குட பாலானாய்!
குண பால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன்னானாய்! பின்னானார் வணங்கும் சோதி!
திரு மூழிக்  களத்தானாய்! முதலானாயே–10-

பதவுரை

உலகம் ஏத்தும்-உலகமடங்கலும் துதிக்கத் தக்க தென் திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே!
வட ஆனாய்-வட திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே!
குட பால் ஆனாய்–மேற்றிசையில் (கோயிலில் திருக் கண் வளர்ந்தருளுகிற) யானை போன்றவனே!
குண பால மதம் யானாய்–கீழ்த் திசையில் (திருக் கண்ணபுரத்தில்) மத யானை போன்றவனே!
என்றும்–எக் காலத்திலும்
இமை யோர்க்கு முன்னானாய்-நித்ய ஸூரிகளுக்குக் கண்ணாற் கண்டு அநுபவிக்கலாம்படி முன்னிறபவனே!
பின்னானார் வணங்கும் சோதி–அவதாரத்திற்குப் பிற்பட்டவர்கள் ஆச்ரயிக்கத் தக்க சோதியாக
திருமூழிக் களத்து ஆனாய்–திருமூழிக் களம் முதலிய திருப்பதிகளிலுறைபவனே!
முதல் ஆனாய்–முழுமுதற் கடவுளே!
பொன் ஆனாய்–பொன் போன்றவனே!
பொழில் ஏழும் காவர் பூண்ட புகழ் ஆனாய்–ஸப்த லோகங்களையுங் காத்தருள்வதால் வந்த புகழுடையவனே!
இகழ்வு ஆய தொண்டனேன் ஏழையேன் நான்–இகழ்வையே வடிவாகவுடைய தொண்டனாய் அறிவிலியான நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னால் அல்லால்–என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுமித்தனையல்லது
என் அறிவன்-வேறு என்ன வென்று சொல்ல அறிவேன்?

கதறினதை -உபாயம் என்று தப்பாகா எண்ணிக் கொண்டானோ என்று இதில்  -துடிப்பு தான் உபாயம் இல்லை என்கிறார்–
இதிலும் பல திவ்ய தேசங்களை சேர்த்து அருளுகிறார் -ஸ்பஷ்டமாக சொல்லாமல் நான்கும் சொல்கிறார்
பொன்=பிராப்யம் காவல் பூண்ட -ரஷிகிறான் உபாயமும் அவன் —
ஆஸ்ரிதர் இருக்கும் இடம் சென்று முகம் கொடுப்பவன் -தனக்கு சேவை சாதிக்காதது —
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது வாழுதியேல்  முன்பு -சொன்னதை –செயல் இது -சாதனம் –
உபாயாந்தர சம்பந்தம்-திருவடியை சாதனாமாக பற்ற  வில்லை என்று சங்கித்து –
சம்பந்த நினைவாக-திரு மந்த்ரத்தை- கால ஷேப அர்த்தமாக சொன்னதை —
புரிந்து கொண்டு அருகில் செல்ல தானே -பொழுது போக்க சொன்னதை-உபாயம் என்று தவறாக —
பிராப்யம் உன்னை ஓன்று வேறு ஓன்று அறியாதவன் உன்னை தானே பிராபகமாக கொள்வேன் —
மந்திரத்தால்-சொன்னது சாதனா பாவம் தோற்றும்–மறவாது -வாழுதியேல்- இரண்டும் கர்தவ்யங்கள்–வாழலாம்-
பலமும் வேற இருக்கு தோற்றுகிறதே–இவருடைய நோற்ற நோன்பு இருக்கிற படி–
இவர் உடைய மைத்ரேயர் இருக்கிற படி =மதுரகவி ஆழ்வார்/ – ஆழ்வாரின் அவா போலே– 
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன் ஆகிஞ்சன்யம் ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற   கில்லேன்-
ஆசை விடாது -என்கிறார் — 

பொன்னானாய்-அடைய ஆசை படுகிற வஸ்து -பிராப்யம் ஆனவனே —
வைப்பாம் -நிதி சப்தமே பிராப்யம் –
சர்வேஷாம் பிராசிசாதாம் சாஸ்தா அனைவருக்கும் அணியாமாச அணியாம் சூஷ்மம் நியந்தா -ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம்
முதலில்  இதைச் சொன்னது வேறு பிராப்யம் அறியாதவன் வேறு பிராபகம் தேடி போக மாட்டேன் என்று காட்ட தானே — 
பொன் பிராப்யம் அதுவே ஆகாது –நாம் தான் தேடி சம்பாதிக்க வேண்டும் —
அவன் ஆனாய் – தானே மேல் விழுந்து ருசி பிறப்பித்து /

காவல் பூண்ட -ரஷிக்றான் -உபாயம்-அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுப்பவன்-
பொழில் ஏழும் -சப்த லோககங்களும் லீலா விபூதி -அண்டானாம் சகஸ்ரானாம் அனைத்துக்கும் உப லஷணம் —
ராஜாவாக முடி சூட்டி ஆள் இட்டு பண்ணாமல் தானே ஆயுதம் பூண்டு–காவல் பூண்ட  -தானே வந்து கார்யம் செய்கிறானே —
திடமாக -பூண்டு–கங்கணம் கட்டி கொண்டு- விரோதிகள் பல இருந்தாலும் கார்யம் செய்ய —
சுக்ரீவன்- மித்ரனாக வந்தாலும் கை விடேன்- என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார் –
அபயம் சர்வ -ஏதத் விரதம் மம-தன கையிலும் தன்னை காட்டி கொடாமல் -ஜீவாத்மாவை-ரஷிக்கிறான்
நான் நான் -செருக்கு ஸ்வாதந்த்ர்யம் வராமல் அவித்யா கர்ம ஜன்மம் போக்கி ரஷிப்பான்-
இன்று மட்டும் உபாயம் என்று –
மந்திரத்தால் மறவாமல் வாழுதியேல் என்று சாதனம் கர்த்வம் வாழலாம் பலம் வேற என்று நினைக்காதே —
நீயே மேல் விழுந்து -பூண்ட -காவல் காரர் விரும்பும் படி இருப்பார்களா –
போக்யதை-அவன் வேஷம்–அதனால் பூண்ட– உபாயம் சொன்னது  கதி சூன்யம்—
மருந்து -கசக்கும் -விருந்து -கசக்காத மருந்து பால் பித்தத்துக்கு மருந்து போல —
நீயே மேல் விழுந்து பிரப்யமும் பிராபகமும்/

புகழ்-குண -காப்பாளன் ஆன படியாலே புகழ் ஆனாய்–கீர்த்தி உடையவன்  உலப்பில் கீர்த்தி அம்மானே —
தாரை யச்சச்ச ஏக உபாயம்–யானி நாமானி -திரு நாமம்கள் குணம் பேசும்–
யார் அடைவர்-இகழ்வாய தொண்டனேன் -அதிகாரி ஸ்வரூபம் – சொல்கிறார் –நாராயணனே நமக்கே பறை தருவான் போல –
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் -புகழ் -அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம் -இகழ்வாய தொண்டனேன் –
தோஷங்கள் சம்பாதித்து கொண்டு-இவையே அதிகாரம்–ஆகிஞ்சன்யம்–சு தோஷம் சம்பாதிகிக்க வேண்டியது இல்லை–
இருக்கிறதை சமர்ப்பிக்க வேண்டும் -போய் நின்று நினைவு படித்தினால் போதும்–
அமர்த்யா சூத்ரா -அபராத ஆலயம்–ராவணனின் தம்பி இருவர் குற்றமும் உண்டு அதே கர்ப்பம்–
ஆகிஞ்சன்யமே சாதிக்க வேண்டியது –பெருமாள் முன் சென்று சாதிக்கிறது -கண்டிப்பாக இல்லை ஆகிஞ்சன்யம் என்று சொல்வது —
தொண்டனேன்-ஆகிலும் உன்னை விட்டு ஆற்ற கில்லேன் ஆகிலும் ஆசை விடாளால் –பிராப்ய ருசியை சொல்கிறது —
பிராபக பிரார்த்தனைக்கு ஆகிஞ்சன்யமும் சு தோஷ ஷாபனமும் வேண்டும்–
பிராப்ய பிரார்த்தனைக்கு ருசி ஆசை தேவை–ஆகிஞ்சன்யமும் அவனை ஒழிய செல்லாமையும்  துவயதுக்கு அதிகாரி —

தாசி சார்வ பவ்மனை  ஆசை பட்டால் நாட்டார் இகழ்வது போல- இகழும் படியான தொண்டனேன்–
நித்ய சம்சாரி உன்னை ஆசை படுவது –இனி கால ஷேபம் அதிகாரிக்கு சொல்கிறது —
குணங்களை அனுபவித்தேன் என் ஆனாய் கூப்பிட்டேன் ஆற்றாமை –
ஆனை ஸ்வாபம்-ஒரு நாள் கண்டோம் என்று இருக்க ஒண்ணாத படி–நித்ய ஸ்ப்ருஹனீயம்-
நிரந்குச ஸ்வாதந்த்ர்யம்-யானை செய்வதையும் ஆராய முடியாதே–செருக்கு–கைக்கு எட்டினவரை தூக்கி மேல் வைத்து கொள்ளும் –
குகன்  ஏழை கீழ் மகன்–பரதன் இழந்தான்-தாம் தாமே படிந்து கொண்டு ஏற்றி வைக்கும் —
வளைந்து குனிந்து வழி வகுத்து கொடுப்பான்–உகவாதாரை கீண்டு புகட்டால் ஆராய முடியாது —
தன்னை கட்ட கயிறு தானே கொண்டு வந்து கொடுக்கும் -பக்தி ஒன்றாலே கட்ட முடியும் அதுவும் அவனே கொடுப்பான்
வடிவழகு -ஸ்வாதந்த்ர்யம்-சம அதிக -ஒப்பார் மிக்கார் இலையாய   மா மாயன்–சீலம்–
சரணாகதனுக்கு அனைத்தும் கொடுத்து -தானே தூக்கி வைத்து -சாதனாந்தரர்க்கும் வளைந்தும் கொடுக்கும் –
விரோதி நிரசனம் -ஹிரண்யாதிகளை  அழித்தும்
ருசி ஜனகம்–எட்டினோடு இரண்டு -பிரி சுத்திய கயிறு-ஈஸ்வரனை பக்தி கயிறு  மனசு-ஸ்தம்பம் –
இரட்டித்து சொன்னது -பல இருக்கும் -ஒவ் ஒன்றே போதும் –குண அனுசந்தானம் –
விஷயாந்தரம் போகாமல் இவர் இடம் வந்ததால்-சாதனந்தரம் துறந்து இவரை பற்றி-இதுவே கால ஷேபமாக கொண்டவர்–
சணப்பானாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல–

உபாயான்தரம் இரண்டையும் பொறுக்கும்– ஈஸ்வரன் தன்னை பொறுக்கும் சரணாகதி இரண்டையும் பொறுக்காது —
சகியாத உபாயம்–என்னால் அல்லால்-இதையே அறிவேன்– அமாநிந்த்வம் —
இந்த்ரிய நிக்ரகம் போன்ற ஆத்மா குணம் கர்ம ஞான பக்தி யோகம் அறிய மாட்டேன்-
சாஸ்திர கிரமத்தில் -விஷயங்களில் அடைவு கெட அறிந்தது போல —
காட்ட தானே கண்டேன்–நாமே பிரபா பிராபகம் உம் கையில் ஒன்றும் இல்லை–ஆறி இருக்க வேண்டியது தானே-
முகம் காட்ட கூப்பிட காரணம்- ஏழையேன்-என்கிறார்–
சபலம் நப்பாசை—அடைவு கெட தானே அனுபவிப்பேன் –நீ கொடுக்கிற வரை -கதறுகின்றேன்-
குளித்து மூன்று அனலை ஓம்பும்-தொண்டர் அடி பொடி ஆழ்வாரின் நோன்ற நோன்பு இலேன் இருந்த படி
அழ கூடாது என்ற ஞானம் இல்லை –ஆற்றாமை தப்பு என்றல் நித்யரை கை விட்டு இருக்க வேண்டுமே —
பக்த அஞ்சலி -ராஜ்ஜியம் கேட்டு வந்தான் விபீஷணனை கை விட சொன்ன சுக்ரீவனை உன்னை அதை கொண்டு கை விட்டு இருக்க வேண்டும்–
உறகல் உறகல்–பொங்கும் பரிவு —

உகந்து அருளின நிலங்களில் யானை ஸ்வாபம் கண்டு கொண்டேன்-
திரு மங்கை மன்னன் கட்டிய திக் விஜயம்-
உலகம் ஏத்தும் தென் ஆனாய்–தெற்கு திரு மால் இரும் சோலை–வலம் செய்யும் வானோர் மால் இரும் சோலை–
தெய்வ வட மலை-வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் எல்லா  உலகும் தொழும் ஆதி மூர்த்தி –திரு வேம்கடம் உடையான் —
குடபால்-மேற்க்கே  இங்கு  சாய்ந்து — வானவர் உய்ய மனிசர் உய்ய -ஸ்ரீ ரெங்கநாதன்-
கிழக்கே மன்னனார்-பெரிய முதலியார் காட்டு மன்னார் கோவில் -காட்டிக் கொடுத்தாரே–
வடிவழகு செருக்கு நிற்கிற நிலை பார்த்து –பஞ்ச ஷேத்ரத்தில் கண்ணபுரம்
-மிகவும் மண்டி இருப்பதால் திரு கண்ண புரம்-கருவறை போல் நின்றானை கண்ண புரம் ஓன்று உடையேற்கு    ஒருவர் உடையேனோ-

பிரப்யம் பிராபகம் அதிகாரம் காலஷேபம் சொல்லி -இனி அடையும் இடம்–
இமையோர்க்கு எல்லாம் முன்னானாய்–நித்யர்-பிரத்யஷச்மாக சேவை–
பரம பதம் வியூகம் விபவம் அர்ச்சை -வாசி அற பிற பாடற்கு-ஆஸ்ரயணீயன்-திரு மூழிக் களம் –
நாஸ்திக -கோவில் திருமலை -வாசி அறியாத மேலை சமுத்திர கரையில் சேவை–
த்ரை வர்ணிக அதிகாரி  இன்றி அனைவருக்கும் சேவை சாதிக்கிறான்–
தேச கால ஜன்ம பின்னானார் –சோதி-அந்த காரத்தில் தீபம் போல -அனைவரும் வந்து சேவித்ததால் வந்த ஒவ்ஜ்வல்யம் —
திரு மூழிக் களம் ஒண் சுடர் – என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே —
உன் திரு வடி தாமரை தவிர வேறு புகல் இல்லை ஜன்மம் பல எடுத்தாலும் –
முதல் ஆனாய் மூல சுக்ருதம்–நீ தானே–
ஜகத் காரணத்வம் சொல்லி–என்னை காக்க வில்லை என்றால் கிலாய்ப்பு –
மேலே அழப் போகிறார் அதனால் அழும் படி காரணம் ஆனாய் என்கிறார்-

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: