திரு நெடும் தாண்டகம்–11-பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
என் துணை போது என் குடம்கால் இருக்க கில்லாள்
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே? என்னும்
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மட மானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டு விச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே ?–11-

பதவுரை

பள்ளி கொள்ளான்–உறங்குகின்றிலன்;
என் துணை போது-ஒரு நொடிப்பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்-என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்-எம்பெருமானுடைய
திரு அரங்கம்-ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்-எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு-அழகிய வண்டுகள்
மட்டு விக்கி-(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ் செய்யப் பெற்ற
கூந்தல்-கூந்தலை யுடையவளான
மட மானை-அழகிய மான்போன்ற இப் பெண் பிள்ளையை
இது செய்தார் தம்மை-இப்படிப்பட்ட நிலைமை யடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன-உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்-‘கடல் போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்-நங்கைமீர்களே!,
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு)
காப்பார் ஆரே-இவ் வாபத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறு யாருளர்?.

ஸ்வாமித்வம் சேஷித்வம் புருஷோத்தமன்-/நாமோ சொத்து -சேஷ பூதர் ஸ்த்ரீத்வம்- மடல் எடுக்க வைக்க தக்க ஸ்வாபம்  
நெறி மீறி /விஜாதீய புத்தி-பெரியாழ்வார் யசோதை பாவனை–
திரௌபதி குளிக்கும் பொழுது ஸ்திரீகள் ஆண் பாவனை நினைவு கொண்டார்கள்  போல –
புணர்ச்சி பிரிதல் நிர்ஹேதுக விஷயீகாரம் தான்–சம்பந்தமே காரணமாக விஷயீ கரிக்கிறான் கைக் கொள்கிறான் —
இயற்க்கை புணர்ச்சி–பூ பறிக்க அவள்-வேட்டை ஆட இவன்–தோழிமார்–அந்ய பரைகள்-ஆக இருக்க–
கடகர்  இன்றியும் நினைவு படுத்துவாறும் இன்றி சம்ச்லேஷிக்கை–
பரமாத்மா திரு வடி சேர்க்க ஜீவாத்மா விஷயாந்தங்களில் உள்ள -ஆசை உடன் சம்சாரம் பெரும் காடு-
ஆச்சார்யர் இன்றி–பிள்ளை தன்மை சேஷ பூதன் -ஸ்வாமி -சேர்ப்பது போல–அவனுக்கே அற்று தீர்ந்து இருக்கை–
அனந்யார்ஹ சேஷத்வம் –வகுத்த விஷயம் சர்வ வித ரஷகன் அவன்–
நிர்ஹேதுக விஷயீகாரம்-பொருப்பித்து சேர்ப்பிக்க ஆச்சார்யர் புருஷ கார  பூதை –  நியாபகர் -கடகர் -உண்டே இங்கு–
இவை வேண்டி அன்றோ ஈஸ்வரன் கார்யம் கொள்வது–சேஷத்வம் சேஷித்வம் நினைவு படுத்த தான் வருகிறான்-
தன் தலையிலே கொண்டான்–ஆச்சர்யத்வத்தையும் அவன் -வாரிக் கொண்டு–என்னை முன்னம் பாரித்து —
நான் உன்னை அடைய கடகர் வேண்டும் அவன் விழுங்க வேண்டியது இல்லையே–
நிரங்குச ஸ்வாதந்த்ர்யம்- நிவாரகர் இல்லாத ஸ்வாதந்த்ர்யம்–தேக ஆத்மா அபிமானம் ஸ்வாதந்த்ர்யம் கழித்து –
சேஷத்வம் தானே வெளி பட ஆச்சார்யர் உணர்த்துகிறார் –
பிராட்டி குற்றம் ஷமிகிறாள் சம்பந்தம் வாத்சல்யம் அடியாக தானே -சு சம்பந்தம் அடியாக தான் விஷயீ கரிகிறான்-
பிராட்டிக்கு நோவு காரணம்- கட்டு விச்சி தெரிந்த மாதிரி -சொல்ல-மற்றவர்  அறியாதது – –
திருப்பாவை-6 பாசுரம்- கிருஷ்ண பக்தி -சிலர் மோகன அஸ்தரம் மயக்கம்  சிலர் துடித்துக்கொண்டு இருக்க வேற அஸ்தரம் —
விஷயாந்தர பிராவண்யம் அடியாக வந்த நோயை -வேற ஒன்றை கொண்டு நிவர்த்திக்கலாம் என்று சிலர் –
மந்தரம் ஒவ்ஷதம் என்பர்– பகவத் பிராவண்யத்தால் வந்த நோய் -அவன் வந்து  முகம் காட்டி தான் தீர்க்க முடியும் —

சம்ச்லேஷம் ஆத்மா உள்ள வரை உண்டே–பிரேம அதிசயம் ஸ்வரூபம் அடியாக -சேர்வதற்கு தானே பிறந்தேன்–
அவன் வந்து முகம் காட்டி தானே போக்க முடியும்–தாயார் பாசுரம் -தன் வாக்காலே–ஒரு ஆறு பெருகி வந்த பொழுது —
தான் ஆன தன்மை நடு பாகம்  இக் கரை தோழி அக் கரை தாய் -ஆழ்வார் பற்றி ஆச்சர்ய ஹ்ருதயம் –
அடிச்சியோம்- தேறியும் தேறாமலும் அடிமைத் தனம் மாறாது –வாய்க்காலும் ஓடும் தனக்கும் -பெருக்கு மிக்கு –
பக்தி அதிசயத்தாலே -பார்க்கிறவர் கூட பக்தர் ஆவார்களே -ஊரும் நாடும் தம்மை போல –
நானும் சொன்னேன் நமரும் உரைமீன் –இங்கு பிரேமத்துக்கு அதிசயம் அங்கு தண்ணீர் அதிசயம் –
இங்கு மயங்கி இருக்க -தாயார் மயங்காமல் இல்லாமல்–தெளிந்து வார்த்தை பேச–
பிராட்டி பிரிந்த சமயத்தில் லஷ்மணனுக்கு இரட்டிப்பு துன்பம்–பாரதந்த்ர்யம் பார்க்காமல்  சேஷத்வம் பார்த்தானே –
அத்தை பொருப்பித்து பெருமாளை தேற்றினானே-ரக்ஷகர்-அருகில் இருந்து கலங்கி போகாமல் வார்த்தை பேச வேண்டும்–
தாயார் வார்த்தை மகளுக்கு உஜ்ஜீவன ஹேது -கட்டு கவிச்சி வார்த்தை பகவத் வாக்கியம்-
கடல் வண்ணர்-மகள் வியாபாரம் சொன்னதாலும் நங்காய் -கட்டு விச்சி கொண்டாடி -சிஷ்யன் ஆச்சர்யாராய் கொண்டாடி மகிழ்வது போல —

விரக்தி என்பதாலும் -அழகிலே அவன் படும் பாட்டை இவள் படுவதை பேசினதாலும்-
தீர்ப்பாரை யாம் இனி -கட்டு விச்சி போல் அன்றி -கள்ளும் இறைச்சியும் போடுமின் –
திரு மடல் கட்டுவிச்சி போல -அவைஷ்ணவ இன்றி மகா பாகவதை -நோவு தீர்க்க இன்றியே வர்த்திக்கிலும் அவள் ஸ்பர்சம் அமையும் —
பாகவத கட்டு விச்சி என்பதால் ஆசுவாச ஹேது —
தன் தாயார் என்று இல்லை /இவர் வார்த்தை /தாயார் வார்த்தை மகள் வார்த்தை மச் சித்தா மத கதா பிராணா போத யந்த பரஸ்பரம்–
மறவாது -மத சித்த-மூன்று வகய அர்த்தம்–ஞான பரன்/வைராக்கியம் -அடுத்து பிரேம பூர்ணம் பிராப்தி நிலவர் உடன் சாம கானம் போல
மூன்றாம் பத்து மூச்சு அடங்கி தாயார் வார்த்தை -விருத்த கீர்த்தனம் மூன்றாம் பத்து —
விரக்தி வார்த்தை கட்டு விச்சி வார்த்தை வினவ வந்தார்களுக்கு  சொல்கிறார்–
விச்லேஷத்தில் துக்கம் பட  -தலைவி ஆனந்தம் ஓட -வெளியில் வேறாக சொல்கிறாள் –
இயற்க்கை புணர்ச்சி என்பதால் அவர்களுக்கு சொல்ல வில்லை-பார்த்து பண்ணிய கல்யாணம் சொல்லலாம் —
ஆச்சர்ய சம்பந்தம் மூலம் வந்த பகவத் சம்பந்தம் கொண்டாட்டம் –
கலக்கம் த்யாஜ்யம்–அஞ்ஞானம் அடியாள் இல்லை ஞானம்-அடிகழைஞ்சு பெரும்-ராக பிராப்தம் விதித்து வரவில்லை–
விதுரஸ்ய மகா மதி–ஞானத்தாலே வந்த கலக்கம் -போக்க வேண்டியது இல்லை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: