திரு நெடும் தாண்டகம்–8-நீரகத்தாய் நெடு வரை யின் உச்சி மேலாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

நீரகத்தாய் நெடு வரை யின் உச்சி மேலாய்
நிலா துங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார் வானத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென் பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திரு வடியே பேணினேனே–8

ஒன்பது திவ்ய தேசங்கள் அடங்கிய ஒரே பாசுரம் இது  11 விளி சொல்லால் கூப்பிடுகிறார்-இந்த பாசுரத்தில் –
ஐந்து திவ்ய தேசங்களுக்கு இந்த ஒரே பாசுரம்—காரகம் கார்வானம் நீரகம் நிலா துங்கள்  துண்டத்தம் திரு கள்வனூர் —-
86 /47 இவர் மட்டுமே –67  திவ்ய தேசங்கள் ஒரு ஆழ்வாரால் அருள பட்டவை அதில் இவர் மட்டுமே இவர் மட்டுமே  47 திவ்ய தேசம்–
நவ திரு பதி நம் ஆழ்வார் மட்டுமே– திருகபிஸ்தலம் அன்பில் திரு மழிசை /
ஸ்ரீ வில்லி புத்தூர் பெரி ஆழ்வாரும் ஆண்டாளும் —
திருக் குடந்தை 7 ஆழ்வார்கள் /5 ஆழ்வார்கள் மங்களா சாசனம் 6 திவ்ய தேசங்கள் /
திருப் பாற்கடலும் திருப் பதியும் 10 ஆழ்வார்களும் ஆண்டாள் சேர்த்து //
51 திவ்ய தேசங்கள்  பதிகம்  அல்லது பல பாசுரங்கள் பெற்றவை  –/
23 தனிப் பாடல்  பெரிய திரு மொழியில் பெற்றவை– 12  திவ்ய தேசங்கள் பெரிய திரு மொழிக்கு வெளியில்/
திரு மூழிக் களம்  மட்டும் பெரிய திருமொழி யிலும் வேற  பிர பந்தங்களிலும் உண்டு  —
வயாலாளி மணவாளன் மேல் இவருக்கு முன்  குலசேகரர் அருளி இருக்கிறார்–
16 திவ்ய தேசங்கள்–ஒரே பாசுரம்–//
2 பாசுரங்கள் ஸ்ரீ வைகுண்டம் தலை சங்க நாண்மதியம் /ஸ்ரீ வில்லி புத்தூர் திரு தண்கால் திரு புட்குழி-திரு நின்ற ஊர்–

தொண்டை நாடு உண்டு– சோழ  நாடு உண்டு–வட நாடு உண்டு– –
திரு வடியே பேணினேனே – திரு கோவலூரை அனுபவிக்கப் போனவர்- ஒன்பது கல்யாண குணங்கள் கண்ணில் பட –
அந்த குணங்கள் இந்த திவ்ய தேசங்கள்  கண்ணில் பட்டது–அனுபவிகிறார்–
நம் ஆழ்வார்- ஒரு கல்யாண குணங்களுக்கு பரதன் சத்ருக்னன் திரு மா மகள் போல்வார் ஒப்பு என்கிறார் ஆச்சர்ய ஹ்ருதயத்தில்-
அது போல ஆயன் இங்கு —-இந்த குணங்களை கொண்டும் இவரை கடாஷிக்க போக வில்லையே—
ராமன் சகல கல்யாண குணம் கொண்டவன்-போல –அனுபவிக்க இழிந்தவர்–பீரீதர் ஆனார்-
அவன் சௌர்ய வீர்யம் மறந்து -நடு வில் இருப்பதால் எங்கும் வந்து அசுர பிரக்ருதிகள் நலிவார்களே —
அங்குத்தைக்கு ஆசை பிறக்கையும்  பரிகையும் ஆத்மா தர்மம்–சக்தாதிகளை காட்டி தெளிவித்தான் முன் பாசுரத்தில் —
இதில் திரு கோவலூரை அனுபவிக்க போந்தவர் -தாம் ஆகையாலே-ப்ரேமாந்தர்-கண்கள் மறைக்க –
கால் எழாமல்–சிதிலம் ஆகி–அவன் தான் வந்து ரஷிக்க வேண்டும்–
ஸ்வரூப விருத்தம் -கால் ஆளும் நெஞ்சு அழியும் -இரண்டு காரணங்கள்- சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லை-
மேல் விழுந்து  அவன் -ஆஸ்ரிய போக வேளையில் அவன் ஆஸ்ரியிக்கும் பொழுது ஆஸ்ரயிக்கவும்
அனுபவிக்கும் பொழுதும் அவன் தானே பண்ண வேண்டும்-
திருவடியில்- ஆறு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய்– சரணாக கொண்ட குருகூர் சடகோபன் அடுத்து -தந்த பின்பு கொண்டார்–
திருக் கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன -இது போக வேளை-இதிலும் —
அடுத்து அரை சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே– அவன் கொடுக்க நாம் பெறுவோம் இரண்டு காலத்திலும் —

கூவுதல் வருதல் செய்யாய் –கூவி கொண்டு கைங்கர்யம் பண்ண வேண்டும் குருஷ்மமாம் அனுசரம்- கூவி பணி கொள்ள வேண்டும்–
வருவார் செல்வார் என் திறம் சொல்லார் –சுமந்து ஒரு பாடு உழல்வான்- கூப்பிட காத்து இருக்கிறார்–
பிறந்தவாறும் சரண் அடைந்தார்- 5-10 அனுபவித்தது 6-4 உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன்
திரு வேம்கடம் சென்று கை தொழுவர் தேவர்களே உருக மாட்டார்கள் என்கிறார் அங்கு–
ராமனை சேவித்து -மனுஷ்யர் இல்லை தேவர் என்கிறார் தசரதர்–இங்கும் புகழ வில்லை –
போது நெஞ்சே -தடி போட்டு கிளப்புகிறார் மூன்று பாசுரங்கள் ஆனாலும் போக முடியவில்லையே

இருந்த இடமும் திரு கோவலூர் ஆக வில்லை -கூப்பிட தொடங்கினார்–கதிர் பொருக்கி கூட்டுவாரை போல–
திரு கல்யாண குணங்கள்–விஷ்ணு வீரம்– பிரிய தர்சன் –
சந்தரன் கோபம் கால அக்னி ஷமை பூமி தாய் நிகர் நான்கும் ஸ்ரீ  ராமனுக்கு சொல்வது போல//
நீரகத்தாய் ஜெகதீசன் நில மங்கை நாச்சியார்–நீர்- ஸ்வாபம்-கள்வா மூன்று இடத்தில் உண்டு
அங்கு எல்லாம் திரு கள்வனூர் பெருமாள் இல்லை  கார்வானத்தில் உள்ள பெருமாள் கள்வா -திவ்ய தேசம் தான் பிரதான்யம்-
ஆதி வராக பெருமாள் பெயர்–/நீர் தன்மை- -ஆத்மா -கர்ம ஆதீனம் யோனி பல உண்டு–ஜாதி தக்க புத்தி மாறும் –
நீர் அனைவருக்கும் தாரகம்–திரு நீரகத்து பகவானும் சர்வருக்கும் பொதுவானவன்–
திரு உலகு அளந்த பெருமாளும் ஜல ஸ்தல விபாகம் அற தீண்டியது போல–எனக்கு முகம் காட்ட வில்லையே
சர்வ சப்தத்தில் நான் விடு பட வேண்டுமோ–

அடுத்து 2-/நெடு வரையின் உச்சி மேலாய்–திரு வேம்கடம்–எல்லாரும் அனுபவிக்க -வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–
பூமியில் மட்டும் இல்லை ஊர்த்த லோககங்கள் -நித்தியரும் சேர்ந்து-வானவர் வானவர்கோன் உடன் சிந்து பூ மகிழும் –
நித்யருக்கு நீரே தாரகம்  இல்லை-அவர்களுக்கும் அனுபவிக்க –மேல் லோகம் -இடது திருவடி–
ஈஸ்வரோஹம் என்று இருப்பவர்க்கு முகம் காட்டி அடி நாயேன் நினைந்திட்டேன் எனக்குகாட்ட வில்லையே  –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன்-திரு வேம்கடத்தானே திரு விக்ரமன்—உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்த்தேன்

மந்தி பாய் -நம் போல் வானவர் அயன் -மூவருக்கும் சேவை சாதிக்கிறான்-
சேஷத்வ ஞானம் உள்ளவர்கள்,இல்லாதவர்கள் காதா சித்தம் உள்ளவர்கள்  -மூவருக்கும் சேவை சாதிக்கிறாயே எனக்கு கிட்ட வில்லை/
3 நிலா திங்கள் துண்டத்தாய் நேர் ஒருவர் இல்லா வல்லி– பூர்ண சந்தரன்-=நிலா திங்கள்–அனுபவிப்பருக்கு போக்கியம்–
துண்டம்-பூமியில் ஒரு பகுதி–தாப ஹரன்-சதி ஆஹ்லாத கரன்–துடிப்பு போக்கி அனுபவிக்க–
பராசரர்-தாரா பதி -சந்தரன் தலைவன்-செருக்கினால் பிறந்த துக்கம் பகுத்தறிவு போக்கும்
சரீர ஆத்மா விவேகம் போக்கும் சந்தரன் போல–கலை குறைந்த போது குறைந்து இருக்கும் என்பதால் நிலா திங்கள்–
வடிவில் ஸ்ரமகரம்–போக்கியம் இருந்த திருவடிகள் போல –குளிர வைத்து அனுபவம் கொடுக்கும் குணம்-
ஏகாம்பரர் கோவில்/நிறைந்த கச்சி ஊரகத்தாய்–

அமுத வல்லி நாச்சியார் உலகு அளந்த பெருமாள்– கச்சி முழுவதும் அழகும் சீலமும் நிறைந்த 6 பாசுரங்கள் பெற்றது–
உலகு அளந்தவன்–காந்தி நிறைந்தது போல -திருப் பதிகளால் நிறைந்த கச்சி என்றவுமாம்–

ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்- வாசல் கடை களியா உள் புக  -நெருக்கி இருந்தானே -இது தான் சாம்யம் —
இடம் விடாமல் அவர்கள் போன பின்பும் இருக்கிறானே
பூர்வாஸ்ரமம்  வாமனன்-ஸ்ரீ ராமன்–விஸ்வாமித்ரர் –மண்ணை இருந்து துளாவி வாமனன் மண் என்று இருக்கும் —
உன் ஒழிய செல்லாது எனக்கு முகம் காட்டாமல் இருக்கிறாயே —
உள்ளுவார் நினைப்பார் உள்ளத்தில் நித்ய வாசம்-சேஷி ஒருத்தன் உண்டு என்று அனுசந்திப்பார் உள்ளத்தில்–
திருப்பதி நிலையம் போல் –ஆஸ்ரிதர் உள்ளம்  செல்ல  திவ்ய தேசங்களில் நிற்கிறாய்–
நின்றது எந்தை -அன்று நான் பிறந்திலேன்-பாசுரம்- –என் நெஞ்சத்தில் இருந்தாய்–
உன்னை ஒழிய செல்லாது இருக்கும் என் இடம் முகம் காட்டாமல் இருக்கியே —

கருணா கர பெருமாள் பத்மா மணி நாச்சியார் திரு காரகம் -உலகம் ஏத்தும் —
லோக விக்ரந்தம் சரணம்-உலகம் ஏத்தும் சமாஸ்ரண்யம்- கேட்க்காமலே ஆட் கொண்டான்-
ஆயன் உடைய -எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே —

திரு கார்வானன்-கள்வன்–ஸ்வபாத்தாலே திரு நாமம் கமல வல்லி நாச்சியார் மேகம் போலே எல்லார் இடமும் வர்ஷிக்கும் –
பிரார்திக்காமலே -பிரயோஜனம் எதிர் பார்க்காமல் பொழியும்-திரு விக்ரமன் திருவடி போலே–ஆயன் ஒவ்தார்யம் காட்டும் —
கேட்க்காமலே அமலன் விமலன் நிமலன் நின்மலன் -போல -கேட்க்கும் எனக்கு ஒழிவதே —
அழுது கொண்டு இருகின்றேன்-கள்வா–அபகாரகன்–  திருடனே– திருமேனி கட்டாமல் கள்வன் —
நாங்கள் ஆத்மா அபகரித்து பெரிய கள்வன்–நம் சொத்து தானே அவன் திரு மேனி-அதை காட்டாமல் கள்வன்–
நாங்கள்=பூர்வாச்சார்யர்கள் கள்வா என்ன மாட்டோமே- இவர் போலே பந்தம் இல்லையே–நெருக்கம் அதிகம்–
ஒருவனுக்கு இருக்கும் அதை மறைக்கை கள்ள தனம்–அவனுக்கே என்று இருப்பதே ஸ்ரூபம் —
என்னுடைய கள்ளம் தவிர்ந்து கலந்து -ஆண்டாள் பாகவத பகவான் திரு மேனி மறைத்தல்  கள்ள தனம்–
உனக்கு நான் என்ற எண்ணம் கொடுத்தாயே புரிய வைத்து -திரு நறையூர் பதிகம் –
புள் வாய்புகுந்து உள்ளம் கொண்ட கள்வா அங்கு திரு கள்வனூர் இல்லை–
காமாட்ஷி அம்மன் கோவிலில் உள்ள திவ்ய தேசம் —
திரு விக்ரமன் தோற்றி தன்னை மறைத்து கொண்ட கள்ள தனம்–சேதனன் ஆத்மா அபகாரம் கள்ள தனம்–
எனது ஆவி யார் யான் யார்–உயர்ந்த விஷயம் உயர்ந்த அவன் இடம் திருடியது –
நம்பினேன் பிறர் நன் பொருள்—பராத்பரன் புருஷோத்தமன் இடம் திருடினோமே–
பாராத்தம் சவம்-உனக்கே அடிமை–திரு மந்த்ரம் உபதேசம் பண்ணி இதை தவிர்த்து -உன்னுடைய ஆத்மா அபகரிக்கைக்கு பண்ணினாயா —
என் திருட்டு தவிர்த்து நீ மறைந்தது கொண்ட திருட்டு பண்ணிய கள்வா–பக்தர்களுக்கு என்றே இருக்கிறாய் என்று சொன்னதை அழிக்கவா–/

திரு பேர் நகர்–காமரு ஆசை பட வைக்கும் காவேரி தெற்கு கரையில் -ஸ்வாமித்வம் காட்டினான்-
கடைசி மங்களாசாசனம் ஆழ்வாரும் என் நெஞ்சு நிறைய புகுந்தான்–பெரிய திரு மொழியிலும்-
கோவிலை நடுவே கொண்டதால் கரு மணியை கோமளத்தை -காமரு பூம் காவேரி–அதற்க்கு தென் பக்கம் –
ரஷ்ய ரஷகம் விபாகம் அற இரண்டு தலைக்கும் உத்தேசம் திரு அரங்கம்—இருவரும் ஆசை உடன் வர்த்திக்கும்–
தெற்கு கரையில்- கரை வழி போவார் உண்டோ என்று கரையை பற்றி இருக்கிறான்- ஜீவனாம்சம்  வேண்டி -கரை பற்றி வாழ்வது போல–
அவனுக்கு நம்மை அடைவதே ஜீவனம்–மன்னு- சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்போம் என்று மன்னி கிடக்கிறான்–
யாரோ நம்மை வந்து கிட்டுவார்  என்று இருக்கும் என்னை– மன்னு -விபவம் போல தீர்த்தம் பிரசாதித்து போகாமல்–
ஆஸ்ரிதர் ஆசை உடன் திரு விக்ரமன் – தீண்டியது போல –பேராது என் நெஞ்சில் உள்ளாய்-
உன்னை சஷுஸ் விஷயம் ஆக்காமல் மனசில் வர வேண்டுமா –பேராது இருந்தும் இவர் புலம்புவது இதற்க்கு தான்–
கொண்டாட்டம் இல்லை பேராமல் இருந்தது –அகவாய் பெரிய திரு நாள் நடத்தி  புறம்பு சுவடு அற்று —
கோஷ்ட்டி -கானம் இன்றி உத்சவமா–கொடி இன்றி துவனி இன்றி–அப்ரேமயச்ய-
தாரை வைய வந்தவள் வாழ்த்தி போனாள் –உண்ண வந்தவள் வாயை மறந்தாள் போல —

கண் முன்னால் சேவை சாதித்தும் புத்திக்கு எட்ட வில்லை–வேதம் போல –நீயே உன் தன்மை அறிய முடியாதவன்–
இங்கு ஆழ்வாருக்கு மனசில்  இருந்து கண்ணுக்கு விஷயம் இல்லை என்கிறார்–
நெஞ்சில் இல்லாமல் இருந்தால் -மறந்து இருப்பேன் மறந்து பிழைக்க பெற்றிலேன் கண்டு பிழைக்க பெற்றிலேன்-
காட்ஷி அவன் தான் கொடுக்க வேண்டும் காண வாராய்–முடிந்து பிழைக்க பெற்றிலேன்–
விஷய வைலஷண்யத்தாலே மறக்கவும் முடியவில்லை–
இன்னும் கொஞ்சம் வாராய் கூப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் கண்ணனும் வாரானால்-கடியன் கொடியன்-என்று – 
காகுத்தனும் வாரானால்- முடிந்தும் பிழைக்கவும் முடியவில்லை–நசை – பிரிந்தாலும் அது அது என்று –
இது இப்படி இல்லை என்று சொல்லி கொண்டே இருக்க வைக்கும் –இல்லதும் உள்ளத்தும் அல்லது அவன் உரு-என்றே சொல்ல வைக்கும் —
வேறு பட்டவன் அசித்தும் சித்தும் விட –ஸ்வேத சமஸ்த வஸ்து விலஷணன்–
நீயே திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே-வஞ்சிக்கும் பொழுதும் திரு மால்- –
இருப்பதை என்றுமே -கடியன் கொடியன் –ஆகிலும் கொடிய  என் நெஞ்சம் திரு மாலே என்று இருக்கும் —
பின் நின்ற காதல் –கழிய மிக்கதோர் காதல்- பிரிய பிரிய ஆசை அதிகரிக்கும் –ஆற்றாமை விளைக்கும் விஷயம் —
சத்தை அவன் ஆதீனம் என்பதாலும் முடிந்து பிழைக்க முடியாது -பரார்த்யம்- அவனுக்கே தானே–
பிராட்டியும் குழல் கற்றை கட்டி முடிய முயல  -ஆற்றாமை மீதூர்ந்து -முடிய பெற வில்லை– முடிவும் அவன் கையால் தானே–
பராதீனர்கள் ஆத்மா ஆத்மீயம் வைராக்கியம்-உனக்கு உகவாத  ஆத்மா ஆத்மீயம் வேண்டாம் ஆழ்வார்–
மாம் மதியம் அகிலம் -தேசிகன் — உயிரினால்  குறைவிலோம் –பணி சாமாறே பணி-அவனை இரக்க வேண்டிற்றே —
பிறர் சரக்கு என்பதால்–பிரதி கூல்ய வர்ஜனம்–அதுவும் அவனது இன் அருளே —

பெருமான்–இப்படி பட்ட திரு பதிகளுக்கு குறை இன்றி தொகை இல்லாதவனே–ஆயன் ஸ்வாபம்-தொகை இல்லை–
எண் பெரும் அந் நலம் ஈர் இல வண் புகழ்–தமக்கும் சக்தி இல்லை–99 திவ்ய தேசம் சொல்லாதவைக்கும் -சேர்த்து பெருமான்–
சேஷி ஆனவனே –முறை அறிந்து –பரி தவிக்கிறார்–தெரிந்தது தான் கவலை–சம்சாரிகள் போல விஷய பிரவணராய்  திரிந்து இருப்பேனே —-
தாப த்ரய சம்சாரிகள் போல் இருக்க பெற்றிலேன் என்று சொல்வான் என்–விரக தாபம்–காரணம் பற்றி வர வில்லை –
உன் அனுக்ரகம் பற்றி வந்ததால் -நிருபாதிக தாபம்– அகங்கார மம காரம் -காரணம் பற்றி வந்தவை ஒழிக்க முடியும் —
பரமம்-அஞ்ஞானம் மூடி கொண்டது என்பர் அத்வைதிகள்–ஏனோ வந்து இருக்கிறது என்பர்
காரணமே இன்றி என்றால் போகாதே சுவாமி ராமானுஜர்- அஞ்ஞானம் போக்க வழி இல்லை மோட்ஷம் கிட்டாதே என்றார்–
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும்  நாமம் -சர்வ சகே -தாஸ்யம்–
உன் திருவடியில் விழுந்தும் துன்பம் பட்டால் உன் குற்றமே தானே–ஸ்ரூப ஞானம் கிட்டியதும்–

ஞப்தி பல முக்தி–பக்தி பல  விருத்தி ஜீவனம் கிட்ட வேண்டுமே –
கைங்கர்யம் பண்ண வேண்டுவதை பூம் கோவில் கை தொழ போ நெஞ்சே –இப் பொழுது கிடைக்கா விடில் இதுவே துக்க ஹேது ஆனதே —
மந்தம் -பசி உத்தேசம்-பசி வந்த பின்பு சோறு பெறாத பொழுது பசியே துக்கம்–பசியே முன்பு வேண்டியது சுகம்–
முக்தனை போல பகவத் அனுபவம்  களித்தேன் அல்லேன் —
சம்சாரி போல விஷய அனுபவம் சென்றேன் அல்லேன் —
முமுஷு போல ஸ்வரூபத்தை உணர்ந்து அவனே வருவான் என்று ஆறி இருந்து –
பேறு தப்பாது என்று துணிந்தும் இல்லேன் —
மூன்று கோஷ்டியிலும் இன்றி — அந்தண்மை ஒழித்திட்டேன் நின் பக்தன் அல்லேன்- நின் கண் இல்லேன் –
கர்ம பக்தி ஞான யோகம் இல்லை —-களிப்பது என் கொண்டு– நம்பி கடல் வண்ணா -அழகனே –குண பூரணன் கதறுகின்றேன்–
கதறுதல் பக்தி யோகம்-இல்லை சொல்லி கொண்டே கதறுகின்றேன்–
அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம் –குறை ஒன்றும் இல்லா கோவிந்தா  –இந்த மாதிரி தத்வம் -எதிலும் சேராத ஒன்றை படைத்தாயே–
ஒன்றுமே பண்ண வில்லை- என்கிறீரே-பகவான் சொல்கிறான்- 
தேக ஆத்மா விவேகம் கொடுத்து –தத்வம் அசித் என்று ஐஸ்வர்யம் -சித் கைவல்யம்- நடுவே வந்து உய்ய கொண்ட நாதன்–
போதரே என்று புந்தியில் புகுந்து –நம்மோட்டை சம்ச்லேஷ-விச்லேஷங்களை சுக துக்கம் காட்டி கொடுத்து —
கைங்கர்யம் பண்ண கதற வைத்தவன்–உன் திரு வடியே பேணினேனே–செய்யாத அம்சம் -இது தானே–
அலங்கரித்து சிறை சேதம் போலே இவை எல்லாம் பண்ணி உன் திரு வடி சேவை கிடைக்க வில்லையே –
மண் தாவிய ஈசனின் திரு வடி சேவிக்க வந்தேன் கிடைக்க வில்லையே —
நாட்டாரை விட்டு பிரித்தாய்–அதுவே மோஷம் இல்லையே–உன் அனுபவ கார்ய ப்ரீதி ஜனித கைங்கர்யம் வேண்டுமே —
உன் திருவடி கிட்டா விடில் இது வரை பண்ணிய கிருஷி வீண் தானே கதிர் அறுக்க வேண்டாமா –
க்ருஷியே துக்க ஹேது போல ஆகலாமா –உன்திருவடி  -பிராப்ய பிரபாகங்கள்–ஆறும் பேறும் –
ஆயன் படியையே திரு பதிகளில் எல்லாம் அனுபவிகிறார் –
உங்கள் திருவடி -சொல்ல வில்லையே -ஒன்பது பேரும் ஆயன்-குணம் ஸ்வாபம் காட்டுவதால் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: