திரு நெடும் தாண்டகம்–5-ஒண் மதியில் புனல் உருவி -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஒண் மதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
ஒரு காலும் காமரு சீர் அவுணன்  உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர வோடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுவதும் அகப் படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திரு வடியே வணங்கினேனே –5–

திரி விக்ரமன்  அனுபவம் தொடங்கம்– வேதாந்தம் முன்பு சொல்லி –
திரு மந்த்ரத்துக்கும் திரி விக்கிரமனுக்கும் சாம்யம்–பத த்ரயம் — பாத த்ரயம் மூவடி–தங்கள் கண் முகப்பே நிமிர்ந்தவன்–
திரு மந்திர அர்த்தம் நடந்தே காட்டினான் –கண் முன் சேவை சாதித்து காட்ட-அ காரம்-ரஷிகிறான்-அவ ரக்ஷணே தாது -ரஷ்ய ரஷக பாவம்—
சப்த காரணம் ஜகத் காரணம் சொல்லும்–பிதா புத்திர சம்பந்தம் -ஆய ஏறி கழிந்து -லுப்த சதுர்த்தி–சேஷ சேஷி சம்பந்தம்–
உ காரம் -அனந்யார்ஹ சம்பந்தம் பத்ரு-பார்யா-சம்பந்தம் ம காரம் அறிகிறான் 
ஞாதா     சம்பந்தம்  -நியந்தா நியாமகம் நாம சரண்யன் சரணாகத நாராயண தரிக்கப் படுபவன் தரிக்கிறவன்
போக்த போதரு சம்பந்தம் -இத்தனை சம்பந்தமும் காட்டி கொடுக்கும் திரு மந்த்ரம்–
நிமிர்ந்த அவனைப்பார்த்து இவற்றை தெரிந்து கொள்ளலாம்–உலகு அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்-
ஓலைப் புறத்திலே போகாமல் காட்டி கொடுத்தான் —
திருவாஸ்ரியம் 5 பாசுரம் ஆழ்வாரும்  திரி விக்ரமன் அருளினார்–கீழ  ஜகத் காரணம் ஜகத் சரீர ஆத்மா பாவம் சொன்னார்

நாராயண அனுபவம் -கண்ணால் இங்கு–சேஷ சேஷித்வ சம்பந்தம் -திரி விக்ரமன்–உலகம் எல்லாம் தீண்டி –
சேஷ சேஷி சம்பந்தம் காட்டினானே–ஜகத் காரண பூதன் ஜகத் சரீரி அனுபவிக்க சொன்னீரே–முன்–
காரணமாக இருந்தால் தானே சேஷ சேஷி பாவம் வரும்–அப்படி அளந்தானோ என்னில்-
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணை–ஆழ்வார்–திரு மந்த்ரம் அர்த்தம் காண —
யக்ஜா சாலை  சென்று-வாமனன் சீலன்- குணம் அன்றோ தோன்றுகிறது–
பாட்டில் வாமனன் பற்றி இல்லையே–முன் கதை ஒன்றும் சொல்ல வில்லை -அது சீலம் காட்டும் என்று-
இவன் இடம் பெருமை- லோக விக்ரந்தன் சரணே சரண்–அதனால் சேஷ சேஷி சம்பந்தம் சொல்கிறார்–
ஆண்டாளும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-அருளினது போல–

ஒண்மை மிக்க மிதி-அடி-புனல் ஆவரண ஜலம்-கீழ் திருவடி வலது திருவடி–மற்ற -இடது திருவடி மேலே —
ஆசைப் படத் தக்க -மாவலி நினைவையும் கடந்து அண்டம் மீது போவதர்க்காகா எழுந்து
பெரிய ஆகாசம் ஊடு உருவி சென்று சூர்ய சந்திர மண்டலம் நஷத்ரம் மண்டலம் தாண்டி-
அளந்த ஸ்வாமி உடைய -தாமரை மலர் போன்ற திருவடியை வணங்கப் பெற்றேன்

ஒரு திருவடியால் கீழ் லோகமும் ஒரு திருவடியால் மேல் லோகம் அளந்தான்–
தாங்கப் படுபவை லோகம் -சகலத்துக்கும் ஆதாரமான திருவடி வைத்தால் தரிக்குமா–
கம்சன் சின்ன குழந்தையால் பட்டானே–அதனால் தான் தாங்கும்-உஜ்ஜீவனம் இதனால் தான் —
திருவடி தானே தாரகம்–வாழும் படி வைக்கிறான்–சத்தை அடைய ஹேது–தாரகன்–பதார்த்தம் தார்யம் ஆனாலும் தாரகத்வம் நழுவாது-
தொன்னை நெய்-தட்டு-நெய்க்கு தாரகம் குணம் தொன்னைக்கு போகாது–
திரு மேனிக்கு ஸ்வரூபம் தாரகம் போல இவர்கள் தலைக்கும் தாரகம் அவன் தான் –
உலகத்தில் தார்யம் ஆனது தாரகம் ஆகாது -நெய் தொன்னையை தாங்காது –அது போல இல்லை பரமாத்மா விஷயம்-
சரீரம் ஆத்மாவுக்கு அதிஷ்டானம்–தாரகம் இல்லையே சரீரம்–
சரீர ஆத்மா லஷணம்-யஸ்ய சேதனச்ய யது த்ரவ்யம் ஸ்வார்தா நியந்தம் தரித்தும் சேஷமாயும் அதற்கே ஆகி  இருக்கும் –

மிதியில்-புல் பூண்டுக்கு கூட ஹானி வராமல் மிதி-படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
மதிய மூர்தானம் அலன் கரிஷ்யதே–சிரோ பூஷணம் சொல்லி இருக்கலாமே
மிதியில்-வழிக்கு வரும்-தலைக்கு அணி சொல்பவர் கொஞ்சம்-ஆதாரம் கொண்டவர் குறைவு–
வேற்று கால் தங்கள் தலையை துகைகிறதே என்று தேக ஆத்மா அபிமானிகள் நினைவு-
நிலா தென்றல் சஞ்சரிப்பது  போல ஒண் மிதியில்-அர்த்தம்–திரு ஆணை என்று ஆணை இடுவார்களே–
நின் ஆணை திரு ஆணை கண்டாய்-ஆழ்வார்–நிலா தென்றல் போல இருந்ததால் எடுக்க சொல்லவில்லை–
மேல் ஒரு காலத்தில் ஆபிமுக்யம் தோன்றி-தங்கள் பூர்வ விருத்யம் நினைந்து ஈஸ்வர வைலஷண்யம் பார்த்து 
இறாய்த்து விலகாமல் வழக்கு பேசி பற்றலாம் படி–மிதித்த மிதி–
லோக விக்ராந்த சரணவ்-பிதராம் மாதராம்-பதில் பேச முடியாது அவனால்–
புனல் உருவி–வலது திருவடி பூமி -சப்த சமுத்ரங்கள் -சப்த தீபங்கள்- சக்ரவாள கிரி அளவாதல் ஜலம் ஆவரண ஜலம்-
வலது திருவடி வளர–அண்ட கடாகம் உள்ளே தானே ரஷய வர்க்கம்-அவ்வருகு போக வேண்டுமா அவன் பாரிப்பு-
இருந்த -பரன் பாரிப்பும் ஆழ்வார் பாரிப்பு–ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் –
அவனோ- தெளி குரல் -அருவி  திரு வேம்கடத்து -போல எழில் கொள் ஜோதி எந்தை தந்தை தந்தைக்கே

சால பலநாள் உகந்து உயிர்கள்  காப்பான் –அதனில் பெரிய என் அவா- அறும்படி சூழ்ந்தான்–
இவனுடைய பிரேமம் செய்ய வல்லது அவன் உடைய வாத்சல்யம் செய்ய மாட்டாதோ—-
அவா வேட்கை காதல் பிரேமம்-ஆழ்வார்-தத்வ த்ரயம் விட உசந்தது–அவன் அனுக்ரகத்தால் பெற்ற இவர் பிரேமம் —
யாருடைய அனுக்ரகம் இல்லாதவன் வாத்சல்யம்–மிக பெரியது சொல்ல வேண்டுமோ–/
அண்டம் மீது போகி–மேலே சொல்கிறாரே–சூஷ்மம் ஸ்தூலத்தை வியாபிக்கும் பொழுது –என்றும் எங்கும் உள்ளானே–
ஆகாசம் அண்ட கடாசம் வியாபிக்க -மூல பிரக்ருதியே அவன் இடம்–திருவடியை வணங்கினேனே–
இங்கு கால்–சொன்னது –சம்சாரிகள் அபிப்ராயத்தாலே –சூரி போக்யமான திருவடி என்று நினைக்காமல்–
ஆவரணம் தாண்டி விரஜை -நிற்ப-வேகத்தில் போகும் குதிரையை கடிவாளம் போட்டு நிறுத்துவது போல நிற்ப–விரஜை தாண்ட வேண்டாம் —

மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல் அடியை  கொடு வினை யேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே —
மற்றை–அது போல மற்றை ஒரு கால்-சொல்லாமல் /
ஒருத்தி மகனே பிறந்து –மீண்டும் ஒருத்தி –இது ஓன்று இருந்த படி என் –இது இருந்த படி என்–
அந்ய சேஷத்வம் -அளந்த -ஸ்வாதந்த்ர்யம் தேவர்கள் அளந்த திருவடி–மற்றை பிரதாண்யம் ஒன்றுக்கு வருமே–
அது போல தான் அவதார ரசம் தைவ  தேவகி வளர்த்த ரசம் யசோதை  திருவடி–
இதற்கு மேல் பட்ட போக்ய வஸ்து இல்லை–என்று சொல்லும் படி இரண்டும் இருந்தன– 
நவோ நவோ பவதி அப் பொழுதைக்கு   அப் பொழுது ஆரா அமுதன் -உண்டோ திரு பல்லாண்டுக்கு ஒப்பு  
உண்டோ திரு வாய் மொழிக்கு ஒப்பு ஒவ் ஒன்றும் ஒரு விதத்தில் ஒப்பு–ரசம் வாசி உண்டே–
இதற்க்கு மேம் பட்ட போக்ய வஸ்து இல்லை -அத்வீதியம்  /
அவன் எண்ணம் கடந்து–ஆசை படும் குணங்கள் கொண்ட அவுணன் என்கிறார்–
காமரு சீர்–அடி போற்றி கழல் போற்றி-குஞ்சித பாதம்–திரு வடி இரண்டு பக்கமும் கண்டு அனுபவித்து பல்லாண்டு பாடினாள் ஆண்டாள்  –
மனோ ரதம் தாண்டி போனான்—கற்பார் ராம பிரான்அல்லால் கற்பரோ– -கேட்ப்பார் கேசவன் கீர்த்தி அல்லால் கேட்பாரோ–
ஒவ் ஒரு சமயத்திலும் ஒவ் ஒரு அனுபவம்–அவுணனை கொண்டாடுவது ஸ்ரீ வாமனன் வடி வழகையும் சீல குணத்தையும் கண்டு-
பிற்பாடரான தம்மைப் போல் அன்றி-கண்ணாலே காண பெற்றவன் அன்றோ–
லோக விக்ராந்தோ சரணவ் கதா புன மதியம் அலங்கரிஷ்யதே
ராமானுஜரும் ஆள வந்தாரும் –தானும் அடியேன் என்ற இத்தை விட்டு
பகவான் விபூதியை அபகரித்து ஒவ்தார்யம் ஏற்  இட்டு கொண்டு யக்ஜத்தில் இழியாமல் போனேனே —
அவன் எண்ணம் தாண்டி–மூவடி கேட்டான்–கீழ் லோகம் அளந்ததும்–
இடம் மிச்சம் இருக்கிறது என்று எண்ணி கொண்டு இருந்தானே– அவன் ஒவ்தார்யம் தாண்ட முடியவில்லை–
எண் மதியம் கடந்து மூல பிரகிருதி–அண்டம் மீது போகி–முதலில் சொன்னது இதை–அளந்த க்ரமம் சொல்லாமல்–
அளக்கும்  இவன் பெருமைக்கு -கொண்டை கோல் நாட்டுகிறார்–
திருப் பொலிந்த சேவடி-பருப் பயத்து குல பதி கொடி நாட்டியது போல –
ஆழி எழ -ஜெய விஜயீ பவ -ஜாம்பவான் பேரி வாத்தியம் அடித்து சகரவாள கிரி சுத்தி 36 தடவை வந்தானாம் –
சொத்தை- அகங்காரம் மகா பலி அபகரிக்க -மீட்டு கொடுத்தாரே-அண்டம் மீது போகி–போகைக்கு ஆக –
திரு உடை அடிகள் வணங்கி-வணங்க என்று கொள்வது போல–நார அயனம் இருப்பிடம்–சித் அசித் இரண்டுக்கும்- -சரண் –
ஞானம் -சித் மட்டும் தானே -அர்த்தம் சுருக்கி சொல்வது போல–போக–

ஓடி-ஓடுவதற்காக-எழுந்து–இது வரை ஆழ்வார் ஆசை–இனி கிளம்பி-எழுந்தது-இரு -பெரிய விசும்பு-
கையில் நீர் விழுந்த உடன்–சில் தீர்த்தம் சிலிர்த்து வளர்ந்தாம் –உலகு அளந்த உத்தமன் பேர் பாடி–
இந்த தீர்த்தம் விழும் பொழுது திரு வடி கழுவிய கங்கை தீர்த்தம் குண்டிகை-தர்ம தேவதை -தாரை விழுந்த அதே காலம்—
க்ரமம் அதனால் தான் அண்டம் மீது முதலில் -சொன்னார்-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் பாகனும் வேழமும் -அருளியது போல-விழா முடிந்ததும் கம்ச போனானே–வேகம் காரணம்–
பெரிய ஆகாசம்-பூமி விட பெரியது -முதலில் சிருஷ்டிக்க பட்ட பெருமை– அவன் திரு வடி பட்ட பெருமை–
குணத்தாலும் அளவாலும் பெருமை–ஊடு போய்–100000 மைல்-சுவர்க்கம் தூரம்–
திரு வடி தாண்டியதும் தான் இது படைக்க பட்ட காரணம் சபலம் அடைந்ததாம் —
ஸ்ரீ பண்டாரம்-பட்டாபி ராமன் சந்நிதி முதல் ஆழ்வார் சந்நிதி  கொட்டாரம் –நான்கு மண்டபங்களும் -கோவில் ஒழுகு-கதை உண்டு–
மலட்டு ஆகாசம் இப் பொழுது ஆனந்தம் அடைந்து வளர்ந்து இரு விசும்பு -அதுவும் வளர்ந்ததாம்–

மேலை தண்  மதி–ஆதித்ய மண்டலம் முதல் அதில் இருந்து 100000 மைல் தூரம் சந்திர மண்டலம்–
இது தான் மேல்–பகவத் விமுகராய்-அகங்கரிக்கும் நம் தவிக்கும் தலையில் வைத்த திருவடிகள்-
மலர் புரையும்-தளிர் புரையும்-குளிர வைக்க சிசுரோ உபசாரம் பண்ணுகிறார்–அது தோற்ற –
கதிரவன்- அடை மொழி இல்லை மதி- தண்மை- விசேஷணம் சொல்லி–இதைக் காட்டுகிறார்–
வெம் கதிரோன் சொல்ல வில்லையே–மேலை -போம் இள நாகம் பின் போய்-
ஆழ்வார் பின் போவதை காட்டி கன்றுகளை கட்டி கொண்டு அழுததை —
எழுந்து -தடவி -ஓடி-இங்கு திரு வடிகளை வைக்க துவரை உடன் -தாய் நாடு கன்றே போல் சேஷிகளை –
தம் தாம் அபிமான சித்தி -சேஷ பூதர் சேஷி அடைய துவரை இருக்க வேண்டும்- இங்கு தன் சொத்தை லபிக்க-

மார்கழி மாசம் ஆண்டாள் கொண்டாடுவது– சித்தரை மாசம் ராமனுக்கு பட்டாபிஷேகம்- இரண்டும் துவரை- சேஷ சேஷி-சம்பந்தம் —
100000 மைல் தாரகை மண்டலம் அதற்க்கு மேல் 12 லஷம் மைல் சிம்சுமார மண்டலம்-தடவி அடுத்தி–
ரஷக வர்க்கம் தொலைத்து தேடுவாரை போல –தடவி திரிந்தாலும் அகப் படாமல்-இருக்கும் வஸ்து சம்சாரிகள்/
தடவி-மிருதிவாக -கீழே மிதி மேலே தடவி–அப்பால் மிக்கு பிரம லோகம் வரை -சத்ய லோகம் வரை–
அந்ய சேஷத்தால் நாம் கெட ஈஸ்வரோஹம் என்று அவர்கள் கெட – அதனால் தடவினார்-
சேஷத்வம் இசைந்தோமே நான்- மற்ற பேருக்கு -அவனோ தானே ஈஸ்வரன் அடிமை திறமே தெரியாமல்–
மண் முழுதும் பூமி 14 லோகங்களும் அகப் படுத்தி- மேல் உள்ள லோகங்களும் என்று கொண்டு–

அளந்து எண்ணாதே -அகப் படுத்தி-இவன் மேல் விழுகையும் அவர்கள் இறாய்ப்பும் தோற்றும் —
நின்ற–க்ருத க்ருத்யனாய் நின்ற-சேஷ பூதன் சேஷியை அடைந்த பின் இருப்பது போல —
க்ருத கிருத்யனாய்  விஜுரன் பிரமோத  ஆனானே ஸ்ரீ ராமானும் விபீஷணன் பட்டாபி ஷேகம் பண்ணி கொண்டதும் —
எந்தை–அவர்கள் சொல்லாத குறை–வாமனன் வடிவு அழகு சௌசீல்யம்-
ராஜ்ஜியம் கால் கடை கொண்டு மார்பை பிளந்து எழுதி கொடுக்காமல்– ராஜ்ஜியம் பெற்று போனான் –
ஈன்துழாயானை வழுவா வகை நினையாமல் -நான் என் சொத்து என்னையும் கொடுத்து சமர்பிகிறார் ஆழ்வார் –
எந்தை-மலர் -நிரதிசய போக்கியம்–கீழே தளிர் புரையும் திருவடி– அங்கு ஆழ்வாரை  சேர்ந்ததால் இங்கு மலர் —
போக்தாக்கள் -ஆஸ்ரித கூடம் கண்டு-வணக்கம்- உபாயம் அனுபவம் இரண்டும்– திரு வடியே ஏ வகாரம்-
மற்ற எதையும் இன்றி மேன்மையும் எளிமை வடி வழகு மூன்றும் –
ஈஸ்வரோஹம் தலையில் வைத்த மேன்மை தானே யாசித்து போன நீர்மை மகா பலியும் எழுதி கொடுத்த அழகு –மூன்றும் கண்டோம்–
புறம்பு போக வேண்டாம்- அமுதினை கண்ட கண்கள் மற்று ஓன்று காணாவே–அனுபவிக்க பெற்றேன்- முக்தர் போகம் இது–
ஆஸ்ரயணீயமும் இதுவே உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்–அனுபவிப்பதும் இவையே —
தன் உடைமை லபிக்க போன சீலம்-மகா பலியே தோற்கடித்த அழகன்–ஜகத்தை அளந்து முடித்த  நம்பியை –
எம்பிரானை என் சொல்லி  நான் மறப்பேனோ –

அவுணன் உள்ளம் தாண்டி/ தானே /அகப் படுத்தும் எந்தை அனைவரும் பார்க்கும் படி-வணங்கினேனே-
ருசி ஜனகன் சர்வ பரமாய் சீலனாய் சுலபனாய் -இவனே போகய பூதன்– அனைவரும் சரண் அடைந்ததே திரி விக்ரமன் திருவடி தானே —
காவலில் புலனை வைத்து -காவலில் வைக்காமல் அர்த்த க்ரமம் -நித்ய யுக்தன்-ஸ்ரீ வைகுண்டத்தில் தானே பிரியாமல் இருப்பான் – 
ஞானி ஆசைப் படுபவன்-அர்த்த க்ரமம்-அது போல போகுகைக்கு —
பாழ்- திரு வடியால் தீண்ட படாத மூல பிரகிருதி–அதனால் தான் பாழ்– 
இன்று யாம் வந்தோம் இரங்கு- வயிறு பிடிப்பார்கள் ஆழ்வார்கள்–பகவத் சேஷ பூதர் அனைவர் என்று அனைத்தையும் தீண்டினான் —
கந்த மாருத பர்வதம் பத்ரி- மேரு பர்வதம் தொடர்பு உத்தவரை இங்கே போய் இருக்க சொன்னான் கண்ணன்—
ஏழு தீபங்கள் ஏழு கடல் உப்பு கருப்பம் சாறு கள் நெய் தயிர் பால் சுத்த தண்ணீர் -மேரு பர்வதம் லஷம் மைல் தூரம் ஒவ் ஒன்றும் —
பூ /புவ சூர்யா மண்டலம் / புவ  அடுத்து கிரகம்- புதன் வெள்ளி செவ்வாய் வியாழன் சனி சப்த ரிஷி மண்டலம் துருவ 16 லஷம் –
அது வரை சுவர்க்க லோகம் -க்ருத-அழிபவை  அக்ருத அழியாதவை – ஜன தப சத்யம்–
நடுவில் மக க்ருத அக்ருதா அழியாது இருக்கும் அவர்கள் கிளம்பி விடுவார்கள் அக்னி தாக்கம் என்பதால்–
மேலைத் தண் மதியம்- அப்பால் மிக்கு சுவர்க்க லோகம் வரை/ 6 கோடி -12 கோடி மைல் அடுத்த நான்கு லோகங்கள் —
சந்திர அமிர்த  கிரணங்கள் பட்டு கங்கை தீர்த்தம் தெளிக்கும் மேரு தெற்கு திக்கில் நாம் இருக்கிறோம்–
பரத கண்டம்–நான்கு பக்கமும் போகும் அலக நந்தா பக்கம் வந்தது –மந்தர பர்வதம் கிழக்கு பக்கம் மேருவுக்கு –
அதைக் கொண்டு கடல் கடைந்தான்– லோகா லோகம் மலை உண்டு நீர் தாண்டி –இதை தாண்டி அந்தமில் பெரும் பாழ்–
தான் ஒட்டி என் உள் இருத்துவன் என்று அகப் படுத்தினான்- -நின்று -ஜகம் சிருஷ்டித்த போது கூட இந்த ஆனந்தம் பட வில்லையாம் —
கருட வாகனும் நிற்க -அனைவரையும் உஜீவித்து போக —
கீழே தளிர்த்தது -தளிர் புரையும் திருவடி—வருத்தம் தீர்ந்தது -மகிழ்ந்து மலருதல் இங்கு மலர் புரையும் திரு வடி-
வருத்தமும் தீர்ந்து ஆண்டாள்–ஆஸ்ரிதர் சூர்யன் கண்டு மலர்ந்த திருவடி–
அழகு எளிமை சுலபன் -உள்ள திருவடி-போகய பூதன் -உபாய -உபேயம் ஆக  –  பற்ற வேண்டும்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: