திரு நெடும் தாண்டகம்–4-இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழ் ஓசை வட சொல்லாகி
திசை நான்குமாய் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே–4

கீழ் மூன்று பாட்டால் திரு மந்த்ரம் அர்த்தம்–
முதல் பாட்டால் சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி — 
அடுத்து அந்ய சேஷத்வம்  நிவ்ருத்தம் அருளி–அவனுக்கே அடிமை–
மூன்றாம் பாட்டால் போக்யதை  குறைவு அற்று இருக்கும் படி அருளினார்–
திரு மேனி அழகு வர்ணம் எல்லாம் பரக்க பேசினார்–

ஐந்து விரல்கள் விஷ்ணு நாராயண கேசவன் மாதவன் பார்த்த சாரதி எண்ணுவதற்கு–
அவனை நோக்கி நடந்து அவன் கொடுத்த புலன்களை அவன் மேலே வைக்க வேண்டும்–
மேல் விழுந்து ஆட் கொள்வான் அவன் —
அனுபவத்துக்கு சக காரிகளை தேடுகிறார் இதில்–
இனியது தனி அருந்தேல்–நித்யர் இங்கு இல்லை- சம்சாரிகள் விஷய பிரணவர்- நின்றவா நில்லா நெஞ்சினர்–
இனி ஒழிக்க முடியாத அவர் திரு உள்ளமே–நாம் இந்த விஷயத்தை சேர்ந்து அனுபவிக்கலாம்- வாழலாம் மட நெஞ்சமே–
வீடு முன் முற்றவும் உபதேசம் ஆழ்வார்–விலஷண விக்ரகன் விசிஷ்டன் உடைய -ஜகத் காரண பிரதிஷ்டன்-
ஸ்வரூபம் வெளிப் படுத்தும் திரு மந்தரத்தால் மறவாமல் வாழ –நெஞ்சுக்கு அனுபவிக்க கூப்பிடுகிறார்–
ஆச்சான் பிள்ளை-அருளிச் செய்தது –பிரமாணம் மூன்று விதம் –ஓம் நம  நாராயண  பிரமேயம்
சர்வ த்ரயம்–ஆசன பத்மத்தில் அழுத்திய திரு வடிகள்– அஞ்சேல் என்ற திரு கைகள்–அழகிய  திரு முக மண்டலம்-
கிரீடம் சாத்திய திரு முடிகள் -ரூபம் ./-
அதிகாரி-ஆகார த்ரயம் –அனந்யார்ஹ சேஷத்வம் -அனந்யார்ஹ சரணத்வம் -அநந்ய போக்யத்வம்– –
ஸ்வரூப பிரகாசம் திரு மந்த்ரம்–ஆகார த்ரய சம்பன பிராட்டி–திரு மந்த்ரத்தில் ஜகத் காரணம் காட்ட வல்ல இடம் எங்கு —–
உபய விபூதி நாதத்வம்-கல்யாண குணங்கள் கூடியவன்-சமஸ்த கல்யாண குணம் கொண்டவன்-
15 அத்யாயம்-கீதை  ஆளவந்தார்-வ்யாபிகிறான் தரிக்கிறான் ஆட்ஷி செய்கிறான் –இவை தெரிகிறது ஜகத் காரணம்–
திரு மந்த்ரமும் பிரமாண மூலம் -நான் முகன் தன்னோடு உயிர் படைத்தான் –
மற்றை தெய்வம் நாடுதிரோ-பரன் திறம் அன்றி மற்று ஒரு தெய்வம் இல்லை

ஏகைக நாராயண ஆஸீத் ந பிரம ந சிவா ந இந்த்ரன் —
நான் முகனை நாராயணன் படைத்தான்- நாராயணன் காரணன் சொன்னதே —
படைக்கப் பட்டதை எல்லாம் இருப்பிடம் ஆக கொண்டவன்–முறை அறியாத தேசம் என்பதால் இதை ஸ்தாபிகிறார்–
வள ஏழ் உலகுக்கு முதலாயா வானோர் இறை–நமக்கு காரணம் -சொல்லி வானோர் இறை–சொன்னது போல–
மூ வுருவம் முன்பு சொல்லி  வ்யக்தமாய் சொல்கிறார்-

முதல்வன் – உத்பாதகன் படைத்தவன்–இந்த்ரன் -பிரமன் -தனியாக எடுத்து சொல்லி —
இந்த்ரன் ஜீவாத்மா என்று நன்றாக தெரியுமே அதனால் அவனை எடுத்து கொண்டு–
ஈஸ்வரன் என்று சங்கை கொள்ளும் அளவு பேச படும் பிரமனுக்கும் உத்பாதகன்–
இவனை முற் படச் சொல்லி பிரமனை  பின்பு சொன்னது இவனோ பாதி அவனும் படைக்க பட்டவன் என்று காட்ட–
அனைவரும் ஜீவாத்மா கோஷ்டியே–அவன் ஒருவனே பரமாத்மா–
வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி-தாமரை கண்ணன்–ஆயுதம் சொல்லி கண் அழகை–
கண்ணைப் போல ஆயுதங்களும் ஆபரண கோஷ்ட்டி-ஈர்க்கும்–ருத்ரனும் ஈஸ்வரன் என்ற சங்கை உண்டே-
பூவில் நான்முகனை படைத்த –பிரமன்-சிவன்-ஸ்கந்தன்-சிவனுக்கு பிரம புத்ரத்வம் பிரசித்தம் என்பதால்–
பிரதான பிரமனையும் கீழ் உள்ள இந்த்ரனையும் சொன்னார்-தேவர் அமரர் நிர்ஜரர் சுரர்-பல சொல்கள்-
ஆதி அந்தம் சொல்ல -பிரத்யாகார நியாயம்–இடை பட்ட எல்லாம் சேரும்–அது லகாரம்-அல் எழுத்து அனைத்தையும் சேர்க்கும்-
இந்த்ரர்க்கும்- இந்த்ரன்- பெருமை-முத்தவன் தன்னை-அவனை–பூஜயதா புத்தி அல்லால் இல்லை-
ஈஸ்வரனால் சிருஷ்டிக்க பட்டாலும்–துர் அபிமானம் கொண்டு–
த்ரி லோகய நாதன் சதுர தச புவனமும் தானே படைத்தேன் நிர்வாககன் நான்  என்றும் கும்பிடு கொள்வதும் –முதல்வன்–ஜகத் பிரசித்தம்–
தனக்கு ஒரு உத்பாதகர் இன்றி இருக்கும் ஒருவன் அவனே –நமோஸ்துதே அகில காரணைய  அத்புத காரணாயா நிஷ் காரணாயா -கஜேந்த்திரன்–
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி- வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி–இரண்டுக்கும் இவனே காரணம்–

இரு நிலம் கால் நீர் தீ விண் பூதம் ஐந்தாய்-சமஷ்ட்டி சிருஷ்டி  பின்பு சொன்னது –
ஈஸ்வர சங்கை உள்ளது இவர்கள் பக்கல் ஆகையாலே –அதை முதலில் சொன்னார் —
ஸ்ருஷ்ட்டி கிரமம் முடிந்த கிரமம் சொல்லாமல்-பிர்த்வி -பிறப்பதில் கால் இரண்டாவது -சொல்லி –
அப்பு தேஜஸ்-விண் -சர்வ ஆதரமுமாய் அசஞ்சாரியுமாய் அபாகதமுமாய் இருக்கும் பூமி–முதலில் சொல்லி —
பாதிக்கிற மூன்றும் சொல்லி – இவை அனைத்துக்கும் இடம் கொடுத்த ஆகாசம் கடைசியில்-
கால் நீர் தீ -சிருஷ்டி கிரமம்–சஞ்சாரியுமாய்-ரஷகத்வ பாதகங்களுக்கு பொதுவாக இருக்கும் பூத த்ரயம்-இவை–
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய்-ஆழ்வார் –
பதார்த்தம் பண்ண நீர் அரிசி-தீ வாய் வேண்டுமே வைக்க இடம் நெடு வானாய்–பத்து உபநிஷத் ஈஷா -முதல்-மந்த்ரம் 18 கொண்டது –
இதம் சர்வம் ஈஷா வியாபிக்க பட்டது ஈசனால்-மூன்றாம் வேற்றுமை உருபால்-வசிகிறதால் வாசுதேவன்–ப்ருகதாரண்யம் ஈஷா உபநிஷத்–
ரெங்க ராமானுஜர் வியாக்யானம் உண்டு–ஈட்டு-நியமிக்கிறவன்-பரம சிவன் என்பர்-ஈச சப்தம் ரூடி அர்த்தம் இடு குறி பெயர்–
யவ்கிகம்-பங்கஜம்-தாமரை ஜலஜா-தாமரை-சொல்லை பிரித்து ஜலத்தில் இருந்து பிறந்த -அனைத்தும்–
ஆகாசாத் இமானி பூதானி ஜாயந்தே–இங்கு யவ்கிகம் ஆகாசம் பரமாத்மாவுக்கு என்று கொண்டு–
பர ப்ரஹ்மத்துக்கு வாசகம்-சாஸ்திர பலத்தால்-பரம சிவனுக்கு ஜகத் காரனத்வம் இல்லை-
இதம் சர்வம் என்று இங்கு பேசும் பொழுதும் ஈச சப்தம் அவனை கொள்ள முடியாது —
ஏவவோ கலுவோ=-ஆகாசத்தில் இருந்து தானே -அங்கு–இங்கு ஈச தான் இருக்கிறது–

இந்த்ரிய மந்த்ரத்தாலே கார்க பத்தியம் உபஸ்தானம் பண்ணுகிறான்-
இந்த்ரன் ரிக்கால் அக்னி-பிரகரணம் அக்னி என்பதால் இது -இந்த்ரிய-அக்னி தான் குறிக்கும்-
இங்கு கலு ஏவ இல்லையே  என்று காட்டினார் தேசிகன்–சர்வம் -சப்தம்-அர்த்த சங்கோசம் பண்ணி –
சர்வம் ஓதனம் புஞ்சே -வயிறு கொள்ளும் அளவு சாப்பிட்டான்-சர்வம் சப்தம் குறைந்து
அது போல ஈஸ்வரன் ஏதோ கொஞ்சம் காரணம்-சொல்லலாமா கேட்டான் பூர்வ பஷி–
பிரத்யஷ விரோதம் இன்றி நாராயணன் சர்வம் வருகிறதே–ஈட்டு சப்தம் நாராயணனுக்கே —
ஐந்தாய்-முதல்வன்-அவனே ஐந்து -பிரதம வியக்தி-ஒரே பிரமேயம்-நீராய் நிலனாய்–ஆனாய்– உபாதான காரணமும் அவன்–
மண்ணே குடம் போல முதல்வனே பூதம் ஐந்து ..வையதிகரணம் வெவ் வேறு சொல்வது சாமானாதி கரணம்–
காரணம் கார்யம்-சரீர ஆத்மா போல -மட்  குடம்-

அடுத்து வேதம் கொடுத்தவன்–செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி–சாஸ்திர வச்யர்–
திராவிட சம்ஸ்க்ருத வேதம் சிருஷ்டித்து -முதலில் ஆரியம் சொல்லி அதன் சிதைவை பின்  சொல்ல கடவ–பிரதானம் என்பதால்–
சர்வ அதிகாரம்–வேதம் திரை வர்ணிகருக்கு தானே-எய்த்ருக்கு அறிய மறைகளை -ஆயிரம் இன் தமிழால்-
ஸூவ அர்த்தத்தை தெளிவாக வெளி இடுவதால்-
கண்ணன் கழலினை நண்ணும் மனம்  உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே  –
தம் துறை ஆகையாலும்—அத்தோ பாதி இதுவும் பிரமாணம் என்பதாலும் —
உன்னை விட்டு பிரிந்து சீதை கிடையாது நானும் கிடையாது-லஷ்மணன்-பிரசித்தம் முன் வைத்து பேசினான்-
இங்கு சங்கை தெளிந்து வட சொல் வைத்தார்–
ஆழ்வார்கள் வார்த்தை வேதம் இதிகாசம் போல இல்லை அனுஷ்டானம் பண்ணியவர் வார்த்தை இவை–
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து உபதேசித்தார்–
மக ரிஷிகள் காம குரோதம் உடன் அனுஷ்டானம் பண்ணி பக்தி அனுஷ்டானம் பண்ணினவர்கள்–
ஆழ்வார்கள் பிர பன்னர்கள்- ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -இவர்களுக்கு –உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருந்தவர்கள்–
செம்மை-அழகிய –திறம்-கூறு பாடும் பிரகாரம் — அர்த்தம் செவ்விதாக பிரகாசிக்கும் –
உப பிரமாண அபேஷை அற்று இருக்கை-வேதங்களுக்கு இதிகாசம் புராணம் எதிர் பார்த்து இருக்கும்–
ஆறு அங்கம் கூற அவதரித்த என்கிறோம்–அபேஷை அற்று இருக்கை என்கிறார்–எதிர் பார்க்காது -ஆறும் அமைந்தன–
கல்யாண குணங்கள் பகவான்-நீர் பூத்த நெருப்பு -ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்க்கும் 
புருஷ கார பூதை  யால் தலை எடுக்கும் -ஸ்வாமித்வம் போல்வன–பிராட்டிக்கு அதீனமா —
இல்லா விட்டாலும் ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் எதிர் பார்க்காது–அவளும் இருக்கிறாள் போல–
ஓசை- பாட்டுக்கும் துவநிக்கும் -சப்தமே சொல்கிறது லஷனையால்–ஓசை ஆகி/சொல் ஆகி-வட சொல்-
வட எல்லை திருவேம்கடம்–உபயமும் சஞ்சரிக்கும் ஏற்றம் இங்கு தானே–பக்தி பிறந்தது திராவிடம் வளர்ந்தது கர்நாடக வடக்கே தான் நிறைவு பெற்றது–
ஆகி-தான் பிரகாசித்தான்–திரு வாய் மொழியும் உண்டாக்க வில்லை ஆழ்வார்-புதிதாக தோற்றுவிக்க வில்லை–
திசை நான்கும் ஆய–இருக்கும் மக்களையும் பதார்த்தங்களையும் சிருஷ்டித்தான்-

லஷணையால்-மஞ்ச குரோசா-குண திசைமுடியை வைத்து  -திரு வடி நீட்ட கிழக்கை ஸ்ருஷ்டித்தானாம்–
திங்கள் ஞாயிறும் ஆகி–அக்னி ஆகுதி -மழை-நெல்–ஆகி- சிருஷ்டி சமாப்தி தோற்ற-ஆகி என்கிறார்–இது வரை நார சப்தம் சொல்லி –
இனி அயன சப்தம் சொல்ல போகிறார்-

அந்தரத்தில் -வ்யாபிகிறான்-அயன சப்தம்-அகடிகடதாக சாமர்த்தியம்–
வியாபிக்கும் இடத்தில் வியாபிக்கும் காலத்தில்-அந்தரத்தில்–தேவர்க்கும் அறியல் ஆகா —
என் இடம் வ்யாபித்ததை என்னாலே அறியல் ஆகா –
யா  ஆத்மா வ ந வேத –யா பிரத்வி ந வேத -ஞானம் இருக்கும் ஆத்மா கூட அறிய முடியாதே–அப்ரமேயன்-
தேவர்களுக்கும் விசேஷித்து -சொன்னது -ஞான சக்திகளால் அதிகம் கொண்டவர்கள்–என்பதால்–
அந்தணர்–சுத்தனை-பரி சுத்தன்- சபரி-பெருமாள் இடம் பார்வையால்–
ஆழ்வார்கள் எல்லாரும் இந்த சப்தத்தால் சுத்தன் – அரவு அணை ஆழி படை அந்தணனை–
கைவல்யார்த்தி பற்றுபவன்–அசுக்தி போக உபாசிக்கிறான்-பகவத் லாபார்த்தி – -குணம் விசிஷ்டனை உபாசித்து -குணம் ஆச்ரயிப்பான்-
இங்கு சுத்தி உபாசிகிறாரா -ஸ்ருஷ்ட்டி சொல்லி–வ்யாபகத்வம் சொல்லி- தோஷம் தட்டாது சொல்ல சுத்தி—
வள உகிரால் போழ்த   புனிதன்–போல–ஏஷ சர்வ பூத அந்தர் ஆத்மா அபகத பாப்மா–சாஸ்திர வாக்கியம்-
பரம வைதிகரே ஆழ்வார் ஆகிறார்கள்–

அந்தணர் மாட்டு -வேத சிரஸ்- வேதாந்தம் -மாடு=தனம்–மாட்டு அந்தி வைத்த  வேதாந்தம் -மறைத்து வைக்க பட்ட —
தனம் உன் திருவடிகள் தானே -தனம் மதியம் த்வம் பாத பங்கயம் –வேதத்தால் சொல்ல பட்டவன் –
சுடர் மிகு சுருதியுள் உளன்–பிரமாணத்துக்கு அடக்கிய சரக்கு–
மந்திரத்தை-பகவானை- மந்தரத்தால்- திரு மந்த்ரம்- சர்வ ஸ்மார்த்-பெரியவன்–
ஈஸ்வரனை ரகசியம்–கடைத் தலை – புழக் கடை அடைத்து கிழி சீரை அவிழ்த்து -ஓராண் வழியாக உபதேசித்தார் முன்னால்–
மறைத்தே அருளினார்கள்–
மந்திர-அநுஸந்திக்குமவனை ரஷிப்பான்-திரு நாமம்–சர்வமும் திரு உள்ளத்தில் பிரகாசித்து நிற்க –
மரியாதை பங்கம் உண்டாக்கக் கூடாது என்று -சாதுர் வர்ணம் விதித்தானே–இழிந்த துறை-அனுபவிப்பாய்-திரு மந்த்ரத்தாலே —
இதன் போக்கியம் எங்கும் இல்லை–சகஸ்ர சாகை வேதம்–சர்வ அர்த்தங்களையும் திரட்டி –பகவானை இப்படியாலே அனுபவிக்க வேண்டும்—
தேவதாந்தரங்களை விலக்கி–பிரயோஜனாந்தர விலக்கி–யானி நாமானி கவ்னானி-பல திரு நாமங்கள் உண்டு–
இதைக் கொண்டு அனுபவிக்க வேண்டும்–
வ்யாபககங்கள் மூன்று —வாசுதேவன் விஷ்ணு -அவை- இத்தை பற்ற சாபேஷை– இது நிரபேஷை-
வ்யாப்தி பூர்த்தி பிரயோஜனம் எதில் எப்படி வ்யாபிகிறான் இதில் தான் சொல்லும் நான் கண்டு கொண்டேன் என்ற நாமம்
கடைத் தலை சீய்க்கபெற்றால் கடு வினை கழியலாமே–

மறவாமல்- விஷயாந்தரம் எண்ணம்  சொல்ல வில்லை–
இது இவருக்கு சேராது-மறக்காமல்- தேக சம்பந்தம்-தாப த்ரயம் உண்டே –இதை பார்க்காமல்- பூர்வ விருத்தாந்தம்/
விஷய வைலஷண்யம் பார்த்து -மறக்கலாமே இவர் நிவ்ருத்திக்கும் அவனை அடைவதற்கும் -உபாயமாக கொள்ளாமல்- நினைப்பதே மறதி —
அனுபவம் நெஞ்சில் கொண்டு–சரண் ஒரு தடவை பண்ணி பின்பு அனுபவிக்க வேண்டுமே
உபாயமாக நினைந்திருந்தால் அனுபவத்துக்கு விரோதியாக வாய்ப்பு உண்டே —
பூர்வ அர்த்தத்தில் இழியாமல் -உத்தர வாக்யத்திலே இருக்க வேண்டும் –ஈஸ்வரன் கையில் ஒப்படைத்த பின் —
மீண்டும் சரண்-பண்ணுவது -நிர்பந்திப்பது போல-மகா விசுவாசம் கொண்டு உபாயமாக நினைப்பது கூடாது–
ஈஸ்வரர் காரியத்தில் மீண்டும் இழிய கூடாது –வேய் மறு தோள் இணை மெலியுமாலோ-அவன் தோள் தான் மெலியும்–
நம்மை ரஷிக்க சக்தி பிராப்தி இல்லை ஜகத் காரியத்துக்கு சக்தி பிராப்தி இல்லை போல  –
வாழுதியேல்-மனசை சொல்ல-புத்தி மனம் மூளை ஒன்றுக்கும் ஞானம் இல்லையே —
சேதனனுக்கு நெருக்கம் என்பதால் பேசுகிறார்-மனசு ஒத்து கொண்டால்  தான் அனுபவிக்க முடியும் -என்றும் –
நித்யர் அனுபவம்-வைஷ்ணவன் ராஜ குமாரன் தானே மடப்பம் உள்ள நெஞ்சே-
விஷயாந்தரம் துறந்த பொழுதும் உபாயம் பற்றியது போல -போக வேளை யோடு -நெஞ்சமே நல்லை நல்லை

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: