திரு நெடும் தாண்டகம்-1–மின் உருவாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

மின் உருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய்  முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி  மூப்பு இல்லா
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது என்னும்
பொன்னுருவாய் மணி வுருவில் பூதம் ஐந்தாய்
புனல் வுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–1

தேக ஆத்மா அபிமான நிவ்ருத்தி தொடக்கமான –உபகார பரம்பரைகளை பேசுகிறார்–
திருவடிகளில் சம்பந்தம் ஈறாக –அருளி ப்ரீதிராகிறார் –க்ருதக்ஜை செய் நன்றி —
உயர்வற உயர் நலம் உடையவன் தொடங்கி-உடனே மயர்வற மதி நலம் அருளினவன் -சொல்லி —
மறுபடியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கிறார்–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே–பெரியவன் உதவி புரிந்ததை சொல்லாமல் இருக்க முடியவில்லை-
அதனால் அதை அடுத்து சொல்கிறார்
மின் உரு அஸ்தரம் போல முன்னால் காண படுபவை—/அடுத்து பின் உரு—சித் ஜீவாத்மா / பொன் உரு–பரமாத்மா-தத்வ த்ரயமும்  – -/
வேதம் நான்கைக்   கொண்டு காட்டினான்–நிலை நில்லாமல் -அஸ்திரம்-மின்னலை விட–
முன் உரு-கண்ணால் பார்க்கிற படியால்–நின்ற படி நிற்காது–மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்–
மின்னலை விட-போல இல்லை–ஸ்திரம் என்று பிரமிக்க வைத்து இருக்கும் அஸ்திரம் இவை–இதை தான் முதலில் காட்டினான்–
சரீர ஆசை விட–தாழ்ந்தது தெரிய வைத்து-பிரக்ருது பிராக்ருதங்களின் அஸ்திர தன்மை பிரகாசித்தான்–
சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ்–பிரகிருதி சேதனர்–சம்பந்தம் -இரண்டு காரணம்-கர்மத்தாலே பந்தம் –
நம் போல்வார்–கர்மம் தொலைக்க இருக்கிறோம் –பகவத் பிரசாதத்தால் பந்தம்–ஆழ்வார் போல்வார்–
திரு துழாய் அங்குளிக்கும் போலே பரிமளிக்கும் போல –இவரை வைத்து பிர பந்தம் அருளி நம் போல்வாரை திருத்த —
கர்மத்தாலே பந்தம் உண்டான போது -ஸ்வரூபம் சரிவர தெரியாமல் மறைத்து கொண்டு இருக்கும் –
தன் பக்கல் அஸ்திரம் அபோக்கியம் மறைத்து இருக்கும்–வேண்டியதை மறைத்து வேண்டாததை பிரகாசித்து இருக்கும்–
பகவத் பிரசாதத்தால் வந்த பொழுது -அஸ்திரம் அபோக்கியம்  பிரகாசித்து

சரீரம் த்யஜ்யம்-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டும்–
கண்ணா நீ உன்னை கண்ணாடியில் பார்த்தால் தான் தெரியும்  உன் அழகு என்னை படுத்தும் பாடு–புருஷார்த்த சாதனம் சரீரம் தானே —
இலை சாப்பிட்ட பின்பு தூர போடுவது போல–சரீரமும் அவனை பெரும் வரை தான்–
அபக்ருத ஸ்நானம் ஆன பின்பு ஹோம  குண்டங்கள் த்யாஜ்யம் போல–
சாமானாதிகரணம்–நீல வாய்  சிரித்து வயிறு பெருத்த  தண்ணீர் எடுக்க உபயோகமாய் இருக்கும் குடம் போல —
ஒரே குடம் -விசேஷணங்கள்–பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் -ஏக -ஒரே வேற்றுமையில் படிக்க பட்டவை–
அது போல வேதம் நான்காய் விளக்கு ஒளியாய்–பகவானை குறிக்கும்–இமே தேகம் -முன் உரு–பிரகிருதி சொல்லி –
அஹம் -சாஸ்திரம் கொடுத்ததை சொல்கிறார் நடுவில்– அதனால் தான் தத்வ த்ரயம் அறிந்தோம்–
இந்த்ரன் விலோசனன்-பிரதி பிம்பம் பார்த்து-பிரம தண்ணீர் கொப்பரை-பார்த்து தேகமே ஆத்மா –இந்த்ரியம் தான் ஆத்மா –
மூன்றாம்  தடவை கேட்க-மனசே–சொல்ல–ஆத்மா சொல்வதை மனசு கேட்க்கவில்லையே –
நினைப்பது வேற நடப்பது வேற-மறு படியும் கேட்டான்–பிராணனே ஆத்மா–அஸ்திரமே வாயு–சந்தேகம்–
புத்தி–எல்லா சமயமும் வேலை பண்ண வில்லையே–பகவானுக்கு தேகம் அறிந்தான்–யாதாஞானம் பிறக்க —
சாஸ்திர அபேஷையால் தானே–அதனால் வேதம் கொடுத்தான்-
அன்னமாய் அரு மறை பயந்தான் -சிங்காமை விரித்தான்- வேத பிரதான்– வேதம் நான்காய்–

சரீர ஆத்மா பாவமும் சாமானாதி கரணமும் புரிந்து கொள்ள வேண்டும்–
ஆத்மாவின் உண்மை நிலையை சொல்லும் வேதம்–த்யாஜ்யம் உபாயம் காட்ட தான் அசித்தும் பரமாத்வாவும்—
விட வேண்டியதை சொல்லி பற்ற வேண்டியதை சொல்ல தான் மற்ற இரண்டு தத்வங்களையும் சொன்னது —
அசித் ஞான சூன்யம்–ஜடம்-அவனுக்கு தெரிந்து கொள்ள  வேண்டியது இல்லை–
சர்வஞ்ஞன்–ஸ்வரூப அனுரூபமான -நிர்ணயம் பிரமாணம்–இயல்பு தன்மை அறிந்து —
விட வேண்டியதை சொல்லி பற்ற வேண்டியதை- சொல்ல – அவனுக்கு அடிமை என்பதால்–
புத்திரன் பசு வீடு களத்ரன் இவை விட்டு/—அவர் அவர் விதி படி அடைய நின்றனரே–சாஸ்திரம் வசப் பட்டவன் ஜீவாத்மா –
உபதேசம் நமக்கு தானே–வேதனம்-விளக்குதல்- ஸு அர்த்தம் பிரகாசம் பண்ணும்–அறிய ஆசை உள்ளவனுக்கு –
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன் -பிரமேய ஸ்வாபம் பிரமாணத்துக்கும் உண்டு–சாமானாதி கரண்யம் –
சொல்ல படுவதால் இல்லை–கொடுத்தவன் கொடுக்க பட்ட வஸ்து-உபகாரம் பண்ணியதால்–

ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தம் விளக்கும் பாசுரம்–தரிசனம் -அகில தமம்-வீறு கொண்டது -வேதம் வேதாந்தம் உரை கல் கொண்டு-
சாஸ்திர சம்பந்தம் உண்டு–தத்வ த்ரயம்–போக்தா போக்தம்   பிரேரிதா–முன் உரு பின் உரு பொன் உரு —
நிர்விசேஷ கூடச்த ப்ரஹ்மம்  அத்வைதம்-சஜாதீய  பேதம் விஜாதீய பேதம் சுகத பேதம்–மூன்றும் இல்லை–
த்ரி வித பேத ரகிதன் ப்ரஹ்மம் என்பர்–2-17 கீதை-நான் நீ இவர்கள் பிரித்து பல ஜீவாத்மா உண்டு அவாந்தர பேதம் உண்டு –
முதலிலே சொன்னாரே– உயர்வற உயர்நலம் -குணங்கள்  –
துயர் அறு சுடர் அடி-திரு மேனி உண்டு குணங்கள் உண்டு .விபூதி உண்டு -ஆழ்வாரும் தம் கருத்தை அருளினார்..-

அனந்தரம் சாஸ்திர ஞானம் கொடுத்ததை-விளக்கு ஒளியாய்-
ச்ரோதவ்ய -காதால் கேட்டு– முளைத்து-மந்தவ்யாக -ஆராய்ந்து நினைந்து பார்த்து –எழுந்த -ச்ரோதவ்ய –திங்கள் தானாய் ..
த்ருஷ்டவ்யாக -நிதியாசனம்-இடைவிடாமல்–விளக்கில் அஞ்ஞானம் விலக ஆரம்பிக்கும்/
மலை மேல் உள்ள சந்த்ரனால் கொஞ்சம் போய் எழுந்த -இன்னும் கொஞ்சம் திங்கள் தானாய்-
பரி பூர்ணம்-நான்கு நிலைகள்–கேட்பது முதல் நிலை–விளக்கு ஒளி போல–
ஆராய்ந்து படித்து பார்த்து கொஞ்சம் அதிகம் ஞானம் பெற்று சிந்தனையால்–அடுத்து அனவரதம் சிந்தனை–
அவன் உள்ளே வர வர இருட்டு போகும் மூன்றாவது நிலை —நிதித்யாசனம்-அப்புறம் தரிசனம்–
சாஸ்திர வாக்கியம் பரமாத்மாவை பற்றி–
இதில் ஆழ்வார் இந்த படி கட்டை ஜீவாத்மா அறிவதை சொல்கிறார்–
வேதத்தால் பிறந்த ஞானம் ஸ்ரவணம்–அஞ்ஞானம் போக்கி பகவத் விஷய ஞானம் பிறக்கும்

ஏற்றின விளக்கால் ஞானம் வராதே அதுவே அசித்–மறைகிற இருட்டை விலக்கி கொடுத்தது —
அது போல ஆத்மா பற்றிய ஞானம்–விளக்கு ஒளி யாய்- அவன் இருட்டை விலக்கினான்–தானே ஞானம் பிரகாசிக்கும் –
ஸ்வரூப -தீபம் இந்த்ரியங்கள் போல –அக்ஞானம் தமஸ் இருட்டு போல–ஸ்ரவண  ஞானம் -ஞான இந்த்ரியங்கள்–
சாஷுசா ஞானம் கண்ணால்  ஸ்பர்ச ஞானம் -ஐந்தும் உண்டு–வேதத்தை தீபம் போல கொடுத்தான்- —
ச்ரோதவ்யா சொலிற்று இத்தால்–மனன நிதித்யாசன தர்சன அடுத்த  மூன்று ஞான நிலைகள் –பிரகாசம் மனன திசை-முளைத்த திசை–மனனம்

கேட்பதற்கு அடுத்த நிலை–ஆராய்ந்து- –அடுத்து எழுந்து-ஆகாசத்தில் எழுந்த –
அநவரத பாவனை–நிதித்யாசன -அதி பிரகாசமான -நிலை–
ஸ்ரவணம் 10 படி கட்டு  தாண்டி மனனம் 1000 படி கட்டு தண்டு அநவரத பாவனை
அடுத்து திங்கள் தானாய்-தரிசனம்-சாஷாத் காரம் சொல்கிறது
6 அத்யாயம் கீதையில் சொன்னதை சுருக்கி ஒரே வார்த்தையில் ஒவ் ஒரு நிலை அருளினார்-திங்கள் தானாய்- என்றது —
நிஷ்க்ருஷ்ட்ட -உண்மையான சந்த்ரனாய்–களங்கம் இன்றி –திட்டு இன்றி–பூமியின் நிழல் தானே இது –நிஷ் களங்கம் அது —
அதனால் தான் திங்கள் தானாய் –ஆத்மா பேரில்- விசிஷ்ட  வேஷம் சரீரத்தில் இருப்பதால்–
சரீரம் தொலைத்த ஆத்மா =திங்கள் தானாய்–பிரபை தர்ம பூத ஞானம் -உபகார கெளரவம்-சொல்கிறார் அவன் காட்டிய நிலைகளை–
பண்டிதன் சம தர்சனன்–நிஷ்க்ருஷ்ட தன்மை தெரிந்தால் தானே ஏற்றம் புரியும்–
ஞானம் பிறக்க சந்தரன்-யதா சூர்யம் ததா ஞானம் சாஸ்திரம்–சொல்லுமே–
ஞாயிறு சொல்லி இருக்கலாமே –சுயம் பிரகாசத்வம்/ஆக்லாத ரூபம் தோற்றவும்–
சூர்யன் தபிக்க பண்ணும் சந்தரன் குளிர்ச்சி ஆனந்தம்- சரம பட்டு பெற்ற ஞானம் ரிஷிகள் இதை சொல்வார்கள்-
ஆழ்வார் பக்தி ரூபாபன்ன ஞானம் பெற பெற்றதால் ஸ்ரமம் படாமல் பெற்றதால் –
சாதகன் தம் ஸ்ரத்தை தோன்ற கிலிஷ்ட-அக்லிஷ்ட்ட- ஞானம் இவர்களுக்கு —
பின் உரு-ஜீவாத்மா -விசேஷணம் முன்பு சொல்லி -இங்கு சரீரம் பின் மறைந்து உள்ள –
பஞ்ச விம்ச 25 தத்வம்—அசித் தத்வங்கள் 24 வேறு பட்டு இது —

இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு—தேக இந்த்ரிய மனக பிராண -அநந்ய சாதனன் ஆத்மா —
வேறு சாதனம் தேவை இல்லை–சுயம் பிரகாசம் ஆத்மா -தானே ஞான ஸ்வரூபன்– நான் என்பது ஆத்மா – –
என் உடையது சப்தம் எல்லாம் அசித் இனி ஆத்மாவின் குணங்கள்–நித்ய- வியாபி-பிரதி ஷேத்திர பின்ன – –
நித்யம்–முழுவதும் வியாபித்து-ஒவ் ஒரு உடலில் வெவ் வேற ஆத்மா -சுத சுதி-ஆனந்த ஸ்வரூபம்–ஆனந்த மயன்–துக்கம் தட்டாமல்–
பரமாத்மாவுக்கு அடிமை தெரிந்து அவனை அனுபவிப்பதால்–தேகம் தோஷம் தட்டாது–பிரகிருதி பிராக்ருதங்களில் உண்டான-
பிணி =துக்கம்– மூப்பு பிறப்பு-ஷட் பாவ விகாரம்-இருக்கிறது பிறக்கிறது மாறுகிறது வளர்கிறது தேய்கிறது இறக்கிறது ஆறும்–
அஞானாதிகள்-இல்லை–இறப்பதற்கே எண்ணாது-தனியாக சொன்னது–துக்க அஞ்ஞான மலம் ஷட் பாவம்  கொண்ட தேகம் போல இல்லை —
சேற்றில்  விழுந்த மாணிக்கம் போல்–

பிரகிருதி உடன் சேர்ந்து இருப்பதால் -ஊமதன்காய் போல-இறக்கை-மரணம் எண்ணாமல்- ஸ்வரூபம்-கைவல்யம் எண்ணாமல்-
முன்பே ஷட் பாவம் சொன்னதால்  இங்கு -ஸ்வரூபம் மரணம்-ஆத்மாவுக்கு -பகவத் பிராப்தி ஏற்படாமல் —
அதை தான் பரமாத்மா எண்ணாது -இதை தவிர்த்தான்–ஆத்மா அனுபவம் மரணம் ஆகுமா–தேகம் போனால் மரணம்-ஆத்மா பிரிந்த உடன்–
அது போல ஜீவாத்மா விட்டு பரமாத்மா பிரிவது–ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்—நசியாதே இது -ஆத்மா – மரணம் சொல்லலாமோ–எனில்–
கீழ் உள்ளது மரணம் என்று கேட்டு கொள்ளலாம்-
ஒருத்தி -யசோதைக்கு மகன் சொல்லலாம் தேவகி மகனா  என்று கேட்கலாம் -போல-
ஸ்வரூப அனுரூபமான இன்பம் இல்லாமையாலே –அவனுக்கு அடிமை பரதந்த்ரன் என்கிற ஸ்வரூபத்துக்கு தகுந்த
இன்பம் அனுபவம் கிடைக்க வில்லை என்பதால்–பர ஹிருதயத்தால் மரணம்- நித்யர் முக்தர் இதை தான் மரணம் என்பார்
சம்சாரியாவது ஒரு நாள் வருவானே –நடை பிணம் சொல்வது போல – -அன் நாதனுக்கு இல்கல் என்பதால் –
அன்னாத-அஹம் அன்னாத- சொல்ல முடியாதலால்–
ஷர மரண மோட்ஷாய-கைவக்ல்யம் கொடுக்கிறேன் 7th  அத்யாயம் சொல்கிறான் கொடுக்க வல்லவன் கிடீர் இந்த படு குழியில் தள்ளாது போந்தான்-
எண்ணாது-தராது இல்லை–கொடுத்தல் கையால்- நினைக்கவே இல்லை– நினைவு பெரிதாகி அப்புறம் கொடுக்கலாமே –
எதை கொண்டு வாழ்கிறார் அவன் எண்ணம் கொண்டே உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் அவன் எண்ணமே முக்கியம் சங்கல்பம் –
பகவத் கைங்கர்ய ப்ரீதி கார்ய கைங்கர்யம் கொடுக்கிறான்–

கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன் –அரங்கனே-நிறைய நல்ல குணம் இருந்தாலும் அவலஷணம்-
கூனல்- ஜீவாத்மாவுக்கும் நிறைய குணங்கள் உண்டு–ஸ் வாதந்த்ர்யம்–துர் அபிமானம்-அகங்காரம் மம காரம்-கூன் -போக்கி —
அரங்கன் குனிய வைப்பான்–தலை குனிந்து விநயம்–ஏற்படுத்த–கைவல்யமும் தவிர்த்தான்

இவனும் முக்தன்–மோட்ஷம் விடுபடுதல் தானே முக்தி–சம்சாரத்தில் விடு பட்டவன் தானே கைவல்யம் பெற்றவனும்–
கதி த்ரய மூலச்தம் அவன் தான்– ஐஸ் வர்யாதி /கைவல்யார்த்தி/பரம பத வாசி -மூவருக்கும்–
அபிபிப்ராய பேதம் உண்டு-தேசிக இந்த லோகத்திலே –மீள வாய்ப்பு உண்டு-தொலைக்க வேண்டும் என்பதில் வாசி இல்லை /
முடிந்தே போவான் தென் ஆச்சர்ய சம்ப்ரதாயம்–
முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யங்கள் மூன்று –கைவல்யார்தியும் குறிக்கும் -மணவாள மா முனி -பகவத் லாபார்திக்கு  மட்டும் என்று விளக்கி காட்டினார்//–
எண்ணாது -என்பது அவன் எண்ணமே இவருக்கு ஜீவனம்–அசித் சொல்லி சித் சொல்லி பரமாத்மா சொல்கிறார்-
ஆள வந்தார் சித் சொல்லி அசித் சொல்லி ஈஸ்வரன் சொன்னார்–
உபதேசம் சொல்ல வர வில்லை இங்கு -உபகார வரிசைகளை சொல்லி வருகிறார் இங்கு–
அருந்ததி காட்ட பெரிசு காட்டி வருவது போல-இங்கும்
தத்வம் சொல்லிக் கொடுக்க வந்தவன் ஸ்தூலம் சொல்லி -ஐஸ்வர்யம் அனுபவித்து தாழ்வு சொல்லி-
அழகான ஸ்தூலம் காட்டி- நியமிக்கும் தன்னை-சூஷ்ம தமம் – காட்டி கொடுத்தான் —
எண்ணும் பொன் உருவாய்– ஆபத்துகளை நீக்கி-தன்னை வேற காட்டி கொடுத்தான்
தன் ஸ்வரூப ரூப குணம் காட்டி–திவ்ய ஆத்ம ஸ்வரூபம் பிரகாசித்தான்– நித்ய ஸ்ப்ரூஹணீயத்வம் –பொன் உரு —

உடல் தனித்து இருந்தால் சுகம் துக்கம் இல்லை-கருவி ஸ்தானம் தான் உடல்– அனுபவிக்கிறது ஆத்மா ஞானம் இருப்பதால்–
ஈஸ்வர ஸ்வரூபம் -தான் ஆன தன்மை– ரூபம் திரு மேனி குணங்கள் காட்டினான்–
எண்ணும் நினைக்க–நேதி நேதி என்று சொல்லி பார்க்கலாம்–பிரயத்ன படலாம் —
ஸ்வரூபத்துக்கு வரணம்  இல்லை–நினைத்து நினைத்து என்ன வைபவம் என்று விரும்ப படுவதாக இருக்கும்–
மனசில் பெருமை உயர்வு தோற்ற பொன் உரு–அது அது -இதம்-இவ்வளவு என்று சொல்ல முடியாது—
ஒவ்வொரு குணங்களும் அளவிட முடியாதவை- எல்லாம் ஆச்ரயித்து இருக்கும் ஸ்வரூபம்–
ஆனந்தம் அளக்க முற்பட-சாஸ்திரம்-மனுஷ்ய-யுவன்-ப்ரித்வி மண்டலம் முழுவதும் பொன்னால் நிரப்பி கொடுத்தாலும் –
அசன சீலன்–ஜரிக்க ஆஸ்ருத க்ருத்யத்வம்-ஆசீர் வசன பாத்திர பூதத்யம் உள்ளவன்–மூன்றும் கொண்டவன்-
நூறு மடங்கு தேவ இந்திர பிரகஸ்பதி பிரம -மீண்டது–இதை கீழ் வைத்து 100 பிரம வைத்தாலும் அவன் ஆனந்தம் அறிய முடியாதே —
இந்த ஒன்றே அபரிச்சின்னமாக இருக்க -அசங்க்யேய கல்யாண குணங்கள் உண்டே-
கை முதிக நியாயம் குச்சி வடை கதை–தண்டா பூப நியாயம் 
பொன்- என்றது -விரும்ப படுவதாய்-உண்டு என்றால் உயிர் தரிக்கையும் இல்லை என்றால் தரிக்காமையும் —
சம்ச்லேஷ விச்லேஷங்கள் –இத்தை கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்து கொள்ளலாமே–
எழுவார் விடை கொள்வார் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-ஞானி  தன் ஆத்மா மே  மதம் –அவனை பற்றினதும் எதுவும் கிட்டுமே –

அவனையும் பெறலாம்-இதை உடையவன் கையில் லோகம் எல்லாம் விழும்-
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் ஆழ்வார் திருவடியில் இன்றும் நாம் தெற்கு திக்கு நோக்கி தொழு கிறோமே–
எண்ணும் பொன் உருவாய்- இங்கும் சாமானாதி கரணம் ..மணி உருவில் பூதம் ஐந்தாய்–உபாதான பூதம் –
மண் உருண்டை கொண்டு மண் பானை போல நம்  உடலும் ஐந்து பூதங்களால் பண்ணி–
இங்கோ அவன் ரூபம் தானே சொல்ல வந்தார்-உபாதான -காரண-அவன் திரு மேனி ஐந்து பூதங்களால் இல்லையே–
பஞ்ச உபநிஷத் பஞ்ச சக்தி மயம் பரமேஷ்ட்டி -போன்ற ஐந்தால்-அப்ராக்ருதம்–சுத்த சத்வ மயம்-
மணி உருவில்- திரு மேனியில்-மணியின் ஸ்வாபம் உடைத்தான வடிவில் தேஜோ மயமாய் இருக்கை–
மணி மாணிக்கமே/மாலே மணி வண்ணா –ஒளி விடுகை–பிரகாசம்–தேஜசாம் ராசி மூர்ததாம் –
ஒண் சுடர் கற்றை-ஆசாரம் தள்ளி சார கற்றை–சுட்டு உரைத்த நன் பொன் மேனி உன் திரு மேனி ஒளி ஒவ்வாது —
மாணிக்க செப்பிலே பொன் போலே–தனக்கு-ரூபத்துக்கு – ஆச்ரயமான ஸ்வரூபத்துக்கும்  –
ஸ்வரூப ஆச்ரயமான குணங்களையும் -சுத்த சத்வ மயம்–தத்வ சூன்யம்-காலம் இல்லை-ஞானத்தை வளர்க்கும்–
ஸ்வரூப குணங்களை விட போக்யமாய் இருக்கும் ரூபம் –எங்கு இருக்கு என்று அறிய முடியாதே ஸ்வரூபம்—
கண்ணை பார்க்கலாம் கிருபை பார்க்க முடியாதே–
மாஸூச அஞ்சேல் சொல்லும் கைகள்/ கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள்–
புன் சிரிப்பை காட்டி -அழகனூர் அரங்கன்–உபாதானமான -பஞ்ச உபநிஷத் பரமேஷ்ட்டி-/ஐந்திலும் இருக்கிறான்/ ஐந்து  பூதங்களிலும் இருக்கிறான்-

மணி உருவிலும்  இருக்கிறான்-பஞ்ச பூதங்களிலும் இருக்கிறான்–
பூ தரு புணர்ச்சி புனல் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி-தன்னை ரஷித்தவர்கனுக்கு தன்னைக் கொடுக்க –
ஆழ்வார் தன்னை ரஷித்துக் கொண்ட சேஷ்டிதங்களுக்கு  தங்களை கொடுப்பார்கள்-
பாரார்த்த்யம்-அவனுக்கே கொடுப்பார்கள்–எல்லாம் அடிமை யாக கொண்டவன்–
ஆளுகைக்கு–பக்தனும் கடை தேற்ற-சம்சாரம் வெட்டி விட சாமர்த்தியம் உடையவன்–தன்னையும் கொடுப்பான்-
அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் தருவான் -அதனால் இரண்டும் ஆளுகை அவன் இடம்–
பிரதான புருஷ ஈஸ்வரன்- அசித் ஜீவாத்மா இருவருக்கும் நியந்தா–இப்படி விலஷனமாய் இருகிறவன்–
புனல் உருவாய்-நீர்மை உடையவன்–துர் லபம் இல்லை -எளியவன்—கனிவார் வீட்டு இன்பம்–
வசிஷ்ட்ட சண்டாள விபாகம் அற ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாம் படி -ஜலம் போல-இருக்கும் —
சமோகம் சர்வ பூதேஷு–பரம சுலபன்–
விரோதி போக்கும் சாமர்த்தியம் உள்ளவன் காட்ட அனல் உருவில்–சக்தன்–சர்வ சுலபன் என்று வயிறு பிடிக்க வேண்டாம் படி சக்தன்–
அக்னிக்கு அக்னி–ஆஸ்ரித சுலபன் போல வல்லவன்–கிட்ட முடியாதவன் பிரதி கூலர்களுக்கு —
அவனாக நெருங்க நினைத்தால்-நினையாத பொழுது-பரதனுக்கு கார்யம் நினையாத பொழுது -அந்தரங்கர்களும் கிட்ட முடியாதே —
தோஷமும் குணம் ஆகலாம் நன்மை தானே தீமை ஆனது இங்கு குகனுக்கு தீமையே நன்மை ஆனது —
பத்துடை அடியவர்க்கு எளியவன்- விலக்காமையே வேண்டும்-பிறர்க்கு அறிய வித்தகன்–

தத்வ த்ரயங்கள் காட்டிக் கொடுத்தான் -உபகாரன்–குண பிரவாகம் அவன்–
வயிறு பிடிப்பார் கொடியார் மாட -கொடி காட்டி கொடுக்குமே–பய நிவர்தனக்கு வயிறு பிடிப்பார்கள்–
அதிகிரமிக்க முடியாதவன் பிரதி கூலர்களுக்கு –அனவபயநீயன் –அப்ரேமேயன்-துராசதணன்–
அனல் உருவில் திகழும்–பரதன் இழந்தான்  போல- யாம் வந்த கார்யம் ஆராந்து அருள்-
எப் பொழுது கேட்க வேண்டும் என்பதை சிற்றம் சிறு காலையில் வைத்தாள்–
பரதன் போல அவன் உள்ளம் கனிந்த பின்பு சமயம் பார்த்து திரு உள்ளம் இசைந்து வரும் பொழுது –
ஆழ்வாருக்கும் முதல் நான்கு சரணாகதி பலிக்க வில்லை ஐந்தாம் தடவை தான் பலித்தது —
ஆழ்வாரைக் கிட்டியதும்—தளிர் புரையும்-சருகாய் உலர்ந்த திருவடிகள் ஆழ்வாரை பெற்றதும் தான் –
அவிகாராய -கர்மாதீனம் இல்லை காருண்யாதீனமாக- இச்சை அடியாக தான்–
விஜுரகன் பிரமோதகன்- ஹா   விபீஷணனை பட்டாபிஷேகம் பண்ணியதும்–வால்மீகி ஆச்சர்யம் பட்டாரே —
இவர் தலை மேல் அல்லாமல் இருந்த பொழுது சருகாய் இருந்தனவாம்–
விஷயாந்தர பிராவண்யத்தால் ஆழ்வார் சருகாய் இருந்தது போல–ஸ்வரூபம் சம்பந்தத்தால் தான் சிறக்கும் —
மாம் ஏகம் சரணம் விரஜ- தொட்டு காட்டினான்-வெளுத்து போய் இருந்ததாம் அர்ஜுனன் கூட சேராமல்-
மாம் என்று தொட்டு உரைத்த சொல்- சரணம் விரஜ சொன்னால்-வெளுப்பு இருந்து போக்கி கொள்வான்-
சர்வ பாபேப்யோ-அமரர் சென்னி பூ வான திருவடி–கண்ட பேர் உடைய கால் என் முடியில் பட -கிடீர் இதை பெற்றேனே–
திரு -பெரிய பிராட்டியார்-நித்யர் வணங்கும் திருவடி பெற பெற்றேனே–

யாரோ கால் இருந்த தலையிலே உன் திருவடி பெற பெற்றேன்-
பெற்ற பின் தான்-அவன் சத்தை-நின்ற சேஷித்வம்-எந்தை-விக்ரகம் பெற்றான் தளிர் புரியும் திருவடி–
அந்தாமத்து அன்பு ஆழி சேர்  ஆவி சேர் அம்மான்–அந்தாமத்து ஆழி நூல் உளதாக சத்தை பெற்றான்-அம்மான் ஆனான் சேர்ந்த பின்பு–
என் தலை மேலவே தளிர் புரியும் திருவடி–

ஆக -பிரகிருதி பிராகிருதி அஸ்திரம் காட்டி கொடுத்து //
ஸு ஸ்வரூபம் பிரகாசித்து ..//கைவல்யம் புகாத படி நோக்கி//
தன் ஸ்வரூபம் காட்டி மேலும்  ஸ்வரூப பிரகாசகமான விக்கிரகமும் காட்டி கொடுத்து //
த்யாஜ்யமான  என் சரீரத்தில் புகுந்து நின்று –திருவடிகளை தலை மேல் பொருத்தி வைத்து –உபகார படிகளை அடுக்கி காட்டுகிறார்–

ஆக இப் பாட்டால் தத்வ த்ரயம்/
மூன்றும் புருஷார்த்தம் என்றும் //
ஒன்றே ஸ்வரூப  அனுரூபமான முக்ய புருஷார்த்தம் என்றும்/
அல்லாதவை நிஹீனம் என்றும் //
ஸ்வரூப ரூப குண வைலஷன்யமும் அவற்றை  ஆஸ்ரிதர்க்கு காட்டும் பொழுது தன் பேறாக காட்டும் படியையும் —
எல்லாம் தன் கார்யம்–துயர் அறு  சுடர் அடி –தளிர் புரியும் திரு வடி
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பவனும் அவன் அடைந்து ஆனந்தம் படுபவனும் அவனே–
அமலன்-குற்றம் போக்கி
விமலன்-அடியார்க்கு ஆட படுத்தி — 
நிமலன் -கேட்காமல் தானே நிர்ஹேதுகமாக பண்ணி அருளி —
நின் மலன் -தன் பிரயோஜனமாக அருளினான்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: