திரு நெடும் தாண்டகம்–3-திருவடிவில் கரு நெடுமால் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
திரேதை  கண் வளை வுருவாய் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானை கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவ தோர் உரு வென்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செம்கண்ண வண்ணன் தன்னை
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்ப்பாரே–3–

அவனால் காட்ட கண்ட நானே காண முடியும் –
ரூபம் அனுபவிகிறார் —
த்ரேதையில் சிவந்தும் –அலை கடல் கடைந்த வளை-சங்கம்-வெளுத்த வர்ணம்–
இப் படியும் உண்டு என்று ஏத்த தான் முடியும் —
விஷயாந்தர பிராவண்யா நிவ்ருத்தி தொடக்கி சேஷ சேஷி சம்பந்தம் காட்டினான் –
தன் பேறாகச் செய்தானே இவருக்கு என்ன ஆச்சர்யம்-பிரார்த்திக்காமலே செய்தானே –
விமுகராய் இருக்க தான் மேல் விழுந்து கார்யம் செய்தானே –அந்ய சேஷத்வம் அறுத்தான் அடுத்து–
மூவரும் சமம் நினைவே அந்ய சேஷத்வம்–
அமலன் ஆதி பிரான் சேஷி/உவந்த உள்ளத்தனாய் திரு விக்கிரம சரித்ரம் சொன்னதும் இது போல தான்–

இப் பாட்டில் மணி உருவில் பாதம் ஐந்தாய்- முகில் உருவம் -என்றும் ஸ்வரூபத்துக்கும் குணங்களுக்கும் ஆஸ்ரியமான வடிவை
நிரதிசய போக்யமாய்–காள  மேக ஸ்யாமளனாய் -ருசி அனுகுணமாக -தமர் உகந்த எவ் உருவம்–
சேவை சாதித்து -கரு நீல வண்ணன்- தானான தன்மை ஆழ்வாருக்கு காட்டி கொடுத்ததையும் –
நிர்பந்தித்து கேட்காமல்  காட்டி தந்த படியைக் கண்டு தாம் கண்டது போல யார் கண்டார் என்கிறார்–

கேட்டு பார்த்தோம் நாம் கேட்காமலே கண்டார் அவர்–
பரகத அதிசய -பாடாமல் அனுபவித்து -பதி விரதை பர்தா சம்ச்லேஷத்தில் அனுபவித்தால் போல-
சேஷத்வம் பலிக்க அனுபவிக்க வேண்டுமே–ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயோன்–
அழகுக்கு இட்ட சட்டை அனுபவிக்க விரோதி –அவர் ஆனந்தமே முக்கியம் –
ஸ்வரூபத்தை-வியாபகன் நியாமகன் பரத்வன் ஞான மயன்- சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம- –
கால் கடை கொண்டு பற்ற வேண்டும் இருக்கும் படி இருக்கும் குணங்கள்–உபய -ஸ்வரூபம்  குணம் இரண்டையும் –
கால் கடை கொண்டு ரூபம்-கண்ணால் பார்க்க கூடியது ரூபம்-ஆழ்வார்கள் ஈடு பட்டு காட்டி கொடுத்தார்களே —
சேஷத்வம் -அந்ய சேஷத்வம் விலக்கி-இதில்- திரு வடிவு- விலஷணமான வடிவு- திருவின் வடிவு–
அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி தண்ணீர் தண்ணீர் என்று துடித்து சதா  வெருவப்  பண்ண வைக்கும் அழகு–
திருவானவள் விலகி போய் விடுவோமோ என்று வாய் புலத்தும் படி–
தேவ தேவ திவ்ய மகிஷியே–விடுகை துர் லபமான வடிவு–
இதை ஆழ்வாருக்கு -பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -பற்று இல்லாதவன் -பற்று உடையவன்- பற்று இல்லான்-
இல்லம் வீடாக உள்ளவன்–இங்கு  உள்ளானா இங்கு இல்லை அகத்திலான் சொல்வது போல —
நம் இடை நின்றானே–ஈசனும்-ஜகத்துக்கு ஈசன் -முற்றவும் நீயே என்று முற்றவும் நின்றானே அனைவரையும் விட்டு-
பற்று இலையாய் அவன் முற்றில் அடங்கே–சரீரம் அர்த்தம் எல்லாம் சமர்பித்து அவன் இடம் அடங்க வேண்டும் —
மற்றவர் இடம் பற்று விட்டு -விஷயாந்தர பற்று விட்டு -இரண்டு நிர்வாகம்–
ஸ்ரீ தேவி இடம் கூட இன்றி ஆழ்வாருக்கு கொடுத்தானே —
சுக்ரீவன் இடம் உன்னை இழந்து சீதை பிராட்டி பெற்று என்ன பலன்- கிரீடங்கள் பறித்து வந்ததும் பெருமாள் –
கிம் கார்யம் சீதையாம் மம-நித்ய அநபாயிநீம்–அவளை சொல்கிறான்-
தமையானான வாலியைக் கொன்று ராஜ்ஜியம் பெற்ற குரங்கை பார்த்தே சொன்னானே —

வடிவை உபகரித்ததை மேல் சொல்கிறார்–கரு நெடு மால்–காள மேகம்-உபய விபூதிக்கும் ஸ்வாமி யான தன்மை—
அழகிய ஸ்வாமி- மால் வ்யாமோகன்–மூன்றையும் –சுயம் நிரபேஷகன் மேல் விழுந்து –
அன்பன்-காதல் பிறந்து கண்ணை மறைத்து -அழிய மாறி முகம் காட்டுகிறான்–பைத்தியம்- நெடு மால்-
அந்தாமத்து அன்பு செய்து-நித்யர் கள் உள்ள வியாமோகம்- என் இடம் காட்டினானே–
திரேதை கண் சேயன் — இரண்டாவது -திரேதா யுகம் முதலில் சொல்கிறார்–சிவந்த வடிவு-ரஜஸ்  பிரஜைகள்–
அருவினையேன்–பாபிஷ்டன் எனக்கு உய்ய வழி கண்டு பிடித்து வர வேண்டும்—
வெளுத்த வர்ணம்-சத்வம்/தமோ – கருத்து பச்சை நீலம்–நிறம் வெளித்து —
பாலின் நீர்மை ..நீல நீர்மை–திரு மழிசை–ரஜோ குணம் சிவந்து —

அஜாமேகம் லோகித சுக்ல க்ருஷ்ணம்-சாஸ்திர வாக்கியம்-போல இங்கும்–சுருதி சாயை-சாஸ்திர வாசனையாலே –
இவர்கள் பேசுவது அதே போல நந்தா விளக்கே  அளத்தற்கு அரியாய்  சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம போல  //
சேஷ பூதர் அவனுக்கு உகப்புக்கு தக்க வடிவு -சென்றால் குடையாம் இருப்பது இயற்க்கை–
இங்கு அவன் தன் வடிவை-தமர் உகந்த எவ் உருவம்–என்று சொல்லி ஊழி  தோறும் ஏத்த வேண்டும்–தட்டு மாறி கிடக்கிறது –
ஸ்ரீமத் பாகவதம் 11-5 –கேசவன் நானா வர்ண -இதையே சொல்கிறது –
பாதுகா சகஸ்ரம்-ரத்னம்-யுக பேதம் -சிகப்பு வெளுப்பு  கருப்பு மஞ்சள் நீலம் -ஒரே சமயத்தில் நான்கும் காட்டும்–
இவை என்ன விசித்ரமே- அவன் இடமே போட்டி போடுகிறதே மணி பாதுகை —
ஆபாச விருத்திக்கு சொவ்பரி ஐம்பது  சரீரம் கொண்டான்–கதிக்கு பதறி-தவம்-கொள்கை ஆற்றேன்–அமுதனார்–
பெரு வடிவில் -சுக்ல வெளுப்பு-க்ருத யுகம் சொல்லாமல்-கடல் அமுதம் கொண்ட காலம் சொல்ல காரணம்–
மலட்டு காலம் அது -இது பெற்ற காலம்-பகவத் வியாபாரம்– மார்கழி மாசம்-மலட்டு மாதம் இல்லை என்று கொண்டாடினால் போல–
இவருக்கு அபிமதம் என்பதால்–பெரிய திருநாள்–பின் கார்யம் செய்வோம் என்பர் பங்குனி மாசம் என்று சொல்ல மாட்டார்–
வெறும் கடல் அமுதம் கொண்ட காலம் சொல்லாமல்–பெரு வடிவில்–ஷீராப்தி 16 லஷம் காதம் பரப்பை யுடைத்தாய்
தாளும் தோளும் சமன் இல்லாது பல பரப்பி -அவ் வடிவோடு  எழுந்து நின்று கடல் கடலை கடைவது போல கடைந்தானே —
அலை கடல் கடைந்த ஆரமுதே–அமிர்தம் கடைய என் அமிர்தம் கொண்டோ கடைவது–
அனுபவிக்காமல்–ராமன் காடும் மேடும் நடக்கவா
திரி விக்ரமன் கண்ட இடத்தில் திருவடி வைக்க வேண்டுமா என்று வயிறு பிடிப்பார்கள்–
-தாளால் உலகம் அளந்த அசைவே கொல்–குளிர்ந்து ஆற்றாமை போக்கி– ஸ்ரம ஹரமாய் அபரி ச்சின்னமாய் இருக்கும்–
இவனும் ஸ்ரம ஹரமாய் அபரி ச்சின்னமாயும் -போக்யமுமாய் இருக்கிறான் –
எண்ணில் அடங்காத வடிவும்-கொண்டான்- மந்தரம் அழுந்தாமல் கூர்ம ரூபி–கொந்தளியாமல் இருக்க பருகத் ரூபம்–
தேவதைகளோடும் அசுரர்களோடும் அந்தர்யாமி–வாசுகி பலம் கொடுத்து கொண்டு–வியாபித்து -பல உருவம்–
துர்வாசர் சாபத்தால்-சகல தேவர்களும் சரணம் புக-கடலை கடைந்து கொடுத்தானே-
கொண்ட- கொடுத்தது தன் பேறாக இருக்கை–
தன் கார்யம்–கொண்ட–தேவதைகளுக்கும் தனக்கும் ஆழ்வாருக்கும் அமுதம்–
மூவர்- அமுதில் வரும் பெண் அமுது அவனுக்கு -அமுதில் வரும் பெண் அமுது –ஆழ்வாருக்கு நால் தோள் அமுது-
ஆரா அமுதன்- கடைந்தானே–கொண்டு உகந்த பெம்மான்–

சிந்து கன்யா பதே –பெரிய பிராட்டி நாதன்–ப்ருகு மகரிஷி புதல்வி-மாமான் மகள்–திரு மழிசை–ப்ருகு மகரிஷி குமரர் திரு மழிசை-
அதனால் ஆண்டாள் மாமான் மகளே என்கிறாள்–தன் பேறாக கொண்டான்- அமலன் விமலன் நிமலன் நின்மலன்-போல–
உதாரன் வள்ளல் தன்மை–ஞானி ஆஸ்ர்யத்தி உதாரர்கள்–கீதை- கை ஏந்தியதால் தானே இந்த பேரை நான் பெற்றேன்–
மூவரும் அபிமதம் பெற்றார்கள்–திரு நாபி கமலத்தில் அடி இட்டு  வைத்து திரு மார்பில் ஏறி அமர்ந்தாள்–
தன் அபிமதம் பெற்றால் தானே பிறர் அபிமதம் கொடுக்க முடியும் –அதனால் அமர்ந்தாள் —
அவன் கடாஷம் அடியாக தான் இவள் கடாஷம் என்று –பெருமாள் திரு முகம் கடாஷம் பெற்று திரு வடிக்கு சீதை பிராட்டி அருளியது போல–
இவ் இடத்தில் பட்டர்-நஞ்சீயர் -பெண்கள் கோஷ்டியில் பெண்களுக்கு வெட்கம் இருக்காதே என்றார்–
பர்த்து சம்ச்லேஷத்தில் இழிந்தாள்-மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லை–
பெண்ணான பேச்சு ஜன்ம சித்தம் தானே -சகல தேவரும் ஈஸ்வ ரோஹாம் -போஹி-என்று சொன்னாலும் –
இம் மிதுனத்துக்கு சேஷம் என்று இருப்பார்களே–அதுவும் ஒரு காலமே–நென்னலே வாய் நேரந்தான் மணி வண்ணன் வாய் நேரந்தான்

எங்கள் காலில் கண்ணன் விழுந்த காலம் அன்று -இன்று வாசல் காப்பான் உன் காலில் விழுந்து இருக்கிறோமே–
பிரயோஜனாந்தர பரர் களுக்கும் முகம் காட்டுகிறான் –மேன்மையும் நீர்மையும் போக்யத்வமும் -மூன்றும் -பிரகாசித்த காலம் அது–
முப்புரி ஊட்டிய திவ்ய தேசம்-திரு நஷத்ரம்-ஸ்ரவணம் விஷ்ணு ஐப்பசி ஓணம் லோகாச்சர்யர் வேதாந்த தேசிகன்–
சகலரும் சரண் அடைந்து -மேன்மை–துர் மாநிகளுக்கும் கார்யம் செய்து நீர்மை காட்டினான்-
பிராட்டி கூட  சேர்த்தியால்  போக்யதை  பிரகாசித்தது –வளை சங்கு-
சர்வ உசந்தவர்கள் – சத்வ குணம்-வெளுப்பு–நான்கு தோள் அமுது–கருத யுகம்-கடல் அமுது கொண்ட காலம்-
ஸ்வேத வர்ணன்-பாலின் நீர்மை முதல் யுகம்–திரு மழிசை —
திகழ்ந்தான் என்னும்–தன்னை அழிய மாறி முகம் கொடுத்து -இவன் ஒளி விடுகிறான்-திகழ்ந்தான்–
கொடுக்க பெற்றோமே என்று அவர்கள் உஜ்வலர் ஆகாமல்-இவன்-என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதிக்கே–
தனக்கு கொடுத்து கொண்டால் போல –பெருமானை–ஆஸ்ரிதர் -கேட்ட உருவம் எல்லாம் கொண்டவன்-
நான்கு மட்டும் இல்லை–இதில் நான்கு சொன்னேன்–வரை அறைக்கு உட் படுத்த முடியாது
ஊற்றம் உடையாய்-வேதத்தால் சொல்ல படுபவன் உடனே பெரியாய்- அதுவும் எப்படிப் பட்டவன் என்று அறிய முடியாது என்கிறாள் ஆண்டாள் —
பன்னலார்  பயிலும் பரனே –வடிவும் அசந்கேதம் -சதுர் யுகங்களுக்கும் எண்ணிக்கை இல்லை—
துவாபர யுகம்–ரஜஸ் தமஸ் மிஸ்ரர் ஆக இருப்பதால் சிகப்பும் நீலமும் – கருப்பும் சேர்த்து -திகழ்ந்தான் என்னும் -இதை சொன்னார் —
பாசியில்-பச்சை நீலம்- பசும் -பெருமானைகரு நீல வண்ணன் தன்னை-கலி யுகம்- தன் பக்கல் யாரும் கேட்காமல் –
தமோ குணம் ஆசை அற்று -மயக்கம் அஞ்ஞானம் -இயற்க்கை வண்ணம் கரு நீல வண்ணம் கொண்டு  சேவை சாதிக்கிறான்

பாஷண்டிகளால் கலி யுகம்-முற்றி–பராசரர் இக் காலம்- மைத்ரேயர் நீ ஒருவன் என்று பிரத்யட்ஷமாக தெரிந்து சொல்கிறார்–
கரு-  வர்ண சாமான்யத்துக்கும் -நீல வர்ணம்-
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆறு சரண்-இரண்டும் உபாயம்–உபாயம் என்னது காட்டி கொடுக்கும் காலத்தில் /
அது போல வர்ணம் காட்டி கொடுக்கும் பொழுது நீலம்–ஒரு வடிவில் ஒரு உரு என்று  உணரல் ஆகா — 
சோதி -நிறம் மட்டும் இன்றி வடிவத்திலும் அழிய மாறுகிறான்–சர்வ யோநிகளிலும் வந்து அவதரிக்கிறான்
சுர நர -என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்–என்ன வர்ணம் என்ன வடிவு சொல்ல முடியாது
யுவா குமாரா காமனை பயந்த காளை சொல்லலாமே–கருப்பு ஸ்வாபம்–அளவு படுத்த முடியாது —
தனஞ்சய  பிரஜை- குழந்தை  ஆக பிறந்தானே -செஷ்டிதங்கள் பல செய்தானே –வரை அறுக்க ஒண்ணாது

பரி சேதிக்க முடியாது –ஒவ் ஒரு பருவத்திலும் அதுவே ஸ்வாபாபிகம் மற்றவை வந்தேறி போல-
பாசி தூர்த்த –மான மிலா பன்றி- உபமானமில்லாத பன்றி–எல்லா வற்றிலும் மெய்ப்பாடு கொண்டவன் —
அடியவர் ஆசைக்கு உட் பட்டு எல்லா வடிவும் கொண்டு–அவன் திவ்ய ஆயுதங்கள் திவ்ய ஆபரணங்கள் எல்லாம் அடியவர்க்கு-உணரலாகா 
வாயால் பேச முடியாது என்று மட்டும் இல்லை -நெஞ்சாலும் நினைக்க முடியாது —
ஊழி தோர் ஊழி நின்று ஏற்றல் அல்லால்- கால தத்வம் உள்ளது அளவும் ஏற்றுவதே கடமை-
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி ஏற்ற மாட்டேன்–எல்லா பொழுதிலும் இல்லை–
ஒரு ஷணமும் பண்ண வில்லை–தமக்கு காட்டிய வடிவை -விமுகராய் இருந்தேன்-தன் ருசியாலே ஸ்வாபாகிக இயற்க்கை வடிவு-
கால மேக ஸ்யாமளன்- கரு வடிவில்- செம் கண்-வாத்சல்யம் குறிக்கும்-
திரு மேனியை குளிர வைத்து கார் மேனி செம்கண் கதிர் மதியம் போல் முகத்தான்–
உள் வாயில் இருந்த வாத்சல்யம்  கண் வெளியில் வந்தது–ஸ்ரீ யபதி போல கரு மேனியும் செம்கண்ணும்–
கப்யாசம் புண்டரீகாட்ஷம்–நிரூபிக்கும்- கட்டுரையே -நிர்கேதுக பகவத் பிரசாதித்தால் போல —
நான் கண்டது போல் யார் ஒருவர் பேச முடியும் காண முடியும் —
தத்துவம் அன்று தகவு அன்று-போல அன்று இரண்டு பக்கமும் ஸ்வரூபம் ஸ்வாபம் இரண்டுக்கும் அன்று –
இங்கு யார் ஒருவர் -இரண்டு பக்கமும் சேர்த்து – அதவா –பேசி பேசியே போவார் காண முடியாது

நீல  தோயச்த  மத்யஸ்தவித்யுத்  -நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான்-திரு விருத்தம் 29-என்று அருளிய நம் ஆழ்வாரும் –
நான் கண்டது போல கண்டது இல்லை–சகஜ பக்தி அவருக்கு –
நானோ பக்தி வைராக்கியம் இன்று வென்றியே வேண்டி நாயினும் அடியேன்- விஷய பிராவண்யம் பகவத் வைமுக்யம் கொண்ட நான்-
அவ்வாறு இவ்வாறாக கண்டது -விரக்தியால் காணாமல் காமத்தால் கண்டேன் –வேதங்களும் கண்டது இல்லை —
சாதகர் போல-மக ரிஷிகள் – இல்லை பிர பன்னர்கள் போல காண வில்லை- சம்சார பய பீதராய் காண வில்லை–
ஆர்த்த பிரபன்னர் இல்லை–கண்ட விஷயம்- ஆழ்ந்து இருந்த என்னை நடுவில் வந்து உய்ய கொண்ட நாதன் நீ ..

பாசியின் பசும்  புறம் போலும் நீர்மை- -நீலமும் சிவப்பும் கலந்தது -ரஜோ தமஸ் குணம் சேர்ந்தவர்களுக்கு —
நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் நீள் கடல் வண்ணன்–எடுத்து கொண்ட வர்ணமே வடிவே ஸ்வாபிககம் போலே தோன்றுகிறான் —
இச்சா ரூபா அபிமத -அநேக வஸ்த்ர நயனம் -விஸ்வ ரூபம் –உணரலாகா —

பிரமன் ஆயர் குழந்தை களையும்  பசு மாடு எல்லாம்  கொண்டு போக
கண்ணனே பிரமவாக சென்று அவனுக்கும் பாடம் புகட்டி-/
பசு மாடுகள் பிள்ளைகள் போல தானும் -ஒரு ஆண்டு காலம் இருந்த விருத்தாந்தம்–பெரு வடிவம் கொண்ட காலம்–

இறந்த குற்றம் எண்ண வல்லனே- அடியார் பண்ணின குற்றங்களை யமனால் நினைக்க கூட முடியாது போல —
விரக்தி பக்தி ஒன்றும் இன்றி கண்டேன் என்கிறார்–நிகர் யாரும் இல்லை–வேதங்களும் மற்ற ஆழ்வாரும் கூட இது போல இல்லை..
விஷய பிரவணராய் திரியும் பொழுதே கண்டேன்– சாதனை பக்தி பண்ணியோ பிரபன்னனன் போலேயோ காண வில்லை–துடிப்பு இன்றியே கண்டேனே

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: