ஸ்ரீ திரு விருத்தம் -16-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(இப்பாசுரம் தொடர்ந்து ஸ்ரீ அப்பிள்ளை உரை கோசங்கள் கிடைக்க வில்லை
தலைமகள் பாசுரமாவது தோழி பாசுரமாவது கொள்ளலாம்
ஸம்ஸ்லேஷம் போதும் விஸ்லேஷம் வரும் என்று பயந்து கவலை
விஸ்லேஷித்தாலும் துன்பம்
இரவு பல வேஷங்கள்-ராவணன் சிசுபாலன் கொண்டு நலிகின்றனவே –
சூழல் கிருத்ரமத்துடன் நலிகின்றவே
வாழி -எதிர்மறை லக்ஷணம் )

(பயிலும் சுடர் ஒளி -3-7-இதன் விவரணம்

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-)

அவதாரிகை-
சில காலம் சம்ச்லேஷித்த தலை மகன் பிரிந்தான் ..
பிரிந்து முற்றினது  என்னவாம் ..பிரிந்து பிரதம தசை என்னவுமாம் ..
தோழி வார்த்தை என்னவுமாம் ..தலை மகள் வார்த்தை என்னவுமாம்–
அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால் அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பாசுரம் -16-பல பல ஊழிகள் ஆயிடும் -தலைவனைப் பிரிந்த தலைவி தோழியை நோக்கி
இருள் வியந்து உரைத்தல் –
பயிலும் சுடர் ஒளி -3-7-

பதவுரை

கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.

பல பல ஊழி கள் ஆயிடும் —
அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –

அன்றி –இத்தை ஒழிய –
யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் –
ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில்
ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே
உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி–
போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி

கண்ணன் விண் அனையாய்-
தலை மகள் வார்த்தை ஆன போது
பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..

தோழி வார்த்தை ஆன போது பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,
நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —

தன் வார்த்தை –
கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )
ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் ,
பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்

தோழி வார்த்தை- ,
நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்
அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –
குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் –

இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி-
அன்பர் பிரிகையாலே –

பல பல சூழல் உடைத்து-
நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே,
கலவிக்கு முன்னிலையாய் ,
விஸ்லேஷத்தில் வந்தால் –
சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று
அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்

அம்ம .
அம்மே என்ற படி-

வாழி-
தன் வார்த்தை யான போதைக்கு —
வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —

தோழி வார்த்தை யான போது —
இவ் அவசாதம் நீங்கிடுக-

இப்பாய் இருளே –
பரந்த இருளே முன்னிலை யாக –

இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-

தோழி வார்த்தையான போது
ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப்பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் ஆழ்வார்
பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –
பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்
பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது
தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி
சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வ காலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்
அந்த இரவே வாழட்டும்

——————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: