ஸ்ரீ திரு விருத்தம் -15-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(இங்கும் கண் -ஞானம்
தலைவியைப் பார்த்து கண் மீனோ
கலங்கி யானை வந்ததோ கேட்டு -உளறி
அயலார் கேட்டால் என்ன ஆகுமோ
கேலியாகவோ
வெறுப்போ
சந்தோஷமாகவோ
உண்மையே இல்லையே
நான்கிலும் சொல்லலாமே –
ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் கேலி வெறுப்பு கொண்டாட்டம் தக்க ஸ்வரம் மாறுமே
காதலனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டுமே
கடியன் கொடியன் நெடுமால் –ஆகிலும் என்நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -என்பர் அன்றோ )

(கொல்லை காக்கின்ற -திவ்ய தேசம் ரக்ஷணத்தைச் சொன்னபடி
ஸ்வ ரக்ஷண அந்வயம் கூடாதே
ஆழ்வாராதிகள் தானே திவ்ய தேசங்களை ரக்ஷிக்க வேண்டும்
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் தானே அரண்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் கால தாமதமாக வர –
அதற்குள்
திரு வாட்டாறு எம்பெருமான் இவரைக் கூட்டிப்போக விரைய
உபதேசம் பண்ண நேரம் இல்லையே என்று ஆழ்வார் கேட்பதாகவும் கொள்ளலாம்
நேரம் தாழ்ந்து வந்து அசங்கத பாஷணம் பண்ணுகிறார்கள் என்றுமாம் -வெறுப்பில் த்வனி ஈது என்ன வார்த்தை
இனி ஆச்சார்யர்கள் இடம் நாம் கால தாமதமாகப் போக –
இப்பொழுதாவது வந்தானே என்று பிரசாதம் தருவார்கள்
ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் என்றுமாம்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் -ஆசை யுடையார்க்கு எல்லாம் -வரம்பு அறுத்தவர்கள்
இப்படி வெவ்வேறே ரசங்கள் இதில் உண்டே –
அயலோர் அறிய மாட்டார்கள் -அறிந்தாலும் -சங்கை -ஈது என்ன வார்த்தை
அந்தரங்கமான எனக்கே தெரியவில்லை
அறிந்தாலும் அசங்கத வார்த்தையை அறிய மாட்டார்களே
ஆழ்வார் படியைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் தடுமாறி பேசும் துறை
கிளைவித் தலை மகன் வார்த்தை -அங்கதமாக பேசும் ஈது என்ன வார்த்தை என்றபடி )

(கண்ணன் கழலினை -10-5-இதன் விவரணம்

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-களிறு இங்கும் உண்டே

எண்ணும் மனமுடையீர் -பெண்ணின் அழகைச் சொல்ல வந்து களிறு வினவி வந்தார் இங்கும் )

—-

அப்பிள்ளை உரை
தலைமைகளும் தோழிகளும் புனலைக் காக்க
தலைமகன் தங்கள் தர்சனத்தாலே கலங்கி
அடைவு கெ ட்ட படி பேசிய வார்த்தையைக்
கேட்டவர்களுக்கு அவனது வ்யாமோஹத்தை நிஷேதித்து
வியாகத பாஷணம் என்கிறார்கள்
தங்கள் ஆசையையும் ஆவிஷ்கரிக்கிறார்கள்
அயலோர் என்பதால் தங்கள் அந்தரங்கர் என்பது தோன்றுமே

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
முக்தமான உங்கள் கண்களோ என்று வினவத் தொடங்கி
அசங்கதமான அம்போடு ஒரு யானை போந்ததோ என்று வினவி
சொல்லத் தொடங்கினது இது -சொல்லி முடித்தது அது என்று அறியாதே மரம் போல் -ஸ்தப்ஸ்தமாக திகைத்து நின்றார்
இவள் பூ பரிக்க தோட்டத்தில் இருக்க அவன் வேட்டை யாட குதிரை நம்பிரானில் போவது பழக்க தோஷம் அன்றோ

நுமது கண்கள் என்று கண்டால் கயல் என்று சங்கை தீர்ந்து கயல் தான் என்று நிர்ணயம் பண்ணும் படி
ஸர்வதா ஸாத்ருஸ்யம் உண்டே

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
அந்நியர் என்றவாறே அற்றுத் தீர்ந்தார் ஆவார்
யுகாவாதார் என்றவாறே அவனுக்கே அநந்யார்ஹர் இவர்கள் அந்தரங்கை அன்றோ

ஈது என்ன வார்த்தை
அடிக்கழஞ்சு பெறலாம் என்று கொண்டாட்டம்

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
கடலை நிஸ்ஸேஷமாகப் பருகி -கரு உண்ட பெண் போல்
மந்தமாக சஞ்சரிக்கும் மேகம் போல் -உலாவி
திரு நிறம் உடைய அவனது-திருவேங்கடத்தானது வடிவு அழகே நீராக விளையும்
தோட்டம் உடைய தேசம் என்றவாறு
அங்கு உள்ள புனம் இல்லை -இதனால் விளைந்த தோட்டம் என்றவாறு
திவ்ய தேசம் ரக்ஷிக்கும் எங்கள் உடன் உமக்கு சேர்த்தி- அப்யாசம் இல்லையே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே
நாங்கள் கொல்லை நோக்கும் காலத்துக்கு ஒரு வரம்பு இல்லை
புனல் காக்கும் -நாங்கள் திவ்ய தேசம் காப்பது நீர் வருவீர் என்று வருந்தி இருந்தோம் பல காலமாக
ஆனால் நீரோ வரவில்லையே என்று வருந்தி சொல்லும் வார்த்தை என்றும்
நெடுநாள் பழகினாலும் முழுக்க கண்டு முடிக்க முடியாத ஸ்ப்ருஹணீயம் -அழகு உள்ள நீர்
என்று கொண்டாட்டமாகவும் –
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –

ஸ்வாப தேசம்
ஆழ்வார் படியைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் தடுமாறிச் சொன்ன வார்த்தை

———-

அவதாரிகை-

இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து
கிட்ட கடவதாக குறி வர விட்டு போய்,
கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே சென்று கிட்டினவன்
இவர்களை கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண,
அவர்களும் அத்தை கொண்டு,
இவர் வருவதாக போன படிக்கும்,
வந்த படிக்கும்,
இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும்
ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்

இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே
ஆனை  வேட்டையை வினவி கொண்டு,செல்ல  கடவதாக நினைக்கிறான்

பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,
அமாணனை பட்டு (மன்மத விகாரம் ) திரியுமா போலே
இவர்களை இழந்து ,தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை
அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

பாசுரம் -15-கயலோ நும் கண்கள் என்று -தோழி தலைவன் எண்ணம் தெரிந்து அவனை நோக்கி உரைத்தல் –
கண்ணன் கழலினை -10-5-

பதவுரை

களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல் மீன்கள் தாமோ?’ என்று
(எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
அறிய மாட்டார்கள் -அறிந்தாலும் -சங்கை -ஈது என்ன வார்த்தை
எனக்கே தெரியவில்லை -அறிந்தாலும் அசங்கத வார்த்தையை அறிய மாட்டார்களே
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்-ஆழியுள் புக்கு
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான-புயல்- நீர் என்றவாறு
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளை யுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.

வியாக்யானம்

கயலோ நும் கண்கள் –
ஓர் ஆனை இங்கனே போந்ததோ என்று சொல்ல ,மனோ ரதித்து  கொண்டு,வந்த இவன்
இவர்களை கண்டு கலங்கி ,
உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போல,இக் கண்களை கயலோ என்கிறான்..

நோபஜனம் ஸ்மர்நிதம் சரீரம்—சாந்தோக்ய உபநிஷத்-8-12-9-என்று கொண்டு,
முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,
இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் ,
வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த  படி..

(இது இவனுடைய மற்று ஒன்றைக் காணாவே )

யத் விஸ்மயஸ்தி மந்தஸ்மித அந்நிய பாவம் (மாலதி மாந்தவம்) –
என்று தன்னையும் அறியாதே
விஷயத்தையும் அறியாது இருப்பார்கள் என்று சொல்லுமா போல,

யத்ர நான்யத் பச்யத் நான்யச் ச்ருணோதி நான்யத் விஜாநாதி சபூமா-சாந்தோக்ய உபநிஷத்-7-23-1- –
யாது ஒன்றை கண்டால் வேறு ஒன்றை காணாது ஒழியும்,
யாது ஒன்றை கேட்டால் வேறு ஒன்றை கேட்க்காது ஒழியும்
யாது ஒன்றை அறிந்தால் வேறு ஒன்றை அறியாது ஒழியும் ,
அது நிரபேஷ விஷயம் என்கையாலே ,

(மூன்று பிரமாணங்கள்
முதலில் முக்தர்படி
அடுத்து சம்சாரி படி
அடுத்து நித்யர் படி
அதே போல் யானையை மறந்தான் இவன் )

கயலோ என்று
(கயல் போன்றதோ சொல்லாமல் )உபமானத்தாலே சொல்லாதே ,
பிரதான்யத்தாலே சொல்லுவான் என் என்னில்,
சர்வதா சாத்ருச்யத்தாலே,

த்ரவ்யாந்தரத்துக்கும் ,சாம்யம் உண்டோ என்னில் ,-
கேவலம் கண்ணை சொல்லிற்று ஆகில்-
இல்லை என்னலாம் ..
அது ஸ்வ தசையால் ஆகலாம் ..

(அறிவு அழிந்து சொன்ன வார்த்தை அன்றோ
இவள் மேல் பேர் அன்பால் தன்னை மறந்து சொன்ன வார்த்தை )

பஹு வசனத்தால் சொல்லுவான் என் என்னில் ,-
மை அமர் வான் நெடும் கண் மங்கைமார்-என்று
அவனுக்கு தன் ஓர் ஆயிரம் பிள்ளைகளோ பாதி ,
இவளுக்கும் அநேகர் உண்டாய் இருக்கையாலே ,
(வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்தான் அன்றோ அவனும் )

அவனோடு கிட்டினார்க்கு ,நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்னுமா போல இறே
இவர்களோடு கூடினாரும் இவளைப் போலே இறே இருப்பது ..

காணப் புகுகிற தன்னை மறந்ததோ பாதியும்
காண்கிறவர்கள் தன்னையும் மறந்தபடி

அவயவ பிரதி பத்தி யாதல்
அவயவாந்தர  பிரதி பத்தி யாதல் இன்றிக்கே
வெறும் கண்ணுக்கு மேற்பட அறியாது இருந்த படி

(அவயவம்- கண் -ஒன்றிலே இவனுக்கஇதுக்கு மேற்பட்ட அறியான்
கண்களிலும் இரண்டாவது அறியான்
கண்கள் -இரண்டு இவளுக்கு என்று அறியான் –
ஆகவே இரண்டாவது வியக்தியைச் சொன்னபடி
ஒரு கண்ணின் அனுபவம் தாண்ட வல்லன் அல்லனே )

களிறு வினவி நிற்றீர்–
அசங்கத பாஷனம் பண்ணுகிற இவர் ஆர் என்று முகத்தை மாற வைத்தார்கள்
நோக்கு பெறாத போது ,தன் சத்தை இலையாய் இருக்கும் இறே–
இவர்கள் பார்க்கும் படியாக ஓர் ஆனை இங்கே போந்ததோ என்கிறான் ..

இங்கனே சொன்னவாறே இவர்கள் பார்ப்பாரோ என்னில் –
அழிகிற இவரைப்   பாராது ஒழியிலும் அழியும் புவனத்தை பார்ப்பார்கள் என்னும் அத்தாலே
முன் மறந்ததை இப் போது சொல்லிற்று

(துணுக் என்று இவர்கள் பார்க்க -திவ்ய தேச ஆபத்தை சொன்னபடி
பகவானை விட உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கு ஏற்றம் உண்டே
திருவேங்கடத்தை வைத்தே அவனுக்குப் பெயர்
தோட்டம் அழிவதைப் பார்ப்பார்கள் அன்றோ )

பிரத்ய அபிக்ஜை உண்டாயோ என்னில்
அன்று
வாசனையால் கள்ளர்க்கும் காமுகர்க்கும்
முதல் பதம் தெரிந்து
இரண்டாம் பதம் தெரியாது இருக்க கடவர் ஆகையாலே

(நினைவு வர கண்ணில் இருந்து மனம் மாற வேண்டுமே
பழக்க வாசனை உந்த பேசுகிறான் )

இப்படி சேரா சேர்தியான வார்த்தைகள் சொல்லுகிறார்கள் என்ன
பார்த்தார்கள் —
அந் நோக்கிலே ஈடு பட்டு பேசவும் அறியாதே நின்ற படி —

முன்புத்தையுள் காட்டில் பிறந்த தசா  விபாகம் இப்படி நிற்கிற இவனைக் கண்டு
முதல் கெட ஒண்ணாது என்று பார்த்து
இரண்டு தலைக்கும் உஜ்ஜீவனத்துக்காக சொல்கிறாள்

(முதல் வார்த்தை கயலோ நும் கண்கள்
இரண்டாம் வார்த்தை களிறு வினவி
மூன்றாம் நிலை ஸ்தப்த்தோஸி -பேச முடியாத நிலை )

தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும்
அயலார் என்கிறாள் —
பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள்
அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது

(தாத்பர்யத்தால் இவர்கள் அவனுக்கே அற்று அநன்யார்ஹை என்கிறார்கள் )

அறியிலும்
அறியக் கூடாது என்று இருக்கிறாள்-
இவள் விரஹம் தான்
அவகாகித்த பின்பும்
வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே ,
அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .

பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா –
இன்னார் என்று அறியேன் என்பாரை போலே
கிட்டின போது சம்சயமாய் ,
உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–
பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

(பயில்கின்றாளால் -முதலில் தெரியும் என்பார் பின்பு தெரியாது என்பார்
ஸ்வரம் -பார்த்த போது பார்த்தவர் போல்
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பாரே )

ஈது என்ன வார்த்தை –
1-(வெறுப்பில் )இச் சேராச் சேர்த்தியான வார்த்தை எங்கே உள்ள –

2-ஆற்றாமை தோற்ற இங்கனம் சொல்லில்
புறம்புள்ளார் என் நினைத்து இருப்பார்கள் –

1-(வெறுப்பில் )முகம் அறியாதார் ஒருவர் வந்து நின்று முகம் அறியாத வார்த்தைகளை சொல்லா நின்றீர்-

2-நாங்கள் பரண் இடுவது ஆயோ வென்பதாய் கோபிக்கிறதை எல்லாம் வெளியிடா நின்றீர் –

3-(கொண்டாட்டம் )தென்றலும் சிறு துளியும் போலே
உத்தேசியத்தோடே சேர்ந்ததொரு வார்த்தை இருந்தபடி என்-
(கலங்கி இருப்பவனைப் பார்ப்பதே காதலிக்கு உத்தேச்யம் )
வார்த்தையைக் கேட்டு எத்திறம் என்கிறாள் –

4-நீர் வார்த்தைக்கு பாவிகளோ என்கிறாள் –
உம்முடைய பாடு வார்த்தை இறே -அனுஷ்டானம் இல்லை என்கிறாள்

( ஷேபம் -கேலி -ஆச்சர்யம் -கொண்டாட்டம் -நான்கு நிர்வாகம் )

எங்கள் பாடு அனுஷ்டானம் இல்லையே யாகிலும் உங்கள் பாடு அனுஷ்டானம் உண்டோ என்ன –
(இது பகவான் வார்த்தை
எனது பக்கம் இல்லை என்றால் உங்கள் இடம் உண்டோ என்ன
திவ்ய தேசம் சேவை சாதிக்கா விட்டாலும் நாங்கள் ரக்ஷித்து உள்ளோமே )

கடல் கவர்ந்த-புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் –
உமக்காக வன்றோ -நாங்கள் குடில் கட்டிக் கொண்டு கிடக்கிறது என்கிறாள் –

கடல் நீரைத் தாரையாகப் பருகி அந்நீரோடே கூட கர்ப்ப கேதத்தாலே நெகிழ்வாரைப் போலே
சஞ்சரியா நின்றுள்ள மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடைய
திரு வேங்கடமுடையான் –
சமுத் வகந்தஸ் ஸலீலாதி பாரம்-என்னும் படியே

கொண்டல் வண்ணன் –
உபமானமாகச் சொல்லப்பட்ட மேகத்தில் உண்டான நீர் அன்றிக்கே
உபமேயத்தின் வடிவே இங்குள்ள பதார்த்தங்களை தாரகமாய் இருந்தபடி –

(அதில் நீர்
இவன் இடத்தில் நீர்மை
இதுவே தாரகம்-வண்ணம் -தன்மை -)

புன வேங்கடதெம்மாடும்-பயலோ இலீர் —
வேங்கடத்து புனத்து எம்மோடும் பயலோ இலீர் –
நீர் சேஷீ பூர்வஜர் என்னுமதுவும் தப்பிற்று இறே –
நாங்களும் வேணும்-காணும்
நாங்கள் பற்றி இருக்கிறது ப்ராப்ய பூமியை அன்றோ –

நிரபேஷரை சாபேஷர் பற்ற வேண்டாவோ –
(நீர் சா பேஷன் -எங்களைத் தேடி அன்றோ நீர் வந்தீர் )
எங்களுக்கு படி கடந்து புறப்படில் குற்றம் –
உமக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –
நீர் சேஷியும் ரக்ஷகரும் ஆகையால் உமக்கு குற்றம் –
நாங்கள் சேஷ பூதரும் ரஷ்ய வர்க்கமும் ஆகையால் எங்களுக்கு குற்றம் –

இவர்களுக்கு பரார்த்தமாகப் புறப்படலாம் –
தீதில் நன்னெறி காட்டி -என்னும் படியால் ஸ்வார்த்தமாக ஒன்றும் செய்யலாகாது
பாதி பதார்த்தமாக எல்லாம் செய்யலாம் என்றபடி

உபாயம் என்று ஒன்றுமே செய்யாமல்
கைங்கர்யமாக ஒழிவில் காலமாக அனைத்துமே செய்ய வேண்டுமே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே-
நாங்கள் கொல்லை நோக்கியோ இருக்கிறது -உம்மை நோக்கி யன்றோ –
(வாஸூ தேவா உன் வரவு பார்த்து இருந்தோம் )

நுனி பழுத்த வாறே தொடங்கிப் போகும் காலம் கூறுகிறது என்று அஞ்சுகிறபடி –
இத்தனை காலம் வழி பார்த்துக் கண் மறைந்தோம்-
இப்போது வந்தீரோ உம்முடைய ஆற்றாமை காட்ட –

நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொகட்டு
இன்றோ உமக்கு போது விடிந்தது என்கிறான் –

நீர் வேட்டைக்குப் போந்தால் போலே காணும் நாங்கள் கொல்லை நோக்கி இருந்தபடி –

அன்யார்த்தமாக நாங்கள் இருந்த இருப்பையும்
அன்யார்த்தமாக நீர் வந்த வரத்தையும் விபவிக்க பண்ணினீரே என்கிறாள்
(இரண்டுமே பலம் இல்லாமல் வீணாக்கப் போனதே )
நாங்கள் புனம் நோக்கி இருந்தோம் ஆகில் நீர் இருவியை (கதிர்கட்டை )நோக்கி இரும் என்கிறாள் –

புனம் கொய்து இற் செறியக் காலம் ஆயிற்று –
நீர் வழித் துணையாக வந்தீரோ –
நாங்கள் எங்களுக்கு  உரியவர்கள் என்று இருந்தீரோ –
சிலர் வைக்க இருந்தவர்கள் என்று இருந்திலீரோ –

(என் நான் செய்கேன் யாரே களை கண் என் செய்கின்றாய் —
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டோம் )

இத்தால்
ஆழ்வாருடைய வை லக்ஷண்யத்தைக் கண்டு
இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
தாம் ஈடுபடுகிறபடி –

அரும்பதம்
இத்தால்
பகவத் விஷயம் பிரசாதிக்கிறோம் இந்நாளில் வாரும் என்று குறித்த நாளில் வராமல்
காலம் விளம்பித்து வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து
நமக்குத் பிராப்தி அணித்தாய் விட்டது
இப்போது விளம்பி வந்தால் என்ன பயன்
என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறாராய் செல்லுகிறது

——–

அரும்பதம்
இத்தால் ஓர் ஆச்சார்யன் சிஷ்யருக்கு அர்த்த பிரகாசிக்கக் காலம் குறித்து விட
அவன் காலம் தப்பி வர
நமக்கு சரமகாலம் வந்து விட்டதே
ஆனால் காலம் போய் விட்டது என்று இல்லாமல் வந்தீரே
உம்முடைய ஆஸ்திக்த்வத்வம் இருந்த வாறு என்று வாழி என்ற வாறு

——-

தாத்பர்யம்
ஆழ்வாருக்கு பகவத் விஷய அவஹானத்துடைய வைலக்ஷண்யம் கண்ட பாகவதர்கள் இவருடைய
ஞானாதி குணங்களில் ஈடுபட்டு மக்நராய் இருக்க
அவர்கள் ஈடுபாட்டில் ஆழ்வார் தாம் ஈடுபட்டு அருளிச் செய்த பாசுரத்தை
ஈது என்ன வார்த்தை கேட்டாரே
சகிகளுடன் புனத்தில் இருந்த நாயகி
அங்கு தம்முடன் கலக்க வந்த நாயகன் தடுமாறி நிற்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
நாயகன் வரவைக் கண்ட போதே இவர்கள் கண்கள்
பரந்து நீண்டு மிளிர்ந்து இருக்க
அவற்றின் அழகைக் கண்ட போது தான் வந்த கார்யம் மறந்து இவை மத்ஸ்யமா என்று கேட்டு
அத்தை அவர்கள் கேட்டு
உனது வார்த்தை உன்மத்தர் வார்த்தை போல் பரிகசிக்க
இவ்வளவில்
அவன் மறந்தத்தை நினைத்துக் கொண்டு-இங்கி யானை போனதா என்று கேட்டான்
முன் பின் சங்கதி இல்லாமல் பேசுகிறீர் என்ன
ஸ்தாப்த்தனாய் இருக்க
அசங்கதத பாஷாணம் பேசி நின்ற இத்தை
அசலார் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்ன
அவன்
நீங்கள் செய்தது சரியா என்ன
திருவேங்கட நீர்மையே தாரகமே விளை நீராகக் கொண்ட இந்த பயிர் காக்கிறோம் என்று
வ்யாஜத்தால் உம்மை எதிர்பார்த்து இருந்தோம்
அப்போது எல்லாம் வராமல் இப்போது வந்தீர்
இப்படி உபேக்ஷித்து இருப்பது யுக்தம் அல்ல காணும்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: