ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திரு பாண் ஆழ்வார் கார்த்திகை ரோகிணி-லோக சாரங்க முனிவர்– நம் பாடுவான் போல்- –

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட் படுத்த 
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேம்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திரு
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–1-

விண்ணவர் கோன்-பரத்வம்-சொல்லி -விரையார் பொழில் வேம்கடவன்-எளிமை– மேன்மை சொல்லித்தான் எளிமை சொல்வார்கள்–
அரங்கனை பாட வந்தவர்– பிள்ளை திரு நறையூர் அரையர் -பட்டார் ஐதீகம்- பரம பதம் வாடா மாத்திரை -திரு ஆய் பாடி -வரத்து சொல்கிறார்-
பரத்வம்- திரு மலை- திரு அரங்கம்- வடக்கு வாசல் வழியாய் வந்தான்-அர்ச்சை அவதாரத்துக்கு பொன் கால் இட்ட இடம் –

கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்–திரு வேம்கடம்- அர்ச்சை பொன் கால் இட்ட இடம் -ஸ்வாமி நிர்வாகம் —
அரங்கன் அனுபவம் ஆழ்ந்து போனார் -பிடிக்க தெப்ப கட்டை-பார்த்து திரு வேம்கடம் பாட– இது முலம் கால் அங்கு கழுத்து அளவு–
அந்தர்யாமி போய் இருக்க வேண்டும் -தவிக்கிறார் –நறுமணம் மிக்க–

சர்வ கந்தன்- தேசம் எல்லாம் பரவ-விரையார் பொழில்–ஈர்க்க போனவரை -சௌலப்ய  காஷ்ட்டை —
16 காஷ்ட்டையும் உண்டு இந்த பாசுரத்தில் -பாட்டினால் கண்டு வாழும் பாணர்–அந்தமில் பேர் இன்பம் கொடுக்கும் மேன்மை-
வானவர் காடும் நீசனான நமக்கும் அந்த இன்பம் கொடுகிறானே –திரு கமலா பாத கமலம் ஆடை உந்தி–கண்கள் மேனி–
கண்டதால் வாழ்ந்தார்–காட்ட கண்டார்–அவன் காட்ட இவர் கண்டார்–கண்ட பாதம்- கண்ட கால் என்று நாம் போல்வார் -வகுத்த சேஷி எம்பெருமான்

மந்தி பாய் வட வேம்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்த தோர் எழில்
உந்தி மேல் அதன்றோ அடியேன் உள்ளத்தின் இன் உயிரே–3–

ஆடை இழுக்க அடுத்து உந்தி இழுந்தது –தாவினத்தை மந்தி பாய் வட வேங்கட மா மலை –மந்தி -தன்னையே–
அவயவம் தோறும் தாவி- நம்மையும் பல பலன்களை கேட்டு அவன் இடம் போவதால்–திரு மலை- வட வேம்கடம்-
தமிழ் தேச வட எல்லை–அகஸ்தியரால் வாழ்வு பெற்றது–தமிழ் ஆழ்வார் களுக்கு தொண்டு–அடியாரின்புற-
பெரும் தமிழன் அல்லேன் பெரிது–மா -அனுபவத்தில் மிக்கு பெரிய -ரட்ஷகனுக்கும் ரட்ஷிக்க பட வேண்டியவனுக்கும்
மா -நித்யர்களும் வந்து அனுபவிக்க மா மலை–உபய விபூதியும் மலையில் மூலையில் அடைக்க —
உபய விபூதிமானை அடக்கி கொண்டதால்–சந்தி செய்ய -பரத்வம் அனுபவிக்கும்- -நித்யர்-வந்து சௌலப்யம் காட்டுபவனை அனுபவிக்க —
கைங்கர்யம் பண்ண நின்றான்- ராம அவதாரத்தில் நின்றான்-தேவர்கள் தானே வானரங்கள்- பழைய நினைவால்
குரங்குகளுக்கும் தேவர்களுக்கும் -வாசி இன்றி -அவன் திரு உள்ளத்தில் வாசி இல்லை–நின்று இருந்து கிடந்தது–
திவ்ய தேசம் போல வாலி கொன்று ராவணனை கொன்று நின்றான் கிஷ்கிந்தை இருந்து சமுத்ரத்தில் கிடந்தது //
சீதை பிராட்டி ஆபரணம் தீண்டி வானரங்களால் பேரு பெற்றார்கள்–நித்ய அனபாயினி —
வானவர்களை பார்க்காமல் குரங்குகளை மட்டுமே -குருடர் தண்ணீர் பந்தலுக்கு கண் தெரிந்தவன் வந்தால்- -//
நிற்கிறான்-கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்–உத்தியோகத்துக்கு நின்றான்-
மேல் ஏதோ செய்ய போகிறான்–கிளம்பி கிடக்க அரங்கத்து அரவின் அணையான்–

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: