ஸ்ரீ சிறிய திரு மடல் -ஊரார் உகப்பத்தே ஆயினேன் -காரார் திரு மேனி காணும் அளவும் போய் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

ஊரார் உகப்பத்தே ஆயினேன் மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல் வாய் மேலுக்கு போல்–62
நீராய் உருகும் என் ஆவி நெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்–63
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தார் ஆயினும்–64
ஆரே பொல்லாமை அறிவார் ? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்–65
வாரார் வன முலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்ல படுவாள் அவளும் தன்–66
பேராயம் எல்லாம் ஒழிய பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளை காலன் பின் போனாள்–67
ஊரார் இகழ்ந்திட பட்டாளே ? மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்ப்பிப்பார் நாயகரே? நான் அவனை–68
காரார் திரு மேனி காணும் அளவும் போய்-
சீரார் திரு வேம்கடமே திரு கோவலூரே–69
மதில் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திரு புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கண புரம் சேறை திரு அழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட எந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் யானை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்–77
வாரார் பூம் பெண்ணை மடல்

என் மனமும்   கண்ணும் ஓடி  –இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்-திருஷ்டம் அதிர்ஷ்டம் ஆனது பகவான் சேவை சாதிக்க சம்சாரம் கண்ணில் படாதே /கை வளை- ஆத்மா மேகலை -மேவுகின்ற தேகம்/ கைவல்யம் ஐஸ்வர்யம் தொலைந்து கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும்–பகவத் அனுபவம்–மகர குழை–மகர குழை காதற் — ஸ்வாமி இடமும் –உடனே கூட்டி கொண்டு போனால்- லோகம் திருத்த -பிர பந்தம் அருள- இடைய அவனும் ஆழ்வாரும் துடிக்க-தம்மையும் பாராமல் அவரையும் பாராமல் நம் பக்கம்-அங்க ஹீனர் புத்திரன் பக்கல் உண்ட கருணையால்–ஆர்த்தி பூர்த்தியாக -துடிப்பு முத்த–சரணாகதிக்கு எதையும் எதிர் பார்க்க மாட்டார் -அனுபவம் கொடுத்தால் அனுபவிக்க பசி வேண்டுமே-இதை ஒன்றும் தான் -வியாதி நீங்கி-பிராப்ய ருசி- ஈடு பாடு வளர–ஊரார் ஆனந்திக்கும் படி நிலை குலைந்தேன்– வல் வினையேன் -அனுபவம் கிட்ட வில்லை–லோகத்திலும் பாபம் பண்ணினோம் – வேற பயனுக்கு சொல் வது போல–ஆராய்வர் இல்லை பேச்சு துணைக்கு இல்லை–நீர் பண்டமாக ஆவி உருக--ஸ்வ பிரவர்த்தி  நிவ்ருத்தி-பார தந்த்ர்யத்தின் பலன்- புஷ்பம் போல–ஸு  பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வம் பலன்–இஷ்ட விநியோக  அர்க்கம்–வினு உஜ்ய  மானத்வம்-பாரதந்த்ர்யம்-யோகயத்தை படைத்தது சேஷ வஸ்து –எல்லாமே இது தான்–பலிக்கணும்–விநியோக பட்டால் தான் பாரதந்த்ரம்-பகவானே பிரதானம் பர யோக தந்த்ரன்–தானே பிரயோகம்-ஸ்வதந்த்ரம்–அவன் கை எதிர் பார்க்காமல் மடல் எடுத்தல் ஸு பிரவ்ருத்தி-சாதனாந்தர நிஷ்ட்டை போல இதுவும்-சித்த சாதனம் -சரணா கதி-பிர பின்னர்–நீயே உன்னை அடைய சாதனமாக இருப்பாய் -என்பதே-நிவ்ருத்தி மார்க்கம்

–பற்றித்து எல்லாம் விட வேண்டும்–வாசனையோடு விடுகை– பேறு  தப்பாது என்று துணிந்து இருக்கையும்–பேற்றுக்கு துவரிக்கையும் –பல நீ காட்டி படுப்பயோ–நெறி காட்டி நீக்குதியோ–உபாயாந்தரம் பற்றினால்- இந்த சரீரம் முடிவில் மோட்ஷம் இல்லை–தங்கள் அபிமத சித்தி-சாதனாந்தர மூலம்-போல மடல்–இவர் முயல-என்னை அடைய அவன் ஆசை மட்டுமே -சித்த சாதனம்–அவனால் பேறு  என்று இருந்தவளை பார் என்பர் ஊரார்கள்-இவள் கண்டாயே உண்டபடி–இவளை போல உண்ணும் அத்தனை அவனை பார்த்து இருப்போரும்—ஆற்றாமை மிகுந்து -உசாவி தரிக்க -சீதை பரதன் தெய்வ தேவகி தவித்தார்கள் -பின் பெற்றார்கள் -என்று சொல்ல-நான் மட்டும் கங்குலும் பகலும் கண் துயில் அறியாமல்- நெஞ்சே ஏமாற்றி போன பின்பு-அந்தரங்கர்களே இல்லை–மற்று இல்லை– ஒருத்தர் உண்டே-அவன் மட்டும் தான்–ஆராய-ஆற்றாமை தவிர அவன் ஒருவன் மட்டுமே உண்டு–அவ் அருள் அல்ல அருளும் அல்ல  திரு வாய் மொழி -9-9-வையகத்து பல்லார் அருளும்  பழுது -பொய்கையார்–உன்னால் அல்லால் யாவாராலும் ஒன்றும் குறை வேண்டேன்-ஆழ்வார்–நெஞ்சை-அழல் வாய் மெழுகு  போல-நாம் ஆத்மா நெஞ்சை கட்டு படுத்தனும் -நெஞ்சு-பற்று அற்று இருந்தால்  நண்பன் பற்று உடன் இருந்தால் விரோதி–

ஆத்மா உருகும் பொழுது நெஞ்சை இழுக்க முடியும்–நெருப்பின் அருகில் வைத்த மெழுகு போல-நெஞ்சை பிடித்து தரித்து வைக்க முடியாதே–விரக தாபம் ஆகிய நெருப்பு–ஆத்மாவை வெட்டவோ  நனைக்கவோ கொளுத்தவோ முடியாதே–நாசம் -சொரூபம்-கைங்கர்யம் பண்ணி தானே சேஷத்வம் சித்திக்கும்-புஷ்பத்தில் புஷ்ப  தன்மை இருத்தால் தான் புஷ்பம்–ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் -பரிமளம் -புஷ்பம்- ஒளி-ரத்னம் போல–நித்ரையாலே ஆற்றாமை   போக்கி கொள்ளலாமே–ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்–நாரையும் உடல் வெளுக்க–இச்சித்தவர்கள் யாரும் தூங்க வில்லை–அடைந்த பின் அனுபவத்தால் தூக்கம் இல்லை– வில்லி புத்தூர் உறைவான் பொன் அடி காண்பான் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா-ஆண்டாள்- கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-ஆழ்வார்–உண்டோ கண்கள் துஞ்சுதலோ –பழுதே பல காலம் போயின என்று அஞ்சினேன்-அன்று நான் பிறந்திலேன்  பிறந்த பின் மறந்திலேன்–ஞான பிறவி-இனி தூக்கம் இல்லை என்கிறார்–சம்சாரிகள் தான் தூங்கலாம் –முமுஷுக்கள் தூக்கம் விடுவார்கள்–அடைய துடிப்பு இல்லாதவர்கள் தான் தூங்க முடியும்

நெடும் கண்கள்–திவளும் வெண் மதி –குவலயம் கண்ணி கொல்லி அம் பாவை–பெரிய கண் — அத்தனை தலை சுமை ஆனதே–தங்களை கூடி  இருக்கும் பொழுது அவனை ஈடு பட வைத்த கண்கள்– அஸி தீஷணை–ஊரும் நாடும் உலகமும்தம்மை போல  –எம்பெருமான் பேர் பிதற்ற  ஆக்க –தலைவி தூங்க வில்லை -ஊராரும் தூங்க வில்லையே-5-3- மா சாரு சோதி-மடல்- 5-4-ஊரேல்லாம்  துஞ்சி  உலகு எல்லாம் நல் இருளாய் ஓர் நீள் இரவாய் நீண்டதால் வல்வினையேன் –ஆவி காப்பார் இனியே -தாசர்-கூரத் ஆழ்வான் கால ஷேபம் -இது போல புத்தியும் பாவமும் தனக்கு இல்லை என்றாராம் ஸ்வாமி–விச்லேஷம் நீள-சக்தி பாஷனம் நாக பாஷனம் -ஜாம்பவான் விபீஷணனும் -மட்டும்-ஹனுமான் இருக்கிறாரா-கணக்கு எடுக்க அங்கு இரண்டு பேர் உண்டே-இங்கு அது கூட இல்லை–இவள் பிறந்த ஊரில் தூக்க அறிவார் இல்லை அவர்கள் தூங்கினாலும் -இவள் தூங்க வில்லை–பேர் பிதற்றி–தாழ்ச்சியை காட்டி-உத்தமன்–யானை மேல் வெத்திலை யானை மேல் இருப்பவர் இடம் சுண்ணாம்பு-இது ஊர் வழக்கம் -இவன் தாழ விட்டு கொள்வதில் உத்தமன்–சொவ்லப்யம்  காட்டி –பிடிக்காத பேரை ஏன் பிதற்றினாய்—சேஷத்வ ஞானம் இருப்பவர் நல்லது பண்ணா விடிலும் -அவன் திரு நாமமே பிதற்றுவார்–ஆழ்ந்த கடல் போல ஆசை கொண்டவர்–பத்து மாசம் ஆறி இருந்தாளே ஜனகன் திரு மகள்–பரதன் 14 வருஷம் தேவகி 10 வருஷம் கோபிமார் ஒரு பகல் பூர்ண பக்தி -இவர்கள்  உதாரணம் இல்லை -பின்னை கொல் நிலா மா மகள் கொல் மலர் மகள் கோள்–பக்தி முத்தி இருந்ததால்-காது நெஞ்சு அங்கே போனது இவர்களுக்கு இங்கு இருந்தது ஆறி இருந்தார்கள்-ஆசை அளவு பட்டு இருந்தது அவர்களுக்கு -சொரூப ஞானத்தாலே ஆற்றலாமோ ஆசை கரை புரண்டு இருந்தவருக்கு—பலகை போல அறிவிக்கும் வெள்ளம்-இது காப்பாற்றாது–பெருமானை அடைவது வரை ஆறி இருப்பதே சொரூபம்–அடையாமல் தரிக்க முடியாது விஷய வைலஷண்யம் பார்த்து –அழித்து கொண்டாலும் அடைந்தே தீருவாள்–திரு கொளூருக்கு நடந்தவளை கொண்டாடினார்களே -பழித்தவர்களும்–அடுத்து-வாசவதத்தை சரித்ரம்–தளை காலன் -கட்டு பட்டவன் பின் போனாள்–இப் படி பட்டவரை பிரித்தீர்களே என்று கொண்டாட்டாம்–மாலை பொருந்திட காலில் சங்கிலி இட பட்டவன்

இள வரசி சைதன்யம் உள்ள அவள் கதை—-புகழ்ந்து சொல்ல  பட்டவள்–தன் தோழிகளை விட்டு -வாரார் வன முலை-அழகியவள்-காந்தனோ கச்சோ தாங்க வேண்டும்–ஜனக ராஜன் கொஷ்ட்டியும் உயர்த்தி பேச-துணிந்தவள்–உங்களை இசைவிக்க இத்தனை வார்த்தை சொன்னேன்–அவள் தோழிகள்  திரளில்  விட்டு-நெருப்பில் காலை வைக்காமல் துணிந்து போனாள்–காலில் கட்டு பட்டவன் இடம்- நானோ புருஷோத்தமன்-தாரார் தோள் மாலை கண்டு போனாள் காலில் விலங்கு கண்ணில் படவில்லை –துணிவுக்கு புறம்பான வார்த்தை சொல்லில் நாயகர் இல்லை–பயிலும் சுடர் ஒளி –எவரேலும் அவர் கண்டீர் -அவர் எனக்கு பரமரே–என்று இருக்கும் ஆழ்வார் நிலையை நான் தவிர்த்தேன் வேல் பிடித்த தன்மை சார்ங்கம் இவர் விஷ்வக் சேனர்- என் வழிக்கு ஒத்து இருந்தவரே எனக்கு நாயகர்–கிராம பிராப்தி சொல்வார்  என் நாயகர் இல்லை–அன்னை என் செய்திடின் அன்னை மீர் எனக்கு ஆசை இல்லை –மற்று யார்–நாயகரே–கார் மேகம்  ஒத்த திரு மேனி காணும் அளவும்–நான்-துணிந்த -தன்னை தவிர அனைவரையும் விட்டவள்-பந்தடிக்க புறப் பட்ட அவனை-இப்படி ஆகிய அவனை வழி பறிக்க போனவனை வழி பரி உண்டேன்–ச்வாதந்த்ரம் போக்கி பர தந்த்ரம் –கூத்தாடி என்னை கொண்டான் -காரார் திரு மேனி கண்டதுவே காரணமா — -துணிவு எவ் வளவு செல்ல கூடும் பத்ரி காச்ரம் தொடக்கி  திரு புல்லாணி வரை -சீரார் திரு வேங்கடம் -திரு மலை தொடக்கி வதரி –பல திவ்ய தேசங்கள் வரை -அவன் காரார் திரு மேனி காணும் அளவும் போகும்–சம்ச்லேஷம் வேண்டாம் பண்டும் -பார்த்தால் தான் -கண்டதுவே காரணம் என்பதால்–ஒவ் ஒரு திவ்ய தேசத்திலும் ஒவ் ஒரு  குணம் -காரணம் சொல்கிறாள்-

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: