ஸ்ரீ சிறிய திரு மடல் -பேர் வாமனன் ஆகிய காலத்து -இடர் கடிந்தான் எம்பெருமான்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

அன்றியும்
பேர் வாமனன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மா வலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கி கடை ந்தான் திரு துழாய்
தாரார்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட் பட்டு நின்று அலறி
நீரார் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா! ஒ! மணி வண்ணா! நாகணையாய்!
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக
ஈராவதனை இடர் கடிந்தான் எம்பெருமான்–51-

பேர் வாமனன்- பெரிய /பெயர் உடன்-உடனே திரு விக்ரமன் ஆனார்-பெரிய வாமனன்-குள்ளர்கள் எல்லாரும் திரு விக்ரமன் என்று சொல்லும் படி இருந்த -அடியார்க்கு தன்னை தாள விட்டு கொண்டு–மூவடி மண் எனக்கு தாராய் என்று வேண்டி-நீர் ஏற்று-தாரை வார்த்து தத்தம் -சலத்தினால் –ஏமாற்றி-சிறிய அடி  காட்டி -பெரிய அடியால் அளந்து-நிமிர்ந்து-உலகு அளந்தான்–அங்கு விரோதி நிரசனம்-அன்றியும்-யாசித்து -வேறு பாடு இங்கு-நல்லவன்-கொடை தன்மை உடையவன்–பிரகலாதன் வரம்-அறம் பிரளா சிந்தையால் குலத்து  உதித்தாரை கொல்லேன்–

சத்யம் காத்து இருந்தாய்-என் இடம் இப்படி இருகிறாயே- என்ற எண்ணம்–அதனால்-அழிய செய்ய வேண்டிய பிரதி கூல்யம் இன்றி ஆனுகூல்யம் லவம் இருந்ததால் -இது தான் அடுத்து வமான அவதாரம் சொல்லி காட்டுகிறார்–பரித்ததை பரித்தார் -அவன் நேர்மையாக பரிக்க வில்லை அதனால் இவரும் இப்படி–

அவன் கொடுப்ப உகப்பன் என்று தெரிந்து தன்னை இரப் பாளனாக்கி போனானே-சென்று நீர் ஏற்றி–சலத்தினால்-ஏமாற்றியது -லஷ்மி மார்பில் இருப்பதை மான் தோல் கொண்டு மறைத்து -பிரியாமல் மறைத்து கார்யம் பண்ண -ராமன்  சீதை பிரிந்ததால் காரியம்–திரை போல -அந்த புரம்– கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்துகள்--சு சுரம்-கோபிமார் அழுவதும் சுரத்துடன்-வாமம் -சுகம் கொடுப்பவன்-வாமனன்-ஆல  மர வித்தின் அரும் குறள் ஆனான் –வடிவே அன்றி பேரும் வாமனன் ஆகி–விபரீத லஷண- பேர் -பெரிய குள்ளம்-மற்ற குள்ளர் பெரியவர்- மூவடி மண் தாராய்-நேராக கேட்டான் ஸ்தோத்ரம் பண்ணாமல்–பழ கினது இல்லையே -ஸ்தவ ஸ்தவ பிரிய ஸ்தோத்ரம்–கொள்வன் நான்-பரதவன்-என்ற எண்ணம்- மாவலி -குறுக்கி மகா  பலி என்பதை- கோபத்துடன் திரும்பி பார்க்க-மூவடி -/தாராய்- வளைப்பாரை போல் கேட்டான்–நிர்பந்தித்து-இப் பொழுதே-எனக்கு என்று–விசேஷித்து -ஒன்றையும் தனக்கு  என்று கொள்ளாதவன்- எல்லாம் அடியவர்க்கு தான்- திவ்ய பரணம் திவ்ய ஆயுதங்கள் கல்யாண  குணங்கள் விபூதி எல்லாம் –திரு மேனி கூட அடியவர்க்கு தான்- சங்கல்பம் கொண்டே எல்லாம் பண்ணுபவன்-அவாப்த சமஸ்த காமன்–பரார்த்தம் ஆகையாலே- சொல்லி வாங்கி கொள்கிறான்-இதுவும் தனக்கு இல்லை–சரம ஸ்லோக அர்த்தம் திரு கோஷ்டியூர் நம்பி இடம்  தனக்கு என்று 18 தடவை நடந்து வாங்கி கொண்டு அனைவருக்கும் கொடுத்தார் -அங்கும் மூன்று பதம்- ஓம் நமோ நாராயணா -வாமனன் சீலன்-சீல குணம் கொண்டவன்-

கமண்டல நீர் கொண்டு நீர் கொடுக்க -சுக்கிரன்  தடுக்க- முன் அவதாரம் போல் நகம்-இவன் தர்ப்பம் கொண்டு-சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்–அச்சோ அச்சோ–ஆயுதம் எல்லாம் சக்கர அம்சம்/வாகனம் எல்லாம் கருடன் அம்சம்/ படுக்கை எல்லாம் ஆதி சேஷன் அம்சம் / தீர்த்தம் ஆடுவது பாஞ்ச சன்யம் அம்சம்–/ ராமன் காகாசுரன் இடம் இதே ஆயுதம்-அங்கு ப்ரஹ்மாஸ்திரம்  விட்டு பண்ணினார் ராமன்-/அடுத்து தீர்த்தம் பட்டதும் சிலிர்த்து வளர்ந்து -அண்டம் மீது போகி அப்பால் மிக்கு–பெருக்குவாரை இன்றி பெருக்கி–கை தீர்த்தம் விழும் பொழுது திரு விக்ரமன் திருவடி பரகம கழுவ-தர்ம தேவதை உருகி அதுவே -கங்கை தீர்த்தமும் விழுந்ததாம்-சத்ய லோகத்தில் இருந்து இது வரவும் இவர் கை தீர்த்தமும் விழ- ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப –காமரு  சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து மேலை தண்  மதியும்-ஆழ்வார் சிசுரோ   உபசாரம் பண்ணுகிறார்- கதிரவனும்  தவிர ஓடி -திரு பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொருத்தாய்–ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி-ஓங்கு பேரும் செந்நெல்- போட்டி இதற்கும் -வளர்ந்த நெல்–தேகளி ஸ்தோத்ரம் தேசிகன்-இடது திருவடி தான் மேல்/ திரு கோவலூரில் திருவடி மாறி-சங்கு சக்கரம் மாறி இருக்கும்–

காகாசுரன் இடது கண் தான் போனது- போனது இடது என்று கொள்ளனும்– பிரமா வந்தது இடது என்பார்// சகடம் உதைத்தே பெரிய வேலை ஈர் அடியால் முடித்து கொண்ட முக்க்யன்–தலையில் வைக்க எனபது  அல்ல –தலையும் கீழ் லோகம் தெரியாது–உனக்கே இது தெரியும் -வேதாந்தம் சொல்லும்–நமுசி-பிள்ளை-என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்று சொன்ன நமுசியை வானில் சுழற்றிய –ஆழி எழ -அப்பன் ஊழி எழ– அதி மானுஷ-உன் உலகம் இப்படி பிச்சை எடுத்து செய்தாயே-உன்னால் படைக்க பட்டு உண்டு உமிழ்ந்து —பெரிய நாடகம்–கூரத் ஆழ்வான்–வேதாந்தம் வாயார பேச செய்தாய்–விஷயம் ஆக்கினாய்–இதை பண்ணி நாம் பேசி ஜன்ம பந்தம் அறுக்க தானே பண்ணினாய்-ஜன்ம கர்ம மே திவ்யம்--பிரயோஜனாதர பரக்கே இப்படி பண்ணினாயே– யாதானும் பற்றி நீங்கும் விரதம் -இதற்க்கு  வேறு எங்கும் போகாமல் என் இடம் வந்தாய் என்று  உகந்து பண்ணி கொடுத்தான்ஆயிரம் தோளால் அலை அடல் கடைந்தவன்- எம்பிரான்- இதை பண்ணினதே ஆழ்வாருக்கு உபகாரத்துக்கு தான்–ஆராத போர்–காரார் வரை-மேகம் தங்கும் மந்திர  பர்வதம்-வரை நட்டு–கடைய நாட்டி–வாசுகியை கடை கயிறாக சுற்றி–நாகம் கயிறாக வரை- பெயர் சொல்லவில்லை-விசேஷித்து அறத்து கொள்ள வேண்டும்–பேராதே -பேர்த்தல் -நகராமல் தாங்கி–தாராரந்த மார்பம்   – திரு துழாய் அலங்காரம் கொண்டே வருவான்-இதற்க்கு பயன் உண்டு-தாயார்–வருவதால்-நீள் நாணாகம் நட்டு-தானே சயனித்த கடலை கடைய-வித்யார்த்த பெண் சாரணர் கிண்ணர்கள் கந்தர்வர் போல்-சூடி கலைந்த மாலை பிரசாதம் பெற துர்வாசர் இடம் கொடுக்க -இந்த்ரன் இடம் கொடுக்க -அகங்கரித்து  யானைக்கு கொடுக்க காலில் போட்டு கொள்ள-சாபம்-அசுரர் திகைக்க-காச்யபர் இடம் அதிதி முறை இட-பாம்பு எலிசம்வாதம்-விரோதிகளை நண்பன் ஆக்கி கொள்ள-அசுரர் சகாயம் கொண்டு-அமரத்வம் கொடுக்க–காதில் ரகசியம் சொல்ல-மந்த்ரம் தூக்க -விழுந்து பலர் இறக்க-கருடன் தொக்க சொல்ல-தேவர் உயர்ந்தவர் தலை பக்கம் இந்த்ரன் சொல்ல-இந்த்ரன் பணிந்து வாழ் பக்கம்-இந்த வம்பு வரும் ரகசியம் சொல்லி விட்டார்- சூடு ஆகி தலை பக்கம் பிடித்தவர் சக்தி குறையும்–ஆழ கடலை பேணான்–

 கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்தான்–அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த -அசுரர்களும் தானுமாய்–வாசுகி ஜன்ம சாபல்யம் அடைந்தது இவனே கடையும் பொழுது–இங்கு அவர்களை ஒதுக்கி விட்டு–தயிர் கடைய புக ஒல்லை நானும் கடையவன்–மெய் அறிவன் நானே –குலசேகர ஆழ்வார் -வண்டமர் பூம் குழல் தாழ்ந்து உலவ வான் முகம் வியப்ப   செவ்வாய் துடிப்ப- கள்ள விழியை விளித்து புக்கு-இவள் ஸ்பர்சம்  வேண்டும் என்று உகந்து–பெண் மனசில் இடம் பிடிக்க இவன் படும் பாடு-அவர்களால் மாட்டாதே தானே கடைய–ஆராத போர்-அவர்களால் முடியாத -தனக்கும் ஆராத செயல்- போதும் என்ற எண்ணம் வராது நின் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–அனுகூல்ய லவம் உடையார் -பக்தன் -பற்றி சொல்லும் பொழுது தான் -என்றே கொள்வான்- அதனால் அசுரரரும்  தானுமாய்-தேவர்கள் இவன் சரீரம் தானே–அசுரர்கள் சரீரமும் இவன் தான் இருந்தாலும் அவர்கள் இதை ஒத்து கொள்வது இல்லை -அதனால் பிரித்தார்–காரார் வரை நட்டு-மேகத்தோடு நட்டாராம்–சேதனன் பகவத் அனுபவம் ஆசை-மலையில் இட்டு கடையும் பொழுதும் விசன படாமல் இவன் கர ச்பர்சத்தால் வந்த சுகம்-வாசுகி-ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி–அரவம் ஊறு சுலாய் மலை  தேய்க்கும் ஒலி-கடல் மாறு சுழன்று அழைக்கும் ஒலி – -கீசு கீசு ஒலி-காசும் பிறப்பும் ஒலி-தயிர் கடையும் ஒலி-ஆகாசம் போய் நித்திரை வர சொன்னதாம்-அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே-சுகம் பட்ட மந்தரம்-கைங்கர்யம்-பேராமல் தாங்கி கடைந்தான்-அந்தர் ஆத்மா மந்த்ரம் வாசுகி கூர்ம -கீழ் உடையாமல்-மேல் கொந்தளியாமல்–பக்கத்தில் சாயாமல்-அனைத்துக்கும் அந்தர் ஆத்மா- திரு துழாய் தாரார்ந்த மார்பன்-மலையே மலையை கடைந்தான்-தட மால் வரை போலும்–கடைகிற அமுதம் இவன்–தோளும் தோள் மாலையுமாய்-மேகம்  அலுங்காமல் மந்தரம் கொண்டு வந்தது போல -இதழ் கீழ் விழாமல்- வீர சௌர்ய பராக்ராமன்- கலங்காமல்-வீர்யம்- புகுந்து தூள் ஆக்குவதால் -சாரயம்-தான் விகாரம் அடையாமல் -பராக்கிரமம்–தோள் மாலை திரு மங்கை ஆழ்வாருக்கு கண்ணில் பட ஆண்டாளுக்கு அழகிய கேச பாசம் பட -வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை- தலை முடிய முடியாமல் அலை பாய -ஆல கால விஷம் தன்வந்தரி எல்லாம் வர ஸ்ரீ லஷ்மி வர-மா தவன் ஆனார்–அவள் அனுபவிக்க கேசவன்–வங்க கடல் கடைந்த கேசவனை-தேவர்கள் பல்லான்ன்டு பாட இழவு தீர இவள் பாடுகிறாள்–பிரயோஜனாந்த பரர கார்யம் சொல்லி இனி அநந்ய பிரயோஜனர் கஜேந்திர மோட்ஷம் அடுத்து சொல்கிறார்–பலிஷ்டர் நிதானம் -கொறித்து போக இவர்களுக்கு என்று மோகினி அவதாரம் கொண்டு தேவர்களுக்கு கொடுக்க- ராகு கேது வேஷம் -சூர்யன் சொல்ல கரண்டியால் தட்ட தலை போக

அவன் விரோதி போக்கி அபிமதம் நடத்தி கொடுத்தி-தாமரை மலரை-தன் திருவடி தாமரையில் சேர்த்து கொண்டு–அவன் அகப் பட்ட மாடு கரைக்கே தான் சென்று கார்யம் பண்ணிய விருத்தாந்தம்-சொத்து இருக்கும் இடம் ஸ்வாமி தானே போவான் அரை குலைய தலை குலைய -இங்கும் கேசம் அவிழ- -வந்து விழுந்தான்-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி-ரட்ஷகம்-அ காரம் அவ ரட்ஷனே தாது அனைவரையும் எப் பொழுதும் எப்படியும் தன் பேறாக ரட்ஷிகிறான் –ஈஸ்வரை ஒளிந்தவர் ரட்ஷகன் அல்ல –பருத்து உயர்ந்த தடம் வரை போல் யானை–பொய்கை வாய் -நீர் நிலம் -வாய் கோட் பட்டு  அலறி- நெடும் கை -துதிக்கை- ஓர்- தாமரை கொண்டு சமர்ப்பிக்க பறித்த அத்வீதிய கை– நீரார் கமலம்–கூக்குரல் கேட்டு வெகுண்டு—தீராத சீற்றம்–இதை நினைந்து தீராத கோபம் இன்று கூட என்பதால்—எட்டு எழுத்து மந்த்ரம்-ஆம் ஆகில் சொல்லி பார்கிறேன்-சொல்லி இழந்தான்- பக்தர் அபசாரம் என்றும் அடங்காத கோபம்–சென்று -அங்கெ போய்- இரண்டு கூறாக

யானை பருத்து உயர்ந்த பெருமை- பெரியது நோவு பட்டால்-ஆற்ற  மாட்டாமல் –போர் யானை–தாமரை மலர்  கொண்ட-சண்டையால் இல்லை செருக்கால்-தலை அசைத்து -யானை ஸ்வாபம்-பொய்கை வாய்- வெளி நிலம் ஆகில் எதிரிகளை வெல்லும்- இது நிலம் இல்லாத பொய்கை வாய்–வேற்று இடம் யானைக்கு–சப்த சக- அடியவர் சப்தத்துக்கு காத்து இருக்கிறான்–விண்ணுளார் வியப்ப வந்தான்–முதலை மேல் சீறி வந்தான்-போதறிந்த வானவர் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அரிந்து கொண்டு -குரங்குகளுக்கு பயம் இல்லை- திரு வேங்கடத்தில்- அபாகவதர்கள் இருக்க மாட்டார்கள் ஆழ்வார் நம்புகிறார்–நாம் அந்த நம்பிக்கை கெடுக்க கூடாது–நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்– கடி கொள்பூம் பொழில்–   பூம் பொழில் காமரு பொய்கை–பொய்கைவைகு தாமரை   –வைகு தாமரை  வாங்கிய வேழம் -ஓன்று காலை பிடிக்க மற்று ஒன்றும் காலை பிடிக்க -இரண்டுக்கும் மோட்ஷம்- முதலைக்கு முதலிலே மோட்ஷமாம்–  பாகவதன் காலை பிடித்ததால்—மற்று அது நின் சரண் நினைப்ப–துதிக்கை தாமரை யில் -நீரார்-செவ்வி மாறாத  தாமரை பூ–நாராயணா ஒ மணி வண்ணா நாகணையா– சர்வ ஸ்வாமி என்ற படி- சொத்தை அழியாமல் பார்த்து கொள்ள வேண்டாமா -வாசகம் கொண்டு அருளாயே-நாரைக்கு -தூது விட-சர்வ ரட்ஷகன்–மணி வண்ணா -அழகு ரேகை ஓடும் உள்ளே-அன்பு கிருபை–தாபம்த்ரயம்  தீர்க்க -நாகணையாய்- விடாய்த்தாருக்கு தண்ணீர் கொடுப்பவனே- அழகை காட்ட வேண்டாமா -ஆசை பட்டவருக்கு காட்ட தான் அழகு–தரிசனமே வேண்டும்–அவதார பிரயோஜனம் -ஸ்வாமி இந்த பாசுரம் கொண்டே சாது பரித்ரணம் -ஒன்றே–மற்றவை கிள்ளி களைந்தது போல தர்மம் ஸ்தாபனமும் சங்கல்ப்பத்தாலே நடக்கும்-சேவை சாதிப்பதே ரட்ஷனம்–நாகணையாய்- அனந்தனுக்கு  கொடுத்தாயே–ஆசை பட்டவனுக்கு -நாகணை மிசை நம்பிரானே சரண்–ஆர்த்தி தீரும் படி அழகிய  திருமேனி கொண்டு -நீராய்நிலனே .. -சிவனாய் அயனாய்-கூராய் ஆழி வெண் சங்கு ஏந்தி–மீன் அமர் பொய்கை நாண் மலர் ..கரா  அதன் காலிலை கதவ  சென்று நின்று-வாராய்-க  கேட்டு ஜம் என்று குதித்தாராம்-கருடனையும் தூக்கி கொண்டு-வேதாத்மா-ஆர் இடர் நீக்காய்–அரை குலைய தலை குலைய வந்தான்-ஈஸ்வர -தடுப்பு நீக்குவதே பிரபத்தி –இப் பூ செவ்வி மாறும் முன் திருவடியில் சமர்ப்பிக்க தான்–அவனுக்கு என்று பறிக்க பட்ட புஷ்பம் என்பதால் 1000 வருஷம் தேவ மானம் ஆகி இருந்தாலும் செவ்வி மாறாமல் இருந்ததாம்–பக்தன் கையில் இருந்த பெருமை-அவன் திருவடிக்கு போகபோவதை நினைந்து பெருமை -சொல்ல -வேகமாக-பெண் உலாம் சடையினானும் பிரமனும் –வெள்கி நிற்ப-உன்னை அன்றோ-களை கணா கருதுமாறே– ஆஸ்ரித பார பட்ஷன்–அநந்ய  பிரயோஜனன்–இன்னும் தீராத கோபம்–ருசி விளைவித்து ரட்சித்து இருக்கலாமே–நினைத்து மாதரத்தில் -காவல் சோர்வால் வந்தது என்று வந்த சீற்றம்–சீற்றத்தால் சென்று-கருடன் வாகனம் இல்லை சீற்றம் வழி நடத்த போனான்-தான் அறிந்து போக வில்லை-கோபச்ய  வசம்-ராமன் திருவடியை ராவணன் அடித்த பின்பு—செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்-நீர் புழு மேல்-ஆனைக்கும்நோவு வராமல் திரு ஆழி கொண்டு–இடர் கடிந்தான்–கையில் உள்ள கமலம் தானே சேர்த்து கொண்டு–குனிந்து ரணம் -மேல் உத்தரீயம் கொண்டு வேவு கொடுத்தானாம்–எம் பெருமான்-யானைக்கு உதவினால் போல என்னையும் -தான் பெற்றது போல கட்டுவிச்சி-தோற்ற என் ஆயனே என்கிறாள்-இவளும் சேர்ந்து அவன் வசம் பட்டாள்-

————————————————

ஸ்ரீ  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: