ஸ்ரீ சிறிய திரு மடல் –நீரார் நெடும் கயத்தை -ஆரா எழுந்தான் அரி வுருவாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 

ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்றுரப்பி–37
ஓர் ஆயிரம் பண வெம் கோவியல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்றதன் மத்தகத்து
சீரார் திரு வடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு
நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வாரார் வன முலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோள் ராவணனை ஈர் ஐந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் –42
போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டி செங்குருதி
சோரா கிடந்தானை கும்கும தோள் கொட்டி–44
ஆரா எழுந்தான் அரி வுருவாய் அன்றியும்

காளிய சரித்ரம் சொல்கிறாள்–வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையை சொல்லிய பின்பு–இதே நாட்டியம் –பிறந்த தோர் அபாயம் -விரோதி-வாலில்–கேட்கல் ஆகாதோ-கட்டு விச்சி-கண்ணனுக்கு அபாயம் என்றதும் தெளிந்து விடுவாளே–நியாமிகை ச்நேகிநியானும் ஆன அவள் கையால்-பாடு ஆற்றலாமே- -அன்றியும்–நீரார் நெடும் கயம்-குளம்- மடு–நீர் நிறைந்த பெரிய -அலைக்க நின்று உரப்பி–வெள்ளம் வெளி வெளியாக -ஆயிரம் பிள்ளைகள் உடன் குதித்து அலைத்து— ஆயிரம் படங்கள் கொண்ட காளியன்-வெப்பம் இயல்பு கொண்ட கோ-யமன் போல -என் உடன்  போர் செய்ய வா என்று அழைத்து -எனக்கே என்று–இட்டமான பசுக்களை இனிது  மருத்தி  நீர் ஊட்டி–படைத்ததே அவன் தான்-கோ பாலன் -இந்த நீரை விஷம் ஆக்கி- -ச்வார்த்தன்-அவன் –நாம் பரார்த்தம்-அவனுக்கு என்று இருக்க வேண்டும் சேஷ பூதர் சரீரம் ஆத்மாவுக்கு தானே–

தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் -மாடு கன்று நீர் மடு எல்லாம் அவனுக்கு தான்–அவ் வழியே பெண்களை வர சொல்லி  அங்கே சந்திக்க -ஒதுங்க நிழல் கொடுத்த -வியாஜ்யம்-அப் படி பட்ட மாடுகள் நீர் பருக முடிய வில்லை என்று-ஐஸ்வர்ய சூசுகத்தால் சிவந்த செவ்வரி  கொண்ட கண்கள்-எல்லாம் அவனுக்குதானே–மம காரம் வேண்டும் அவனுக்கு அவன் உடையது என்பதால் தான் நம் குற்றம் கணிசியாமல் உடன் இருந்து கிருஷி பண்ணுகிறான்//–ரஷ்ய வர்க்கம் -குறைவற வேண்டிய ஜலம்- தன் ஏர்  ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்–பொய்கையில் காலால் உழக்கி-கல்லை விட்டு எரிவது–கரைக்கு மேல் நீர் வழியும் படி–இலங்கையை ராமன் 39 வயசில்- குரை கடலை அடல் அம்பால் -அணை கட்டி–அடை மதிள் படுத்திய ராஷசர்கள் தாங்களே புறப் பட வந்தது போல–பையல் மிருத்யு கிடீர்-ஆயிரம் தலை யமன்-அபூத உவமை–அக்கார கனி போல அபூத வுவமை சக்கரை விதை யாக வைத்து மரம் ஆகி பழுத்த –நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து–பெரிய ஆழ்வார் -ஆயிரம் என்கிறது என்-நடந்தவற்றை பார்க்கும் பொழுது-ஆபத்து -வயிறு பிடிக்கிறார்-பொங்கும் பரிவு அவருக்கு -இங்கு இவளுக்கு –மறைத்து சொல்வார் பெரிய ஆழ்வார் உடனே கம்சன் கண்டு கொள்வான் கண் எச்சில் படும்.என்றும் கொள்ளலாம்–பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்–பள்ளியில் –ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளியவாகி போக–மிகை படுத்தி பேசுவார் திரு மங்கை ஆழ்வார்– சின்ன குழந்தை ஓன்று சொன்னால் ஆயிரம் போல நாராயண வேத  சார தமம் –

அரண்டு போய் -ஆயிரம் ஆக தொடருகிறது வெம் இயல் கோ-இந்த யமனுக்கு வெப்பம் ஊட்டி வேற–வாராய்- முதலிகள் இலங்கையை எனக்கு எனக்கு என்று -தன் பக்கலில் -வர சொல்லி மற்று அதன் மஸ்தகம்-தலையில்-சீரார் திருவடியால்-கூசி பிடிக்கும் மெல் அடி–மக்களை ரட்ஷிக்க சிஷிக்கிறார் அதனால் திரு சேர- சிவந்த காரணம்-மார்த்வம்-மன்னர்கள் -கிரீடம் வைத்து ரத்ன ஒளியால் சிவந்து -செய்யாள் பிடித்து சிவந்த -நம் ஆழ்வார் திரு உள்ளம் ராகம் -பக்தி-சிகப்பு—விஷ த்ருஷ்டியான இதன் தலையில் வைக்கிறானே

வடிவிணை இல்லா மலர்  மகள் மற்றும் நில மகள் பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க — கூவுதல் வருதல் செய்யாயே –காய்சின வேந்தன்–நாமும் நேராக சேவிக்க முடியாது –அவர்களுக்கு என்றே -பாய்ந்தான்–ஜெயித்ததை சொன்னாள் இவள் எழுது இருக்க மாட்டாள்- அவளை எழுப்புவதில் தானே நோக்கம்–என்ன ஆகுமோ என்று -போர்  களமாக  நிருத்தம்  செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடுமின்-அங்கு குதித்து நாட்டியம் -செய்தி கேட்டு கோகுலம் போர் களம்  ஆக பரிவால்–பிள்ளாய் எழுந்திராய்-பேய் முலை நஞ்சு-வெளியில் உள்ளவர்கள் சொல்ல -உண்டு அவள் பதில் சொன்னாளாம் –கள்ள சகடம் -என்று இவர்கள் சொல்ல கல கழிய கால் ஓச்சி-என்றாளாம் –அடுத்து ராம சரித்ரம்-இல்லாத நம்பிக்கை வரும் என்று கிருஷ்ணன் கதை மாறி- -பெண்ணின் வருத்தம் அறியாத பிரான்/பெண் நீர்மை யீடழிக்கும் ஓர் பெண் கொடியை வதை செய்தான் –நேர் ஆவான் என்று வந்தாளே சூர்பனகை-நிசாசரி-ராட்ஷசி-இரவு -கொடி மூக்கும் -கொண்டாடுகிறார் -ராமன் வெட்ட வேண்டுமே-கர தூஷனார்களை  வென் நரகம் சேரா வகை–விரூபை ஆக்கி-அவள் போய் கரன் காலில் விழ ச பரிகரனாய் வந்தான்-தன் சீதைக்கு–அப்ரேமேயம் யஸ்ய ஜனகாத் மஜா-சீதை உடன் கூடிய ராமனுக்கு–ஸ்ரிய  பதி–

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன –திருவடி–துஷ்க்ருதம்–அவளை சொல்லி இவனை சொல்ல வேண்டி இருக்கும்–விரூபையாய் இருக்கும் இவள் ஒப்பு என்று –ஹாஸ்ய ரசம்-வால்மீகி-சுகேசம் தாமர மூர்த சு மத்யம் இடை சுச்வரம் பைரவச்ர தகரத்தில் ஆணி போல/ராமன் உடனே சாம்யம் இல்லையே–நிசாசரி- நிசா-இரவில் சரிகிறவள் -பிணம் தின்னி -இது தான் பேர்–பெருமாளுக்கு மேலான பிராட்டிக்கு பெருமாளுக்கு ஒவ்வாத தான் –பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம்-உ காரம்-அனந்யார்க்க  சம்பந்தம் சொல்லும் பிராட்டியும் பொருள்–மிதுனத்தில் அடிமை சொல்வதை விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் என்று பிள்ளை லோகச்சர்யர் அருளுகிறார்–அதை விட உசந்தது பகவத் சேஷத்வம் அதற்க்கு மேல் பாகவத சேஷத்வம்–மூன்று நிலைகள்—தரை லோக்ய ராஜ்ஜியம் -பெருமாளே தாமும் உபய விபூதியும் ஏக தேசம் பிராட்டிக்கு ஒப்பு இல்லை என்று தாமே அருளி–கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால் -ராமோ தஷினோ  பாஹூ வலக் கை தானே இளைய பெருமாள்–கூரார்ந்த வாளால்-முரட்டு உடம்பில் வைத்தாலும்–தங்கையை மூக்கும் தமையனை தழிந்த –தாசரதி   –புருஷோத்தமன் இருக்கை–ஆர்ப்ப-ஓலம் இட-

ரத்த ஸ்பர்சம் இல்லாத படி-ஈரா விடுத்து-அறுத்து -வெட்டி  வகுத்து-கடின உடம்பு–சீர் சினம் கொண்டு போவாள் பிறந்தகம் இருந்து புக்ககம் -அழகாய் வந்தாள் ஏர் இட்டு கொண்டு– பெருமாள் இடம் ஆசை பட்டது நல்லது என்றாலும் ,பிராட்டி பக்கல் அபசாரம் பட்டதால்–சேர்த்து வைப்பது அவள் சொரூபம்–ததீயர் பக்கல் அபசாரம் பட்டால் இது படுவோம்– இவள் ஆசை பட்டது போல் தான் சிந்தயந்தியும் ஆசை பட்டு மோட்ஷம் போனாள்–அங்கு  பாகவத அபசாரம் இல்லை–ஏவம் முக்தி-ஸ்ரீ பாஷ்யத்திலும் சுவாமி இதை சாதித்தார் — விடுத்தி -ஒட்டி விட்டு-தருணவ் ரூப சம்பனவ் சுகுமாரவ் மகா பலவ்–கோபம் வந்து நிக்ரகிக்கும் பொழுது கர தூஷணர்களையும் முடித்தார்–அனுகூலர் பக்கல் ராகம் பலிக்கும் போல-பிரதி கூலர் பக்கல் துவேஷம் பெருகும் –சம்பந்தி அளவும் முக்தி கேட்டு பெற்றார் ஸ்வாமி கத்யத்தில்–கேசவன் தமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அவட்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகை–வீர சொர்க்கம்-முதல் அர்த்தம்–கையில் பட்ட அடி வேற நரகம்-வளைந்த வில்லும் கையுமாக பார்த்த கரன் மேலே போக வேற நரகம் வேண்டாம் என்னும் படி-பட்டர்-அருளுவதை நஞ்சீயர்-இவ் வார்த்தை அருளி செய்தார் என்று சொல்ல இவ் அர்த்தம் அருளியவர் இடம் திரு வடி பணிய வந்தார் ஐதீகம்–

கர தூஷணர்களை கொன்று சீதா பிராட்டி ஆலிங்கனம் பண்ணி கொண்டு பெருமாள் ஆனந்தம் பட்டார்

கூடிடு கூடலே -சோழி காலில் விழ-அவனை அடைய ஈடுபாடு–/சந்தான கரணி-திரு மேனி ஆலிங்கனம் -உண்ணாது உறங்காது  ஒலி கடலை ஊடருத்து பெண் ஆக்கை –மனத்துக்கு இனியான்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்–ஆண்டாள்-போத எந்த பரஸ்பரம்-ஆழ்வாரும் மதுர கவி ஆழ்வாரும் -போல அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம்- கட்டுவிச்சியும் தாயாரும் பேச இதுவே மருந்து மகளுக்கு /சென் துவர் வாய்-வாரார் வன முலையாள் வைதேவி-ஏரார் தடம் தோள் –சினம் அறுத்து செற்று உகந்த-செங்கண் மால்–சென் துவர் வாய்-அழகிய சீதை-பட்ட மகிஷி-மந்த காசம்- கர வதம் அன்றி-அகம்பனன் -நடுக்கம் இல்லாதவன்-ராம பிரபாவம் பேசினான் ராவணன் முன் -சென்று அறிவிக்க-

பெண் உடை உடுத்து போய்/அம்மானை கேட்டாள் அம் மான் இருக்கும் பொழுது–பகவத் அனுபவத்துக்கு விரோதம்–ஆய-சகல வித கைங்கர்யம்-அவனுக்கே என்று அவன் போகத்துக்கு -உடலையும் உயிரையும் பிரித்தானே-கோவை வாயாள் பொருட்டு- ஏற்றின் இருத்தம் இறுத்தாய்–ஒரு கொம்புக்காக ஏழு கொம்பில் மிதித்தான்–சிரிப்புக்காக–நாட்டுக்கு தண்ணீர் பந்தல் போல பெருமாளே ஒரு அம்பால் எல்லாம் தலை கீழ் ஆக்குவேன் என்று கோபம் கொள்ளும் படி- லஷ்மணன் தான் கோபம் குறைக்க வைத்தான் –சீதையின் உதட்டின் ஏற்றம்-என்ன பண்ணின முறுவல் இறே–எந்த சிரிப்பை–மானை பார்த்து சிரித்த சிரிப்பை–கடைசியாக பார்த்த சிரிப்பு–ஆச்சர்ய பார்வை உடன்-இரப்புடன் கூடிய முறுவல்–வாரார்வன முலையாள்- -மலரால் தனத்துள்ளான் என்று கிடப்பவன் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான்–வைதேவி காரணமா–விதேக ராஜ பெண்/அவளும் தசரத குமாரன் என்று இருப்பாள்–கர்ம யோக சீலன்–சனகன் திரு மருகா தாசரதி தாலேலோ–

வாய் புலற்றும் குடி பிறப்பு-ஜ்காரனமா -ஹேதுவாக -ஏரார் தடம் தோள் ராவணனை-ஒன்றும் விக்ருதன் ஆகாத திருவடியும்-மோட்சமே வேண்டாம் என்றவர்-திருவடி மதித்ய  ஐஸ்வர்யம்- -கொண்ட கொண்ட  கோதை மீது தேன் உலாவு  கூனி– கொண்டாட்டம்-ஏழு நாள் யுத்தம் பண்ண வைத்த பிரபாவம்–உருவம் பலம்–மண்டோதரி–ராமனுக்கு தோர்க்க வில்லை-உன் புலன்களுக்கு தோற்றாய்–ஈர் ஐந்து சீரார் சிரம் அறுத்து -இங்கு என்ன சீர்மை–ஒரு காலே அறுக்காமல் இருந்ததால் ஈர் ஐந்து –தலை பத்தும் அறுத்து உகந்தான் சால கிராமம் அடை நெஞ்சே–ஒரே அம்பால் ஏழு சால விருஷம் முடித்தாரே–வேடிக்கை விளை யாட்டு இருக்காதே-ஐந்து ஐந்தாக அறுத்து லீலை கொண்டாடி–வீர பாட்டை கொண்டாடி-விழுந்த சீர்மை–இந்த ராமன் சமமா என்ற எண்ணம் -பரிகாசம்-அவன் சரீரம் இருக்கும் பொழுது-பின்பு சம்பந்தம் நீங்கியதும் -வைபவம்-விபீஷணன் விலகியதும் -சத்ருகளும் கொண்டாடும் படி வீரம் கொண்டாடி விழுந்த சீர்மை–தைரியம்-கழுகும்  பருந்தும் -வீரத்தில்  முட் பட்டதே என்று -ஆசை பட்டனவாம்–செற்று உகந்த-சதுரங்க  பலம் அழித்து கும்பனோடு நிகும்பனும் பட்டு –மனசு திருந்துவானா என்று பார்த்து–அனுக்ரகம்-பக்தர் பக்தர் சம்பந்தம் போல பிரதி  பந்தமும் சம்பந்தம் எல்லாம் ஒழித்து

ரிஷிகளுக்கு களை அறுக்க பெற்றோம் –விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் பண்ணும் உகப்பு–இரண்டாவது தடவை இங்கு-அக் கரையிலே முதலில் பண்ணி விட்டானே– தாவி  அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கனே செம்கண் மாலே  ஆவியே அமுதே –திரு மாலை-35-மாசுச சொல்கிறார் ஆழ்வாருக்கு இதில்-விலகி போனவர் –சிக்கனே என்றதும் மலர்ந்த திரு கண்கள்-செம்கண் மாலாக ஆனார் —இங்கும் செங்கண் மால்- கொன்றதால் செங்கண் மால்–எழுவாய்-பயன் இலை -செய படு பொருள்-இல்லை–க்ருபாதீனமாக விகாரம் இது– ஆழ்வாரை தோள்களை  ஆர தழுவி ..தோள்கள் ஆயிரத்தாய்–ஆனது போல-அன்பும் வாத்சல்யமும் தோன்றும் திரு கண்கள்–அன்பும் வ்யாமொகமும் தோற்ற- பிராட்டிக்கு அம்பு ஏற்றிய சரித்ரம்-செற்று உகந்த-வாய்ப்பு கொடுத்து கொன்றான் இங்கு-இனி அக்ரமாக முடித்த சரித்ரம்-ஆஸ்ரிதர் அபசாரம் -சம காலத்தில் -பிரதிக்ஜை -ஆங்கே அப் பொழுதே தோன்றிய சிங்க பிரான்–

நரசிம்க சரித்ரம் அடுத்து-போரார் நெடு வேலோன்-சண்டை போட்டு கொண்டே இருக்கும் வேல்-பொன் பெயரோன்- ஹிரண்ய கசிபு-ஆகத்தை- கூரார்ந்த வால் உகிரால் கீண்டு–குடல் மாலை -சீரார் திரு மார்பின் மேல் கட்டி-செங்குருதி சோரா கிடந்தானை கும்கும தோள் கொட்டி ஆரா எழுந்தான் அரி வுருவாய் -/

இரண்டு வடிவை ஒன்றாக தைத்து வைத்து வந்த -நெடு வேல்-அடக்கி ஆள ஒண்ணாத  படி-வில்லாண்டான் போல–வேல் அவன் கையில் இருக்கும் அடையாளம் -பட்டு கிடக்கும் பொழுதும் விடாமல்-ஆகம்-மார்பு-திண்மை-பரியனாகி -வரம் கொடுத்து வளர்த்த அவுணன் -திரு உகிர் க்கு இறை போலும் –பூண் கட்டிய மார்பு–கூர் ஆர்ந்த –பிராட்டி பக்தர் ஆபரணம் போல் தான் -திவ்ய ஆயுதங்கள்–இரண்டு பக்கம் உண்டு–கீண்டு–சுலபமாக முடித்தார்– பிளந்து வளைந்த உகிரானை–தோற்ற அளவிலே சீற்றம் கண்டு -கொதித்து பதம் போட்டு பொசித்து -கிழிந்த குடலை-விஜய லஷ்மிக்கு மாலை-ஆர்த்து எழுந்தான்-கிளர்ந்து எழுந்தான் -கர்ஜித்து –அவாகி அநாதரன்- அங்கு எதிர் தலையில் யாரும் இல்லை அங்கு–ஆஸ்ரித விரோதி போக்க பெற்றோம் என்ற ஹர்ஷத்தாலே -..உன் விரோதியையும் முடித்து ரட்ஷிப்பான் என்கிறாள்-

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: