மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –21
பராசர பட்டார் வியாக்யானம் என்பர் –
இதில் தேசிகர் ஸ்ரீ ஸூக்தி காட்டப் பட்டதால் அப்படி இருக்காது —
பரகால தாசர் என்பவர் அருளி- பெரிவச்சான் பிள்ளை சிஷ்யர் இவர்–
நாயனார் ஆச்சான் பிள்ளை இடமும் கால ஷேபம் கேட்டு கொண்டார்–
கலி கன்றி தாசர் பெயரை இவருக்கு வைத்து மகிழ்ந்தார் -பட்டர் அர்த்தம் -பொதிந்த வியாக்யானம் –
பெருமாள் லஷ்மணன் சேர்ந்து வந்தது போல –வயலாலி மணவாளனே பெருமாள்-
தானே சீதை பிராட்டி–திருவடி சீதையை எழுப்ப வழி தேடினது போல –தோழிமார்கள் -காந்தர்வ விவாகம் –
கலவி இன்பம் காட்டி -வந்ததை நினைவு படுத்தி –எப்படி வந்தார் கேட்க்க -அதற்க்கு பதில்-
என் முன்னே வந்தார் என்று வந்தது நின்றது -எல்லாம் சொல்ல –சித்ரம் போல காட்ட —
சொல்ல முயன்றேன் -அவ் வண்ணத்தவர்-சொல்லி முடிக்க முடிய வில்லையே என்று முடிகிறாள்
சந்தரன் போல மகர குண்டலம் -எய்வதே ஸ்வாபம் கொண்ட வெம் சிலை–
சார்ங்கம் உதைத்த சர மழை–வில்லாண்டான் -தனம் தொலைத்த இடத்தில் தேட இருவராய் வந்தார் -எங்கே –
கோதாவரி நதி கரைக்கு வந்தது போல திரு மணம் கொல்லைக்கு –
என் முன்னே நின்றார் எட்டு எழுத்தும் பறித்த இடம் இதுவோ–
கை வண்ணம் தாமரை–சுலபனாக வந்தான் அழகன் -தாமரை அனைத்துக்கும் சொல்ல -அடியும் அக்தே -சொல்லாமல்-
அநாதரம் தோற்ற தாமரை ஒப்பாது —
தேவர் என்று -சஜாதியன்- ராமன் தன் வாக்கியம்- ஆத்மாநாம் மானுஷம் உங்களில் ஒருவன் சொன்னதை மறந்தேன் —
மத் சித்தா -என்னையே மனத்தில் வைத்து-
மத் கதா பிராணா -சேர்ந்தால் தான் வாழ்வு பிராணனே அவன் -பெண் பட்ட பாடு –
போத எந்த பரஸ்பரம் —
நடந்ததை சொல்லி பிரிவாற்றாமை தீர்க்க -மத் ஏவ சித்தாகா -இவனை மட்டுமே சித்தத்தில் கொண்டு–
பிரமேயம்-மனதுக்கும் ஞானத்துக்கும் அவனே விஷயம் விஷயான்தரம் இன்றி –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -தாமரை- சூரியன் ஆறுகள் கடலை நோக்கி போவது போல —
மிதுனத்தை ஒன்றையே விஷயம் ஆக கொண்ட -மற்றவை செருப்பு குத்த கற்றவோ பாதி —
விவசாரம் போல மற்றவை நினைத்தால் -பதி பத்னி சம்பந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர்
தேதாந்தர பஜனமும் கூடாது -இவ் விஷயம் தவிர வேற ஒன்றையும் –
பிரிய பிரதி பத்த பண்ணும் ஞானமும் விவசாரம்- இல்லாதவர் தான் மத் சிந்த –நித்ய யுக்தன் –
எப் பொழுதும் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டு இருப்பவன் —
அடுத்து பிராணனே பெருமாள் மத் கதா பிராணா–சேர்க்கையே வாழ்வு –ஆவியை அரங்க மாலை–
உச்வாசம் நிச்வாசம் அவனே –கூடின பொழுது சத்தை -பிரியும் பொழுது உயிர் அற்று மோகித்து –
அடுத்து போத எந்த பரஸ்பரம்–புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே —
பேசிக் கொண்டே பிரிவாற்றாமை தவிர்த்து தரித்தல்-
கேட்டுத் தரித்தல் கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே —
பாடித் தரித்தல் –ஞானத்தால் முதல் பத்து பெண் பட்ட பாடு
தாயார் அடுத்தும் இதில் தோழிமார் வார்த்தை கேட்டு -தன் உடைய விருத்த கதனம்-
நடந்த கதை சொல்லியும் தோழிமார் பேசியதை கொண்டு தரித்ததையும் இந்த பத்தில் சொல்கிறாள் –
முதல் பத்து பராசர பாராசர-மக ரிஷிகள் பேச்சு போல தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து மேலே மேலே தொடுப்பவர்கள் —
நடுவில் ஆழ்வார் ரீதி–உள் கலங்கி -சம்ச்லேஷ விஸ்லேஷ சுக துக்கம் கொண்டு –
இதில் பிராட்டி ரீதியாக இருக்கும் –மத்யம ஷட்கம்-அடுத்த பத்து சொல்ல மாட்டார்கள் — கீதை போல —
பிராட்டிமார் தம் அனுபவம் பேசி விருத்த கீர்த்தனம் —
கீழ் தான் சொன்ன ஹிதம் கேட்க்கும் நிலை இல்லை பிடிவாதம் மயங்கி-பெரும் தவத்தவள் என்றாள்-
கொண்டாடி கடக்க -அவன் இவள் ஆற்றாமையில் திருப்தியாக விலக –ஸூவ கிருஷி பலித்தது என்று —
இவளும் மயங்கி இட்ட கால் இட்ட கைகளாய் இருக்க -தோழி துடித்து — பிராட்டிக்கு ஹனுமான் போல –
என்ன பண்ண என்று இவர் துடிக்க -மகா மதி -விதுரன்-மகா மதி–
ராமன் கதை சொல்லி உயிர் பிளைப்பித்தது போல –விருத்தமான சம்ச்லேஷம் —
இயற்க்கை புணர்ச்சி-என்பதால் தான் அங்கு இல்லை என்று -அவன் வந்த படி என்– உன் உடன் கலந்த படி என்–
என்ன சொல்லி போனான் -ஆழ்வாருக்கும் – இவர் அடி பணிந்தாருக்கும் –ஹிதம் சொல்வதே –சொல்ல தொடங்கினாள்–
கையில் வஸ்து கிடைத்தது கடலில் போட்டு தொலைத்தேன்–சீலம் அழகு சுலபன் கண்டு கொண்டு —
அந்யதா பிரதி பத்தி பண்ணி–சங்கம் வெளுப்பு மஞ்சள் நினைப்பது போல குணம்/ வஸ்து மாற்றி விபரீத பிரதி பத்தி-
வந்தவனை ஸ்ரீ மன் நாராயணன் தெரிந்து கொண்டு சௌலப்யம் பரத்வம் என்று நினைத்து –
சிறு பேர் அழைத்தோம் சீறி அருளாதே இறைவா தெரிந்து கொண்டேன்
கோவிந்தா புரியாமால் நாராயணா என்று எல்லாம் கூப்பிட்டேனே சுலபன் ஆழ்ந்த ஞானம் ததீய சேஷத்வம் ஆழ்ந்த ஞானம் —
தலைவி -பேச்சை மாற்றி அவன் -வந்த படி என் கேட்க -சக்ரவர்த்தி தலை மகனாய் தன்னை ஜனக ராஜ குமாரியாய் கொண்டு-
காள மேக -அதை ஸ்படிகமாக ஆக்கும் படியான கருப்பு -மை வண்ணம்-வாமனன் -மற்ற குள்ளர்கள் திரு விக்ரமன் போல மிக்க குள்ளம் போல —
நீர் உண்ட மேகம் ஆக இருந்தாலும் வெளுப்பு சாயை இருக்கும் -அது போல இன்றி -மை வண்ணம்-விசேஷணம்–
நாவினால் நவிற்று -மனசு சகாயம் இன்றி -அது போல திரு மேனியே மை வண்ணம் அதை வெளுப்பு ஆக்கும் –
கண்ணுக்கு விஷயம்- மூக்குக்கு விஷயம் -நறும் –வந்து திறவாய் -கண்// கந்தம் மூக்கு விஷயம் //
சீரார் வளை ஒலி காதுக்கு அங்கு —ஸ்ரம ஹர மணம் கொண்ட குழல்–
சர்வ கந்தனுக்கு மணம் ஊட்டுபவள் -தாப த்ரயம் விரக தாபம் தீர்க்கும் மணம் –கேசவா கிலேச நாசகன்–
நமன் -கேசவன் சொல்ல போது இன்றி வந்தாயே-போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி போற்ற மாட்டேன் —
அருள் என்னும் ஒள் வாள் கொண்டு–அல்ல கேசத்தின் மணம் கொண்டே போக்கி இருப்பான் கிலேசங்களை —
கேசவன் என்று புரிந்து கொள்ளாமல் நாராயணன் என்று நினைத்து இழந்தேன்–பார்வைக்கும் மனசுக்கும் குளிர்ந்து –
குஞ்சி–திரள் திரள் ஆக குழன்று இன்றி மட்டும் இன்றி-
அது குழல்- தனி தனி அலகு-குஞ்சி-கொள்கின்ற கொள் இருளை சுகிர்ந்திட்ட -அன்று மாயன் குழல் -சொல்லிப் பார்த்து மீண்டாரே ஆழ்வார்
என்பதால் இவர் விசேஷணம் இன்றி இங்கு அருளுகிறார்-
இருட்டு அஸ்திரம் சூர்யன் வந்தால் போகும் இதை கொண்டு ஸ்திரம் இது -சதைக ரூப ரூபாய விஷ்ணவ சர்வ விஷ்ணவே–
கண்ணுக்கு மூக்குக்கும் -மனோ கரம் -நித்யமாக இருக்கும் -குடில குந்தளம் கோபிமார்-குழல் பின் தாழ –
பின் எதுக்கு சொல்கிறாய் எப்படிப் பார்த்தாய்–பெருக்கு ஆற்றை எதிர் சரிக்க மாட்டாதது போல –
பரகால நாயகி சௌந்தர்ய அலைகளை கண்டு-லாவண்யம் இல்லை-இது ஒரு தடவை தானே வரும் -அவயவ சோபை-
அலைகள் திக்கு முக்காட வைக்க முகம் திருப்ப –முன்பு லலாட பர்வதம் நெத்தி வரை இது ஹம்சாவளம்பி தோள் வரை –
இவள் இனிமை போக்யத்வம் இருப்பது –குழலின் கருப்பில் திரு முகம் -பார்க்காமல் கண் இருண்டு -இருக்க இரண்டு சந்தரன் போல –
உலக இருட்டுக்கு ஒரு சந்தரன் இங்கு இரண்டும் வேண்டும்
மகர நெடும் குழை காதன்-பிராட்டி தேட போகும் பொழுது சந்த்ரோதயம் உதவினது போல இவை பிரகாசமாய் இருந்தனவாம் –
இலங்கி ஒற்றுமையோடு -அன்யோகம் பர பாகம் வர்ண சேர்க்கை –
திருக் குழலுக்கு இவை ஆபரணமா இவற்றுக்கு திருக் குழல் ஆபரணமா –
நீ பார்க்க இழந்தாய் சொல்லி புரிய வைக்க முடியாது –ஆட-கடல் அசைந்து வந்தால் போல -வந்தார்- இங்கு சேர்த்து —
நின்றார்-அபிமத விஷயம் கண்டால் -உடம்பு நடுங்கும் பொழுது-அதனால் ஆடி நின்றாலும் நிற்காது இவை–
முன்பை காட்டுவது பின்பை காட்டுவது பாடு பட்டு ஆடிக் காட்டினான்-நஞ்சீயர்–
பெண்ணை வசப் படுத்த –கூட யார் வந்தார் கேட்டார்கள் —
எய் வண்ண வெம் சிலையே துணையா–கையும் வில்லும் துணை–
வெப்பம் கக்கும் சிலை–சேர்த்து வைத்தது வில் தானே–வில் இருத்து மெல் இயல் தோய்ந்தான் —
கா புருஷன் -புருஷோத்தமன் அன்றி யாராலும் எடுக்க ஒண்ணாது –மனசு சகாயம் இன்றி தானே எய்யும்–
கையும் வில்லும் பார்த்தே எதிரிகள் மாய்வார்கள் அநு கூலர் வாழ்வார்கள் —
வந்த ஆண் பிள்ளை தனம் நீ காண பெற வில்லை காண்– வீர பத்னி ஆசை படுவது வீர்யத்தில் தானே –
14000 தம் த்ருஷ்ட்வா -அகாசகாய வீரனாய் -சீதை சத்தை பெற்றாள் இதனால் தானே -சிலையே துணையா-
சிலை இலங்கு-சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமாக வந்தார்–வேட்டை வியாஜம் புஷ்பம் பறிக்க இவள்-
இங்கு வந்தது ஏன் என்று கேட்ப்பாருக்கு சாட்சி வில் –இங்கே-நான் நிதி எடுத்த பிரதேசம்-
பிரிந்தாலும் மண்ணின் அடி சுவடு- முகர்ந்து கொண்டே இருக்கலாம்
திரு மணம் கொல்லை-மணவாளன் நிதி திரு மந்த்ரம் நிதி -இலிச்சினை பட நடந்த அடி சுவடு-
இருவராய் வந்தார்- சிலையே சொல்லி -அசங்கதமாய் கையும் வில் போல இளைய பெருமாளும் ஸ்வரூப நிரூபக தர்மம்
ராமோ தஷிண பாஹு இவர்–இலக்குவனை பிரிந்த காலம் இல்லையே —
எதற்கு பிரித்து இருவர்-என்றாள்-வந்த பின்பு அணைத்தாரே-கை வேண்டுமே- வில் வியாஜம் கை லஷ்மணன் –தோள் உடன் வந்தார்–
சம்ச்லேஷத்து வருபவன் படுக்கை உடன் வந்தான்-ஆதி சேஷன்–லஷ்மணனை பிரிந்து தூக்கம் இல்லை–
திய்வம் மானுஷம் கலந்து இருவராய் வந்தார் பரத்வமும் எளிமையும் கலந்து –
கலங்க அது தான் காரணம் நான் பரத்வம் பார்க்க அவன் எளிமை காட்ட வந்தான்
சேஷியாய் வந்தார் அல்லர் -அங்குற்ற்ன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்-
தன் திருவடிகளை என் தலையில் வைக்க வந்தவன் என் காலை தன் தலையில் வைத்தான் —
மாயக் கவியாய் வந்து –பாணி கிரகணம் பண்ணும் பொழுது சேஷித்வம் படுக்கையில் முறை கெட பரி மாறி
வகுத்த ஸ்வாமி யாக வேணும் –ஆசை பட்டு வைத்து கொண்டான் ஸ்வாதந்த்ர்யம் தீங்கு இல்லை
ந சாஸ்திரம் ந க்ரமம் -கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை–
இருவராய்-பர மாத்மா பர கால நாயகி இருவர் மட்டும் ஆகும் படி வந்தார்–
தாம் இருந்த இடத்தில் வந்தார் -பர கத ஸ்வீகாரம்– நாமே பற்றுவது ஸ்வ கத ஸ்வீகாரம் -குரங்கு குரங்கு குட்டி/ பூனை பூனை குட்டி –
வந்தார் அனுக்ரகம் பண்ண வந்தார் –
தாம் இருந்த இடத்தில் மடல் எடுத்து பெரும் படி இருக்க வேண்டி இருக்க இங்கே வந்தார் —
கால் நடையிலும் அவன் நடை அழகை நீங்கள் பார்க்க வில்லை என்கிறாள் —
சுமித்ரை நடக்கிற பெருமாளை லஷ்மணனை பார்க்காதே என்றாள் –
எவ்வாறு நடந்தனை எம்மி ராமாவோ–சதுர கதி -சிம்க வியாக்ர ..ரிஷப சர்ப-ஐந்தும் நம்பெருமாள் இடம் இன்றும் காணலாமே –
தாம் நேர் முகம் பார்ப்பது எப்பொழுது -நான் நினைக்க அவன் எதிர் பார்த்து இருந்தான் —
விபீஷணன் -என்றோ வந்து இருக்க வேண்டும் நம் காவல் சோர்வு என்று பெருமாள், நினைக்க –
எதிர் பார்த்து நின்றார்– கால் வாங்க மாட்டாமல் நின்றார் –ஸ்தாவர பிரதிஷ்டியாக நின்றார் —
பரகால நாயகி தாண்டி மனசு செல்ல முடியாமல்-ஆகாசத்தில் சாலம்பனம் இன்றி நின்றான் விபீஷணன்–
கந்தவ்ய பூமி இல்லாமல் நின்றான் போக்கிடம் இன்றி –ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் நமக்கு —
இங்கு பர கால நாயகி விட்டு போக இடம் –எடுத்து கழிக்க – நம் ஆழ்வார் -ஏக்கத்துடன் நின்றார்–நானும் கண்டேன்–
கை வண்ணம்- சௌந்தர்ய சாகரத்தில் தாம் அகப் பட்ட சுழிகளை சொல்ல ஆரம்பிக்கிறார் —
அவ்வரத்த–கை வாய் கண் அடிகள் -சொல்கிறாள்–தாம் அனுபவித்த வழியை சொல்கிறாள் —
அன்னமும் கேழலும் மீனும் -நாகை-பலன் பாசுரம்-
கை வண்ணம் தாமரை –
பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரகணம் செய்ததை சொல்கிறாள்
கைத் தலம் பற்ற கனா /மந்த்ரம் சொல்லி -இது ஒரு வடிவு அழகு இருந்த படி என் என்று சொல்லி –
தன் செல்லாமை தோற்ற அகலகில்லேன் இறையும் என்கிறான்–
மார்பு அழகு இருந்த படி என் கர்ம ஞான பக்தி யோகம் இருந்த படி என்
அவன் வாய் அழகை தான் பார்த்தேன்–வாய் கொண்டு தாமரை அழகை பேசுவது தெரியும் இங்கோ கமலம் கொண்டு –
வாய் அழகையே பார்த்து கொண்டு இருந்தேன் —விக்கினால் குறையும் தலை கட்டும் கண் அடுத்து —
அநு கூல தர்சனம் வாரி பருக தொண்டை விக்கி மேலே சொல்ல முடியாமல் –
கண்ணால் முடித்தான் –கண் இணையும் அரவிந்தம் –
ஆதரவ சூசுகமே இன் சொல்–தூது செய் கண்கள் தோற்றோம் மட நெஞ்சே- ஜிதந்தே புண்டரீகாட்ஷா –
அங்கு 18 பாசுரம் தாய் சொல்லி பார்க்கிறாள் இவள் சொன்னதை – கமல வண்ணம் நான்குக்கும் -போக்ய அதிசயத்தாலே
இங்கு ஒவ் ஒன்றுக்கும் தனித் தனியாக சொல்கிறாள் —
மூன்று தாமரை சொல்லி அடியும் அக்தே என்கிறாள்–பேதை பாலகன் அதாகும்-இளமை படுத்தின பாடு பயத்தில் –
அங்கு- அக்தே –உபேஷா வசனத்தாலே இதற்க்கு கமலம் சொல்ல முடியாது –அநாதரவு மதிப்பு தோன்றாத படி சொல்கிறாள்
தும் அப்ரமேயச்ய ச ஜிதேந்த்ரஷ்ய ச –தாரை 8 சொல்லி அனைத்துக்கும் ச காரம் சொன்னாள் —
ஒவ் ஒன்றும் பெரிய வைபவம் என்பதால் -மன்னிப்பதற்கு குணம் சொல்லி ச விட்டு இந்த குற்றமும் மன்னிப்பான் என்பதால் ச இங்கு விட்டாள்–
தாமரை வாடும் -முடி சோதி அடி சோதி படி சோதி ஆடையோடும் பல் கலனாய் -நின் கண் பாதம் கை ஒவ்வா —
ஸ்வாமித்வம் அறிந்து திருவடிகளில் விழுந்தவரை திரு கையால் தூக்கி விட்டான்–கண் -புருஷோத்தமன் சூசுகம் —
அதனால் திருவடியில் விழ திருக் கைகளால் தூக்கி விட –சூடகமே பாசுரமும் இது போல —
கேட்டது போல இன்றி சாஷாத் கரித்தது போல இருந்தது
சித்ரம் வடித்து காட்டினது போல கண் முன் நிறுத்தினாய்–அறியாத் தனம்-சொல்லும் படி இல்லை–
அவ் வண்ணதவர்-மிக பெருமை-அ காரம் –
வாசனை பிடித்தோம் –வந்த பிரகாரம் அழகை பேச போமோ–
படி எடுத்து உரைத்து காட்டும் படி அல்ல அவன் படி–கேட்டதற்கு சொன்னேன் -அப் பிரகாரத்தை உடையவர்–அப்பேர் பட்டவன்–
திவளும் வெண்மதி –நின் தாள் நயந்து இருந்த இவளை-சுட்டி காட்டி பிறப்பிடம் –
வெண் மதியம் போல் செழும் கடல் அமுதினில் பிறந்த -குவலயம் கண்ணி -ஒரு அவயவமே –
கொல்லி அம் பாவை அது நீரில் எழுதி இதில் மலையில் –
அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் -மூன்று சொல்லி இவளை-மேன்மை காட்டினால் –
அழகு பெருமை வைபவம் தனி–இங்கு இவள் காட்ட முடியும் இங்கு அவ் காட்ட முடியாது —
நிலைமை கண்டும்–வண்ணம் -பேச வில்லை அப்படி பட்டவர் என்ற அர்த்தம்
கண்டும் -என்னைப் பெற்று தரிப்பான் பேரா விடில் முடிதல் என்கிற ஸ்வாபம்
மித்திரன் வேஷம் கொண்டு வந்தாலும் கை விட மாட்டேன் என்கிற நிலைமை -தெரிந்தும் விட்டேனே —
அழகு மட்டும் இல்லை உள்ளத்திலும் –ரமேய்தி ராம —
அவ் வண்ணதவர்–தெரிந்தும் இழந்தே போனேன் —
அவர் நிலைமை-சொன்னேன்–அவர் வடிவழகு இருந்த படி சீலம் இருந்த படி விவசாயம் இருந்த படி கண்டும்–மூன்றும் இருந்தும் —
சேர வைத்ததே நான் தானே -அது கேட்டு இருந்த படி முன்பு இன்று கண்டு போனேன்–முன்பு கேட்டு போனது போலே இருந்தார்-
தன்னால் சொல்ல முடிய வில்லை– தோழி சொன்ன படி- ஆச்சார்யர் தான் அவனை அவனாக காட்டுவார் —
கண்டும் –உம்மை தொகை–நெடு நாள் காட்ஷி –
ஆத்மா கேட்டு மனனம் பண்ணி அனவரதம் நினைத்து பர பக்தி பர ஞானம் பரம பக்தி நிலை தாண்டி நெடு நாள் சாதனை பண்ணி —
அவனே வந்து அனாயாசமாக கண்ணுக்கு விஷயம் ஆனாலும் விட்டேனே —
தோழி-உன் பொற்றாமரை அடி போற்றும் –பொருள் கேளாய்-கூப்ப்பிட்டு சொல்கிறாள் –
அழகில் மயங்கி -கைங்கர்ய ஸ்ரத்தை பார்த்து மயங்கி இருந்தானாம் – –
தொடை தட்டி எழுப்பி சொல்கிறாள் நீ குற்றேவல் கொள்ளாமல் போகாதே -உயிர் ஆன இதை கேட்க்க வேண்டும் –
அது போல அவரை நான் தேவர் என்று அஞ்சினோம் சொல்ல போவதற்கு முன் —
அவர் வடி வழகு இருந்த படி வந்த வரவு இருந்த படியும் சௌசீல்யம் நின்ற நிலை இருந்த படியும் நீ காண பெற வில்லை-
தோழியாக இருந்தும் இழந்தாயே —
அவரை -நம்மை ஒழிய செல்ல போகாத படி இருந்த அவரை-
நாம்-அவரை ஒழிந்த பொழுது -நாம் -அவரை ஒழிந்த பொழுது அசத்-அசநேவ பவது –
அவரை விட்டு பிரிய முடியாத -நீ என்னை விட்டு இல்லை நானும் உன்னை விட்டு இல்லை-
தோழி-ஆத்மனி பகு வசனம்–துர் அபிமானம்–இல்லை அவனே வந்தானே ராஜ குல மகாத்மயம் –
ஜனக குல சுந்தரி என்ற இறுமாப்பு –தோழியை சேர்த்து நாம்-
கேசவன் தமருக்கு முன் தான் பின்பு தாம் ஆழ்வார் –பாகவதர் சேர்த்தி கிட்டியதால்–
இழந்ததில் இருவரும் சாம்யம் நான் பார்த்து இழந்தேன் நீ பார்க்காமல் இழந்தாய்
தேவர் -தேவ தேவன் என்று பிர மித்து -அதச்மின் தத் புத்தி -அது அல்லா இடத்தில் அந்த புத்தி பண்ணி –
தேவ தேவன் காட்டிக் கொள்ள வில்லை அந்யதா பிர பத்தி –ஆத்மாநாம் மானுஷ்ய -தசரத மகன் -பெருமாள் சொன்னாரே
பவான் நாராயண ஸ்ரீ மான் -பிரம சொல்ல -சஜாதிய விஷயதே விஜாதீய புத்தி பண்ணினே —
அவன் நினைவை விட்டு -பவான் நாராயணோ தேவ -வழி போக்கன் சொன்ன வார்த்தை நம்பி —
அஞ்சினோம்-இறாய்தோம்– விலகிச் சென்றோம் அபய ஸ்தானத்தில் பய புத்தி பண்ணினோமே –
அணுக கிட்ட பற்ற அனுபவம் மிக்கு இருக்கும் விஷயத்தில் விலகினோமே-
நாம் அஞ்சினோம்
ஜனக ராஜன் மகள் சொல்ல வேண்டுமா -ராமன் பார்த்து சொல்ல உண்டு–நாம் சீரர் அருளுவாராம் —
விஸ்லேஷ தசையில் நாம் -மதப்பு -இழவிலும் வாசனை விடாதே –அசோகா வனம் வால்மீகி ஆஸ்ரமம் தனித்து இருந்தாலும் அவள் அவள் தானே –
தோழி உன் சந்நிதி இல்லாததால் அன்றோ நான் இழந்தது —
ஆச்சார்யர் ஸ்தானத்தில் சேர்த்து வைத்து இருப்பாய்- அவன் படியும் என் படியும் அறிந்தவள் அன்றோ
–பாணனார் திண்ணம் இருக்க -நாணுமோ –
என் பிராந்தி போக்கி இருப்பாய்- தேவ தேவன் என்று நினைத்து இருக்க மாட்டேன் -சுலபன் என்று சொல்லி கொடுத்து இருப்பாய்
பரகால தாசர் -ரெங்க ராஜர் இயல் பெயர்–
பெரிய வாச்சான் பிள்ளை கலி கன்றி தாசர் நாம் பிள்ளை திரு நாமம் சூட்டி இருக்கிறார் தன் சிஷ்யருக்கு —
கலி கன்றி தாசர் சொல்லிக் கொள்கிறார் தம்மை–தஜ்ஜால ஆகாரம் சொவ்கந்த்யம் –
மை வண்ண நறும் -சொல்ல வந்தோம் -ஓராண் வழியாக வந்ததை –நாயகன் உடன் பிரிந்து —
பூ கொய்ய- இவள் போக வேட்டை ஆட அவன் வர -உபாயம் பலித்து -சம்ச்லேஷம் கிட்டி- கலந்து பிரிய –
சேர்த்து வைத்த தோழி வந்து கிட்ட -அவளுக்கு பிரவர்தமான படியை சொல்கிறாள் ..
முதல் பத்து தாம் ஆனா-ஆழ்வார் பாசுரம் -மத் சித்தா -திரு மந்த்ரார்தம்–
பக்தி –பிரணவார்தம்– அகார அர்த்தம் — தர்சனம் 7 படிகள்//
நடு பத்தால் மத் பிராணா –தளிர் புரையும் என் தலை மேலவே
ஞானத்தில் தன் பேச்சு
இரண்டாம் பத்தில் என் குடம்கால் இருக்க கில்லாள் என்றும் பெற்றேன் பேச கேளாள் என்றும் திரு தாயார் –
மூன்றாம் பத்தில் என் முன்னே நின்றார் என்றும் பிரேமத்தால் கலங்கி-தோழி அவரை நாம் தேவர் என்று -மகள் பிடி-
அவன் இடம் சித்தம் இமையவன் திரு உருவே என்னும் பொழுது என்றும்
மறவாது என்றும் ஏக சிந்தையாய் வாழலாம் மட நெஞ்சமே /
நெஞ்சு உருக மத் ஏக பிராண -துணை முலை மெல் துளி சோர சொர்கின்றாள்–
போத யந்த பரச்ரம்- துஷ்யந்தச ரமயிதி தோழி–21/ 28 பாசுரம் தோழி கூப்பிட்டு பேசி–அவரை நான் தேவர் என்று அஞ்சினோம் –
இது அன்றோ திரு ஆலி-என்றான் -மகள் பாசுரம் இவை–
முதல் பத்து திரு மந்த்ரம் அர்த்தம் சொல்லி –என் உருவில் நின்ற எந்தை பிரணவ அர்த்தம்–
அகார வாச்யன் ம கார வாக்யத்துக்கு ஸ்வாமி –
தளிர் புரையும் திரு வடிகள் -என் தலை மேலே – நம சப்தம் அர்த்தம்–
மின் உருவாய் தொடக்கி -அனல் உரு இறுதி வரை நாராயண சப்த அர்த்தம்-
நாரங்கள் அவனை தவிர அனைத்தும் -கரந்து எங்கும் பரந்து உளன் —
மின் உரு பின் உரு பொன் உரு -நாராயண சப்த அர்த்தம் –திகழும் சோதி -பரம் சோதி -அனல் உருவில் திகழும் சோதி-
-துவைய அர்த்தம் நடு பத்து –ஸ்ரீமான் வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்றும்–
திரு மாலைப் பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -நாராயண சப்த அர்த்தம் –
கல்யாண குணங்கள் –துன்னு குழல் கரு நிறத்து –அடி இணைகள் கமல வண்ணம் சரண சப்த அர்த்தம்–
சரணம் பிர பதயே — உபாய அத்யாவசியம்-பண்ணுவது –உபாய ஸ்வீகாரம் கடல் வண்ணர் இது செய்தார் பேர் பாடி–செய்கை–
இத்தால் சரண சப்தார்தம் உபாயத்தில் உறுதி பாடு–
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்றும்
பொன் தாமரை கயம் நீராட போனாள்- பிர பத்யே சப்த அர்த்தம்—உபாயம் பற்று வது –உறுதி பூண்டது —
போவேன் போனாள் செயல்பாடு /பாவை மாயன் மொய் அகலத்து உள் இருப்பாள் என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு என்றும் -உத்தர வாக்கியம்
ஸ்ரீ –கைங்கர்யம் சேர்த்தியில்- மிதுனமே பிராப்யம்–
தாமரையாள் –என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார் —
ஸ்ரீ மத் சப்த அர்த்தம்– பாரை உண்டு இத்யாதியாலே உத்தர வாக்ய நாராயண சப்தம்-
பரத்வம் கீழே சௌலப்யம் பற்ற இங்கு கார்யம் செய்ய கைங்கர்யம் கொள்ள பரத்வம்–
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி –
நம சப்தம் -அவன் ஆனந்தத்துக்கு பிர பல விரோதி -/
சரம ஸ்லோக அர்த்தம் கடைசி பத்து –
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குலையும் நான்கு தோளும் என்றும் –
சர்வ தர்மான் பரித் யஜ்ய -கர்ம ஞான பக்தி யோகம் போனது ஐஸ்வர்ய கைவல்யம் -கை வளையும் மேகலை/ இரு கையில் சங்கு இவை நில்லா–
மாம்-அர்த்தம் -சௌலப்யம்- கரு முகிலே ஒப்பர் வண்ணம் என்றும்
ஒரு கையில் சங்கு —கையும் சங்கும்-மாம் என்று தொட்டு உரைத்த சொல்லும் -/
மாம் ஏகம்–சரணம் விரஜ -28/29 பாசுரம் பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டி கொண்டு-கிரியா பதம் செயல்–
அடி நாயேன் நினந்திட்டேன்– மனோ வியாபாரம் சரணா கதி -புத்தி பண்ணுவது தான் —
அஹம் -உயர்த்தி பரத்வம்–மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமாளே அருளாய் என்று –
அஹமின் அர்த்தம் பெரியவன்-ஆஸ்ரித கார்ய முடிக்கும் குணங்கள் இவை–
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -அருளாய் என்னை குறித்து தானே த்வா சப்த அர்த்தம்–
தொல்லை பழ வினையை முதல் அறிய வல்லார் தாமே –மாஸூச -அருளாய் என்பதால் மாஸூச அர்த்தமும் விளங்கும் —
பக்தி –பிரபத்தி–புருஷகாரம் மூன்றும் —
இந்த்ரர்க்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை-காரணம் பொருளை உபாசிக்க வேண்டும் –
பக்தி விதித்து -சர்வம் கல் இதம் பிரம -சரீரம் எல்லாம் -தஜா பிறந்த– தல்ல லயித்த– ததாணு ரஷிக்க படுகிறதோ சாந்த உபாசித —
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -தைல தாரா -துருவ அநு ஸ்மரதி— –
பக்தி விஷயமும் பிரகாரமும் //
அடுத்த பத்து பிர பத்தி -நிவ்ருத்தி மார்க்கம் தாயார் வார்த்தை -அணி அரங்கம் ஆடுதுமோ –
விசாரம்-ஆராய்ந்து பொன் தாமரை கயல் நீராட போனாள் சிந்தித்த உபாயம் அனுஷ்டித்து —
கடைசி பத்து — புருஷ காரம் -அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து கலவி செய்து ததீயர் புருஷ காரமாக பற்றி —
முதல் பத்து-பிரணவ அர்த்தம் –என் உருவில் நின்ற எந்தை என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி–சப்த அர்த்தம்-
வீட்டு இன்பம்-இன்ப பா இன்ப மாரியில் ஆராய்ச்சி மாத்ரு யோனி பரிட்சையோடு ஒக்கும் –
அர்ச்சைக்கு கொண்டார் வீடு இன்பம் இங்கு–அது போல மூன்று உரு பாசுரத்தில் வேற இங்கு வேற —
சேஷி சேஷம் சேஷித்வம் மூன்றும் ஒன்றான படி –பூ ரிக் வேதம் புவ யசுர் வேதம் சுவ சாம வேதம் மூன்றில் மூன்று எடுத்து பிரணவம்–
அடுத்து பத்து நம சப்த அர்த்தம் என் குடன்கால் இருக்க கில்லாள் நிவ்ருத்தி
என் சிறகு கீழ் அடங்கா பெண் பெற்றேன்-என் உடையது அல்ல அவனை சேர்ந்தவள்/
நாராயண சப்த அர்த்தம் மை வண்ண ஆயுத ஆபரண சேர்க்கை பெரும் தவத்தார் முனிவர் சூழ திவ்ய ஆயுதம் கொண்டவன்.
இனி அ காரம் முதல் பத்து -ரஷகத்வம் சொல்லி வெற்புடைய –மன்னர் மாள உலகம் ஆண்டு அநிஷ்டம் தொலைத்து
இஷ்டம் கொடுப்பது சொல்லி —
உ காரம் நெஞ்சு உருகி உண்டு அறியாள் உறக்கம் பேணாள் அந்ய சேஷத்வம் நிவ்ருத்தி சொல்லி –
அவளுக்கே ஆட பட்டாள் என்று சொல்லி —
ம காரம் அவர் நிலைமை கண்டும்-என்றும்
கண்டேன் தோள் நான்கும் என்றும் –
ஞாத்ருத்வம் -பலன்–கர்த்ருத்வம் பலன் -போக்த்ருத்வம் –
கர்த்ருத்வம் போக்த்ருத்வம் போல அன்றி பர தந்திர போக்யதைகள் -மணவாள மா முனிகள்–
மூன்றும் ம காரம் -சேஷத்வம் சேஷ பூதன் என்று தெரிவதே —
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் -ஞான தர்சன பிராப்த அவஸ்தைகள்-அறிகை –
கண்டும்-பிற பாடு –அஞ்சினோம்-கர்த்ருத்வம் -அதன் பின் கண்டேன் கனமகர -போக்த்ருத்வம் —
ஸ்ருங்கார சதகம் -அதர்சனே தர்சனம் -ஒரு தடவை பார்த்தால் போதும் ஆசை த்ருஷ்ட்வா -அணைக்க ஆவல்–
இரண்டற கலக்க வேண்டும் எங்குற்றாய் எம்பெருமான் காண வேண்டிய ஆசை —
ஒரு கால் நாக்கு நினைக்க பிராப்தி -தாகம் கிளப்பி விட பாரதம் அடுத்து காவேரி —
முத்தாரா வன முலையாள் தழுவ கொள்ள -ஆசை பட –யான் காண்பான் –நீ போகல் என்பன்–மூன்றாவது நிலை
ஸ்வரூப ரூப குணம் சொல்லி /
விச்லேஷத்து கலங்கி /
கிலேசம் தீர்ந்து சம்ச்லேஷம் மூன்றாவது பத்தில் சொல்லி -புனல் அரங்கம் ஊர் என்று அனுபவிக்க போனாள் –
பழி சொல்லி மேல் எழுத்து ஒப்புதல் போல தாய் மகள் பண்ணினதை கொண்டாடுகிறாள் —
உபய அனுராகம் இருவரும் கூடி-நங்காய் நாம் குடிக்கு இதுவோ நன்மை–நறையூரும் பாடுவாள் —
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்- அசோக வனத்தில் காத்து இருந்தாள் சீதை போல -ஆறி இருக்க வேண்டும் –
என் சொல்லார் உகவாதவர் -பிடிக்காதவர்கள் குற்றம் சொல்வார் என்று கடிந்து உரைக்க–
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ —
அவனும் இவள் பக்கல் நேர் உடன் வர கூசி-சந்திக்க ஆசை உண்டு- –
இவள் அபிப்ராயம் அறிய தூதுவர் -சு யதன தூத்யம் -பர தூத்யம் வேண்டாம் முதல் கலவி ஆனதால் தானே வந்தான் —
புஷ்பம் பறித்து நடந்து சீதை வர –ஊரை சூழ்ந்த உபவனம் -இவள் பூ கொய்ய போகிறாள் என்று கேட்டு -மனசு தேறி இருக்கிறாள்-
அறிந்து -வேட்டை ஆடும் பாவத்தில் -வில்லை கொண்டு–வில் மட்டுமே ஆபரணம் என்று காட்ட தான் அனைத்தையும் கொண்டாள் கைகேயி- –
கல்விச் சிலையால் காத்தானூர் சிலை அன்றோ கை தலத்து என்கின்றாளால் —
எடுத்தி கட்டின மயிரும் –கட்டின கச்சும் –உடை கோலும் –
முதுகிலே கட்டின அம்புறா துணியும் -கொண்டு -அன்னைமீர்காள் என்னை முனியாதீர் –
நம்பியை நான் கண்ட பின் விடுமினோ என்றும் -செல்கின்றது என் நெஞ்சமே —
அன்னை என் செய்தில் என் -ஊரவர் சொல் கவ்வை எரு இட்டு -கலகற்று மன்றாடி-சுனை ஆடல்- புனல் ஆடல் –
பயலான பேச்சு -மறைத்து பேச-தோழி மார் உடன் -தலை காவல் ஆக இருக்க —
ப்ரஹ்ம அனுபவம் நீராடுதல் –இருவரும் சந்தித்து -அபிப்ராயம் அறிந்து கூட —
எவ்வளவு ஊர் எம்பிரானுக்கு கேட்டதும் புனல் அரங்கம் சொல்லி போக -தோழி கேட்ட நடந்த விருத்தாந்தம் இப் பாட்டில் சொல்கிறாள் —
கைப் பட்ட வஸ்துவை கடலில் தொலைத்தேன் என்கிறாள் —
வந்தார் காண் -வந்த பொழுது இருந்த அமளி காண் —
ஸ்வாபிகமான -வடிவழகு — விசேஷித்த ஒப்பனை அழகு -காவல் வில்–மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம்
கண்டேன் சீலமும் அழகும் கண்டேன் –அந்யதா பிரதி பத்தி அணியனை சேயன் என்ற எளியவனை பரதவன் என்று கொண்டேன் –கடலில் இழந்தேன் –
அத் திரு குழலின் நிறமும் மணமும் இருந்த படி காண் –
-கார் வண்ணம் திரு மேனி -ஸ்படிகம் என்று சொல்லும் படி மை வண்ணம்-அபூர்வ ரூபம் தேஜஸ் ராசி -மூர்தயம் –
இதில் இருந்து உருவான கிளம்பிய மை போல இருக்கை இந்த திரு குழலை பார்த்தவர்களுக்கு –
சர்வமும் பிரகாசமாய் இருக்கும் படி சித்த அஞ்சனமாய் இருக்கும் —
பிங்கல ஜடை தேவன்-ருத்ரன்-ஓர் உருவம் பொன் உருவம் ஓன்று செந்தீ -போல இன்றி -பூசனைக்கு தக்கது இல்லை சடை முடி –
குழல் இருண்டு சுருண்டு அடர்ந்து நெய்த்து நீண்டு கரு நீலம் பாய்ந்தும் கடை சுருண்டும் –
பால சந்தரன் உதித்தால் போல ஸ்ரீ ராமன் தண்ட காரண்யம் நுழைந்தது –
நீல வரை –நீல கடலை கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ-
பாற் கடலை அவன் திரு மேனி நீலமாக ஆக்கினதாம் –ரூபம் மட்டும் இன்று கந்தம் –
மல்லிகை செங்கழுநீர் இத்தால் பூ சூட்டி நறு மணம் ஏற்ற வேண்டாம் -ஸ்வாபாவிக கந்தம் வந்தேறி இல்லை–
திரு மேனி திரு குழல் வேறு படுத்தி காட்ட கந்தம் –சர்வருக்கும் ஸ்ரம ஹரமாய் –கேசவா கிலேச நாசனன்-
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் போகுமே–கேச பாசம் பார்த்தும் விட்டேனே தோழி என்கிறாள்–
கண்ணுக்கும் மூக்குக்கும் நெஞ்சுக்கும் போக்கியம் -சர்வ கந்தனுக்கே கந்தம் கொடுக்கும் —
திரு வடி முதல் திரு முடி இருக்க முதலில் குஞ்சியில் அகப்படும் காரணம்-பதியின் தலை மேல் ஏறி அமர்வாய் –
கல்யாண மந்த்ரம்-குணத்தால் தான் உடலால் இல்லை வசப் படுத்த –
காட்டவே கண்ட –திருப் பாதம் –பேதை குழவி பிடித்து சுவைத்து விண்ணும் பாதக் கமலம் வந்து காணீரே –
சேஷத்வம் அறிந்தவள் -நாற்ற துழாய் முடி நாராயணன்
அம் தண் துழாய் கமழதல் -நேர் பட்டதே -குட்ட நாட்டு திரு புலியூர் -அதனால் முதல் பட்டது -பரத்வ சூசுகம்–
தான் சூடி கொடுத்த புஷ்பத்தின் மணம் இழுத்தது –நறும் குஞ்சி-துன்னு கரு குழல் சொல்லி வாய் வெருவின வாசகம் —
அவயவ சோபை-பாட வந்தவள் -சௌந்தர்யம் அடங்காமல் திரு மேனி வெளி புறப் பட்டு -விஞ்சி தலைக்கு மேல் போனதால்-
அனுபவம் இவள் தலைக்கு மேலும் —
குஞ்சி-குடில குந்தள அலங்கிரிதம் என்றும் –
சுருண்டு-அடர்ந்து இருண்டு சுருண்டு -ஏறிய குஞ்சி-குஞ்சியும் கொண்டையும் குடுமியையும் —
தலை மயிர் நுனி துல்லி குலைந்து நெறி மென் கூந்தல் குலைந்து –
குஞ்சி போன்ற குழல்-குழல் பின் குஞ்சி முன் தூக்கி வைத்தது என்றுமாம் –
குஞ்சி குழல் என்று இருக்கையாலே குஞ்சித்து இருக்கிற குழல்–கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட -அன்று மாயன் குழல் –
ஸ்திரம் நித்யம் -சதை ஏக ரூப ரூபாய–மயிரை ஏற வாரி முடிந்த படியாலே -வெற்றுமை-இருக்காத -படி -பிடரிக்கு குழல்—
மகர குண்டலம் தோளுக்கா காதுக்கா குழல்களுக்க- இல்லை மனசுக்கு தான் கூரத் ஆழ்வான்-
முன் தாழ இருந்தால் மயிர் பட மாய்வாள் என்று முன் நின்று வருத்தாமல் பின் இருந்ததாம்
முக்தன் லஷ்மணன் போல சேஷத்வம் காட்ட பின் தாழ்ந்ததாம்–
தன்னை நோக்கி வரும் நாயகன் -பின் தாழ்ந்த குழலை எப்படி பாடினாள்-
பெரும் காற்றை எதிர் கொள்ள முடியாமல்-அவயவ சோபை அலைகள் -அலை தரங்கம்-சௌந்தர்யா –
நேர் பார்க்க முடியாமல் முகம் திருப்ப –பார்த்து -போக்யதை சர்வ சக்தனாலும் அனுபவிக்க முடியாதே —
வேட்டைக்கு வந்தவன் என்பதால் மிருகம் தேட திரும்பினான்–
களவின் கீழ் வந்தவன் என்பதால் வேற்று மனிசர் வர வில்லை என்று பார்த்தானாம்–நான்கு காரணம் அருளினார்—
அவயவ சோபை ஆபரண சோபை ஆயுத சோபை -அடுத்து -குழல் அழகர் -வாய் அழகர் –
பார்ச்வத்தில் திரு காதுகளில் சாத்திய ஆபரண சோபை–
மகரம் சேர் இரு பாடு இலங்கி ஆட -கை விளக்கு -இரண்டு சந்தரன்-
சீதை பிராட்டி காண சந்தரன் உதித்து திருவடிக்கு உதவ வந்தது போல–
மயூரம் மகரம் ஹம்ச வடிவில் இருக்கும் -பெருமானுக்கு மீன் தானே சேரும் —
காமனார் தாதை என்பதால் அவன் கொடி-மீன்–திரு பாற் கடலில் இருப்பதாலும் பிரதம அவதார சஜாதீயம் என்பதாலும் —
காமன் தோற்று கொடி உடன் பறித்து சாத்தி கொண்டது போல -இரு பாடும் இலங்கி -தன் அழகு காட்ட தானே கை விளக்கு —
மின்னு மா மணி மகர குண்டலங்கள் -ஆட-திரும்பி பார்த்ததாலே -பூர்வ அவர பாகம் இரண்டும் காட்ட இலங்கி –
ஒளி கொண்டு ஆட–காமன் இடத்தில் இருந்த பொழுது ஒளி இன்றி மங்கி இருக்க -உடையவன் இடம் வந்து சேர பெற்றதால் ஒளி விட்டதாம் –
சேர்த்தி அழகை பார்க்க வில்லையே –
கடல் சந்தரன் கொண்டு நடந்து வந்தது போல –
இது எல்லாம் அவளை ஈர்க்க இவன் செய்த முயற்சிகள் என்று நஞ்சீயர் அருளி செய்வர்
அழகையும் ஆபரணமும் காக்க புற காவலும் கொண்டு வந்தான் சிலையே துணையாக –
வெவ்விய சிலை –சர வர்ஷம் வில்லாண்டான் -வாளி மழை பொழிந்த சிலை —
சார்ங்கம் உதைத்த சர மழை–கா புருஷன் எடுக்கிலும் புருஷோத்தமன் ஆகும் —
ஜமதக்னி பரசுராமன் வாங்கி- மழு வாளி சிலை வாங்கி பின்பு புருஷோத்தமன் மாறி ரிஷி புத்திரன் ஆனான்–
எடுத்து எய்யும் அவன் மனசு சக காரியும் வேண்டாம்–கல்வி சிலையால் காத்தானூர் —
அவன் பிடித்த எல்லா வில்லும் பெருமை உடையது –ஆயுதமும் ஆபரணமும் –இரு படை மெய் காட்டு —
சிலை இலங்கு பொன் ஆழி- திண் படை சங்கம் –தோற்றாள் பரகால நாயகி /
ஆழி யொடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் —
சேர்த்தி அழகில் ஆழம் கால் பட்டு அறிவு இழந்தார்கள் -பல நிறம் உடை —
வண்ண வெம் சிலை-கையும் வில்லும் கண்ட உடன் குடல் குழம்பும் படியும் அனுகூலர் வாழும் படியும் –
பிரதி கூலர் மண் உண்ட படி–ஆண் பிள்ளை தனம் நீ காண பெற வில்லையே என்கிறாள்–
தம் த்ருஷ்டா சத்ரு ஹன்தாரம் மக ரிஷீனாம் சுகாவனம் பகுவா வைதேகி பர்தாராம் ஹர்ஷஸ் — சத்தை பெற்றாள் சீதை பிராட்டி
இது ஆனதும்–ஆலிங்கனம் –ராக்ஷஸ வேட்டை ஆடின பெருமாள் யுத்த ஆயாசம் -தீர –
ஒவ்ஷதம் போல திரு மேனி ஆலிங்கனம் -வந்த பெருமாளை இழந்தேனே —
தம்–அந்த ராமனை–
ராஷசர் உள்ள காட்டில் கூட்டி போக மாட்டேன் என்ற ராமனை–
இந்த திருக் கோலம் இழந்து இருப்பேன்–
ஸ்ரீயம் புருஷ விக்ரகம் –பெண்ணை ஆண் உடை உடுத்திய பெண் என்பார் ஜனகன் –
கூட்டி போ -ஆண்கள் இருந்த சபையில் சொன்னதை நெஞ்சில் வைத்து –
வென் நரகம் சேரா வகையேசிலை குனித்தான் -கொன்று முடித்தான்–
தம் நீயே புருஷோத்தமன் அந்த ராமன்–
தம்-ஆதித்ய தேஜஸ் உடைய வீர பாடுக்கு சிறு விரல் காட்ட முதல்வன்–அந்த வீரனை
தம்–விடுதி பூ பட்டு சிவந்த திரு மேனி –
இப் பொழுது சிவந்த படி கண்டு அந்த
தம்- கூசிப் பிடிக்கும் மெல் அடிகள்-அம்பால் சிவந்ததே –
தம்–வீர ஸ்ரீ உடன் சொவ்குமார்யம் சேர்ந்த
தம்–சுகுமாரவ் மகா பலவ-சூர்பணகை–அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-
பெருமைக்கு தக்க தேவி–அவனுக்கே பெருமை கொடுக்கும் தேவி–கண்டாள் த்ருஷ்ட்வா-குளிர்ந்த குளம் போல –
பத்தர் ஆவி-ஆஸ்ரிதர் விரோதிகளே இவனுக்கு விரோதி-ஞானி ஆத்மைவ மே மதம்–என்னது உன்னது ஆவி உன்னது என்னதாவி–
மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும் —
செற்றார் திறல் அழிய சென்று செறு செய்யும்–கண்ணன் விரோதி -இவருக்கு விரோதி -மாற்றார் உனக்கு வழி தொலைந்து –
செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா -பாகவதர் விரோதி அவன் விரோதி–மக ரிஷிகள் இவன் சரீரம் தானே –
வேய் மறு தோள் இணை மெலியுமாலோ- ஆழ்வார் -மெலிந்தால் நீ மெலிந்தது போல் தானே —
பகுவா-சத்தை பெற்றாள் –தர்மீ இருந்தால் தானே தர்மம் இறுப்பு பெரும்–
வைதேகி- ஐயர் வயிற்றில் விதேக ராஜன் -பிறந்ததால் தானே இந்த வாழ்வு கிட்டியது–
விதேக குலம்- இன் நிலத்தில் பிறந்து -வில் உடன் சம்பந்தம்–பெறா பேறு பெற்றேன்–முழுதுமாக தழுவினாள்
தடம் மாறும் வரை திரு முலை தடங்களால் வேது கொடுத்தாள்-ஐந்து பானம் அடித்தாலும் ஐநூறு பானம் அடித்தாலும் ஆலிங்கனம்-
ஐந்து காம பானம் -விரகம் தீரவும் ஆலிங்கனம்–கொடி கொள் கொம்பை தழுவி தான் நிற்கும் பரிஷ்யச்வதே –
ஜீவாத்மாவும் பரமாத்வாவும் சேர்ந்தால் தான் இருவருக்கும் ஸ்வரூப சித்தி —
தம்-சர்வ ஆதாரம்–
அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணிய பின்பு பிராட்டி அவனை குளிர நோக்குவாள்
த்ருஷ்ட்வா–பகுவா-அவனைக் கண்டு தான் சத்தை பெறுவாள் —
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணிய ஆனந்தம் போக்கு வீடு ஆலிங்கனம் -பரம பிரயோஜனம் வீர பத்னி அகப் பட்ட வீரக் கோலம் –
இது போல பெருமாள் கையும் வில்லுமாக வந்தான் என்கிறாள் பர கால நாயகி–
சிலையே துணையா –பிரி நிலை ஏகாரம்–வண்டே கரியாக வந்தான்-போல-
திருப் புல்லாணி எம்பெருமான் பர கால நாயகி–வண்டு பஷ பாதம் தனக்கு ஏற்று சொல்லும்–
போகத்துக்கு வருகிறவர் வேற யாரையும் திரட்டி கொண்டு வராமல் வந்தான்–
இடை கழியில் மூவருடன் நெருக்கு பட பத்னி பரிக்ரமம் உடன் போனது போல இன்றி —
ஆயுத சாலை போல அனைத்தையும் கொண்டு வராமல் வில் ஒன்றே கொண்டு–
அனுபவிக்க வருபவர் தாம்பூலம் புஷ்பம் சந்தனம்–வியாஜ்யம் வேட்டைக்கு -பூர்வ சம்ச்லேஷத்தில் இடறு பல —
வில் இவர்களை முன்பு சேர்த்து வைத்ததால் அதை கொண்டு வந்தான்-
வில் இருத்து மெல் இயல் தோள் தோய்ந்தான்-
க்ருதஞ்ஞ கந்தம் -திருக் கடித் தானமும் என் உடைச் சிந்தையும் —
தாடகை இடையூறு போக்க வந்தது போல–கை பிடித்து போகும் பொழுது பரசுராமர் ரோஷ ராமன்- வந்தது போல–
தனி வில்- 14000 வீரர் உடன் சண்டை போட போனானே -தனி வீரத்துக்கு துணை இது ஓன்று தானே –
என்னைப் பிரிந்து தரிக்க ஊன்றி இருக்க வில்லை கொண்டு வந்தான் —
அமுதம் தனியாக கடைந்தான்–இப் பொழுது துணை வேண்டி இருக்கிறதாம்- துணை பட காரணம் –
பிராவண்யம் அன்பு -வளைந்து விநயம் -குணவத்யம்-நாண்-நல்ல பண்பு உண்டு என்பதால் -குணா விசிஷ்ட வஸ்துகள் சேர்ந்தன –
இங்கே இருவராய் வந்தார் நிதி எடுத்த இடம் -இங்கே -பரி கொடுத்த இடத்திலே திரும்ப கண்டேன் —
கலந்து பிரிந்த பின்பும் மண்ணை முகர்ந்து கொண்டு இருக்கலாம்
சுவடு தெரிந்து -ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் இரு காலும் கொண்டு அங்கு அங்கு திரு இலச்சினை பட நடந்த இங்கு–
கதா புனா ..வஜ்ர லாஞ்சனம் —
அன்றிக்கே திரு மணம் கொல்லை காட்டி-
ஆலி நாட்டுக்கு அரசுக்கு தைவ அரசன் மந்திர அரசை கொடுத்த இடம்–
அஸ்மின் சிலா ராமன் சீதை இருந்த பாறை காட்டி -கோதாவரி நதி நீச்சல் போட்டி -லஷ்மணன் இடம் காட்டியது போலே காட்டினான் —
குகன் பரதனுக்கு காட்டிய இடம்–எ தத் -பெருமாளும் பிராட்டியும் சயனித்த இடம்- அது போலே அவனும் இவளும் கலந்த இடம் காட்டுகிறாள் தோழிக்கு ..
இங்கே-ஒரு பரம பதம் இல்லை அயோதியை இல்லை திரு பாற் கடல் இல்லை திரு மலை இல்லை கோவில் இல்லை
இவ் இடம் பண்ணின பாக்கியம் காண் —
அயோத்யா வாசிகள் வெளி ஏறி–பிறந்து வளர்ந்த இடம் விட்டு -கைகேயி ஆளட்டும் கை விடப் பட்டது இது கைக் கொள்ளப் பட்டது —
காடு முடி சூடினது போல ஆனந்தம் அவன் இருக்கும் சித்ர கூடமே நாடு- குபேரன் தோட்டம் போல –இது பாக்கியம் பண்ணினது போல —
இங்கே வந்தார்- வந்ததே செய்கை -வேற என்ன செய்ய வேண்டும் –வருகையே பிராப்யம்–
கை விட்டுப் போகை அன்றி -மதுரை-கோகுலம்-த்வாரகை- குருஷேத்ரம் -போனான் அங்கு –
வந்தார்- வர போகார் என்ற அறிவிப்பு இன்றி வந்தான்-
செம் கண் சிறு சிறிதே -தரிக்க அவகாசம் கொடுத்து -வர வில்லை-
வந்தார்-வரவாறு ஓன்று இலையாதால் வாழ்வு இனிதாய் —
பிரார்த்திக்காமல் வந்தான் -நடுவே வந்து உய்ய கொள்கின்ற நாதன்–
இதற்க்கு அடியாக பிரவர்த்தி ஒன்றும் இன்றி -போது எல்லாம் –நின் பொன் அடி புனைய மாட்டேன் –போனார் சப்தம் இன்றி –
திரு ஆணை நின் ஆணை இனி நான் போகல் ஒட்டேன்
ஒன்றும் மையல் செய்யேல் என்றும் -தடுத்தும் வளைத்தும் கொள்ளலாம் படி —
பிரிந்து கலங்கி இன்றி கலந்து மகிழ்ந்து –
இருவராய் வந்தார்-
இரண்டு மேனியாய்- ஸ்வாபம் இரண்டு-புது கணிப்பும் /
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து ஒரு பெண் ஆக்கை ஆப்புண்டான் -இரண்டு ஆகாரமும் —
நான் செத்து வா -நடாதூர் அம்மாள்- அடியேன்–
இருவராய்-
பகிர்ந்து இன்றி ஏக ஷணத்தில் உத் பத்தி விநாசம் இன்றி –
போக ஏகாந்தம் கூட யாரை கூட்டி வரவில்லை-
ஜனக திரு மகள் திருக் கல்யாணம் கன்னிகைகள் பலர் தமையன் மார் கூட வந்தது போல அன்றி —
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-அசத் இன்றி அஞ்ஞானம் இன்றி அந்தம் இன்றி –
மூவர் இல்லை-ஒருவருக்கு தான் மூன்று விசேஷணம் —
விசேஷ்யம் ப்ரஹ்மம் ஓன்று –நீராய் நிலனாய்– பின்ன பிரவர்த்தி -பஹுஸ்யாம்–
16 வித இருவராய் –
அவயவ ஆபரண சோபை-
இருவராய்
மை வண்ண நறும் குஞ்சி மகர குண்டலம்/வீர சிருங்காரம் தோற்ற -சிலையே துணை -நடந்தார் ஸ்ருங்காரம்–
ஸ்ரீ ராமன் நடக்கிறதைப் பார்த்து கைங்கர்யம் இழக்காதே சுமத்ரை /
பத்தி உலாத்தல் -வா போ வந்து போ -தசரதன் பிரணயிதவம் தைர்யம்-
என் முன்னே வந்தார் நின்றார் –விநயம் தூதன் –
கை வண்ணம் தாமரை வாய் கமலம் -கண் இணையும்–அடியும் அக்தே தூது செய் கண்கள் /
இரண்டு நினைவு பெற்றால் உஜ்ஜீவிக்கையும் பெறாத பொழுது முடிகை /
பரத்வம் சௌலப்யம் –
அவ் வண்ணத்தவர் -சுலபம் அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்-
பரத்வம் /மானுஷவ் தேவ ரூபம்-
சிலையே துணை மனுஷ பாவம் கண் இணையும் அரவிந்தம் புண்டரீகாட்ஷம் ஏவம் அஷணீ
சிங்கமும் யானையும் நடப்பது போலே வந்தார் —
ராஜா பெருமை தோற்ற –வலி மிக்க சீயம் வேழம் போல —
புலி ஏறு கோபம் கர்வம் கொண்டு /
உபாயம் உபேயம் தாமாக வந்தார் //
ஸ்வரூபத்தால் ஸ்வதந்த்ரனாயும் ஸ்வாபத்தாலே-குணத்தாலே பர தந்த்ராயும் வந்தார் //
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இல்லை //
சீதை நானும் தண்ணீர் இன்றி இருக்காத மீன் போல –லஷ்மணன் /
தான் உண்டு என்றால் நான் ஆகி இல்லை என்றால் நான் இல்லை ஆகார துவயம்/
ராம லஷ்மணராய் வந்தார்–சிலையே துணையா- கையில் வில் போல நிரூபக தர்மம்
இவரும் நிழல் போல தான் கொல்லை அரக்கியை மூக்கு அறித்திட்ட குமரனார் சொல்லும் போய் ஆனால் —
இருவராய்- அணைக்கும் தோளைப் போல ராமஸ்ய தஷனோ பாஹு –
படுக்கை உடன் வந்தான் —
சேஷி யாய் வந்தார் அல்லர் சேஷனாய் வந்தார் அல்லர் –
உபயமுமாய் ஆள் கொள்வான் வந்து என் உயிர் உண்ட மாயன்–
பாணிக்ரஹணம் பண்ணும் பொழுது சேஷயாய் இருக்கையும் படுக்கையில் முறை கெட பரி மாறுவதும் —
போகத்தில் தட்டு மாறும் சீலம் வகுத்த ஸ்வாமி-
காளி தாசன்- அரசனை உதைத்த காலுக்கு சலங்கை -குழந்தை–
நர நாராயணர் போல ஆச்சர்ய சிஷ்யர் பாவம் –
அதவா
சப்தம் நியமித்து இருவராய் ஆம் படி அவரும் தானும் ஆகும் படி தான் வந்தார் –
அவர் இருந்த இடத்துக்கு நான் மடல் எடுத்து அடைய இருக்க -அவனே வந்தான் –
நால் அடியிலும் வந்த அழகை நீ காணப் பெறவில்லையே –நடை சக்கரவத்தி –
இவை எல்லாம் நம் பெருமாள் பக்கல் காணலாம் ஐந்து நடை –
என் முன்னே நின்றான்–சிறப்பித்து சொல்ல காரணம்
பெரிய துவரை உடன் வந்தவர் -கடல் கண்டு தேங்கிய திருவடி போல் -கண்டு மேல் இட மாட்டாமல் கால் வாங்கி நின்றார் —
பாகவதனை தாண்ட மாட்டாமல்-நாம் முகம் பார்ப்பது என்றோ என்று யான் இருக்க எதிர் பாராமல் வந்து நின்றான்–
பிராட்டியைப் பிரித்த பாவி தம்பி விபீஷணன் ஆதரத்துடன் வர -தாம் இவனை காக்க வைத்தது –
ஸ்ரீ இலங்கை வந்தே ரஷித்து இருக்க வேண்டுமே –
திரு உள்ளம் நொந்து கண்களால் குளிர நோக்கி மயில் இறகால் தடவி விட்டது போல —
இருத்தும் வியந்து –கருத்தை உற வீற்று இருந்தான் கண்டு கொண்டே –
விடாமல் பார்த்து கொண்டு இருக்க குரங்கையே அன்யோன்யம் பெருமாள் பார்த்து இருக்க ஆழ்வாரை பார்த்து இருக்க கேட்கவேண்டுமா –
மாசம் உபவாசிக்கு மருந்து போல முன்னே நின்றான்–
இருந்தது கிடந்தது நடந்தது எல்லாம் காட்டும் முன் நின்று காட்டினான்-பொருக்க பொருக்கக் குடுத்தான் —
அழைப்பன் திரு வேம்கடத்தானை காண -நான் முகன் திரு அந்தாதி —தஸ்மின் த்ருஷ்டே பரா அபரே –அஞ்ஞானம் விலக –
ராம திவாகரன் -விரக தாபம் தொலைய -காணும் அளவும் போய் -மடல் எடுப்பேன்-
ஆசைப் பட்ட அபிநிவேசம் தீரும் அளவும் என் முன்னே நின்றார்–
பாவி நீ ன்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -ஆழ்வார்
வாயைத் திறக்க முடிய வில்லை பாபம் போனதே முன் நின்றதும்–பசியன் சோறு இட்டால் போல –
நித்யர் முன்னே நின்றான் அல்லன் -என் முன்னே –
ஒரு நாள் காண வாராயே –யார் உடைய முன்னே நிற்க கூடியவர் -சதா பச்யந்தி சூர்ய -என் முன்னே நின்றார்-
மாலா காரர் குடிசை வந்த கண்ணன்– நித்யர் அனைவருக்கும் கொடுக்கும் அனுபவம் நான் ஒருத்தியே அனுபவிக்கும் படி —
விபீஷணனை -70 லஷம் வானர சைன்யம் காட்டிய அன்பை அவன் இடம் காட்டு சுக்ரீவன் –
எனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ–
அருளாழி அம்மானை ஒரு நாள் புள் கடவ வீதி வழியே கேட்டாரே ஆழ்வாரும் —
இந்த்ரியங்களுக்கு அப்பால் பட்டவன் -கண்ணுக்கு இலக்காகி நின்றான் —
ஸ்ருதி ஸ்ம்ருதி இரண்டும் கண்கள் -தெரியாதவன் கண் இழந்தவன்
இரண்டு கண்ணும் இல்லாத எனக்கு கண்ணையும் கொடுத்து காட்சியும் கொடுத்தானே —
பிரணயித்வாலே தான் முன்னே நின்றான்-ஸ்வரூபம் பார்த்து நான் நிற்க கடவ —
காட் கரையிலே போகத்தில் தட்டு மாறும் சீலம்–தன கப்பிலே கிடக்கும் –
மங்களா சாசானம் ஸ்வரூப விருத்தமா என்னில்-ப்ரேமம் விஞ்சி–
வெட்டி விரோதி என்று இருப்பேனோ–என்று பார்க்க நின்றான்-
இன்று வந்து உகந்து ஆலிங்கனம் கொள்வேனோ
ஒரு நாள் வருதியேல் சினம் தீர்வன் நானே -குலசேகர ஆழ்வார் –எம்பார் அரையர் இடம்
காலால் உதைத்து கையால் அடித்தால் ஆனந்தம் முகம் திருப்புதலே என்று காட்டி கொடுத்தாரே –முன் நின்ற சாகசம்–
அர்ச்சிராதி மார்க்கம் பாரிப்பு திரு வேம்கட யாத்ரை பாரிப்பு போல அகரூர் பாவம் போல —
அவன் பக்கம் கோலி வைத்த பாடு படுத்த பாரிப்பு -உள்ளுவார் உள்ளத்து அறியும் விலவற சிரித்திடேனே –
சாகாச செயல் தானே -அவளும் நின் ஆகத்து இருப்பதும் தெரிந்தும் ஆசை விடாளால் போல —
தீனன் ஆக நின்றான் -நிலை பார்த்து ஒன்றும் பண்ண முடியாத நிலை–
அகிஞ்சனன் அனந்யகதி யாக -என் மனசும் இரங்கும் படி கல்லும் கரையும் படி–
என்ன வேஷம் சாகாசம் தைர்யம் —
ஸ்தாவர பிரதிஷ்டையாக மரம் போல நின்றான் —
ஸ்வேத கேது பிரமம் தெரியாமல் நின்ற படி-
ஆய்ச்சியாகிய அன்னையால் -அஞ்சிய நோக்கும் –மேலே என்ன பண்ணினான்—
மனமும் கண்ணும் முன்னே ஓடி போயின திரு மந்த்ரம் கொடுத்து போகம் கேட்டு நின்றான்
இப் பொழுது பிச்சை எடுத்தான் -கை பார்த்தேன் கை வண்ணம் பார்த்தேனே–
மேல் இருந்த நிறத்தில் அகப் பட்டேன்–அதில் மனசை பரி கொடுத்தேன் –
நெஞ்சுக்குள் போக முடிய வில்லை–துஷ்க்ருதம் க்ருதவான் ராம –
ஸ்ரீ ராமன் இன்னும் உயிர் உடன் சீதை பிராட்டி பிரிந்து இருக்கிறாரே -திரு வடி நினைவு –
இந்த நினைவு வரத் தானே மோதிரம் கொடுத்தார் இவர் இடம்–கை பார்த்ததே திருப்தி –
உள்ளே -ஸ்வரூபம் பார்க்க வேண்டாம் ரூபமே உத்தேசம் ஆழ்வார் நிலை–
கையிலே அகப் பட்டேன் -அழகிலும் அவன் இடத்திலும் அகப் பட்டேன் —
சிவந்து செய்ய கை- ராகம்-அனுராகை ஆனேன்–காதல் சிகப்பை கண்டே தோற்றேன்–
திரு வண் வண்டூர் செய்ய கண் –செய்ய வாய் செய்ய கால் ..திருந்த கண்டே –வண்ணம் -நிறம், பிரகாரம் அமைப்பு –
அமைப்பு-அல்லி போலே உள்ளம் கையும் -நாளம் போல கை கறுத்தும் -தாது போல ரேகை–இதழ்கள் போல விரல்கள் –
விலஷணமான கந்தம் மிருதுவான ஸ்பர்சமும் வெளி பக்கம் கொஞ்சம் கறுத்தும்–
தாமரை பிராட்டிக்கு ஆசனம்-பத்மாசினி-
கை -சகல பல பிரதன்-இதனால் தான் தேவேந்தரன் மூன்று உலகும் பெற்று போனான் –
கை வண்ணம் தாமரை- அலம் புரிந்த நெடும் தடக் கை–பின்பு செய்தது என் -கேட்டதும் –
நான் விரோத வசனம் பண்ணாமல் இருந்த நிலை கண்டு–அனுமதி யாகக் கொண்டு–
பேசாமல் இருந்ததை பாதி இசைவாகக் கொண்டு–அபேஷை யுக்திகளை பண்ண ஆரம்பித்தான் —
பேச ஆரம்பித்ததும் வாய் கமலம் போலும் -மூடி இருந்த செம் தாமரை விரிய –
வெளுத்து இருந்தது சம்மதம் என்று கொண்டு சிவந்தது சூர்யன் கண்டால் தாமரை மலர்வது போல பர கால நாயகி கண்டு விரிய –
அதற்கும் தோற்று இருந்த -அடுத்து நிலை-
அபூர்வமாக தூது செய் கண்கள் சேஷ்ட்டை பண்ண –கண் ஜாடை காட்ட -திரு வாய் மொழி 9-9-9 தூது செய் கண்கள் –
கண் இணையும் அரவிந்தம்–கை இணை சொல்ல வில்லை–கைகள் தனி தனியே ஸ்வதந்திர கரணங்கள்–
கண்கள் அப்படி இல்லையே -ஏக த்ரவ்யம்–இரண்டும் சேர்ந்து பர கல நாயகியை நோக்க -பதில் சொல்லாமல் இருக்க —
கிட்டே வர -அடியும் அக்தே நில தாமரை அலர்ந்தால் போல
-அன்றிக்கே- –
காலைப் பிடிப்பதாக அபிநயனம் -அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழி –கர பத்மம் –
அம்மி போலே மனம் திடம் படுத்திக்க சொல்ல-
கடினமான அம்மி மிதிக்காமல் மிருதுவான கை தாமரை இருந்தவாறு -என்-என்கிறாள் –
அனுஷ்டானம் மந்த்ரம் சொல்ல வாய் பார்த்தேன் வாய் கமலம்-
இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் -நாகை அழகியார் பாசுரம்–
மதுகர சங்காரா வண்டுகள் ரீங்கரிக்கும் -வாய் மந்த்ரம் ஒலியும்–காலே தொடக்கி
குழல் அளவும் பார்த்தார் -திரு கண்களை பார்த்தேன்- அடுத்து தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழி நான் —
நடக்க -கைப் பிடித்து மாறி மாறி இட்ட திரு வடிகள் சப்த அடி விஷ்ணு தொடரட்டும் —
உடன் படிக்கை-அக்நி–தாமரை பூத்தது போல இருந்தன —
அன்றிக்கே–
அஞ்சலி பண்ணுவது -காலைப் பிடிப்பதாக -அனுபவ தசையில்-ஏகாந்தமாக –
மிருதுவாக தாமரை மேல் காலை வைப்பாரோ -கூசும் படி இருந்தது —
கொப்பூழில் எழு கமல பூ அழகர்–வார்த்தைக்கும் வாய்க்கும் மணம் உண்டு–
அலை எறியும் திரு கண்கள் —
வேட்டைக்கு போகும் மரவடியை கழற்ற அடியும் அக்தே -சௌவ்குமார்யம் வைத்தே அர்த்தம்
அபயம் சர்வ பூபேப்யோ விரதம்–எனக்கு உகக்கும் என்று கையிலே கட்டிய கங்கணம் பக்த தீஷை–
காட்டினான்-கை வண்ணம் தாமரை–விரோதி நிரசன் திரு கை மர்தவமாய் இருக்க கண்டேன்–
கட்டின காப்ப்புக்கு ஈடாக –நயாமி பரமாம் கதிம் –மாஸூச -சத்ய பிரமாணம் அகம் ஸ்மராமி மத் பக்தம் –
சில வார்த்தைகளையும் சொல்ல வாய் கமலம் —
சஷுசா – சபரி திரு கண்களால் நோக்க பெற்றேன்- நட்புடன் குளிர நோக்குவார் பரதன் பரத்வாஜர் இடம் கேட்டான்- –
குளிரப் பார்த்த திரு கண்களை-கண் இணையும் அரவிந்தம்–
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் -திருப் பொலிந்த சேவடி –
பிரம ருத்ரர் ஆர்த்திக்கும் -பரிஷித் கரி கட்டை மாற்றி கொடுத்த திருவடிகள் —
தளிர் புரையும் திரு வடிகள் —வாசனை புனுகு ஊற விட்டது போல திருவடி தேன் –
தேனே மலரும் திரு பாதம்–நடந்து வந்தும் ரட்ஷித்தான் -அடியும் அக்தே –
பிர பதனம் சரண் -ஒரு தடவை பிர பத்தி போதும் என்கிறான்- செய்யேல் தீ வினை —
ஆஸ்ரிதர் முகம் கண்டு மலர்ந்த திரு கை தாமரை–
மெய்ம்மை பெரு வார்த்தை -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் என்றும்
தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்றும் வார்த்தை அருளி செய்ய வாய்க்கு வேலி கட்டினது போல –
அமர்த்தம் வராமல் இருக்க -வாய் கமலம் -என்னையும் நோக்கி என் -ஞான பக்தி வைராக்கியம் -நோக்கி –
பூர்ண கடாஷம் -ஆகாசத்தில் தாமரை போல கண் இணையும் அரவிந்தம் —
துணை மேல் துளி சோர சோர்ந்து இருந்து அவன் ஊரை நோக்கி போக கிலேசித்து விழ –
இருவராய் வந்து என் முன்னே நின்றார் –
பாளம் போன நிலத்தில் ஒரு பாட்டம் மழை பெய்தால் போல –
அமிர்தம் போல -நடந்து -அடியும் அக்தே –
இந்தளத்தில் தாமரை பூத்தது போல அக்நி நடுவில் தாமரை விரக அக்நி முன் அடி இணைகள் ..
கைப் பிடித்து இது ஒரு அழகு இருந்த படி என் வாய் -சொல்லி தலை கட்ட முடியாமல் கண்ணால் ஜாடை –
கண் இணையும் அரவிந்தம் -ஆதர ஸூசகம் பிரகாசிக்கும் படி கண்ணால் கட்டி நின்றான் —
திருவடிகளில் விழ -ஜிதந்தே புண்டரீகாஷ -தோற்று –
கண்ணும் வாய் -கமலம் ஒரு தடவை 18 பாசுரம் சொல்லி போக்யத்வம் வளர்ந்து –
அங்கு தாய் பேச்சு இது இவள் பேச்சு -அடியும் தாமரை சொல்லாமல் அக்தே –
உபேஷா வசனம் அநாதரவு தோற்ற ஒவ்வாத திருஷ்டாந்தம் என்று அருளினார்
நீ சொல்வதை கேட்டு நாங்கள் நேராக பார்த்தால் போலே அருளினாயே –
சொல்லி முடிக்க முடியாது –அவ் வண்ணத்தவர்–அவரையும் வந்த பிரகாரத்தையும் –
படி எடுத்து உரைத்து காட்டும் படி அல்ல அவன் படி–
ப்ருகு வருணன்- வேதம் சொல்ல முயலலாம்-வேதாஹா மேதம் புருஷம் மகாந்தம் –அஹம் வேதமி மகாத்மானாம் —
சொல்லி முடிக்க முடியாது –
ஊரார் உமக்கு அறிய கூறுவேன் -பராத் பரம் மகதோ மகாந்தம் -நேதி நேதி–
யஸ்ய அமதம் தஸ்ய மதம்-தெரிந்து கொள்ள முடியாது என்பவன் அறிந்தவன் ஆகிறான் –
மதம் யஸ்ய ந வேதச்ய -அறியாதவன் –யதோ வாச்ய நிவர்த்தந்தே –
அறிந்தன வேத அரும் பொருள் என்றும் -ஊற்றம் உடையாய் பெரியாய்– என்றும்
சாஸ்திர யோநித்வாத் –பன்னலார் பயிலும் பரனே –அவ் வண்ணத்தவர் நிலைமை–
அவர் -நிலைமைக்கும்-ஸ்வாபம் குணம் இவற்றுக்கும் – அவருக்கும் விசேஷணம் —
ஸ்வரூப ரூப குணம் விபூதி -அவனைப் பற்றி–சௌலப்யம் குறிக்கும் -வந்து நின்றானே-சௌந்தர்யம் காட்டி –
பிரசாத பரமாவ் நாதவ் மம- மாலா காரர்-நாதன் பரத்வம் கழற்ற முடியாது –நிலைமை –
மற்ற நான்கு -சௌசீல்யம்= வந்து -இங்கே -வாத்சல்யம் காட்டி –என் முன்னே வந்து -கருணை –நின்றார் —
சௌந்தர்யம் கண்டும் —
சௌலப்யம் நான்காகக் காட்டி–குணம் கண்ணுக்கு விஷயமா -தோழி கேட்டாள்–
உள் கண்ணால் ஞான சாஷ்த் காரம் -புரிந்து கொண்டதை சொல்கிறாள்-
பர ப்ரஹ்மம் இஷத பார்த்தார் சங்கல்பித்துகொண்டான் –அனுபவ அலை போல —
அனைத்திலும் பெருமை கொண்டவன்-
விதியினால் பெடை மணக்கும் -மென் நடைய அன்னங்காள்-கூடி இருக்க ஆழ்வார் பிரிந்து இருக்க –
சுக்ரீவன் துயர் தீர்த்த பின் தான் சீதை உடன் கூடினான்
அன்னமே நீ அறியாமல் சேர்ந்து இருக்கிறீரே –
கண்டு வைத்தும் அழகு சீலம் உறுதி பாடி கண்டும் -முன்பு உன் இடம் கேட்டு அறிந்ததை கண்டேன் –
நெடு காலம் சாதனம் பண்ணி காணக் கூடிய வகுத்த விஷயம் கண்டேன் —
கண்டும் தெளிய கில்லீர் –அதற்க்கு அடி என் -அவரை–பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன்
சேயன் அனியன் சிந்தைக்கு கோசரம் அல்லன் –பரத்வமும் ஸ்வாபம் நினைந்து மயங்கினேன்
அவன் சௌலப்யம் காட்ட வந்த பொழுதும் —
தோழி -அவனை கிட்டு விக்க துணை-பிரியும் பொழுது நடந்தவை சொல்லி தரிக்க துணை -சர்வ வித சகாயம்-
அறியாதன அறிவித்து விரோதி கழித்து சேர்ப்பித்து இருக்கும் நாள் விருத்த கீர்த்தனம் பண்ணி ஆச்சார்யர்–
திரு நாகை பாசுரம் -பொன் இவர் மேனி மரகதத்தின் –ஹாரம் -இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் —
அவர் -போக்யதை -என்னையும் நோக்கி -நாயக அனுராகம் சொல்லி –
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் பய ஸ்தானம் சொல்லி
அச்சோ ஒருவர் அழகிய வா -பயந்தும் விட முடியாமல் ஆசையும் சொல்லி –
ஸ்வாபதேசம்-ஆத்ம ஸ்வரூபம் அல்குல் பாரதந்த்ர்யம் கொங்கை பக்தி –
கை முதல் இருக்கா பார்த்து மோஷம்-நிர்ஹேதுகம் தானே கிடைப்பது —
அதனால் தாயார் இருக்க -சொல்லாமல் உபாய அத்யாவசயம் சொல்ல –தோழி –
நான் கண்ட வடி அழகு வந்த வரவு நின்ற நிலை நீ காணப் பெற வில்லை–
அவரை நாம் -என்னை விட்டு பிரிந்தால் இருக்க முடியாத –
அவனை விட்டு பிரிந்தால் இருக்க முடியாத நாம்-ஆற்றாமை உடைய நாம் –
விரக தாபம் கொண்டு துடித்து செல்வர் பெரியார் -சிறு மனுசர்/
அம்மான் ஆழி பிரான் அவன் எவ் இடத்தான் யான் யார்–
திர்யக் ஸ்தாவர -அரச மரம் மேரு மலை போலே இருக்கிறேன் —
வராக நிருசிம்க ராம கிருஷ்ணன் என்று எல்லாம் வந்தும் -தேவர் என்று அஞ்சினோம்
மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவர் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
தேவ–சப்தம் -விளை யாட்டு உடையவன்– வெற்றி வாய்ப்பு– விவகாரன்– ஒளி படைத்தவன்–ஸ்தோதரம் பண்ணத் தகுந்தவன் —
மோத ஆனந்தம் –மத செருக்கு– சோபனம்– காந்தி ஒளி படைத்தவன்—
கதி புகல் இடம்//-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்க ஆதி லீலே —
அலகிலா விளை யாட்டு உடையவன்–இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன் என்றும்
வீட்டை பண்ணி விளையாடும் —
ஜிதந்தே புண்டரீகாட்ஷா–ஜிதம் பாகவதா ஜகத் -ஜாம்பவான் வாக்கியம் -சத்யான் லோகன் ஜயத் –
தோற்றோம் மட நெஞ்சம் -வெற்றி கொள்பவன் என்றும் –விவகாரம் வார்த்தை சொல்லுதல்-
பீதக ஆடை பிரானார் பிரம குருவாகி வந்து என்றும் பாஞ்சராத்ரம் கொடுத்தான் –
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் –
மறை உரைத்த பெருமாள் ஹம்ச ஹயக்ரீவ -அன்னமாய் அரு மறை பயந்தான்-
வேத வைதிக பிரவசனம் –விவகாரம் வழக்கு -ஈச்வரோஹம் /போஹி/ சித்த /பலவான் சுஹி /
வாதாட வருபவர் அசுரர்–பதிம் விஸ்வஸ்ய என்றும் பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரோம்-
ஒளி துதி–தேஜஸ் பதார்த்தம் கடன் வாங்கி -நாராயண பரம் ஜோதி –
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த -சோதி வெள்ளத்தில் எழுந்த உரு –
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது –
ஸ்துதி ஸ்தோதரம் பண்ணத் தக்கவன் -ஸ்துத-ஏத்த எள் உலகும் ஏத்த
ஏத்த எங்கு எய்தும் -ஸ்தவ்ய ஸ்தவ பிரிய –தீவு காந்தி -தேஜஸ்
பிராப்யம் கதி -புகல் இடம் உபாயம் மாம் விரஜ
நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும் அறிந்து அடிகை–இறைவா நீ தாராய் பறை என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்றும் —
தேவ தாது அர்த்தம் இவை அருளுகிறார் —
எல்லாம் பூர்ணம் இவன் இடம் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –ந துத் சமசக -மேன்மை நினைத்தேன் -இழந்தேன்
பவான் நாரயனோ தேவா-பிரமன் முதலானோர் சொல்ல ஆத்மாநாம் மானுஷம் மன்யே -தசரதன் பிள்ளை- என்றானே —
ஏழு வயசு கண்ணன் சோலை சூழ் -குன்று எடுத்த பின் -உங்களில் ஒருவன் என்றானே–
ஆயர் அஞ்ச அஞ்சா முன் -அஹம் வோ பாந்தவோ ஜாதக – -அப்பன் தீ மழை காத்துகுன்றம் எடுத்தானே —
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபர் உரை —
அகலில் அகலும் அணுகில் அணுகும் -வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் —
மண்ணிலே மனிசராய் இருக்க ஆசை பட்டவரை தேவர் என்று பழி இட்டேனே —
சஜாதி விஷயத்தை விஜாய புத்தி பண்ணினேனே —
அஞ்சினோம்–ப்ரியம் உடன் அவன் உடன் போக வில்லை –ப்ரீதி வேண்டும் பீதி கூடாது —
அபாய ஸ்தானத்தில் பயம் கொண்டேனே –பயம் பயானி அபகராணி-பிரக லாதன்-
நாம் அஞ்சினோம் -ஜனக ராஜன் திரு மகள் வாக்கியம் என்பார் நஞ்சீயர்–
ராஜ குல மகாத்மியம் பன்மையில் பேசுகிறாள் -இழவில் வந்தாலும் வாசனை விடாது —
பீஷாச்மாத்.. துர் மானிகள் அஞ்சும் இடத்தில் நாம் அஞ்சினோம்-
சமுத்ரம் துரும்பு தள்ளும் மீன் திமிங்கல அடங்கி இருப்பதால் தள்ளாது –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு–அபிமான பங்கமாய் அடிமை தனம் பட்டால் பயம் வேண்டாமே —
நின் பிரிவினும் சுடுமோ காடு உன் கூட இருப்பதே சொர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை பிராட்டி –
ராமன் தோள் நிழல் ஒதுங்கி பயம் இன்றி காட்டில் இருந்தாள் பிராட்டி –
உபய விபூதிக்கும் நிழல் கொடுக்கிறவன் தோள் கிட்டியும் அஞ்சினேனே —
பஜதாம் ப்ரீதி பூர்வகம் புத்தி யோகம் ததாமி -கீதை-புத்தி கொடுத்ததும்
வயலாலி மணவாளன் தான் அவரை போய் தேவர் என்று அஞ்சினோம் –
அறியாதன அறிவித்த அத்தா –தோழி உன் சந்நிதி இல்லை நாம் அஞ்சினோம்
ஆச்சார்யர் சந்நிதி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது –அவன் படியையும் நாம் படியையும் அறிந்து சேர்ப்பவர்
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-