பெருமாள் திருமொழி பாசுரங்கள்-3-5/6/7/8/3-9- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

3-5–தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்

நீதி யாரொடும் கூடுவதில்லை யான்

ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை

பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5

———————————————–

அவனையே உபாயமாக பற்றி கைங்கர்யமே புருஷார்த்தமாக கொள்வதே – தீதில்-தோஷம் இல்லாத நல் நெறி

-துவயம் -அர்த்தம் -இதில் சொல்கிறார்/சாதனம் பண்ணுவதை யாத்ரையாக கொண்டவர் /

அம் தாமரை -பேதை மா மண வாளன்-பித்தன்-பிராட்டி சம்பந்தம் சொல்லி /அல்லாது செய்-கண்ட புருஷார்தங்களுக்கு கண்ட உபாயம் செய்பவர்-அநீதியார் இல்லை– நீதியார்

– இதையே நீதியாக  கொண்டு செய்கிறார்கள் /ஒரு கால் நிற்ப-ஒண் மதியும்-அவன் அபிப்ராயத்தால் ஆழ்வார் /படிகளவாக நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று நினையாமல்-.

அர்ஜுனன் மூன்று சோகம்-தேவ அசுர விபாகம் ஜனித்த சோகம் -இரண்டாவது -தேய்வீ சம்பத் ஆஸூரி சம்பத் சொன்னது போல/

சாஸ்திர வழிகள் இருக்க /வாய்மை மரபு காத்து மன் உயிர் துறந்த தந்தை தசரதர்க்கு மகன் -பரதன் முன் தோன்றினையே-வாலி

/போதானய விருத்தி கிரந்தம்-முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்

/ அல்லாது செய்-நீதி யார்-/சூத்திர புருஷார்தங்களையே கொள்ள விரதம் கொண்டு -சீக்கிரம் பலம் கொடுக்க /நான் கொல்கிறேன்-அர்ஜுனன்-இரண்டும் தப்பு-

கர்துர்த்வம் இல்லை கொல்லவும் முடியாது இரண்டு தப்பான வார்த்தை சொல்லி 700 ச்லோஹம் பெற்றானே /

/ஆதி -சகல லோகங்களுக்கும் காரணம் -அவனை தானே உபாசிக்க வேண்டும்

/ஆயன்- கிருஷ்ணன்-சுலபன் /அரங்கன்–பின்னானார்  வணங்கும் சோதி //ஆயனே ஆதி/

பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள்/மா/பேதையின் இடம் மணவாளனுக்கு பித்து போல மிதுனத்தில் ஆழ்வாருக்கு பித்து

/சாச்த்ரவேதம் முக் குணத்தவர்க்கும் உண்டு சத்வ குணத்தவருக்கு சொன்னதை மட்டும் கொள்ள வேண்டும்

-லோக ஷேமார்தமாக தான் செய்யணும் மற்ற சாதனங்களில் இழவே வேணும் /தவறுகளில் ருசி உடன் செய்பவர்கள் பலர்/பிரமாணங்களால் உபாச்ய வஸ்து என்று போற்ற படுபவன் -ஆதி/

 ஒன்றும் தேவும் ..மற்று யாரும் இல்லாத அன்று-ஆதி-அநாதி-தனக்கு ஆதி அற்றவன்
-தனக்கு காரணம் இல்லை-வேர் முதல் வித்து– ஆங்கே விளக்கினில் விதியை காண்பார்-த்யான மார்க்கம்–  அரிது என்று ஒண்ணாத படி அவதரித்த ஆயன்
-சுலபன் -அரங்கன்-தீர்த்தம் பிரசாதித்து -சாஸ்வதன் ஸ்திரன் -கருட வாகனும்  நிற்க -சேட்டை தன் மடி செல்வம் பார்த்து இருகின்றீர்களே/
பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் -ஆசை நாயகன்-ஓர் அடி இவன் புகுந்தால் -அத்தை குவாலாக்கி-ஒன்றை பத்தாக்கி  நடாத்தி கொண்டு போகும்
-நெஞ்சிலே புண் படும் படி -இவன் பண்ணின அபதாரத்தை -அவன் காணாமல் இருக்கும் படி பண்ணும் புருஷ கார பூதை/கமல -கொடுத்து வாங்குபவள்//
நிழல் போல்வனர் பூமி பிராட்டியும் நீளா தேவியும்அபராதம் பண்ணினவர்களை ஷமித்து விடு-ஸ்ரீ தேவி/அபராதம் பனினவரே இல்லை-பூ தேவி அபராதம் என்பதே ஓன்று இல்லை-நீளா தேவி
/என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்//மா-பெருமை என்று கொண்டு-மிக பெருமை படைத்த மணவாளன்
-பிராட்டி சேர்ந்ததால் வந்த பெருமை/சீதை உடன் சேர்ந்த ராமன் தேஜஸ் -மாரீசன், விபீஷணன் எல்லாரும் சொன்னது போல
/சுவையன் திருவின் மணாளன் /விஷ்ணு சித்தன கல்ப வல்லி-ரெங்கராஜ சந்தன மர கொடி
/தேரணி அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-இளம் தேவி இல்லை-பெருமை உடைய-தக்க-பெருமையை சேர்க்கும் – தேவி/
/மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடை குட்டியும் ஆக பிறந்து புகழும் ஆக்கி-
சீதை ஜனக குல கீர்த்தி-ஆக்கமும் ஆக்கி- பரதன் அயோதியை ஆட்சி பெருக்கி-
அம சிறை அறுத்தார் -கண்ணன் தந்தை கால் விலங்கு அறுத்து -மூன்றையும் ஆழ்வார் பண்ணினாரே
———————————————————————————————————————————
தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
குற்றமற்ற நல்வழி
இருக்கச் செய்தே
அவ்வழியிலே போகாமல்
தேவதாந்தரங்களை பற்றுகை -தீய நெறி
எம்பெருமானை ஸ்வயம் பிரயோஜனமாக பற்றுகை நல் நெறி
ஐஸ்வர்யம் போன்ற சூத்திர பிரயோஜனங்களுக்காக எம்பெருமானை
பற்றுகை தீமையோடு கலசிய நல்ல நெறி
அநந்ய பிரயோஜனமாக
எம்பெருமானைப் பற்றுகை ஆகிய
பரம சுத்த மார்க்கத்தை விட்டு
ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்கள் உடன்
எனக்குப் பொருந்த மாட்டாது -என்கிறார்நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
நல்வழிக்கு எதிர்தட்டானதையே
செய்வதை வ்ரதமாகக் கொண்டு
பிராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை

ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
உலகங்கட்கு எல்லாம் முதல்வனாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய்
திருவவதரித்து சர்வ சுலபனாய்
அழகிய தாமரைப் பூவில்
திருவவதரித்த

பேதை மா மணவாளன் தன் பித்தனே
பெரிய பிராட்டியின்
வல்லபனான
ஸ்ரீ ரெங்க நாதன் திறத்தில்
மோஹம் கொண்டிரா நின்றேன்

——————————————————————————————————————————————————————————–

3-6–எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்

தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்

எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6

——————————————————————–

என்னை போல அடிமை செய்யாதவர் /இதுவே இவருக்கு ஸ்வாபம்-வேல் வெட்டி பிள்ளை வார்த்தை

-சத் கார்ய யோக்யர்கள்/அடுத்த நிலை சக வாச யோக்யர்கள்/ சதா அனுபவ யோக்யர்கள் .

/வார்தா மாலை/ சத் கரிக்கலாம்- ரூப மந்திர அபிமான பிரதானம்-வெளி வேஷம் உச்சாரண- திரு மந்த்ரம் சொல்லி கொண்டு அர்த்தம் புரியாமல்/

/அபிமான -ஸ்ரீ வைஷ்ணவர்-பர துக்கம் சகியாமல் துர் அபிமானத்துக்கு பிரதானம்/மித்ர பாவனத்தில் -சத் காரம் பண்ணலாம்/

ஞான அனுஷ்டானம் அங்கீகாரம் பிரதானம்/ சேர்ந்து வாழலாம்

/ அடுத்து ஆர்த்தி அபிநிவேசம் அபி ருசி பிரதானர் துடிப்பு-பிரிவை தாங்காமல்/அபிநிவேசம் பெரிய விருப்பம் சேர்ந்து இருக்க /

அபி ருசி-கைங்கர்ய ஈடு பாடு -சதா அனுபவ யோக்யர்கள்//ஆள வந்தார்-சேர்ந்து கூட பிரதஷினம் -பண்ண மாட்டாராம்

-பிராப்யாந்தர சாதனாந்தர சம்பந்தம்/ பராசர பட்டரே  யாரையோ பார்த்து ஆண்டாள் ஸ்ரீ பாத தூளி கொள்ள சொன்னாள்/

//பெரிய கோவில் நாராயண -கூரத் ஆழ்வானை சந்தித்தாயோ –

மற்றவை எல்லாம் புல்லுக்கு சமானம் /நித்யர்க்கு நிர்வாகன்

/ நமக்கும் எளியவன் -உபகாரகன்-எக் காலத்திலும் /என் யாத்திரையே யாத்ரையை இல்லாதவரை நாக்கு வளைத்து இருப்பேன்-கூடலன்/பற்று அற்று இருப்பேன் /இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்றும் வழுவிலா அடிமை செய்ய வேண்டும்  என்றும் இல்லாதவர்

/லோக யாத்ரையில் அருசி/ கைங்கர்யத்தில் ருசி உடையவர்/பிரம்மாதி சம்பத்து கொடுத்தாலும் -இவை வேண்டும்-இல்லை என்றால் புல்லுக்கு சமம்/

தம் பிரான்-அயர்வறும் அமரர்களுக்கு அதிபதி/அந்த அனுபவம் ஸ்ரீ ரெங்க வாசிகளுக்கு கொடுத்து கொண்டு சேவை சாதிக்கிறார்-

அரங்க நகர்  எம் பிரான் –அளப்பரிய ஆர் அமுதை அரங்க மேவ அந்தணனை –

அமிர்த சாகரம் அது/அதுவே அரங்கன் /இச் செயலுக்கு என்றும் தான் பித்தனே என்கிறார் /

———————————————————————————————————————-

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
என்னைப் போலே அநந்ய பிரயோஜனராய்
இராதவர்களோடு
நான் கூட மாட்டேன்

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலான
போகங்களையும்
ஒரு புருஷார்த்தமாக
எண்ண மாட்டேன்
ப்ரஹ்மாதி சம்பத்தையும் தருணமாக மதிப்பெண்

தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
நித்ய சூரிகளுக்கு ஸ்வாமி யாய்
கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற

எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
பெரிய பெருமாள் விஷயத்திலே
எப்போதும் பித்தனாகா நின்றேன்

சம்சாரிகளும் இழவாமைக்காக
கோயிலிலே வந்து கண் வளரும் நீர்மையை
அனுசந்தித்து எத்திறம் -என்று
மொஹிப்பதே எனக்கு தொழில் என்கிறார்-

——————————————————————————————

3-7-எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்

சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்

அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7

————————————————–

நல்லது தீயது விவேகித்து -ஞானம் கொடுத்து – தீயாரோடு விலக்க உறுதி கொடுத்து

-சித்தம்-மனசு–கண்களால் குளிர நோக்கி இதை அருளினான்-செம்கண்  மால்//

எத் -திறம்-சூத்திர புருஷார்தங்களுக்கு – யாரொடும்–மனிசர் -பிரயோஜனம் இன்றியும் கூடுவது இல்லை/சேர்ந்து நாசம் அடையும் மனசை கொடுக்க விலை

/ தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி கொடுத்தாயே/

/துயர் அடி தொழுது எழு-தொழுதால் எழலாம்/ மற்றவர் கூட இருந்தால்  விழலாம்/

/மனசு தான் நண்பன் விரோதி-பற்று பொறுத்து/மனசை நல் வழி படுத்தினான்//செம்கண் மால்-இதை கொண்டு தான் தவிர்த்தான் தம் பக்கம் திருப்ப-

ஜிதந்தே புண்டரீகாஷன்-கிம் அர்த்தம் புண்டரீ காட்ஷா  விதுர போஜன /ச்ரமணி-சபரி- விதுர ரிஷி பத்தினிகளை பூதராக்கின புண்டரீகாஷனின்  நெடு நோக்கு /

நடுவே வந்து உய்ய கொண்ட நாதன்/கமல கண் என்ற நெடும் கயிறு /

/அகப்பட்டேன் வாசு தேவன் வலையுள்ளே -கண் என்ற வலை -அரையருக்கு எம்பாரே  நீர் இருந்தீரோ/

/கொண்டி மாட்டுக்கு தடி கட்டி விடுவாரை போல/விஷயாந்தரங்களில் மேயாமல் இருக்க

/அத்தனே- நியமிக்கும் ஸ்வாமி/அரங்கா -சொத்து பக்கமே ஸ்வாமி

/வயல் வரப்பாடிலே கிடக்கிறான்/இந்த விஷயங்களில் போகாமல் தவிர்த்த உபகாரகன்-எம்பிரான்/

/இதரார்ரோடு கூடாத தன்மை -நான் பிரயத்தனம் பட வில்லை /பட்டது அவன்-கிருபை அடியால்/பக்தி -ஈஸ்பர பிரசாத அடி தான் இதனால் அது/ இல்லை/

/ ஈஸ்வர பிராசாத ஜன்யங்கள் //அதுவும் அவனது இன் அருளே பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் /

மாய பேச்சில் மயங்க வில்லை/அபாகவனோடு சம்பாஷிக்க அபிமத விஷய ஆசை லபிக்கலாம் என்றாலும் நாக்கு வளைப்பேன் -பற்று அற்று இருப்போம்/

மிளகு ஆழ்வான்-ஆத்மா குண சம்பத்து உண்டு -அபாகவாத சதஸ்-மேல் உத்தரியம் போட்டு குதித்தார்/

/கூரத் ஆழ்வான் கோவிலில் போக வில்லை-ஆத்ம குண்ம் பார்த்து ராமானுஜர் சம்பந்தம்

-அபாகவதன் இடம் ஒதுங்கினார்//சேர்த்தி உயர்ந்தது என்றாலும் அத்தையும் காற் கொடை கொள்ளும் படி ஆனேன்

/கருணாம்ருதம்-சரணம் பண்ணினவனுக்கு-அன்பு பார்வை-ஆசை காட்டி கொண்டான் என்னை

/ பிள்ளை உறங்கா வல்லி தாசரை பெரிய பெருமாள்  கண் அழகால் தானே ஸ்வாமி கொண்டார் /

கரிய வாகி புடை பெயர்ந்த நீண்ட அப் பெரிய வாய கண்களை திரு பாண் ஆழ்வாருக்கு காட்டிய மாதிரி காட்டி அருள வேண்டும் என்று பிரார்த்தித்து தாசரை ஆள் கொண்டாரே –

காண்பன உரைப்பன மற்று ஓன்று இன்றி கண்ணனையே கண்டு உரைத்த பாண் பெருமாள்

-ஞான மார்க்கத்தால் திருத்த வில்லை அழகை காட்டி தான் -தன் வியாமோகம் ஆசையை காட்டுகிறான்

/மீன் தம் குட்டிகளை பார்வையாலே தான் வளர்க்கும்/அத்தனே-ஸ்வாமி-சொத்தை விடாமல் கொண்டான் /

  பொங்கோதம் சூழ்ந்த -செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்/இதர விஷய பிராவண்யம் ஒழித்த உபகாரன் /
ஸ்வா தந்த்ர்யம் காட்டாமல் விலக்காமை தான்  வேண்டும் –
ஸ்வா தந்த்ரயத்தால் ஈஸ்வர அபிமானம் ஒழிந்தவனுக்கு ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்
———————————————————————————-
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
எந்த விஷயத்திலும்
கண்ட பேர்களோடு
சேர்ந்து கேட்டுப் போவதற்கு
உறுப்பானசித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
நெஞ்சை நீக்கி அருளினான்
புண்டரீ காஷனான எம்பெருமான்
ஆதலால்

அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
ஸ்வாமியே
ஸ்ரீ ரெங்க நாதனே
என்று கூவா நின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே
அவன் என்னை ஒரு தடவை குளிரக் கடாஷித்த
மாத்ரத்திலே
அபாகவதர் சஹவாசம் வெறுக்கும்
இந்த பாக்கியம் வாய்த்தது என்பதை
காட்டி அருள செங்கன் மால் என்கிறார்-

——————————————————————————-

  3-8-பேயரே எனக்கு யாவரும் யானுமோர்

பேயனே எவர்க்கும் இது பேசி என்?

ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

——————————————————

நிலை நில்லா போகங்களை விரும்பும் உலகத்தார் யாவரும்-.ஆத்ம இன்பம் விரும்பிய என்னை-சாஸ்த்ரிகள், வர்ண தர்மிகள், இருகரையர்கள்,

-கப்பலில் இருந்து கரை பார்த்து கூவி கொள்ளும் காலம் குருகாதோ என்று எதிர் பார்த்து இருக்கிறேன்//

துறை வேற -பர கத ச்வீகாரம் -அநித்தியம் .அசத்தியம் -அவர்களுக்கு /மேலான புருஷார்த்தம் விரும்பும் எனக்கு

-பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே- பேச வேண்டாம்//பேயர்கள் என்னை தங்களோடு சேர்க்காமல் வைத்ததே உபகாரம் பிரதம பர்வத்தில் எல்லோரும் விட்டாலும்

-நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாய் கருதுவர்–அவர்கள் கை விட்டத்தால் அன்னையாய் அத்தனாய் என்னை ஆள் கொண்டார் ஆழ்வார்/ .

.அஸ்திரமாய்  பிராக்ருத போகங்களை -வாய் அவனை அல்லது வாழ்த்தாது —

சகல சஷுசா விஷயம் ஆனானே எல்லோருக்கும் /ஊன கண்ணுக்கும் விஷயம் ஆனானே

/கரந்த பாலுள் நெய்யே போல் /காரணம்-கார்யம்//கேட்டு மனனம் த்யானம் நிதித்யாசம்  பண்ணி அறியலாம்/

அவதாரத்துக்கு பிறபட்டார் இழவோடே தலை கட்டாத படி கோவிலிலே கண் வளர்கிற /

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆனான் கற்றினம் மேய்த்து உகந்த காளை/

நாட்டினான் தெய்வம்  நல் அருள் தன்னாலே காட்டினேன் திரு அரங்கம்

-காட்டி கொண்டு கிடக்கிறான்/அடிக்கு கெட கூப்பிடாது நின்றேன்-கடல் வண்ணாகதருகின்றேன் அளித்து எனக்கு அருள்/

/பகவானுக்கே பித்தாய் போய் ஒழிந்தேன்-நமக்கு ஆகார் –

/ஒரு விஷயத்தில் இழிந்தான் என்று மற்றவர் விட்டார்கள்-அதுவே சந்தோஷம் என்கிறார்/

அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் என்னை .

.முத்தே மணி மாணிக்கமே  எங்கனம் விடுகேனோ-திரு மங்கை ஆழ்வார் /

வார் புனல் –பேர் பல சொல்லி பிதற்றி .உலோகர் சிரிக்க -நின்று ஆடி -ஆழ்வார்/

ராவணன் கண்ணில் விபீஷணன் பேய் /பிரமம் அறிந்தவன் அறியாதவர் உடன் சேருவதோ உணவு அருந்துவது வாழ்வதோ கூடாது

வாசனை பட்டால் தர்மம் கெடும்/பயஸ்-பால்- மது  விற்ப்பவன் கையில்  இருந்தால் மது தானே

————————————————————————————————————–

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
இவ்வுலகத்தார் அடங்கலும்
என் வரையில் பைத்தியக்காரர்கள் தான்
அவர்களைக் காட்டில் வி லஷணனான நானும்

பேயனே எவர்க்கும் இது பேசி என்?
எவர்களுக்கும்
ஒரு பைத்திய காரன் தான்
இவ்விஷயத்தை விரிவாகச் சொல்வதனால்
எண்ண பிரயோஜனம்

ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
ஸ்ரீ கிருஷ்ணனே
ஸ்ரீ ரெங்க நாதனே
என்று பகவன் திரு நாமங்களை சொல்லி
கூப்பிடா நின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே

—————————————————————————————-

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

———————————–

/கொங்கர் கோன் -மேற்கு திசைக்கு நிர்வாகர்/விண்ணும் ஆழ்வார் மண்ணுள்ளே –

தனி பித்தன் பெரும் பித்தன் /தலைவனும் தனி தன்மையும்-ராஜாவாக இருந்து அவன இடம் ஈடு பட்டாரே

/ஏதம்-இடையூறு  அவனை அனுபவிக்க /தங்கு சிந்தை- அழகிய மணவாளன் -அவ் அருகு கந்தவ்ய பூமி இல்லை என்பதால்-அடி கீழ் அமர்ந்து

-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்/இவரோபாதி பிதர் ஆனார்  வேறு யாரும் இல்லை

/ஆகாசம் சமுத்ரம் ராம ராவண யுத்தம் போல/ சிலரால் மீட்க்க ஒண்ணாத பித்தன்

/அபாகவாத ஸ்பர்சம் ஆதல்/பகவத் பிராவண்யா குறைதல்-இவற்றால் வரும் துக்கம்-ஏதம்-சம்சாரத்தில் இங்கு இல்லை

/இவை கற்றவர்களுக்கு -இப் பிரசங்கம் உள்ள தேசத்தில் -பரி த்யாஜ்யம்-அவைஷ்ணவ சேர்க்கையும் அபிமானமும் -பெரியார்கள் சம்பந்தம் வேண்டும்

———————————————————–

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
அழகிய திருக் கைகளிலே
திரு வாழி ஆழ்வானை
ஏந்தி உள்ள
ஸ்ரீ ரெங்க நாதன் உடைய
திருவடிகளில்

தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
பொருந்திய மனம் உடையவராய்
லோக வி லஷணராய்
பெரிய பித்தராய்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
சேர தேசத்துக்கு தலைவரான
குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த
இப்பாசுரங்களை

இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே
இவ்விபூதியிலே
ஓத வல்லவர்களுக்கு
பகவத் அனுபவத்துக்கு ஒரு வித
இடையூறும் உண்டாக மாட்டாது-

 

————————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்.

குலசேகர ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: