பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-3-1/2/3/3-4/- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

அவதாரிகை–

இதில் ஆழ்வார் நிர்வேதம்-சம்சாரத்தில்- – அருளுகிறார்

எண்ணாத மானிடத்தை எண்ணாது இருப்பதே நலம்/

ஆழ்வார்களையும் அருளி செயலையும் தாழ்வாக நினைத்து இருப்பார்காள் -அவர் பால் செல்ல கூசித்து இரு/ மானிடர் அல்லர் என் மனத்தே வைத்தேனே

/பித்தர் என பிறர் கூற-/ததீய சேஷத்வம் வேண்டும் -இவர்கள் இடத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்

/முன்பில் அதுக்கு-தேட்டறும் திறல்  சங்கல்பம் -அனுகூல்ய சங்கல்பம்-சங்கல்பம் பண்ணி அவர்கள் கைங்கர்யம் கிட்ட காத்து இருக்க வேண்டும்

//-இதில்  வர்ஜித்தே நிற்க வேண்டும் /பிரதி கூல்ய வர்ஜனம்- செய்து ஆக வேண்டும்/எல்லாம் பகவத் விபூதி தான் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன்

-குறிப்பு -தலை அறுப்பதே /கொண்ட சீற்றம் ஓன்று உண்டு-/சீறி அருளாதே-செற்றார் திறல் அழிய -பகவான் விரோதிகளை சாஸ்திரம் விரோதிகளை//

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா-இதில் கண்ணனுக்கு விரோதி-கோப  குமாரர்களுக்கு விரோதிசாத்விகர் உடன் சகவாசம் வேண்டும்

/-நாஸ்திகர் /ஆஸ்திகர் /ஆஸ்திக நாஸ்திகர் -மூவரில் இருவரை விட வேண்டும்

/முன்னவரும் பின்னவரும் மூர்கர் என்று விட்டு நடுவில் சொன்ன ஆஸ்திகரை  பற்ற சொன்னாரே மா முனிகள் /

முக் குணத்தில் இரண்டினை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று /ஞான கார்யம் ஆஸ்திகர் கூட சேர்த்தல்

//மனசில் அழுக்கு போக ரஜோ தமஸ் விட்டு சதவிக குணம் வளர்க்க வேண்டும்/

/விலகினவர்- பிரகலாதன் விபீஷணன்–அப்ராப்தம் ஆபாச பந்துகள் இருந்து விலகி இருக்க வேண்டும்/

கப்பல் மூழ்கினால் குதித்து தெப்பம் பிடித்து தப்புவது போல விலகி இருக்க வேண்டும்

/ திரு மாலையிலும் உபதேசிக்க 4 -14 வரை திரு மாலையில் 15 -24 உபகார பரம்பரை சொல்லி தான் தப்பிக்க விலகினார் /

அநந்தன் எனக்குள்ளும் நீக்கமற இருந்து இருக்கிறான் –அகம் சர்வம் -மயி சர்வம் நானே எல்லாம் உறுதி சொல்கிறான் பிரகலாதன்

/-கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும்-அந்தர்யாமி போல தன்னே பாவம் ஆழ்வார்/தன் தகப்பனார் செய்த தவறை மன்னிக்க சொன்னான் பிரகலாதன்-தொடர்ந்து

-விரோதம் குறையாதது கண்டு-பிரதி கூல்யத்தில் விஞ்சினதால் தான்- தூணிலும் உளன் என்று காட்டி கொடுத்தானே–

இனி நம்மால் தாங்காது என்று-உபதேசித்து பார்கிறான்-பிரதி நிதி மூலம்

-ஆழ்வார்களை வைத்து நம் இடம் ஹனுமான் போல்வாரை வைத்து ராவணன் இடம்/சரீரம் போனால் தான் பாபம் நிற்கும்

விபீஷணனும்  சொல்லி பார்த்தான்-குலத்துக்கு கோடரி காம்பு-உதைத்தான் பிடித்தது பேச பலர் இருப்பார்கள்/அப்ரியம் சொல்லவும் கேட்க்கவும் ஆள் இல்லை /

கர்ணன் மாற வில்லை தவறு தான் .பஞ்ச பாண்டவர்களும் வாளா இருந்தார்கள் திரௌபதி கூப்பிட்டதும் நேராக வந்து இருந்தால் முதலில் பஞ்ச பாண்டவர்கள் தலை போய் இருக்கும்

-அதனால் தான் வரவில்லை/சாமான்ய தர்மம் வேற விசேஷ தர்மம் வேற-சாஸ்திரம்-கண்ணனுக்கு அடிமை என்ற ஞானம் இல்லை கர்ணனுக்கு /

ஹிதம் சொல்லி- நெருப்பு பட்ட இடத்தில் விளக்க ஒண்ணாது பொழுது தன்னை கொண்டு தான் தப்பினால் போல விலகினார்கள் பிரக லாதனும் விபீஷணனும்/

பிராதி கூல்யம்-தேக ஆத்மா அபிமானிகள் -நாம் அனைவரும் இதில் சேருவோமே-/

பகவானுக்கு அனுகூல்யமாக இருக்க மாட்டார்கள் இவர்கள்/நாஸ்திகம் வளரும் இவர் கூட சேர்ந்தால்/விஷய பிரணவராய் இருப்பதும் கூடாது

/அப்படி பட்டவர் உடன் சகவாசம் கூடாது

தேகத்தை விட ஆத்மா என்ற ஓன்று இருக்கிறது என்று நினைப்பவர்கள் –

ஆத்மாவின்  உள்ளே பரமாத்மா உண்டு என்று அறியாதவர்கள்- கூட சகவாசம் கூடாது

/கூசி விலகி போக வேண்டும் இப்படி இருக்கும் மூவர் இடம் இருந்து /இப் படி இருப்பார்கள் உடன் பொருந்த மாட்டேன் என்று இந்த பதிகத்தில் அருளுகிறார்

————————————————————————————————————

3-1–மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்

வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்

ஐயனே அரங்கா என்று அழைகின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1

————————————————————————————————————

பற்றிலன் ஈசனும் -பற்றை கொண்டு இருக்கிறான்-முற்றவும் நின்றனன் பற்று இலனாய்  முற்றிலும் அடங்கே -ஆழ்வார்

-வாரி கொண்டு -உன்னை விழுங்குவன் காண்மின் என்ற ஆர்வுற்ற -ஆச்சர்யாராய் எதிர் பார்க்க வேண்டுமே அவனை பற்ற

–பாரித்த ஆழ்வாரை -வாரி கொண்டு முற்றும் பருகினான்

/பயன் நன்றாக ..முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு  அன்பையே- முயல தான் முடியும் –அவன் பித்து அதிகம்/

/வையகத்தோர் உடன் கூட மாட்டேன் என்கிறார் இதில்/மஞ்சா குரோசா -கட்டில் மேல் இருப்பவர் சப்தம் கங்கையில் இடை சேரி-கங்கை கரையில் /

/நிலை அற்ற உலக வாழ்க்கை -மெய்யில் வாழ்க்கை /நிலை அற்றது என்று புரிந்து கொண்டால் மெய் வாழ்வு ஆகி விடும்/

ஐயனே-சகல வித பந்து/அரங்கா -என்று அழைகின்றேன் என் தன் மாலுக்கே மையல் கொண்டு ஒழிந்தேன் /

அவன் தான் முதலில் மையல் கொண்டான்/ திரு கமல பாதம் வந்து பின்பு அரை சிவந்த ஆடை மேல் சென்றது இவர் சிந்தை/

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்/ புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய்// வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்

/ ஏனமாய்  -வந்து அருளி என் நெஞ்சம் புகுந்த வானவர் கொழுந்தே ..உனக்கு ஒரு கைம்மாறு அறியேன்

-பக்தி பண்ணுவது சொரூபம் அடி படை தேவை இது கைம்மாறு இல்லை/மெய்யில் வாழ்க்கை-சர்வ சூன்யம் -மாயா வாதம் இல்லை

-கொள்கை வேற மதம் வேற /அத்வைதம் விசிஷ்டாத்வைதம்

/நாயன்மார்கள்-சைவ விசிச்டாத்வைதம்/வள்ளலார் போன்றோர்  சைவ -அத்வைதம் -வாழ்க்கை பொய் என்று சொல்ல வில்லை

-நிலை ஆனது இல்லை என்பதை சொல்கிறார்/மாறுதல் உண்டு/இல்லை என்று சொல்ல முடியாது

/இல்லதும் உள்ளத்தும் அல்லது அவன் உரு /அசித் சித் விலஷனணன் அவன்/நிலையான ஜாவாத்மாவை -போல

-சரீரம் நிலை /மெய்யை மெய்யாக கற்றால் பொய்யை பொயாஆக தெரிந்தால் மெய் ஆகும்/மெய்யை பொய் என்றும் பொய்யை மெய் என்றும் நினைத்தால் பொய் ஆகும்/

திரௌபதி தாகம்-யட்ஷன்-  நகுலன் சகாதேவன்-பீமன் அர்ஜுனன் மயங்க-தர்ம புத்திரன்

-எது ஆச்சர்யம்  கேட்டதும்-வியப்பு   எது வியப்பாயா வியப்பு- ஆழ்வார் பாசுரம்/

ஆத்மா ஒன்பது ஓட்டை உள்ளே இருக்கும் உடம்பில் இருப்பது தான் வியப்பு –தூக்கி கொண்டு போகிறவனும் நித்யம் என்கிறானே அது தான் வியப்பிலும் வியப்பு/

மரம் சுவர் ஓட்டை மாடம்..புறம்  சுவர் கோலம் செய்து புள் கவ்வ கிடக்கின்றீரே -தொண்டர் அடி பொடிஆழ்வார்

உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆள் இல்லை/சரீர சம்பந்தத்தால் என்ற அர்த்தம் மெய்யில் வாழ்க்கை-

-பிரக்ருதியால் வரும் பிராக்ருத  -கண்டு கேட்டு –சப்த அனுபவம் என்ற அர்த்தம்/அனுபவமும் நித்யம் இல்லை/உயர்ந்த சேவை ஆக இருந்தாலும் முடியுமே-

அந்தம் உண்டே/வையம்-தேக ஆத்மா அபிமானிகள் உடன் சேர்வது இல்லை/ கூடுவது-இல்லை விலகி தான் இருப்பேன்

/ஐயனே அரங்கா என்று கூக்குரல் கொடுக்கிறேன்/எனக்கு புரிய வைத்தான்-அறிந்தவன் பேசுகிறேன்-நிருபாதிக -நவ வித பந்து-காரணம் பற்றி வரும் பந்து இல்லை

/குடல் துவக்கு உண்டு/தலை குப்புற விழுந்து தொலைத்த ஞானம் பெற தான் முயல்கிறான்

/கருவரத்துள் கிடந்தே கை தொழும் கற்ப பாக்யர்கள் சிலர் உண்டு/தோஷ போக்யத்வம்-அவனுக்கு உண்டு/பிள்ளைகள் சொத்து கணக்கு வாங்க -கடனும் என்றதும் ஓடி விடுகிறார்களாம்

அவன் இடம் பாப மூட்டையே கொண்டு போகிறோம்/ஐயனே அழைக்கிறார் இத்தால்//

பீதக வாடை பிரானார் பரம குருவாக வந்து பிதாவும் குருவும் அவனே

/சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான்/எல்லா உறவும் ராமனே என்று லஷ்மணன் சுமந்த்ரன் இடம் சொல்ல அதை தசரதன் இடம் சொன்னதும் மகிழ்ந்தானே

/நடக்கிற ராமனை சேவிக்காதே என்றாள் சுமத்ரை-கைங்கர்ய ஹானி வரும் என்று

/கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தந்தை தாய் அவன் தானே நித்ய நிருபாதிக பந்து/ஈஸ்வரனை ஒழிந்தவர் ரட்ஷகன் அல்ல

/பந்து என்று சொன்னதும்-இருக்கிறேன் என்று மூதலித்து காட்டி-அனுஷ்டானமாக -பிரத்யட்ஷம் ச வாசுதேவோ –

ரெங்கேசன்/அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத ஐயனே அரங்கனே -பரம சுலபன்-கூப்பிடுவதே என் வேலை

/ அவன் மையல் செய்தது கண்டு பின்பு  நான் மையல் கொண்டேன்/ மாலே மணி வண்ணா-முயற்சி நாம் எடுத்தோம் என்று ஆண்டாள் நினைக்க-

நெஞ்சை பார்த்து -மாலே மணி வண்ணா-ரத்னம் போல முடிந்து கொள்ளலாம் -எடுத்து ஆளும் படி பரம சுலபன்-நீர் ஓட்டம் தெரியும்

/மல்-ஆஸ்ரித வியாமோகம்-பித்து -தேர் ஒட்டியும் -தூது போகியும் கழுத்தில் ஓலை கட்டி கொண்டு-

முன்னோர் தூது வானவர்க்கு-திரு பாடகம்  திரு வல்லி கேணி  -இருந்து பேர் வாங்கி பாசுரங்களும் பாட வைத்தானே

/பித்தை பார்த்தாள்/உருகி இருந்ததை பார்த்து- உன்னால் எழுந்து பாகவதரை எழுப்பி வந்தாய்.. இவனோ உருகி நிற்கிறான் -கடல் படி போல அவன் பித்து/

ஆழ்வாருக்கும் சூழ்ந்து  அகன்று –அவா பெரியது 1101 வரை /அவா அற சூழ்ந்தானே- அற்று போகும் படி

/ஜன்மங்கள் தோறும் காத்து இருக்கிறான்/அதை நினைத்து ஒரே பாசுரம்/பெருமை தெரிந்த உடன் கூட்டி கொள்கிறானே

/ருக்மிணி பிராட்டி  சரித்தரமும் இது போல-7  ஸ்லோகம் எழுதி குண்டின புரத்தில் இருந்து அனுப்ப-புவன சுந்தர–

-புவியும் இரு விசும்பும் நின் அகத்தே-செவியின் வழி புகுந்து-என் உள்ளே -இதை தமிழ் படுத்தினார் –

பிராமணர் இடம் கண்ணன் -தேவிக்கும் கடின சித்தம்-நினைக்கும் பொழுதே உள்ளம் உருகி/ஒரு மாசம் மேல் சீதை இருக்க மாட்டாள்-

சிரஞ்சீவி ஆக இருக்கட்டும்/ ஒரு வினாடி கூட  இருக்க மாட்டேன் -காதல் யாருக்கு அதிகம்-அனைவர் காதலும் குளப்படி ஆக்கிவிடுவான்/நச புன ஆவர்ததே

-திரும்பி வார மாட்டான்–பிரயத்னம் நிறைய பண்ணி இருப்பவன் ஸ்வாமி /

சொத்தை அடைய சொத்து பிரயத்தனம் பண்ணனுமா  ஸ்வாமி பண்ணனுமா  /

ஆஸ்ரித வ்யாமோகமே வடிவு எடுத்தவன்-சௌசீல்யம் ராமன்/கண்ணன்-தத்வமே ஆஸ்ரித வியாமோகம்//திரு மால்-பித்தனை தொடர்பவர்கள் பித்தரே

அதமன் மத்யமன் உத்தமன் புருஷோத்தமன்- ஒரு தரம் கை கூப்பி கோவிந்தா என்று கூப்பிட்ட திரௌபதிக்கு  எத்தனை செய்தாலும் கடனாளி என்பான் அவன்

/ரினம் பிரவர்திதம் இவ-வளர்ந்து இருக்கும் கடன்காரன்

/அஞ்சலி- லஜ்ஜையால் தலை கூப்பி இருக்கிறாள் ஐஸ்வர்யம் அஷய கதிம் மோட்ஷம்  எல்லாம் கொடுத்தான்

ஸ்ரீ ரெங்க நாயகி தாயார் -பட்டர்//வ்யாமோகத்துக்கு காரணம் இல்லை நித்ய நிரூபாதிக பந்து/

————————————————————————————–

சம்சாரிகள் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி
அவர்களை காண்பதும்
அவர்களோடு சஹவாசம் செய்வதும்
அசஹ்யமான நிலைமை
தமக்கு பிறந்த படியை அருளிச் செய்கிறார்

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
பிரகிருதி
பிராக்ருதங்களோடு
பொருந்திய வாழ்க்கையை
பாரமார்த்திகமாக கருதுகின்ற இந்த
மெய்யில் வாழ்க்கை -மெய் இல் -என்று பிரித்து
பொய்யாகிய வாழ்வை -என்றலுமாம்

வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
உலகத்தாரோடு
இனி நான் சேர்வது இல்லை

ஐயனே அரங்கா என்று அழைகின்றேன்
ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாதனே
என்று பகவன் நாமங்களை சொல்லி அழையா நின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
என்னிடத்தில் வாத்சல்யம் உடைய
எம்பெருமான் பக்கலிலே
வ்யாமோஹம் அடைந்திட்டேன்-

————————————————————————————-

3-2–நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்

ஆலியா அழையா அரங்கா! என்று

மால்  எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

——————————————–

பித்தனுக்கே பித்தன் ஆனேன்/ஸ்த்ரி சம்மோகம் ஆசை கொண்டு இருப்போர் உடன்

/ஆடி அரங்கா என்று அழையா கூப்பிட்டு /நூல் போல நுண்ணிய இடை/ ஓர் அவயவம் கண்டு வேறு எங்கும் போகாமல் தோள் கண்டார் தோளே கண்டார் போல /

நிலை நில்லாத இடை/இடை சொல்லில் அழகில் இல்லை

மத்திய பதம் நம -ஆசை வைக்க வில்லை/ மதுர கவி ஆழ்வார் சித்தரை சித்தரை -நடு இடை பட்ட -நம அர்த்தம் விளக்க ததீய சேஷத்வம் அடியார்க்கு அடியார் விளக்க

-நடுவே வந்து யுய்ய கொண்ட நாதனே //திரு பாண்  ஆழ்வார் மந்தி  பாய் வட வேங்கட மா மலை போல்

-அவயவம் தோறும் தானே பாடியதை சொல்லி கொள்கிறார்  ./பிராப்ய விஷயத்தில் இல்லை அப்ப்ராப்ய விஷயத்தில் /

நாங்கள் கோல திரு குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-எங்கனயோ அன்னைமீர்காள்

/என் நெஞ்சையும் காதையும் அங்கே விட்ட பின்பு/உமக்கு ஆசை இல்லை விடுமின்/நித்ய அழகன் அவன் /

ஆலியா-பிராப்த விஷயத்தில் இவர்கள் பாடும் பாட்டை அரங்கன் இடம் படுகிறார்

/ப்ரீதி தலை மண்ட- ஆடி-அழைத்து-அடைவு கெட கூப்பிட்டு-

ஆலியா அரங்கா என்று அழையா -அங்கே காட்டி கொள்கிறார்

/வரிசையாக பாட தெரியாத என்னையும் பாட வைத்தானே- என் பக்கம் பித்து ஏறியதை கண்டு நானும் பித்தன் ஆனேன்

/ராமன் பின் அயோத்யா வாசிகள் போகிறார்கள் பித்து காட்டி கொண்டு/

———————————————————————————–

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
நூல் போன்ற சூஷ்மமான இடையை
உடைய பெண்டிர் விஷயத்திலே
பொருந்தி இருக்கிற

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
இந்த பிராக்ருத மனிதரோடு
யான் கூடுவது இல்லை

ஆலியா அழையா அரங்கா! என்று
காதலுக்கு போக்குவீடாக கூத்தாடி
ஸ்ரீ ரெங்க நாதனே என்று
கூப்பிட்டு
ஆலியா அழையா -இறந்த கால வினை எச்சம்
ஆலித்து -அழைத்து என்றபடி

மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
என் மேல் வ்யாமோஹம் உடைய அவன்
திறத்திலேயே
மோஹமுற்றென்

——————————————————————————————–

3-3–மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3
————————————————————————————-
நரகம் தொலைகிறான்-அநிஷ்டம் தொலைத்து  காக்கிறான் /நல் நாரணன்-இஷ்ட பிராப்தம்
மன் மதனின்  கொடிய வில்லுக்கு -விரக தாபம்-பகவத் விஷயத்தில் ஆழ்வார்கள்
/இவர்கள் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று இல்லாமல் காமன் விட்ட வழியில் போகும்-
பார்-உலகத்தில் உள்ளவர்-பொது படையாகவும்-/பாரில்  யாரோடும் கூடுவது இல்லை/
-நித்யர்கள் கூட முடியாது முக்தர்கள் கூடவும் இல்லை பக்தர்களோ உண்டியோ உடையோ திரிய யாரும் இல்லை
/ஹார மார்வன்-முத்தால் ஆன ஹாரம் உடையவன்/ஸ்ரீ ரெங்கத்துக்கு அவன் ஹாரம்-அவனுக்கு முத்து  ஹாரம் /
திரு வித பரிச்சேத கால தேச வஸ்து பிரகாரம்-மூன்றாலும் /நல்-உயர்ந்த சேரும் இடம்-ஆஸ்ர்யம் இருப்பிடம் –
நாரணன்/நரகத்துக்கு அந்தம் ஏற்படுத்துவான்/நரகாசுரனை முடித்தவன்-

நர காந்தகன்-ராமானுஜர்-கலியும் கெடும்/கொசித் கொசித் போல இவர் ஆவிர்பாபம் கலியும் கெடும் போலே சூசுகம்
/பித்தன்-அன்பு வியாமோகம் காதல் /உபகாரத்துக்கு -முயல்கின்றேன் உன் தன மொய் கழல்க்கு
/வரி-அழகிய /கரும்பு வில்/ஐந்து அம்புகள் ஹர்ஷ../மார..என்கிற  ஐந்து  /காமனை பயந்த காளை-ருத்ரன் எரிக்க மீண்டும் கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் பிறந்தவன் மன் மதன் /
தப்ப ஒண்ணாத படி -தூரா குழி காமம்-/ சௌபரி  குளிக்கும் பொழுது மீனை பார்த்து –
/மந்தாதா ஐம்பது பெண்களை -ஆபாச பந்தத்துக்கு ஐம்பது  சரீரம் கொண்டான்-பீஷ்மர் ஹனுமான் தவிர காமத்து ஆட் படாதவர்கள் இல்லை
/விகித விஷய நிவ்ருத்தி தன் ஏற்றம்-பிள்ளை லோகாச்சர்யாரும் நாயனாரும்/1323 நம் பெருமாள் -48 வருசம் கழித்து  1371  திரும்ப
/யயாதி சாபத்தால் யது இழந்தான் பட்டாபிஷேகம்/சார்ங்கம்  என்னும் வில்லாண்டானுக்கு ஆட் பட்டவர் நான் என்கிறார்
/அனங்க தேவா உன்னையும் உம்பியும் தொழுதோம்- காமனையும் சாமானையும் /அதிகிரமிகிறாள்
/ மடல் ஊருவது தப்பு போல இது -மாசறு சோதி தூது விட்டது போல -புருஷோத்தமன் இடம் காதல் என்பதால் அதி கிரமிகிரார்கள் /

குயில் காலிலும் விழுகிறாள் /மன்னு வட நெறியே வேண்டினோம்-மடல் வூருவதில் /கிடைகிறது புருஷோத்தமன் என்பதால்
/ஞான ஆதிக்கத்தால் வந்தவை அடி களைஞ்சு போகும் /
/சிலை இலங்கு பொன் ஆழி  சொல்ல வில்லை சார்ங்கம்-ராமன் என்பதால் சொல்கிறார் ஆழ்வார் மன நிலையை நம் முன் காட்டுகிறார் பெரிய வச்சான் பிள்ளை/
/நிலை இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் சுத்ரர்கள்-பாரினார்-நாரணனை ஆச்ரயமாக கொள்ளாததால் /
ஒப்பனை உடன் இருக்கும் பெரிய பெருமாள் -ஆர மார்வன்–வன மாலா விராஜிதம்-வன மாலையையும் சொல்லலாம்
/அரங்கன்-பரம சுலபன்-அனந்தன்-சௌலப்யமே ஆனந்தம் -மனுஷ்யத்வே பரத்வம் போல
/உயர் திண்- அணை ஒன்றும் -நான்கு பரத்வ பதிகம் /
தன் உடமையை விட மாட்டாமையாலே அழுக்கை விரும்பும் அவன்
=நாரணன்-தான் ஓர் வேர் தனி முதல் வித்தாய் /விரோதி போக்கி தன் உடன் சேர்த்து கொள்ள சக்தி கொண்டவன் -நரகாந்தகன்-பிராப்திக்கு விரோதி-

நாரணன் நர காந்தகன் பித்தனே- வாத்சல்யத்தாலே மேல் விழும் பொழுது விரோதியும் போக்கி கொள்கிறான்
இந்த குணத்துக்கு பித்தன் /நரகனை தொலைத்த -நரகாசுரன்-
ஆர மார்வன்- நித்யம் அழகு /இந்த மாலை அழகுக்கு கூட மன் மதன் அழகு  கிட்ட முடியாது

——————————————————-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
மன்மதனுடைய அழகிய கொடிய
வில்லுக்கு
ஆட்பட்டு விஷய பிரவணராய் திரியும்

பாரினாரோடும் கூடுவதில்லை யான்
இப்பூமியில் இல்ல பிராக்ருத மனிசர்களோடு
யான் கூடுவது இல்லை –

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
முத்தாஹாரத்தை
திரு மார்பிலே
அணிந்து உள்ளவனாய்
அளவிட முடியாத
ஸ்வரூபா ஸ்வ பாவங்களை
யுடையனாய்

நாரணன் நர காந்தகன் பித்தனே
சர்வ ஸ்வாமி யாய்
அடியவர்களை நரகத்தில் சேராதபடி
காத்து அருளுபவனான -நரக அந்தகன் –
ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்திலே
மோஹம் உடையனாய் இரா நின்றேன்

——————————————————————————————

3-4–உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்

மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்

அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை

உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4

———————————————————————-

வன் பேய் முலை உண்ட -அவன் உடன் கூடுவோம்/

உகந்து ஓடுவார்கள்/இதற்காகவே பிறந்தது போல//

வாணன்-அதிபதி /பெரிய பெருமாளே கண்ணன்- பேய் முலை உண்ட வாயன்

/தாய் முலை வாயில்  அமுது இருக்க பேய் முலை உண்டபைத்யம் /உபாசனத்து சரீரம் என்பதால் அது தரிக்க மட்டும் என்று இல்லாமல்

/எல்லாவற்றையும் அழியும் படி-வர்ண ஆஸ்ரம தர்மம் விட்டு-இம் மண்டலம் தன்னோடும்

-உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன்-..இதற்கு-திரு கோளூரும்  ஸ்ரீ வைகுண்டம் போல

-இங்கு உண்டியும் உடையும் தெய்வம் என்று கொள்கிறார்கள் வாசு தேவோ சர்வம் -துர் லாபம்

/ஓலை புறத்தில் மட்டும் கண்டு அறியாமல் -அரங்கன் -உள்ளே புகுந்து நிர்வகிக்கிறான்–வெளியில் இருந்து தாங்குகிறான்

-தனக்கு வந்த விரோதிகளை -வன் பேய்ச்சி/மாயோம்-இனி பிரிய மாட்டோம்-பிரிதலும் மாய்தலும் பரியாய  சப்தம் /

அலவலை- வேஷம் தாய் போல -பெரு மா வஞ்ச பேய்-வீய -தூய குழவியாய்-ஈச்வரத்வம் தெரியாமல்

– விட பால் அமுதாய் அமுது செய்வித்த  -விஷம் கூட அமுதமாய் பிறக்கும் வேலை

/அனுபவம் விரோதி பூதனை

-ஒக்கலை வைத்து முலை பால் உண் என்று தந்திட வாங்கி

செக்கம் செக என்று கோபத்துக்கு எதிர் கோபம் பால் கொடுக்க உபகாரம் சிவந்து வாய்

-எல்லாம் அவனுக்கு என்ற எதையும் உகக்கிறான் /

ஒவ்ஷத சேவை பண்ணுபவரை  மீளக்க முடியாது போல -/

குண சேஷ்டிதங்களை அனுபவிக்கும்  இவரையும் -மீட்க்க ஒண்ணாது

————————————————————————

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
ஆஹாரத்தையும்
வஸ்திரத்தையுமே
விரும்பி
கண்டவிடம் எங்கும் ஓடித் திரிகிற

மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
இந்த பூ மண்டலத்தில் உள்ள
பிராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை

அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
பரம பதத்தில் வாழ்பவனும்
கல் நெஞ்சை உடைய பூதனையின் முலையை

உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே
அமுது செய்த வாயை உடையவனுமான
ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்தில்
பைத்தியம் பிடித்தவனாய் இரா நின்றேன்

ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மத் பாகவதம் பகவத் விஷயம்
எங்கு எங்கு உபதேசிக்கிறார்கள்
பகவத் சேவை எங்கே கிடைக்கும்
பாகவத சேவை எங்கே கிடைக்கும்
என்று காதும் கண்ணும் தினவு எடுத்து
ஓடிக் கழிக்க வேண்டியது ஸ்வரூபமாய் இருக்க
சோறு கொடுப்பது எங்கே கூறை கிடைப்பது எங்கே
என்று வாய் வெருவி ஓடித் திரிகிற
இப்பாவிகளோடு எனக்கு பொருந்தாது
விரோதிகளை போக்கி அருளும் உனது
கல்யாண குணங்களையே
நினைந்து நைந்து உள்கரைந்து
உருகுமவன் -நான் -என்கிறார்

————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை  திருவடிகளே சரணம்.

குலேசேகர ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: