பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-2-6/7/8/9/2-10- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

2-6–ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்

பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே

காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6

——————————————–

சாஸ்திர பரமான பாசுரம்/ஜகத் கரணம் எளிதாக பாடி அருளுகிறார்
/ஆதி-ஜகத் காரணம்- சூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட/அந்தம்-ஸ்தூல சேதன அசேதன விசிஷ்ட
/அனந்தமாம்-வ்யாபகத்வம்/ அற்புதம்-எல்லாம் அற்புதமாக சஐவபன்-இந்த நான்கும் லீலா விபூதி சொல்லி வானவர்  தம்பிரான்-நித்ய விபூதி சொல்கிறார்//அத்வேஷம் இல்லாத பக்தி கூட இல்லாதவர்கள் – தீது இல்லாத நல் நெறி-பாஹ்ய குதுருஷ்டிகள் போல அன்றி/எங்கும் திரிந்து அரங்கனுக்கு காதல் செய்கிறார்கள்
/ அவர்களுக்கு எல்லா பிறப்பிலும் காதல் செய்வேன் என்கிறார்/திரிவித பரி சேத ரகிதன்-அனந்தன்/தேச கால அவஸ்தை இன்றி வியாபகன்/
ஆச்சர்ய பூதன் அற்புதம்/வுபய விபூதிக்கும் நாதன்/ மா மலர்-சிறப்புடைய ஒப்பு அற்ற சூடும் பக்தி இல்லாத பாதம்
-பாலை குடிக்க காலை பிடிப்பார்  உண்டோ/சுலபமான பக்தி-தேன் ஒழுகும் அழகிய பூ போன்ற பாதம் கூட சூடாமல் /
தீதில் நல் நெறி-தாங்கள் செய்து காட்டி/அனுஷ்டானமும் உபதேசமும் -ஆச்சார்யர்கள் செய்வது/விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்/கேட்டு அதன் படி இருப்பார் போல
/எம்மான்-ஸ்வாமி அரங்கனுக்கே காதல் செய்யும் தொண்டர்-அன்பு செய்பவர்-எப் பிறப்பிலும் அடிமை செய்ய ஆசை படும்
/பாரித்து பாசுரம் பாடுகிறார்/ வரும் காலம் தான் //ராமா னுச நூற்று அந்தாதி கண் நுண் சிறு தாம்பில் தான் மேவினேன் போல வரும்//

காரண கார்ய தசை நிலை இரண்டும் ஆதி அந்தம் ஒன்றே –

சதேவ  சமய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ-அத்விதீயம் -நிமித்த காரணம் இது தான்

/ஒன்றும் தேவும்..மற்றும் யாரும் இல்லா அன்று தேவர் உலகோடு உயிர் படைத்தான்

/மூன்று ஏவ காரம் சதேவ/சத்தாக /ஏகமேவ-அன்று இருந்த பிரமமே இன்றும்/அத்வதீயம் -நிமித்த காரணம்

/அதனால் தான் ஆதி  அந்தம் அநந்தம் அற்புதம் என்றார்/ஆன போதும்-வானவர்-நித்யர் – ஆன போது அமிழ்ந்த போது வித்யாசம் இன்றி இருக்கும் ஒக்க உளாராய் இருக்கும் நித்யர்

/உபய விபூதி நாதன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் போல/

/பக்தி இல்லாத ஓடி -அசத்-இல்லை என்று தெரிந்தால் அவன் தான் அசத்-பாவிகள் உஜ்ஜீவனம் அடைய- எங்கும் திரிந்து-இருக்கிற தேசம் எல்லாம் புகுந்து பக்தி ஏற்படுத்து உஜ்ஜீவிபிக்க

-பக்தி இருந்தால் தான் உஜ்ஜீவிக்க முடியும்-தீர்தகரராய் திரிந்து –அனுஷ்டித்தும் ஆதரவும் காட்டி-பக்தி உண்டாக்குவது தான் இவர்கள் கடமை உஜ்ஜீவிப்பது  அவன் பொறுப்பு/

/அரங்கன் எம்மான்-வேறு யாருக்கும் இன்றி அவனுக்கே ஆக்கி கொடுத்தான் அரங்கன் /

அநேக ஜன்மம் பிறந்து அடிமை செய்ய வேண்டும்–அவர்களுக்கு அடுத்த பிறவி இலையே அரங்கனை பாடுவதால்/

நான் பலஜன்மம் எடுத்து அவர்கள் உபகாரத்தை நினைந்து அடிமை செய்ய ஆசை படுகிறார்/பாரிப்பு/

—————————————————

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
ஜகத் காரண பூதனாய்
பிரளய காலத்திலும் வாழ்பவனாய்
சர்வ வ்யாவியாய்
ஆச்சர்ய பூதனாய்
அமரர்க்கு அதிபதியான
ஸ்ரீ ரெங்க நாதனுடைய

பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சிரஸா வஹிப்பதற்க்கு உறுப்பான
அன்பு இல்லாத
பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
சர்வ தேசங்களிலும்
சஞ்சாரம் செய்து
குற்றமற்ற நல்வழிகளை
தமது அனுஷ்டான முகத்தாலே
வெளிப்படுத்திக் கொண்டு
நமக்குத் தலைவனான
ஸ்ரீ ரெங்க நாதனுக்கே

காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே
பக்தி பூண்டு -இருக்கின்ற
பாகவதர் விஷயத்திலே
எனது மனமானது
எந்த ஜன்மத்திலும்
அன்பு பூண்டு இருக்கும்

ஸ்வரூப அனுரூபமான அர்த்த விசேஷங்களை
உபன்யாச முகத்தாலே உபதேசித்து வரும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நான்
பிறவி தோறும் அன்பு காட்டுவேன் -என்கிறார்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் பக்தி பண்ண தாம்
இன்னும் பல ஜன்மங்கள் பெற விரும்பி இருக்குமாறு விளங்கும்-

—————————————————————————————————-

2-7–கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ண கை செய்ய வாய்

ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை

சேரும் நெஞ்சினராகி  சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண  நீர்களால்

வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7

——————————————————–

வடிவழகை வர்ணித்து -மேக கூட்டங்கள் ஒத்த மேனி/

முத்து போன்ற பல் வரிசை/திரு ஆரங்கள் ஆபரணங்கள் சூட்டிய மார்புடன் /சுடர்- ஜோதிஸ் எல்லாம் சேர்த்து உருவாக்கினால் போல அரங்கன்

/கண் நீர் வார நிற்கிறார்கள்/கதிர்-ஒளி/இருள் அன்ன மா மணி  வண்ணன் -முத்து பல் வரிசை தோன்ற சிரிக்க அந்த ஒளியாலே வசுதேவர் சேவித்தார்/

/வெண் பல் தவத்தவர்- சத்வ குணம் வெளியில் ரஜோ குணம் தள்ளி-செங்கல் போடி கூரை/செய்ய வாய் இதனால்/முத்தை மாலையாகவும் சத்தி கொண்டு

-பல்லில் மட்டும் இன்றி/அரும் பெரும்-கிடைக்க அரியது பெரியது-பிரமம்/தேஜஸ்-அடைந்து அனுபவிக்க மனம் உள்ளவராய்-

வாரம்-அன்பு செய்யும் ஒரு-பிரதி பலம் பாராத அன்பு/ஒக்கும் அம்மான் உருவம் -உள்ளம் குழைந்து- தொக்க மேக பல் குழாங்கள்

/விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-/காட்டேன்மின் நும் உரு -எம் உயிர் க்கு அது காலனே //

/விச்லேஷத்தில் வருத்தும்/ ஆர்த்து வண்டு அலம்பும் சோலை –

கழுத்தே கட்டளையாக -அவனை அனுபவித்து கொண்டே இருப்பது போல சாம கானம் பண்ணி கொண்டு ஆலத்தி வையா நிற்கும்

-.மேகம் பார்க்க கடல் என்று நினைத்து-நீரை பருக -அணி திரு அரங்கம்  தன்னுள் -கார் திரள்-தொக்க மேக பல் குழாங்கள்-எல்லா இடத்திலும் இப்படியே ஒப்பு-

அனைய மேனி  கண்ணனே- மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா -வாசி சொல்கிறாள்-

ஸ்ரீ வைகுண்டம் விட்டு வந்தானே -மேகம் வராது கீழே – இத்தால்-வந்து படுக்க அதுவே அரங்கன்//நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் போல/

கண்டாரை போக விடாமல் இருக்க முத்த வெண்ண -பிரியா விடை கொண்டு தானே பக்தர்கள் சேவித்து கொண்டு வருவார்த்கள்

/மந்த ஸ்மிதம் /மாசுச சிரிப்பால் சொல்கிறான்/தந்த பந்தி/செய்ய வாய்-கண்கள் சிவந்து பெரிய வாய் -கூப்பிட்டு ஆழ்வாரை

முதல்  2.5 பாசுரத்தால் தன் வைபவம் சொல்லி பின் ஜீவாத்மா சிறப்பை சொல்கிறார் ஆழ்வாருக்கு

/கண்கள் சிவந்து-ஆழ்வாரை விட்டு வெளுத்து ஜுரம் கண்டார் இப் பொழுது சிவந்ததாம்-

–சதைக ரூப ரூபாய கொத்தை இல்லை கிருபையால்-அதனால்  கண்கள் சிவந்துபெரிய வாய் -பல் வரிசை தெரிகிறதாம் வாயும் சிவந்து கனிந்து

-நெய்த்து பள பளப்பு-உள்ளே வெண் பல் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்

/விளக்கு பிடிக்க மகர குண்டலம்/சுடர் முடியன்-குல்லாய் இட்டு அழகாய் மறைக்க /நான்கு தோளன் புரி சாரங்கன் ..அடியேன் உள்ளான் /

/பொழிந்த கார் மேகம் மின்னே போல் தோன்றி- கிருபை வர்ஷிக்க/ஹாரம்-வானவில்/பெரிய வரை  மார்பில்  பேர் ஆரம் பூண்டு

-இரண்டாய் மடித்து சாத்தும் படியாய் இருக்கும்-இட்டு பூணும் படியாய்-ஐஸ்வர்யா சூசுகம் /அரங்கன் என்னும்-

நிரவதிக தேஜோ ரூபனாய்-அரும் பெரும் சுடர்-அத்வீதியம்-ஒருவனை-சேரும் நெஞ்சினர்-விலக்காமை-

பத்தி உடை யவர்க்கு எளியவன் தப்பை செய்தோம் தப்பை சொன்னோம்-பற்றுடை அடியவர்க்கு எளியவன்/ எளிவரும் இயல்பினான்-

பாட்டை  மாற்றி  கொண்டார்/உபதேசம் பண்ண வந்தவன் அனுபவித்தில் இழிந்தது தப்பை செய்தேன்

/அத்வேஷம் என்னும் பக்தி இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானை

/ நின் ஆணை திரு ஆணை என்று  ஆணை இட்டு  விலகாமல் இருந்தால் போதும்

/பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு/ இவன் நினைவு மாறும் பொழுது கிட்டும்

/கிட்டி ய பின்பு -பட வைத்தானே  அழுகை/ எப் பொழுதும் கண் நீர் வாரி இருப்போம் /அநந்ய பிரயோஜனர்/

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ண கை செய்ய வாய்
மேகங்களின் திரளை ஒத்த திரு மேனியையும்
அழகிய லாவண்யத்தையும்
முத்துக்கள் போலே வெளுத்த
புன்சிரிப்பை உடைய சிறந்த பவளத்தையும்

ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
முத்தாஹாரம் அணிந்த மார்வையும் உடையவனான
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிற
அருமை பெருமை உள்ள
வி லஷணமான தேஜஸ்சை –

சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
கிட்டு அனுபவிகிக்க வேணும் என்கிற
சிந்தையை உடையராய்
அங்கனே சேர்ந்து
பக்த பாரவச்யத்தாலே
சுரந்து பெருகின ஆனந்த
பாஷ்பங்கள்

வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே
வெள்ளமிட்டு ஒழுகும்படி
நிற்குமவர்கள் உடைய
இரண்டு திருவடிகள் விஷயத்திலே
என் மனமானது
ஒப்பற்ற அன்பை உடைத்தாய் ஆகும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே
அநந்ய பிரயோஜனராய் நெஞ்சு ஆட்பட்டது என்கிறார்-

—————————————————————————————————–

 2-8–மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்

மாலை யுற்ற  வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே

மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8

————————————————————————————————————————-

கடலுக்கு பைத்தியம் வியாமோகம் –

வண்டுகள் குடைந்து இருக்கும்  துளசி மாலை தரித்து /பித்தேறி எழுந்து ஆடி பாடி திரிந்து -ஆசை படும் தொண்டர் வாழ்வுக்கு ஸ்ரீ கைங்கர்ய ஸ்ரீ /

அலை எரிகிறது- அவன் திருவடி தீண்டுவதால்-நீள் ஓதம் வந்து அலைக்கும்

//ஐம் தலை வாய் நாகத்தணை–திரு பாற்கடலில் பள்ளி கொண்ட

-/தோள் இணை மேலும் .-நன் மார்பின் மேலும் -சுடர் முடி மேலும் .தாள் இணை மேலும்  புனைந்த தண்  அம் துழாய் உடை அம்மான்-

அதற்க்கு ஏற்ற மலை போன்ற திரு மார்பன்/மலர் கண்ணனை- செந் தாமரை போன்ற/அன்பு கொண்டு நின்ற இடத்தில் நிற்க முடியாமல்

/சாம கானம் போல வண்டுகள் ரீங்காரம்/ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி-தொண்டர் வாழ்வு கைங்கர்ய ஸ்ரீ/ஸ்ரீ வைஷ்ணத்வமே வாழ்வு அதற்க்கு தக்க கைங்கர்யமும் பெற்று /மனசு புரிகிறது

அலைகள் ஆர்பரிகிறது-ஸ்வாபம்-திருவடி தொட்ட பதட்டம்/செவ்வி திரு துழாய் சேர்ந்து குளிர்ந்த மாலை

/வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரை வாய் தாழும் அருவி போல் தார் கிடப்பசூழும் திரு மா மணி வண்ணன்

செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேர பெற்று  -மூன்றாம் திரு அந்தாதி -59-

திரு மங்கை ஆழ்வார்– தாராய  தண் துளப வண்டு உழுத -திரு மார்பை உழுகிறதாம்- வரை மார்பன்  என்கின்றாளால்

யாரானும் காண்மின் அம் பவளம் வாய் -கெஞ்சுகிறாள் நம்மை

-மாலை பதிய – கார் வானம் நின்று அதிரும் –கண்ண புரம் அம்மனை

//செவ்விய தாமரை கண்ணன்-அன்பு உடைத்து எழுந்து ஆடுவது ப்ரீதிக்கு போக்கு வீடாகி

-கோவிலிலே சுலபனாகி காட்டி என்னை எழுதி கொண்டான் பெரிய பெருமாள்/

—————————————————————————————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
தன திரு மேனி ஸ்பர்சத்தாலே
அலை எறிகிற திருப் பாற் கடலிலே
பள்ளி கொள்பவனும்
தேனுக்காக வண்டுகள் குடையா
நின்றுள்ள திருத் துழாய்

மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலையை அணிந்த
மலை போல் பெருமை தங்கிய
திரு மார்பை உடையவனும்
செந்தாமரை மலர் போன்ற
திருக் கண்களை உடையவனுமான
ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்தில்

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
வ்யாமோஹத்தை அடைந்து
இருந்த இடத்தில் இராமல்
எழுந்து கூத்தாடி
வாயாரப் பாடி
திவ்ய தேசங்கள் தோறும் சஞ்சரித்து
எமக்கு ஸ்வாமி யான ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்தில்

மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
பித்தேறி திரிகின்ற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு
என் மனம் மயங்கி கிடக்கின்றது
அப்படிப் பட்ட நிலைமை எனக்கும் வாய்க்குமா –

———————————————————————————————-

2-9–மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து  நின்று

எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே

பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

—————————————————————–

பெரிய மா மேனி -விதுரர் மா மதி/ஞான விபாகம் வந்தவை எல்லாம் அடி களைஞ்சு பெரும்-

– நீர் செவ்வே இட காணில் /ஞானி -பக்தன் தான்/கலங்கி இருப்பவரே பக்தன்

/தாரை போல ஆநந்த கண் நீர் பொழிய  -சரீரம் மயிர் கூச்சு எறிய-பல அடியார்கள் மெய்கள்/ஏங்கி தளர்ந்து நின்று நிலை கலங்கி -எய்து

-ஸ்தப்தமாக மரம் போல நின்று -சக்தி வார வளைத்து கொண்டு கும்பிடு நட்டம் இட்டு

/அத்தன்-அச்சன்-ஸ்வாமி -/பித்தேறி திரிவார்க்கு  நீர் பித்தர் ஆவது  என்று கேட்க இதை அருளுகிறார்

/மொய்ம் மா -கை மா அருள் செய்த -எம்மானை சொல்லி பாடி -/பல வுலோகர் சிரிக்க நின்று ஆடி -கை தட்டுவதே தாளமாக —

ஆர்வம் தொழ பாடுவார் அமரர் தொழ படுவார் /அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை

-அநாதரவு தோற்ற/ முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ

/சிந்திக்கும் திசைக்கும்–இட்ட கைகள் இட்ட /மயங்கும் கை கூப்பும் தேறியும் தேறாமலும் சேவிப்பார்

/நமக்கு நேர் விரோதம்/ சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் -திரு வரங்கத்துள்ளாயே  என்னும்

-ஆங்கே மழை கண் நீர் மல்க /சிட்டனே -வந்திடாய் என்று என்றே மயங்கும் ரீங்கரிக்கிற குரல் குறைந்து

/நாம் பிரக்ருத விஷயத்தில் இருப்பதை பிராப்த விஷயத்தில் காட்டுகிறார்

/ அத்தன் தகப்பன் அச்சன் ஸ்வாமி/பக்தி காரியமான  பித்து இல்லாதவர்கள் பித்தரே-

இக் கலக்கம் இல்லாது தெளிந்து இருக்கும் சன காதிகளும் பித்தர்களே /மோர் காரி உத்தவர் குசேலர் போல்வார் கூட பித்தர் இல்லை

———————————————————————

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
ஆனந்த பாஷ்பமானதுஇடைவிடாமல் சொரியவும்
உடல் மயிர் கூச்செறியவும்
நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் –

எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
நிலை தளர்ந்து
மகா கோலாஹலத்தொடு கூடின
நின்ற இடத்து நில்லாமல் நர்த்தனத்தைப் பண்ணி
பலவித ஆட்டங்கள் ஆடி
பாட்டுக்கள் பாடி
வணங்கி

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
எனக்கு தந்தையாய்
ஸ்வாமி யுமுமான
ஸ்ரீ ரெங்க நாதனுக்கு அடியவர்களாய்
அந்த ஸ்ரீ ரெங்க நாதன் விஷயத்திலே

பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே-
பித்தேறி திரிபவர்கள்
பைத்தியக் காரர்கள் அல்லர்
பக்திகார்யமான இந்த வ்யாமோஹம் இல்லாத
மற்ற பேர்கள் எல்லாருமே
பைத்திய காரர்கள்-

—————————————————————————————–

2-10–அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10

————————————————-

ஸ்ரீ ய பதி /ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை/மேவுதல்-விட்டு பிரியாமல்/

அடியார் அடியார்..அடியார் ஆவரே/பிறந்த இடம் துறந்து  திரு மார்பில் இருக்கிறாள் /

மெய் அடியார்கள்- அநந்ய பிரயோஜனர் -/எல்லையில் அடிமை திறம்-மேல் மேலும்

உஜ்ஜீவன – ஆசை சேஷத்வம் ஸ்வாமித்வம் நினைப்பதே/ச்வாதந்த்ரம் வந்தால் சொரூப நாசம்/ராஜாவாக இருந்தாலும் அடிமை திறத்தில்–பாரிக்கும்-

ராஜ்ய வாசம் வன வாசம்-சீதை நஷ்ட்டை ஜடாயு போனது -துர் பாக்கியம் அக்நி கூட கொளுத்தும் அங்கு சொல்கிறான் கிளம்பும் பொழுது வன வாசம் கொண்டாடி

/ஜடாயு பிரிவால் சொன்னான் /ராஜ தன்மை தானே பாட வைத்து மதிள்கள் கட்ட வைத்து என்பதால் கொண்டாடுகிறார்/ததீய சேஷத்வம் தந்த ஜன்மம் என்று கொண்டாடுகிறார்/

இனிதான சொல்கள்/இவர் ஆசை பட்ட ததீய சேஷத்வம் பெற இதுவே வழி என்கிறார்

/அடியார்கள் ஈட்டம் காணலாம்/ தொண்டர் அடி பொடியிலே தீர்த்தம் ஆடலாம்

/சென்னிக்கு அணியலாம்/சேஷத்வ விருத்தி கிட்டும்/ மெய் சிலிர்க்கும் /காதல் செய்யும் பாக்கியம் கிட்டும்/அன்பு செய்ய படும் நெஞ்சம் பெறுவார்

/மாலை உற்று நெஞ்சு இருக்கும் அரங்கன் அடியார்க்கு பித்தராகும் பாக்கியம் பெறுவோம்

சொல்லில் இன் தமிழ் மாலை- தொண்டர் தொண்டர் ஆவர்/

——————————————————————————————-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
அக இதழ்களை உடைய சிறந்த
தாமரை மலரில் பிறந்த பிராட்டிக்கு கணவனான
ஸ்ரீ ரெங்க நாதன் உடைய
உண்மையான பக்தர்களுடைய –

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
எல்லையிலே உள்ள சேஷ வ்ருத்தியிலே
எப்போதும் பொருந்திய திரு உள்ளத்தை உடையவரும்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
கொல்லி நகருக்கு அரசரும்
மதுரைக்கு அரசரும்
உறையூருக்கு அரசருமான
குலசேகர ஆழ்வார் உடைய

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே
ஸ்ரீ ஸூ க்திகளால் அமைந்த
இனிய தமிழ் பாசுரங்களை ஓத வல்லவர்கள்
தாசா நுதாசராக பெறுவார்கள்
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
என்கிற சேஷத்வ காஷ்டை-

—————————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்..

குலேசேகரர்ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: