பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-2-1/2/3/4/2-5- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்/ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை –

பாகவத பிரபாவம் சொல்ல வந்த பதிகம்/கண் நுண் சிறு தாம்பு போல -மதுர கவி நிலை/சரம பர்வம்/ஆச்சர்ய கைங்கர்யமே உத்தாரகம்

பல்லவிதம் புஷ்பிதம் பழம் போல -மூன்று நிலைகளும் -பகவான் பக்தி மொட்டு போல/பாகவத நிஷ்ட்டை பூ /ஆச்சர்ய நிஷ்ட்டை பழம் போல

/வடுக நம்பி ஆந்திர பூர்ணர்-பால் காச்சும் பொழுது-எம் தெய்வம் யார் பார்ப்பது உங்கள் தெய்வம் புறப்பாடு பார்க்க- அன்றே பிரித்து விட்டார்/

ஆழ்வான் ஆண்டான் இருவரையும் இரு கரையர் என்பர் /உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாது போது ஒரு வார்த்தை-மற்ற ஆழ்வார்கள்/ இவர்களை சிரித்து இருப்பார் மதுர கவி

/நிக்ரகமே தெரியாது ஆச்சர்யர்களுக்கு /மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்

/ சத்ருக்னன் நிலை/ ராமனுக்கு நல்லராய் இருப்பவருக்கு நல்லராய் இருப்பார்/பயிலும் சுடர் ஒளி நெடு மாற்கு அடிமை-பதிகம் இரண்டுமே பாகவத பிரபாவம் /அது போல இந்த பதிகம்

/கண் சோர -திரு சேறை பதிகம் போல/மாறனேர் நம்பி-அந்தணர் குலம் இல்லை-தேவர்க்கு புரோடாசம் இத்தை நாய்க்கு இடாமல்  -பெரிய நம்பி -சம்ஸ்காரம் பண்ணி முடித்தார்/

இந்த பதிகங்கள் கடல் ஓசை போல வியர்த்தம் என்றால் நான் செய்தது தவறு-

வலம் தாங்கும் சக்கரத்து அண்ணலுக்கு  ஆள் என்றாலே போதும்–சண்டாளர் ஆனாலும் ஆழ்வார்
/ திரு மாலை 39-45-பாசுரங்களாலும் கொன்று சுட்டு இருந்தாலும் திரு மால் அடியார்கள்  கொள்ள தக்கவர்கள் /
நம் ஜீயர் -நம் பிள்ளை- திரு வாய் மொழி கேட்க வந்தவர் சேவிக்க வெட்கி-நம் பிள்ளையை சேவித்து சொல்வார்
-ஏகாந்தமாக சொல்ல பயிலும் சுடர் ஒளி கேட்டதும் தானே  வெட்கி சேவிக்க கால ஷேபம் நிறுத்த
புறம் உண்டான வாசனையோடு விடுகையும் ..ஆறு லஷணம் சொல்லி -..ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்/இப் படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் ஏற்றம் அறிந்து இருக்கையும்-இது மிக துர் லாபம்/
சரண கதிக்கு ஆறு வகை -ஆநுகூல்யச்ய சங்கல்பம்– பிராதி கூலச்ய வர்ச்ஜனம்– ரஷிதல் விசுவாசம்-
– கோத்ருத்த வர்ணம்– காரபண்யம் –ஆத்ம நிஷ்ஷேபம் -பாகவதர் இடம் இந்த ஆறும் வேணும்
/பயன் நன்றாகிலும்– முயல்கின்றேன் உன் தன் மொய் கழல் -போல-கார்பண்யம் ஆகிஞ்சனம்//சம்பவிக்கும் ஸ்வாபம்-தானே வரணும்
/பளன மீன் கவர்ந்து  உண்ண தருவேன்-ஆச்சார்யர் பிடித்ததை தர வேண்டும்
/சம்சார கஷ்டம் தோஷம் உணர்ந்து பகவான் இடம் கூப்பிட்டு செல்லலாம்/பகவான் இடம் தோஷ தர்சனம் இல்லையே-சங்கை ச்வாதந்த்ரம் ஒன்றே உண்டு அவன் இடம்
-பரி பூரணன் அவன்/திரு மேனி எடுத்து கொண்டு நாம் கைங்கர்ய பரர் என்று காட்ட
-நம்மை விட்டு விலக விட கூடாது என்று -இருக்கிறான்//விலக்க கூடாது என்று நாம் உகந்த த்ரவ்யமே திரு மேனியாக கொண்டு இருக்கிறான்
அர்ச்சையில்/நாம் பண்ணும் பொழுது திரு மஞ்சனம் கண்டு கொண்டு அமுது செய்து /இல்லை என்ற பொழுது பட்டினி இருந்தும்/அவன் தன்னை அமைத்து கொண்டு இருக்கிறான்
// ஞானி மே மதம் என்றும்-மம பிராண பாண்டவ -என்றும் கிம் அர்த்தம் புண்டரீ காட்ஷன்-துரியோதனன் கேட்டானே விதுரன் இடம் சென்று புஜிததை -பக்தம் விதுர போஜனம்–
-உண்ணும் சோறு  பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்ணில் நீர் மல்கி-பாவியேன் பல்லில் பட்டு  தெரிபதே –
கடன் பட்டார் நெஞ்சம் போல் துடிப்பான் கண்ணன் -சாரத்வம் தூதத்வம் எல்லாம் அவள் விரித்த குழல் காண சகிக்காதது தான் –
-அடியார்கள்  அவன் உடைய திருமேனி போல திரு வடி போல என்பதால்
/அறிவார் உயிர் ஆனாய்-என்னது உன்னதாவியில் இது தோற்றும்/
ஆத்ம சக சகன் அர்ஜுனன் -ஞானி தத்வ தர்சினி ஏ பாவம் பரமே ஆரம்பித்து முகில் வண்ணன் அடி சூழ்ந்து என்று மகிழ்வாக ஆழ்வார் முடித்தாரே
கீதை சோகத்திலே முடிந்தது/ஆக்னேய அஸ்தரம்-சாரதியாக இருந்து அர்ஜுனனை இறங்க சொல்ல அவன் மறுக்க -பின்பு தேர் எரிந்ததை காட்டி
-சேஷ மகேசன் சுரேச கணேசன் அனைவருக்கும் -ஈசன் ரமேசன் -கோபிகள் முன் ஆடுகிறான் வெண்ணெய்க்கு
-பாவிகாள் உமக்கு ஏச்சு கொலோ/பத்தராவி பெருமாள் -திரு கண்ண மங்கை ஆண்டான்-நாயை காக்க -ஈஸ்வர பிரக்ருதிக்கு நான் ஏன் கரைய வேண்டும்
-சுவ ரட்ஷணம் விட்டாரே/ததீய விஷயம் பண்ணுவது எல்லாம் அவன் இடமே சேரும்
/  கண்ண புரத்து உறையும்  அம்மானே திரு எட்டு எழுத்தும் கற்றது உன் அடியார்க்கு அடிமை-. பாகவத பிரபாவம்
-தனி மா தெய்வத்தின் தளிர் அடி கீழ்-புகுதல் –அன்றி அவர் அடியார் -அல்லி கமல கண்ணன் -பாடினேன் என்கிறார் தொண்டரை இல்லை- சரீர பூதர் என்பதால்
-தன்னை பற்றி கேட்டால் கமல கண்ணன் ஆக இருப்பானாம்/பசகு பசகு என்று புது கணிப்பாகா அப் பொழுது அலர்ந்த செந் தாமரையை வெல்லும் அடியார் பிரபாவம் கேட்டதும்

அரங்கன் இடம் பட்டரும் பிராட்டி பெருமை பாட கவசம் வெடிக்கும்– அளவு பூரித்து போவாய் பாசுரம் தோறும் 100 கவசம் வைத்து இருக்கிறேன்

-மற்ற பேரை தனக்கு சரியாக உயர்த்தி விட்ட பெருமை அவனது தானே

-பகவத் விஷய அனுகூல்யம் முன்பு சொல்லி இதில் பாகவத விஷயத்தில் அனுகூல்யம் பிறந்ததை சொல்கிறார்

/திரு மாது வைஜயந்தி  மாலை இருக்கும் மார்பன் –வாழ்த்தி -மால் கொள் சிந்தையராய்-இருக்கும் கூட்டம் தரிசனம் கிடைக்க பாரிகிறார்

————————————————————————————–

2-1–தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்

வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்

ஆட்ட மேவி அலம் தழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்

ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1

—————————————————

பகவத் பிரபாவம் சொல்லி அவன் சம்பந்தம் உள்ள பாகவதன் பெருமை/

கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன் என் அப்பன்-சொல்லி அப்பனில்- என்று இழிந்தது  போல –இவரும் அவனை சொல்லி ஆரம்பிக்கிறார் பதிகத்தை

சொத்தை உடையவன் நிலம் உடையவன்  பற்றுவதை போல பகவானை உடையவன் என்று /பகவத் பத்தி  சிந்தை யாய்
–ஞான வைராக்ய ராசய-நாத முனிகளை கொண்டாடி ஸ்தோத்ர  ரத்னம் -இதுவே அவனுக்கு  நிறம் சிறப்பு/ பகவத் பக்தி என்னும் கடல் தான் என்று –
/தயரதர்க்கு மகனாய் -என்று தானே கொண்டாடுகிறோம்/நந்த கோபாலன் மரு மகளே நப்பின்னாய்
/அவன் அனுக்ரகத்தாலே அவனை காணவோ  அடையவோ முடியும்/ஞான கை கொடுத்து -கிருபையாலே-தேட்டரும் -வாக்கும் மனசுக்கும் எட்டாதவன்
/சௌவ்லப்யமும் உண்டு திறல் தேன்-தன்னையும் கொடுத்து அனுபவிக்க பலமும் கொடுக்கும் தேன் இவன்
/பிரமத்தை உணர்ந்து அடைகிறான்-சு பிரதானம்/ தான் அனுபவிக்கிறான்-பர பிரதானம்/ தென் அரங்கன்- நினைத்தாலே தித்திக்கும் /
திரு மாது வாழ்– வாட்டமில் வன மாலையும் -வைஜயந்தி மாலையும்திரு மேனி ஸ்பரசத்தால் வாட்டம் இன்றி புது கணிப்பாய் இருக்கும் வன மாலை
-தாயார் திரு வடிகளில் இடித்து ஆ கஷ்டம் ஆ கஷ்டம் -பட்டர்/திருவடி தான் பனி தோய்த்த தண்ணீர்/புதுசாக ஆக்கவாம்
/அவளே மாலை போல -கேசவ பிரியா- திரு துழாய் மாலைக்கு பெயர் -வன மாலையே மனைவி போல உண்டாம்/திரு ஆர மார்பு- திரு ஹாரம் ஹாரமே திரு/சேர்திக்கு மங்களாசாசனம் /வாழ்த்தி /திரு மரு மார்பினனக்கு —-சிந்தையில் திகழ வைத்து -ஸ்ரீவத்சன்-பீடம்-வடிவாய் நின் வல மார்பினில் வாழும்  மங்கையும் பல்லாண்டு
//மால் கொள் சிந்தை-பித்தேறிய மனசே/கோமள வல்லி தாயாருக்கும் ஆரா அமுதனனுக்கும்- மாற்றி திரு கோலம்
-திரு வா மாலா /ஆட்டம் மேவி-பிரேமம் ஓட்ட ஆடி பாடி /த்வாரகையில்-பார்க்க வேண்டும்-உயர்வு தாழ்வு இன்றி-ஆடி பாடி அழுது-அழுக்கை போக்கி கொள்ள
/அலமாந்து -நியதி உடன் பேசாமல் அழைத்து -அயர்வு எய்தும்-பரவசராய் அநந்ய பிரயோஜனர் உடைய-மெய் மறந்து இருக்கும்-

ஒன்றும் பண்ணாத பொழுது அரங்கன் ஆட் கொண்டானே என்று கலங்கி

-அறிவு குடி போய்-ஈட்டம் கண்டிட-அடியார்கள் குழாம்- கூடுமேல்- கூடித்தாகில் வேற பிரயோஜனம் இல்லை –

-கண்ணும் கண்ண நீரும என்று இருப்பவரை பார்ப்பதே தேகம் கொண்டதின் பலன்

-ராமன் கிருஷ்ணனுக்கும்-சபரி விதுரன் அழுவதை பார்த்து கொண்டே இருந்தார்களே

/புலவர் நெருக்கு உகந்த பெருமாள் ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன் –

திருஷ்ட பிரயோஜனம்-இது  தான் -அடியார்களின் ஈட்டம்- அதிர்ஷ்ட பிரயோஜனம்-மோட்ஷம்- இருக்குமா இருக்காதா- ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதோ –

—————————————————————————————————

பகவத் விஷயத்தோடு நின்று தரிக்க மாட்டாமல்
பாகவத விஷயத்திலே தாம் பித்தேறிக் கிடக்கின்றமையை வெளியிடுகிறார் இதில்
பகவத் விஷயத்தில் மெய்யன்பு பூண்டவர்கள்
பாகவத விஷயத்தில் பிரவணர் ஆகாமல் இருக்க முடியாதே
பாகவத ப்ராவண்யம் அதிசயித்தால் அன்றி பகவத் விஷய பிராவண்யம் சத்தை பெறாதே
இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்தைக் காட்டிலும் பாகவத விஷயமே பள்ள மடையாய் இருக்கும்
ஆரம் கெட -பரன் அன்பர் கொள்ளார் -என்று அவர்க்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவர் இ றே-

-தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
தம் முயற்சியால் தேடித் பெறுவதற்கு
அருமையானவனும்
தன்னை முற்ற அனுபவிப்பதற்கு உறுப்பான
வழியைக் கொடுப்பவனும்
தேன் போலே பரம போக்யனும்
தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்வதற்கு இடமாய்

வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
வாடாமல் செவ்வி பெற்று இருக்கிற
வனமாலையை அணிந்துள்ள
திரு மார்பை உடையவனுமான
ஸ்ரீ ரெங்க நாதனை மங்களா சாசனம் பண்ணி
அவன் திறத்தில் மோஹம் கொண்ட மனத்தை
உடையவராய் –

ஆட்ட மேவி அலம் தழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
அந்த மோஹத்தாலே நின்ற இடத்தில்
நிற்க மாட்டாமல் ஆடுவதிலே ஒருப்பட்டு
அலந்து அழைத்து -பகவன் நாமங்களை
வாய் விட்டு கதறிக் கூப்பிட்டு
இளைப்பு அடைகின்ற
உண்மையான அன்பு உடையரான
பாகவதர்களின்
மேவி -விரும்புதல்
நம்பும் மேவும் நசையாகுமே

ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே
கோஷ்டியை சேவிக்கப் பெறுவோம் ஆகில்
கண் படைத்ததற்கு பயன் அதுவே அன்றோ –
கூடுமேல் காணப் பெறுவதில் அருமை தோற்றுமே

பூணார மார்பனை புள்ளூரும் பொன்மலையை காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே –
இது சாமான்ய சித்தாந்தம்
பாகவதர்கள் கோஷ்டியை சேவித்தால் அன்றிகண்களுக்கு சாபல்யம் கிடையாது -விசேஷ சித்தாந்தம்
சாரம் அறிந்தவர்களில் தலைவர் இவ்வாழ்வார்

——————————————————————————————–

2-2–தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி

ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2

————————————————–

கங்கை நீராட்டமும் -வேட்கை வேண்டாம்-இதழ்கள் அதிகமாக உள்ள தாமரை மேல் இருக்கும் –

பத்ம பிரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலேயே -பத்ம தலாயா தாஷி -விஷ்ணு பிரியே –

-தோள்கள் அணைந்து அருளினதும்/அம்பினால் சப்த சால விருஷங்களை-புணாராய் நின்ற மராமரம்-ஏழும் எய்தாய் ஸ்ரீதரா

-சப்த லோக ரிஷிகள் கன்னிகைகள் நடுங்க-நிரை மேய்த்தும்-மாடு கன்று போன சௌலப்யம் -ராம கிருஷ்ண  சேஷ்டிதங்களை நினைந்து -உருகி-

ஆடி பாடி-கற்பக பொடி போல கற்பக மரத்தை அணைத்தால் போல-ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருஷ்யாம்

-ஒ அரங்க -என்று கூப்பிடும்-தொண்டர் அடி பொடி-தம் சொரூபமே இது-இது கிடைக்கும் பொழுது -கங்கை நீராட்டம் வேண்டாம்

-நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாராயணன் பாத துழாயும் இழி புனல் கங்கைபரம ஏகாந்திகள் தேவதாந்திர சம்பந்தம் உண்டே

-கோவர்த்தனம் பொழுது -அவர்களுக்கு கூடாது என்று தானே கொண்டான்-அவனுக்கு அதுவும் கூடும் எல்லாரும் சரீரம் தானே

அனுபவிக்க அனுபவிக்க -பால பாடத்திலே இருப்பான்-

பிராட்டி அனுபவம் -தனியன் பெரு வெள்ளத்தில் இழிய தோய்ந்தால் போல –

எதிர் நீச்சல் போட இவன் ஒருவனே தகுதி-ரத்னம்-ஒளி /புஷ்பம் -மணம்/ போல இருவரும்-

ஆஸ்ரதிரை விச்வசிப்பிக்கும் செயல்கள் -உபய விபூதி நாயகன் கொலை கொண்டு பசு மேய்த்தும்-இவையே- ஏ காரம்-நினைந்து

-அநந்ய பிரயோஜனராய்-நினைப்பதே புருஷார்த்தம் -கற்றினம் மேக்களும் மேய்க்க பெற்றான் பாவியேன் உங்களுக்கு ஏச்சு கொலோ

/தீர்த்தனுக்கு தீர்த்தனாய் சுத்தி இது தானே காதா சித்த சம்பந்தம் தானே கங்கைக்கு

/பல சிக்கு தலைகளிலே புக்கு /சிக்கி தலையனுக்கு பூவும் பூசனையும் தகுமோ-நலம் திகழ் சடையான்-பெரிய ஆழ்வார் திரு மொழி பாசுரம்

——————————————————

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
இதழ்கள் மிக்கு இருந்துள்ள
தாமரைப் பூவில் பிறந்த
பிராட்டியினது
திருத் தோள்களோடு
அணைய அமுக்கிக் கொண்டதும்
புகாரை உடைய அம்பினால்

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
நீண்ட சப்த சால வ்ருஷங்களை
துளை செய்து தள்ளியதும்
பசுக் கூட்டங்களை மேய்த்ததும்
ஆகிய இப்படிப் பட்ட
பகவத் சரித்ரங்களையே
அனுசந்தித்து

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
சரீர விகாரம் பெற்று
காதலுக்கு போக்குவீடாக வாய் விட்டுப் பாடி
ஒ அரங்கா என்று அவன் திரு நாமங்களைச் சொல்லி
கூப்பிடுகிற கைங்கர்யத்தையே
நிரூபகமாக உடைய
பாகவதர்களின் திருவடி தூள்களிலே

ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே
நாம் அவஹாகிக்கப் பெற்றால்
பிறகு
கங்கா ஜலத்தில் அவஹாகித்து
நீராட வேணும் என்னும் ஆசையானது எதற்கு

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து -என்ற
லௌகிகர் படி இல்லாமல் எம்பெருமான் திவ்ய சரிதங்களை அனுசந்தித்து
ப்ரீதி அடைந்து
அந்த ஹர்ஷத்தால் ஆடியும் பாடியும்
பகவத் திரு நாமங்களை வாய் விட்டுக் கதறுகின்ற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாத தூளி ஒன்றாலே குளிக்கப் பெறுவோம்-

———————————————————————————————–

2-3-ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்

மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில்  திரு முற்றம்

சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே  -2-3

——————————————-

துஷ்யந்தச்த ரமச்யச்த போத யந்த பரஸ்பரம் -பேசுவதால் தனிமை தவிர்க்கிறோம்

/நா படைத்த பலன்/பாபம் தொலைக்க /சொல்லுபவனுக்கும் கேட்பவனுக்கும்

/வேதாந்தம் கற்ற பின்பு தான் அருளி செயல்-சாமான்ய சாஸ்திரம்-எளிமை அனுபவிக்க-பெரியவன் வந்தான்

-ஜன்ம  கர்மம் மே திவ்யம்-உண்மையான அவதார ரகசியம் புரிவது கஷ்டம்

-விரஜை யோகிகளின் கண் அடி பட்டு -கோபால விம்சதி-சோதனை சாலை போல இதிகாசமும்  புராணங்களும்/

கோல பொடி மண் பொடி கண்ண நீர் சேறு -திருவடி பட்டு துகைக்க -நப்பினை- நீளா /பூமி பிராட்டி / ஸ்ரீ  தேவி-சீதா  மூவரையும்

/உடன்  அமர் காதல் மகளிர் திரு மகள் மண் மகள் ஆயர் மட மகள் -ஆழ்வார் /

ஏறு-எருதுகளை-கும்பன்-யசோதை சகோதரன் -கொடி-குலேசேகரர் திரு கும்பன் குமாரியும் நீளா தேவி அம்சம்

–அடியார் இடம் அபார ஆசை நீளா தேவிக்கு என்பர்/சாயை போல இவர்கள் இருவரும்/நிஜம் இடம் விட நிழலில்

/பாபமே இல்லை-என்பாள் நீளா தேவி // பாபம் பண்ண வில்லை-பூமா தேவி //பாபம் செய்தாலும் மறந்து விடு-ஸ்ரீ தேவி//

கரு விருத்தம்–தனியன்- கோட்டிடை ஆடின கூத்து -கற்ப  ஜன்ம சைசவ கௌமார–மரணம்- பாப புண்ய கர்மாக்கள்  தான் /

மகா வராக -நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்/சக்கரவர்த்தி திருமகனே- முன்னி-சீதையை பிரித்த காலம் காட்ட

– மாறு- விரோதி ராவணன்-நேர்ந்த நிசாசரரை-மண் அளந்ததும்-குலத்து உதித்தோரை கொல்லேன்-விரோசன் பிள்ளை மகா பலி-ஈர் அடியால் முடித்து கொண்ட முக்கியமும்

-வாயார சொல்லி-ப்ரீதி மிக்கு பாடி-பாட்டினின் மிகுதியால் வரும் கண்ண நீர்/ஆற்று பெருக்கு போல

-உள் திரு முற்றம் -தர்ம வர்மா திரு சுற்று  முதலில்/ அடுத்துவிஷ்வக் சேனர்/ மூன்றாவது குலேசேகர்/ நாலாவது திரு மங்கை ஆழ்வார்

/உள் மணல் வெளி-கோண வையாளி உண்டு-.தலைக்கு இந்த சேறை அணிந்து கொள்வேன்/

/இடை சுவர் விரோதிகளை முடிப்பான்-எருதுகளை அடர்த்து/இருந்தது கிடந்தது உமிழ்ந்தது

-பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்விராதன்-ராமன் இடம்-ஈர் அடியால் ஒழித்தியால்-விழுங்குதியால்-சீராளோ

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில்  திரு முற்றம் ஒட்டின பூமியை ஒட்டி விடுவித்ததும்-பாசு தூர்த்த கிடந்த பாற் மகட்கு  பண்டு ஒரு நாள் -மாசு உடம்பில்-அப்ராக்ருதமாய் இருந்தும்- நீர் வாரா மானம் இல்லா பன்றியாய் -அலங்கார பிரியன்-பிராட்டி போல இருந்தானே

-சிலம்பின் இடை சிறு பரல் போல் பெரிய மேரு கண கணப்ப – -கோட்டிடை வைத்து அருளிய –

அஜகது சு சுபாவம்-தன் பரத்வம் மாறாமல் பெரும் கேளலார் தம் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்-

-பராங்குச நாயகி ரட்ஷிக்க- எங்கும் பக்க நோக்கு அறியான்-

நீரில் வாழும்  ஆமையான கேசனே-இங்கும் பரத்வம் மாறாமல் கேச பாசம் காட்டிய கூர்மம்

-பிராட்டியை பிரித்த பையலை– கொடுமையில் கடு மிசை அரக்கன் –வம்புலக் கடிகாவில் சிறையில் வைத்ததே குற்றமாக

-முன்பொலா ராவணன் -ஏகாந்தமாக இருந்த பொழுது-மாறு செய்த  வாள் அரக்கன் நாள் உலப்ப –வாளும் சந்திர காசம்- வரமும் கொடுத்தாரே

-அன்று இலங்கை  நீர்  செய்து -செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார்-பிராட்டிக்கு மட்டும் இல்லை-இந்த்ரனுக்கும் உதவினாரே -மண் அளந்ததும்

-பொன் முத்தும் அரி  உகிரும்  புளை கைமா கரிகொடும்  உதித்தவற்றை கொண்டு வருகிறாள் காவேரி

–அது போல பக்தனின் பக்தி ஆகிற முத்துகளை கொண்டு வரும் கண்ண நீர் -திரு முற்றம்-சுத்தி பண்ணி இருக்கிற முற்றம்

-ஆலி நாடன் -ராஜ மகேந்தரன் மாட மாளிகை-சித்திரை வீதி/அகலம் ஆக இருக்கும்-/

உள் துறை வீது உத்தர வீதி-கைங்கர்யம்/ பரர் வாழ -திருவலகு திரு பணி செய்து வைத்த முற்றம் சேறாக்கி வைத்தார்கள்-

செழுமையான சேறு/புனுகு நெய் மலர் கொண்ட சென்னி-இது வரை-இவை அமங்களம் -தோஷம்-போக இந்த சேறு

பாம்போடு இருப்பது போல உடம்பு-சர்வ தரமான்  உபாயாந்தரங்களை வாசனையோடு -விட வேண்டும் –

அது போல அந்த தோஷம் தீர ஸ்ரீ வைஷ்ணவர்களின் அழகிய சேறை அணிய பாரிகிறார் -இதுவே அலங்காரம்/பாவனத்வம்/

———————————————————————————————————————-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
நப்பின்னைக்காக ஏழு ரிஷபன்களை
வலிய அடக்கியதும்
வராஹ ரூபமாய் பூமியை கோட்டால்
குத்தி எடுத்ததும்
முன்பு சக்கரவர்த்தி திருமகனே
திரு அவதரித்து

மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
சத்ரு ராஷசர்களை கிழங்கு எடுத்ததும்
திரிவிக்ரமனாய் உலகு அளந்ததும்
ஆகிய இந்த சரிதங்களை
வாயால் சொல்லி
வாய் விட்டுப் பாடி
ஔதார்யத்தையும் பெருமையையும்
உடையகாவேரி ஆறு போலே
பெருகுகின்ற
நில்லாமல் பெரு வெள்ளம் இட திருஷ்டாந்தம் காவேரி –

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
ஆனந்த பாஷ்பங்களாலே
நம்பெருமாள் சந்நிதி உள் முற்றத்தை

சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே
சேறாக்குகிற பாகவதர்களின் திருவடிகளால்
துகையுண்ட அழகிய சேற்றை
என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்-

———————————————————————————————–

2-4–தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு

ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்

நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது

ஏத்தி இன்புறும்  தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4

——————————————————————————————-

நவநீத சேஷ்டிதம்/-கோபித்து/தயிரும் வெண்ணெயும்-காரணமான – பால்-உடன் உண்டால்-உடம்புக்கு -என்ன ஆகும் என்று கோபிப்பாளால்
/உண்ணா விடில் மற்றவை கோபித்து கொள்ளும்/மூன்று நாச்சிமார் சொல்லி/ இங்கு தயிர் வெண்ணெய் பால்- அனுபவம் ஒத்தது-.
தண் -குளிர்ந்த -கண்டதும் -பார்க்காமல் பல நாள் உண்டான்- கண்டதும் கோபித்தாள்-
ஆர்த்த தோள்- கட்ட பட்ட கையன்–எம்பிரான்- ஸ்வாமி-அடியார்கள் ஸ்பர்சம் பட்ட வெண்ணெய் பால் சாப்பிட்டேன் என்ற தால்-
ஸ்வாமி-தழும்பு ஏறும் படி நாரணா என்று அழைத்து-மெய்-உண்மை/சரீரம்  தழும்ப தொழுது-/
கடைந்து பிரித்த வெண்ணெய்/அதற்க்கு தோய்த்த தயிர்/ அதற்க்கு அடி பால்-காரணம் காரியம் மூன்றும்
– பிரகிருதி- பிரகிருதி-விக்ருதி- 7 தத்வங்கள்- பிறக்கும் பிறப்பிக்கும் இவை-விக்ருதி-16பிறக்கும் பிறப்பிக்காது  போல
மூன்றும்-/உடன் உண்டான்-அன்புக்கு எல்லை இருந்தால் அன்றோ கோபத்துக்கு எல்லை/ தயிர் உண்ட பொன் வயிறு/
சீரா  வெகுளியளாய்-கோவிந்தன் வந்து புறம் புல்குவான்-மத்து  ஆர பற்றி கொண்டு–ஏரார் இடை நோவ எத்தைனையோர் போதுமே –
சந்த்யாவந்தனதுக்கு ஆள் வைக்காத போல தானே கடைவாள்//உறங்கி அறிவுற்று -நரசிம்ஹம் அறிவுற்று தீ விளித்து -போல யாதவ  சிங்கம்
-பொத்தை விரலை –மோர் குடத்தை கண்டால் விருத்த ஸ்த்ரிகளை ஆண்களை கண்டது போல-
இவன் தான் ரஷிப்பான் என்று இருக்க மாட்டார்களே/தாரார் தடம் தோள்  உள் அளவும் கை நீட்டி/கோவில் சந்தானம் பூசின தோள் காட்டி கொடுத்து விட்டதாம்-.

ஏத்தி இன்புறும்  தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே

வெள்ளி மலை ஒக்க வெண்ணெய்  வாரி விழுங்கி விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்-திருட்டு பல நாள் -ஒரு நாள் அப்படி அடுத்த நாள் இப்படி பட்டர்-நஞ்சீயர்

/வாயது கை அதுவாக பிடித்தாள்/நெய் உண் வார்த்தையுள்-. ஆய்ச்சி அன்று வெண்ணெய் வார்த்தையுள்–கண்டவாறே கட்டினாள்

சிக்கனவே  ஆர்த்து அடிப்ப–கை கூபினானாம்-5 லஷம் பெண்களும் நிற்க ஊரார் எல்லோரும் காண உரலோடு /எம் பிரான்-என்னை இத்தாலே எழுதி கொண்டான்-

-பின்னர் வணங்கும் சோதி-பெரிய பெருமாள்-என் அரங்கன்-என்று எழுதி கொடுத்தவர்கள்

/அம்மே என்பாரை போல -திசை என்றும் எப் பொழுதும் கூப்பிடுவது போல-தொழுது ஏத்த –

-சிறியாத்தானை போல -இன்புறும் தொண்டர்-மனசில் வைத்து யேத்துவதாலே கண்டால் போன்ற இன்பம் பெற்ற தொண்டர்

-இவர்களை ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சு-இது நித்யமாக இருக்க வேண்டும் அடியாரோடும் நின்னோடும் பிரிவின்றி ..பல்லாண்டு

——————————————-

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
தோய்த்து குளிர்ந்த தயிரையும்
வெண்ணெயையும்
பாலையும்
ஒரே காலத்தில் அமுது செய்த அளவிலே
யசோதை பிராட்டியானவள்
அந்த களவு தன்னைப் பார்த்து

ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
கோபித்து
பின்பு அவளாலே பிடித்துக் கட்டப் பட்ட
தோள்களை உடைய
எமக்குத் தலைவனான
என் ரெங்க நாதனுக்கு ஆட்பட்டவர்களாய்

நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
நாக்குத் தடிக்கும்படி
நாராயணா என்று கூப்பிட்டு
சரீரம் காய்ப்பு ஏறும்படி சேவித்து

ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே
ஸ்தோத்ரம் பண்ணி
ஆனந்தம் அடைகிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
திருவடிகளை
எனது மனமானது துதித்து
அவர்களுக்கே பல்லாண்டு பாடும்

எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மயக்கவல்ல
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட அபதானத்தை அனுசந்தித்து
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –அணி அரங்கன் -என்றபடி
ஸ்ரீ ரெங்க நாதனை கண்ணபிரானாக பாவித்து பணி செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டு இருப்பேன்-

———————————————————————————————–

2-5– பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து போர் அர வீர்த்த கோன்

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்

மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என்  மனம்  மெய் சிலிர்க்குமே -2-5

—————————————————————-

வஞ்சனம் உடைய -கோபம் கொண்ட -7 ரிஷபங்கள் –பூ புனை கன்னி புனிதன்- நீராடி வந்தான் ஆண்டாளை திரு கல்யாணம் பண்ணி கொள்ள

//குரல்-முழக்கத்தை உடைய -எருத்தம் –

போர் அரவு-காளிங்கன்/-ஈர்த்த கோன்- கோகுலமே போர் களமாக ஆகும் படி  நிருத்தம் செய்தானாம்-முடித்த ஸ்வாமி

/தன்னை காத்து கொண்டான் என்று  ஆயர்கள் மகிழ

-பூ தரு புணர்ச்சி /புனல் தரு புணர்ச்சி/களிறு தரு புணர்ச்சி-போல/தன்னை தானே கத்து கொண்டான் என்று தம்மை கொடுப்பார்கள் -ஆழ்வார்கள் அது போல கோகுல வாசிகள்

/சிலை செய்-கல்லால் செய்ய பட்ட -திண் மா -ரஷணமாக-இருக்கும் மதிள்கள்//சிலை-வில்- மேகத்தில் வில் போல -மின்னல் வான வில் -உடம்பிலே உண்மையாக -மெய்

/நாச்சியார் உடன் சேர்த்தி-தம் மனசில் நிலைத்து நின்று திகழ -நித்ய வாசம் -பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்

-இருத்தும் வியந்து என்னை தன் அடி கீழ் -மூன்று தத்துக்கு பிழைத்த குழந்தையை இருதினானே//

தம்மையே- ஏகாரம்– கரு மேகம் நினைக்காமல்-தனி மா தெய்வம் தளிர் அடி கீழ் புகுதல்  அன்றி-

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் இன்றி- இரு கரையர் இல்லை- அப்படி பட்டவர்களை நினைந்து மனசு சிலிர்க்கும்-.

அசுரா வேஷத்தால் பொய்/வல் ஆனாயர் தலைவனாய் -இள  ஏறு ஏழும் தழுவிய –எந்தாய்-என்பான் நினைந்து நைந்தே-

யசோதை போல நானும் சொன்னேன் அநுவாதம் பண்ணி- வள வேழ் உலகில் அகல பார்த்தார்–1-5 கேசவன் தமர் வரை-

.கோவை வாயாள் பொருட்டு- முறுவல் பின்னை- சிரிக்கிறாளாம்  நப்பின்னை பிராட்டி-குதித்தான்-

கீறும் பொது கோலம் போடுவது போல குதிதானாம் -லஷ்மி லலித க்ருஹம் என்பதால்-கௌஸ்துபம் தான் விளக்கு அந்த புரத்துக்கு /

சுடர்  சூழ் ஒளி -சேது அணை தானே ஒளி விட்டு இருக்கிறது என்று நாசா குறிப்பு போல

மெய் சிலை கரு மேகம்-உண்மையான மின்னல் உள்ள மேகம்-கிருபை பொழிய அவள்- மின்னல் இருந்தால் மழை

-சோபை அன்று தண்ட காரண்யம்-பால சந்திரன் தீப்தென -சோபை ஊட்டி கொண்டு ராம சந்திரன்

-மாணிக்க குப்பியில் உள்ள நின்ற நிலை வெளியிலே காட்டுமா போல அடியார்கள் மனசில் இருப்பது -நின்று திகழ

-மாலே மணிவண்ண -அன்பு நீரோட்டமாக தெரியும் வியாமோகம்/நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும்

-பெரிய பெருமாளை நினைந்து அவர்கள் உடம்பு படும் பாட்டை-நினைந்து  என் மனம் பட்டது /

ஸ்பர்சம் த்ரவ்யம் பட்டது எல்லாம்–தொட்டே பார்க்க முடியாத அமூர்த்த த்ரவ்யம் பட்டது ..

————————————————————

பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து போர் அர வீர்த்த கோன்
க்ருத்ரிமாய்
கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை உடைத்தான
ஏழு ரிஷபங்களின்
முகப்புகளை முறித்தவனாய்-
போர் செய்ய வந்த காளிய நாகத்தை
நிரசித்த ஸ்வாமி யாய்

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
கல்லினால் செய்யப்பட்டு
மிக தேஜஸ் சை உடைத்தாய்
த்ருடமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய்
பெரிதான மதிள்களால் சூழப் பட்ட
தென் அரங்கத்தில்
எழுந்து அருளி இருப்பவனான
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிற

மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
சரீரத்தில் வில்லோடு கூடிய
ஒரு காளமேகமானது
தங்கள் மனத்திலே நிலைத்து
விளங்கப் பெற்ற
போய்-வார்த்தைப் பாடு

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே –
மயிர்க் கூச்சு எறியும் சரீரம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்களையே
என் நெஞ்சானது அனுசந்தித்து
மயிர் கூச்செறியப் பெற்றது
மனம் விகாரப் படா நின்றது என்றபடி-

—————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

-பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

குலேசேகரர் ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: