பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-1-6/7/8/9/10/1-11- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை

6–அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை

அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்

தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்

உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

————————————————————————————————

புலன்களை முன்பு சொல்லி/உள்ளம் மிக உருகும் நாள் என்று கொலோ என்கிறார் இதில்/

முந்தி திசை திசை மலர் தூவி சென்று சேர்கிறார்கள்/உறங்குவான் போல் யோகு செய்கிறான்/

உள்ளம் உருக -தாமரை கண்ணன் எம்மான்-பனி அரும்பும் உருகுமாலோ-உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே

-கொப்பூழில் எழில் கமல பூ அழகர்

/அளி மலர்-திசை முகனும் கூராளும் தனி உடம்பன் அவனே அவனும் அவனும் அவனும்/ச பிரம ச சிவா  ச இந்திர – /

/சக படிக்க பட்டவர்கள்/ ஏனை அமரர்களும் அரம்பையரும்-பிரம பாவனையில் இருக்கும் சனகர் சனத் குமாராதிகளும்/

நெருக்கி புக- வாய்க்குள் போல இங்கும் முந்தி//உந்தி -கொண்டு போகிறார்கள் /முற்றும்  உண்ட கண்டம் கண்டீர்/எல்லாம் அவன் சொத்து தானே ரட்ஷிக்க

/எல்லாம் உத்தேசம் என்று /போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்-

மயி ரெங்க தன -கண்ணீர் நீர் ததும்பி -நம்மை நனைகின்றனவாம் -வளர ஆரம்பின்றனவாம் திரு கண்கள்/ஒளி மதி சேர்-அழுக்கும் தோஷம் இன்றி –

மந்த ஸ்மிதம் கொண்டு/மதுர வீஷணம்/தூது செய் கண்கள்/

அமுதம் கண்டு கருடன் உபய நாச்சியார்கள்  அமர ஆதிசேஷன்  படுத்து கொண்டு

/நெஞ்சம் குளிர்ந்து என்று உருகுமோ/அடுத்து கண்களில் நீர் என்று வரும் என்கிறார்.

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
மதுபானதுக்காக
வண்டுகள் படிந்து இருக்கிற
தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும்
சிவனும் இந்த்ரன் கூட
மற்றைய

அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தேவர்களின் திரளும்
ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றுமுள்ள

தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
தெளிந்த ஞானத்தை உடைய
சனஹாதி மகரிஷிகளின் சமூஹமும்
ஒருவருக்கு ஒருவர் நெருக்கித் தள்ளி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
பார்த்த பார்த்த இடம் எங்கும்
புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
வந்து சேருவதற்கு இடமான

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
தேன் மிக்க மலர்களைஉடைய
சோலைகளை யுடைத்தான
கோயிலிலே
திரு வநந்த ஆழ்வான் மீது

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
பள்ளி கொண்டு
திருக் கண் வளர்ந்து
அருளா நின்ற
கடல் ;போன்ற வடிவை உடையரான
பெரிய பெருமாளுடைய
செந்தாமரை போன்ற திருக் கண்களையும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
ஒளியை யுடைய சந்தரன் போன்ற
திரு முக மண்டலத்தையும்
சேவிக்கப் பெற்று
என்னுடைய

உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே
மனமானது உருகும் காலம்
என்றைக்கோ-

———————————————————————————————

7–மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி

ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்

துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா

தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான

அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்

நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

————————————————————————————————————–

அறம்-கிருபை/மறம்-சினம் கொடுமை ஒழிக்க வேண்டும்/வஞ்சனை ஒழிக்க வேண்டும்/

இடர் பார துன்பம்-கர்மம்-பாரமான துன்மம்

/ இரு முப்போது -பஞ்ச கால பாராயனர்/

தொன் நெறி-சநாதன தர்மம்-வைதிக மார்க்கம் -நிலை நின்ற -கலங்காமல்-

/பிரமாணத்தால் -வேதத்தையே அடி படையாக கொண்ட சம்ப்ரதாயம்//தொண்டர்க்கு அடை மொழி இது வரை சொல்லி

/நிறம் திகழும் மாயோனை-அழகே திகழும் /கொலையும் சினமும் கொடுமையும் -மறம் அவித்யை தாயக்கு – காமம் குரோதம் -இரண்டு பிள்ளைகள்

/ரஜோ குணம்/பற்றுதல் ஏற்பட்டு-காமம்-ஆக வளர்ந்து-கிடைத்தால் காமம் வளர்ந்து –கிடைக்கா விட்டால் குரோதம்-அறிவின்மை யால் தான் இவை/வஞ்சம்

-அசத்தியம்/பொய்/இந்த்ரியங்கள் பட்டி தேடி ஓடாமல் அடக்கி /ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றார்கள்

அகற்ற மாய வல் வலைகள்/ கர்ம பலனும் க்ருபா பலனும் அனுபவித்தே தீர வேணும்

/பாரமாய பழ வினை பற்று அறுத்து-அவன் கோர மா தவம் செய்தனன் கொல்-/

இரு முப் பொழுது/பெருமை மூன்று காலமும் ஏத்தி/பஞ்ச காலம்- அபி  கமனம் -நோக்கி சென்று/உபாதானம் சேகரித்து/இச்ஜா -திரு ஆராதனம்/வேத பாராயணம்/யாகம்

/தொண்டர்-ஸ்ரீ வைஷ்ணவர்/மாயா வாதியால் கலக்க முடியாதவர்/மறம் போனதும் அறம் மனசில் வந்து விடும்-கிருபை/

பொன்னி சூழ் அரங்கம்-லீலா விபூதிக்கு ஆபரணம் ஆகிய கோவில்/

அழகுடன் /அரவின் அணை மிசை மேய மாயன்-பின் அழகு வடக்கில் காட்டி முரட்டு சமஸ்க்ருத வாசிகளை திருப்ப

/முன்னிலும் பின் அழகு மிக்க பெருமாள்/மாயோன்-ஆச்சர்ய பூதன்/முனி வாகன  போகம் போன்றவற்றை சொல்ல வில்லை-

-சயனமே ஆச்சர்யம்/அழகு தேடி அரங்கன் இடம் குடி கொண்டது–ஆனந்தம் மேல் கொண்டு கண்ணில் நீர் வரும் நாள் என்றோ என்கிறார்/

————————————————————————–

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
கொடுமையால் விளங்கா நின்றுள்ள
மனத்தை ஒழித்து
வஞ்சனைகளைப் போக்கி
திகழும் மனம் மறம் ஒழித்து என்று
விளங்கா நின்ற மனத்தின் நின்றும்
கொடுமையை நீக்கி -என்றுமாம்
மறம்-கொலை கோபம் கொடுமை

ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
கொடிய இந்த்ரியங்களை
பட்டி மேயாதபடி தடுத்து
துக்கம் விளைப்பனவாய்
பெரிய சுமையாய் நின்ற
பழ வினைகளை வேர்

துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
அறுத்து
பஞ்ச காலங்களிலும் துதித்து
அளவிறந்த
பிராத காலம் -முதல் ஆறு நாழிகை
ஸ்நானம் சத்யா வந்தனம் ஜபம்
பிரதஷணம் நமஸ்காரம் ஸ்தோத்ரம்
இது அபி கமான கால நியமம்
அடுத்து -சங்கவ காலத்திலே -உபாதான கால நியமம்
ஆராதனத்துக்கு வேண்டிய சுத்த தீர்த்தம்சந்தானம் புஷ்பம்
தூப தீப த்ரவ்யங்கள் பால் தயிர் நெய் தேன்
அரிசி பருப்பு கறியமுது சக்கரை நெய் தயிர் பழம்
போன்ற போஜன உப கரணங்கள்
சம்பாதித்து தொகுத்து சித்தம் செய்தல்
அடுத்து மத்யாஹ்ன காலம் -இஜ்யா கால நியமம்
மாத்யாஹ்நிமம்
திருவாராதானம்
அமுது செய்வித்து
அதிதிகளோடும் புஜிப்பது
அடுத்து அபராஹ்ன காலம் -ஸ்வா த்யாய கால நியமம்
வேத வேதாதங்கள் இதிஹாச புராணங்கள் கற்று கற்ப்பித்தல்
அடுத்து சாயங்காலம் யோக கால நியமம்
சந்த்யா வந்தனம் ஜபம்
இரவு போஜனம்
பகவத் குணானுசந்தானம்
பள்ளி கொள்ளுதல்
பஞ்ச கால பராயணர்

தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
பழைய மரியாதையிலே நின்று
தாச பூதர்களான

அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி
தர்ம சிந்தையே விளங்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
பரம பிராப்யனாய்
காவேரியால்

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
அழகு பெற்ற கோயிலிலே

நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
அழகு விளங்கா நின்றுள்ள
ஆச்சர்யமான எம்பெருமானை
எனது கண்களானவை சேவிக்கப் பெற்று

நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே
ஆனந்த கண்ணீர் ததும்படி நிற்பது என்றைக்கோ

—————————————————————————————-

8–கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்

கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி

கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

————————————————————————

திவ்ய ஆயுதங்கள்-கால விளம்பம் கூடாது என்று எப் பொழுதும் கொண்டு

/ரஷணத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் இதில்/வல் வினையேன் இன்புற்று வாழும் நாள்

/கோல்-அம்பு நெடும் சார்ங்கம்-பெரியதாய் சார்ங்கம் உதைத்த சர மழை//தானே வர்ஷிக்கும்

/கூன் நல்- வாய் அமுதம் உண்பதால்-அனுபவம் அதிகம் மிஞ்ச குருகி-கூன்/விரோதிகளை நிரசிக்கும் ஆழி- கொலை ஆழி

/கொடும் தண்டு-  /அடித்தால்-பயந்து ஓடுவார்கள்-கொடும்/

கொற்ற-வெற்றி -ஒள் வாள்/மன்னவனுக்கு சூசுகம் நாந்தகம்

/கால்-காற்று போல வேகமாக கருடன்- வெற்றியே தர்மம் கருடனுக்கு பஷி ராஜன்/
ஆடி சுவாதி- முக்கியம் ஆழ்வார் திரு நகரி-திரு மஞ்சனம் உண்டு-பிரசித்தம்/

புறம் சூழ்ந்து பாதுகாக்கும் மீன்கள் நிரம்பிய வயல்களாலும் சோலைகளாலும்/
மால்- கண்டு இன்பம் கலவி எய்து-சேவித்து சம்ச்லேஷம்-தழுவுதல்/உஜ்ஜீவிக்கும் நாள் என்றோ ?

வாழும் நாள் ஞானம் பக்தி உடன் இருப்பதே/நாராயண ஒ மணி வண்ணா -விண்ணுளார் வியப்ப வந்து

/முதலை தன்னால் அடர்ப்புண்டு -இலையார் பூ-வாழ்க்கையில் இன்பம் -பொய்கையை மறைத்து கொண்டு/கொலையார் வேழம் நடுக்குற்று குலைய

/ஜீவாத்மா சாமான்யன் இலை இந்த்ர்யங்கள் அதை விட சக்தி-சென்று நின்று ஆழி தொட்டானை/பிரயோகிக்க வேண்டாம்

/வட்ட வாய் நேமி- கருதும் இடம் சென்று பொருத்தும் சக்கர கையன்

/சுடர் ஜோதி மறையாதே –தொழும் காதல் களிறு அளிப்பான் /ஆபரணம் ஆயுதம்/கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்

பரத்வ சூசுகங்கள் -தொண்டர் மன்னவனுக்கு -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தவன் வாழியே

/திரு வண் வண்டூர்-ஒரு வண்ணம் சென்று புக்கு-செறு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே

–கிளியை  தூது விட -வழி நெடுக அனுபவம் கொடுப்பான்-பார்க்காமல் ஒரு வண்ணம் சென்று புக்கு

-செறு ஒண் பூம் பொழில் சூழ்-பூ வுக்கு  இருவர் சண்டை போட்டுகொண்டு–காதலியும் காதலனும்

/கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் -ஆழ்வாரை பார்த்து பொய் சொன்ன வாய்

/ கண்ணும் சொல்லும்/ காலில் விழுந்து விடு/இன்றியமையாத அடையாளம் சொல்கிறார் கடைசியில்

/திருந்த-விட்டு பிரிந்து -தளர்ந்து இருக்கிறேன்-சாஸ்திரம் உண்மையாக்க இருக்கிறார்-ஒரே ரூபத்துடன் இருப்பார் சேர்ந்தாலும் பிரிந்தாலும்/

ச சால சாபஞ்ச-வீரன்-ராவணன் வில்லை போட்டதும்/வில்லாண்டான்

/கோல் ஆர்ந்த -அம்புகள் பூட்டிய  சார்ங்கம்//சங்கோடு சக்கரம்/சங்கரையா உன் செல்வம் சால அழகியதே

/உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் /

சீதை தோற்றித்த ஒரு குரங்கை கேட்டாள்-ஆண்டாள் கேட்டதோ சங்கரையா/பொதுவாக உண்பதனை ..தானே/கூன் நல் சங்கம்

/சிலை இலங்கு-ஒண் சங்கம் என்கின்றாளால்-/சங்கம் அனுபவத்துக்கு சக்கரம்-விரோதிகளை இரண்டு துண்டாக்க

-கொடும் தண்டு-கௌமோதகி-பிடித்த பிடியாலே எதிரிகள் கதி கலங்கி-மண்  உண்ணும் படி / கொற்ற வாள்- இவனே மன்னவன் என்று சொல்லும் உடை வாள்/

காற்றை போல வேக கதி-பாய் பறவை /கடும் பறவை/இவை அனைத்தும் சூழ்ந்து இருந்து ரட்ஷிக்கும்/பெருமான் தானே ரட்ஷிக்க வேண்டும்/

குரங்கள் தூங்க -உண்டோ கண்கள் துஞ்சுதலோ-ராமனும் லஷ்மணனும் -வானரங்களை ரட்ஷித்தார்களே

-பஞ்ச ஆயுதம்-ராமானுஜர்- தென் அரங்கம் செல்வம் திருத்தி வைத்தாரே சூசுகமாய் இதை சொல்கிறார் /

சேல்-மீன்-நிரம்பிய ..சோலை வாய்ப்பு/ வண்டினம். முரலும் சோலை…அண்டர் கோன் அமரும் சோலை

/காவேரி நுரை-கங்கை பார்த்து சிறிக்கிறாளாம்/
செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய்- அயனத்தை பற்றியது வாழ்ந்து போனது/-அயனத்தை பற்றிய பராங்குச நாயகி-தாழ்ந்து போனாளே

கண்டு இன்பம் கலவி-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்/மனிசர்க்கு தேவன் போல தேவர்க்கும் தேவாவோ/

/மாலோன்-சர்வாதிகன்-செங்கோல் உடைய திரு அரங்க செல்வன்

/லோகாந்தரத்தில் தான் காண வேண்டும் வஸ்து இங்கே சேவை சாதிக்க–இழந்து போகலாமோ

-வல் வினையேன்-பூ லோக வைகுண்டம்/கருட வாகனும் நிற்க சேட்டை

/சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான்/வல் வினையேன்-பகவத் அனுபவம் விரோதம் எல்லாம் -ராஜ்யமும்-வல் வினை தானே

————————————————————————————-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
அம்புகளோடு கூடிய
பெரிதான ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லும்
வளைந்து வி லஷணமான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கும் –

கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
எதிரிகளை கொலை செய்ய வல்ல
ஸ்ரீ ஸூ தர்சனமும்
பகைவர்களுக்கு கொடும் தொழில் புரிகின்ற
கௌமோதகி என்னும் கதையும்
வெற்றி பெற்று ஒளி மிக்க
நாந்தகம் என்னும் வாளும்

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
வாயு வேகம் போன்ற
மிகுந்த நடையை உடைய
பெரிய திருவடி என்னும் பேரை உடைய

கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
ஜெய சீலனான பஷி ராஜனும்
ஆகிய இவை எல்லாம் நால் புறமும் சூழ்ந்து ரஷை இட

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
நீர் வளத்தால் மீன்கள் நிரம்பிய
விசாலமான கழநிகளாலும்
சோலைகளாலும் சூழப் பட்ட

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
சர்வாதிகனான எம்பெருமானை
ஆனந்த மயமான சம்ச்லேஷம் பெற்று

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே
மகா பாபியான அடியேன்
சம்சாரத்தில் அழுந்தி ருசி கண்டு இருந்து
நித்ய கைங்கர்யங்களை இழந்து கிடக்கிற அடியேன்
வாழ்வது என்றைக்கோ-

—————————————————————————————-

9—தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்

குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்

மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்

சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்

திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்

போராழி அம்மானை கண்டு துள்ளி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

——————————————————–

தூராத–குறைவற்ற – மனக் காதல் தொண்டர் தங்கள்–ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியில் — பூமியில் புரள ஆசை கொண்டார்-

– சுகர்  உத்தவர் பிரகலாதன் ஆளவந்தார்-அணைய ஊற பெரியவர்-ஏதேனும் ஆக அருள போவதை -பொசிந்து காட்டுகிறார் இதில்

-நந்த கோபாலன் திரு மாளிகையில் புரண்டு இருப்பதை இன்றும் காணலாமே/திருவடி பட்ட துகள்கள் பட

/உத்தவர் கதம்ப மரம் ஆக பிரார்த்திக்கிறார்/

/திரு புகழ்கள்- குணங்களை-திரு நாமங்கள் பலவும்-பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு  மா மாயன்-மாதவன்  வைகுந்தன் /நாமம் பலவும் சொல்ல

-பரத்வம் சௌலப்யம் போன்ற /ஆனந்தம் போக்கு வீடாக அழுத கண்ணீர் /நினைந்து/உருகி-ஏத்த-திரு நாமம் சொலி ஆனந்தம் ஏற்பட்டு அழுது கீழே சொல்லி

ஒன்றும் செய்ய வில்லையே-என் நன்றி செய்தேன் என் நெஞ்சில் திகழ்கின்றானே

-உருகி-அவன் செய்தானே என்று ஏத்துவது /முழவு ஓசை- துள்ளி-ஆனந்தத்தில் கூத்தாடி-முன்பு கட்டுபாடுடன் பாடி இருந்தார்

-கும்பிடு நட்டம் இட்டு ஆடி-தலை குப்புற-வீதி ஆர நாட்டியம் ஆடி-தூரா குழி தூர்த்து  அகன்று இருப்பது போல

-சம்சாரம்-எதிர் தட்டு-தூரா மன காதல்–பகவத் அனுபவத்தில் போரும் என்ற நினைவு இல்லாத

-ஸ்ரீ வைஷ்ணவர் கோஷ்டியில் சேர்ந்து -சொரூப ரூப குண சேஷ்டித-பரம்-கல்யாண குணங்கள்-திரு நாமம்

– நினைதொறும்  சொல்லும் தோறும் நைந்து உருகி

– நகா பேரி வாத்தியம் சீரார்ந்த  முழவு ஓசை-தட்டு முட்டு சின்ன தாளம்/வீர வண்டி வாத்தியம்/சேம கலம்-ரிஷப கதி மணி தனியாக

/ஏதமில் -திரு பள்ளி எழுச்சி பாசுரத்தில் சொன்ன /ஓசை கேட்க கேட்க தானாகவே ஆடுவோம்

/கண்டு துள்ளி-சிம்காசனத்தில் ச்வாதந்த்ர்யதுடன் இருந்த இருப்பு ஒழிந்து புரள ஆசை படுகிறார்/

——————————————————————————————-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
ஒரு நாளும் திருப்தி பெறாத
ஆசை கொண்ட மனத்தை உடையரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள்

குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
கோஷ்டியிலே கூடி
எம்பெருமான் கீர்த்திகள்
எல்லாவற்றையும் வாயாரப் பாடி
இன் கனி தனி அருந்தேன் –
எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும்
பர்யாப்தி பெறாத மெய்யடியார் திரளில் புக விரும்பி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
அவ்வளவிலும் திருப்தி பெறாத
மனசில் உள்ள ஆனந்தத்தோடு
அழுத கண்களில் உண்டான
நீர் துளிகள்

மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
மழை போலே பெருகி வர
எம்பெருமானை நினைந்து
அத்தாலே மனம் உருகி
ஸ்தோத்ரம் பண்ணி
எப்போதும்

சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
நல்ல வாத்தியங்களின் கோஷமானது
கடலோசை போலே முழங்கப் பெற்ற
கடல் கோஷம் ஒய்வு இல்லா போலே
வாத்தியங்களின் கோஷமும் ஒய்வு இல்லாமை

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

போராழி அம்மானை கண்டு துள்ளி
பகைவரோடு யுத்தம் செய்வதையே
தொழிலாக உடைய திரு வாழி
வாழ்வாரை யுடையரான
எம்பெருமானை சேவிக்கப் பெற்று
ஆனந்தத்துக்கு போக்கு வீடாக
தலைகால் தெரியாமல் கூத்தாடி
மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -திருவாய்மொழி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே
பூமியிலே உடம்பு தெரியாமல்
புரளுவது என்றைக்கோ
இப்போது சிம்ஹாசனத்தில் மார்பு
நெறித்து இருக்கும் இருப்பு தவிர்ந்து-

————————————————————————————–

10–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய

துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா

சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்

அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்

இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்

இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

———————————————————————————–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய— சம்சார விஷ செடியில் இரண்டு அமர்த்த பழம் கேசவ பக்தி ஓன்று அடியார் குழாம் ஓன்று

ராமா நுஜர் துல்ய விகல்பமாக கொள்ளாமல் இதுவோ அதுவோ இல்லை/இது தான் வேணும் -இது இல்லை என்றால் தான் கேசவ பக்தி

/பெரிய வானகம்-அழியாத- வலிமை மிக்க -சத்ய லோகம்-நித்ய பிரளயத்திலும்-தனி மனிதன்
-நைமித்திக பிரளயம் – 1000 சதுர யுகம்-பகல் முடிந்து – மூன்று லோகம் அழியும்

-பிராக்ருத பிரளயம் அன்று எல்லாம் அழியும் -ஒன்றும் தேவும்..மற்றும் யாரும் அல்லா அன்று-ஆத்யந்திக பிரளயம் ஜீவாத்மா முக்தன் ஆவது/

/ஸ்ரீ ரெங்க விமானம் திரு பாற் கடலில் தோன்றி சத்ய லோகம் இருந்து-மண் உய்ய-பூமி- மண் உலகில் மனிசர் உய்ய -விபீஷணன் போல்வார் உஜீவிக்கவும்/

/கருட வாகனும் நிற்க சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே /மிக்க துக்கம் உண்டாக்கும் பாபங்கள் விலக/மிகு துக்க துயர் அகல

/அநிஷ்டம் போய் இஷ்டம் பெற -துக்கம் கலக்காத சுகம் வளர-அன்புடன்-விபீஷண ஆழ்வானின் –
ஹனுமான் விபீஷணன் விஷ்வக் சேனர் மூவருக்கும் ஒரே சந்நிதி/

அமுது பாறை-பிரசாதம் பட்டர் கைகளால் அளைய அமுது செய்வானாம்

/அடியார் கூட்டம் கண்டு-சேர்த்து  இசைந்து சேவிப்பது என்று கொலோ-

அரங்கன்-உலகுக்கே நாயகன்-நீர் குமிழி போல உருவாகி வளர்ந்த விமானம்/விபீஷணனுக்கு என்றே இறங்கி வந்தாராம் சத்ய லோகத்தில் இருந்து

/-வலிய சிறை புகுந்ததே இதற்க்கு தானே/செல்வ விபீஷணருக்கு வேறாக  நல்லான்

/அடியார் உடன் கூடி இருந்தால் துக்கம் கலக்காத சுகம் வளரும்//அவன் மேல் தான் எல்லா கண்களும்/அனுபவித்து அகம் மகிழ

/விபீஷணனுக்கு ராஜ்ஜியம் கொடுத்து தென் திசை நோக்கி கண் வளர்ந்து அருளுகிற –

மங்களா சாசன உத்சவம்-ஆழ்வார் திரு நகர் -இரட்டை திருப் பதி-சிந்தையாலும்- செய்கையாலும் சொல்லாலும்

-தேவ பிரானையே தந்தை தாயாக –நாயகர் மண்டபம் போகும் வரை பார்த்து கொண்டே இருப்பார் ஆழ்வார்

/நீள் நிலா முற்றம் நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ண புரம் என்று காட்டுவாள் /

/அழகான அரங்கம்-வாசஸ்தலம் -/இசைந்து -அபிஷிக்த ஷத்ரியன்-முடி சூடிய ஷத்ரியன் என்று இல்லாமல்

நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர் ஏவி பணி கொள்ளும் படி அவர்கள் உடன் இருக்க

-பூமியில் இருக்கும் ராஜா வாழவும் மனிசர் வாழவும் செல்வம் பெருக ஸ்ரீ ரெங்க விமானம் வந்து சேர்ந்தது-ஸ்ரீ ரெங்க மகாத்மயம்

————————————————————————————————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளயத்தில்
அழியாது இருக்க கடவதும்
பெருமை தங்கியதுமான ஸ்வர்க்கம்
முதலிய மேல் உலகங்கள்
உஜ்ஜீவிக்கவும்

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
பூ லோகம் உஜ்ஜீவிக்கவும்
பூ லோகத்தில் உள்ள
மனிதர்கள் எல்லாரும் உஜ்ஜீவிக்கவும்

துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
மிக்க துக்கத்தை விளைப்பதான
பாபங்கள் நீங்கவும்
துக்கம் கலசாத

சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
சுகம் வளரவும்
எப்போதும் மனசில் ஆனந்தத்தை உடையரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உஜ்ஜீவிக்கவும்

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
திரு உள்ளத்தில் உகப்போடு
தெற்கு திக்குக்கு அபி முகமாக
குடதிசை முடியை வைத்து குணா திசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
பள்ளி கொண்டு அருளா நின்ற பெரிய பெருமாள்

அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
ஸ்ரீ ரெங்க நாதன் சந்நிதியில்
திரு முற்றத்திலே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய

இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
ஆனந்தம் நிரம்பிய
பெரிய கோஷ்டியை சேவித்து
அடியேனும்

இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
அவர்களில் ஒருவனாக மனம் பொருந்தி
அவர்களோடு கூட
வாழ்ந்து இருக்கும் காலம்
எப்போது வாய்க்குமோ-

——————————————————————————————

11–திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்

கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்

கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

நலம் திகழ்- சமஸ்த கல்யாண குணங்கள் உடைய -நாராயணன்-அடி கீழ் நண்ணுவார்கள் பலன் சொல்லி முடிக்கிறார் /

கடல் வண்ணன்-சரமம் தீர்க்கும்- பார்த்தாலே

-அம்மான்-சர்வேஸ்வரன்/ஆசையுடன் அருளிய பதிகம்-

/வெண்கொற்ற குடை உடன் விளங்கும்-வெற்றி தரும் சேனை-விறல் தானை-கொற்ற  ஒள் வாள்-வெற்றி கொடுக்கும் வாள்

/கூடலர் கோன்-பாண்டிய நாட்டு அதிபதி/தான் பெற்ற பேற்றை பெருவார்கள்/

/மணல் திட்டு நடுவில்/நான்கு கரைகள் நான்கு புருஷார்த்தங்கள்/
திரு வரங்கம் பக்கம்-வட திரு காவேரி-தர்மம் /தெற்கு மோட்ஷம்/ வெளி அர்த்தமும் காமமும்

/கடலை போன்ற ச்வாபம் வண்ணம்/கண் ஆர கண்டு உகக்கும்-கண்ணை மூடி கொண்டாலும் காட்சி தரும் படி ஆர கண்டு சேவிக்கணும்/

/கொடை -வள்ளல் தன்மை-நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்–

அர்த்தம் தெரிய வேண்டாம்-சொல்களே போதும்-ஐந்துக்கு இலக்கியம் ஆரண சாரம் -தமிழ்

–சீலாதி குண பூரணராய் -நாரமும் அயனும் சேர்ந்தால் போல் நாராயணன் அடி கீழ்

-வத்சலராய்-குற்றமே குணமாக கொண்டு-நாரங்களுக்குளே இருகின்றானே

–ஜிகுப்சை இன்றி- ஆழ்வார் பிரார்த்தித்தால் போல இருக்க பெருவார்கள் .

————————————————————————-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
மணல் குன்றுகள் விளங்கா நின்ற
கரையை யுதைத்தான
காவிரியின் நடுவிடத்து

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்

கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கடல் போல் விளங்குகின்ற
கரிய திரு மேனியை உடைய
பெரிய பெருமாளை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
கண்கள் திருப்தி அடையும்படி
சேவித்து ஆனந்திக்க வேணும்
என்று உண்டான ஆசையினால்

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
அரசாட்ச்சிக்கு ஏற்ப
வெண் கொற்றக் கொடை உடன் விளங்கா நிற்பவரும்
பராக்கிரமம் மிக்க சேனைகளை உடையவரும்
வெற்றியும் ஒளியையும் உடைய வாளையும்
உடையவராய்

கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
குல சேகரப் பெருமாள் அருளிச் செய்த

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
தமிழ் நடையானது நன்கு
விளங்கா நிற்கிற
தமிழ் பிரபந்த ரூபமான
இப்பத்து பாசுரங்களையும்
ஓத வல்லவர்கள்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே-
கல்யாண குணசாலியான
ஸ்ரீ மன் நாராயணன் உடைய
திருவடிகளிலே சேரப் பெறுவார்-

————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

.பெரிய வாச்சான்  பிள்ளை  திரு வடிகளே சரணம்.

குலேசேகரர்    ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: