பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-1-1/2/3/4/1-5- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை –

ஸ்ரீயபதி இடம் மதி நலம் அருள பெற்றார்–பெருமாள் பெற்றது பக்தி ரூபாபன்ன ஞானம்–

த்யானம் ஞானத்தின் முதிர்ந்த நிலை/த்யானத்தில் அன்பு சிநேகம் சேர்த்து பக்தி/பர பக்தி பர ஞானம் பரம பக்தி மூன்று நிலைகள்

/அறிதல்/ காண்டல்/ அடைதல்- ஞான தரிசனம் பிராப்தி நிலை

/நிர்ஹேதுகமான கிருபையால் அருளினான்/மதி-ஞானம் நலம் -பக்தி/விதி வாய்கின்ற்றது காப்பார் யார்-ஈஸ்வர கிருபையே விதி

ஸ்ரீ ய பதியாய்/ஞான ஆனந்த  ஏக சொரூபனாய் //பிராட்டி தூண்ட அருளினான்/

/குறையாத ஞான ஆனந்தம் இருப்பதால் கொடுத்து கொண்டு இருப்பான்/எப் பொழுத்தும் நாள் திங்கள்-ஆரா அமுதாய்/

–திரு குடந்தை ஊராய்-உனக்கு ஆட் பட்டும் இன்னும் உழல்வேனோ-ஆராத அமுதன் -அபரியாப்த அமுதன்-சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்

சர்வக்ஜன் பூர்ணன்-ஆனந்தத்துக்கு ஒரே வழி ஞானமே -மனசின் நிலை/

சேஷத்வ ஞானம் /சமஸ்த கல்யாண குணாத்மனாய்-கருணை பொழிய-உபய விபூதி யுக்தனாய் -அனுபவம் கொடுக்க /

/ஒப்பார் மிக்கார் இல்லாதவனாய்-இதுவே தரித்ரம் அவனுக்கு /சர்வேஸ்வர ஈஸ்வரன்-நியமன சாமர்த்தியம்- பக்தி ஊட்டுவான்

-திரு கமல பாதம் வந்து கண்ணின் உள்  உள்ளன -ஒக்கின்றன- மேல் விழுந்து-அருளுகிறான்

என்று கொலோகாணும் நாளே  -என்று துடித்து  கொண்டு இருப்பார்கள்/

– அழுகையே வழி-கதறுகின்றேன்-பிர யத்தனம்  உன்னது தானே -இன்றே அருளுவாய்/தன் தலையால் வந்தால் கிரமத்தில்  ஆறி இருக்கலாம்

//கப்பலில் போனால் கரை/ நீந்துவார் தான் தெப்பம்-தெப்ப கரையர் -கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ-

உடனே காண விடாய் பிறக்கும் / சீலாதி குணங்கள் பூரணமான கோவிலிலே பிரார்த்திக்கிறார் -பிரத்யட்ஷம் பரம பதம்–அங்கு கொடுத்தாலும் வேண்டாம்

-இங்கு தான் எல்லா குணங்களையும் அனுபவிக்க முடியும்//பகல் விளக்கு பட்டு இருக்கும்/

=நீதி வார்த்தை-பகலில் விளக்கா -விருத்தருக்கு தானம் கொடுக்க கூடாது/சாப்பிட்டவனுக்கு சாதம் போடுவதா/இங்கு தான் குணங்கள் புஷ்கலங்கள்/

/இறையும் அகலகில்லீன் என்று வாய் பிதற்றி கொண்டே திரு மார்பில் இருந்து கொண்டே சொல்வாள் –

வஸ்துவின் ஏற்றத்தால்/தடுக்க-ஆள் உண்டே மந்திரிமார்கள் /ஷத்ரியன் என்பதால்-அடியார் குழாம்களை  கூடுவது என்று கொலோ —

அந்தமில் பேர் இன்பத்தோடு அடியோரோடு இருந்தமை -பாரிக்கிறார் /அனுபவத்துக்கும் ஆனந்த்துக்கும் குறை அற்று -இங்கேயே கொடுக்க பிரார்த்திக்கிறார்/

—————————————————————————————————————–

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி

திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி

திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்

கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்

கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

———————————————————-

கைங்கர்ய ஸ்ரீ-படைத்த அனந்தன் பற்றி நிறைய சொல்லி

-சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -நாக ராஜர் கைங்கர்யம் இந்த ராஜாவுக்கு கொடுக்க வில்லையே

/வெளுத்த திரு மேனி-ஆயிரம் தலைகள்/ இருள் ஓடும் படி மணி மாணிக்கங்கள் -இன -சேர்ந்து துத்தி-

திருமண்- திரு வடி நிலை/போல நெற்றியிலே தரிக்கிறார்-பணம் படம்-இதுவே அலங்காரம்

/ஆர்ந்த-பூர்த்தியாய் இருக்கும்/அரவரச -ராஜர்- அனந்தன் /நந்த கோபாலன் மருமகளே-  நிறைய பேர்கள் உண்டே நப்பின்னை விசேஷித்து சொன்னது போல அனந்தன்-அந்தம் இல்லாதவன் அனந்தன்

அனந்தனை மடியில் அடக்கி வைத்து இருக்கும் அனந்தன்-திரு அரங்க பெரு நகர்- பொன்னி- பொன்னை அடித்து கொண்டு வரும் மாலை போல /

தெளிந்த நீர்/ மேல் அடி வருட/ திரை அலை கையாலே/பள்ளி கொள்ளும்-ஆயாசம் தீர-அடி வருட /

கரு மணியை கோமளத்தை- பெயரை சொல்ல வில்லை/இதுவே பாட்டு உடை தலைவன்-மிருதுவான பரம சுகுமாரன்-கண்டாலே கன்னி போகும்/

கண்டு கொண்டு-காண்பது நிலைக்க/கண் இணைகள்-கொலோ-கொல்-ஒ-அசை சொல் -ஆச்சர்யத்துக்கு

/முமுஷு மனோ ரதிப்பது-பரயங்கா வித்தை

-கோசி-அஹ ம் அன்னம்-சம்சாரி முக்தனாய் சென்றால்-மடியில் அமர ஆசை கொண்டு-நீ யார்

-கோசி-என்று கேட்க்க-நான்  ராஜ புத்திரன்-அஹ ம் ப்ரஹ்மாசி-பிரகாரம்-சரீரம்

/இருள் சிதறி போகும் படி  -உத்சங்கம் -உத் பாந்தம்- உமிழ பட்ட- கிடக்கிற ரத்னம் போல

-நயனம்-செங்கண் சிறி சிறிதே -கருணை கிளப்பி விட திறந்து  குற்றம் பார்த்து மூடி கொண்டு

/பழிச்சு மின்னல் காற்று  இதனால் தான் திறந்து மூடி/-பணா  மண்டலங்களின் ஒளி– உச்வாசம் நிச்வாசம்/கிடந்த நாள் கிடத்தி-

பருத்து அடங்க -கைங்கர்ய ஸ்ரத்தை உடன்/ அவனையே விளாகுலை கொண்டபடி

-யான் பெரியன்–நீ பெரியைஎன்பதை யார் அறிவர் – புவியும் இரு விசும்பும் நின் அகத்து-நேமியாய் இடம் கேட்டாலும் சொல்வானே  -பெரிய திருவந்தாதி

-பராங்குச மனோ நிவாசி-பாதுகை உன்னை தாங்குவதால் அதுவே பெரியது -பாதுகா சகஸ்ரநாமம்-தேசிகன்

/-மாறனில் மிக்கு ஓர் தேவும் உளதே- மால் தனில்-தேவு மற்று அறியேன்-

மறு வற்ற வெள்ளை படுக்கை-உயர் வெள்ளை/சத்வ குணம்/ரஜோ-சிகப்பு/ தமோ-கருப்பு/யுக வர்ண க்ரமம்/

ஸ்ரீ ரெங்க விமானம்- வெளுப்பாக இருந்து இருக்க வேண்டும்-கருப்பு மையாக தீட்டி ஞானம் மலர-பட்டர்-ரெங்க பர்தா

-ஜீமூதம் கருத்த மேகம்-உலகத்து சமுத்ரம் குடித்து -கருத்து -வீசி வீசி மாற்றும்/நீல கடல் கடைந்தாய்-

பால் கடலை இவன் திரு மேனி நீலத்தால்/பஞ்ச சயனம்-வெளுப்பு மணம் குளிர்த்தி விசாலம் அழகு

-திரு மாலே நானும் உனக்கு பழ  அடியேன்-குற்றம் இல்லாத மறு அற்ற வெள்ளை

ஸ்ரீ வைகுண்ட பரே லோகே-ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணு பக்திச பாகவதர் சக – குண நிஷ்ட்டை கைங்கர்யம் நிஷ்ட்டை//

முனிவர்களும் யோகிகளும் //வைகுந்தத்து அமரரும் முனிவரும்//இரு வகை

-திரு வரங்கம் மகா நகரில் -அரங்கம்- நாட்டிய /ஆசை பட்டு வர்த்திக்கும்/தெண்ணீர்-தெளிந்த/தெளிவிலா கலங்கல் நீர் -தொண்டர் அடி பொடி

/வரும் பொழுது சீர் செய்ய தக்கது இல்லை என்று கலங்கி வருகிறாள்/பிரிந்து போகும் பொழுதும் கலக்கம்-கடலில் போய் கலக்க வேண்டி இருகிறதே-

வெள்ளை மலை மேலே நீல ரத்னம் போல பள்ளி கொண்டு/சீதள காள மேக

/கோமளம்-கூசி பிடிக்கும் மெல் அடி/ஆபரணம் சாத்த பார்த்த இடங்களே சிவந்ததாம் அவளுக்கு-கண்டு கொண்டு

பசியன் -சோற்றை மேல் கொண்டால் போல-கண்டு சொல்லி நிறுத்த முடியாமல் கண்டு கொண்டு

/அஹம் அன்னம்- களிப்பை இங்கு பட -அஹம் அன்னாதாக -என்னை சோறாக கொண்டு உண்டான்-களித்தான்

-அந்த களிப்பை நாம் உண்டோம்/சேவை மட்டும் இல்லை/வந்தது கண்டு அவன் மகிழ அது கண்டு இவர் மகிழ ஆசை படுகிறார்

———————————————————————————

அழகிய மணவாளனுடைய நித்ய அனுபவமும்
அவ்விடத்து கைங்கர்ய பரர்களோடு நித்ய வாசமும்
தமக்கு விரைவில் கிடைக்குமாறு அருள் புரிய
பிரார்த்திக்கிறார் இதில்

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இருளானது சிதறி ஒழியும் படி
ஒளி விடுகின்ற
மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
இமைத்தல் -விழித்தல்-இங்கு விளங்குதல்

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த-
சிறந்த புள்ளியையும்
அழகாக உடைய ஆயிரம்
பணங்களையும் உடையனாய்
ஒவ் ஒரு தலையிலும் ஒரு மாணிக்க மணி உண்டே
துத்தி -படத்தின் மேல் உள்ள பொறி

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
நாகங்களுக்குத் தலைவனாய்
மிக்க தேஜஸ் சை யுடையனான
திரு வநந்த ஆழ்வான் ஆகிற

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
அழகு மிக்க
உயர்த்தியை யுடைய
வெண்ணிறமான
திருப்படுக்கையிலே பொருந்தி
மேவி வினை எச்சம்
பள்ளி கொள்ளும்வினையைக் கொண்டு முடியும்

திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
ஸ்ரீ ரெங்கம் என்கிற
பெரிய நகரத்திலே
தெளிந்த தீரத்தை உடைய
காவேரி யானது
பொன்களைக் கொழிக்கையாலே காவேரி -பொன்னி

திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
அலைகள் ஆகிற கையால்
திருவடிகளைப் பிடிக்க
திருக் கண் வளர்ந்து அருளா நின்ற

கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
நீல மணி போன்றவராய்
சௌகுமார்யமே வடிவு எடுத்தவரான
கண்ணால் துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் யுடையவன் –
பெரிய பெருமாளை
சேவிக்கப் பெற்று
என்னுடைய

கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே
கண்களானவை
ஆனந்தம் அடையும் நாள் எந்நாளோ –

———————————————————————————————

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த

வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர் சென்னி விதானமே போல்

மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்

வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

———————————————————————————————————————

கண்களால்  காண பாரித்தார் கீழே இதில் வாயாலே வாழ்த்த பாரிகிறார்

/சர்வ கந்த -எல்லாம் மணங்களையும்-கடைந்து எடுத்து  சேர்த்து மண தூண்கள்

/மாயோனை மண தூணை பற்றி நின்று-ஆமோத ஸ்தம்ப துவயம் -பட்டர் /

குண பிர வாகம் ஓடி வர -சேஷ சய லோசன அமிர்த-கருணை ஆறு-எதிர் நீச்சல்  போட  முடியாமல் பற்றி கொள்ள ஆலம்பனம் இவை

/மாயனார் -தேசும் அடியோர்க்கு அகலுமாலோ-உடல் எனக்கு உருகுமாலோ –பனி அரும்புமாலோ

/விதானம்-மேல் கட்டி-வாய் ஓர்-அத்வீதியாமான- துத்தம்-ஸ்துதம்-ஆரிய சிதைவு-ஸ்தோத்ரம் பண்ணி கொண்டே இருக்கிறார்

/இதுவே அடையாளம் ஆதி சேஷனுக்கு//ஆர்ந்து-நிறுத்தாமல்/வளை உடம்பு-வெளுத்த திரு மேனி/அழல் உமிழ்கிறார்-எதிரிகள் வருகிறார் என்று

/வீயாத –விட்டு பிரியாத /ஆதி சேஷன் விதானம்/ தீயே விதானம் /மலர் சென்னி-அக்நி  விதானம் கீழ் பச்சை பசேல் என்று யுவா குமாரன் திரு முடியில் இருப்பதால்

/ மாலை போல் மால் இருக்கிறார் காயம்பு பூ மலர் மாலை போல /கடி-மதிள்கள் /மாயோன்-ஆஸ்ரித சேஷ்டிதங்கள் உடையவன்/மாலை அக்நி கீழ் ரட்ஷிப்பதே மாயம் தானே /

ஆனந்தம் மேல் இட்டு ஸ்தோத்ரம்/களவேல் வெண்ணெய் உண்ட  -கள்வா-யசோதை -போக்கு வீடாக ஏற்றுவது போல

/அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே /ஆதி சேஷன் சொல்ல  7  சமுத்ரம் மை கொண்டு எழுத முடியாது பாதுகை பிரபாவம்-தேசிகன்

/ பட்டரும் பாட முடியாது சொல்ல ஆயிரம் நாக்குகள் வேண்டும்/நாக் கொண்டு மானிடர் பாட வல்லேன்/அவனை ஸ்தோத்ரம் பண்ணியே நா தழும்பு ஏறி இருக்கும்

/வளை உடம்பு-வெளுத்த திரு மேனி/மேல் நீல ரத்னம்/  அழல் நாகம்-சென் தீ /கலவை சேர்த்தி

/உறகல் உறகல் உறகல் -பள்ளி அறை குறி கொள்மின்/அநிமிஷர்-குடாகேசன் அர்ஜுனன்-நித்யர்அங்கு ஆரவாரம் கேட்டு அழல் உமிழும்-பொங்கும் பரிவு/

திரு மெய்யம்-தீ கங்குகள் போவது போல சேவை -கண்டு மது கைடபர்கள் பயந்து /

ஜோதிஸ் ஆகிற மேல் கட்டு-நெருப்பின் ஒளி தான் விதானம்/மேலே ஒளி மாலை கீழே பூ மாலை போல்

மால்/ஞானம் அன்பு நிர்வாகன்/ஆஸ்ரித வியாமோகம்/7திரு மதிள்கள்/ திரு கண்ண புரத்திலும் 7 மதிள்கள்  இருந்து இருக்க வேண்டும்

/உறங்குவான் போல் யோக நித்தரை கள்ள நித்தரை ஜகத் ரட்ஷண சிந்தை

/ஸ்ரீமான் சுக துக்க பரந்தப  /துயின்ற பரமன் -தூங்கும் பொழுதே  பரமன் /

மாயனார் திரு நன் மார்பும் ..-அரவின் அணை மிசை மேய மாயனார்

/அபிமான புத்ரர் பட்டர்-மண தூணில் தூளி– அமுது பாறையில் கை அளந்து /முதுகில் தட்டி தூங்க பண்ண –  பிராட்டி பட்டரை

/ஆதி சேஷன் டோலி போல சயனம்/வெளுத்த மேகம் கடல் நீரை குடித்தால் போல

/சமுத்ரத்தில் மலை போல/மலை புதரில் யானை போல- மூன்று திருஷ்டாந்தம்/.விதானமே போல் -செந்தீ தேஜஸ்/

————————————————————————————

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
ஓர் ஆயிரம் வாய்களிலே
ஸ்தோத்ர வாக்யங்கள் நிறைந்து
இருக்கப் பெற்றவனாய்

வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வெளுத்த உடம்பை யுடையவனாய்-சத்வ குண ஸூசகம்
எதிரிகள் வந்து கிட்ட ஒண்ணாதபடி
விபவம் போலே அர்ச்சையிலும் வந்து நலிவார்களோ என்று
அழலை உமிழா நிற்பவனான -அதிசங்கையால் –
ஆதிசேஷன்
தனது வாயின் நின்றும் வெளிக் கக்கிய
செந்நிறமான அக்னி ஜ்வாலையானது

வீயாத மலர் சென்னி விதானமே போல்
தலையின் மேலே
அளவில்லாத புஷ்பங்களால்
சமைத்த ஒரு மேற்கட்டி போலே

மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
மேற்புறம் எங்கும் விஸ்தரித்து விளங்க
ஆதிசேஷன் உமிழ்ந்த அக்னி ஜ்வாலை யாகிற
புஷ்ப விதானத்தின் கீழே
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
காயாவின் அழகிய பூக்களாலே
தொடுக்கப் பட்ட நீல மாலை
போன்றவனாய்-
பெருமை பொருந்தியவனாய்

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நறு மணம் மிக்க கோயிலிலே
சேஷ சயனத்திலே
பள்ளி கொள்ளா நிற்பவனும் –

மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
ஆச்சர்யனான ஸ்ரீ ரெங்க நாதனை
அடியேன்
திரு மணத் தூண்கள் இரண்டையும்
அவலம்பமாகப் பற்றிக் கொண்டு
என்னுடைய
சேவித்த மாத்ரத்திலே
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –
அருகில் நின்று கொண்டு என்னாமல்
பற்றிக் கொண்டு
திருமேனியின் பரிமளம் இரண்டு தூணாக
பரிணமித்து உரு எடுத்து நிற்பதால்
திரு மணத் தூண் -எனப்படும்

வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?
வாய் தினவு தீர
ஸ்துதி செய்யும் காலம்
என்றைக்கு வாய்க்குமோ

————————————————————————————————

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்

அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்

அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

————————————————————————————————–

அடியவர்கள் உடன் சேர்ந்து -அலர்கள் இட்டு–கைகள் வேலை

/நாபி கமலம் பிரம்மா ஸ்தோத்ரம்/ முன்பு நித்யர் /நம் போல்வாரும் பண்ண

/அவன் காட்ட கண்டு  நாபி கமலத்தில் பிரம்மாவை சேவித்து இருக்கலாம்

கையினார் சுரி  சங்கு பாசுரத்தில் சங்கு சக்கரம் காட்டி கொடுத்தால் போல.

/திரு அனந்த புரம் 18 அடி நாபி கமலத்தில் உண்டு/ திரு வாட்டாறு- பெரிய திரு மேனி-ஆதி கேசவன்- பிரம்மா இல்லை-/

/சங்கல்ப சூர்யோதயம்-கொப்பூழ் தொட்டில் -ந அகம் – நான் அல்லன் பிள்ளையும் அல்லன்-விஷ்ணு பதம் காண வில்லை  -உளறி கொண்டே இருக்குமாம்

பிள்ளை-ஸ்ரீ பத்மநாபன் கேட்டு கொண்டே தூங்கி கொண்டு இருக்கிறானாம்

/லீலா கமலம் தாயார் வைத்து கொண்டு-அதன் வழியாக தேன்   -சங்கு சக்கரம் ஈ ஒட்டி கொண்டு பால் ஊட்டுகிறாளாம் –

லோக மாதா -இரண்டு இரட்டை-வளருமாம்-ஈர் இரண்டு மால் வரை தோள்/

/எம் மாண்பின்-ஸ்தோத்ரம் பண்ணி கொண்டே இருக்கிறார்

/ஆழ்வாரோ நெஞ்சு உருகி கண் தளர்ந்து -மேலே மேலே தொடுப்பார்  /எத்திறம் உடலோடு -மூ ஆறு மாசம் மோகித்து

/அனுக்ரகித்த பக்தி உடன் பாடினால் /பெருமாளை சேவிக்க பெற்ற பிரமாவின் கண்களை கொண்டாடுகிறார்-

எழில் கண்கள் எட்டினோடும்-பல கண் பெற்ற பயன் பெற்றான்-காணா கண் அல்ல கண்டோமே

/காமரு சீர் அவுணன் உள்ளத்து —மாவலியை கொண்டாடுவது போல

/ஏரார் இடை நோவ- இடுப்பை -கண்ணன் கட்டி கொண்டதால்-மோர் ஆக்க ஒட்டேன்

-தொழுது ஏத்தி இறைஞ்சுதல் மூன்றும் செய்கிறான்

/நாபி-காரண தத்வம்/இவ் அருகு உண்டான காரிய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்கிற மகத்வம் தோன்ற நாபி/

முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்-

தகர வித்யா பிரகரணம்-நின்னகத்து அன்றோ நாபி கமலம்-முதல்வா /

/அரியை அயனை அரனை அலற்றி/ அயனையும் அரனையும் தள்ளி அரியை அலற்றி

/நான் முகனை நாராயணன் படைத்தான்/

அணி அரங்கம்-பூ மண்டலத்துக்கு அணி–அணி  புதுவை ஆண்டாள்

/புஷ்பாதிகளை இட்டு-காயிக கைங்கர்யம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது

/சஜாதியனாய் அந்தரங்கர் உடன் கைங்கர்யம் பண்ண- ராஜாவாக பிறந்து என்ன பலன்- எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆக மேலே சொல்ல போகிறார்

அது பொசிந்து காட்டும் இதில்/அடியார் குழாம் களை  உடன் கூடுவது என்று கொலோ-ஆழ்வார் /

கேசவ திருவடி/அடியார்கள் உடன் சேர்த்தி கதா சித்-ராமானுஜர் இது தான் தேவை இல்லை என்றால் கேசவ பக்தி என்பாராம்

/ஆடிஆடி அகம் கரைந்து-காசை இழந்து பொன்னை இழந்து மாணிக்கம் இழந்து அழுகை  போல/

பெரு நலம் கடந்த நல அடி போது-திரு விக்ரமன்- அடி கிடைக்காமல் அம சிறை மட நாராய் தூது விட்டார் வருத்ததுடன்-

காசை இழந்தால் போல/ நம்பியை ..எம்பிரானை என் சொல்லி நான் மறப்பனோ–திரு குறுங்குடி-வாயும் திரை-திரு மாலால் நெஞ்சம் கோடபட்டாயே-பொன்னை இழந்து அழுகை

/காற்றை கட்டி கொண்டு அழுகிறார் இதில்/அர்ச்சை இழந்த துக்கம்/அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ-

ஆடி ஆடி அகம் கரைந்து  வாடி போனாள்-மாணிக்கம் இழந்தால் போல இது/ஸ்ரீ ரெங்கநாதன் அடியாரோடு சேர இங்கு பிரார்த்திக்கிறார்

————————————————————————————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
சர்வ விதத்தாலும் உண்டான
மாட்சிமை உடைய நான்முகன்
தனது நாலு நாக்கினாலும்
ஸ்துதிப்பதற்கு உறுப்பான
வாக்தேவியை தனது வசமாக
கொண்டு இருக்கும் மாண்பு உண்டு இ றே

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
சொற்களை எடுத்து
துதித்து
நான்கு முகங்களாலும்

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
எல்லா பக்கங்களிலும்
அழகிய எட்டு கண்களினாலே

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
நன்றாக சேவிக்கும் படி அமைந்த
இனிமையான வேதங்களாலே
ஸ்தோத்ரம் பண்ண
செவ்விய பொன் போலே
விரும்பத் தக்க வடிவை யுடைய

அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்வாமி யான தன்னுடைய
தாமரைப் பூவை யுடைய திரு நாபியானது
விளங்கும்படி

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்

அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
பெரிய பெருமாளின்
திருவடிகளின் கீழ்
புஷ்பங்களை சமர்ப்பித்து

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே-
அங்கு உள்ள
கைங்கர்ய பரர்கள் உடன் கூட
நெருங்கி வாழ்வது என்றைக்கோ –

——————————————————————————————————-

 மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை

வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி

ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை

அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப

பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்

பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்

கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்

கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

———————————————————–

துயர் அறு சுடர் அடி தொழுது எழு-அவன் துயர் நீங்குகிறதாம் -விபீஷணன் பட்டாபிஷேகம் ஏற்று கொண்டதும் ஜுரம் போனதாம்

பரத்வம் -ஸ்பஷ்டமாக வெளி வரும் பரத்வம்/பீரிட்டு கிளம்பும்//

மாவின் வாயை பிளந்து உகந்த மாலை-கேசி கொன்று ஆஸ்ரித விரோதிகளை உகந்தான்

/ வேலை வண்ணன் -அழகை பார்த்து-கடல் நிறத்தான்/பயக்ருத் பய நாசன-கொடுப்பவனும் அவனே நீக்குபவனும் அவனே

– லீலா -கருநீலம் கருப்பு பச்சை நீலம் மாறும் நிறம் -பாலின் நீர்மை நீல நீர்மை வெளுப்பு  சிவந்து மஞ்சள் கருப்பு யுகம் தோறும் மாறுவான்-

அழகும் குளிர்ச்சியும் கிட்டும்/இருண்டு இருக்கும்

-என் கண்ணனை–எனக்கு பவ்யமானவன்-அடங்கி- உடனே-வலிமை உண்டு-வன் குன்றம் ஏந்தி-கல் மழை காத்து-கடல் மலையை தாங்கி–

ஆவினை அன்று உய்ய கொண்ட- உபகார ஸ்மரதி கிடையாத -ஆயர் ஏற்றை- செருக்குடன் மேனாணிப்பு உடன்  கோவிந்தன் என்பதோர் காளை

/அமரர்கள் தம் தலைவன்/இடையர்களில் இடையன்

-அம் தமிழ் இன்ப பாவினை-இருள்  இரிய சுடர் மணி போல இன்ப பா

முத் தமிழ் காவலர் ராமானுஜர்/சொல்லார் தமிழ் மூன்றும்-பாலே  தமிழர் இசை காரர் பக்தர் பெரும் தமிழர் முதல் ஆழ்வார்கள்/
தமிழ் ஆழ்வாருக்கு தொண்டு புரியும்/

செப்பு மொழி 18  உடையாள்/ பூர்வர் நாயகி 19  மொழியாய் இருக்கும் என்கிறார் அதனால் 18  இருந்தது/

வட மொழியை- ஸ்ரீ ராமாயணம் போலே என்றார்/முனிவர்கள் முதலிகள் பாட மாட்டார் ஆனாலும் பராசரரை விஷ்ணு புராணம் என்பதால் ஆள வந்தார்

/பற்று அற்றார்கள் -அநந்ய பிரயோஜனர் -கோ-ஸ்வாமி/ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி என் ஆளி

/நா தழும்பும் படி ஸ்தோத்ரம் பண்ணி கை தழும்பும் படி -ஷோடசுபசாரம்- 32 அபசாரமாக முடித்தோம்

/அஞ்சலி பண்ண பெறுவேனோ-கை கூப்புதலே பெரிய புஷ்பம்

/ அஹிம்சா பிரதம புஷ்பம்/அஞ்சலி வைபவம்

/நிகராக அஸ்தரம் தாக்க முடியாது பரமா முத்தரை

/வில் நழுவியதும் ராவணனை வீரன் என்றார் வால்மீகி-இவன் கையில் ராமன் தோற்க்க பாக்கியம் இல்லை/வெறும் கை வீரன்/

——————————————————————————————————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
கேசி -வாயைக் கிழித்து
மகிழ்ந்த பெருமானாய்
தாபத் த்ரயம் தீரும் படி -கடல்வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என்னுடையவன் என்று
அபிமாநிக்கும்படி
ஸூ லபனான கிருஷ்ணனாய்

ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அன்று வலிய
கோவர்த்தன மலையைத் தூக்கி
பசுக்களைக் காத்து அருளின
இடையர் தலைவனாய்

அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்பபாவினை
நித்ய சூரிகளுக்கு ஸ்வாமியாய்
அழகிய தமிழ் பாக்களான

பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
அருளிச் செயல் போல் போக்யனாய்
அழகிய சமஸ்க்ருத
ஸ்ரீ ராமாயணம் போலேயும் போக்யனாய்
ஒப்பற்ற அரங்கன் புகழை பாட
ஒப்பற்ற அருளிச் செயல்களும்
ஸ்ரீ ராமயணமுமே ஏற்றவை
பற்று அற்றார்கள்
சம்சார பந்தம் அற்ற விரக்தர்கள்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பற்றார் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே -திருமழிசை ஆழ்வார்

பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
நித்ய வாஸம் செய்கிற
கோயிலிலே

கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
ஸ்வாமி யான ஸ்ரீ ரெங்க நாதனை
நாக்குத் தடிக்கும் படி ஸ்துதித்து
என்னுடைய கைகளானவை

கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே
காலத்திலேயே பறிக்கப் பட்ட
புஷ்பங்களைப் பணிமாறி
அஞ்சலி பண்ணும் நாள் எதுவோ-

—————————————————————————————————-

-இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்

தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்

மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

——————————————————————-

சனக சனத் குமாரர்கள் போல்வார் -பிரம பாவத்தில் இறைஞ்சியும்

/அயன் அரன் இந்த்ரன் போல்வார் – உபய பாவத்தில் இறைஞ்சியும் / /வருணன் ஆதித்யன்போல்வர்  -கர்ம  பாவத்தில் இறைஞ்சியும்

துணை இல்லா தொன் மறை-இதற்க்கு வேற பிரமாணம் வேண்டாது –

மணி வண்ணன்- நீர் ஓட்டம் தெரியும்-அடியார் மேல் உள்ள காதல் ரத்ன கற்ப பெருமாள் சாளக்ராமம் உண்டு

/முந்தானையில் வைத்து – ஒரே பாசுரதுக்குள் அடக்கி வைத்து கொள்ளலாமே

/மணி/கை பட்டு பிரிந்தால் கங்குலும் பகலும் கண்ண நீர்கள்/துடிக்க வைப்பான்

/இணை இல்லா-சீரார் செந்நெல்  கவரி வீசும்-அவனுக்கு வீசுவதால் சீரார் /ஸ்தோத்ர  பிரியன்-ஸ்தவ ஸ்தவ பிரிய -உளன் சுடர் மிகு சுருதியுள்

/பன்னலார் பயிலும் பரன்/ ஊற்றம் உடையாய் /ஓதுவார் ஒத்து எல்லாம் எவ் உலகத்து எவ் வகையும் அவனையே சொல்லும்

/தொன் மலர் கண்-நாபி கமலம்-பூர்வம் பூவில் நான் முகனை படைத்த தேவன்-

அயன் வணங்கி ஓவாது  ஏத்த-சப்த தீபங்கள் /மாட மாளிகைகள் குல வரை போல

/அம்மான்-ச்வாமி சர்வேச்வரன்/மலர் சென்னி-மலர் சூடிய ஷத்ரிய ராஜா /பூ முடி -அமரர் சென்னி பூ-

குலேசேகரர்

.திவ்ய தேசமே  பெண் //கொடிகள் கைகள் போல // மாணிக்க தோரணை  வலையால் //சந்தரன் மேல் இருக்கும் மானை பிடித்து பிராட்டிக்கு கொடுக்கிறாராம்-பட்டர்/

——————————————

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
ஒப்பற்ற போக்யமான இசையை
வீணையிலே நிறைத்து
வீணா கானத்தினாலே இன்பம் தருகின்ற
இனிய இசை உடைய வீணையை அப்யசித்து என்றுமாம்

தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
தும்புரு மகரிஷியும்
நாரத முனிவரும்
திருவடிகளிலே விழுந்து
வணங்கித் துதிக்கவும்

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
ஒப்பு இல்லாத
அநாதியான
வேத சாஸ்திரங்கள் கொண்டு

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
நித்தியமான
நாபி கமலத்தில்
உதித்த நான்முகன்
நமஸ்கரித்து இடைவிடாமல்
ஸ்துதிக்கவும்

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மணிமயமான மாட
மாளிகைகளையும்
பூரணமான சம்பத்தையும்

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
சப்த பிரகாரங்களையும் உடைய
கோயிலிலே

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
நீல மணி போன்று
திரு நிறத்தை உடைய எம்பெருமானை
சேவித்து -என்னுடைய

மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே
அரசாட்ச்சிக்கு ஏற்ப பூ மாலை அணிந்த தலையானது
அவன் திருவடிகளிலே நமஸ்கரிப்பது
என்றைக்கோ –

———————————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்..

-குலேசேகரர் ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: