(நாயகன் நாயகியுடைய நலம் -கண் அழகைப் புகழ்ந்து பேசும் பாசுரம் இது
பரம ஆகாசம் -நித்ய விபூதியைத் தேடும் கண்கள் என்றும்
அவர்களால் தேடப்படுகிறவள் என்றுமாம்
கிளைவித் தலைமகன் -பாகவதர்கள் ஆழ்வாருடைய ஞானத்தைக்
கொண்டாடிப் பேசும் பாசுரம் )
(துவளில் மா மணி மாடம் -6-5-இதன் விவரணம்
துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-)
அப்பிள்ளை உரை
இவள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன்
அவற்றின் வை லக்ஷண்யத்தைப் பேசும் பாசுரம்
ஈர்வன வேலும்
தன்னை ஈடுபடுத்துவதாலே
குத்தினாலும் பார்க்காமல் இருக்க முடியாதே
விடாதே ஈருமே
அஞ்சேலும்
சவுந்தர்யத்தால் அழகிய மீன் போல்
உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
அங்கு நின்றும் பேதித்து கழிய பேர்வனவோ அல்ல
உயிர் நிலையிலே பட்டு அங்கு நின்றும் மீளாமலே இருக்குமே
எடுத்து திரும்ப குத்தவும் மீளாமலே இருக்குமே
ஓ
விஷய அதிசய ஸூ சகம்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
காமன் உடைய அம்பின் ஒளியை வென்று
அத்தை அஸத் சமமாகும்
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
கண் வட்டத்தில் அகப்பட்டாரை மீள ஒண்ணாத படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவனான
சர்வேஸ்வரன் யுடைய திரு நாடு ஸ்ரீ வைகுண்டம் -அனுபவித்தார் –
அடைந்தவர் திரும்பாதார் போல் -இவள் கண்ணுக்கு அடி பட்டார் திரும்பா மாட்டார்களே
இவள் கண் அந்த தேசம் எனக்கு ஒப்பாகுமோ என்று தேடுகிறதாம்
விண்ணுளாரிலும் சீரியர் -அங்கு உள்ளாரும் இங்கே வந்தார்கள் –
அங்கு உள்ளாரும் ஆசைப்படும் கண்கள் அன்றோ
இவரும் அங்கே சென்று தந்தோம் தந்தோம் -வருகிறார் ஆண்டு தோறும்
ரீதி பங்கம் உண்டே -இரண்டு இடங்களிலும்
தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே –
அப்ராக்ருதமான நீர்மையை யுடையீர்
அது போன்ற என்றுமாம்
அப்ராக்ருத ஸ்வபாவம் உடைய உங்களில்
கண்ணோ மீனோ சங்கை
ஸ்லாகித்துப் பேசுகிறார்கள்
ஸ்வாபதேசம்
பகவத் விரஹத்தால் உறாவுதலாகிற செல்வம் ஸ்ரீயைக் கண்டு -அத்தைக் கண்டு
உற்ற நல் நோய் இது தேறினோம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடி
கடியன் கொடியன் நெடியாமால் –ஆகிலும் கண்ணன் என்றே கிடக்கும் கொடிய நெஞ்சம் யுடையவர் -இதுவே செல்வம்
பகவத் அனுபவம் பண்ணுகையாலே பொன்னைப் புடம் இட்டால் போல் தெளிந்த ஞானத்தை
கண் அழகு வியாஜத்தாலே சொல்லிற்றாகவுமாம்
———-
அவதாரிகை-
நலம் பாராட்டு துறை
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-
பாசுரம் -14-ஈர்வன வேலும் அம் சேலும் -தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுதல் –
நலம் பாராட்டு –
துவளில் மா மணி மாடம் -6-5-
பதவுரை
ஈர்வன வேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல் மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர் மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுத்த கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தை யொத்த உமது
கண்ணோ–கண்களோ?
ஈர்வன வேலும் அஞ்சேலும் —
காம பானம் ஆன பொழுது
ஈர்வனவே ஆகிலும்,
அஞ்சேலே ஆகிலும் ,
அன்றியே
ஈர்வன வாகிய வேலாயும்
அழகிய சேலாயும்–
இரண்டாலும்
வைதக்யமும்,
மௌதக்யமும் சொல்லிற்று —
(சாமர்த்தியமும் அழகையும் )
தன் பிள் (ரூபம் கூர்மை )அழியாமே எதிரிகளை முடிக்கும் படி-சாமர்த்தியமும்
ஈர்வன வேல் என்று
பாதகத்தை விசேஷித்த படி –
உயிர் மேல் மிளிர்ந்து இவையோ —
பாத்யத்தையும் விசேஷித்த படி–தோல் புரை போகிறதில்லை….
அழியும் அத்தை அழிக்கவோ என்று கொண்டு,
அச்சேத்யோயம்-என்று அழிக்காததை அழித்தபடி
குத்தின வேலை அங்கே பொதித்தால் போலே – மிளிர்ந்து
(மர்ம ஸ்பர்ஸி -அழிக்காததை அழிப்பதால் வை லக்ஷண்யம் சொன்னபடி )
இவையோ-
இவற்றில் க்ரூர்யம் இருந்தபடி-
பேர்வனவோ அல்ல–
பரிகாரத்துக்கு அன்றியிலே
பறித்து குத்த என்னிலும் பேர்கிறதில்லை
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன —
சொவ்ரியை போல பல வடிவு கொள்ளுகிறது தான் என் தான் ?
(வேல் மீன் காமன் பானம் போன்ற வடிவுகள் கொண்டனவே )
கார்யகர்த்ருத்வத்தாலே (ஆண் பெண் சேர்க்கை) பிரதானுமாய்,,
விலஷணனுமாய் இருந்துள்ள ,
காமன் உடைய பாணன்களில் உண்டான ,மிக்க ஒளியை
காலா நின்றது புறப்பட விடா நின்றது-
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வான –
நீலமான சுடரை புறப்பட விடா நின்றுள்ள ,திரு மேனி உடைய சர்வேஸ்வரன் உடைய ,
பரம பதத்தை தேடா நின்றது
அயர்வறும் அமரர்களுக்கு தாரக போஷகமாம் படிவிட்டு இருக்கும் திருமேனி
அம்மான்-
அவ் வடிவுக்கு தோற்று ஜிதம் என்று இருக்கும் படி.
தச்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம்-என்னும் படியான திரு மேனியை –
சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கும் அவர்கள்..–
விசும்பூர் என்னும் காட்டில்
அங்குள்ளாரை தோற்றுமோ என்னில்-
மஞ்சா குரோசந்தி -என்னுமா போலே
தேர்வன—
அப் படி விலஷணமான விஷயத்தை காற் கடை கொண்டு ,
அதிலும் விலஷணமான இக் கண்களை ,தேடி வருகிற படி,
லீலா விபூதியை ஜெயித்து
நித்ய விபூதியை ஜெயிக்க தேடிக் கொண்டு சென்ற படி
தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே —
இங்கே நாம் காண்கின்றன அன்றிக்கே ,
அப்பிராக்ருதமாய் இருக்கிற படி
அந்நீர்–
அன்னார் என்ற படி
கண் என்று சம்சயித்து ,
கயல் என்று நிர்ணயித்த படி-
————-
தாத்பர்யம்
ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக் கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை –
நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்
அழகிய இரண்டு மத்ஸ்யம் போலேயும்
மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை
வேல் போல் என் மேல் பாய்ந்து
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு
இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு
நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக் கொண்டு வந்தார்கள்
இப்படி முக்தமாக அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply