ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் ஒரு முறை அயனை ஈன்றனை
ஒரு முறை இரு சுடர் மீதின் இலங்கா மும் மதிள் இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளினை அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மான் உரி இலங்கு மார்வினன் இரு பிறப்பு ஒரு மாணாகி ஒரு முறை ஈர் அடி மூ வுலகு அளந்தனை–பார்த்தோம்-
நால் திசை நடுங்க அஞ்சிறை பறவை ஏறி நால் வாய் மும்மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நால் இரு நீர் மடுவுள் தீர்த்தனை-
ஆழமான மடு–சாபம்-1000 வருஷம் சண்டை-நாராயணா ஒ மணி வண்ணா –ஆர் இடரை நீக்காய்-கூப்பிட-
நால் திசை நடுங்க-கோபத்துடன்-வந்ததால் நான்கு திசை மக்களும் நடுங்க/
அழகிய சிறகுகள் படைத்த கருடன் மேல் ஏறிக் கொண்டு/
நால் வாய்-தொங்குகின்ற வாய்/
மும் மதம்/ஒப்பற்ற- தனியான- ஒரு – வேழம் /அரந்தை- அரதி-துக்கம்–ஆழமான நீர் –
வாரணம் காரணம் நாரணம் -சுருக்கம் கதை –
பெரு மதிப்பான இந்த்ராதிகளுக்கு மட்டும் ரஷிக்க போகவில்லை-யானை கூப்பிட்ட குரலுக்கும் ஓடினாயே /
ஆபத்தும் விசுவாசமும் -அல்பமே வேண்டியே வருகிறாய்/
வேகம் -பார்த்து நால் திசையும் நடுங்க –அவசரம் பர பரப்பு -குரல் காதில் விழுந்ததும்–
நடுவாக வீற்று இருக்கும் ராஜ தர்பார் -கைலாகு கொடுத்து விஷ்வக்சேனர்-கருடனுக்கு அலங்காரம்/
அலை குலைய தலை குலைய –
நீர் புழு-முதலை இடம் இருந்து ரஷிக்க- வேகத்துக்கு வணக்கம்-பட்டர்-
அஞ்சிறை -வெஞ்சிறை புள் என்பார் பிரிந்து போனால்/கூப்பிட்டு கொண்டு வந்தால் அஞ்சிறை –
வேதமே கருடன்-அவன் பெருமை எல்லாம் பிரதி பலிக்கும்–
மிடுக்கு தீர்ந்த தனியாக இருந்த கஜேந்த்திரன்-1000 வருஷம் காத்து இருந்தார்-கூப்பிட வேண்டும் என்று –
அவனே சர்வ ரஷகன் என்ற எண்ணம்-சணப்பனாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல –
ஸூவ ரஷகம் ஒழிகை/ நம சப்தம் அர்த்தம்-எனக்கு நான் அல்லன்- உன் உடைய பொறுப்பு /
விட்டே பற்ற வேண்டும்-திரௌபதி சீதை-இரு கையும் விட்டேனோ திரௌபதி போலே-/
வில்லை ஒன்றையே நம்பி இருந்தால் -சொல்லினால் சுடுவேன் தூய வில்லுக்கு மாசு என்று –ஸூய சக்தியை விட்டாள்//
சக்தி இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும் இருந்து விட்டவர்க்கும் அவனே ரஷகன் /
சக்தி இருந்து போன பின்பு கஜேந்த்திரன்//சரணாகதி புத்தி -அகங்காரம் தொலைந்து –
உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன்/
மடு- வேற்று நிலம் யானைக்கு-முதலைக்கு தன் நிலம்/
சம்சாரம் கொண்ட என்னையும் ரஷிக்க வேண்டும்/
தேவ மானத்தாலே ஆயிரம் வருஷம் சண்டை /
நமக்கு ஐந்து முதலை-ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்-புலன்கள் நமிடம் இருந்து நம்மையே கெடுக்கும்-
உள் நிலாவிய ஐவரால் குமை தீர்த்தி-என்னை உன் பாத பங்கயம் எண்ணாது-இருக்க –
படு குழி-அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தேன்-
மிடுக்கன் அது நாம் துர் பலன்/
கோபம்-அதனால் நால் திசை நடுங்க-
மேரு போல அழகிய-இந்த நிலையிலும் அழகை அனுபவிகிறார்-தாதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடி வழக்கு –
திவி வா –புவி வா -நின் திருவடிகளில் பக்தி மாறாத நிலை அருள வேண்டும்/
சீறி அருளாதே -சீறாதே இல்லை சீருவதே அருளுதல் தான் ஆஸ்ரித விரோதிகளின் மேல் சீறி நம்மை அருளுகிறான்
வைகு தாமரை வாங்கிய வேழம்.. மற்றது நின் சரண் நினைப்ப -கொண்ட சீற்றம் ஓன்று உண்டு —
சீரிய அருள் -நம்பி இருக்கிறோம்–
கருமுகை தாமரைப் பூ -காடு-சந்திர சூர்யர் போல சங்கு சக்கரம்–
மின்னல் போல -செய்யாள்-ஓர் செம் பொன் குன்றின் மேல் வருவது போல-கருடன் மேல்-.
உம்பரால் அறியல் ஆகா -ஒளி உளார் ஆனைக்காகி-விண்ணுளார் வியப்ப வந்தான்-
அகில காரண அத்புத காரணம்- வேதாந்தம் சாட்சியாக உடன் கருடன் உடன் சென்றான் —
க சொல்லி ஜம் வந்து குதித்தார் –
ஆனையின் துயரம் தீர் சென்று நின்று ஆழி தொட்டானை-கொன்றானே–
இரண்டையும் அணைத்து கொண்டு -ராஜ புத்ரனின் இணை தோழனுக்கும் அருளுவது போல
முதலைக்கும் அணைப்பு-கரையில் போட்டு இரு கூறாக்கி-/எய்தால் சரியாகாது என்று தொட்டான்/
வாராய் என் ஆர் இடரை தீராய்–இரண்டு கூறாக/சரீரம் காக்க கூப்பிட வில்லை/
தாமரைப் பூவை திருவடியில் சேர்க்க-ரணம் ஏற்பட்ட யானையின் காலுக்கு வேது கொடுத்தானாம்-
மழுங்காத ஞானமாக படையாக -தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து -நாராயணன் பெயரை காக்க சென்றான்//
யானையை வர்ணிக்கிறாரே-அங்கம் அங்கமாக பார்த்து ஆழ்வார்-ரஷித்தாரே குழந்தையை-
இடர் பட்ட இவனின் அங்கங்கள் அத்வீதியம்-கரை புரண்ட அவதிக்கு கூப்பாடு தான் கதி/
நாமோ அநாதி காலம்– துர் பலம்– ஐந்து முதலைகள்- வேகம் வேண்டாமோ–என்கிறார்—
குருந்திடை கூறை பணியாய்–தோழியும் நானும் தொழுதோம்-சேர்ந்து-
மரக் கிளை தொங்கும் கூறை-ஒருவர் கூறையை ஒன்பதின்மர் கொள்வோம்/
ஆந்தராளர் குடியில் பிறந்து மர்மம் தெரிந்தவள் வார்த்தை- ஆண்டாள்-இரண்டு கிடாய் காலை பிடித்து நலிகிறது – –
கயல் வாளை-எம்மா வீடு திறமும் செப்பம்–கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா அடியேன் வேண்டுவது ஈதே–
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்
/மூவகை அக்நிகள்–அனல் ஓம்பும்-/பஞ்ச மகா யக்ஜம்/
ஆறு கர்மம்-அத்யயனம் அத்யாபனம் -வேதம் சொல்லுதல் கற்பித்தல்/ யாகம் பண்ணுதல் பண்ணுவித்தல்,
தானம் கொடுத்தல் வாங்குதல்/
கர்ம யோகம்-ஞான சகித கர்ம யோகம்/உபாயாந்தர நிஷ்ட்டர்-இவர்களுக்கும் பண்ணுகிறாயே-
சித்த உபாயம் முன்பு சாத்திய உபாயம் இப் பொழுது சொல்கிறார் /
கர்ம யோகம்-ஜனகர்/ ஞான யோகம் ஜட பரதர்/ பக்தி -பிரகலாதன்/
யோகோ யோகவிதாம் நேதா-முன் வழி நடத்தி செல்பவர்-
முத்தீ -குளித்து மூன்று அனலை ஓம்பும்-மூன்று பிள்ளை பெருவாரைப் போல-
அனல-போதும் புத்தி இல்லாதது-
நான் மறை- வேதம் பயின்றவர்/
ஐவகை வேள்வி-ப்ரஹ்ம யக்ஜம் தேவ பித்ரு பூத மனுஷ யக்ஜம்/
உரல் உலக்கை ஜல விளக்கு அடுப்பு விளக்குமாறு-ஐந்து இடத்திலும் கிருமிகள் போகும்-
அதற்க்கு ஐந்து பாபங்கள் தொலைக்க ஐந்து யக்ஜம்/
ஆறு கர்மங்கள்- அந்தணர் வணங்கும் தன்மை- உபாயம் மூலம் உன்னையே பிராதிகிறார்கள்-/
ப்ரஹ்மத்தைப் நோக்கி போகும் பிராமணர்கள்/
அடுத்து பக்தி யோகத்தை சொல்ல போகிறார்/
அதிகமனம்-உபாதானம்- இச்சா -ஸ்வாத்யாயம்- யோகம் -ஐந்து பஞ்ச கால பராயணர்/
அனல் ஓம்பும் அந்தணர்கள்/ அவன் தோன்றுவது -பிராமணர்களுக்கு-அக்னி/ யோகி-ஹிருதயத்தில்/சம தர்சனம்-
எங்கும்/விக்ரக ரூபத்தோடு புத்தி குறைந்த நமக்கு-
ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டனை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று
ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறிவரும் தன்மையை-
உனக்கு சேஷன் பரதந்த்ரன்-உன்னால் படைக்க பட்டு உன் ஆனந்தத்துக்கு உன் அடி சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே சரணா கதி//
செயல் மாண்டு போதல் சரணா கதி-மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி-வாழும் சோம்பரை-உகத்தி போலும்-//
பக்தி ஸ்ரீ வைஷ்ணவர் கோஷ்டியில் இல்லை என்ற தவறான எண்ணம்-சரண கதி-சித்த உபாயம்-
அவன் மூலம் அவனை அடைதல்-பக்தி வேணும்-வழி இல்லை/கைங்கர்யமாக பண்ண வேண்டும்/
ஆர்த்த பிரபன்னர் -ஆழ்வார்கள் எல்லோரும்/இரு பிறப்பு அறுப்போர்-பாபம் புண்ணியம் –
புலன்களை வெளியில் போக விடாமல் மனசையும் ஆத்மாவில் செலுத்தி/
நான்கையும் அடக்கி-உண்ணுதல் உறங்குதல் பயப்படுதல் ஆண் பெண் சம்போகம்-தவிர்க்க வேண்டும்/
சிந்தனை எல்லாம் அவன் இடத்தில் அவனை நினைந்து பிரீதி கொண்டு-
மன் மனா பவ மத் பக்த மத் த்யாஜி மாம் நமஸ்கரி -ஸ்லோகம்-கீதை 9th அத்யாயம் கடைசி ஸ்லோகம்-
முன் எல்லாம் பீடிகை — பக்தன் விளக்கி– அர்சிரர்த்தி கதி எல்லாம் சொல்லி இதை அருளினான்-
மூடி மறைத்து கெளரவம் தெரிந்து கொள்ள /
சத்வம் ரஜஸ் தமோ-இரண்டை அகற்றி சத்வத குணத்திலே ஒன்றி இருந்து பாப புண்யம் கழிந்து-
கர்ம ஞான யோகம் இதற்க்கு அங்கம்/
பக்தி-கைங்கர்யம்- ருசி ஞானம் அவனை பற்றி அறிவை வளர்க்க கர்ம யோகம்-
பகவத் ஆக்ஜா கைங்கர்ய ரூபம்-விலைக்கு உறுப்பு இல்லை/
நான்கை அடக்கி-மனோ புத்தி சிந்தை அகங்காரம்-நெஞ்சு மனசு நினைக்கும் புத்தி-
அறிவு தர்ம பூத ஞானம் சிந்தனை/ஸ்மரணம்-நினைத்தல்- தெரிந்ததை மீண்டும் நினைத்தல்/
முதல் தடவை அறிதல்-நினைவு இல்லை-
அடையாளம் சொல்லிய பின்பு-நினைக்கும் பொழுது மனசு/
வெவ்வேறு நிலை நான்கும்/ஆகாரம் நித்தரை பயம் மைத்துனம்/முன் சொன்ன நான்கும்/முக் குணம் பிரகிருதி உடன் சேர்ந்தே இருக்கும்-
நீர் நுமது -வேர் முதல் மாய்த்து -அநாதி கால கர்ம -ஆத்மா-கர்மம் மூன்று வித த்யாகத்துடன் செய்து-
சத்வ குணம் வளர்க்க/அனந்தாழ்வான்-கடித்த பாம்பு கடி பட்ட பாம்பு-இரண்டுமே கைங்கர்ய பலன்-
தன்னைக் கண்டால் பாம்பை போல இருக்க வேண்டும்-
ஒன்றினில் ஒன்றி நின்று/புண்ய பாபம் அடியாக பிறப்பு- சுழலை அறுக்க-
செயல் என்னது இல்லை கர்துருத்வ மம பல த்யாகம்-
பலன் என்னது இல்லை -உபாசகர்-பக்தி யோகம் -அறியும் தன்மையன்–
கஜேந்த்ரனின் மிடுக்கு போல கர்ம பக்தி யோகம்/ இது எல்லாம் என் இடம் இல்லை
நீயே உபாயம்-ரஷிக்க வேண்டும்/
சாதனா சதுஷ்டம்-நித்ய அநித்திய வஸ்து விவேகம் -உண்மை அறிவு பகுத்து அறிவு /
சம தம சாதனா சம்பத்து -வெளி உள் இந்த்ரியங்கள் அடக்குவது /
இக அமுதர பல போக விகாரம்-இங்கு ஐஸ்வர்ய சொர்க்கம் ஆசை விடுதல்/ முமுஷ்த்வம் -நான்கையும் -/
சாதனாந்த்ரர் அவர்களுக்கும் உதவுகிற நீர் அடியேனுக்கு உதவ வேண்டாமோ-என்கிறார்/
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மை பெருமையுள் நின்றவன்-
ஆறு-கங்கை பொருந்திய சடை -மூன்று கண்கள் -ஞானம் பெருத்தவன் -கண்-ஞானம் /அறிவதற்கு அரியவன் /
ஆரோக்கியம்-பாஸ்கரன் சொத்து -அக்னி/ ஞானம்-ருத்ரன்/ மோஷம்-ஜனார்த்தனம்/
பஹு பரிகரனாய் -அதிக சக்தனாய் ருத்ரனும் அறிய முடியாத-பெருமை/நீசர்களாகிய எங்களுக்கு முடியுமா –
நீயே அருள வேண்டும்-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய அறுசுவை பயனும் ஆயினை
சுடர் விடும் ஐம்படை அம்கையுள் அமர்ந்தனை-சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண
நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
மலர் என அம்கையின் முப் பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
ஏழு உலகையும்// வராக அவதாரத்தை– ஏழு உலகு எயற்றில் கொண்டனை/
தந்ததாலே–இன்னான் இணையான் இன்றி அனைவரையும் ரஷித்தாயே-
பிரளயம் கொண்ட பூமியை கொண்டது போல பவ ஆரணவம்-சம்சார கடலில் இருந்து ரஷித்து அருளுவாய் //-
ஞானப் பிரானை அல்லால் நான் கண்ட நல்லதுவே//
பாசி தூரத்தி கிடந்த பார் மகளை- ஏக தேசத்தில் -நீல வரை-கோட்டிடை கொண்ட எந்தாய்-ரஷகத்தில் இருந்த பாரிப்பு/
கூறிய அரு சுவை பயனும் நீ/
அரு சுவை அடிசில் என்கோ கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்–
மக்களுக்கு இது இன்றியமையாது இருப்பது போல உன்னைக் கொடுத்து அருளுவாய்/
போற்றி- ஆறு தடவை ஆண்டாள் அருளி /
வேதத்தை .வேதத்தின் சுவை பயனை/அமுதின் இன் சுவையே சுவையின் பயனும் நீயே-ஆழ்வார்/
ரச பதார்த்தங்கள்/கந்தம் எல்லாம் அவனே /
கனி என்கோ பால் என்கோ நால் வேத பலன் என்கோ –
சுடர் விடும் -அழகிய திரு கரங்களில் பஞ்ச ஆயுதங்களை பிடித்து இருகிறாய்/
ஆற்று வூற்று வேற்று நீர்-முந்நீர் வண்ணன் கடல் வண்ணன் -போக்கியம் -இவருக்கு இது தானே-
ஆயுத அழகு தோள் அழகு கடல் வண்ண மேனி அழகு/
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருந்துள்ள-திரு கைகளில் – –
கோலார்ந்த -அழகுக்கு அழகு சேர்த்து-பிரதி கூலர்களுக்கு ஆயுதம், அனுகூலர்களுக்கு ஆபரணங்கள்/
அமரும் படி தரித்தாயே/கச்சு என்று-கற்பக மரம் கிளை பூம் கொத்து-போல அரங்கன் தோள்களும் ஆயுதங்களும் ///
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூர்/
கற்பக கா அன்ன-/சுந்தர நால் தோள்/
சம்சார வெப்பம் தொலைக்கும் முந்நீர் வண்ணா முகில் வண்ணா அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே அரு பதம் உரலும் கூந்தல் காரணம்-
ஏழ் விடை அடங்க செற்றனை அறுவகை சமயமும் அறிவரு நிலையினை ஐம் பால் ஓதியை ஆகத்து இருத்தினை-
அற முதல் நான்கு அவையே மூர்த்தி மூன்றாய் இருவகை பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை
குன்றா மது மலர் சோலை வண் கொடி படப்பை வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்-
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த கற்ப்போர் புரிசை கனக மாளிகை நிமிர் கொடி விசும்பில்-இளம் பிறை துவக்கும் /
செல்வம் மல்கு தென் திரு குடந்தை அந்தணர் மந்திர மொழி உடன் வணங்க-
ஆட அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம நின் அடி இணை பணிவன்-
வரும் இடர் அகல மாற்றோ வினையே
மல்லாண்ட திண் தோள்
சீதை தோளின் கீழ் இருப்பதே சொர்க்கம்-பயம் கெட்டு-
அதைக் காட்டியதும் மீண்டும் பயம் பெரிய ஆழ்வாருக்கு /அதற்கும் பல்லாண்டு/
திருவடி-சௌந்தர்யம் பிரசன்னம் காட்டி ஆபரணம் இன்றி வர வேண்டுமா/
மற்ற எல்லாம் இல்லாத பொழுது அழகை காட்டித் திருத்துவார் /
முன்னிலும் பின் அழகு பெருமாள்/-
வடக்கு பக்கம் உள்ளவருக்கு அதிக அழகை காட்ட தான் தென் திசை நோக்கி சயனித்து இருக்கிறான் அரங்கன்/
மேல கோட்டை பின் அழகு சேவை உண்டு/
பொன் இவர் மேனி-.பொன் இளம் ஜோதி மரகதது ஆகம்.. .என்னையும் நோக்கி-அச்சச்சோ ஒருவர் அழகியவா/
வேதம் ஓதும் வேதியர்- உனக்கு சுவாமி என்று சொல்ல வருகிறார் /
நெஞ்சு கண் எல்லாம் பரி கொண்டார்/பிரணவ ரஷகத்துக்கு தயார் நிலையில் பஞ்ச ஆயுதம்/
முகப்பே கூவிப் பணி கொள்ள வேண்டும்/ சங்கு சக்கரம் தூக்க நானும் உள்ளேன்-ஆழ்வார் /
கிரீடம் சூர்யன் போல திரு கண்கள் சந்தரன் போல/ சங்கு சக்கரமும் சூர்ய சந்தரன்/
திருக் கண்கள் தாமரை – வலக் கை ஆழி பார்த்து மலர-திருச் சங்காழ்வானைப் பார்த்து மூடிக் கொள்கின்றனவாம்/
என் சொல்லி சொல்லுவேன் அன்னை மீர்காள்-
தென் திரு பேரை-மகர நெடும் குழை காதன்–வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன் என் நெஞ்சினூடே —
புள்ளை கடாவுகிற வாற்றை காணீர் -வையாளி கருட உத்சவம் எல்லாம் ஆழ்வார் உள்ளத்தில்/
வேத ஒலியும் விழா ஒலியும்/சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன் /ஆழம் கண்டு பிடிக்க முடியாதவன்-கடல் வண்ணன்/
கடக்க அரிது கலக்க முடியாதவன்/கல்யாண குணங்கள் நிறைந்தவன்/
நெறி முறை நால் வகை வர்ணம்-சாதூர் வர்ணம்-மா சிருஷ்டம் குணம் கர்மம் அடிப்படையில்-
தொழில்//சத்வம்-பிராமணர்/ ரஜஸ்-ஷத்ரியன்- ரஜஸ் தமோ கலந்து-வைஸ்யன்/சூத்திரன்- தமோ குணம்//
பிராமணர் -முகம்-வேதம் ஷத்ரியன்-தோள்கள்-ரஷிக்க வைஸ்யன்- தொடை-வியாபாரம்
கோ ரஷணம்-சூத்திரன்-திருவடிகள் -விவசாயம்-சோகம் தீர்ப்பவர் உழவு தொழில் //
கர்ம யோகம் செய்ய விருப்பம் ஏற்பட வேண்டும்
புருவம் மேல் நோக்க-பிரம்மா இந்த்ரன் போல்வார் படைக்க படுவார்கள்/இதுவே பிரமாணம்/
கிடந்தது இருந்து உமிழ்ந்து –பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் /விராதன்-ஸ்தோத்ரம்-இது அறிந்தால் சீறாளோ-
அரவாகி சுமத்தியால் எயற்றில் ஏந்தி.. ஈர் அடியால் ஒளித்தியால்//மலர் அன்ன -மலர் போலி தான்/அறி தியில்-
அறிந்து கொண்டே தூங்குகிறான்-ஜகத் ரக்ஷணத்தை யோக நித்தரை /
அமர்ந்தனை- வீசி வில் விட்டு போந்தாலும் எழுந்து இருக்க மாட்டான்//புருஷ கார பூதை உண்டு உன் சிந்தனையும் உண்டு //
சாஸ்திர முறை படி பண்ணுபவருக்கும் ரஷகன் நீயே //
நீ இட்ட வழக்கு /ஆராதனம் பண்ண படுபவனும் நீயே //
அகம் ஹி சர்வ யக்ஜானாம் போக்தா -பலனும் அவனே -செய்பவனும் அவனே யக்ஜா த்ரவ்யமும் அவனே –
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் /செய்வார்களை செய்வேனும் நானே என்னும்/
கர்த்தா -ஸ்வதந்த்ரனாக செய்ய வில்லை அவன் கர்மம் அடியாக செய்ய தூண்டுவிகிறான் /
ரிஷி பத்னி-வேர்த்து பசித்து வயிறு அசைந்து –பக்த லோசனத்துக்கு உய்த்திடுமின் //
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே-அருள் மிகு- அ மி-ஆத்மா வாசம் செய்வதால் மேதகும் -புகுந்து பொருந்த தக்க/
நீராய் நிலனாய் தீயாய்–மிசை கரந்து எங்கும் பரந்து உளன் /
/மேவி தக்கி இருக்கும் /மேம் பொருள் போக விட்டு- சூழ்ந்து இருக்கிற -தக்க இருக்கும் மேதகு //
சரீரமே நான் என்று சொல்லும் படி மேவி பொருந்தி இருக்கிறது தேவோகம் மனுஷ்யோகம் போல/
யாதானும் ஆக்கையில் புக்கு அதுவாகவே இருக்கும் /கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கும் உடல்/
இத்தால் என் சத்தைக்கு ஆதாரம் நீயே என்கிறார்/
உன்னை ஒழிய ரஷகர் இல்லை-
நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலர் என அம் கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை/
வடிவு இணை இல்லா மலர் மகள் மற்றும் நில மகள் கூசிப் பிடிக்கும் மெல் அடிகள்-காசின வேந்தன்-
கொடு வினையேனும் பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -ஆழ்வார்/
வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை என்னையும் உன் அடியானும் உளன் என்று கொல்/
/சீதைக்கு திரு ஆபரணம் திரு கல்யாணம் சாத்த பார்க்கும் பொழுதே பார்த்த இடம் சிவந்ததாம்-கண் பார்வையாலே/
சௌ வ்குமார்யம்/ அவளே கூசி பிடிக்கும் மெல் அடிகள்/
உள்ளத்திலும் மார்த்வம்-விரகம் சகியாத மார்த்வம் வளத்தில் களத்தில் கூடு பூரிக்கும் திரு மூழி களம்//
புருஷ காரத்துக்கு பிராட்டி உண்டு என்கிறார் இத்தால் /
உன் திருவடி வருடுவதே போகம் அவர்களுக்கு /
ஒரு மதி-
குறை இல்லாத மதி-கல்மஷம் இல்லாத பூர்ண சந்திரன்/
அனுபவத்தால் மலர்ந்த திரு முகம்/துல்ய சீல வயோ விருத்தாம்-
மங்கை-குமரர் யுவ-சிசு பால்யம் குமாரம் -திரு கல்யாணம் பண்ண யௌவனம்/குமார தன்மை மாறி
யௌவனம் வரும் யுவா குமாரர் எப் பொழுதும்/
கரியான் ஒரு காளை வந்து வெள்ளி வளை கைப் பற்ற —
அணி ஆலி புகுவர் கொலோ //காளை புகுத கனா கண்டேன் தோழி நான்/
பருவத்தாலே பிச்சேற்ற வல்ல -பித்தர் பணி மலர் மேல் பாவைக்கு /தத் இங்கித பிரமாணம்
கும்பன் -பின்னை-ஏழு கொம்பை முறித்து ஒரு கொம்பை கொண்டான்/
ஒரு கொம்புக்காக ஏழு கொம்பில் குதித்தான்/
வெண்ணெய் திருடவும் நப்பின்னை திரு கல்யாணம் பண்ணவே திரு அவதாரம் //
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி –ஈட்டிய வெண்ணெய் –/
வன் கூன்– கோட்டிடை ஆயர் தம் கொம்பினுக்கே //
தந்தை காலில் விலங்கற -பால் குடித்தான் என்று நினைத்தால் நாம் பிறந்து பால் குடிக்க வேண்டாம்/
அறு பதம் முரலும்-வண்டு முரலும் சாமான்ய லஷணம் சொல்லி விசேஷ லஷணம் சொல்கிறார் /
வண்டுகள் தேன் குடிக்க புஷ்பம் சாத்திக் கொண்டு இருக்கும் நப்பின்னை/
கண்ணனும் வண்டு போல/உக்கமும் தட்டொளியும் போல அவனையும் தருவாள்/நீளா தேவி அவதாரம் நப்பின்னை/போக்ய பூதை /
சம்ச்லேஷ விரோதி போக்கினது போல நம் விரோதிகளை போக்குவார்/
கழுத்தே கட்டளையாக தேன் குடித்த வண்டு –
மல்லரை மாட்டிய தேவாதி தேவனை-இருவரையும் மாட்டி விட்டார்/
சந்தன அலங்காரம் கலையாமல் ஏழு கொம்புகள் கோலம் போட்டால் போல குதித்தாராம்-
லலித கிருகம் -அந்த புரத்துக்கு இது தான் கோலம்/
கோவை வாயாள் பொருட்டு/கரு விருத்தம்-நீத்த பின் காம கரும் குழியில் வீழ்ந்தோம் திரு விருத்தம் ஓர் அடி கற்றால் -தனியன்-வாக்கியம்
-7 பிராயங்கள் கற்ப ஜன்ம யௌவனம் போன்ற -பாப புண்ணியம் -இவை தான் கொம்புகள்//
அறு சமயங்கள்-புற —
சாருவாகன்/புத்தன்,/ஜைனன்/னையாகிக/வைஷேஷிகன் /பாசுபதன்//
ஐம்பால் கூந்தல்-ஸ்ரீ தேவி சேர்க்கை-
ஐந்து ஓதி-தலை முடி–மென்மை குளிர்த்தி நாற்றம் நெடுமை கருமை
பெரிய பிராட்டியை திரு மார்பில் வைத்து-ஸ்ரீய பதித்வம் -சொல்கிறார்/
மேல் சொல்லும் திரு சௌலப்யம் எல்ல வற்றுக்கும் காரண பூதை/
அறம் முதல் நான்கு-புருஷார்த்தங்களாய்-அறம் பொருள் இன்பம் வீடு-/
மூர்த்தி மூன்றாய்/
அந்தர்யாமியாய்/
இரு வகை பயனாய்- சுக துக்கம்-
ஒன்றாய் விரிந்தனை/
ஓன்று -ஆய்- மயில் தொகை போல-கடல் அலை போலவும்/
ஒன்றாய் பார்த்தால் ஓன்று விரிந்ததை பார்த்தால் எல்லாமும் அவனே /
ஓன்று என்று உரைக்கில் ஒன்றே ஆம்/
உளன் எனில் உளன் இலன் உளன் அவன் உருவுகள் உளன் எனில் உளன் இவ் அருவுகள்/-இரு தகமையோடு உளன்/
நால் தோள் அமுதாய்-நான்கு புருஷார்ததுக்கும் /
காரியத்தில் உள்ள குற்றம் காரணத்திலே இருக்குமே –ரத்னம்-சேருக்குள்- வியாபிக தோஷம்-ஒளி மறையுமே –இரண்டு கேள்வி/
எதை அடிப்படையாக ஸ்ருஷ்ட்டி-கர்மம் அடிப்படை தானே
வ்யாப்ய கத தோஷம் தட்டாது-இச்சாதீனம்-கிருபையால் ஆசைப் பட்டு உள்ளே புகுந்தான்/
மூன்று மூர்த்தியாய் சுக துக்கம் கொடுப்பவனாய் இருக்கிறான் /
தாமரை இலை தண்ணீர் போல ஒட்டு அற்று நின்கிற ஐஸ்வர்யம் சொல்லிற்று-
காரண அவஸ்தையில் சத் ஆக -உள்ளது- என்ற சொல்லாலே
கார்ய அவஸ்தையில் பஹுஸ்யாம் என்கிற படி விச்தீரமாய் இருக்கிறான்/
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே /உத்தான சயனம்/ திராவிட சுருதி தரிசகாய /ஆரா அமுதாய் /
தரியேன் – பிரியா அடிமை கொண்டாய்
உன் சரணம் தந்து என் சன்மம் களைவாயே–
உனக்கு ஆட பட்டும் இன்னும் உழல்வேனோ //
803 நாத முனி அவதாரம்/தொண்டர்க்கு அமுது /ஓர் ஆயிரத்துள் இப் பத்து /
கழல்கள் அவையே சரணாக கொண்ட குருகூர் சடகோபன்/
கண்ணி நுண் சிறு தாம்பு-பராங்குச நம்பி 120000 தடவை சொல்லி– கொடுத்தோம்-நான்கு பிர பந்தம்/
மற்றைய 9 பேர் அருளிய 3000 பாசுரமும் கொடுத்தார்//
மேலை அகத்து ஆழ்வான் கீழை அகத்து ஆழ்வான் மூலம் இசை கூட்டி அருளினார்/
ஆடு அரவம் அமளி அறி துயில் அமர்ந்த பரம-முன் திரு குடந்தை-/
குன்றா மது மலர் சோலை-திவ்ய தேசத்தில் எல்லாம் உத்தேசம்//
வண்மை மிக்க கொடி-கடாஷத்தாலே பூ பூத்து காய்கிறதாம்-நித்ய வசந்தம் இங்கு -/
படைப்பை-தோட்டம்/வரு புனல் பொன்னி- காவேரி தாயார்-வழியில் தங்கம் கொண்டு வந்து இங்கு கொடுத்தாளாம்/
சிங்கமும் யானையும் சண்டை போட்டு நகம் தந்தம் /
மா மணி அலைக்கும் -அலை அறிந்து -ரத்னங்களைச் சேர்க்கும்-ஆழ்வார்கள் ஆகிய ரத்னங்கள்-
நடந்த கால்கள் நொந்தவோ-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-/-பாதி சயனம்-ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான் /
/செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த
கற்ப்போர் புரிசை கனக மாளிகை-செழும் மா மணிகள் சேரும் திரு குடந்தை-/
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்/செல்வம் மல்கு தென் திரு குடந்தை
அந்தணர் மந்திர மொழி உடன் வணங்க-அநந்ய பிரயோஜனர்-.
ஆடு அரவ அமளியில்-பெருமாள் ஸ்பர்சத்தால் சிலிர்த்து எழுந்து ஆடும்-
மூச்சு இழுத்து விட்டு தொட்டில் போல-
அறி துயில் அமர்ந்த பரம !-ஜகத் ரட்ஷனம் நினைந்து –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே –
விரோதி போக்கி அருள வேண்டும் ..
நித்ய அனுபவம் வேண்டும்/அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்த்திக்கு அடி பற்றுகிறார் /
உன் சரணம் தந்து சன்மம் களையாயே-
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்–ஆழ்வார் ஏரார் கோலம் திகழ கிடந்தாய்/சந்திரனை தொடும் கொடிகள்/அறிவிப்பே அமையும் /
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கி கிடப்பன என்றும் பொன்னி
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கரும் துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பனை பள்ளி கொண்டான் திரு பாதங்களே–கம்பர் அருளி செய்தது-
இடம் கொண்ட திரு மங்கை ஆழ்வாரின் நெஞ்சத்தில் இடம் கொண்ட ஆரா அமுதன்
————————————————————————–
நால்திசை நடுங்க -அஞ்சிறைப் பறவை ஏறி–நால் வாய் –மும்மதத்து –இரு செவி -ஒரு தனி வேழத்து அரந்தையை –
நால்வாய் -தொங்கு கின்ற வாய் -யானைக்கு வாய் தொங்குதல் இயல்பு
மும்மதம் -இரண்டு கன்னங்களிலும் குறியிலும் யானைக்கு மதப்புனல் சோரும்
இரு செவி-பெருமையையும் சொல்லிற்றே -பெரிய காதுகளை உடைத்தாய் –
இவை எல்லாம் இயல்பாக இருந்தாலும்
ஒரு குழந்தையை கிணற்றில் இருந்தும் காத்த பின்பு
ஐயோ இது என்ன கால் அழகு கை அழகு தலை அழகு முக அழகு
என்று சொல்லி சொல்லி மாய்ந்து போவார் போலே
அதன் வாய் செவி அழகிலே ஆழ்ந்து கரைந்த பகவத் சமாதியாலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
நால்வாய் மும்மதத் திருசெவி -என்றால் போலே சொல்லுவதற்கு கருத்து ஏது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால்
காதும் கண்டவாளியும் காலும் தலையும் வடிவும் இருந்த படி காண் என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு
ஆகர்ஷகமாம் படியாலே சொல்லுகிறது -வியாக்யான ஸ்ரீ ஸூக்தியின் அழகு காண்க –
அரந்தை -துக்கம்-
அஞ்சிறை -பெரிய திருவடி எம்பெருமான் திரு உள்ளம் அறிந்து வேகமாக கொணர்ந்து வந்தது
கொண்டாடி அஞ்சிறை -என்று அருளிச் செய்கிறார் –
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை
முத்தீ –
கார்ஹபத்யம்
ஐஹவ நீயம்
தஷிணாக்னி
ஐ -வகை வேள்வி
ப்ரஹ்ம யஞ்ஞம்-ப்ரஹ்ம யஞ்ஞப்ரசனம் -வேதம் ஓதுவது
தேவ யஞ்ஞம் –அக்னி ஹோத்ரம் போல்வன
பூத யஞ்ஞம் -பிராணிகட்கு பலி இடுவது
பித்ரு யஞ்ஞம் -தர்ப்பணம் போல்வன
மனுஷ்ய யஞ்ஞம் -விருந்தோம்பல் போல்வன
அறு தொழில் –
தான் வேதம் ஓதுதல்
பிறர்களுக்கு ஓதுவித்தல்
தான் யாகம் செய்தல்
பிறர்களுக்கு யாகம் செய்வித்தல்
தானம் கொடுத்தல்
தானம் வாங்கிக் கொள்லுதல்
இப்படிப் பட்ட வேதியர்களாலே சேவிக்கப் படுபவன் எம்பெருமான் –
ஐம் புலனவை அகத்தினுள் செறுத்து -நான்குடன் அடக்கி –முக்குணத்து –இரண்டவை அகற்றி –
ஒன்றினில் -ஒன்றி நின்று ஆங்கு –இரு பிறப்பு அறுப்போர் அறியும் –தன்மையை –
நான்குடன் அடக்கி –
உண்ணுதல்
உறங்குதல்
அஞ்சுதல்
விஷய போகம் செய்தல் –நான்கையும் கூட இல்லை செய்து –
ஆஹாரா நித்ரா பய மைது நாநி சாமான்ய மேதத் பசுபிர் நராணாம் -என்றபடி
இவை நான்கும் நால் கால் விலங்குகளுக்கும் பொருந்தும்
தள்ளி ஞானத்தை கடைப் படித்து -என்றபடி
நான்குடன் அடக்கி
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் –என்றும்
பொய் சொல்லுதல் – -கோள் சொல்லுதல் -கடும் சொல் சொல்லுதல் -பயனற்ற சொல் சொல்லுதல் என்னவுமாம்
இரு பிறப்பு –இருமை பெருமையாய் அநாதியான நீண்ட சம்சார துக்கத்தை
புண்ய பாவங்களால் வரும் பிறப்பு என்றுமாம்
தன்மையை
தன்மையன் -என்பதன் முன்னிலை —
முக்கண் -நால் தோள் –ஐவாய் அரவோடு –ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை –
பெண்ணுலாம் சடையினாலும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழித் தவம் செய்தார் வெள்கி நிற்ப –
ஐவாய் அரவோடு -சிவனுக்கு நாகாபரணன் என்ற பெயர் உண்டே
ஆறு பொதி சடையோன்
கங்கா நதி அமைந்த ஜடையையும் உடையவன்
நின்றனை
முன்னிலை ஒருமை வினை முற்று
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை
கூறிய -அறு சுவைப் பயனுமாயினை
சுடர் விடும் -ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை –
நால் தோள் -முந்நீர் வண்ணா –
நின் -ஈர் அடிஒன்றிய மனத்தால் –
ஒரு மதி முகத்து மங்கையர் –இருவரும் மலரன
அங்கையில் -முப்பொதும் வருட அறி துயில் -அமர்ந்தனை –
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-
இப்பொழுது நடக்கும் ஸ்வேத கல்பத்துக்கு முந்திய
பத்ம கல்பத்தில் ஸ்ரீ வராஹாவதாரம்
ஏழு என்றது சகல லோகங்கள் என்னவுமாம்
ஏழு -சப்த த்வீபங்கள்
நாவலந்தீவு
இறலித்தீவு
குசையின்தீவு
கிரவுஞ்சத்தீவு
சான்மலித்தீவு
தெங்கின் தீவு
புட்கரத்தீவு —
முந்நீர்
ஆற்று நீர்
மழை நீர்
ஊற்று நீர்
கூறிய -அறு சுவைப் பயனுமாயினை-
உப்பு
புளிப்பு
துவர்ப்பு
இனிப்பு
கார்ப்பு
கைப்பு -அறு சுவை
அச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ –
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்றும்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் -என்றும் திருக் கைகளால்
திருவடியைப் பிடிக்க
யோக நித்தரை செய்து அருளுபவனே
நெறிமுறை நால் வகை வருணமும் ஆயினை –
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே —
அறுபத முரலும் கூந்தல் காரணம் –எழிலிடை அடங்கச் செற்றனை –
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையனை
ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை –
அற முதல் -நான்கு அவையாய் மூர்த்தி — மூன்றாய் -இரு வகைப் பயனாய் –ஒன்றாய் விரிந்து நின்றனை –
நெறிமுறை நால் வகை வருணமும் ஆயினை
சாஸ்திரம்
திரு முகத்தின் நின்றும் ப்ராஹ்மனர்
புஜத்தின் நின்றும் ஷத்ரியர்
துடையின் நின்றும் வைஸ்யர்
திருவடியின் நின்றும் சூத்ரர்
அன்றிக்கே
வர்ணம் படி கர்மங்களை சாஸ்த்ரங்களிலே விதித்து
வர்ணாஸ்ரம தர்மங்கள் வழுவாமல் நடத்தி
அன்றிக்கே வர்ணாஸ்ர தர்மங்கள் வழுவாமல் இருப்பவர்களால் ஆராதிக்கப் படுபவன் -என்றுமாம்
மேதகும் -ஆத்மாக்கள் பொருந்தி வர்த்திப்பதற்குத் தகுதியான
ஆத்மாக்கள் விஷயானுபத்தில் மேவ சரீரம் வேண்டுமே
அவை பஞ்ச பூதமயம்
அறுபத முரலும் கூந்தல் காரணம்
மதுபான அர்த்தமாக வண்டுகள் ரீங்காரம் செய்யப் பெற்ற கூந்தலை உடைய நப்பின்னை பிராட்டி காரணமாக
ஐம்பால் ஓதியை-
மென்மை
குளிர்த்தி
நறுமணம்
கருமை
நெடுமை
ஐந்து லஷணங்களை உடைய கூந்தலை உடைய பிராட்டியை
அறுவகை சமயம்
சாக்யர்
உலுக்கர்
பௌத்தர்
சார்வாகர்
பாசுபதர்
காணாதர்-
ஒன்றாய் விரிந்து நின்றனை –
தான் ஒருவனாய் இருந்தும்
பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து நின்றாய்
ஆக
இவ்வளவிலே
திரு எழு கூற்று இருக்கை இலக்கண சொல் மாலை முற்றுப் பெற்றன-
மேலே ஸ்தோத்ர சமாபனம்-
குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படைப்பை
வருபுனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரிசெய் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த பரம
நின்னடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே
குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படைப்பை –
குன்றாத நிறைந்த தேனை உடைய பூக்கள் நிறைந்த சோலைகள் யுடையதும் –
வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும்
கற்போர் புரிசெய் கனக மாளிகை
வித்வான்கள் உடைய நகரமாக செய்யப் பட்டதும்
பொன்மயமான மாளிகைகளின் நின்றும்
கற்போர் புரிசெய் -வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி
புரிசை –
கற்பு ஓர் புரிசை -வேலைப்பாடுகள் உள்ள மதிள்கள்
ஆடு அரவு -எம்பெருமான் ஸ்பர்சத்தாலே –
ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
அமளி -படுக்கை –
அறி துயில் -யோக நித்தரை
ஆக
ஆர்த்தி தோற்ற தீர்க்க சரணாகதி செய்து அருளினார்
இன்னும் இவர் இடம் உலகை வாழ்விக்க பிரபந்தங்கள் பெறுவதற்காக
முகம் காட்டாமையாலே
திருமடல்களும் திரு நெடும் தாண்டகமும்
அருளுவார் அடுத்து –
————————————————————————–
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படங்கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே–கம்பர் அருளிச் செய்வது என்பர்-
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும்
விசாலமான என் நெஞ்சின் உள்ளே
எப்போதும்
பொருந்தி இருப்பவைகலாம் –
பொன்னித் தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
காவேரியின் கரையில் உள்ளதும்
நால் புறங்களிலும் தாமரை பூக்கள் மலரப் பெற்றதும்
குளிர்த்தி பொருந்தியதும்
-அழகியதுமான
திருக்குடந்தையிலே
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
விஷமுள்ள வெளுத்த பற்களையும்
கரிய துத்தியையும்
சிவந்த கண்களையும்
நெருப்பை கக்குகிற வாயையும்
படங்கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே
படங்களையும் உடைய
திரு வநந்த ஆழ்வான் ஆகிற சயனத்திலே
பள்ளி கொண்டு அருளும் ஆராவமுதனுடைய
திருவடிகள் ஆனவை –
ஆழ்வார் அனுசந்திக்கிற பாவனையாகவே அருளிச் செய்யப் பெற்ற பாசுரம் –
காவேரி ஆற்றின் கரையின் உள்ள
பரம போக்யமான திருக் குடந்தையிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும்
ஆராவமுதனுடைய திருவடிகள்
ஒரு காலும் என் நெஞ்சை விட்டு நீங்காது
————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
January 28, 2011 at 4:28 pm |
AdiyEn Ramanuja Dhasan
The just concluded Ramanusa Nootrandhaadhi postings were just superb. AdiyEn hope to read more of swamin’s AruLicheyaL postings in this blog.
Poliga!Poliga!
AdiyEn
Vaasu