திரு எழு கூற்று இருக்கை -1—தனியன்/பிரவேசம்/ -திவ்யார்த்த தீபிகை /—- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ எம்பெருமானார் அருளி செய்த தனியன்கள்-

வாழி பரகாலன் வாழி கலி கன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல்-

——————————-

சீரார் திரு வெழு கூற்று இருக்கை என்னும் செஞ்சொல்லால்
ஆரா அமுதன் குடந்தை பிரான் தன் அடி இணை கீழ்
ஏரார் மறைப் பொருளை எல்லாம் எடுத்து இவ் உலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள் மாரி பாதம் துணை நமக்கே

————————————————————————–

சாரங்க வில்லின் அம்சம்

மூன்றாவது பிரபந்தம் / திவ்ய தேசம் அருளி மனசு ஈடு பட-அவன் பிரிவை தாங்காமல் வெளி வந்த பிர பந்தம் /
ஏழு பகுதிகள் ஏழு ஏழாக இருக்கும்  சித்திர கவி /
தேர் போன்ற /முன்பு திரு ஆடி தேர்- சந்நிதி திரும்ப புரட்டாசி கூட ஆகலாம்- வந்து சேரும் அன்றே திரு ஆடிப் பூரம்-
நால் திசை /அம்சிறைய பறவை ஏறி-அழகிய பொருள் நால்வாய -தொங்கும் வாய் மும் மத்தது இரு செவி-
இருமை பெருமை-எண்ணிக்கை சொல்லலாம்/பொருளையும் சொல்லும் / இரண்டையும் சொல்லும்

/தனியன்-ஆழ்வாரை பற்றி நாம் மோட்ஷம் அடைய / எம்பெருமானாரே அருளிய தனியன் –

-வாழி பரகாலன் -பகவானுக்கு விரோதிகள்-அவர்களுக்கு காலன் போன்றவர் இவர் /
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி செயலை கொண்டே -சூத்திரங்களை ஒருங்க விடுவார்/
குறையல் பிரான் அடி கீழ்-ராமானுஜர் -விள்ளாத அன்பு உடையவர்-பிரத்யட்ஷமாக சேவிக்கலாம்

/வாழி கலி கன்றி-இல்லை என்று கலியை   ஆக்குவார்-
கலி கன்றி தாசர்-நம்பிள்ளை-கார்த்திகை கார்த்திகை இவரும்/
வாழி குறையலூர் வாள் வேந்தன் -குறுநில மன்னராக இருந்தவர் –
தேவ பெருமாள் சொப்பனம்-மாயோனை -வயலாலி மணவாளன்- ஆழ்வாரை  திருத்திய மாயம்– மந்த்ரம் வழங்கிய மாயம்–
வாள் வலியால் மந்திரம் கொள் /நம் இந்த்ரியங்களை  கொள்ளை கொள்ளும் அழகன்-அவனையே கொண்டாரே-
கலியனோ- மிடுக்கு-வாளுக்கும்  ஆழ்வாருக்கும் திரு பல்லாண்டு அருளுகிறார்//

ஞான சம்பந்தர்-சீர்காழியில்-குறள் பாட சொல்லி- குற்றம்- குறளாகவே குறள் அப்பனை பாடினார்
ஒரு குறளாய் இரு நிலம் அளந்தான் மூன்று தருக என –
ஆலி நாடான்  அடையார் சீயம் கொற்ற வேல் பரகாலன் கலி கன்றி –பலவும் சொல்லிக்  கொள்கிறார் பலன் பாசுரத்தில்-
தூயோன் சுடர் மான வேல்/ஆண்டாளும்-வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி /
வேல் முதலா வென்றான் ஊர் /கடி அரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கும் மாயோன்-/
தனி வழியே வந்த மாலை வழி பறித்தார் /கை பொருளை நேராக பகவான் இடம் பெற்ற பெருமை/

திரு நறையூர் நம்பி இடம் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிக் கொள்கிறார்/
திருக் கண்ண புரம் பெருமாள் இடம் அர்த்தம் கேட்டுக் கொள்கிறார்/
மந்திரம் பற்றி இறே மந்த்ரம் கொண்டார்/நினைப்பவனை காக்கும் மந்த்ரம்/
மந்திரத்தை   மந்திரத்தால் மறவாமல் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே/
வாடினேன் வாடி –ஓடினேன்-இனி உன்னை சேவிக்க ஓடுவேன்

தூயோன்-வெளியிலும் உள்ளும் தூய்மை ஆத்ம குணம்  சாந்த -சம தம ஆதிகள்/
சம்சாரத்தில் குழிகள் நிறைய /வெளி வேஷம் .உடுத்து களைந்தது -கலத்தது உண்டு-
உள்ளே போக மனசு தடுக்க வெளி வேஷம் வேண்டும்/
சுடர் மான வேல் -தேஜஸ் மயமான வேல்
அணைத்த வேலும் தொழுத கையும்-மடல் உடனே சேவை –
கடல் எடுத்த குறையல் ஆலி–குமுத வல்லி நாச்சியார் உடன் சேவை/
பெரிய மடல் திரு நறையூர் நம்பிக்கு எடுத்தார்/
சிந்தனைக்கு இனியான்-வந்து உனது அடியேன் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய்-
இவரே அருளி இருக்கிறார்/கூடவே சேவை/
மங்களா சாசனம் பண்ணும் பொழுது தான் பிரிவார்/கொற்ற வேல்- வெற்றிவேல்- என்று  இதற்கும் பாடுகிறார்

அருள் மாரி – மாரி போல் கொட்டுவார் இன்பம் மாரியே அடியார்க்கு -நம் ஆழ்வார்-இவர் அருள் மாரி/ துணை நமக்கே/

—————————————-

சீரார் திரு வெழு கூற்று இருக்கை என்னும் செஞ்சொல்லால்
ஆரா அமுதன் குடந்தை பிரான் தன் அடி இணை கீழ்
ஏரார் மறைப் பொருளை எல்லாம் எடுத்து இவ் உலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள் மாரி பாதம் துணை நமக்கே

ஆறு பிர பந்தத்திலும் திருக் குடந்தை ஆரா அமுதனுக்கு மங்களாசாசனம் /
சரணாகதி-மறை பொருளை -சீரிய பொருளை உலகு உய்ய கொடுத்தார்/
அருள் மாரி- வேதாந்தம் நாம் இருக்கும் இடம் வந்து அருளினாரே- மேகம் போல

ஆவணி ரோகினி அஷ்டமி திதி-கண்ணனும் பெரிய வாச்சான் பிள்ளையும்/
வெண் சங்கம் ஏந்திய கண்ணா -நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் இதன் பொருள்  –
பெரும் புறக் கடல் -பத்தராவி பெருமாள்/-நம் பிள்ளையும் பெரிய வாச்சான் பிள்ளையும் /
இரண்டு வியாக்யானம் இதற்க்கு மட்டும் அருளி இருக்கிறார்/
நம் பிள்ளை ஈட்டில் மூன்று ஸ்ரீயப்பதி பிரவேசம் மூன்று உண்டாம்-புறப்பாடு கோஷ்டியோ கால ஷேப கோஷ்டியோ/
ஈடு சொல்ல புதிசாக பலர் வர அவதாரிகை மூன்று அருளினாராம்/
வேவ் வேற அர்த்தம்-கங்கை பல படி துறை போல/ முதல் இரண்டாம் மூன்றாம் ஸ்ரீய பதி படி/
அது போல புதிசாக வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மீண்டும் அருளி இருக்கிறார் பெரிய வாச்சான் பிள்ளை/

ஆழ்வார்களை வைத்து பாசுரம் இயற்ற்ற வைக்க -தம் குழந்தையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு -தொண்டர்க்கு அமுதம்/
சம்சார ஸ்வாப அனுசந்தானத்தாலே-துக்க பட்ட ஆழ்வார்/வாடினேன் வாடி- முதலில் –
திவ்ய தேச அனுபவம் ஆன பின்பு-மாறி மாறி சம்ச்லேஷம் விச்லேஷம்-
குந்தி- துக்கம் கொடு உன்னை நினைக்க என்று கேட்டு கொண்டாளே/
தாயே தந்தை –நோயே  பட்டு ஒழிந்தேன்-ஆழ்வார் – -எல்லாம் அவரே- ஆத்ம பந்து ஒருவனே மற்றவர் ஆபாச பந்து/
பெரிய திரு  மொழி-மாற்றம் உள பதிகம்-ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்/
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல/இரும் பாடு கொள்ளி எறும்பே போல்/–
சம்சார ஸ்வபாவம் அனுசந்தித்து துன்பம் பட்டார்/ பரிகாரமாக அவன் நினைந்து பாடி தொழுது-விதியினால்-வாக்கினால் –

-இனியவாறே குடந்தை மேய குரு மணி திரளை இன்ப பாவினை பச்சை தேனை பைம் பொன்னை அமரர் சென்னி பூவினை/
நெஞ்சாலும் நினைந்தும் வாயாலே பேசியும் மாற்று மருந்தாக –
துன்பம் ஏற்படும் பொழுது நினைக்க ஆரம்பித்து எப் பொழுதும் நினைக்க கற்று கொள்ள வேண்டும்

இங்கனே கிடந்து-வாசனையோடு போக்கி தர வேண்டும் என்று கேட்டார் பெருமாள் இடம்/
உன் அனுபவத்துக்கு விரோதி-/நம்மால் செய்வது இல்லை/
உன்னை ஒழிந்த எல்லா வற்றுக்கும்  நீ தான் பொறுப்பு /நான் என் வழியை பார்ப்பது -இல்லை/
நான் என்று பிரிந்து ஒன்றும் இல்லை உடமை சுவாமி தானே சொத்தை காக்க வேண்டும்/
சொத்து என்று யேற்றுக் கொண்டால் போதும் ரஷிக்க வருவான்/
நான் உன்னை அன்றி இலேன்,நீ என்னை அன்றி இலேன்  –
என்னையும் என் உடமையும் உன் சக்கர பொறியால்  ஒற்றி கொண்டு/
என் நான் செய்கேன் –உன்னால் அல்லால்  யாவராலும் குறை வேண்டேன் //
நானும் ரக்ஷணம்  என்பதும்  என் கையில் இல்லை/சகலதுக்கும் உத்பத்தி ரக்ஷணம் உன் கடமை
ஆபத் சகன் -நீதான் கழித்து அருள வேண்டும்–ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகன் இல்லை/
திரு வடிகளில் விழுந்து சரண் -நின் அடி இணை பணிவன்-ஆரா அமுத பிரான் திருவடிகளில் விழுந்து தம் தசையை வெளி இடுகிறார்/
நம் ஆழ்வாரும் 5-8 திருக் குடந்தை சரண் அடைந்தது போல/

முதலில் கரண களேபர விதுரமாய் -சிருஷ்டி-விளக்குகிறார்-
சூஷ்ம தசை -நாம ரூப விவேகம் அற்று -தமோ பூதமாய்-எங்கும் இருட்டாய்-இருள் தரும் மா ஞாலமாய்-
அந்தம் ஏற்பட்டு ஆழ்ந்த அன்று-அசித் போல இருந்த அன்று-
அர்தித்த -நிரபேஷமாக-ஆச்சார்யர் -சம்பந்தம் உணர்த்துவார்-உன் கடாஷத்தாலே எல்லாம்-
நின்றனரிருந்தினர்- எல்லாம் உன் ஆதீனம் தானே /
உண்டாக்கின நீயே இதுக்கு ஒரு போக்கடி/நான் ஓன்று செய்து அடைவது பொருள் இல்லை உண்டிட்டாய் உண்டு ஒழியாய்/

ஆழி சூழ்ந்த உலகுக்கு நீ தானே ரஷை/
நம் மேல் வினை கடிவான் கை கழலா நேமியான்/
அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை/வசிஷ்டர் போல்வரும் உன்னை தெரியாது நீயே கதி என்கிறார்களே/
உன் அறிவுக்கு அப்பால் பட்டது ஒன்றும் இல்லை/
உனக்கோ எல்லாம் தெரியும்/எங்களுக்கு ஒன்றும் இல்லை/ தெரிந்து கொள்ள முடியாது என்று சொல்பவரே தெரிந்து கொள்வது /

குறை ஒன்றும் இல்லா கோவிந்தன்/அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம்-
சரீர ஆத்ம போல- ஒழிக்க ஒழியாத நவ வித சம்பந்தம் உண்டே –
இங்கனே இருந்த பின்பு கை பிடித்து-கதறினால்-வருவான் –
எனக்கு இனி கதி -என்னை ஆள் உடைய கோவே -நீ கொடுத்த ஞானம் –
உன்னை தவிர வேறு  கதி இல்லை என்ற ஞானம் தானே
நின் அடி இணை பணிவன்  என்கிறார்/
தீர்த்த தாகம் கொண்டவர்-தண்ணீரை வாரி -வேட்கை மீதூர அனுபவித்தார் திரு குறும் தாண்டகத்தில் /

————————————————————————–

ஒரே பாசுரம் இது /கண்ணி யாக பிரித்து அர்த்தம் பார்ப்போம் /

ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் ஒரு முறை அயனை ஈன்றனை-

-ஸ்ருஷ்ட்டி  பற்றி அருளுகிறார் /-
நீ தானே படைத்தாய்- ரஷிக்கும் பொறுப்பு உண்டே /பெற்ற பாவிக்கு விட போமோ/பிரம்மாவை ஸ்ருஷ்டித்தாயே –
நமக்கும் சேர்த்து சொல்கிறார்/ஜகத்தை ஷிக்கும் பொறுப்பு உன்னது தான் /
அஜன்-அயன்-பிரமன் /தவிசில்- தாமரை இதழ் /அடை மொழி  உந்திக்கும் தவிசுக்கும்

/ஒரு கல்பத்துக்கும் /
இரு-பெருத்து இருக்கிற மலர் /
அத்வீதீயிய காரணம் -அகில காரணாய அத்புத காரணம் -நிஷ் காரணம் -/
ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் சம்காரம்-உலகம் யாவையும் தாம்  உளவாக்கலும் நிலை பெயர்தலும்   அழித்தலும்-
நான்முகனை நாராயணன் படைத்தான்-.அந்தர்யாமியாக இருந்து மூன்றையும் அவரே செய்கிறார்//
உபாதான-மண்- நிமித்த-குயவன்- சக  காரி -சக்கரம் போன்ற முக் காரணம் அவன் தானே-
காரண வர்க்கம்-எது எதுவாக மாறுகிறதோ அதுவே அதற்க்கு உபாதான காரணம் /
ப்ரஹ்மமே  மாறி தான்  பிரபஞ்சகம் ஆகிறது – நானே உலகம் ஆகிறேன்- சொல்லி கொள்ளலாம்  —
குயவன் போல உலகம்  உருவாக்க போகிறேன்/–
சக்கரமும் தண்டும் போல அவன் ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீரம் சக்தி தேஜஸ் குணங்கள் /
சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி- பிரம்மாவை படைப்பது வரை /
அதற்க்கு பின் அவருக்குள் அந்தர் ஆந்த்மாவாக வ்யஷ்ட்டி  ஸ்ருஷ்ட்டி/–
இதற்க்கு – சத்வாரக  ஸ்ருஷ்ட்டி -முன் இட்டு கொண்டு பண்ணுவது –/-
அத்வாரக ஸ்ருஷ்ட்டி  -தானே பண்ணுவது-யாரும் முன் இடாமல் – //
சூஷ்ம ஸ்தூல திசை-இரண்டிலும் பிரமத்துடன் ஒட்டி கொண்டு தான் எல்லாம்

கறந்த பாலுள் நெய்யே போல -அதனால் தான் அத்புத காரணம் என்கிறோம்/
த்யானம் மூலம் தெரிந்து கொள்ளணும்/
பூ சத்தாயாம்- இருப்பு- சத்தை- என்றால் அவன் இருக்கிறான் உள்ளே-/
ச்வேதே கேது -பிராக்ருத பிரளயம்–இதில் நீரே இல்லையே –
எல்லாம் சூஷ்ம  திசையில் பிரமத்துடன் ஒட்டி கொண்டு இருக்கும்–அதற்க்கு தான் மூல பிரகிருதி -என்கிறோம்// 
கடல் சூழ்வது -நைமித்திக பிரளயம்-பிரம்மாவுக்கு பகல் முடிந்தால் நடக்கும்/-
மூல பிரகிருதி மாறி ஸ்ருஷ்ட்டி- மயில் தோகை விரிப்பது போல–தோகை மயிலின் ஒரு பகுதி தானே-
சேதன அசேதனர் கூட எப்பொழுதும் சேர்ந்த இருக்கும் விசிஷ்ட ப்ரஹ்மம்/
பிரளத்தில் கர்மமும் ஜீவாத்மவுடன் ஒட்டி கொண்டு இருக்கும் வாசனை உடன்/
கர்மத்துக்கு தக்க படி ஜன்மம்/பொருள் என்று இவ் உலகம் படைக்கிறான்–வெட்டிக் கொண்டு நாம் போகிறோம்-
பஹுஸ்யாம்-பல படிகளாக ஆக கடவேன்-என்ற சங்கல்பமே ஸ்ருஷ்ட்டி-
மூல பிரகிருதி-மகான் முதல்/அகங்காரம்-சாத்விக ராஜச தாமச மூன்றாக பிரியும்.
சாத்விக அகங்காரம்-பத்து இந்த்ரியங்கள் ஞான கர்ம இந்த்ரியங்கள் மனசு தலைவர் இவற்றுக்கு //
தாமச -பஞ்ச பூதங்கள் ஐந்தும் தன மாத்ரைகள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம் ஆகிய  ஐந்தும் -ஆக மொத்தம் பத்தும்//
ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிர்த்வி-சப்தம் காது ஸ்பர்சம் தோல் ரூபம் கண் ரசம் நாக்கு கந்தம் மூக்கு /
ஆக மொத்தம் 24 தத்வங்கள் அசித்  தத்வங்கள்-25th தத்வம் ஜீவாத்மா //
ராஜச அகங்காரம் வேடிக்கை பார்க்குமாம்/
பஞ்சீகரணம் அடுத்து நடக்கும்/தனி தனியாக இருப்பதை /
ஆகாசம் ஒலி/நீலக் கடல்/தண்ணீருக்கு சுவை தானே /கலப்படம் தான் பஞ்சீகரணம்/
பிர்த்வி இரண்டாக்கி /ஒரு பாதியை நான்கு பங்கு ஆக்கி அடுத்த நாலிலும் கலக்கும்-
இது போல ஒவொன்றையும் செய்யும்/சரீரம் பிராக்ருதம்-/அப்ராக்ருதம்—ஆத்மாவும் பரமாத்மாவும் நித்ய விபூதியும் /மற்ற எல்லாம் பிராக்ருதம்/

அவதாரம் பொழுது அவன் திருமேனியும் அப்ராக்ருதம் தான்/
நாபி கமலத்தில் பிரமன் படைக்க படுகிறான்-சக்தி கொடுத்து மேல் படைக்க/பூவில் நான் முகனை படைத்த /
அயனை படைத்ததோர் எழில் உந்தி/பிறந்து த்யானம் பண்ண-அஞ்ஞானம் அப் பொழுதே ஆரம்பம்-
ச்வாயம்புவ மனு-சனகன் சனத் குமரன் -சப்த ரிஷிகள்–சமஷ்ட்டி-ஒன்றாக /வியஷ்ட்டி-பிரிந்து /
ஆழ்வார் ஆழ்ந்த குணம் புரிந்து படைத்த பயனை தெரிவிக்க பாசுரங்கள் அருளி-உபகாரம் //
ஈசன் வானவர்க்கு ..நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி //
அவன் முயற்சி வீணாக போகாமல் இருக்க தான் /அத்விதீய காரணம் -அவன் தானே/
அதற்க்கு தக்க பரப்பை உடைய நாபி-பெரிய தாமரை ஆசனத்தில் /
ஒரு கால் -பிரம்மா -அவனால் படைக்க பட்டதால் தனி ஜாதி- நாபியில் பிறந்தாரே-கற்ப வாசம் இன்றி-

அஜகன்-அதனால்- நம் போல பிறக்க வில்லை/ ஒரு முறை-உண்டாக்கினாயே-
அந்த அந்த பிரளயத்துக்கு ஒரு பிரம்மா என்பதால் /பிரம்மாக்கள் பலர்/
14 லோகம்-அண்ட கடாகம் இமையோர் வாழ் தனி முட்டை- இதற்க்கு ஒரு பிரம்மா
அது போல பல அண்ட கடாகங்கள் உண்டு/
சப்த  ஆவரணம் 10 மடங்கு அப்பு நெருப்பு வாயு ஆகாசம் அகங்காரம் மகான்
சூழ்ந்து அகன்று  ஆழ்ந்து  உயர்ந்து பெரும் பாழ்//இவை எல்லாம் கால் பங்கு/நித்ய விபூதி மூன்று பங்கு/
அங்கு உள்ள பர ப்ரஹ்மமே சௌலப்யம் காட்டி நம் உடன் பரிமாற வருகிறான்..

படைத்ததே எனக்கு தானே -ரடஷிக்காமல் விடக் கூடாது என்கிறார் ஆழ்வார்/
துடிக்க வைத்து பிர பந்தம் கொடுக்க வைக்கிறான்/
பிரவாகம் போல ஒவ் ஒரு முறையும் பிரம்மாவை படைக்கிறான் /
தவ தாஸ்யன் அடி துகளே வேண்டும் பிரம்மா பதவியும் புல் என்பர் நம் ஆச்சார்யர்கள் // 
எல்லாம் உன் ஆதீனம் /கர்மா தீனமாக / ஆழ்வாருக்கு-நிதியை காட்டி கொடுத்தால் போல/
செப்பேட்டை காட்டி கொடுத்து-திரு மந்த்ரமும் – நிதியைக் காட்டி கொடுப்பது போல,-வைத்த மா நிதி -எடுத்து கொடுத்து –
எல்லை நிலங்களையும் திவ்ய தேசங்களையும் காட்டிக் கொடுத்து-சம்சாரமும் ஸ்ரீ வைகுண்டமும் மறந்தே இருந்தார்/
சம்சாரத்தில் இருகிறீர் கிடீர் என்று அருளிச் செய்து/பண்டையிலும் இரட்டையாய் /
அநிஷ்டம் தொலைய இஷ்டம் கிடைக்க திருவடிகளே என்று திரு குடந்தை ஆரா அமுதன் இடம் சரண் அடைகிறார்/

ஒரு பிரதானமான உந்தி பேர்- முன்பே பெரிய /இவற்றின் ரஷையே உனக்கு தான் பொறுப்பு /
சரணாகதி பண்ண வைப்பதும் நீயே பண்ணலாமே /கர்மம் தொலைக்க வேண்டுமே/
பட்டர் நீயே குண ரத்னா கோசம் எழுதி பட்டர் என்று பேர் போட்டுக்கோ என்றாரே பிராட்டி இடம்/
கண் துடிப்பு முயன்றாலே போதும் /அடைய ஆசை மட்டுமே வேண்டும்/சிருஷ்டியே மோக்ஷத்துக்கு வழி எனபது தான்
பிரயோஜனம் பக்தி செய்து அவனை அடைவதே சிருஷ்டிக்கு பிரயோஜனம்

அவிபக்தமாய் இருந்ததை விபக்தமாய்-தமாசு- இருட்டு-மூல பிரகிருதி- தமஸ் சப்தக்கு பொருள் ஆக்கி /
மகான் அகங்காரம்  தன் மாத்ரைகள் ஆகி -சப்தாதிகள்/ பூதங்கள் ஆக்கி /அண்டங்கள் ஆகி /
முதலில் சதுர முகனாகி-தானே கை தொட்டு-பிரகிருதி வைத்து இது வரை- அசித் -/
பின்பு அவனை அதிஷ்டித்து-பிரமனை  கொண்டு-சித்-/அசித் சித் எல்லாம் ஓன்று தானே-சொத்து தானே/
இல்லாததும் உள்ளதும் அவன் உரு/ராஜ்யமும் நானும் ராமன் சொத்து என்கிறான் பரதன்/
அடிமை தானே இரண்டும்/ஸ்வதந்தர் என்ற எண்ணம் கூடாது

/சீரார் வளை ஒலிப்ப-நப்பின்னையை-உக்கமும் தட்டு ஒளியும் தந்து -விசிறி கண்ணாடி –
உன் மணாளனை இப் பொழுதே நீராட்டு /விசிறி போல கண்ணனும் அவள் வசம் என்கிறாள் ஆண்டாள்/
பார தந்த்ரத்தில் -ஞானம் இருக்கும் பெருமை-அடிமை என்று தெரிந்து கொள்வது தான்/
ரஷித்த இடங்களை மேலே சொல்கிறார் -சீதை கஜேந்த்ரனை இந்த்ரனை ரஷித்தது எல்லாம்-சங்கதி/

ஒரு முறை-  இரு சுடர்–சந்தரன் சூரியன்-மீதினில் இயங்கா –
மேலே இயந்காதாம்-ராவணன் அனுமதி பெற்று தான்-

மும் மதிள் இலங்கை-
ஜலம் மலை காடு-

இரு கால் வளைய-
இரண்டு பக்கமும் வளைந்து –
ஒரு சிலை-
ஒப்பற்ற வில்-ஒன்றிய

ஈர் எயிற்று அழல் வாய் வாளின் அட்டனை-
குரங்கு வந்தது சந்தரன் சூர்யன் வராத இடத்தில்-ராம பிரபாவம் சொன்னார் இத்தால் /
அம்பைத் கொட்டு சுட்டு ஒழித்தான் /
தான் உண்டாக்கிய பயிருக்கு களை பரிப்பானும் தானே ஆய-

ஒரு தடவை /சந்திர -மனசில் இருந்து-/
கிரி துர்க்கம் ஜல துர்க்கம் வன துர்க்கம் -மூன்றும் அரண் –
ஏழு மதிள்களால் அரங்கன் ரஷிக்கப் பட்டு இருக்கிறான் ஆழ்வார் / லங்காம் ராவண பாலிதாம்/
திருவடி வைராக்கியம் மிகுந்தவர் -திருவடி மதித்த  ஐஸ்வர்யம் /
பீஷாச்மின் வாயு பதயே பீஷோ  தேஜோ சூர்யா வாயு அக்னி மிருத்யு இந்த்ரன் அனைவரும் பரன் ஆதீனம்/
நினைத்தவர்க்கு அச்சம் தரும் போல -குழவி கூடு போல அம்மண கூத்து ஆடும் ராஷசர்கள் –
சார்ங்கம் உதைத்த  சர மழை போல-வில்லாண்டான்- அம்புகள் போதும் என்று தடுப்பதே ஆளுகை /
வில் கை வீரன் /வரு குதுரி  பொழிதர கணை ஓன்று ஏவி-தாடகை //
ர சப்தத்துக்கு பயம்-மாரிசன்/ஏழு சப்தங்கள் லோகம் சமுத்ரம் கன்னிகள் ரிஷிகள் அனைவரும் பயம்/
அடியார்கள் திருப்தியாக சேவிகிறார்கள்/
சார்ங்கம் சதாகம் சரணம் பிரபத்யே /

சிலை இலங்கு /கோலார்ந்த நெடு சார்ங்கம் /வில் இருத்து மெல் இயல் தோய்த்தாள் என்னும்/
ஒரு வில்லால் ஓங்கு  முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
அணை கட்டினதே வில்லால் தானே-
சமுத்திர ராஜன்- கோல் எடுத்தால் தான் ஆடும்–கண்ட இடத்தில் அடியேன்-
சதுர மா மதிள் சூழ் இலங்கை –ஓர் வெம்கனை உய்ய்தவன்/
கலையும் -சிலையும் கனையும் துணையாக -தலை பத்தும்/
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் //வாள் இயல் அட்டனை-
ராஷசர் இரவு பலம்/ஒருவர் இருவர்  மூவர் என உருவு கரந்து-
ஆனை 1000 தேர் பதினாராயிரம் சேனை காவலர் ஆயிரம் அனல் பரி ஒரு கோடி-கபந்தம் –
இப்படியே ஏழரை நாழிகைகள் ஒலித்தனவாம்/
கிள்ளிக் களைந்தான்-ஆண்டாள் //சரக்கே இல்லை /
பிரம்மா சிருஷ்டி போல அன்றியே-சங்கல்பத்தாலே அங்கு- –
பத்தும் பத்தும் பண்ணிக்  கொண்டு-அம்பால் எதிர்த்து – இங்கு  -சீதை ரஷிக்க-
உண்ணாது  உறங்காது ஒலி  கடலை வூடு அருத்து..பெண் ஆக்கை அளிப்பான் //
மனத்துக்கு இனியான்-ராமன்-/
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்/
பெண் நீர்மை யீடழிக்கும் -கண்ணன்/16108 பெண்களையும்-ஒருத்தியும் ஒரு நிமிஷம் கூட பிரிய வைக்க வில்லையே/
என் விரோதிகளையும் போக்கி சேர்த்து கொள்ள வேண்டும் /

விடும் பொழுது அம்பாய் போகும் பொழுது நெருப்பாய் இருக்கும் / முதல் திரு அந்தாதி-
அடைந்த அருவினை வோடு  அல்லல் நோய் பாவம் முடைந்தனை–மீண்டு ஒழிய வேண்டில் –
நுடங்கு இடை-முன் இலங்கை வைத்தவன் முரல் அழிய-முன் ஒரு நாள்  தம் வில் அம் கை வைத்தான் சரண் /
ஆத்மாவுக்கு இயற்கையில் இல்லாத பாபம்-சம்சாரத்தில் -நெருப்பு போல இரும்பு –
சேர்ந்து இருந்தால் பரம அணுக்கள் சூஷ்ம ரூபத்தால் சங்கரிப்பது போல,
தொட்டாலும் சுடும் அதே சிகப்பு பள பளப்பு போல//
சரீரமே -கூண்டு-அந்த தாக்குதல்-பெருமாளும் அசித்தும் சேர்ந்தவர்களை தனக்கு சமமாக ஆக்குவதில் சாம்யம்/
அஹம் அபிமானம் பண்ணிக் கொண்டு /
நான் ஆண்-ஆள் மாறாட்டம் நானாகிய ஆத்மா இந்த பிறவியில் ஆண் உடலை ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்/
ஆனால் நான் ஆண்-அச்சிதுக்கு சமமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம்/
உடல் வேற -அக்னி பிண்டம் இரும்பு சேர்க்கை போல/
அவித்யை கர்ம வாசனை ருசியால்/
நிஷித்த அனுஷ்டானம் -சாஸ்திரம் சொல்லாததை பண்ணி/பிரபல விரோதி போக்கினவனை பற்றனும்/

மேகம்- மின்னல் போல ராமன்- வில்/சார்ங்கம் பிடித்த அழகை கண்டே மாய்ந்து போவார்கள்
அழகுக்கு தோற்று/ரம இதி ராமன்-திரு மேனி தூண்ட பெயர் வைத்தார் வசிஷ்டர் /
சிலையினால் இலங்கை வைத்த தேவனே தேவன் ஆவான் /
சீதை-ஜீவாத்மா /பிரகிருதி சரீரம்-ராவணன் /பகவான் உடையது என்ற எண்ணம் போய் நாம் பறித்தோம்-
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் தான் ஒட்டி வந்து -என் தனி நெஞ்சம் வஞ்சித்து/
நாமும் பற்றினால் நம் இடத்தில் இருந்து நம்மை மீட்டு அவன் பக்கல் இருத்துவார் -அவளுக்கு சாம்யாமாக -/
அவள் முன்னிட்டு பற்றினால் வாழ்ந்து போவோம் /
இல்லாததை உண்டாக்கின உனக்கு /இருக்கிற எனக்கு மோட்ஷம் கொடுக்க கூடாதா /
பிராட்டி விரோதி போக்கினால் போல என் விரோதியை போக்கி அருளவேண்டும்/
வந்து அருள வேண்டும்/வந்த இடத்தில் சேவித்து கொள்வேன்

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மான் உரி இலங்கு மார்வினன்
இரு பிறப்பு ஒரு மாணாகி ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
தன் சொத்தை மீட்ட கதை—
நானும் உன் சொத்து தானே-
மூவடி-முதலிலே ஒரு சிலை–ஈர்  எயிற்று -சொல்லி-
இதில்-மூ வடி-நானிலம்-
லோகம்-நானிலம்- குறிஞ்சி மருதம் முல்லை  நெய்தல் –
பாலை வறண்ட காலத்தில் இது- சேராது  –
துணை நூல் மார்பில் அந்தணன்–வேதம் படி வாழ வேண்டும்/
மூன்று இளை நூல்/இரு பிறப்பு- துவிஜன்-இரண்டு ஜன்ம- குருகுலம் ஞான ஜன்மம் –
ஈர் அடி மூ உலகு அளந்தனை-
கேட்டது மூன்று அடி- இரண்டால் அளந்தானே-
அம்பாலே சாதிக்காமல் அழகாலே சாதித்ததை இத்தால் சொல்கிறார்//-
ஆலமரம் வித்தாய் அரும் குறளாய்//  /
கோட்டம் கை வமனாய் செய்த கூத்துகள் /
பிரகலாதன்- குலத்து உதித்தாரை கொல்லேன்- தானாவான் வேற /
அந்த புரம் திரை போட்டு/கடாஷம் விழுந்தால் சொத்தைக் கொள்ள முடியாதே-
இறையும் அகலகில்லேன்-திரு மறு பீடமாகக் கொண்டு -திரு மேனி அழகைக் காட்டி -வாமனன் பெயர்க்கு காரணம்-
ஸ்தோதரம் பண்ணத் தெரியாமல் –முதலிலே -மூவடி –
திரும்ப வில்லை- மாவலி- சுருக்கிக் கூப்பிட்டார்–
மண்ணை பிரார்த்தித்த அவதாரம்/பெண்ணை பிரார்த்தித்து இல்லை/
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய/
ஓங்கி உலகு அளந்தான்/
சுருக்குவாரை இன்றி -பெருக்குவாரை இன்றி பெருக்கி-தலைகளை தீண்ட-பிராதிக்காமலே –
குழந்தை தாய் அணைத்துக் கொள்வது போல/ பாக்கியம் நன்றி என்று கூட இல்லாமல்/
காள மேகம்- மின்னல் போல மார்பிலே – பூணூல்-புது கருத்து மாறாத பூணல் /
தானே மீண்டும் இது போல அழகாக  அவதாரம் ஆக  முடியாத -சேஷத்வம் மீட்டு கொடுக்க /
வேண்டாதார் தலையில் திருவடி/எனக்கு கூடாதா பிரயோஜனாந்தரர் வேலை பண்ணி எனக்கு-
அநந்ய பிரயோஜனர்/மண்ணை இழந்தான்  அவன்-உன்னையும் என்னையும் இழந்தேன் /
இவருக்கு மகாபலி வள்ளல் பேர் பெற்று போக காரியம் செய்தாயே //
உன்னையே வேண்டி இருக்கிற எனக்கு அருளாயே //
படிக்கு அளவாக நிமிர்ந்த உன் – பாத பங்கயமே  தலைக்கு அணியாய் வேண்டுவேன்//
கதா புன மம மூர்தன அலன் க்ருஷ்யதே

————————————————————————–

வென்றியே வேண்டி வீழ பொருட்கு இரங்கி வேல் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாதேந்தும் மென் முலையார் தடந்தோள் புனர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்த இவரை
திருத்திப் பணி கொள்ள திரு உள்ளம் பற்றி
சாஸ்த்ரங்களை காட்டித் திருத்த ஒண்ணாது
நம் அழகைக் காட்டித் திருத்துவோம் என்று எண்ணி
தன் அழகைக் காட்டிக் கொடுக்க-
ஆழ்வார் அதைக் கண்டு ஈடுபட்டு
வேம்பின் புழு வேம்பன்றி ஒண்ணாது அடியேன் நான்
பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்றும்
அவஹாகிக்க
இந்த அத்யாவசாயம் சம்பந்தம் உணர்ந்து அது அடியாக வேணும் என்று
திருமந்த்ரத்தையும்
சௌசீல்யம் போன்ற திருக் குணங்களையும்
திரு மந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும் காட்டிக் கொடுக்க
வாடினேன் வாடி தொடங்கி
உகந்து அருளின நிலங்களே பரம பிராப்யம் என்று அனுபவித்தார்–

திரு நாட்டுக்கு எழுந்து அருளப் பண்ண சம்சாரத்தின் தன்மை அறிவித்து
இவர்க்கு ஜிஹ்சை பிறக்கும்படி அறிவிக்க
அஞ்சி நடுங்கி
மாற்றமுள -என்னும் திரு மொழியில்
இருபாடு எரி கொள்ளியுன் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரே கூறையிலே பயின்றால் போல் -என்றும்
வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போலே என்றும்
பல திருஷ்டாந்தம் காட்டி கதறினார்

இப்படிக் கதறி
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு இன்னருளே என்றும்
சொல்லி அழுத விடத்தும்
குழந்தை பசி பசி கதறி அழுதாலும்
அஜீரணம் கழிந்து உண்மையான பசி வரும் அளவும் சோறு இடாத தாய் போலே
முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் முகம் காட்டுவோம் அல்லோம்
என்று உதாசீனனாய் இருக்க
ஷண காலமும் பிரிவாற்ற முடியாமல்
தாகம் உள்ளவர் நீரைக் குடிப்பதும் விழுந்து முழுகுவதும்
மேலே இறைத்துக் கொள்வதும் போலே
வாயாலே பேசியும்
தலையாலே வணங்கியும்
நெஞ்சாலே நினைத்தும்
தரிக்கப் பார்த்தார் திருக் குறும் தாண்டகத்தில்-

இது மேலும் விஞ்சிய விடாயைப் பிறப்பிக்க -பழைய அபி நிவேசத்தைக் கிளப்பி
பெரிய ஆர்த்தியை உண்டாக்க
நின்னடி இணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –
என்று ஆர்த்தராய் சரணம் புகுகிறார்
இந்த பிரபந்தத்திலே –

ஆசுகவி /மதுர கவி /சித்திர கவி /விஸ்தார கவி -நான்கு வகை
ஆசுகவித்வம் -நிபந்தனை கூடிய பாடல்களை விரைவில் பரவசமாகப் பாடுகை
மதுர கவித்வம் -பலவகை அலங்காரங்கள் போலியா பாடுகை
கலி வெண்பா போன்று விரித்துப் பாடுதல் விஸ்தார கவித்வம்
சித்திர கவித்வம் –
ஏகபாதமும் எழு கூற்று இருக்கையும் காதைக் கரப்பும் கரந்துறைச் செய்யுளும் கூடச் சதுக்கமும் கோமூத்திரியும்
இவை முதலாவான சித்திரக் கவியே
சக்ரபந்தம்
பத்மபந்தம் முராஜ பந்தம்
நாகபந்தம்
ரதபந்தம்–

இது ரதபந்தம் –
மேல் பாகம் -கீழ் பாகம் -ஒவ்வொன்றிலும் ஏழு கூறுகள்-
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு பதினோரு அறையும்
ஆறாம் கூறு பதின்மூன்று அறையும்
ஏழாம் கூறும் பதிமூன்று அறையும் –
இப்படி
மேல் பாகத்தில்
தலையில் இருந்தும்
கீழ் பாகத்தில் அடியில் இருந்தும் இந்த க்ரமம் கொள்ளப் பட்டு இருக்கும் –

ஒரு பேருந்தி–இருமலர்த்தவிசில் –ஒரு முறை அயனை ஈன்றனை –

ஒருமுறை -இருசுடர் -மும்மதிள் இலங்கை -இருகால் வளைய -ஒரு சிலை –

ஒன்றிய -ஈர் எயிற்று அழல் வாய் வாளியினட்டனை -மூவடி -நால் நிலம் வேண்டி -முப்புரி நூலோடு மானுரி இலங்கு -இரு பிறப்பு -ஒரு மாணாகி-

ஒரு முறை –ஈரடி –மூவுலகு அளந்தனை -நால்திசை நடுங்க -அஞ்சிறைப் பறவை ஏறி–நால் வாய் –மும்மதத்து –இரு செவி -ஒரு தனி வேழத்து அரந்தையை –

ஒரு நாள்–இரு நீர் மடுவுள் தீர்த்தனை –முத்தீ –நால்மறை –ஐவகை வேள்வி –அறு தொழில் அந்தணர் வணங்க -ஐம் புலனவை அகத்தினுள் செறுத்து -நான்குடன் அடக்கி –முக்குணத்து –இரந்தவை அகற்றி -ஒன்றினில் –

ஒன்றி நின்று ஆங்கு –இரு பிறப்பு அறுப்போர் அறியும் –முக்கண் -நால் தோள் –ஐவாய் அரவோடு –ஆறு பொதி சடையோன் அறிவ –ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய -அறு சுவைப் பயனுமாயினை சுடர் விடும் -ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை -நால் தோள் -முந்நீர் வண்ணன் -ஈர் அடி -ஒன்றிய மனத்தால் –

ஒரு மதி முகத்து மங்கையர் –இருவரம் மலரான அங்கையில் -முப்பொதும் வருட அறி துயில் -நால் வகை வருணமும் ஆயினை –ஐம் பெரும் பூதமும் நீயே –அறுபத முரலும் கூந்தல் காரணம் –எழிலிடை அடங்கச் செற்றனை -அறுவகைச் சமயமும் அறிவரு நிலையனை -ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை –நான்கு அவையாய் மூர்த்தி — மூன்றாய் -இரு வகைப் பயனாய் –ஒன்றாய் விரிந்து நின்றனை –

ஒரு மதி முகத்து மங்கையர் –இருவரம் மலரான அங்கையில் -முப்பொதும் வருட அறி துயில் -நால் வகை வருணமும் ஆயினை –ஐம் பெரும் பூதமும் நீயே –அறுபத முரலும் கூந்தல் காரணம் –எழிலிடை அடங்கச் செற்றனை -அறுவகைச் சமயமும் அறிவரு நிலையனை -ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை –நான்கு அவையாய் மூர்த்தி — மூன்றாய் -இரு வகைப் பயனாய் –ஒன்றாய் விரிந்து நின்றனை –

ஒன்றி நின்று ஆங்கு –இரு பிறப்பு அறுப்போர் அறியும் –முக்கண் -நால் தோள் –ஐவாய் அரவோடு –ஆறு பொதி சடையோன் அறிவ –ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய -அறு சுவைப் பயனுமாயினை சுடர் விடும் -ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை -நால் தோள் -முந்நீர் வண்ணன் -ஈர் அடி -ஒன்றிய மனத்தால் –

ஒரு நாள்–இரு நீர் மடுவுள் தீர்த்தனை –முத்தீ –நால்மறை –ஐவகை வேள்வி –அறு தொழில் அந்தணர் வணங்க -ஐம் புலனவை அகத்தினுள் செறுத்து -நான்குடன் அடக்கி –முக்குணத்து –இரந்தவை அகற்றி -ஒன்றினில் –

ஒரு முறை –ஈரடி –மூவுலகு அளந்தனை -நால்திசை நடுங்க -அஞ்சிறைப் பறவை ஏறி–நால் வாய் –மும்மதத்து –இரு செவி -ஒரு தனி வேழத்து அரந்தையை –

ஒன்றிய -ஈர் எயிற்று அழல் வாய் வாளியினட்டனை -மூவடி -நால் நிலம் வேண்டி -முப்புரி நூலோடு மானுரி இலங்கு -இரு பிறப்பு -ஒரு மாணாகி-

ஒருமுறை -இருசுடர் -மும்மதிள் இலங்கை -இருகால் வளைய -ஒரு சிலை –

ஒரு பேருந்தி–இருமலர்த்தவிசில் –ஒரு முறை அயனை ஈன்றனை –

அர்த்த சக்தியால் யாயினும்
சப்த சக்தியால் யாயினும்
நினைப்பூட்டும் சொற்கள் –
இரு மலர் -பெருமைக்கு -சப்த சக்தியால்
இங்கனமே
ஒன்றிய
அஞ்சிறை
நால்வாய்
இருநீர்
ஒன்றி
ஆறு பொதி
துக்கம் உள்ளடங்காமல் வால்மீகி பகவான்
மா நிஷாத பிரதிஷ்டாம் -நான்முகன் பிரசாதத்தால் அருளியது போலே
சாஷாத் எம்பெருமான் பிரசாதத்தால் அருளிய பிரபந்தம் –

திருக் குருகை பெருமாள் கவிராயர் -மாறன் அலங்காரம் என்கிற நூலில் இது போலே
ஒரு நனித் திகிரியின் இரு விசும்பு ஒழுக்கத் தொரு ஞான்று ஒரு பகல் ஓடியா உழப்பில் -என்று தொடங்கி
ஞான பூர்ண சுகோதய நா வீற மான பூடண குருகாபுரி வரோதய —கைம்மாறு அவனீ கைக் கொண்டதுவே –
என்று தலைக் காட்டி அருளுகிறார்

திரு ஞான சம்பந்தர் முதல் திருமுறையில்
ஒருருவாயினை மானான்காரத்தீ ரியல்பாயொரு விண் முதல் பூதலம் -என்று தொடங்கி
நின்னை நினைய வல்லவர் இல்லை நீணிலத்தே -என்று முடித்தார் –

நக்கீரரும் -பதினோராம் திரு முறையில்
ஒருடம்புயீருவாயினை -என்று தொடங்கி
பாதம் சென்னியில் பாவுவன் பணிந்தே -என்றும் முடித்தார்

இந்த பிரபந்தம் 46 அடிகளாலான ஆசிரியப்பா
எல்லா அடிகளிலும் நால் சீராய் நிலைமண்டில ஆசிரியப்பா –

தனியனில் ஆழ்வாரையும்
அவரது திவ்ய ஆயுதமான வேலையும் வாழ்த்தும்
தூயோன் -பல வகை களவுகள் செய்தாலும்
அவை பகவத் பாகவத சமாராத னத்தில் விநியோகப் பட்டமையால் வந்த தூய்மை –

ஒரு பேருந்தி–இருமலர்த்தவிசில் –ஒரு முறை அயனை ஈன்றனை –
இரு-பெருமை
தவிசு -ஆசனம்
உய்ய உலகு படைக்க உந்தியில் தோற்றினாய் நான்முகனை -பெரியாழ்வார்
உத்பத்திக்கு ஹேதுவான நீயே
ரஷணமும் பண்ண வேண்டாவோ -என்கைக்காக
இதை முதலில் அருளிச் செய்கிறார் –

ஒருமுறை -இருசுடர் மீதினில் இலங்கா -மும்மதிள் இலங்கை -இருகால் வளைய -ஒரு சிலை -ஒன்றிய -ஈர் எயிற்று அழல் வாய் வாளியினட்டனை –
படைத்த உலக்குக்கு தீங்கு நேரும் காலத்தில் ரஷிக்கிற படியைச் சொல்லுகிறார் –
இருசுடர் மீதினில் இலங்கா-
சந்திர சூர்யர்கள் அச்சத்தினால் மேலே சஞ்சரிக்க ஒண்ணாததும்-பகலவன் மீதியங்காத இலங்கை -பெரிய திரு மொழி -7-8-7-
மும் மதிள்
நீர் கோட்டை
மலைக் கோட்டை
வனக் கோட்டை –
இருகால் வளைய -ஒரு சிலை-
இரண்டு நுனியும் வளைந்த ஒப்பற்ற கோதண்டம் –
ஒன்றிய -ஈர் எயிற்று அழல் வாய் வாளியினட்டனை –
பொருந்தியதும்-இரண்டு பற்களை கொண்டும் நெருப்பைக் கக்கும் வாயை யுடையதுமான அம்பினால் நீறாக்கினாய் –
ஈர்கின்ற எயிற்றை உடையது -என்றுமாம் -ஈர்த்தல் -கொல்லுதல்  -அடுத்தல் -தஹித்தல் —

மூவடி -நால் நிலம் வேண்டி -முப்புரி நூலோடு மானுரி இலங்கு -இரு பிறப்பு -ஒரு மாணாகி-
நானிலம் -பூமியிலே -முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
காடும் காடு சார்ந்த இட முல்லை
மலையும் மலை சார்ந்த இடம் -குறிஞ்சி
நாடும் நாடு சார்ந்த இடம் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் -நெய்தல்
நீரும் நிழலும் இல்லாத கொடு நிலம் பாலை -ஒதுக்கப் பட்டது இங்கே

அம்பாலே கார்யம் கொண்டு அருளின அநந்தரம்
அழகாலே கார்யம் கொண்ட படியை அருளிச் செய்கிறார் இதில்
மானுரி -கிருஷணாஜினம்
மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய் -பெரிய திருமொழி –
இரு பிறப்பு -த்விஜ-த்விஜன்மா –
ஜன்மனா ஜாயதே சூத்திர கர்மணா ஜாயதே த்விஜ –
யோனியில் பிறப்பது ஓன்று வேதம் ஓதுதல் ஓதுவித்தல் போன்ற கருமங்களால் பிறப்பது இரண்டாவது

ஒரு முறை –ஈரடி –மூவுலகு அளந்தனை –
நில உலகு பாதாள உலகும் ஓரடியாலும்
மேல் உலகு ஓர் அடியாலும் அளந்தனை-

——————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: