ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -106.இருப்பிடம் வைகுந்தம் /107.இன்புற்ற சீலத்து ராமானுச/108-அம் கயல் பாய் வயல் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

106—-இருப்பிடம் வைகுந்தம்

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மால் இரும்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தன்னோடும் வந்து
இருப்பிடம் மாயன் ராமானுசன் மனத் துன்றவன் வந்து
இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே

இப்படி இவர் தமக்கு தம் பக்கல் உண்டான அதிமாத்ர ப்ராவன்யத்தை கண்டு ,எம்பெருமானார் இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி அருள ,அத்தை கண்டு உகந்து அருளி செய்கிறார்

ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம் ஸ்ரீ வைகுண்டமும் ,வடக்கு திருமலையும் திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான திரு மலை ஆகிற ஸ்தலமுமாக —வைகுந்தம் கோவில் கொண்ட -திரு வாய் மொழி 8-6-5/வேங்கடம் கோவில் கொண்டு -பெரிய திரு மொழி 2-1-7-அழகர் தம் கோவில் திரு வாய் மொழி 2-9-3/என்று சொல்லா நிற்பவர்கள் பகவத் தத்தவத்தை சாஷாத் கரித்து இருக்கிற விலஷனர் ஆனவர்கள் ..அப் படி பட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் அழகிய பாற்கடலும் பெரிய திருமொழி 5-2-10 என்கிற படியே அந்த ஸ்தலங்கள் தன்னோடு கூட வந்து எழுந்து  அருளி இருக்கிற ஸ்தலம் என் உடைய ஹ்ருதயத்துக்குள்ளே

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -ஸ்ரீ ராமானுசம் வாங்கி கொண்டீர்களா- ஆழ்வார் திரு நகரில் -மற்ற இடங்களில் மதுர கவி ஆழ்வார் //முதலி ஆண்டான் ஸ்வாமி திருவடிகள்/திரு நகரி- கலியன்- திருமேனி-குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு உடையவனை-அங்கும் சேவித்து கொள்ளலாம்/அபிமான பங்கமாய்-ஆண்டாள் / அபிமான துங்கன்-பெரி ஆழ்வார் /பெரியவர் திருவடியில் ஒதுங்கினவர் ஸ்வாமி என்றே அருளி இருக்கிறார் அமுதனார்/அஷ்டாதச ரகசியம்  விளைந்த இடம் காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அரங்கேற்றம்/ஸ்வாமி நுழைந்ததும்- பல ராமானுசன் நுழைந்ததும் அன்று -எழல் உற்று மீண்டு இருந்து -போல எழுந்தார்கள் அதனால் இந்த மூன்றும் சாத்து முறை பாசுரங்கள் ஆயின /ஆடி பாடி ராமானுசா என்று இரைஞ்சும் இடமே-வகுத்த இடம்/ பாட்டு கேட்க்கும் இடமும் கூப்பிடு இடமும்  குதித்த இடமும்  ஊட்டும் இடமும் வளைத்த இடங்களும் எல்லாம் வகுத்த இடமே-ஆச்சர்ய  அபிமானமே உத்தாரகம்/ உன்னை ஒழிய மற்று அறியாத வடுக நம்பி நிலை தா -மா முனிகள் /நெஞ்சை கொண்டாடுகிறார் இதில்/அமுதனார் திரு உள்ளத்தில் தானான தமர் உகந்த தான் உகந்த எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்//மூவர் வர-ஸ்வாமி திரு உள்ளத்தில் மூவர் இருக்க/மாயன்-ஸ்ரீ வைகுண்டம்- திருவேங்கடம்- திரு மால் இரும்சோலை-மூன்றும் /அவை தன்னோடும் மாயன் ராமானுசன் -சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-

நீக்கமற  நிறைந்தவன்- வியாபகன்-போற்குன்றத்தில் சேவை-மாயன்/ஸ்வாமி-அவனால் திருத்த படாத மக்களை திருத்தினார் /திரு மழிசை சொல்லி பை நாக பாம்பு அணையை சுருட்டி/ இங்கு ஸ்வாமி சொல்லாலாமலே -திவ்ய தேசங்களை எல்லாம் எடுத்து கொண்டு -அவை தன்னோடும்-மனத்து வந்தார்கள்/திரு பேர் நகரான்-ஸ்வாமித்வம் காட்டிய இடம்-திருமால் இரும் சோலை- ஆழ்வார் மனம் -பேரென் என்று /அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு சிறகு அடியில் வாழ ஆசை பட்டான் ராமன்//சத்ய லோகம் அயோதியை ஸ்ரீ ரெங்கம்/மதுரை கோகுலம் த்வாரகை/அது போல இங்கும் அமுதனார்- ஸ்வாமி திரு உள்ளம் புகுந்தது இதற்க்கு தான்/வாராயோ என்று அவை தன்னோடும் –இன்று-/நெஞ்சமே நீள் நகராக -/ஸ்ரீவைகுண்ட விரக்தாய-கல்யாண குணங்கள்-பகல் விளக்கு பட்டு இருக்கும்-ஷமை தப்பே பண்ணாதவர் இடம் காட்ட முடியாது தயா/அமிர்தம் உண்டு கழித்து இருக்கிறார்கள்/ இளம் கோவில் கைவிடேல்/

உச்சி உள்ளே இருத்தும்-பெரியோரை உள்ளத்தில்  வைப்பதே தீ மனம் கெடுக்க வழி /ஆனந்தம் பிரதம ரூபம்- அனந்தன்/ அடுத்து லஷ்மணன்/ பல ராமன்- கைங்கர்யம் இருவரும்- சேஷ சேஷி பாவம் மாறாது/கலி இலே  ஸ்வாமி/ஸ்ரீ வைகுண்டம்-சென்றால் குடையாம்-தானே எல்லா கைங்கர்யம்/ வேங்கடம் சேஷாத்ரி மலையே /அஹோபிலம் நடு ஸ்ரீ/ஆயிரம் பைம் தலைய அனந்தன் ஆடும் இடம்- ஆதிசேஷ மலை திரு மால் இரும் சோலை என்பர்/மாயன்- ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதன் சர்வேஸ்வரன்/–ஜகத் வியாபார வர்ஜம்- நிறைய சிரமம் திரு மந்த்ரத்தில் பிறந்து துவயத்தில் வளர்ந்து -இருப்பதே உத்தேசம்/வேர்த பொது குளித்து பசித்த பொழுது சாப்பிட்டு  -பட்டர்  திருவடிகளில் இருந்தால் மோட்ஷம் கிட்டாதோ-அனந்தாழ்வான்-நஞ்சீயர்/திருநாமத்துக்கு தனி வைபவம்/திரு மால் இரும் சோலை என்ன நெஞ்சில் புகுந்தான்- ஆழ்வார் திரு வேங்கடம் இல்லாத சீர்/மால் வாழும் குன்றம்-பரிபாடல் உண்டு/விகுண்டர்- குண்ட-தடை/தடை இல்லாத ஞானம் நலம் இல்லாத நாடு என்பதால்-ஸ்ரீ வைகுண்டம் இருந்து திரு மலை வழியாக  /வடக்கு வாசல் வழியாக புகுந்து ஸ்ரீ ரெங்கத்தில் சயனித்தான் /சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்ப மாட்டேன் என்று சயனித்து கொண்டு இருக்கிறான்

தென்னல் உயர் பொற்பும் வட வேங்கடமும்/விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்/மால் இரும் சோலைஎன்பர்  /நல்லோர்-ஆழ்வார்கள் /அனந்யார்க்க சரணர்களுக்கு-நித்யர் மட்டும் கைங்கர்யம்  /காடும் வானரமும்-அனைவரும் கைங்கர்யம்-சௌலப்யம்- பொது அறிந்து வானரங்கள்  பூம் சுனை புக்கு-முதலை இங்கு -புல் பூண்டு கூட அடிமை செய்ய தான் இங்கு  -சுமந்து -விஷ்வக் சேனரும்   குரங்கும் //மலையத்வஜ பாண்டியன் விமுகன்- கூப்பிட்டு சேவை சாதித்தார் –

வனகிரீச்வரன்-குழல் அழகர் கொப்பூழில் எழில் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் / 2-10கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோவில்/ஸ்ரீ வைகுண்டம் ஆசை பட்டார் ஆழ்வார் /கீழ் உரைத்த பேறு- தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -2-9 கேட்டார்- கைங்கர்யம் பண்ண /பிராப்யம் நிஷ்கரித்தார்/அழ ஆரம்பித்தார் -௧௦௦௦ பாசுரம் பாட வேண்டுமே இருக்கிற இடத்தில் ஞாலதூடே பார்த்து திரு மால் இரும் சோலை வர சொன்னார் கைங்கர்யம் பண்ண இருள் தரும் மா ஞாலம் -ஆழ்வார் சொல்ல- அங்கு நித்யர் அங்கும் அனுபவிக்க முடியவில்லை என்று தான் /பிராப்யத்தை /கால கழிவு செய்யேல் என்றார்- கொடுத்தார் ஆழ்வாருக்கு/அழகிய பாற் கடலோடு ..-பரவி கின்றான்/பரம பிராப்யம் ஸ்வாமி திரு உள்ளம்/ உகந்து அருளிய திவ்ய தேசங்கள் -எல்லாம் பிராப்யம்-பிரயோஜனம் ஸ்வாமி திரு உள்ளம் அடைய /தபஸ் பண்ணுகிறானாம் எல்லா இடங்களிலும் ஸ்வாமி உள்ளம் போக/அறியாதன அறிவித்த அத்தா-க்ருத்க்ஜன் -அதனால் தான் அவை தன்னோடும் வந்து இருந்தானாம் /திரு கடித்தானமும் என் உடை சிந்தையும்- ஆழ்வார் சாத்தியம்-சாதனம்-க்ருதக்ஜா கந்தம் /இன்று-அவர் வந்து தமக்கு இன்புற -இன்பமாக உகந்துஅருள அமுதனார் இதயத்துக்குள்ளே

/நீதி வானவர் சேஷத்வம் தெரிந்தவர்கள் வாழும் ஸ்ரீ வைகுண்டம்-நலம் அந்தம் இல்லாத நாடு/நித்ய சங்கல்பம் நடக்கும் இடம்/தர்ம பூத ஞானம் மாயையால்-பிரக்ருதியால்-மறைக்காத இடம் /மித்யை பொய் இல்லை/தெளி விசும்பு திரு நாடு/பரம் சென்று சேர் திருவேங்கடம்/கண்ணாவான் -ரஷகன்-விண் ணோர்க்கும்    மண்ணோர்க்கும்

வராக ஷேத்ரம் தான் அது-சென்று சேர்-இருவருக்கும் பால் கொடுக்க நித்ய சூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும்/ மால் இரும் சோலை என்னும் பொருப்பிடம்-திரு நாம வைபவம்  தோன்ற- நன்மை என்று பெயர் இடலாம் படி -மடி மாங்காய் இட்டு-ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போகும்-/புயல் மழை /திரு மால் இரும் சோலை -தொடர் மொழி-இரும் குன்றம் நாமதன்மை -பரி பாடல்-சிலம்பாறு அணிந்த- நூபுர கங்கை -புயல் மழை வண்ணர் புகுந்து உறை கோவில்-பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே-பரத்வம் விபவம் செவிக்காதே-மேகம்-பொய் வர்ஷிக்கும்/ நின்றே கொட்டும் மேகம் அழகர் /மயல் மிகும் -அவனுக்கும் நமக்கும் பைத்தியம் பிடிக்கும் -த்யாஜ்ய தேக வியாமோகம்-கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் கெடும் என்றார்-வான் ஏற வழி தந்த  வாட்டாற்றான் -நெஞ்சே நரகத்தை நகு/வஞ்ச கள்வன் மா மாயன் நெஞ்சையும் உள் கலந்து தானே ஆய நின்றான் அழகர்/திரு மேனி -உன் மாமாயை மங்க ஒட்டு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்கும் சரீரம்/பாம்போடு ஒரு கூரையில் வர்தித்தது போல இருக்கிறோம்/மயல் மிகு பொழில்  சூழ் மால் இரும் சோலை/

பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு  மகள் கொல் பிறந்திட்டாள்// வேர் மண் பற்று கழியாது  போல ஞானியை திரு மேனியோடு ஆதரிக்கும் /கீழ் உரைத்த பேறு கிடைக்க -/மாயன்- பொருந்தாததை பொருந்த வைத்தவன்-எவர்க்கும் சிந்தைக்கு  கோசரம் அல்லன்–அவன் இங்கே வர்திகிரானே/சுத்தமான பக்தியாலே கிட்ட முடியும்/ஜகத் காரணம் சங்கல்ப்பதாலே பண்ணும் மாயன்/தான் ஓர் உருவே தனி வித்தாய்/நல்லோர் சொல்வார்கள்-

ஆதி ஆனந்தம் அற்புதமாய -பர அவர விவேகம் தெரிந்தவர்கள்/வைகுண்டே பரே லோக -ஜகத் பதி- பாகவத சக- லிங்க புராண ஸ்லோகம்/நடுவாக வீற்று இருக்கும் நாயகன் /நல்லோர்- தத்வ ஞானிகள் / ஆழ்வார்கள்/சீராரும் மால் இரும் சோலை என்னும்/அயர்வறும் அமரர்கள் அதிபதி/திரு மால் இரும் சோலை திரு பாற்கடலே என்றும் தென் நல்  அருவி மணி ஒண் முத்து அலைக்கும் என்றும் /விண் தாய் சிகரத்து திரு வேங்கடம்/ வேங்கடத்து மாயன் என்னும்/ வெற்பு என்னும் இரும் சோலை வேங்கடம்//அவை தன்னோடும் -ஸ்வாமி நெஞ்சம் நீள் நகரமாக இருந்ததால்/எதிராஜரே எம்பெருமானார் சத்யம் கூரத் ஆழ்வான்/அருளால பெருமாள் எம்பெருமானார் தம் மடத்தை இடித்தார்/ வந்து- திரு கமல பாதம் வந்து/ வந்து அருளி என் நெஞ்சம் இடம் கொண்டான்- பரகத ச்வீகாரம்/பெருகைக்கும்  ஜகத் ரஷகத்துக்கும் திவ்ய தேசம்/வைகுண்டம் வேங்கடம் ஸ்வாமிக்கும் ப்ரீதி விஷயம் தானே/ சேஷ மாயன் சுவையன் திருவின் மணாளன்-ரசிக தன்மை கத்துண்டு/தாரகன்- ஸ்வாமி ஞானி ஆத்மை மே  மதம்/என்னது உன்னதாவி  உன்னது என்னதாவி / மாயனான கண்ணனை தாங்கும் மாயன் ஸ்வாமி /மண் மிசையோனிகள்- நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆள் ஆக்கின மாயம்/அண்ணல் இராமானுசன் தோன்றிய அப் பொழுதே -ஆனதே- மாயம்/அனாயாசனே திருத்தினாரே/

இன்று அந்தரங்கராக கை கொண்டு-..இனி தம் உள்ளத்துக்கும் ஸ்வாமி உள்ளத்துக்கும் வாசி-பக்தி ரசம் நிரம்பி நிஸ் சலமாய் ஸ்வாமி திரு உள்ளம் விஷயம் ஒன்றிலும் தீண்டாமல்/ உலர்ந்து நில்லவா நில்லாத நெஞ்சு விஷய சஞ்சீவ- தனக்கு இன்புறவே வந்தார்-இதற்க்கு என்றே காத்து இருந்தார்-நிரவதிக ப்ரீதி உடன் வந்தாராம்/அவராக ஆசை பட்டு -தன் ஆனந்தத்துக்கு-நான் பிரார்த்திக்காமல்- காமுகன் காதலி உடம்பின் அழுக்கை விரும்புமா போல -/ பாசி தூரத்து கிடந்த பாற் மகள்க்கு –மான மிலா பன்றியாம்-/பகவான் விட ஸ்வாமி ஏற்றம்/ ஸ்வாமி மனசுக்கு வந்தது விட அமுதனாருள்ளதுக்கு வந்தது உசந்தது-எங்கும் பக்க நோக்கு அறியாமல் /பொலிந்த நின்ற பிரான் ஆழ்வாரை நாவில் உளானே உச்சி உள்ளே வந்தாரே திரு முடி சேவை இன்றும் உண்டு /போக இடம் இல்லை என்று ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக இருந்தார்  இனி பேரென் என்று நெஞ்சுக்குள் இருந்தார்/

107–இன்புற்ற சீலத்து ராமானுச

இன்புற்ற சீலத்து ராமானுச என்றும் எவ் இடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்தே

ஷட் பாவ விகாரம்/அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து  முடிதல்/சம்சார சேற்றில் அழுந்தி சுக துக்கம் ஆத்மா அனுபவிக்கிறது/அநிஷ்டம் இஷ்டம் மாறும் எடுத்து கொண்ட சரீரம் படி/ஏழு  அவஸ்தை –கற்ப ஜன்ம பால்யம் யௌவனம்…மூப்பு மரண நரகம் -ஏழு எருதுகள் கொம்பு தான் இரட்டை கர்ம ஒவ் ஒன்றிலும்-முறித்தால்- நப் பின்னை திரு கல்யாணம் போல ஜீவாத்மாவை கொள்கிறான் /  /தலை குப்புற சம்சாரத்தில் விழுகிறான்ஞானம் தொலைத்து சடம் வாயு மூடி கொண்டு/கரு விருத்த குழி நீத்த பின்- ஒரு குழி விட்டு வேறு குழி விழுகிறோம்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் கேட்டதற்கு திரு பாண் ஆழ்வாருக்கு அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன்-ஒருவர் தானே ஆழ்வார்கள் /அது போல ஸ்வாமி அடியார்கள் இடம் ஆட படுத்த வேண்டுகிறார்-பிரகலாதனும் வரம் கேட்காத வரம் கொள்வான் அன்று -குற்றேவல் கொள்ள வேண்டும்/என்பிலாத இழி பிறவி எய்தினாலும் நின் கண் அன்பு மாறாமல் வேண்டும் என்றான்/

எறும்பி  அப்பா  வரவர முனி சம்பந்திகளின் சம்பந்தம் வேண்டும் என்றார் /ஆழ்வாரும் அடியார் அடியார்-ஏழு தடவை பின் அடியவன் /கல்லார் -குறையால் பிரான் அடி கீழ் இரண்டாம் பாசுரம்/ இன்புற்ற சீலத்து இராமனுசன்//மிக்க சீலம் அல்லால் அங்கும் சொல்லி /ஆண்டாலும் அடி பாடி ஆரம்பித்து அடியே போற்றி முடித்தாள்/அடி விடாத சப்ராதயம் /ஆக்கு அங்கு ஆட படுத்து /கைங்கர்யமும் பண்ண வை என்கிறார் இரண்டும்/மனசாலும் காக்க வியாபாரமும் /எம்பெருமானார் உடைய திரு முகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார் /அடியேன் செய்யும் விண்ணப்பமே -ஆரம்பத்தில் ஆழ்வார் சொல்ல இறுதியில் முகில் வண்ணன் அடி சேர்த்து கொண்டான் எல்லா பிர பந்தங்களும் பெற்று கொண்டு / இங்கு ஸ்வாமி இடம் சொன்னதும் முடித்து கொடுத்தார் /சீலம் ராமனுக்கு பட்டர்-இன்புட்ட்ற சீலம்- ஆனந்தத்துடன் /வன்னானுக்கும் செருப்பு தைகிரவனுக்கும் தயிர் விர்கிறவள் ஊமை- பிரசித்தம் -அமுதனார் தன உள்ளம் வந்ததையே சீலம் என்கிறார் /இதயத்தின் உள்ளே வந்தது/ இன்பம்- புகுந்து ஆனந்தம் அடைந்தார் .இது கிடைக்க பெற்றதே என்று மகிழ்ந்தாராம் /வேங்கடம் வந்து அவன் மகிழ்ந்தது போல /பெறா பேறாக நினைந்து கொண்டாராம் -ஆனந்த நிர்பரராய் இருக்கிற ஸ்வாமி /தோஷ போக்யத்வம் -வாமனன் சீலன் இராமனுசன் /சீலம் இருப்பதால் தான்-இன்புற்ற சீலத்து ராமாநுச  சொல்லுவது ஓன்று உண்டு/ அம்பரமே தண்ணீரே சோறே சொலி ஆண்டாள் கண்ணனை கேட்டாளே/சொல்வது ஓன்று உண்டு சொல்லி உடனே சொன்னார்/ ஆண்டாள்-யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் -அசமயத்தில் சொல்லும் அசடு அல்லள்-பரதன் போல சிஷ்யன் தாசன் ஏதாவது வைத்து கொள் திரும்பி வா என்றான் /கைங்கர்ய பிரார்த்தனை சரணா கதி பண்ணிய பின்பு தானே கறவை கள்   பாசுரத்தில்/ எல்லீரும் மோட்ஷம் பெற்றால் வீடில் இடம் இல்லை பல நீ காட்டி படுப்பான்-பிரதி பர்வத்தில் அவனை பரி பக்குவமாக ஆக்கி பின்பு தான் காரியம் /இரந்து உரைப்பது ஓன்று உண்டு/ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –திரு வாய் மொழி-2-9-3 என்னுமா போல ,கபம் அடைத்தாலும் -வாதம் பித்தம் கபம் மூன்றும் சேர்ந்து -என்புற்ற  நோய்-உடல் -வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும்- தேவ திர்யக்  ஜங்கம யோனிகள் தோறும் -ஜனிப்பதும் மரிப்பதுமாய் ,அசந்கேயமாய் துக்கங்களை அனுபவித்து முடியிலும் ,சர்வ காலத்திலும் சர்வ தேசத்திலும்,,தேவரீருக்கு அனந்யார்கராய் இருக்கும் அவர்களுக்கே /ஏ காரம்-/மாம் ஏக -தானும் பிறரும் ஆன நிலையை குலைத்தான்-சர்வ தரமான்-அவனே உபாயம்- /தானும் இவனும் ஆன நிலையை குலைத்தான் இங்கு-இங்கு ஒருவனையே–செய்தது நான் என்று ச்வீகாரத்தில் உபாய புத்தி கூடாது நான் பற்று வித்து கொண்டேன்-என்கிறான்/உள்ளுக்குள் இருக்கும் விரோதி இதில் தவிர்கிறான்/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே /இங்கு பிராப்யத்துக்கு -உனக்கே ஆட் செய்ய /

அன்பன் -அனைவருக்கும் அவன்/ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்பன் ஆழ்வார்/ மதுரகவி ஆழ்வார் ஆழ்வாருக்கு/கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ என்கிறோம்  /அன்பு உற்று -அவ்விவசார பக்தி -அடிமை ஆகும்பண்ணும்படி ஞானம் கொடுத்து -இன்பு-சுகம் /

அநந்த கிலேச பாஜனம்-சரீரம்

நித்ய பிரளம்-நாம் மரிப்பது /நைமித்திக  பிரளயம்-மூன்று லோகம் முடிவதால் /பிராக்ருத பிரளயம்/அதியந்திக்க பிரளயம்-நாம் முக்தர் ஆவது//கிரய விக்ரயம் -அசித் போல பாரதந்த்ர்யம்-அடிமை கொள்வது /எம் தம்மை விற்கவும் பெறுவார்களே- கேசவன் வாங்கலையோ/கண்ணன் வாங்கலையோ/ /செல்ல பிள்ளைக்கு பிதா-அப்பனுக்கு சங்கு  ஆழி அளித்து -சங்கு அடையாளம் திருந்த கண்டேன்-ஆழ்வார் /திரு குருங்குடி நம்பிக்கி ஸ்ரீ பாஷ்யம் அளித்தும்-வட்ட பாறை-வடுகா-வைஷ்ணவ நம்பி-கார்ப கிரகத்தில் ஆசனம் இன்றும்- ஸ்ரீ பாஷ்யத்தின் செழுமிய பொருளை அருளினார் பக்தியாலே மோஷம் ஜகத் காரணன் -விரோதம் தவிர்த்து /உபாசனமமே உபாயம்,கைங்கர்யமே பிராப்யம்/

சமுத்திர ராஜன் இடம் விழுந்து பலிக்க வில்லை /மர்மம் தெரிவித்தார் தத்வ தரிசினி வசனம் /ஆற்ற படைத்தான் மகனே-செல்ல பிள்ளை-வள்ளல் பெரும் பசுக்கள்- ராமனின் சர வர்ஷம் போல-பெரிய திருமலை நம்பி -திருவேங்கடத்தான்-நடாதூர் அம்மாள்- தேவ பிரான் /என்றும் கொள்ளலாம்/கோவில் பிள்ளாய் இங்கே போதராய் /தாழ்ச்சியை மதியாது -உள்ளத்தை வேண்டி-என்னை  அவ் அருவாக எண்ணி-இன்புற்ற சீலம்-இவர் உடைய சீலம் அமுதனாருக்கு வெளிட்டு பிரகாசித்தது /சர்வ குஹ்ய தமம் கீதாசார்யன்  இறுதியில் அருளியது போல- இப் பொழுது செய்த விண்ணப்பம்-அமுதனார் இங்கு அருளுகிறார்-பக்தி ஆசை பிரேமம் எல்லாம் இது வரை சொல்லி-பிராதிகிறார் சேஷ பூதனின் அபெஷிதம்/அங்கு உபதேசம் விதி இங்கு விண்ணப்பம்  பிரார்த்தனை /நானே நாநாவித நரகம் புகும் பாபம் பண்ணி ஆத்ம நாசம் உண்டாகி – கர்ம பலன் அனுபவிக்க-நோய் எல்லாம் புகுவதோர் ஆக்கை பெற்று/பல் பல் யோனிகள்-ஜன்ம பரம்பரை/மரம் சுவர் மதிள்–  மருமைக்கே வெறுமை பூண்டு

அறம் சுவராகிய அரங்கனுக்கு ஆட் செய்யாது இருக்கிறீர்களே /கற்ப ஜன்ம –ஏழுக்கும் உபலஷனம்/ ஆத்மா வீயினும்–தாழ்ந்து போகும் சரீரம் தான் அழியும் ஆத்மாவுக்கு  -சொரூப நாசம்/பிரி கதிர் படாத படி அனுபவித்தாலும்-/சீலத்து ராமானுச-போற்ற அரும்-என்றும் -எவ் விடத்தும்-உன் தொண்டர்கட்க்கே-உன்-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் ஹேது அவன் -உமக்கே அற்று தீர்ந்து -அயோக/அந்ய யோக /விவசெதம் ராமன் வில்லாளியே ராமனே வில்லாளி போல /உனக்கே நாம் ஆட் செய்வோம்-ஆண்டாள் நேராகா சொல்ல /தனகேயாக எனை கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை நான் கொள்ளும் சிறப்பே  -நேராக சொல்லவில்லை-பயம்-கைங்கர்யம் பண்ண முடியாது அழகில் தோற்று-உன் தொண்டர்கட்க்கே அன்புற்று இருக்கும் படி/யார் எனக்கு நின் பாதமேசரணாக  தந்து ஒழிந்தாய்-ஆழ்வார் /தமேவ சரணம் விரஜெது-பிரதம பர்வத்தில் –தேவு மற்று அறியேன்/ சரணாகதி அருளியவன் தாளே அரணாக மன்னும் அது /பிரேம யுக்தனாய் -அன்பு-ஆக்கி ஆட் படுத்து என்று பிரார்த்திக்கிறார்

108—-அம் கயல் பாய் வயல்

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி யாகம் என்னும்
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி ராமானுசன் அடி பூ மன்னவே

பிர பந்தம் ஆரம்பத்திலே -ராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -என்ற பிராப்யம் தமக்கு யாவ தாத்மபாவி ஆம்படி கை புகுருகையும் அந்த பிராப்ய ருசி ரூப பக்தி புஷ்கல்யமுமே தமக்கு அபேஷிதம் ஆகையாலே தத் உபய சித்த அர்த்தமாக ஸ்ரியாகையாலே தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு -என்கிற படியே சர்வ ஆத்மாகளுக்கும் என்றும் ஒக்க சார்வாய் சம்பத் பிரதியான பெரிய பிராட்டியாரை ஆச்ரயிப்போம் என்கிறார்

சாஸ்திரம் கொடுத்து அவதரித்து ஆழ்வார்களை கொடுத்து ஆச்சர்யர்களை அவதரிப்பித்து -நம்மை சேர்த்து கொள்ள அவன் படும் பாடு/குரு பரம்பரை-/சித்தி த்ரயம் ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி-ஆளவந்தார் அருளி/ஸ்ரீ வைஷ்ணவம் கோவில்- பொய்கை ஆழ்வார் ஆரம்பித்து -பஞ்ச ஆச்சார்யர்கள் மூலம்-இளையாழ்வார் லஷ்மண முனி உடையவர் எம்பெருமானார் கோவில் அண்ணன் ஸ்ரீ பாஷ்யகாரர் -கரிய மாணிக்கம் சந்நிதியில்- ஆ முதல்வன் கடாஷம் –

எம்பெருமானார் தரிசனம்-நம் பெருமாள் பேர் இட்டுநாடி வைத்தார்  -அவர் வளர்த்த அந்த செயல் அறிக்கைக்காக /ஈன்ற தாய்/அவன் பிறந்தும் செய்து முடிக்காததை பலன் சேர செய்தாரே/உப்பு நீரை மேகம்-ச்வாதந்த்ரம்-ஆழ்வார் -மேகம் பருகி -நாத முனிகள் மலை/ அருவிகள் உய்ய கொண்டார் மணக்கால் நம்பி/ ஆளவந்தார் ஐந்து வாய்க்கால்/ ஸ்வாமி ஏரி-74 மதகுகள்-மூலம் நம்மை அடைய /1017 செய்ய திரு ஆதிரை சித்திரை/பங்குனி உத்தரம்-சீத ராம திரு கல்யாணம்- பெரிய பிராட்டியார் மாதர் மைதிலி-ஏக சிம்காசன சேர்த்தி-கத்ய த்ரயம்-அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்- பர பக்தி பர ஞான பரம பக்தி -மாம் குருஷ்வ-அச்துதே-சாமை பொறுத்தோம்-சம்பந்தம் உள்ளோர் அனைவருக்கும் மோட்ஷம் -உண்மைதானா உறுதி-ராமனுக்கு இரண்டாவது வார்த்தை இல்லை/இந்த அரங்கத்து இனிது இரு நீ என்று -துவயம் அர்த்தம் அனுசந்தித்து கொண்டு/சிந்தை செய்யில்- நல் தாதை -பிள்ளை என்று சம்பந்தம் ஒத்து கொண்டால் கிட்டும்/சம்பந்த ஞானமே வேண்டும்/ஓர் ஆண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் /

சீர் உடை பள்ளி கூடம்-வரை அறை உள் படுத்த வெளி வேஷம்/த்வாரகா  ஈசன்-முத்தரை சாதிக்க பட்டவர்களை உள்ளே விட சொல்லி போனானே-ஆகமத்திலே உண்டு/ வளை   ஆதி விபூஷணம் போல– பர சம்பந்த வேதனம் சக்கராதி  வேதனம்/பஞ்ச சமாச்ரண்யம் /தாஸ்ய நாமம் –

ஆச்சர்ய பரம்பரை -பாஞ்சராத்ர ஆகமம்-ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்து-கால சக்கரத்தாய்-ராமானுஜ திவாகரன்-விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-ஸ்வாமி கை கிட்டும் இடமே- திருபுரா தேவி-காளி சான் மூலை காட்டினாலும் விழுவோம்/திவ்ய தேச கைங்கர்யம்/ நவ ரத்னம் போல கிரந்தங்கள் / சிஷ்யர்களுக்கு வூட்டி பல முகம்/கலியும் கெடும் போல சூசிதம் -கண்டோம் கண்டோம் கண்டோம்-ஆழ்வார் 5105 வருஷம் முன்பு அருளினாரே-௨௦௦௦௪-பவிஷ்யதாசார்யர்-ராமானுஜ சதுர் வேத மங்கலம் -சேர்த்தி திரு மஞ்சனம் ஆழ்வார் உடன்/108 தடவை திருநாமம் சொல்லி பக்தி வளர்ந்து சம்பந்தம் பெற/பூ மன்னு மாது பொருந்திய மார்பன்-கண் முன்னே லஷ்மி வல்லபன் உத்தரம்-அதனால் பிராட்டி சம்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார்/மார்பன் புகழ் மலிந்த பா/ மாறன் அடி பணிந்து உய்ய்ந்தவன் /நாம் மன்னி வாழ சொல்லுவோம் அவன் நாமங்களே /

7 பாசுரங்கள் அவதாரிகை /14 ஆழ்வார் சம்பந்தம்-பொய்கை ஆழ்வார் தொடக்கி-விளக்கை திரு உள்ளத்தே இருத்தும்/–ஆளவந்தார் வரை-இணை அடியாம் ஸ்வாமி என்று அருளி-ஏகலைவன் போல 21 பாசுரம்/ 24 காரேய்  கருணை சீரே //திரு வாய் மொழி க்காக  4 பாசுரங்கள் வேழம் /வலி மிக்க சீயம் ராமானுசன் -கலியன்/ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில்/தமிழ் பற்று/ அடையார் கமலத்து பஞ்ச ஆயுத அம்சம்/ பாவனம்-32/42/52 பாசுரங்களால்/தந்த அரங்கனும் தந்திலன் தான் அது தந்து-வள்ளல் தனம் /போக்கியம் -பொன் வண்டு தேன் உண்டு அமர்ந்து /காமமே -கண்ணனுக்கு புருஷார்த்தம்-/பர மத கண்டனம் பல பாசுரங்கள்/

திருவிலே தொடக்கி திருவிலே முடிக்கிறார்/ திரு கண்டேன்- தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு – திரு பேய் ஆழ்வார் போல /ஸ்ரீ ரெங்க ராஜ மகிஷி-தத் இங்கித பராந்கீதம்/காந்தச்தே புருஷோத்தம /ஸ்ரீ ஒற்றை எழுத்தே பாட முடியாதே /கடாஷத்தாலே பர பிரமத்தையே ஆக்க வல்லவள் /பிறந்தகம் புகுந்தகம் விட்டு ரட்ஷிக்க ஸ்ரீ ரெங்க நாச்சியாராக – அஞ்சலி ஒன்றாலே-எல்லாம் கொடுத்து பின்பும் கொடுக்க ஒன்றும் இல்லை என்றி வெட்க்கி தலை குனிந்து-/இராமனுசன் அடி பூ மன்னவே-இராமனுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ- ஆத்ம உள்ள அளவும்-நித்யமாக–பிராப்ய ருசி ரூப பக்தி-கைங்கர்யம் பண்ண இன்பம் வர- இந்த இரண்டும் நிரம்ப–நமக்கு சார்வு-புகழ் இடம்- அவள் தானே வரத வல்லபை -பெரும் தேவி தாயார்–அலர்மேல் மங்கை-ஸ்ரீ ரெங்க  நாச்சியார் -கண் கண்ட  நாச்சியார்

நெஞ்சே- ஆரம்பித்தார்-முடிக்கிறார்- கொண்டாடுகிறார் -பற்று அற்ற நெஞ்சு ஆத்மாவை உயர்த்தும் -பக்தி -சாதனா பக்தி  இல்லை -இல்லை-பிராப்ய ருசி -போஜனத்துக்கு பசி போல-எல்லாம் வந்து குடி கொண்டதாம்-தழைத்து- செடி தழைத்தால்- மன்ன -பூ-செடி தான் பக்தி- பூ முளைக்கும்- அதை தலையில் சூடி கொள்ளலாம் /பொங்கிய கீர்த்தி-விஸ்ருதையான கீர்த்தி-உடையவர்-

யோக சூத்திரம்-உத்சவம் அமைத்து நமக்கு காட்டி கொடுத்த கீர்த்தி- எண் திசையும் பரவி உள்ளது/மயிர்  கழுவி பூச்சூட இருப்பாரை போல/பூவிலே மன்னு  மாது- மன்னி கிடப்பி இருகிறவளை பற்றி /ஜல ச்ம்ர்தியால் அழகிய காவேரியால் சூழ பட்ட அரங்கத்தில்- அவன் உடைய  /அணி ஆகத்தில் மன்னி இருகிறவள் /மரு மகனை பார்க்கும்  ஆசை /கலகத்தில்-பார்த்ததும்- பிரியும் கலக்கம் /விஷ்ணு பாதம் பட்ட ஒன்றே கொண்ட கங்கை பார்த்து சிரிகிராளாம்-வீதி கழுவி-புறப்பாடுக்கு /புனிதம் ஆகி /மணல் மேட்டில் உயர்த்தி காட்டுகிறாள்-வைபவம்/தரிசிநீயமான அரங்கம் -தேன் அரங்கம்- அரங்கம் வைத்தே அவனுக்கு ஏற்றம் //ஸ்ரியபதி-அவளாலே அவனுக்கு ஏற்றம்/ஓங்கு பெரும் செந்நெல் வூடு கயல் உகள- யானை போல மீன்- பெருத்து கொழுத்து–செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய்-நீரை நம்பிய மீன்-நாரத்தை பற்றியது வாழ அயனத்தை பற்றியவள் வாடுகிறாளே-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்//தாராய -வண்டு உழுது வைக்கிறதாம்-அகல் அகம்–இறையும் அகலகில்லேன் -வாமனன் இறக்கும் பொழுதும் இறங்கவில்லை/அமுதினில் வந்த பெண் அமுதத்தை கொண்டு உகந்த -நமக்காக ஏறி அமர்ந்தாள்/பாவை-அவனுக்கு வாச படுத்து-உவமை ஆகு பெயர்- இவள் குணத்துக்கு -உவமை-பர தந்த்ரையை பற்றினால் உத்தர மாட்டாள்/ சவ தந்த்ரனை பற்றினால் உதறுவான்/ ஸ்ரியதே- அணி ஆகம் மன்னும்/ போற்றுதும்-ஸ்ராயதே /பூ மன்னு பங்கய மா மலர் பாவை பொருந்திய அணி ஆகம்/தலை மிசையே அவர் பற்றினார் இதில் நாம் மன்னி வாழ ஆரம்பித்தார்/ நெஞ்சே- கூப்பிட்டார் நெஞ்சு உடனே சொல்லி  தலை கட்டுகிறார் –

இத்தால் பிராப்ய சித்தியும்-அடி பூ மன்ன – –பிராப்ய ருசியும் -பக்தி-  இரண்டையும் கேட்கிறார் //கடாஷங்களாலே விரும்பியது எல்லாம் கொடுப்பாள்/-சரம பர்வம்-ஆச்சர்ய சாரணர விந்தம் -அவள் இடம் கேட்கிறார் /இதுவும் உபாயமாகவே இல்லை-வடுக நம்பி பால் காய்ச்சும் பொழுது அரங்கனை -உங்கள் பெருமாளை நீங்கள் சேவித்து கொள்ளுங்கள் எம் பெருமானுக்கு கைங்கர்யமே எனக்கு முக்கியம்  என்றது போல/அங்கும் சென்று ஆச்சர்ய கைங்கர்யமே தோள் மாறாமல்/பிரிவே அற்று இருக்கையே பிரார்த்திக்கிறார்/ஆச்சர்ய திருவடிகளே பிராப்யம் /

திருவடிகளாகிற செவ்வி பூவை தலையிலே -கலம்பகன் மாலை போல அலங்கரித்து ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக- இளையவர்க்கு அளித்த மௌலி எனக்கும் அருள் -விபீஷணன் பிரார்த்தித்து போல/-திவ்ய தம்பதிகளுக்கு இத்துடன் மங்களாசாசனம் பண்ணுகிறார்/பக்தி பிராப்ய ருசி யால் பண்ணிய தம் நெஞ்சு-கூடி கொண்டே போகும் பக்தி /உசா துணை மனம் -பலித்த அம்சத்தை -சொல்வது போல நெஞ்சுக்கு உரைக்கிறார்/பக்தி சப்தம் எல்லாம் ஏக ரூபமாய் கொண்டு நெஞ்சு அளவில் குடி கொண்டு இருந்தது /நெஞ்சு வண்டு -தேனை பருகி  அமர்ந்திட சென்று இருந்து /பக்தி தங்குவது அடி பூ இடம்-மடுவாக மலை நீர் தங்குவது போல பரம பக்தி ரூபமாய் பரி பக்குவமாய் /பர பக்தி பூ பர ஞானம் காய் பரம பக்தி -கனி//பொங்கிய கீர்த்தி-பரம பதம் அளவும் போன கீர்த்தி/வூமை திரு பாற்கடல்  அளவும் உள்ள பெருமையை வந்து சொன்னானே-பல்கலையோர் தாம் மன்ன வந்த ராமானுசன்- தொடங்கினார்-பொங்கிய கீர்த்தி இதில்-அடி பூ-தழைத்து பூ பூத்தது/ சரணாரவிந்தம்-ஆரம்பித்து அடி பூவில்/உபய காவேரி இருப்பதால் அழகிய கயல் மீன்/வேழா  போதகமே தாலேலோ- தேவகி-தானை போல இருக்கிறான்-அன்று குட்டி /அது போல மீன்கள்/ 

அலங்கார பூதையாய் இருக்கிறாள்/பிரபை -பாஸ்கரென போல பிரியாதவள்/சொரூப நிரூபகை /பொருந்திய மார்பன்/மன்னு -இங்கு /பங்கய மா மலர்-பிறப்பிடம் என்பதால் கொண்டாடுகிறார்/ பாவை-பால்ய யௌவனம் சாந்தி-/பூ மன்னு மாது-பங்கய  மா மலர் பாவை/போற்றுதல்-மங்களா சாசனம்– சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு-திவ்ய தேசங்களில் ஆதரவும் பிராவன்யமும் சதா ஆச்சர்யர் பிரசாதத்தால் கிட்டி வர்த்திக்க கடவன் / நிர்ஹெதுகமாக பரகத ச்வீகாரம்-வந்து அருளி நெஞ்சில் இடம் கொண்டதுக்கு இதுவே பலன் /சரணார விந்தம் நாம் மன்னி வாழ -அடி பூ மன்ன -பலன் பாவையை போற்றுவதே என்கிறார்/

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s