காட்டழகியசிங்கர் கோயிலின் நிர்மாணம் ..

நாள் 26.01.2011

நேரம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள்

(கும்ப லக்னம்)

பகைவனான இரண்யனிடம் சீற்றமும்,  தன்னுடைய அன்பு பக்தனான ப்ரஹ்லாதனிடம் அருளும் ஓரே சமயத்தில்காட்டிய சிறப்புடையது ஸ்ரீநரஸிம்ஹ அவதாரமே.

ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள காட்டழகியசிங்கர் கோயிலின் நிர்மாணம் எப்போது என்று அறியமுடியவில்லை.   இங்குள்ள பெருமாளும், திருமகளும் அமர்ந்துள்ள கோலம் அற்புதமானது..!  வந்தவர்களை வாழ்விப்பது..!  எந்தவித இடர்களிலிருந்தும் மீட்பது..! அதற்கு மிக முக்கியமான காரணம் பெருமாளும் தாயாரும் அருள்மிகுந்து இருவருமே அபயமுத்ரையோடு அனுக்ரஹிப்பதுவே..!

அரங்கன் வருவதற்கு முன் முனிவர்கள் பலர் அரங்கனுக்காக தவமிருந்தபோது, யானைகளின் அட்டகாசம் மிகுந்தததாகவும்,  இத்தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக தவமியற்றுவதற்கு ஏதுவாக இந்த பெருமாள் தோன்றியதாகவும் ஒரு செவிவழி செய்தி உண்டு.

இந்த திருக்கோயில் சித்திரைவீதியை நிர்மாணித்த வீரபாண்டியனான, ஜடவர்மன் சுந்தர பாண்டியன் என்கிற கலியுகராமனால்,  கி.பி.1297ல் புநர் நிர்மாணம் செய்யப்பட்டு, திருக்கோயிலைச் சுற்றி கலியுகராமன் சதுர்வேதி மங்கலம் என்னும் வேதம் ஓதும் அந்தணர்கள் குடியிருப்பைத் தோற்றுவித்ததாய் ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

தனிக்கோயிலுக்கு உண்டான அனைத்து அமைப்புகளையும் உடைய இந்த கோயிலிலுள்ள உற்சவ விக்ரஹம், ஏதோவொரு கலாபகாலத்தில் (அந்நியர்கள் படையெடுப்பின் போது)  பாதுகாப்புக்கருதி புலம் பெயர்ந்து, அதற்குப்பின் பல நுாறு ஆண்டுகளாக உற்சவ பிம்பங்கள் ஏதும் இல்லாமலே வழிபாடுகள் நடந்து வந்துள்ளது.

இந்தவொரு பெரும் குறையை நிவர்த்திக்க எம்பெருமான் இப்போதுதான் அனுகிரஹித்துள்ளார் – அனுமதித்துள்ளார்.

ஆம்..!  விண்னும் மண்ணும் மகிழும் வண்ணம், சர்வலக்ஷணத்துடன் கூடிய தேஜோமயமான விக்ரஹ பிரதிஷ்டை, நாளது தை மாதம் 12ம் தேதி (26.01.2011)  – சப்தமி திதியில் – சித்திரை நட்சத்திரம் கூடிய சித்தயோக நன்னாளில் காலை 0900 மணி முதல் 10.00 மணிக்குள் – கும்பலக்னத்தில் அவனருளுால் நடைபெறயுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: