ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -99.தற்க சமணரும்/100.போந்தது என் நெஞ்சு – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

99–தற்க சமணரும்

தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ் சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே

ஞான வ்யவசாயன்களை பங்கிக்கும்பாஹ்ய குத்ருஷ்டி பூயிஷ்டமான தேசம் அன்றோ எனன/எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் எல்லாரும் நஷ்டர் ஆனார்கள் என்கிறார்/ ஞானி மனம் கடல் போல கலங்காமல் இருக்க வேண்டும்/

கற்பக மரம் பொன் -இல்லை -யாரும் தீண்டலாம்-அசுத்தி ஏற்படாது/ கற்பகம் தேவர்களுக்கு மட்டுமே / ஆரார்  வானவர்கள் செவிக்கு இனிய சென்சொல்லே திரு வாய் மொழி / ராமனுஷ -முனி- மனன சீலர்- அப் பொழுது ஒரு சிந்தை செய்து மாய்த்தார் அனைவரையும்.//தற்க்க சமணர்-தருகினால் சமன் செய்து-திரு  மொழி-2-2-7–/மலிந்து செந்நெல் காவிரி வீசும் -திரு குடந்தையிலும் திரு குருகூரிலும் வீசும்/பொலிந்து நின்ற பிரான் கண்டீர்/ இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்-சேர்ந்தே -நகமும் சதையும் போல-பார்வதி பரமேஸ்வர-காளி தாசன்-திசை திருப்பி ஆத்மா நாசம் விளைப்பார்கள் இவர்கள் /தாழ் சடை-சாதன வேஷம்-தெரிவிக்க-மோகன சாஸ்திரம் படைக்க -சோம்பர்- தாமச பிரக்ருதிகள் /தமோ குணா நிஷ்டர்  கூட எழுந்து விட்டார்கள் -திரு பாவை//சூனிய வாதர் -தனியாக /சாக்கிய பேய்களில் சேர்ந்தாலும் இவன் மனத்தில் உள்ள குரூரம் தோன்ற பிரித்து -கள்ள வேடம் கொண்டு புறம் புக்கவாரும்-நான்கு  சிஷ்யர்கள் புத்தனுக்கு –

நான் மறையும் நிற்க குறும்பு செய்யும் நீசரும்-சங்கர பாஸ்கரஇந்த பாசுரத்தில்  -9 மதங்கள் சொல்லி– 8 மாதங்கள் சொல்ல வில்லை– 17 புற மாதங்கள் ஈடில் உண்டு/நீள் நிலம்- எல்லா மதங்களுக்கும் இடம் கொடுத்து /எம் ராமானுச முனி-வித்வத் இருந்தும் நமக்கு திருவடி காட்டிய சுலபர்-எம்-அவதரித்த அன்றே மாண்டனர் /அழல விளித்தானே அச்சோ அச்சோ போல பாண்டிய தூதனாய் போன அன்றே முடித்தார் /அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே /வகை வகை அறிவு-மதி விகற்ப்பு–பூர்வாச்சார்யர்கள் ரஷித்த விஷயம் -க்ராந்தன்களால்-நிரசித்தார் //சமண மதம் தர்க்கதாலே நிற்க வைத்தார்-7 பங்கம்- அறியார் சமணர் அயர்த்தார் பௌத்தர் சிறியார் சிவப்பட்டார் -திரு மழிசை /பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் – பேசியே நிற்க வைப்பார்கள் தற்க்க வாதம் பிரதி வாத பயங்கர அண்ணன் ஸ்வாமி- மா முனிகள் -ஒன்றும் தேவும்- சாஸ்திரம் விளையாடுகிறதே என்று ஆச்ரயித்தார்/வேதம் தமிழ் செய்த மாறன்-ஒன்றும் தேவும் அவதாரிகை படித்தால் போதும்-ஸ்ரீ வைஷ்ணவர் நிலை நிற்க /கிடக்கும் முத்துக்களை கொத்து கொடுத்தார் நம் பிள்ளை /சமணரும் சாக்கிய பேய்களும்- தோள் தீண்டியாய்-நேர் வழிக்கு சொல்ல மாட்டார்கள் /பாஹ்யர் வேதம் ஒத்து கோளாமல் தர்க்கத்தாலே /பே போல விடுதல் பற்றுதல் அறியாத பிடித்ததையே பிடித்து கொண்டு நிற்கிற பௌத்தரும்/தன்னை ஈஸ்வரன் என்று லோகம் ஆதரிக்க வேணும் என்று அதுக்கு ஈடாக தீர்க்க ஜடாதரனாய் கொண்டு சாதனம் அனுஷ்டித்து பகவத் அனுமதியாலே மோக சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்த ருத்ரன் உடைய வசனமான ஆகமத்தை அதிகரித்து இருக்கிற தாமசரான சைவரும் -பசுபதி ஆகமம்-

பஞ்சாஷரி-போயரணவம் சேர்க்க மாட்டார்கள்- நாராயண சொல்வதால் /பிரமாண பிரமேய பிரமாதாகள் ஆன இவை மூன்றும் இல்லை என்று  சர்வ சூன்ய வாதம் பண்ணுகிற மாத்த்யமிகரும் –63நாயன்மார்கள் சேஷ்டிதம் குணம் சொல்வார் -விசிஷ்டாத சைவர்கள் இவர்கள் //அத்வைத சைவர் தாயுமானார் வள்ளலார்  போல்வார்கள்/–வைபாஷிகன்- மாற்றி சொல்பவன்-சொத்தர ஆந்திகன் யோகாசாரன் -மாத்த்யமயுகர்-நான்கு வித புத்தர்//உத்தர சதகம்- ஜகம் பிரயட்ஷமாக தெரிந்து /அனுமானம்-இரண்டாவது /-மூன்றாவது கிடையாது -ஞானம் ஷணம் நேரம் தாம்  இருக்கும் என்பவர் /அந்த ஞானமே இல்லை என்றான்//அநித்தியம் துக்கமாய் இருக்கும் ஞானம் என்பர் /நால் மறையும் நிற்க-வேதம் பிரமாணம் என்று அங்கீகரித்து-கருட வாகனும் நிற்க சேட்டை மடி- போல- தவறான பார்வை- குதுருஷ்ட்டி-திஷ்டத்சு வேதேஷூ-என்கிற படியே அது நிற்க- சம்பந்தம் இல்லாத அபார்தன்களை சொல்லி மூளை அடியே நடத்துகிற பிரஹீனரான குத்ருஷ்டிகளும்/ச்வருஹநீயமான கல்பகம் போல பரம ஒவ்தராய் ,அது தன்னை பிரகாசிப்பித்தது அருளின எம்பெருமானார் மக ப்ருதிவியிலே எழுந்து அருளின பின்பு முடிந்து போனார்கள் ..ஸ்ரீ பாஷ்ய முகேன தத்தம் மதங்களை பங்கித்து  அசத் கல்பம் ஆக்குகையாலே அவர்கள் நஷ்டரானார்கள்

அசத் கல்பம்-இவர்கள் இருந்தும் இல்லாததற்கு சமம் //உயர்-பரத்வே பரத்வம் // திண்-விபவத்தில் பரத்வம்- அணை ஓன்று -அர்ச்சையில் பரத்வம் //நாலும் பரத்வம் பேசும்/மோஷ பிரதவம் பிரித்து சொல்ல -பரத்வத்தில் சேர்ந்து இருந்தாலும் //தனி கோல் செய்து கொண்டு இருந்தவர்களை மாய்த்தார்/தற்க்க சமணர்-பிரமாணம் ஒத்து கொள்ளாத தர்க்கம் கொண்டு-ஆகாச தாமரை  மணக்கும் நில தாமரை போல தாமரை ஆன படியால் என்பர்/தனக்கு ஆசை என்று கற்ப்பித்துய் பேசுவர் /பரம அணுக்களே காரணம் -பாஷாணம் -சுவர் போல ஆனால் மோட்ஷம் ஞானம் தொலைந்தால் மோட்ஷம் என்பர்/நையாயிக வைஷ்யேஷிகர்-தரக்கர் இவர்கள்- ஜைனர்கள் மூவரும் /சாக்கிய பேய்கள்-பிடித்ததே மூன்று கால்- த்யாஜய உபாதேய  விவேக கிலேசம் இன்றி -இருக்கு  சொல்லலாம்/இல்லை சொல்லாம்/ இருக்கு என்றும் இல்லை என்றும் சொல்லலாம் /இருக்கு என்றும் சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் / இல்லை என்றும் சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் /சொல்லலாம் என்றும் சொல்ல முடியாதுஎன்றும் சொல்லாம் போன்ற  ஏழு வாதங்கள் //காரிய காரண ரூபம்- மண் மடக்கு பின்னம் அபின்னம்-விகாரம் அடையும்–காரியம்-நித்யம் காரணம்-அநித்தியம் மண் தன்மை மாறாது /

ஆத்மாவும் தேகம் அளவு கொள்ளும் என்பான்/ஆத்மா விகாரம் என்பான்/திகம்பர்கள்-பிராணி வதம் மனசு வாக்கு காயத்தால்இன்றி – -மயில் தோகை கையில் கொண்டு-கையே பாத்திரம்-ஜெயின் ஆகாரம்பிரசித்தம்-மௌன விரதம் –ஞான கர்மம் சேர்த்து மோட்ஷம் என்பார்கள் /மலத்தை பூசிக் கொண்டு -வூர்த கதியை நினைந்து கொண்டு -ஜைனர்கள் /சமணர்- சாருவாகரையும் கூட்டி -லோகாயுதம்- கண்ணால் பார்த்ததை நம்பு-பஞ்ச பூதம்-ஆகாசம் விட்டு மற்று  நான்கு என்பர் -சுரா பானம் அருந்தி விகாரம்- வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போட்டு வாய் சிகப்பு போல – நான்கு சேர்ந்து கூட்டால் அறிவு என்பர் –பிரத்யட்ஷம் தான் உண்மை /சுவர்க்கம் நரகம் இல்லை பாபம் புண்யம் இல்லை என்பர் /சுக துக்கங்களே சொர்க்கம் நரகம்/

பிராணன் போனால் மோட்ஷம் இவன் படி/தேகமே உண்மை என்பதால்/சுருதி விருத்தமாக பேசுவார்/

சங்கர பாஸ்கர யாதவர்-நீசர் -லோகாயுதரையும் //பிரத்யட்ஷ அனுமான உபமான -பிரமாணம் என்று கொண்டு /சப்தம் அனுமானித்து -பரமாணு தான் காரணம்  என்பர்-குயவன் போல நிமித்த காரணம் மட்டும்-/உபாதான காரணம் இல்லை என்பர்/-அவனை -நாம் சாஸ்திரம் கொண்டு தெரிந்து கொள்வோம்=இவர்கள் அனுமானத்தால் என்பர்/உபாசனம் பண்ணி சுக துக்கம் நசித்து மோட்ஷம்-.அணுக்கள் கூடி உருவாகும் என்பர்-நூல் சேர்ந்து வேஷ்ட்டி ஆவது போல ஜகம் வந்தது என்பர் நெசவாளி போல சங்கல்பிபவன் அவன்/நூலுக்கு ஆரு பக்கம் உண்டு -இரண்டு பக்கம் சேர்ந்து சேராத பகுதி உண்டு-.பரம அணுவிலும் இப்படி இருந்தால் அதை வெட்டி  இருக்க வேண்டுமே/ தாழ் சடையோன்-வினை தொகை-சாதக வேஷம்-சொல் கற்ற சோம்பர்- ஆழ்ந்த பொருள் இல்லை கற்றான் அதன் படி  நிற்க வில்லை -மோக சாஸ்திரம்-பகவத் அனுமதியால் -பசு பதி ஆகமம்-நான்கு பிரிவு-பாசுபதர்-மசானத்தில் பத்மம் பூசிக்கு கொண்டு தாமசர்/சாங்க்ய மதம் இதில் சொல்லவில்லை-பிரதானம்-பிரகிருதி- காரணம் என்பர் -நிமித்த காரணம் மட்டும் ஈஸ்வரன் என்பர் /வேத வியாசர் -பசு பதியை பரன் என்பதால் தள்ள தக்கது சாஸ்திரம் உடன் விரோதிததால் /கபிலன் உடன் சொல்லாமல் ஜைனரை சொல்லி பசுபதி சொன்னது இதை சாஸ்திரம் என்று தப்பாக எனன கூடாது என்பதால் தான்/

ஆரு முத்ரைகள் தரித்து -மாத்த்யமிகர்-சர்வ சூன்ய வாதம்-கேள்வி கேட்க்காமல் நடுவில் இருந்தார்-வேதம் வல்லர்களை கொண்டு விண்ணோர் பாதம் -என்று -குறைத்தால் போல /ஒவ் ஒன்றாக குறைத்து -குரூரமான மதம் என்று தனித்து //மேன்மை அபகரிப்பர் சைவர் குணம் அபகரிப்பவர் மாயாவாதிகள் இவன் எல்லாம் அபகரித்தான்//இளைய பெருமாள் ஜடாயு பிள்ளை திரு நறையூர்  அரையர் சிந்தயந்தி -நால்வரையும் கைங்கர்யத்து கொள்ளவார்கள்//ஜகத் விஷய- ஞானம் ஷணிகம்-இதுவே ஆத்மா என்பர்-சத்திரம் என்று நினைத்தால் சம்சாரம்/ஷணம் என்று தெரிந்தால் மோஷம் என்பான் வைஷாந்திகன்/சூத்ராந்தம்-ஜகத் பார்க்கிறோம்-அனுமானம்-பிரத்யட்ஷம் இல்லை-ஷணிகம் நினைக்க நினைக்க /சூன்யத்தால் சூன்யத்தை சூன்யம் என்று -ஆண்  அல்லன் பெண் அல்லன் – சூன்யம் என்பர் அறியாதவர்/உளன் இலன் என்றாலும் உளன் //குரும்பு செய் நீசரும்-வேதம் பிரமாணம் என்று ஒத்து கொண்டு–சங்கர பாஸ்கர யாதவ -மூவரையும்–சத்தாகவே இருந்தது ஒன்றாக இருந்தது – இரண்டாவது இல்லை -அனிர்வசநேயம்-சின் மாதரம் என்பர் சங்கரர்-அவித்யை மாயை-/பிரமத்துக்கு ஒன்றும் இல்லை என்பர்/எல்லாம் மாயை-சரீரமும்  பொய் / பாஸ்கர-ஜீவனாக  தன்னை தானே பிரமகிரதாம்/-உபாதி சத்யம்-கட ஆகாசம்-உடைத்தால் இரண்டும்-உள் ஆகாசமும் வெளி ஆகாசமும்- ஒன்றாகும் சரீரம் தொலைத்தால்-உபாதி போனால் மோட்ஷம்/யாதவ -குணம் உண்டு பிரமத்துக்கு /கர்ம ஞானம் இரண்டால் உபாதி போய் மோட்ஷம் /அசுரர்களை மோகிப்பிக-புத்தனாக தானே-கள்ள வேடம் கொண்டு புறம் புக்கவாரும்//, கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மான்-எய்த கூவுதல் ஆவதே -பிர பத்தி மார்க்கம் கூப்பிட பிராப்தி இல்லை-இதில் புத்த அவதாரம் சொன்னது -குலைக்க பார்கிறாய் என்னை அங்கு சாஸ்திரம் குலைத்தால்  போல -ஆழ்வார்/  ,, ருத்ரனையும் கொண்டு,/பேச்சு பார்க்கில்-கள்ள பொய்- நூல்களும் பிறவி பார்க்கில் ஐந்தாம் ஒத்தும் அரு மூன்றும் கழியும்/ருத்ரன்  பார்வதி இடம்  ஏகாதசி மகாத்மயம் சொல்ல-/ -கபிலன் யோகி  ஏகாயனார் /போன்ற ஐந்தும் சொல்லவில்லை/சாந்க்யன்-வழி காட்டி நடந்து பிரதானமும் புருஷனும் என்பர் கபிலர்-ஈச்வரனே இல்லை-பிரதானமே ஜகத் காரணம் -நடப்பவர் மேல் இருப்பவர் சொல்ல /ஆத்மாவுக்கு கர்த்வமில்லை /சேர்ந்து இருந்தால் சம்சாரம் விவேக ஞானமே மோட்ஷம்/பட்ட பிரபாகரர்-ஆத்மா நிறைய-நித்யர்-ஆசை கொண்ட கர்மாவால் பந்தம்-ஜகம் நித்யம்-பிரவாகம் போல -வேற தேவதை விஷயம் இல்லை என்பர் /பலம் ஆசை இன்றி செய்யும் யக்சம் -அபூர்வ வாதம்-கர்ம செய்தால் அபூர்வம் வரும்-சேர்ந்து மகா பூர்வம்-மீமாம்சை போல-ஆத்மா பிராப்தி கைவல்யமே மோட்ஷம் என்பர்/ஏகாநயன்-ஸ்ரீ தேவி இன்றி–உருவகம் சிருஷ்டி போல்வன என்பவன் /நீள்  நிலத்திலே பொன் கற்பகம்-பிரக்ருதமாய் ஜடமாய் அர்த்தம் கொடுக்கும் கற்பகம் போல அன்றி அப்ராக்ருதமாய் சுய பிரகாசமாய் அனைவருக்கும் அனைத்தையும் கொடுத்து- மோட்ஷ பிரதானம் அபேஷா நிரபெஷமாக கொடுத்தவர்..என் ராமானுச முனி- என் ஒருவனையே உஜ்ஜீவிக்க மனன சீலம் பண்ணி கொண்டு/ அதுவோ-இந்திர லோகம்-கீழே கண்ணன் காதலிக்கு / இவர் பார்த்தசாரதி தன்  காதலி -நமக்காக- ஸ்ரீ வைகுண்டம் இருந்து  வந்த ஸ்வாமி /சாருவாதவாத மதம் நீறு செய்து சமண செடி  கனல் கொளுத்தி சாக்கிய கடல் வற்றுவித்து சாங்கிய கிரி முறித்து மாறி செய்திடும் முடித்து பாசுபதம் சிந்தி ஓடும் கூறு மா குறு கொடிய தற்க்க சரம் விட்டபின் பாஸ்கரன் கோடி எரித்து பெரு வீரன்   – செய்த எதிராஜர்-ஆர்த்தி பிர  பந்தம் /நாளும் மிக வாழியே //

பிரமாணங்கள்-பிரத்யட்ஷம்-பார்த்து கேட்டு தொட்டு முகர்ந்து சுவைத்து அறிதல் /சாமகிரிகள் சரி வர இருக்கவேண்டும்-வெள்ளிச்சம் போல்வன /அனுமானம்-புகை-நெருப்பு-//சப்தம் -சாஸ்திரம்-வேதம் /சாஸ்திர யோநித்வாத்-/த்ரிவேதி சிங்காசனம்-பேத அபேத கடக சுருதி கொண்டு ஒருங்கே வைத்தார் ஸ்வாமி/மாள்வித்தார்–பாஹ்யர் இடம் ஒரு யுக்தி  கொண்டு வென்று -குதிருஷ்டிகள் இடம்  சாஸ்திர வாக்கியம் கொண்டு வென்றார் /2 அத்யாயம் 1 பாதம்  2 பாதம்– தரக்க நியாயங்களால் ஸ்வாமி காட்டினார் ஸ்ரீ பாஷ்யத்தில் //சத்யம் எடுத்து உரைக்க பெரும் கேளலார்  ஆழ்வார் மேல் ஒருங்கே பிரள வைத்தார் –பரமத பங்கம் 24 அதிகாரம் தேசிகன் அருளி இருக்கிறார் //லோகாயுதகன் சாருவாகன்-தேகமே ஆத்மா-மரணமே மோட்ஷம்-ப்ரஹச்பதி பிரவர்தகம் -ஜாபாலி இதை ராமன் இடம் பேசினார் /அசித் அனுபவிக்குமா-அதில் இருந்து சக்தி விஷயம்-வெத்திலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து வருவது போல -கூட்டிலே வரும் சைதன்யம் அனுபவிக்கும்/முயல் கொம்பை போல பிரமமும் பார்க்காத வஸ்து- துச்சம் /கர்மம் வாசனை ஜன்மம் ஒன்றும் இல்லை/மயில் சித்திரம்  வரை கிறான்  குயில் போல கூவுகிறான்-ச்வாபம் தான்

 சிவ லோகம் கற்பித்து பேசுகிறான்/கண்டது மெய் எனில் காணும்  மறையில்  அறிவு கண்டோம் – கண்டது அலாது எனில்-கண்டிலம் குற்றம் /கண்டது போல் மறை காட்டுவதால் -என் கண் தான் சாஸ்திரம்–சாஸ்திரம் தெரிவது போல காட்டிது – /உண்டது கேட்க்கும் /அனுமானம் தான் நீ சொல்வது -சாப்பிட்டு ஆரோக்கியம் வரும் என்று திடீர் அன்னம் தோன்றனும்//ஈர்க்கிறது போல உள்ளது /உங்கள் மதம்/மனுஷ்ய பிறவி விட ஸ்தாவர சங்கமம் அதிகம்-கர்ம அனுகூனம் இல்லை என்பர்/ இந்தரனும் விரோசனனும் பிரம்மா இடம் போக -எண்ணையில் பிரதி பிம்பம் காட்டி-திசை திருப்பி விட்டார்/ இந்த்ரன் திரும்பி -அன்னம் மயன் பிராண  மனோ விக்ஜானம் ஆனந்த -பஞ்ச க்ரோசங்கள்/விரோசனன்-பிரவர்த்தனம் பண்ணினான்/பிரத்யஷம்  மட்டும் பிரமாணம் ஒவ்வாது-அனுமானத்தாலும் சப்ததாலும் ஞானம் பிறக்கிறது/உண்டால் பசி போகும் -இதுவே அனுமானம்/ பசி வருவதும் உண்டே சில உண்டால்/ உண்டால் அஜீரணம் வருமே /நிறைய பேருக்கு போகும்.அனுமானித்து புரிந்து கொண்டாய்/வேப்பம்  கொழுந்து சாப்பிட்டோம்- பார்க்காமலே வைத்தியர் சொல்லும் சப்தம் சொல்லி -எங்கள் ஆப்தன் சாஸ்திரம் கொடுத்தாரே/மந்திர ஜோதிஷ சாஸ்திரம் -ராசி கிரகம் பார்த்தாயா–சில்பி வடிவம்-பிரத்யட்ஷம் இல்லாமல் கொண்டு வருகிறான்/பார லோகிக்க சாஸ்திரம் -லோகத்தில் பார்த்து இருக்கிறேன்- கர்ம வைகுண்டம் காட்டு ஒத்து கொள்கிறேன்-என்பான்-

மக்கள் தொகை கூடி கொண்டே போகும்-மறிப்பது மட்டும் இல்லை பிறப்பதும் உண்டு- பிரத்யட்ஷம் மட்டும் உண்மை- எப்படி- மறுபடி பிறந்தால் தானே  கூடும்-தெரியாத ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும்/ ஜைனன்-கார்ய காரண ரூபம்-சத்ய அசத்திய நித்ய அநித்திய  பின்ன  அபின்ன  மண்-குடம் போல-சப்த பங்கி- மூன்று ஏழு உண்டு/நித்ய அநித்திய சத்ய அசத்திய பின்ன அபின்ன /ஒன்றாக இல்லை பலவாக இருக்கும் /இருக்கு தன்மை/இருக்கலாம்-ஆரு வாதத்துக்கும் இடம் /இல்லாமலும் இருக்கலாம்/சொல்ல முடியாமல் -அவச்தவ்யம் /2-2-31/32/ஏகச்மின் அசம்பவாத்-விருத்த தர்மம் ஒரே இடத்தில் இருக்காது சிறு மா மனிசர் போல /விருத்த தர்மங்கள்-கருட மந்த்ரம் சொல்லி கருட  முத்தரை காட்டி கொண்டு–ஓடி கொண்டே  உட்கார்ந்து தடவி கொடுக்கிறான்/

ஸ்ருஷ்ட்டி அளித்தல் அழித்தல்/கொம்பு முழுசு அரை கொம்பு இல்லாமை- வேவ்வேறு  காலத்தில்//ஆத்மா உடல் அளவு -குறையாதே -நித்ய நிர்விகார தத்வம்./பரம அணு-வைபாஷிகன்- பரம அணு சேர்ந்து பூதங்கள் உண்டாக்கும்–ஞானம் ஷணிகம் என்றான்/ஷணிகம் ஞானம் இருந்தால் உத்பத்தி உண்டாகாதே /விவகாரத்துக்கும் ஆகாது  //சமுதாய  உத்தர உத்தர பாதம் -//மண்-குடம்-அபாவம் காரணம் அழிந்ததே காரணம் -என்றான் -மண் அபாவம் தேச கால வஸ்து வாசி இன்றி எங்கும் உண்டு அங்கு எல்லாம் குடமாய் உருவாகணும்/முன் ஷணம் -/ஜாதிக்கு மட்டும் முன் ஷணம்/ பல குடமுண்டாகனும் /தேசம் காலம் உண்டு ஒத்து கொண்டாயே-/இல்லாத பொருள் உருவாகிறது /இன்று இருந்தது நாளை இல்லை-அனுமானம் உண்டு என்றான் அடுத்தவன்-/அறிய படும் பொருளும் அறிவும் இருந்தால் தான் அறிய முடியும் -பொருளே இல்லை என்றால் அறிவு எதற்கு /சூன்ய வாதி-சர்வத அனுபத்தி-உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் அவன் உருவம் அவன் அவுருகள் /அச்தித்ச நாச்திச்த விசிஷ்டம் -விசிஷ்ட பிரமம்/உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே// சப்தம் சூன்யதுடன் சேராது /

மண்ணுக்கு அபாவம் கடத்துக்கு  உத்பத்தி–உத்பத்தி அசதி ஆகும்/சூன்யம் ஸ்தாபிக்க முடியாது -பிரமாணம் கொண்டு ஸ்தாபிக்க வேண்டும்/ பிரமாணம் பொய் என்றால் சூன்ய வாதம்  ஸ்தாபிக்க முடியாது //மகத்த பீர் அதிகரணம்-நூலுக்கு ஆரு பக்கம் உண்டே-அணுவை பாகமாக பிரிக்க வேண்டுமே-பேதிக்க முடியாத பரம அணு என்றாய்-உபாதான காரணம் இதுவாக இருக்க முடியாது/-சுக துக்கம் காரணம் ஆன புண்ய பாபம்-பரம அணுவில் இருக்குமா ஆத்மாவில் இருக்குமா ?–பிரத கிரியை எங்கு-அதற்க்கு எனன காரணம்-ஆத்மா இடத்தில் இருந்தால்-பரம அணு எதை வைத்து சேரும்- உருவாக்கி கொண்டே இருக்கும் அழிய முடியாதே /பாசுபத- மதம்/ஆகமம்-சிவனுக்கு சரீரம் இல்லை–வேதத்துக்கு -அதிஷ்டானம் இல்லை என்பதால்- சங்கல்பிக்க முடியாது /இருந்தால்- நித்யம்-அநித்தியம் சொல்ல முடியாது-படைக்க பட்ட சகமும் நித்யம்/ நிமித்த காரணம் எப்படி-விகல்பம்/ஆத்மா சரீரம் அதிஷ்டானம் பண்ணுவது போல -பரம சிவன் பரம அணுக்குள் என்று அதிஷ்டானம்-ஜீவனே அவர்/யோகம்-பிரகிருதி தான் ஜகத் காரணம் கண் தெரியாமல் நொண்டி மேல் /விவேகம் ஏற்பட்டால் மோட்ஷம் என்பான்-சேர்ந்தே போகிறார்கள் ரசனா அனுபிரபத்தி- அதிஷ்டானம் பண்ணி தான் கார்யம்-சந்நிதி மாதரம் என்பான்-மரம் மேஜை -அதிஷ்டிக்க வில்லை- தச்சன் வேணுமே-ஒத்துக்க வில்லை புல்லை கொடுத்தால் பல்/ காளை மாடுக்கு கொடுத்தால் பாலை பெற முடியாதே /

பார்த்து கை காளை அசைத்து பேசணும் கர்துத்வம் வேணும் நடப்பவன் புரிய ஞானம் வேண்டும்/இருவருக்கும் இரண்டும் வேண்டும்//அபூர்வம்-கர்மாவில் உருவாகும்-சாஸ்திரம் கொண்டு நிரசிப்பார் வேத வாக்கியம் உண்டே /மாயாவாதி-நிர்விசேஷ சின் மாதரம்-இல்லாதவரை பேசினீரா-சின் மாதரம் அஞ்ஞானம் மூடி கொள்ளும் என்பர்/சுயம் பிரகாசம் ஞான மாயம்-ஆச்ராயண தோஷம் /பொய்யான வாக்கியம் கொண்டு-அர்ஜுனன் கண்ணன் இருவரில் யார் பொய்-/அத்வைத கால ஷேபம் கேட்க ஆள் வர மாட்டாரே/பாஸ்கரன்-பிரதி பலிப்பு கண்ணாடி உண்மை என்பான்-உபாதி கனாடி தான் சரீரம் என்பான்/யாதவ பிரகாசர் பிரமம் மொன்று பகுதி என்பர்/அவிகாரன்-ஜகத் காரணம்/எகாயனன்-சக்தியே நாச்சியார்-17 மதங்களையும் நிரசித்தார்11 பாஹ்யர்   6 குதுருஷ்டிகள்

ஸ்ரீ தேவி ஆனந்தத்துக்கு தான் ஸ்ருஷ்ட்டி என்று காட்டினார் /அரு சமய செடி அதனை அறுத்தான் வாழியே

100-போந்தது என் நெஞ்சு

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடி போதில் ஒண் சீராம்
தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பால் அதுவே
ஈந்திட வேண்டும் ராமானுச !இது வன்றி ஒன்றும்
மாந்தகில்லாது இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடலே

திருவடி தான் பங்கஜம்/ சீர் தேன் பெருக மனம் ஆன வண்டு- சஞ்சல புத்தி- முன் உற்ற நெஞ்சு/மற்று ஒன்றில் கண் போகாமல் திசை திருப்பாமல் இருக்க ஸ்வாமி இடம் பிரார்த்திக்கிறார் /சக்தி உண்டு உமக்கு -இருவருக்கும் லாபம்/ சேதன லாபம் உமக்கு ஆச்சர்ய லாபம் எனக்கு /நெஞ்சு என்று பொன் வண்டு-உன் அடி போதில்-  ஒண் சீராம் தெளிந்த தேன் -கசண்டு- ச்வாதந்த்ரம் அவன் இடம்-.குடித்து அமர்ந்திட வேண்டி-பேராமல்-நின் பால் போந்தது –வந்து கிட்டியது/ கேட்டதை கொடுத்து விடவேண்டும்/இது அன்றி ஒன்றும் மாந்த கில்லாது-இனி மற்று ஓன்று காட்டி மயக்காதே -மாயம் செய்யேல் என்னை திரு ஆணை -20 தரும் இனி இனி என்று  கதறினார்/இனி நான் போகல் ஒட்டேன்  ஒன்றும் மாயம் செய்யாதே //மற்று- நா கூசி- அழகிய மணவாளன் திருவடி பொன் அரங்கம் எனில் மயலே பெருகும்- காண்டகு தோள் அண்ணல் கழல்/ நீர்மையினால் அருள் செய்தான் தன் சரண் தந்திலன் தான் அது தந்து -சொல்லி விட்டேன்-அதனால் காட்டி மயக்காதீர் என்கிறார் /போக்கியம் இதில் 101 பாவனத்வம்/ அண்ணிக்கும் அமுதூரும் -போக்யத்வம் சொல்லி மேவினேன் அவன் பொன் அடி பாவனத்வம்/ஆவலிப்பு-ரஷிக்கும் சொல்லி இச் சுவை-போக்யத்வம்-தொண்டர் அடி பொடி-பிரதம பர்வம்-உபாயமாக அவனை பற்றனும் ஆச்சார்யர் அனுபவம் கொடுத்து உபாயம் புரிய வைக்கிறார்

மா முனிகள் ஸ்வாமி வண்டு/ பெருமாள் வண்டு ஆழ்வார் என்பர்/வண்டு-சஞ்சலம் /ரெங்க ராஜ.சரணாம் புஜ பராங்குச பதாம் புஜ .. ராஜ ஹம்சம்   ஸ்ரீ பட்டார் பிரான் பரகால -முகாப்ய மித்திரன் – ஆழ்வார் ஆண்டாள் பெரியாழ்வார் கலியன்  -பற்றுகிறார்  -கூரேசர் இவரை பற்றுகிறார் / வண்டு மறு பெயர்-மது விரதம் பிரமரம் சஞ்சரிகம் -சுகர் 7 நாள் சொன்னார்  பர்ஷித்க்கு -ஞான பசி- வயிற்று பசிக்கு கோபசு  பால் கறக்கும் நேரம் கூட நிற்க மாட்டார் /பொன் வண்டு-ஸ்வாமி திருவடி  தேன் குடிக்க போனதால் பொன்-சீரார் செந்நெல்- திரு குடந்தை/ ஏரார் இடை- கண்ணன் இடை கட்டி கொண்டு கடையாதே என்பானாம் /சீரார் வளை ஒலிப்ப–சங்கு முன்கை தங்கு- பிரியாமல் இருந்ததால் வளையல்கள் தங்கித்தாம்   காமரு சீர் அவுணன்-வாமணன் கண்டதால்/

திருப்தி இல்லை/ போக சக்தி -மாறுவதற்கு -விதி -வேற கதி இல்லை என்று /விதி பிராப்தம் ராக பிராப்தம்/ சாஸ்திரம் விதித்தால் தொடங்கி போக்யத்தால் அங்கே இருக்க வேண்டும்/

பொன் கற்பகம் எம் ராமானுசன்-மனசு வண்டு-கருப்பு தான்- இதை பொன் ஆக்கினார்/ ஓங்கி உலகு அளந்த உத்தமன்-ஓங்கி பெரும் செந்நெல் போல -அவன் திருவடி கீழ் இருந்த செந்நெலும் ஓங்கி இருந்தது /அங்கும் இங்கும்-கண்டு அனுபவிக்க வேண்டும்/நிர்ஹெதுக கிருபை /போக்யத்தில்  மேல் விழுந்த வண்டு –என் நெஞ்சு-முன்புற்ற நெஞ்சு -என்பதால் மாமா காரம்- மமகாரம் விட்டவரின் மாமா காரம்/ ஸ்வாமி இடம் போனதால் / பட்டர் வைராக்கியம் உபதேசித்து திரு மேனி அலங்காரம்- கோவில் ஆழ்வார் என்ற நினைவால் //அழகிய வண்டு/ஒண் சீராம்-உயர்ந்த குணம்-/அம்பன்ன  கண்ணாள் யசோதை தன் சிங்கம்-காரியம் குணம் காரணத்தில் இருக்க வேண்டும்-பூவிலே சைத்யம்-குளிர்ந்து  – மார்த்வம்-மிருதுவாகி  நறுமணம்- என்கிற -தேன்-ஓடி வர -தெளி- நிர்மலமான -ஊடி உசா துணை-நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தாரே -கடல் கொண்ட கண் போல தசரதன் கண்-நெஞ்சினாரும்-மரியாதை -மகர நெடும் குழை காதர் இடம் சேர்ந்ததால்/

மடகிளியை வணங்கினாள் போல/ நீர் இருக்க -என் நெஞ்சம் -தூது விட்ட பிழை யார் இடம் -என்னையும் மறந்து தன்னையும் மறந்தது/வருதல் இன்றியே –வார் இருக்கும் முலை மடந்தை இருக்கும் இடம் வைத்தானே /ஒழிந்தார்-வசவு அங்கு என் நெஞ்சு கொண்டாடுகிறார் இங்கு /நித்ய வாசம் /அமர்ந்து இருக்க வேண்டி- திரியாமல்/அன்பால் அதுவே ஈந்திட -பாட பேதம் -சினேகா பூர்வமாக கொடுத்து அருள வேணும் /மாந்தல்-உண்டல் /ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -உபன்யாசம் கேட்டு ஸ்ரீ கிருஷ்ணன் குணங்கள் கேட்டு மனம் படிந்தது போல-அமுதனார் செப்ப மனம் -ராஷச விவாகம் அங்கு-வரிக்க துடித்தாள் போல இதுவும் தேனை குடிக்க போனது//ஷாட் பதம்-அருகால சிருவண்டே–வேகமாக போகும் வீசும் சிறகால் பறக்கும்/தலையால் தரிக்க -முழுவதும் தாங்க- ஆச்சார்யர் பத்னி புத்திரன் திருவடிகள் ஆரும்//மந்திர ரத்னம்-ஆரு பதம்-/

உதடு துவயம் சொல்லி துடித்து கொண்டே இருக்கும் /மனசும் ஷட் பதம் ஆனதாம் அதை நினைந்து கொண்டே இருப்பதால்/கயல் விழியை பார்த்து கொண்டே அவன் மீன் அவதாரம் எடுத்தானாம்தேசிகன்-ஷட் பதம் அனுசந்தித்தி கொண்டு போருகிற மனசு -சர்வ விலஷனமான வண்டு/இவர் எப்பொழுதும் ஷட் பதம் கொண்டாடுவதால்- ஸ்வாமி துவயம் கொண்டாடி கொண்டு இருப்பதால்-உனதடி போதில் ஒண் சீராம்-தெளி தேன் -பாபம் போக்கயதீந்த்ரர் திருவடி பற்றினால்- அவர் பண்ணினதால் -திரு அரங்க செல்வனாரின் திரு பொலிந்த சேவடி -ஸ்ரீ ரெங்க நாச்சியார் முன் நிலையில் -பண்ணி அருளிய தேவரீரின் திரு வடிகளில்-உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -அலவன்-நள்ளி-சிக்கி கொண்ட -வூடும் நறையூர்-இங்கு அமர்ந்து இட வேண்டி-நிழலும் அடி தாரும் போல இருக்க கோரி-

அடி கீழ் அமர்ந்து புகுந்து -தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே என்று கங்குலும் பகலும் திருவாய் மொழி அருளுகிறார் /தேவரீர் திருவடிகளை நினைப்பது கடமை/விதித்தால் இல்லை அனுபவித்து கொண்டு இச்சித்து இருந்தது /அதுவே ஈந்திட வேண்டும்//

சரணாரவிந்த மகரந்தம் அபேஷித்து–வேறு ஒன்றும் -சர்வ கந்த சர்வ ரச -தேனே மலரும் திரு பாதம் பொருந்துமாறு /அத்தை கொடுக்கவா-என்னில்-இது அன்றி -ஈதே இன்னும் வேண்டிவது ஈதே -அமிர்தாசகிக்கு புல்லை இடுமினா போல /மிடற்றுக்கு கீழ் இலியாது நெஞ்சு புஜிக்காது/இனி மற்று ஓன்று காட்டி மயக்காதே- மோகிக்காதீர்-பகவத் விஷயம்- மற்று ஒன்றினை காணா-திவ்ய தேசங்கள் எல்லாம் கழித்தார்/கரப்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ/-இங்கு கண்ணனை கழிக்கிறார் உன் அடியார் எல்லாரோடும் -ஆழ்வாரை கூட கழித்தார் -ஒக்க எண்ணி இருத்தீர்  அடியேனை- மலையாள ஊட்டு போல அவர் -கதம் அந்ய கச்சதி–சிற்றின்பம் பல நீ காட்டி படுப்பாயோ-ஆழ்வார்/நெறி காட்டி நீக்குதியோ-சரம பார்வை நிஷ்ட்டை -சிறந்த நெறி /ஓம் நமோ நாராயண  அனந்யார்க்க சேஷத்வம் அநந்ய சரண்யன் அநந்ய போகன் -ஸ்வாமி இடம் அமுதனார் /உனது அடி போதில் அமர்ந்திட வேண்டி –   சேஷத்வம் நின் பால் போந்து- அனந்யார்க்க சரண்யம் ஆக பற்றினார் இத்தால் /ஏக மேவ மற்று ஓன்று இல்லை போல -/  ஈந்திட வேண்டும் – இது அன்றி ஒன்றும் மாந்தகில்லாது -அனந்யார்க்க போக்யத்வம் -பிராப்த்யம் சொல்ல வந்த திரு மந்த்ரம் அர்த்தத்தை இதில் அருளினார்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: