ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -93.கட்ட பொருளை/94.தவம் தரும் /95.உள் நின்று உயிர்களுக்கு – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

93–கட்ட பொருளை

கட்ட பொருளை மறை பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெருவினையை
கிட்டி கிழங்கோடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டி களைந்த ராமானுசன் என்னும் மெய்த்தவனே

காரணம் கட்டுரையே -கேட்டார்..ஸ்வாமி இதுக்கு ஒன்றும் அருளி செய்யாமையாலே –நிர்ஹெதுகம் என்று தெளிந்து ,ஏன் பிரபல கர்மங்களை தம் உடைய கிருபையாலே
 அறுத்து அருளின எம்பெருமானார் ,ஒருவரும் அபெஷியாது இருக்க 
தாமே வந்து குத்ருஷ்ட்டி மதங்களை நிராகரித்தவர் அன்றோ, ? அவர் செய்யும் அது எல்லாம் நிர்ஹெதுகம் ஆக வன்றோ இருப்பது என்கிறார்.. பர துக்கம் சகியாமலே ஸ்வாமி எல்லாம் செய்து அருளினீர்..ஸ்வாமி ச்வாபமே இது ../மெய் தவம்-தபஸ்- சரணாகதி தான்/ கர்ம ஞான பக்தி யோகம் போன்றவை போய் தவம் ஆத்மா சொரூபம் -சேஷத்வம் பாரதந்த்ரம் கூட இயைந்து இருப்பதால் மெய் தவம்//கிட்டி-நான் இடம் தேடி வந்து -என் பெய் வினை முடிக்க –இண்டை தூறு போல /விதி வாய்க்கின்றது காப்பார் யார் -அருள்-அழகிய ஒள் வாள்- மோஷம் ஒன்றே கொடுப்பதால்–பூரிய கூர்மையான வாழ்–பகவான் அருள் பந்தம் மோஷம் இரண்டையும் /ஒள் வாள்-கூர்மை- நான் அறியாத படி/ அவனோ முதுகு தண்டை கடைந்து  சூஷ்ம சரீரம் கொடுத்த்கு சூஷ்ம நாடி மூலம் அர்ச்சிராதி கூட்டி கொண்டு போவான் -கூர்மை அற்று ஸ்வாமி அருள் கூட்டி போவதால் புஷ்பம் அலர்ந்ததை பறித்து கொண்டு போவது போல /என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழவே-ஆழ்வார் போல..–மெய்த்தவனே பிரான் அல்லவா – இண்டை தூறு ஆண்ட ஒண்ணாத படி இருக்கிற என் உடைய மகா பாபங்களை கண்டு பிர் காலியாதே வந்து கிட்டி ,மீளவும் கிளருகைக்கு உறுப்பாய் இருக்கிற வாசனை அகிரா கிழங்கோடு கூட தம் உடைய கிருபை ஆகிற தெளிய கடைந்த வாளை,அங்கீ கார அவசரம் வரும் தனையும் ,புறம் தோற்றாத படி மறைத்து கொண்டு இருக்கிற தம் உடைய சங்கல்பம் ஆகிற உரையை கழற்றி சேதித்து பொகட்டார்  /கைம்மா துன்பம் கடிந்த பிரானே அடியேன் வேண்டுவது ஈதே -ஆழ்வார் அணுகு வந்தாயே எனக்கு வரவில்லையே அழுகிறார் இங்கு தனக்கும் உதவினார்/ கிட்டி களைந்தார் -என் வினையும் ,கயவர் சொல்லையும்- பூர்வ பஷ வாக்யங்களை தாமே கிட்டு களைந்தாரே/கிருபை க்ருபாணம் -வாள்  ஆயிற்று /உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி- நானும் உலகில் இருக்கிறேனே-எனக்கு பண்ண வில்லையே .. /

பெரு வினை/ பெய் வினை இரண்டும் பாடம்..-இண்டைதூறு – விஷ செடி போல என் பெரு வினை- நானே முயன்று சம்பாதித்தவை/வினைகள் என்று பன்மை யில் சொல்லாமல் வினை என்றது-/ஜாதி ஒருமை/நானே தேடிய பெரு வினை எல்லாம்  /உருவி- எடுத்து என்று சொல்ல வில்லை -உறை என்னா ?சங்கல்பம்–நேற்றே வெட்டி இருக்கலாமே– காத்து இருப்பது காலம் கனிய -அங்கீகார வரை ..அது வரை அனுக்ரகிக்க வில்லை என்று தான் வெளியில் தோற்றும்-//எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டு-கதை-அடித்து -நான் தான் அடித்தேன்-ஆழ்வார் -சாத்விகர் தண்டு / அருள் என்னும் உருவி எறிந்தேன்-கலியன்இருவரும் எறியணும் வீசணும் -ஸ்வாமி இங்கு அவரே வெட்டி களைந்தார் /சமித்து பாதி சாவித்திரி பாதி போல 504 அது 504 இது /நாம் இரண்டு அடி அவன் இரண்டு அடி- ராமனும் போய் விபீஷணனும் வந்து அங்கு//மெய் தவம்-பிர பன்ன ஜன கூடஸ்தர் எம்பெருமானார்//வேதார்த்த -சந்க்ரகம் பர பிரம்மா அக்ஞானம்  பிரம கதம் சம்சரதி-சூர்யனும் இருளும் சேராது தேஜஸ் /இவர்களை பற்றி கோபம் படாமல் சோகம் தான் படுவார்  / அயர்ந்தார் பவ்தன் அறியார் சமணர் சிறியார் சிவ பட்டார் /கட்ட பொருள்-இழுத்து பிடித்த்கு வலு  கட்டாயமாக உரைத்த பொருள்-கேட்டாலும் கஷ்டம் கொடுக்கும் படியான பொருள்/

குணம் விபூதி ஆத்மா பரத்வம் எல்லாம் திருடுவார்கள் இவர்கள் /கயவர்- மயக்குபவர்கள் பித்தளையை ஹாடகம் என்பர் பிதலாட்டகாரர்கள்/பெட்டை- ப்ராமக வாக்யங்கள் போக்கும் உபகாரகன் ஸ்வாமி/-நிர்ஹெதுகமாக செய்து அருளினார் /பெட்டு- ப்ராமக வாக்கியம் /மெய்த்தவன்-ஸ்வரூப அனுரூபம் ஆகையாலே சரணாகதி ரூப தபசி வுடையவன் என்கை–/கவிழ்ந்து தலை இட்டு இருந்தாராம்பதில் சொல்ல  முடியாமல்  ஸ்வாமி /என் பெரு வினை-இவ்வளவு நாளும் விமுகனாய் போன -சாகை -உப சாகமாய் விஷ விருஷம்- தப்பான நடத்தையால் வளர்ந்த விஷ மரம்- கிட்டே போக முடியாமல் இருந்தது/கிருஷ்ணன் பாரத யுத்தத்தின் நடிவில் புகுந்தது போல /பர்யாப்தம் அபரியாப்தம் சேனை அளவு பெரிதாய் இருந்தாலும்போதாது ..என்ற அளவில் சொன்னானாம்  -துக்கம்- பீஷ்மர் சங்கு ஒலி  கொண்டு சோகம் போக்கினார் பீஷ்மர்-ஐவரை கொல்ல மாட்டேன் என்றவர் – சொல்லி பீமன் சொன்னது/இருள் நாள் பிறந்த அம்மான் -மண்ணின் பூ பாரம் நீக்க -தானே புகுந்தால் போல-துஷ்கர்ம அவித்யா மரம் கிட்டி வெட்டி களைந்தார்/ வினையேனை கிட்டி ..ஆளை கொண்டு காரியம் பண்ணாமல் தானே வந்து கிட்டி-பிரார்திக்காமல் -துணிவுடன் கிட்டி -/கிழங்கோடு -துர் வாசனை -இது தானே துஷ்கர்மங்களுக்கு அடி-/தன் அருள்–இவரே சம்பாதித்த அருள்- ஈஸ்வரன் அருள்- நடக்குமா நடக்காதா -அச்சுதன் அருளில் சங்கை போல அன்றிக்கே -தன் அருள்-அவன் நினைவு எப்பொழுதும் உண்டு/ நம் நினைவு மாறினால் காரிய கரம்/குடை-மழை-தான் ஏற நாள் பார்த்து இருந்து -பிள்ளை பேகனியாமல்  பிரதி ஒவ்ஷதம் இடுமா போல

சேஷத்வம் விட  பாரதந்த்ரம் ஏற்றம்/

கட்ட பொருள் –சுபாஸ்ர்யம் விக்ரகம் இல்லை என்றும் கல்யாண குணங்கள் இல்லை என்றும் ,-கயவர்-மகா வாக்யங்களை /மயக்கு பசப்பு வாக்யங்களை நிரசித்து /வேதாந்தங்களின் சிடுக்கை களைந்து /யாரும் பிரார்த்திக்காமல் தானே செய்து அருளினார்

தவம் தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவி
பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும்
திவம் தரும் தீதில் ராமானுசன் தன்னை சார்ந்தவர்கட்க்கு
உவந்து அருந்தேன்  அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே

பெய்வினை போன பின்பு-அநிஷ்டம் நீங்கி -இதில் இஷ்டம் பெற்றமை பேசுகிறார்/உள் மகிழ்ந்து -ப்ரீத்தி உடன்-மற்று ஒன்றை- தவம்-சரணாகதி/ செல்வம் தகவும்-ஏற்ற கைங்கர்யம் தரும்  /சலியாத பிறவி-மீண்டும் மீண்டும்-பாவம்-சம்சார ஆரணவம் தரும்-வினை எச்சம்- சலியாத-சரியாத இரண்டும் பாட பேதம்-தீ வினை பாற்றி தரும்- பொடி பொடி ஆக்கி தருகிறார்/பரம்தாமம் என்னும் திவம்-வான்-தரும்/சொர்க்கம் இல்லை என்று விசேஷிகிறார்/ஸ்வாமி சார்ந்தவர்க்கு இவை எல்லாம் தருகிறார்/ ஆனால் மனசில் ப்ரீதி உடன் அவர் உடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி புஜியேன்//ஸ்வாமி தம்மை ஆச்ரயிதாருக்கு –உபாயமாகவும் வுபேயமாகவும் பற்றிய  அனைவருக்கும் – பிரபத்தி நிஷ்ட்டை  தொடங்கி பரம பத பர்யந்தம் கொடுத்து அருளுவாரே ஆகிலும் ,நான் அவர் குணங்களை ஒழிய ஒன்றையும் விரும்பி புஜியேன் என்கிறார் /

  மகிழ்ந்து உவந்து -ப்ரீதி ஆதரவு இரண்டையும் அருளுகிறார் /ஆச்ரயித்தவர்களை அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்திகளில் ஒன்றின் உடைய  அலாபத்தாலே துக்க பட விட்டு இருக்கும் குற்றம் இல்லாத -தீதில் ராமானுசன்-ஒரு சேர செய்பவர் –ஓன்று கூட கொடுக்காத தீது இல்லாதவர்-/ராமன்-பரதன் இடம் பிரார்த்திக்க -ராஜ்ஜியம் இறக்கி வைத்தான் திரும்பி வர வில்லை ஒன்றை தானே கொடுத்தான் அநிஷ்டம் தொலைத்தான் இஷ்டம் கொடுக்க வில்லை -அதமம்/மத்யமம் இன்றி உத்தமர் ஸ்வாமி /பூர்வ வாக்கியம் -தவம் தரும்/ உத்தர வாக்கியம்-கைங்கர்யம்-தகவும் செல்வம்/ நம-தீ வினை பாற்றி/ ஆய-பரந்தாமம் -நான்கும் கிராமமாக கொடுக்கும்/திரு மந்த்ரம் வாக்கியம்  உள்ள நம ஆய /துவயம் உத்தர வாக்கியம் பிரித்து கொள்ள கூடாது -சரீரம் போக்கி தருதல் அதில் உள்ள நம -இல்லை கைங்கர்யத்தில் சுய போக்ய புத்தி தவறுகை பிரபல விரோதி தவிர்க்கி தான் /தவம்-காய கிலேசம் வருத்தி பண்ணுவதை இன்றி பிர பத்தி /கைங்கர்ய பண்ண ருசி வேண்டுகையாலே பக்தி ஆகிற சம்பத்தை பிராப்ய அனுரூபமாக கொடுத்து அருளுகிறார் -கர்மமும் கைங்கர்யத்தில் புகும்-தனமாய தானே கை கூடும்-தகவு-அமுதனார் போன்ற சரம பார்வை நிஷ்ட்டை- செல்வம் மட்டும் போதாது தகவும் செல்வம் தரும் என்று விசேஷித்து சொல்கிறார்/உபாசனை -ஒரே குணம்  நினைத்து இருந்தாலும் -ஏதோ உபாசன பலம்- -குண உப சம்கார பாதம்-அவனுக்கு எல்லா குணங்களும் இருப்பதாலும்,நம்மால் ஒரே குணத்தை கூட அனுபவித்து முடிக்க முடியாதாலும், அங்கு போன பின்பு அனைத்து குணங்களையும் காட்டி அருளுவான் /இவர் பிரபத்தி ஸ்வாமி திருவடிகளில் பண்ணியதால் தகவு -இங்கு //பின்பு சார்ந்த தீ வினை/சரியாத துஷ் கர்மங்கள்- இவை பிறவி கொடுக்கும்-தீ வினை-பிறவி பவம் தரும் சரியா தீ வினை/ சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து -திரு வாய் மொழி-1-5-10-இருமை-பெருமை/பாப புண்ய இரண்டும் /ஒரு சர்வ சக்தி சரிக்கில் ஒழிய சரியாததாய்/பண்டை வல் வினை பாற்றி அருளினான்-/பொடி பொடியாக்கி விட்டார் -பரந்தாமா அஷர பரம வ்யோமாதி சப்திதே-என்று ஸ்ரீ வைகுண்டத்தை கொடுப்பார் – திவத்திலும் ஆநிரை மேய்ப்ப்பு  உவத்தி /யான் அவன் சீர் அன்றி-அவராக போட்டு விட்டால் மறுக்க மாட்டேன் மலர் இட்டு யாம் முடியோம்- அவனாக சூடி விட்டால்  கொள்வோம் போல/சலியா பிறவி-நிலை பெருகியே -நிலை பேர்க்க அரியதாய் சம்சார  ஹேதுவான துஷ் கர்மம் என்ற படி //கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே விண்டே-ஆழ்வார் இங்கு பாற்றி-பொடி பொடியாக விண்டவை சேர வாய்ப்பு உண்டு பொடி போடிஆனால் சேர்க்க முடியாது /

உபநிஷத்-துவயத்தின்  பூர்வ வாக்கியம் சொல்லி–நடுவில்- இதம் பூர்ணம்—கல்யாண  குணங்களை அனுபவித்து —பின்பு உத்தர வாக்கியம் -கைங்கர்யம் செய்ய /நம் பூர்வர்கள் தான் இரண்டையும் சேர்த்து அருளினார்/முன்னோர் மொழிந்த மொழி முக்கியம் /தீதில்-சாஸ்திர மரியாதை  இன்றி- குண ஹானி தோஷம் இரண்டும் உண்டு நமக்கு-திரு மாலை-25 -34 வரை குணம் இல்லாதவற்றை ஐந்து பாசுரங்களாலும் அடுத்து ஐந்து பாசுரங்களால் தோஷம்  இருப்பதை சொல்லி கொண்டார்/இரண்டும் இருந்தாலும் கை கொண்டாரே-குற்றம் இல்லாதவர் -இந்த தீது இல்லாதவர் தீதிலர்-சிஷ்யனை பரிஷை பண்ணி பார்த்து ஞானம் கொடுக்க வேண்டும்-ஆச்சர்ய லஷனம் உண்டே-/-இது இரண்டும் குலைய வேண்டி இருக்கில்-குணா ஹானியும் தோஷமும்- இரண்டுக்கும் இரண்டு உண்டாயுத்தாம் -அங்கீகரிக்க அவற்றையே பச்சையாக கொண்டு-புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும் -/ இவற்றை பார்த்தால் அவர்களுக்கும் உண்டாகும்-/இரண்டும் குலைந்தது என்று இருக்கில் இரண்டும் உண்டாய்த்தம்//நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று இருக்கிறது என்ற எண்ணம் வேண்டும்.

தோஷ குண ஹானி இருப்பதை பற்றி கவலை பட வேண்டாம் இருப்பதை ஒத்து கொண்டால் போதும்- அவற்றை கண்டு விலக்க மாட்டான் என்ற உறுதி வேண்டும்//இந்த குற்றம் இல்லாத தீதில்- குற்றம் இருந்து கை விட்டானால் ,குணம் பார்த்து கொண்டான் ஆகில் அவருக்கு பெருமை சேராதே /சார்ந்தவர்களுக்கு -உபாயம் உபேயம் என்று நம்பி இருப்பவர்களுக்கு //கைங்கர்யத்துக்கு பக்தி -போஜனத்துக்கு பசி போல ருசி வேண்டுமே – தக்க -செல்வம் /பர் சப்தம் பொலிக /ரிசி ஜனகன்-வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம்  /திருக்குறுங்குடி-சிவன் கோவில் வெளியில்-வைக்க- பரிவாரங்கள் உடன் வெளியில் போக செய்ய–கலி பாஷாண்டிகள்/பற்ற துடிப்பு தெய்வ நாயகன் வானமாமலை //இதில் கிரமேன- ஆழ்வாருக்கு பக்தி நூல் வரம்பு இல்லை/ இங்கு நெறியாக அருளி இருக்கிறார் /செல்வம்-கைங்கர்ய செல்வம் என்றும் கொள்ளலாம் /கஜேந்திரன் ஸ்ரீமான் புஷ்பம் சமர்ப்பிக்க தன்னை தான் ரஷிக்காமல் நாராயணா மணி வண்ணா என்று கூப்பிட்டதால் //செல்வம் தரும் தகவும் தரும்-பிராய  துவரை- துடிப்பும் தரும்/தகவு-தர்மம் ஆகிய கைங்கர்யம்–சரம பார்வை கைங்கர்யமே தர்மம்-ஆச்சார்யர் உகக்கும் அளவு கைங்கர்யம்-பெருமாளுக்கு என்பர்/பல யோனிகளில் பிறக்கும் ஜன்ம- கர்ம -பொடியாக ஆக்கி

கைவல்யம் இல்லை- பரம்தாமம்- ஸ்ரீ வைகுண்டம்ஆகிலும்–நின் புகழில் வைக்கும் தன் சிந்தை மற்று இனிதோ  நீ அவர்க்கு தந்து  அருளும் வான் -ஆழ்வார் 

திவம் -வானம்-இடம் காட்டுகிறார்  சுழி பட்டோடும் சுடர் சோதி  /நலம் அந்தம் இல்லா நாடு -என்று எல்லாம் -சொல்ல வில்லை -தாரை த்துவம் அப்ரமேயச -பவான் -என்று சொல்ல வில்லை -வாலி போன்ற வீரனை கை பிடித்த /ஆச்சார்யர் திருவடி பற்றிய இவருக்கும்  ஸ்ரீ வைகுண்டமும் அது போல ../ஸ்ரீ மன் நாராயண- சேமம் குருகையோ — நாரணமோ –ஆழ்வார்/ விஷ்ணு சேஷி சுப குண ஆலயம் தான் ஆழ்வார்- ஸ்ரீ சடாரி–மாறன் அடி பணிந்து உய்ந்தவன்/ஸ்ரீமன்- கைங்கர்ய சம்பத்து படைத்த ஆழ்வார் திருவடிகள்/ தவம் தரும் என்பதே ஸ்வாமி திருவடிகளில் தான் கைங்கர்யமும் அவர் திருவடிகளில் என்கிறார்/சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம் கூட ஐஸ்வர்யம் போல கால் கடை கொள்வார் இவர்/குணங்களின் உயர்தியால் /கேசவன் திருவடியில் பக்தி -பக்தர் சேர்க்கை இரண்டில்- கதா சித் -இது தான் வேண்டும் -இது இல்லா விடில் அது என்பர் ஸ்வாமி /மகிழ்ந்து  -வுவந்து =விருப்பும் ஆதரவும் //வாக்கு- குண கீர்த்தனை செய்கை கைங்கர்யம் மனசு ஸ்வாமி நினைந்தே இருக்க மா முனிகளும்  பிராதித்தாரே –

தீதில்- அனகன்-சத்ருக்னன்- அமலன் விமலன் நிமலன் நின்மலன் போல -மூவர் அனுபவம்/

95-உண் நின்று உயிர்களுக்கு

உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம்படி பல்உயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பன் எம் ராமானுசன்
மண்ணின் தலத்து  உதித்து உய் மறை நாளும் வளர்த்தனனே

எம்பெருமானாரின் ஞான சக்திகளை அனுசந்தித்தவாறே ,இந்த லோகத்தில் உள்ளார் படி அன்றிக்கே ,வ்யாவ்ருத்தமாய் இருக்கையாலே அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவர் பரார்தமாக சம்சாரத்தில் அவதரித்தார்  என்று  நினைத்து அருளி செய்கிறார் இதில்/ வேதம் ஈன்ற தாய் பகவான்-மறை நாலும் வளர்த்த இத தாய் ஸ்வாமி /இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக வன்றோ அவதரித்தாள் போல /அவனை விட ரஷகத்தில் பூர்த்தி ஸ்வாமி என்கிறார் /மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து -அவனும்–என் நன்றி செய்தேன் ஏன் நெஞ்சில் திகழ்வதுவே-ஆழ்வார்/ஆழ்வாரையும் ஆச்சார்யர்களையும் தன்னை விட உயர்ந்தவர் என்று அருளி செய்ய வைத்து உகக்கிறான் /வடுக நம்பி/மதுரகவி ஆழ்வார்/சத்ருக்னன்/அமுதனார் இவர்களுக்கும் – அந்தர்யாமித்வமும் வ்யாபகத்வமும் எம்பெருமான் தானே //அனைத்தும் அவர் தான் என்பதால் -நின் திரு எட்டு எழுத்தும் கற்றதும் உற்றது உன் அடியார்க்கு அடிமை-இதையும்  கேட்டு உகக்கிறான் /

பகவத் பிரபாவம்-கண் நுண் சிறு தாம்பில்–என் அப்பன்- வரை சொல்லி- நவநீத விருத்தாந்தம் இழுக்க  -அப்பனில்- என்று இழுத்தார் /அரங்கனை அனுபவித்த திரு பாண் ஆழ்வாரையும் இழுத்தாரே திரு வேங்கடத்தான்/அமுதனாரும்-உள் நின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து-ஆற்ற  நல்ல வகை காட்டும் அம்மான்–அவர்களுக்கு உய்ய பண்ணும் பரனும்– அவன் கூட பரிவு இலனாம் படி/ நன்மையால் மிக்க நான் மறை ஆளர்கள் -ஆழ்வான் பிரகலாதன்  போன்றோர் -புன்மையாக கருதுவர்-ஆதலால்-இதை காரணமாக கொண்டு ஆழ்வார் கை கொண்டார்/ அது போல -பல் உயிர் க்கு ஸ்வாமி செய்பவர்/-வீடு அளிக்க -போவான் போகின்றாரை- போவதர்காகா போகிறவர்/வீடு அளிக்க உதித்து மறை நாலும் வளர்த்தார் –இதனாலே மோட்ஷம் கொடுத்தார் 

நித்யர்-பரார்தமாக அவதரித்தார்-தங்கள் சாபம் தீர்க்க வந்த ஜெய விஜயன் போல அன்றி //ய ஆத்மானம் அந்தரோ யமயதி–என்கிற படி-நாம ரூபம் கொடுக்க-புஷ்பத்துக்குள்ளும்  மணம் பெற  /சதா நிர்வாஹா அர்த்தமாக உள்ளே நின்று இவ் ஆத்மாக்கள் யாதொரு வழியாலே உஜ்ஜீவிக்கும் -அதுக்கு ஈடான க்ருஷிகளை பண்ணி அவர்களுக்கு உஜ்ஜீவனத்தை பண்ணா நின்று உள்ள சுவாதீன தெரிவித்த சேதன அசேதன ஸ்வரூப ரூபா ஸ்திதி பிரவ்ருத்தி பேதனனான சர்வச்மாத்பரனும்–உம்மை தொகை-வாத்சல்யம் காட்டும் – வேறு பட்டவன் உயர்ந்தவன்–இங்கு- ,ஆத்மாக்கள் அளவில் -இவரோபாதி ச்நேஹம் உடையவன் அல்லன் என்னும் படியாக -சகல ஆத்மாக்களுக்கும் -ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -தாடி பஞ்சகம்-என்கிற படியே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை கொடுத்து அருளுவதாக நம் உடைய நாதரான எம்பெருமானார் -நாகச்யப்ருஷ்ட்டே -என்கிற படி விண்ணின் தலையான ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் பூ  தலத்தில் தாக்கத  தோஷ ஸ்பர்சம் அற அவதரித்து சர்வோ ஜீவன ச்சாச்த்ரமான ருகாதி சதுர வேதத்தையும் அசந்குதமாக நடத்தி அருளினார்   /படி கட்டு கட்டி வைத்து இருக்கிறான்- சிறு சிறிதே -தேக விலஷனம்-ச்வதந்த்ரன் இல்லை அவனுக்கே சேஷ பூதன் அவனே ரஷகன் சரணா கதி  சாத்விக த்யாகம் பிரயோஜனம் கைங்கர்யமே அதுவும் அவன் ஆனந்தத்துக்கு -போன்ற படி கட்டுகள் /நடுவே வந்து உய்ய கொண்ட நாதன்/ஞான கை தா /அறியா காலத்து ..இசைவித்து -இருவித்து கொண்டான்/காதலை ஆழ்வார் இடம் நைசயம் கலியன் இடம் வளர்த்தான் //

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்-அங்கும் உம்மை தொகை/தான் அது தந்து அங்கு../எம் ராமானுசன் -பண்ணிய உபகாரம் தோன்ற  /நம் சடகோபன்-விஞ்சிய ஆதரவு போல /தனி கடலே தனி சுடரே தனி உடலே- விண்ணின் தலை-ஸ்ரீ வைகுண்டம்/உதித்து-ஆவிர்பூதம் /பிறந்தவாறும் /ஒருத்தி மகனாய் பிறந்த /கண்ணனுக்கு இது கேட்க்க தான் ஆசை /மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து -இவரே கண்ணனை பிறந்து என்றார்/ இங்கு உதித்து-தாக்கத தோஷம் தட்டாது என்று காட்ட -உற்றனவே செய்து -தக்கனனே செய்வது பரிவு-சிநேகம் பஷ பாதம் ஆகவும் -ஸ்வாமி போல ஆஸ்ரித வியாமோகம்  அவனுக்கும் இல்லை /புல் உயிர் க்கு-பாட பேதம்- – தாழ்ந்த உயிர்களுக்கும்  உஜ்ஜீவிக்கும் படி /

அந்தர் யாமி-சத்தை  நிர்வாககன்சாஸ்தா -நிர்வாககன் -கர்தாராம்-கர்துர்துவ புத்தி த்யாகம்-வண்  புகழ் நாரணன் -நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்–உடல் மிசை  உயிர் என கரந்து-மறைந்து –  எங்கும் பரந்துளன்–ஆத்மா ச்வாபத்தால் மட்டுமே இவனோ  சொரூபத்தாலே வ்யாபிகிரன் //பரந்த தண்  பரவையுள் நீர் தொறும்  பரந்துளன் //மறைய வேண்டியது-அசித் கூட இருந்த அஞ்ஞான அந்தகாரத்தில்- அறியா காலத்தில் அடிமை கண் அன்பு செய்விக்க-ஞான ஆகாரத்தாலே நேராக வந்தால் தள்ளுவான்-இரா மேடம் ஊட்டுவாரை போல உள்ளே இருந்து சத்தை நோக்கி கொண்டு /அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே–நாட்டினான் தெய்வம் எங்கும்–பிரவ்ருத்தி நிவ்ருதிகளை பண்ணி கொண்டு/தகுந்தவழியில்–சாத்மிக சத்மிக மாக கொடுத்து-விரகாலே ஏத்தி-தகுந்த கிருஷிகளை  பண்ணி//பரன்-சர்வேஸ்வரன்-ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்–எளிவரும் இணைவனாம் -இருவரும்-நடிவில் இருந்த எளிமை-என்னும் -பரத்வம் என்னலாம் படி அவன் ஆகும்-அவன் இவன் -அர்ச்சை  சௌலப்யம் –பரனும் பரிவு இல்லாதவன் ஆகும் படி ஸ்வாமிக்கு பரிவு–ந்யந்த்ருத்வம்- உள் நின்று- உய்விக்காமல் ருசி விளைவிக்கிறான்-விளை யாட்டில் இன்பம் வேண்டுமே –பரவு-ச்நேஹம்-பஷ பாதம் /துர் லபம் உபாசதே-என்றும்-சுதந்தரனான அவனை பற்றின அன்றே சந்தேகம்-ஆனை கொன்று ஆனை காத்தான்-குகனை நண்பன் என்பான் பரதன் கூப்பிட்டால்  வர மாட்டான் /அடையா அரியவன்- ஸ்வாமி சுலபன்/நிச்சயம் மோட்ஷம் /

அனுக்ரக சீலர் /தெளி விசும்பு திரு நாடு -பரம புருஷார்த்த லஷண கைங்கர்யம்/இச்சா ரூபமாக பிறந்தார்/அனந்தம் பிரதம ரூபம் –கலி ஸ்வாமி/பிறப்பு இல்லை உதித்தார்/சூர்யன் கிழக்கே உதிக்கிறான்- சூர்யனுக்கும் கிழக்குக்கும் சம்பந்தம் இல்லை அது போல தோஷம் தட்டாதவர் ஸ்வாமி உதித்தாலும்/ராம திவாகரன் அச்சுத பானு வகுளாபர திவாகரன் ராமானுஜ திவாகரன் /தயிர் காரிக்கு ஊமைக்கு மோட்ஷம் பரத்வம் வெளிப்பட்டதே /சுடர் ஜோதி மறையாது/சர்வ வியாபி-இடத்தை காலி பண்ணி கொண்டு /வந்து உதித்து இவர் ஸ்வாமி வந்து -பரிவில் ஏற்றம்/ கரந்து எங்கும் பரந்து வேலை செய்ய வேண்டாம்/முன் நின்று காரியம் கொள்வார்/-அருள் என்னும் ஒள் வாள் உருவி / பரன்-உயர்ந்தவன் வேறு ஜாதி/நித்ய சூரி ஜீவாத்மா கோஷ்ட்டி/இருப்பவர் செய்ய முடியாததை வந்தவர் செய்தாரே /வாத்சல்யம் உள் இருந்து- தோஷம் தீண்டாதது சக்தி /ஸ்வாமி தாழ்ந்தவனையும் கை தூக்குவார் //வேத மாதா தலைமுடி/ உபநிஷத் நெய் ஸ்ரீ பாஷ்யம் சிக்கல் விலக்கி பின்னல் பேத அபேத கடக்க வாக்கியம் ஸ்வாமி -தேசிகன்-/மறை நாலும் வளர்த்தார்/வேதம் சொல்லி கொடுக்க வில்லை அவன் உள்ளே இருந்தாலும்/பரன் கீதை- கீதா பாஷ்யத்தால் தான் பரிஷ் கரிக்க பட்டது-

விலை பால்  போல அவன் பரிவு தாய் போல்  ஸ்வாமி பரிவு

அது தத்வ வசனம்  இது தத்வ தரிசினி வாக்கியம்/அன்னமாய் அற மறை நூல்  பயந்தான்-கொடுத்தான்அவன்-
– வளர்த்தார் ஸ்வாமி //ஸ்ரீ மத் வேத மார்க்க உபய பிரதிஷ்டாசார்யர் ஸ்வாமி

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s