ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -90.நினையார் பிறவியை நீக்கும் /91.மருள் சுரந்து /92.புண்ணிய நோன்பு – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

90–நினையார் பிறவியை நீக்கும்

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இன் நீண் நிலத்தே

எனை ஆள வந்த ராமானுசனை இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே

 அபயம் ஹஸ்தம் /மாசுச /மாம் விரதம் என்பான் அவன்//மந்த காசம் காட்டி பயம் போக்குவான்//இவரோ அஞ்சலி ஹஸ்தம் உபதேச முத்தரை//இவர் அஞ்சுவன் என்றவாறே இவர் பயம் எல்லாம் போம் படி குளிர கடாஷிக்க, அத்தாலே நிர் பீகராய் கரம த்ரயத்தில் ஏதேனும் ஒன்றினாலே இவ் விஷயத்திலே ஓர் அனுகூல்யத்தை பண்ணி
 பிழைத்து போகலாய் இருக்க  சேதனர்   ஜன்ம க்லேசத்தை அனுபவிப்பதே ! என்று இன்னாதாகிறார் ///நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்- முக் கரணங்களால் பகவத் ஆச்ரண்யம் வேண்டும் ஆச்சர்யரை ஒன்றாலே பெறலாம்/மாந்தர் -மருள் சுரந்து -தவறாக புரிந்து மயக்கம் அஞ்ஞானம்-பிறப்பில் அழுந்த -பிறப்பு-கர்மம்-துன்பம் -அழுந்துவர்//நினையார்-மனசு -வனையார்-கைகள்  புனையார்- வாசிக்க -பிறவியை நீக்கும் பிரான்- விஷ்ணு லோக மார்க்க மண்டப மார்க்க தாய் -ஸ்வாமி-நினையார்..

நடுவில்- எனை ஆள வந்த ராமானுசனை -என்று நடுவில்-  பிரான் என்றதும்- உபகாரத்வம் சொல்ல இதை சொல்கிறார் திரௌபதிக்கு புடவை சுரந்தது திரு நாமம் இரே- கோவிந்த நாமம் நடுவில்  சொன்னார்/ மாடு கன்று பின் போகும்-தாமோதரனை அறியமுடியுமா -காட்டி பின்பு நாராயணனை/  இரும் கவிகள்-பெரியவர்-கவி புஷ்பம் போல புனையார் -அந்த கைங்கர்யம் முடியா விடில்- புனையும் பெரியவர் தாள் களில் பூம் தொடையல் வனை யார்- இதையாவது பண்ணலாமே –மூன்றில் ஒன்றையும் பண்ணாமல் மாந்தர் இழக்க லாமா /கடாஷத்தாலே பயம் போக்கி இதை ஸ்வாமி காட்டுகிறார்/பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ-பார்த்தாலே போதும்..செப்பு மொழி 18  உடையாள்-மொழி தெரியா விடிலும் கடாஷம் கிட்டி இருக்கும்/சிந்தையாலும் செய்கையாலும் நினைவாலும் -மூன்றும் வேண்டும் அங்கு/தூ மலர் தோவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க- மூன்றும் பண்ணி எதிர் பார்த்து இருக்க வேண்டும் அங்கு– இங்கு ஸ்வாமி சம்பந்ததாலே தான் மோட்ஷம் என்பதால் ஏதானும் ஒன்றாலே நிச்சயம் கிட்டும்.சு தர்மம் பர தர்மம்-கீதை /கர்ம யோகம் கொஞ்சம் பண்ணினால் மோட்ஷம் கிட்டும் ஞான யோகம் முழுவதும் பண்ணினாலும் கிட்டாது- எல்லாம் அவன் திரு  உள்ளம்  படி தான்/

சேதனர்-ஜன்ம க்லேசம் -அறிவு இருந்தும் கஷ்டமா ? க்லேசம் அனுபவிக்க அறிவு வேணுமே-சைதன்யம் வைத்து வழி தெரிந்து மீழனும்//நினைவார்-நினையார் இரண்டு பாட பேதம் ..முக் கரண செயல் சொல்ல – நினையார் புனையார் வனையார் -மூன்றும் வேண்டும்- அதனால் இதுவே பிரதான பாடம்../தம்மை நினைத்தவர் கள் உடைய ஜென்மத்தை போக்கும் உபகார சீலர் ஆன இவரை நினைகிறார்கள் இல்லை//ஸ்ரீ ரெங்கன் திரு மலை பெருமாள் அழகர் திரு குறுங்குடி நம்பி எல்லோரும் அருளி இருக்கிறார்களே ஸ்வாமி பிரபாவம்///எண்ணிலும் வரும்-என் இனி வேண்டுவன்-ஆழ்வார்/இத்தனை அடியார்க்கு இரங்கும் நம் அரங்கனாய -//நிகர் இன்றி நின்ற நீசதையை-48-உடைய என்னை அங்கீ கறித்து   தம் உடைய குணங்களுக்கு தேசிகனாய்- எடுத்து சொல்லும் படி- வாசகம் இடும் படி பண்ணி-இப்படியே ஆளுகைக்காக -எனை ஆள வந்த -/அன்னையாய் -என்னை ஆண்டிடும் தன்மை- ஆண்ட விதம்- நின்று தன புகழ் ஏத்த அருளினான்- கைங்கர்யம் கொள்வதே ஆளுகை/சங்க பலகை கண்ணன் கழலினை பாசுரம் ஏற்றி பண்ணிய கைங்கர்யம்/அது போல அமுதனார் இங்கு/-நீள் நிலத்தே- தேடி கண்டு பிடித்தார் நீசனை- வந்த- நான் இருந்த இடம் தேடி  வந்த – -ராமன் வெட்கி தலை குனிந்தான் ரிஷிகள்-காவல் சோர்வால் வந்தது-விபீஷணன் இடமும் அப் பொழுதே இது போல /ஆள வந்தாரும் பெரிய நம்பி மூலம் சென்று-ஸ்வாமி கொஞ்சம் வந்து  மதுராந்தகம்   இடத்தில் தானே அருளினார்../இங்கு கிடந்த இடம் வந்தார்-பிரதம பர்வம் கிடக்கும் -பண்டம் போல சரம பர்வம் தன நின்ற இருந்த இடம்./

இரும் கவிகள்-தத் குண பிரகாசமான பெரிய கவிகளை- உண்மையான கவிகள்- /சுலபம் ஆனாலும் குணம் அர்த்தத்தால் பெரியவை /அயோத்தியர் கோன் பெரும் தேவி  கேட்டு அருளாய்- கண்ணனா? ராமன்- -பெரும் தேவி என்றால் பெருமைக்கு தக்க- அது போல இரும் கவி பெருமையை காட்ட /புனையார்- ஏக தேச உருவகம்-பூ புனையார் இல்லை தாமரையால் அளந்தான் போல /மகிழ் வூட்டுதல் மேன்மை -பூவும் கவியும் -தாங்கள் கவி புனைய மாட்டுகிறிலர்  ஆகில் அவர் விஷயமாக கவிகளை தொடுக்கும் மகா பிரபாவர் உடைய திருவடிகளில் பூ மாலை களை சமர்ப்பிக்கிறார்கள் இல்லை –இத்தனைக்கும் /பொருள் அல்ல வற்றை  பொருள் என்று நினைத்தால் மருள்- பொருள் ஆல்லாத என்னை பொருள் ஆக்கி- பரமனே மருள் என்பர் அத்வைதி/ இங்கு மருள்- மயக்கம் மையல் /மழை பெய்த்து நெல் விளைய போல – மருள் சுரந்து வருந்துவார்கள் –மாந்தர்- இத்தனைக்கும் யோக்யமான பிறவி பெற்றும் அறிவு கேடு மிக்கு ஜன்ம மக்கராய் துக்க படுகிறார்களே புனைதல்-தொடுத்தல் /வனைதல்-செய்தல் -சமர்ப்பிக்கை//

சோஷித்தல்- வற்றுதல்-உலர்தல் – உப்பு கடலை ராமன்- அம்பு ஏற்ற- சமுத்திர ராஜன் சரண் அடைந்ததும் /ஆதித்ய அச்சுத- வகுள  பாஸ்கரன் பவ சாகரம்-சம்சார சாகரம்- சோதித்தார்..அவராலும் முடியாததை ராமானுஜ திவாகரன் பண்ணி காட்டினார்/ஆபி முக்கியம்- அவரை நோக்கி திரும்பினாலே போதும்/ ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போவான் //காமாதி தோஷம் ஹரன் -பிறவியை நீக்கும் பிரான்-பிறவி- கர்ம -அசித்-சம்பந்தம்-காம குரோதம்- நோய் முதல் நாடி//அநந்த கிலேச பாஜனம் -இதனால் தானே அதை ஒழிப்பார்//அளியல் நம் பையல் -என்று அபிமானித்து -இது தான் ஸ்வாமி பண்ணிய உபகாரம் அமுதனாருக்கு-ஆழ்வான் திருவடிகளில் காட்டி கொடுத்து//

தூமணி துவளில் மா மணி-போல நல்லவற்றை அடியவர்க்கு காட்டி கொடுத்து அருளினார் //குண அனுபவம் -தெரிய வைத்து பாடவும்- தகுந்தவாறு பிரபந்தம் அருள- இப்படி ஆளுகைக்கு –சர்வேஸ்வரன் வந்து அவதரித்தாலும் அவனையும் மோகிப்பிக்கும்-இருள் தரும் மா ஞாலம்–இவர் ஒருவரை ரஷிக்க தீஷை கொண்டு அடியேன் இருந்த இடம் தேடி வந்து –கவி புனையும் அதிகாரம் இருந்தாலும் புனையார் /-ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் ஆச்சான் போல்வாரின் திரு வடிகளில் பரிமளம் உண்ட புஷ்ப மாலை சமர்ப்பிக்க வில்லை –ஸ்ரீ த்வாரகை கைங்கர்யம் பண்ணி கொண்டே ஸ்ரீ பாஹவதம்  சொல்லி கொண்டே அவனை நினைத்து கொண்டு இருப்பார்கள்//வணக்குடை தவ நெறி-நினைவது-பிறவி நீக்கும் பிரான்- ஸ்வாமி/பாடுவதும் ஸ்வாமி பற்றி புனைவது ஸ்வாமி அடியார்களின் தாள்களை/

நினைப்பது உத்தராக ஆச்சர்யரை தான்//குரு பரம்பரை சம்பந்தம்-அடியார்கள் ஸ்வாமி எற்றுவதையே கொள்வார்கள் /தாள்களில் புஷ்பம் சமர்ப்பித்து எங்கும் பண்ணலாமே /வனைவு எங்கு இருந்தாலும் பலன் //நேராக பற்றுதல் அடியாரை பற்றுதல் -ஆகாசம் நீர் சமுத்ரம் போவது போல எந்த தெய்வம் தொழுதாலும் கேசவனையே சேரும்-நீராய்- கூராழி -நேரே செவீப்பதே ஏற்றம்- அந்தர்யாமி சேவிப்பதை விட -கீதை -வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பாதம் தொழுவார்/இங்கு சரம பர்வத்தில் ஆழ்வான் மூலம் பெறுவதே ஏற்றம் //தெளிய மாட்டாமல் -கற்ப நிர் பாக்கியம்-மாந்தர்-அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது-அதற்க்கு மேல் அரிதான ஸ்ரீ -வைகுண்டம் பெற வழியும் தெரிந்து –மாயவன் தன்னை வணங்க  இவை உனக்கு அல்ல –

91–மருள் சுரந்து

மருள் சுரந்து ஆகம வாதியர் கூறும் அவ பொருளாம்

இருள் சுரந்து எய்த்த  வுலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர்

அருள் சுரந்து எல்லா உயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்

பொருள் சுரந்தான் எம்மி ராமானுசன் மிக்க புண்ணியனே

உஜ்ஜீவன அர்த்தமாக எம்பெருமானார் செய்து அருளின க்ருஷியை அநு சந்தித்தித்து அவரை கொண்டாடுகிறார்–சம்சாரிகள் இருக்கும் நிலை கண்டு ஸ்வாமி பண்ணிய தார்மிக செயல்கள்..கெட்டு  அலைய-இவர்கள் இடம் வந்து – படி படியாக மாற்றி அரங்கன் அடி சேர்த்த உபகாரம் / புண்ணியனே- தர்மம்  ஈந்தார்-.அஞ்ஞானம் எல்லாம் ஒரு முகமாக திரண்டு- உலகு எல்லாம் நல் இருளாய்–மருள் சுரந்து- ஆகம வாதியர் கூறும்-பசு பதி ஆகமம் கூறும்–அவ பொருள்- இருப்பதை இல்லை என்றும் தாழ்ந்தவனை வுயர்ந்தவன் என்றும் -சொல்லி-இருள் சுரந்து -தன் நெஞ்சில் தோற்றியதை சொல்லி மூர்கர் ஆவார்-ஆஸ்திக நாஸ்திகர் -ஈஸ்வரன்  -நிமித்த காரணம் மட்டும் என்பர் சங்கல்பம்/பரம அணுக்களே ஜகமாக மாறும் என்பர் //paramatha பங்கம்/ பரமாத்மா -சிவன் என்பர் பசு-அணுக்கள் /பதி- சிவன்-பாகம்- தடுக்குமாம்-சேர்வதை- கைலாசம் சாம்யா பத்தி மோஷம் சாரூப்ய மோஷம் உண்டு என்பர்//ரெங்க ராமானுஷ பாஷ்யம்-உபநிஷத் வியாக்யானம்/ விரோதி பரிகாரம்-தேசிகன்/அந்தர்யாமி பிராமண வாக்கியம்/எய்த்த-தளர்ந்து போகும் படி//ஈண்டிய சீர்-தயை போன்ற கல்யாண குணங்கள்/நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் பிரத்யட்ஷமாக காட்டி  கொடுத்தார் –நாராயணன் என்று சொன்னால் வேதம் போல பேச்சு மாற்றி சொல்வார்கள் என்று //புண்ணியன்-தார்மிகன்/மருள் சுரந்த ஆகமம் கண்டித்து அரங்கனை காட்டி கொடுத்தது /

மருள்-அஞ்ஞானம் -பசுபதி ஆகமம்  தெருள்-ஞானம் -பாஞ்சராத்ர ஆகமம்/ மருள் சுரந்த ஆகம வாதியர்-ஆகமமே அஞ்ஞானம் –கௌதம சாபத்தை மெய்ப்பிக்க சைவர் என்பர்..–வேதம் அகற்றி நிற்பார்-பஸ்மம் தடவி கொண்டு-பூத பதி- பசு பதி-அடியார் என்று நின்றவன்-மோக சாஸ்திரம் -பாம்பு விஷம் கொடுத்தவன் அவன் தானே முள்ளை எடுத்தார் எம்பார் /பொய் உரை -//சைவ பாசுபத -அரு விதம் -36 தத்வங்கள் என்பர் -நம் 24 எடுத்து கொண்டு -மாயா புருஷ சிவ ஈஸ்வர  சதா சிவ கால நியதி ராக -வித்யை சுத்த  வித்யை -அசுத்த வித்யை-அவர் அவர் தமதமது அறிவகை- மதி விகற்ப்பால்-பதி-சிவன்/ அநு ஜீவாத்மா பகவான் விபு /அர்த்த பஞ்சகம்-பாசங்கள் / சுத்த பிரமம்-நடாதூர் அம்மாள்-குணங்கள் அற்ற எனபது இல்லை தீய குணங்கள் இல்லை/அப குணங்கள் அற்று என்பதால் நிர் குணம்/சூர்யன் பக்தன் பிறந்து-7 ஜன்மங்கள்-பிரசாதத்தால்- ருத்ரன் பக்தன் -7 ஜன்மம் இருந்தால்-சங்கரன்-சம்பு-விஷ்ணு பக்தன்-மாற்றி-கபாலத்வம்-

வராக புராணம்-மோக சாஸ்திரம்-ருத்ரன் கொடுத்த -/கௌதமர் ரிஷிகளை ரஷிக்க -பசு மாடி சிருஷ்டித்து நெல் கதிரை சாப்பிட- கௌதமர் தண்ணீர்  தெளித்து விரட்ட -அவை சாக -பசு வதம்- யோக மாயையால் தெரிந்து கொண்டார்-வேத வ்ருதரகளாக ஆவீர் என்று சாபம்-சைவராக பிறந்தார் கள் //ஸ்காந்த புராணம்–இந்த சாபம் பற்றி சொல்லி உஜ்ஜீவிக்க நாராயணனை பற்றினார்கள் //அக்னி-தாமச குணம் நிரம்பி  உள்ள பொழுது /ரஜோ குணம் பொழுது தம்மை /சத்வ குணம் இருக்கும் பொழுது -பராம் கதி அடைவார்கள்//ஓதாதே ஓதுவிக்கும் திருமாலே ஒதுவித்தான்-மாதவனே பரன்  என்று வையம் காண -சம்பு -ஜேஷ்ட விஷ்ணு பக்தன்/ தம் தம் மதி இழந்து -அரனார் சமயம் புக்கி தழல் வழி பொய்-சங்கேதம் தவிர் //மருளை சுரக்க வந்த ஆகமம் –பேச நின்ற பிரமனுக்கும்// இலிங்கத்து இட்ட -கூறும்-ருத்ர பரதவ ஸ்தாபன அர்த்தமாக அநேக வுப பத்திகளை கல்பித்தி கொண்டு சொல்லும் /காலம் நியதி தத்வம் உண்டு என்பர்/நாமோ எல்லாம் பகவான் ஆணை என்கிறோம்/தாழ்ந்த அர்த்தங்களை -தமஸ் மிகுந்து -அந்த காரம் போகும் படி-ஆஸ்ரித ரஷணங்கள் ஆகிற திரண்ட வைலஷன்யத்தை உடைய கிருபை ஒரு மடியாக கொண்டு -சகல ஆத்மாக் களும் சேஷி பெரிய பெருமாள் என்னும் அர்த்தத்தை வுபகரித்தார் ..பரம தார்மிகர் ஸ்வாமி .அருள் சுரந்தது -பள்ள மடை போல-இயற்க்கை உடன் சேர்ந்து எங்கும் பரவும்//

அவ பொருள்-பொல்லாத  பொருள் //ஆகம வாதியார் கூறும் மற பொருள்-பாட பேதம்–காதுகமான அர்த்தம் /காதுகம்-ஆத்மா நாசம் -நம்மையே முடிக்கும் அறத்துக்கு எதிர் /ஆகம வாதியர் கூறும் மறை பொருள்- -இது தான் மறை என்பர்-

வைதிக சரத்தை வர கொண்டாடி சொல்லும் வார்த்தைகளை- பேச நின்ற பியாமனுக்கும் சிவனுக்கும்- சொர்க்கத்தில் பசு மாடுகள் தலை கீழாக நடக்கும்- ஜோதீஸ் ஹோம  பலன் உயர்த்தி சொல்லும்–இருள் சுமந்து சுரந்து எய்த்த-பூமி சுமந்து இருகிராளே–ஈண்டுதல்- திரண்ட /சீர்-அழகு –இது ஒன்றே போதும் /திருமேனி ஒன்றாலே ஞானம் பெறலாம்/அருள் சுரந்து -ஒரு பாட்டம் மழை பொழிந்தால் போல //அரங்கனே  -வகுத்த சேஷி என்று காட்டி கொடுத்தார் /ருக்மிணி கூட சென்று வரம்-கேட்ட கள்வா//நாராயண, கிருஷ்ண-பூமிக்கு  ஆனந்தம் கொடுப்பவன்  வாசுதேவ கேசவ ரிஷிகேசன்,அச்சுதன்,அநந்தன்-போன்ற பல திரு நாமங்கள் -திரி வித சேதன அசேதன -ஈஸ்வரன்/குறைவற்றவன்-/பிரகலாதன்-உன் செய்கை நைவிக்கும் அது இது உது எதுவானாலும்/

கடியன்–கொடியன் அவன் பாலே நெஞ்சம் போகும்/பராசரர் மைத்ரேயர்-சாமான்ய கேள்வி/விசேஷித்து பதில்/ பீஷ்மர்-யுதிஷ்டிரன்/ஆழ்வார்-மதுரகவி/ கீதாசார்யன்-அர்ஜுனன்/ஆலச்யம்-சோம்பல் -பந்த ஹேது-அஞ்ஞானம் /ஆரு முத்ரைகள்-பஸ்மம் பூசி கொண்டு-ருத்ராட்ஷம் /பூவும் பூசனையும் தகுமே-நிஷித்த தர்ம-ருத்ர-அழுதுண்டே/ஹர-அபகரிகிறான் தாணு விரூபாஷன்/ச பிரம்மா ச சிவ ச இந்திர பரம ஸ்ராட் -முக்த்தாமா வையும் சொல்லும்/தடங்கல் இல்லாமல் அனுபவிப்பான் என்று/பிரகாரத்தால் -நீராய் சிவனாய் -சரீரம்/ அரியை அரனை அலற்றி சரீரமாக கொண்ட ஹரியை அலற்றி என்ற பொருள்/இன்று ச ஹரி புகுத்தி வேற சேர்ப்பார்- பஞ்சாதி அசர சேராது அவனே அவனும் அவனும் அவனும்-ஆழ்வார் -மறைகளை ஆயிரம் இன் தமிழால் அருளி -அரை பொருள் என்றும் பாட பேதம்-ஆத்மா நாசம்/அரை கூவுதல் தோணியாய்-கடல் ஓசை போல -அர்த்தம் இல்லாத பொருள்/எய்த்த உலகு இருள்- சேதனரின் அஞ்ஞானம் போக்கி//அஆஸ்ரித பரதந்த்ரன்களால் திரண்ட வைஷண்யம் பரவி /பக்தி ரூபா அன்ன ஞானம் என்கிற மை கொண்டு அஞ்ஞானம் போக்கி-நவ ரத்னம் என்கிற அஞ்சனம்/ முழு எழ உலகுக்கும் நாதன் /லோக நாதன் புரா/எட்டாத நிலம் இல்லை சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகிறோம் என்று கிடக்கிறான்

92—புண்ணிய நோன்பு

புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்

நுண்ணரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு

எண்ணரும் கீர்த்தி ராமானுச ! இன்று நீ புகுந்து என்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக் காரணம் கட்டுரையே

முடி சோதியாய் உனது முக சோதி மலர்ந்ததுவோ –திரு மாலே கட்டுரையே  -ஆழ்வார் -பதில் இல்லாத கேள்வி–சர்வக்ஜனுக்கும் -அது போல ஸ்வாமி பதில் சொல்ல முடியாத கேள்வி/ என் நெஞ்சில் திகழ்வதே/ திரு மால் வந்து நெஞ்சுள் புகுந்தான்  /வரவாறு என் வரவரு ஓன்று இல்லையேல்-வெறிதே அருள் செய்வார் செய்வார்களுக்கு  உகந்து

வெறிதே-சகாயம் இன்றி தானே -அனுக்ரகம்/பாரமாய -பழவினை பற்று அறுத்து வேரோடு-வாசனை இன்றி-என்னை தன் வாரமாக்கி வைத்தான்–ஹாரம்  அருகிலே- வைத்தது அன்றி என் உள் புகுந்தான் -நான்கு பெருமைகள்–கோர மாதவம்  செய்தனன் கொல்–மூன்றும் பண்ண வில்லை நான்-இரண்டு ஆற்றுக்கு நடுவில் கிடக்கிறான்-ஆழ்வார் அணைப்பு எதிர் பார்த்து தான் தவம் செய்தான்- /சாத்திய ஹ்ருத்ச்யனநாயும் சாதனம் ஒருக்கடிக்கும் தாய பதி- திரு கடி தானும் என் உடைய சிந்தையும் –நோன்பு நோற்று விரதம் திரு கடி தானத்தில் இருந்தான் ஆழ்வாரை பெற-நன்றி மறவாமல் பற்றி இருக்கிறான் /சொரூபதுடனும் விக்ரகதொடும் அந்தர்யாமி /நமக்கு திவ்ய தேசம் சாதனம் அவனை அடைய /நின்றது … நின்றதும் இரிந்ததும் -கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே /சகல மனுஷ கண்ணுக்கும் இலக்கு/யார் கண்ணுக்கும் விஷயம் ஆக மாட்டான்-இரண்டும் சாஸ்திரம்/காட்டவே காணலாம் /சரம பார்வை நிஷ்ட்டையில் சங்கை இன்றி அனைவருக்கும் நெஞ்சுக்கும் கண்ணுக்கும் விஷயம் ஆகிறார் ஸ்வாமி //நோன்பு-விரதம் ஒன்றும் இல்லை/அடி போற்றி செய்ய அருமையான ரகசியம் -சூஷ்மம்- ஆன புரிந்தும் இலேன்- ஆரம்பிக்க கூட வில்லை/கர்ம யோகமும் ஞானம் யோகமும் இல்லை என்கிறார் இவற்றால்/வேதம் போல கவி சொல்லும் புலவர்க்கு என்னவும் முடியாத கீர்த்தி உடையவரே –தேவரீர் என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் -நின்ற இக் காரணம் -என்றும் நின்று கொண்டு இருக்கும் -இக் காரணம் கட்டுரையே/

இப் பாட்டில் தாம் அறிய ஒரு ஹேது இன்றிக்கே இருக்க ,தம்மை அங்கீகரித்து அருளுகைக்கும்,அங்கீ கருத்து  அருளி பாஹ்ய அப்யந்தர கரண விஷயமாய் ,எழுந்து  அருளி இருக்கிற படியையும் அனுசந்தித்து வித்தராய் இதுக்கு காரணம் இன்னது என்று அருளி செய்ய வேணும் என்கிறார் //யான் அறியேன் என்று சொல்லாமல் கட்டுரையே என்கிறார்/இன்று நீ புகுந்து -உகந்து என்கிற அர்த்தத்தில் வியாக்யானம் //இப் பேற்றுக்கு உறுப்பாக ஒரு புண்ய வரத்தை அனுஷ்டிப்பதும் செய்திலேன்-புரிந்தும் -இலேன்- முதலில் உம்மை தொகை-சாமான்ய ஆத்மா குணங்கள் போல்வன இல்லை -இவை மட்டும் இல்லை என்று /புள்ளும் சிலம்பின காண்- முதலில் சொல்ல- உம்மை தொகை-முன் அடையாளம்-நாங்கள் எழுந்து வந்து இருக்கிறோம்- நீங்கள் வந்தது அடையாளம் இல்லை என்று சொல்ல புள்ளும் என்கிறாள்/போற்றி செய்தல்-ஆச்ரயிக்கை-அரும் கேள்வி -பாகவதரை போற்ற /நுண் அரும் கேள்வி-ஆச்சர்யரை போற்ற – கேள்வி-பகவானை போற்ற –மூன்று நிலை/கேள்விளேன்-செல்வத்துள் செல்வம் செவி செல்வம்/ நுண்ணுதல் – கேட்க்க பேச்சு கூட எடுக்க வில்லை-கேட்க்க வேண்டும் என்று -பிரசன்கிப்பதும் செய்திலேன் -//செம்மை நூல்-தெளிவான நூல்  புலவர்/ செம்மை புலவர்–அநந்ய பிரயோஜனர்– இருவருக்கும் எண்ணரும் கீர்த்தி—பரி சேத்திக்க அரிதான கீர்த்தி உடையவரே//வாக்குக்கும் மனசுக்கும் அப்பால் பட்டவர்–ஆள் இல்லாமல் வர வில்லை //வந்து புகழ் தேட வரவில்லை தளிர் புரியும் திருவடி என் தலை மேலே /எங்கும் பக்கம் நோக்கு அறியான் பைம் தாமரை கண்ணன்-இவர் நெஞ்சுக்குள்ளும்  கண்ணுக்குள்ளும் விஷயம் -கீர்த்தி சேர்க்க வர வில்லைஇன்று உகந்து என் கட் கண்ணுக்கும் உட் கண்ணுக்கும் விஷயமாய் நின்ற இதில் ஹேதுவை தேவரீர் தாமே அருளி செய்ய வேணும்– இரண்டை சொன்னது வாக்குக்கும் உப லஷணம்/ நீ புகுந்து/ நீ கட்டுரையே /கட்டுரைக்கில் தாமரை -கட்டுரை-முழு சொல்-சொல்ல வேணும் /புரிதல்-செய்தல்/நுவல்தல்-சொல்லுதல்/செம்மை-செவ்வை இத்தால் அநந்ய பிரயோசனத்தை/ செம்மை நூல் புலவர்க்கும்-தொக்கி உம்மை தொகை மறைந்து இருக்கும்

இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று புறம் போக வைத்தது என்//புண்ணிய நோன்பு-வர்ண ஆஸ்ரமநியதமான  கர்ம யோகம் /நோற்ற நோன்பு இலேன் -பிரயத்தனம்  பண்ணிய நோன்பு ந தர்ம நிஸ்டோமி- நிஷ்ட்டையே இல்லை ஆளவந்தார் //பகவத்வாசகமாய் -தத் ஆர்ராதனமாக  கர்மம் //எது தது  பிரியம் அது புண்யம் மத் பக்த பக்தேஷு-அடியார்களுக்கு பண்ணிய கைங்கர்யம் இல்லை /மூன்றும் இல்லை//சூஷ்மம்- குஹ்ய தரம்-துர் லபம் -அனதிகாரிகளுக்கு உபதேசிக்காமல்- கேட்க்க வில்லை கேட்க்க பிரத்யனமும் பண்ண வில்லை /அவை நுண் அரும் கேள்வியா/பலருக்கும் இது துர் லபம்/வித்யுத் மட்டும் தெரிந்தவர்களுக்கு -தேவரீர் 18 தரம் சார தமமாக யாசித்தது   போல பெற்றிலேன்/-ஆச்சர்ய அபிமானம் /ந ச ஆத்மா வேதி- நுண் அறிவும் இலேன் /செம்மை புலவர்கள்-சரம பர்வம்- அறி அரண் அயன் என்ற குழப்பம் இன்றி-தோஷம் ஒன்றும் இன்றி-அநந்ய பிரயோஜனர் – செம்மைநூல்  புலவர்கள் //இன்று – இத்தனை நாளும் காணா கண் இட்டு இருந்து -நடுவே வந்து உய்யக் கொண்ட நாதன்–புகுந்து-தானே வந்தார்-பிரேவிசித்து கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் வந்த காரணம்-நித்ரையாலும் பிரமாதத்தாலும் கலங்கிய இடங்கள் இவை/ஸ்வாமி கண் வட்டத்தில் இருந்தும் அநு கூலராகி இல்லாமல் இருந்தேன் முன்பு-வாக்குக்கும் உபலஷணம்–1-9-5 ஒக்கலை வைத்து முலை  பால் உண்ணு என்று தந்திட ஆதாரத்தோடு கொடுத்தாள்- வாங்கி-ஆதாரத்தோடு வாங்கி கொண்டான் செய் போல -சேக்கம் சிக்க என்று -கோபத்தோடு–அவள் பால் உயிர் செக உண்டான்   –நக்க பிரானும் அயனும் இந்த்ரனும் முதலாக ஓக்கவும் போற்றிய ஈசன் மாயன் -யார் கண்ணுக்கும் தென் படாத -என் நெஞ்சில் உளானே -என் தேகத்தில் ஏக தேசம் உள்ளானே -காவி நன் மேனி – ஆவியும் ஆக்கியும் தானே அளிப்போடு அழிப்பவன்  தானே -கமல கண்ணன் என் கண்ணில்  உளானே -காண்பன்-அவன் கண்களாலே அமலங்களாக விளிக்கும் -ஐம் புலனும் அவன் மூர்த்தி –என் நெற்றி உளானே -அங்கு/கீழ் இருந்து ஏறி போகிறான் நினைத்ததை பார்க்கிறோம் அதனால் நெஞ்சு முதலில் ..இங்கு நீயே புகுந்ததால் கண்ணை சொல்லி நெஞ்சை சொல்கிறார்/ சுவையன் திருவின் மணாளன் என் உடை சூழல் உளானே

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: