ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -87. பெரியவர் பேசிலும் /88.கலி மிக்க செந் நெல் /89.போற்றரும் சீலத்து ராமானுச – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு 

உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர்

தெரியும் வண்  கீர்த்தி ராமானுசன் மறை தேர்ந்து உலகில்

புரியு நல் ஞானம் பொருந்தாவரை பொரும் கலியே

கலி புருஷன்-பரிஷித் பேச்சு ஸ்ரீ பாகவதம்– 10-இடம் ஒத்துக்கி கொடுத்தான் -ரஷை- ஸ்வாமி தெரிந்து உரைத்த விஷயங்களில் நம்பிக்கை இருந்தால்-கலி தோஷம் கிட்டாது..,,புரியு நல் ஞானம்..இவ் உலகில்-மறைகளை ஆராய்ந்து-ஞானம்-உபாயாந்தர நிஷ்ட்டை/நல் ஞானம்-பிரபத்தி../உணர்வில் மிக்கோர்–ஆழ்வார் போன்றோர் அறிவர்- வண்  கீர்த்தி -அழகு ,வள்ளல் தன்மை-உணர்வில் மிக்கோர் என்று என்று-மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து-இந்த வண் கீர்த்தி யாருக்கும் இல்லை -சத்யம் சத்யம் எதிராஜோ ஜகத் குரு/உரிய சொல் என்றும் உடையவர் -என்று என்று -ஞான சக்தி அளவுக்கு -பேச முடியும் அளவும்-என்றும்–பெரியோர்-அழகன்/அரங்கன்/வரதன் நம்பி  .ஆழ்வார் ஆழ்வான் – அப்படி என்றால் பேதையர் பேசாமல் போனால் ஸ்வாமி அகல விட மாட்டார்- சேரா சேர்க்கை /உரிய சொல் என்றும் -என்றைக்குமே உடையவன்../பெருமை எளியவன் இரண்டும் உண்டு///பரத்வம்  சௌலப்யம் இரண்டையும் சொல்லும் சொல் பொருந்தும்/தன் குணம் தம் குணம்-பெரியவர் எளியவர் குணங்களுக்கும் ஸ்வாமி குணங்களுக்கும்  ஏற்ற அளவு குணம் உண்டு /ஓன்று உடையவன்-சிறு மா மனிசரே – பெரிய கீர்த்திசிறிய  மூர்த்தி போல- ஒன்றுதல்-சேர்த்தல்-அகடிதகடா சாமர்த்தியம் ஸ்வாமி இடமும் உண்டு/

சேராத -நர சிங்கம் போல- கடக சுருதி கொண்டு  சூத்தரன்களை ஸ்வாமி ஒருங்க விட்டார்–அது  போல தம் இடம் பரத்வமும் சொவ்லப்யமும்  ஒருங்க விட்டார் -சேர்த்து விடுகிறார் -ஏற்கும் பெரும் புகழ்  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-…ஏற்கும் பெரும் புகழ்-வண் குருகூர் சடகோபன்-பேசுகைக்கு ஈடான ஞான சக்திகளை உடையயராய் இருக்கும் பேர் அளவுடையார் சொல்லிலும் ,–அஞ்ஞான சக்தி களுக்கு எல்லையாய் இருக்கும் அளவிலிகளான வர்கள்  சொல்லிலும் …அவர்கள் உடைய ஞான சக்தி களால் எல்லை காண ஒண்ணாத படியாய் –இவர்கள் உடைய அஞ்ஞான சக்திகளால் நமக்கு பூமி அன்று என்று மீள வேண்டாத படியாய் –இப்படி தங்கள் குணங்களுக்கு ஈடாக பேசலாம் படி இருக்கிற தம் உடைய சொரூப ஆதிகளுக்கு வாசகமான சப்தங்களை சர்வ காலத்திலும்  உடையவராய் இருக்கும் அவர் என்று ஞானாதிகர் ஆனவர்கள் பலகாலும் விவேகித்து அனுசந்தியா நின்று உள்ள திவ்ய கீர்த்தி உடையரான எம்பெருமானார் ,வேதத்தை ஆராய்ந்து லோகத்திலே உபகரித்து அருளின விலஷனமான ஞானத்திலே சேராதவர்களை கலி வந்து மேல் இட்டு நலியும்.. அந்த ஞானத்திலே சேர்ந்தவர்களை நலிய மாட்டாது என்று கருத்து

தம் தாம் குணங்களுக்கு ஏற்ற படி பெரியவர்களும் பேதையர்களும் தம் தம் சொல்லால் சொல்லும் படி சொரூப ரூபா குண விபவம்-ஒவ் ஒன்றிலும் பரத்வம் சௌலப்யம்-பேசி முடிக்க முடியாது பேசாமல் அகலவும் முடியாது/ சப்தங்களும் பொருந்தும்/ சொல்லால் சொல்ல படும் குணங்களும் உண்டு– இவை என்றும்-சர்வ காலங்களிலும் உண்டு/செராதவற்றை சேர்த்தாரே படிகிறது அழிகிறது காக்கிறது மூன்று வித லஷனங்களும்-விரோதம்- முழு கொம்பு அரை கொம்பு கொம்பே இல்லாமல் -போல வேவேற/ காலங்களில் என்று சமன் வய படுத்தி காட்டினாரே/ தேர்ந்து -ஆராய்ந்து –புரிந்து-உபகரித்தார் /நல ஞானம்-பிர பத்தி ../ஓன்று உடையவன்-தங்கள் ஞான சக்தி/ அஞான அசக்திகளை -ஒருங்கே-/மிகை என்றால் போறாது என்றாதல்-பெரியவர்/ சொல்களே போறாது-பேதையர் –சேரா சேர்க்கையாக -மகிமை அளவிட முடியாது சொவ்சீல்யமும் அளவற்றது-சேரும் படியாய் இருக்கிறார் /பேசிற்றே பேசல் அல்லால்பெருமை ஓன்று உணரல் ஆகாது  /பேசினார் பிறவி நீக்கார்/பேசினார் எவ் வழவும் பேசுவர் அவ் வழவே வடிவு/செல காண்பிப்பார் காணும்  அளவும் செல்லும் கீர்த்தியாய் உலப்பிலானே /ஆனைக்கு குதிரை வைப்பாரை போல -நித்யர் கூட அனுபவிக்க முடியாது அவன் சீர்மையை- சுவாமி பொருந்தியவரை -ஞானம் பெற்றவரை கலி  ஆக்கிரமிக்காது //வந்தாய் போலே வாராதே வாராதே போல வருவானே /ஆணை காத்தது ஆனை கொன்று –போல ஸ்வாமி-பெரியவர்-ச்தொதரங்களில் மீளும் படியும்/ பேதையர் -மீள வேண்டி இராத படி -குணங்கள் உடைய /கந்தர்வர் அப்சரஸ் – தம் குணம் சொல்ல முடியாத அனந்தன் யாரும் ஒரு நிலைமை என அறிவரிய எம்பெருமான் யாரும் ஒரு நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்/ஐ ச்வயார்த்தி  யும்  கைவல்யார்தியும் பகவத் லாபார்தியும் என்னை நினைந்தே உபாசனம் பண்ணுகிறான்-கீதை.. அவ் அவர்களுக்கு வேண்டியவற்றை நினைந்து கொண்டே -மாம்- வேறு படும் இவர்களுக்கு -அது போல ஸ்வாமி யும்/உணர்வில் மிக்கோர்-மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்கள்- தெரியும்-அறிந்து கொண்டு அருளிய -அவர்களால் கலியும் கெடும் கண்டு கொண்மின்- பவிஷ்யத் ஆச்சர்ய- வண்  கீர்த்தி- அழகு -திரு மேனி-சூசிப்பித்து காட்டினார் /மறை தேர்ந்து -ஆராய்ந்து-சொல்லும் விடு ஸ்ருதியாம் ஸ்ருதியோடு அருமறை கலை மொழியாளர்கள்- பேசுவதே சாஸ்திரம்- தான் தோன்றியாக சொல்ல கூடாது என்று மறையை ஆராய்ந்தார் –அவன் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-போல/மறைத்து மரைத்தூ சொல்லும் ஆழ்ந்து அறிய வேண்டும் படி.

வேதார்தம் அருளும் பொழுது இதிகாசம் துணை வேணும்- கீதா பாஷ்யமும் அருளினாரே /புரிதல்-கொடுத்தல்-ஈதல்- காலை நல் ஞான துறையில் படிந்து -ஆழ்வார்//சர்வருக்கும் உபதேசித்து போந்தார்/ உய்ய கொண்டாரை -சரம ஸ்லோகம் அர்த்தம் கேட்டு கொண்டும் 263-உடையவர் அருளி செய்த வார்த்தையை ச்மரிப்பது ..தத்வ நிர்ணயம் செய்யும் பொழுது  -பக்தி நிஷ்டராய் இருக்கையால்-அர்த்தம் அழகாய் இருந்தது ருசி பிறக்க வில்லை /வித்வான் என்பதால் அர்த்தத்துக்கு இசைந்தே –பகவத் பிரசாதம் இல்லை என்பதால் இப்படி அருளினீர்-கருவிலே திரு விலாதார்/காவலில் புலனை வைத்து -நாவலிட்டு -கலி தீண்டாது எம தரனுக்கு விஷயம் ஆகாது-பிரபு-மது சூதனன் பிரகரர்கள்- -காதில் தன் தமர் களுக்கு அருளியது ..நமனும் தன் தூதுவரை கூவி-செவிக்கு இறைஞ்சியும் சாதுவராய் போவீர்/பொலிக பொலிக பொலிக –கலியும் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் புரிந்தான் —

89–கலி மிக்க செந் நெல்

கலி மிக்க செந் நெல் கழனி குறையால் கலை பெருமாள்

ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்,

வலி மிக்க சீயம் ராமானுசன் மறை வாதியராம்

புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே

ஞானத்தை உபகரிக்கைகாக ஸ்வாமி வந்து அவதரித்த படியை அனுசந்தித்து ,எம்பெருமானார் ஆகிய சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிய புலிகளை நிரசிப்பதாக லோகத்தில் வந்த பிரகாரத்தை சொல்லி ஸ்தோத்ரம் பண்ண கடவேன் என்கிறார்

நல் ஞானம் பெற- ஆழ்வார்கள்- அருளி செயல்/ சல்லடை-தேவை உள்ளதை வெளியில் தள்ளும்/ முறம்- தேவை அற்றதை வெளியில் தள்ளும் /சார தமம் இவை/வேதம் கடைந்து எடுத்த ரகஸ்ய த்ரயம் காட்டிய பிர பத்தி -அருள அவதரித்தார்/அம்ர்ததுக்கு -பாராசரரின் -வாக்கு அமிர்தம்-வியாக்யானம் ஸ்ரீ பாஷ்யம்/-உபநிஷத் பாற்கடல் மத்தியில்- ஆழ கடலில் இருந்து எடுத்த தெளிந்த பொருள்–அங்கு அமரர்களாக போக வழி காட்டும்  அமிர்தம்/ சம்சார ஆர்ணவ–ஆத்ம சந்ஜீவிநியாக கொடுத்த பிரம்மா சூத்திரம்-நழுவி போனது நடுவில்-கண்டவர் -புல் அறிவால் மூலையில் அர்த்தம் வைக்க -பூர்வாசார்யர் -போதாயனர்- அருளிய அர்த்தங்களை பிர காச படுத்த அருளினார்-நிலா தேவர்கள் குடிக்கட்டும்/ வேதாந்தமே அமிர்தம்..-எய்தற்கு அறிய மறைகளை அருளிய அருளி செயல்களை கொண்டு ஒருங்கே விட்டார் ஸ்வாமி/-பக்தி ஈரத்தால் நனைத்த ஞானமே கை விளக்காக கொண்டு/கோதிலவாம்  ஆழ்வார்கள் -மா முனிகள்-/பிரமாண ஸ்ரீ கைங்கர்ய ஸ்ரீ அனைத்தையும் கொண்ட ஸ்ரீ பாஷ்யம்/-அங்கன்கங்கள் ஆறு பிர பந்தம் அருளிய கலியன் – வேடு பரி கருட சேவை கார்த்திகை கார்த்திகை மூன்று முக்ய உத்சவங்கள்/பர சமய பஞ்சுகனலின்  பொறி பர காலன் பனுவல்களே //அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் -அமிர்தம் உண்டு ஸ்ரீ பாஷ்யம் அமிர்திலும் அமர்த்தம் /

வாள் கொண்டு எதிர்த்து /நஞ்சுக்கு நல்ல அமிர்தம் கொடுத்தார்/நர சிம்ஹம் ராகவா சிம்ஹம் யாதவ சிம்ஹம் போல பராந்குச்ட சிம்ஹம் பரகால சிம்ஹம் /கோபம் கொந்தளிக்கும் புலி இடம் –தேஜஸ் சிம்ஹம்  இடம் –களித்தார் கலியன் பாடல் உண்டு -புலிகளை ஓட விரட்டினார் –வைதிக மறை அளிக்க குதிர்ஷ்டிகள் -புலி போல இருக்க-/சிங்கம்-வந்தமை //வலி மிக்க சீயம் /உழுவது,நடுவது அருப்பத்தாய் செல்லுகிற ஆரவாரம் மிக்க செந் நெல் விளையும் வயல்கள் – நாளும் விழவின் ஒலி ஓவா திரு நறையூர் போல-//குறையால் பிரான் அடி கீழ் இன்றும் ஸ்வாமி சேவை திருவாலி திருநகரி /

கலை பெருமாள்- சாஸ்திரம் அறிந்த கலியன்/கலியன தமிழ் ஒலி சொன்னாலும்  துயர் போகும்-/ஒலி மிக்க பாடல்- தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாபம் நில்லாதே -பாடலை உண்டு உள்ளம் தடித்து அதனால் வலி மிக்கு –/முனி வேழம் முன்புஆழ்வார் பாசுரத்தால் — //அமரிக்கை -யானை /வாள் வழியால் மந்த்ரம் கொண்டார் இவர்/

கலி -ஆரவாரம் மிடுக்கு /பூ சாரத்தை சொல்லுகிறது கலி மிக்க செந்நெல் /ஒலி-துவனி-தெம்பை கொடுக்கும்-இயற்க்கை உடன் ஒன்றிய ஒலி /ஸ்ரமத்துக்கு போக்கு வீடாக /முயல் துளர் செளுப்பம் உடைய வயல்கள் / இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – புலவ /அப்பன் கோவில் திரு அவதாரம் ஆழ்வார் .எழுந்து அருளி இருக்கும் இடம் ஆழ்வார் திரு நகரி/ திரு குறையலூரில் அவதரித்து திருவாலி திரு நகரி.எழுந்து அருளி-கலியன்//நாவினுள்உளானே- -காவி நன் மேனி கமலா கண்ணன் நெஞ்சினில் உளானே- இரும் தமிழ் நூலை மொழிந்தான்/ கலியனும் தம்மை இரும் தமிழ் நூல் புலவன் என்று சொல்லி கொள்கிறார்../கலை பெருமாள்-பன்னு கலை நூல் வேத பொருளை எல்லாம்-ஆழ்வார்/பர்டம்பின கலைகளை உடைத்தாய் விகசித்து ஆறு அங்கங்கள் உடைய -அதனால் கலை பெருமான் இவர்/ஒலி கெழு பாடல்-ஒலி மிக்க பாடல்–மிக்க துவனி உடைய திரு மொழியை உண்டு-தாரக போஷாக போக்யமாக கொண்டு –அனுபவித்து/மாறன் கலை உணவாக பெற்றோம்-மா முனிகள்-போல –தம் உள்ளம் பூரித்து -பிரதி பஷ  தர்சனம் -சகியாமல்அதி பிரபலமான சிம்ஹம் போல இருக்கிற எம்பெருமானார்..பாஹ்யர் போல அன்றிக்கே வேதங்களை அங்கீகரித்து கொண்டு நின்று வாதங்களை பண்ணி லோகத்தை நசிக்கும்-பசும் தோல் போர்த்த புலி போல –சங்கல்ப சூர்யோதயம்-தேசிகன்- கோ முகம் கவசம் இது போல /-ஒரே நாடகம் இவர் அருளியது/ மறை வாதியர்- குழப்ப சரியாக மறைத்து சொல்லும் வேதம்- அருளி செயல் இதற்க்கு இடம் கொடுக்காது  /

சாது மிருகங்களை நலிய நின்று உள்ள -சன்மத தூஷகரான குத்ருஷ்டிகளை வர்த்திக்கிற இந்த போமியிலே/ தண்மத தூஷகராய் வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவன் /விண்ணின் தலயில் இருந்து மண்ணின் தளத்துக்கு அவதரித்தார் /பிரதி பஷ கந்தம் சகிக்காமல் /தன் அரசு நாடாக கொண்டு திரியும் புலியை  விரட்ட //சீர்காழி- தாடாளன்- சேவிக்க வரும் பொழுதும் கலி மிக்க ஆரவாரம் துவனி உண்டு /மன்னிய சீர் தேங்கும் திரு குறையலூர்/குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு உடையவர்//இவரும் அவருமாய்-அமுதனார் ராமானுஜர்/ கலியன் ஆழ்வார் /இன்ப பாடல்/தொண்டர்க்கு அமுது உண்ண– இன்ப மாரி அருள் மாரி/அர்த்த ரசம் பொருள் செறிவு போக்யதை எல்லாம் கொண்டு பெரும் இடறு செய்து அனுசந்திக்கும் வேண்டும்  படி ஒலி மிக்க பாடல்/இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும்-மற்றை எண்மர்  நன் மாலைகள் -அங்க உபாகங்கள் பதினாலும் போல //உண்டு- முற்றூட்டாக கொண்டு-அனுபவ ஜனித ப்ரீதியாலே –சாமான அதிகரண்யம் -நீலம் வயிறு பெருத்து வாய் சிருத்து அலங்காரத்துடன்  தண்ணீர் தூக்க குடம்/ நீராய் நிலனே–அயனானாய் வின்னுமாய் விரியும் எம்பெருமான்-சரீர ஆத்ம பாவம் தான் அடிப்படி/மின் உருவாய்  முன் உரு பொன் உரு -வேதம் நான்காய் /நந்தா விளக்காய் சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா -/பரி பூர்ண ஞானம்-மிக பலம் உள்ள சீயம் /

பிரமித்து நசிக்க வைக்கும்-பிரமத்துக்கு  பிரமம் என்பர் -மறை வாதியர் -தனி கோல் சென்று நின்றன /குணா செஷ்டிதங்களை  புகழ கடவேன் அடையார் சீயத்தின் பாடல் ஸ்வாமி யை  வலி மிக சீயம் ஆகிற்று /

மறை வாதியர்களை  மறையும் படி -மறையை கொண்டே-மறைத்தார் ஸ்வாமி

89—போற்றரும் சீலத்து ராமானுச

போற்றரும் சீலத்து ராமானுச நின் புகழ் தெரிந்து

சாற்றுவனேல்  அது  தாழ்வது தீரில்  உன் சீர் தனக்கோர்

ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி

ஆற்ற  கில்லாது இதற்கு  என் நினைவாய்  என்று இட்ட அஞ்சுவனே

மட்டுவிக்கும் -சிறகுகின் கீழ் அடங்காத பெண்ணை பெற்றேன்-/பெண் பின்னே போனாள் அங்கு–இங்கு ராமன் பின் சென்றது தசரதன் கண்களும்/அமுதனாரும் மனமும் போனது–போற்ற அரியவனே-//பாடாமல் இருந்து விட்டால் சீர் தனக்கு ஏற்றம் என்று கொண்டு இருந்தாலும் //என் மனம் ஏத்தாமல் இருக்காது -இதற்க்கு உன் திட்டு உள்ளத்தில் என்ன நினைவு-அஞ்சுகிறேன் ஸ்வாமி..மூர்கர் என்று சிரிப்பாயா ?..ஏற்றினால் தாழ்வு  என்றேன் ஏற்றவும் செய்கிறேனே

நாளும் என் புகழ் கோ வுன சீனம் -திரு வாய் மொழி -௯-௩-௧௦/குகனுக்கும் நின்னோடு ஐவர் ஆனோம்–புகழ்ந்து தலை கட்ட அரிதான ஷீலா குணத்தை உடையவரே !தேவரீர் உடைய கல்யாண குணங்களை விவேகித்து லோக பிரசித்தம் ஆகும் படி பேசுவேன் ஆகில் /வேடர் தலைவன் குரங்கு கூட்ட  தலைவன், ராஷச தலைவன்- போல ..அன்றி ஊமைக்கும் அருளி ஆழ்வான் கூட ஊமையாக பிறக்காமல் எல்லாம் கற்றும் என்ன பலன் என்றாரே–அந்த சீல குணங்களை-தெரிந்து கொண்ட பின்பும்–பேச வந்தேனே-  சாற்றுவனே-பறைதல்- லோகம் எல்லாரும் தெரியும் படி பிரபன்ன காயத்ரியாக பாட வந்தேனே -வசிஷ்ட குணங்களை சண்டாளன் வர்ணித்து பேசுகை அவற்றுக்கு அவத்யமாய் தலை கட்டுமா போல -அது-இழிவாக இருக்கும்..அப் படி பேசுகை தவறில் -தீரில்-தேவரீர் குணங்கள் தனக்கு ஓர் உத்கர்ஷமாய் இருக்கும் என்று கொண்டே -வாழா இருக்கிலும்-பேசாமல் இருந்தாலும்-என் உடைய மனசு தேவரீர் குணங்களை ச்தோதரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறதில்லை//மூர்க்கு பேசுகின்றான்  இவன்என்று முனிவா யேலும்  என் நா வினுக்கு ஆற்றேன்  -வாக்கு தூய்மை இல்லாததால்-பெரி ஆழ்வார் -5-1-1-வாக்கு தூய்மை இல்லாமை-  பகவத் சந்நிதானத்தில் அசத்தியம் பேசுதல் பிரயோஜனான்தரம்–இது வரை பெரிய வாச்சான் பிள்ளை — கணிசிக்கை-இது தொடங்கி மா முனிகள் அருளி இருக்கிறார்.. தேவதாந்தர பஜனை கூடாது போல்வன /

அதே நடையில் எழுதி முடித்தார்/அது என் வசம் இல்லை.. மூர்கர் என்று முனிந்தாலும் ..என் நா பாடாமல் நிற்காது.. அது போல என் உடைய தசை .இதற்க்கு தேவரீர் எது திரு உள்ளம் பட்ட்ருகிறது என்று -பீதனாகா நின்றேன் –சாற்றுதல்-பறை சாற்றுதல்-பிரகாசமாக சொல்லுதல் /என் உடைய மூர்க்க தனம் தான் இது ../மாதரார் வலையில்- ஆத்மாவை வெய்யில் வைத்து உடலை நிழலில் வைத்து இருந்தேன் பூர்வத்தில்- பன்னலார் பயிலும்  பரனே -மொழியை கடக்கும் பெரும் புகழான்/ஸ்வாமி யை பேசி முடிக்க முடிய வில்லை என்று சொல்ல வில்லையே -சீரை -சீல குணம் ஒன்றையே போற்ற  முடியாது என்கிறார்/ திரு முக மண்டலம் பார்த்து- கிட்டே இருக்க வைத்தாரே- சீலம் குணம் தானே இது- எல்லாம் உமக்கு ச்வாபம் // உன்னை நான் பாடாமல் இருந்தால் தானே உனது பிரபாவம்–மனசு என் வசம் இல்லை- மூர்க்கர்-சொல்வதற்கும் செய்கைக்கும் பொருத்தம் இல்லையே –

கடல் வண்ணா கதறுகின்றேன் –ஒன்றும் இல்லை.,குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி  கொள் அந்தணமை  ஒழித்து விட்டேன்-கர்ம யோகம் இல்லை என் கண் இல்லை நின் காணும் பக்தனும் அல்லன்- ஞான பக்தி யோகம் இல்லை/களிப்பது என் கொண்டு நம்பி-குண பூரணனே- கடல் வண்ணா -காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு உண்டே /கதுருகின்றேன்-/ஏரார் விசும்பில் இருப்பு அரித்தாக கூப்பிட்டார் /பிர பன்னன்மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி- ஏன் கதருகிரீர்– செய்த வேள்வியர் இல்லையோ..ஞானமில்லை என்று புரிய வைக்க தான்- சேர்த்து பேச தெரிய வில்லை.. அது போல இங்கும் நீர் மூர்க்கன் என்று நினைத்தாலும் -என்கிறார்

போற்றரும் சீலத்து ராமானுச- நேராக முகத்தை பார்த்து அருளும் படி உள்ள சீல குணம்  /யாராலே போற்ற -மிக ஸ்துதித்து தலை கட்ட வல்லாராலும் பேசி முடிக்க மாட்டாத சீல குணம்/பிள்ளை உறங்கா வல்லி தாசரை -உயர்ந்த அரணனின் கரியவாகி புடை –கண்களை  காட்ட சொல்லி/மிலேச்சனும் பக்தன் ஆனால் /காய சுத்தி அன்ன சுத்தி ஸ்தல சுத்தி பண்ணின—காய சுத்தி- தவராசன் படி துறை பாடிய வாளன் படி துறை- மோட்ஷம் திரு மங்கை ஆழ்வார் கேட்டு பெற்றது-திரு மங்கை மன்னன் படி துறை/ அடுத்து கீழ் பக்கம் ஆள வந்தார் படி துறை /அடுத்து தவராசன் படி துறை /தொட்டு கொண்டு கிழக்கே  வரும் காவேரி-தவத்துக்கு ராசா எதிராஜர்-கேசவ பெருமாள் சந்நிதி இருந்ததாம் பக்கம்/மாட வீதி/பிரதஷணம் பண்ணி வடக்கு வாசல் மேடம் எழுந்து அருளி வருவார்/ மேற்கு பக்கம் மா முனி திரு அரசு /யதீந்திர பிரவணம் இதை எழுதி வைத்து இருக்கிறார்/தாசரை பிடித்து கொண்டு எழுந்து வருவாராம்- காயத்தை சுத்தி பண்ணி கொள்ள-/வூமை தம் திருவடி தாமரைகளை பாதுகை உடன் சேர்த்து-பேரு பெறவில்லையே -கூரத் ஆழ்வான் /போற்ற அரும் சீலம்/என்றும் சீல கை ஈச -சீல  ஏஷ-சர்வேச்வரனின் சீலத்தை பாடி முடிக்கலாம் ஸ்வாமி சீலத்தை –மகிமை மகா ஆரணவம்–திவலை கூட ப்ரஹ்மாதிகள் அறியார் /சேஷோவா-சைனா நாதீவா-உடையவர் என்பதால் -ஸ்ரிய பதிக்கு தான் தெரியும்-.

விசாரம் பண்ண வேண்டும் ஸ்வாமி இடம் மட்டுமே-நமது பிரணவ மண்டனம் நவ காஷாய திரி தண்ட பரி மன்டிதம் திரி தத்வ நிர்வாககம் தயாஞ்சித–வாக் வைபவம் சம தம குண சாகரம் சரணம் /தெரிந்து தெளிந்து -புலிங்க விருத்தாந்தம் புலி வாய் மாமிசம் சாப்பிட்டு கொண்டே பறவை சாகாசம் பண்ணாதீர் என்று சொல்வது போல /-ஆச்சார்யர் நினைப்பதை செய்வார்கள் சொல்வார்கள்/தேர்ந்து ஆராய்ந்து சாற்றுவது-அவத்யமாய் தலை கட்டும்/வசிஷ்டரை சண்டாளன் பாடுவது போல/இமையோர் -உன் பெருமை மாசூணாதோ மாயனே–வள எள் உலகுக்கு மூர் பட்ட ஆழ்வார்- நிச்ச அனுசந்தானம்- நினைந்து நைந்து-பொய்யாக யசோதை நப்பின்னை நித்யர் பண்ணுவது எல்லாம் பண்ணி- விலகுகிறேன்-பருவத்தில் ஈசனை படைத்து கிட்டே கூட்டு கொண்டான்/ வானோர் இறை- ஏழு உலகுக்கும் வித்து -வானோர் இறை- அவர்கள் சொல்ல சொன்னேன் நீ ஏமாந்து போனாய்../வானோர்க்கு -இறை -அறிவினையேன்-குறுக்கே மயர்வற மதி நலம் அருளினது சொன்னது போல -இங்கு வினைகளை — -களவேல்  வெண்ணெய் உண்ட கள்வா என்பன்-யசோதை போல சொன்னேன்-பின்னைக்காய் வல்லான் ஆயர்  தலைவனாய் ..எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –பின்னை போலவும் நினைந்து சொல்லி ஏமாற்றினேன்/பேச வந்ததே தவர்- அதை கூட ப்ரஹ்மாதிகள் சொல்லாம்- நானும் சொன்னேனே -இமையார் பலரும் முனிவரும் புனைந்து கன்னி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினார் .. நினைந்த எல்லா பொருள் கட்கும்  வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் -உன் பெருமை மாசுனாதோ மாயோனே-

அது தீரில்-தவிர்ந்தால்-உன் சீர் தனக்கு ஏற்றம் என்று கொண்டு இருந்தாலும்– சீர் எப்படி பட்டது-ராமானுஜ பதாம்புஜம் கிடைத்தால் பிரம்மா லோகமும் துருணம் போல நினைக்கும்-யோ நித்யம்- அச்சுதம் பதாம் புஜ யுகம வியாமோகம் -சாம்யத்தை கொடுக்க கடவ மகா பிரபாவம்-உள்ள சீர்/நமக்கே தன்னை தரும் கற்பகம் /இதை தெரிந்து இருந்தேன்-இருந்தும் அதி சஞ்சலமாய் அதி சபலமாய், நின்ற வா நில்லா நெஞ்சு-/செல்கின்றது என் நெஞ்சமே-திரு குறுங்குடி நம்பியை கண்ட பின்-மனசும் கண்ணும் ஓடி எம்பிரான் திரு வடி கீழே -என் நெஞ்சினாரும் அங்கெ ஒளிந்தார்  இனி யாரை கொண்டு உசா துணை யாரோ ./அந்தி காவலன் .தமியேன்  தன் ந்தை போயிற்று திரு அருள் //உபசாரம் என்ற பெயரால் பண்ணும் அபசாரம் -அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணாமல் தரிக்காது மனசு// மெய் வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பார் –கேட்டு அதன் படி அனுஷ்ட்டிப்பர்/–அது போல இங்கும்- ஏற்றம் என்று  கொண்டு இருக்கிலும்-வாழா இருக்கிலும் என்று கொள்ள வேண்டும்../

ஆவி அரங்க மாலை தூய்மை இல் தொண்டனேன் அழுக்கு உடம்பு எச்சில் வாய்-திரு மங்கை ஆழ்வார்/காக்கை வாயிலும்  கட்டுரை கொள்வர் /நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அஞ்சுவன் என் வசம் அன்று -பெரியாழ்வார்/

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: