திரு விருத்தம் -13-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

ஆசுவாச கரமான  காலம் போக்கையும் ,பிரதி கூலமான காலம் வருகையும் ,அதற்க்கு சக காரிகள் குவாலா  லாகையும் ரஷகன் வாராது ஒழிகையும் முடிந்தோம் இறே என்கிறாள் .பகல் பதார்த்த தர்சனம் பண்ணி ,இந்த்ரியங்கள் அந்ய பரம் ஆகையாலே , தரித்து இருக்கலாம் …ராத்திரி எல்லாம் ஒக்க ,உபதரமாய் ஒரு மடப் படுகையாலும் ,சம்போய யோக்யமான காலம் ஆகையாலும் தரிக்க ஒண்ணாது

 

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-
பாசுரம் -13-தனி வளர் செங்கோல் நடாவு -தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –மல்லிகை கமழ தென்றல் -9-9-

தனி வளர் செங்கோல் நடாவு -பாவியேன் பர பஷம் பட்டது என்கிறாள்..ராத்ரியிலே சந்திரனும் நட்ஷத்ரங்களும் கூட செலுத்தினது எல்லாம் தானே ,தானே ராத்ரியை போல,சத்தா நாசம் பண்ணி செலுத்துகை அன்றியே.. எதிரிகளும் நிற்க செய்தே அசத் கல்பமாம் படி தேஜஸ் ஆலே அமுக்கி  செலுத்துகை ..குருந  ப்ரச்சாதையா நஸ்ரியா —

செங்கோல் நடாவு-மனுமாந்த் தாதாக்களை போல

தழல் வாய் அரசு அவிய -அநபிபவநீயன் கிடீர் இப் படி பட்டான்

அரசு-ஏக வீரன்

அவிய -விளக்கு அவிந்தார் போல/ ஒண் சுடரோன் வாராது ஒழிந்தான் -என்னும் தசைக்கு அவ் அருகே இருந்தபடி /விடிய காணாம் ஆகையாலே இவன் முடிந்தான் என்கிறாள்

பனி வளர் செங்கோல் இருள் வீற்று இருந்து -குளிர்ச்சியை வளரா  நின்று உள்ள செங்கோலை உடைய ராத்திரி பூமி பரப்பை அடங்க தனக்கு இருப்பிடமாக கொண்டது ..ராஜ்ஜியம் பண்ணின ராஜா முடிந்தால் வேற ஒரு ராஜா புகுருமா போல ..புதுக் கோமுற்றாரை கண்டால் நடுங்குமா போல வீற்று  இருந்தது ..ஆதித்யன் ராஜ்ஜியம் இத்தினியும் ,ராத்ரிக்கு அழகு ஓலக்கம் இருக்க போந்த இத்தனை

வீற்று இருந்து -இனி எதிரிகள் இல்லை என்னும் படி இருந்தது

பனி வளர் செங்கோல் வீற்று இருந்து -அரை களிலே ஒளித்து கிடந்தார் புறப் படுமா போலே

துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து-தினி வலை காப்பவர் ஆர்–துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை துழாவி வருகிற குளிர்ந்த வாடையை இரு முறியாக வெட்டி இனி வலையை காப்பவர் ஆர் ?தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில்  உறைப்பு

இனி வளை காப்பவர் ஆர் ? -வந்து கிட்டுவது  காணும் என்று இருக்கிறாள்

எனை வூழிகள் ஈர்வனவே –அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன ..ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: