ஸ்ரீ முகுந்த மாலை-ஸ்லோகங்கள்-25-40- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

 

ஆம்னாய அப்யாசனாநி அரண்ய ருதிதம்–வேத வ்ரதான் யன்வஹம்
மேதச் சேத பலானி பூர்த்த விதயஸ்-சர்வே ஹூதம் பஸ்மநி
தீர்த்தாநா மவகாஹனானிச-கஜஸ்நா னம் விநாயத்பத
த்வன் த்வாம் போருஹ சம்ச்ம்ருதீர்-விஜயதே தேவஸ் ஸ நாராயணா--25-

விநாயத்பத த்வன் த்வாம் போருஹ சம்ச்ம்ருதீர்--யாவனொரு ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடித் தாமரை இணைகளில் சிந்தனை இல்லாமல் போனால் –
ஆம்னாய அப்யாசனாநி -வேத அத்யயனங்கள்
அரண்ய ருதிதம்–காட்டில் அழுவது போல் வீணோ -காப்பார் இல்லாத இடத்தில் அழுவது போலே என்றவாறு
வேத வ்ரதான் யன்வஹம்-நாள் தோறும் செய்கிற வேதங்களில் சொன்ன உபவாசம் முதலிய விரதங்கள்
மேதச் சேத பலானி -மாம்ச சோஷணத்தையே பலனாக உடையனவோ
பூர்த்த விதயஸ்சர்வே -குளம் வெட்டுதல் -சத்திரம் கட்டுதல் முதலிய தர்ம கார்யங்கள் யாவும்
ஹூதம் பஸ்மநி -சாம்பலில் செய்த ஹோமம் போல் வியர்த்தமோ
தீர்த்தாநா மவகாஹனானிச-கஜஸ்நா னம் -கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களில் நீராடுவதும் யானை முழுகுவது போல் வியர்த்தமோ
நாராயணன் ஸ்மரணம் இல்லாமல் செய்யப் பட்டால் எல்லாமே பழுதாம் –
விஜயதே தேவஸ் ஸ நாராயணா-அப்படிப்பட்ட தேவனான நாராயணன் அனைவரிலும் மேம்பட்டு விளங்குகிறார்

திரு ஆராதனம் -கர்ம பாகம் ஞான பாகம் இரண்டிலும் ஞான பாகம் உயர்ந்தது அவனுக்கு அடிமை என்ற உணர்வு.

கர்ம பலன் ஸ்வர்கம் மட்டுமே என்ற தப்பான கருத்து விட்டு அவனுக்கு கைங்கர்யமே பலன் ..கர்ம விட கூடாது..வர்ண ஆஸ்ரம கர்ம பண்ணி பக்தியை தக்க வைத்து கொள்ளணும்..கர்ம -பகவத் ஆராதனா ரூபம் ..பக்தி இன்றி எத்தனை பண்ணினாலும் வீண்..ச தவ நாராயண விஜயதே -அந்த தேவன் ஜெயிக்கிறான்.. பத தவந்த -அவன் திருவடி இணைகளில்  நினைவு இல்லாமல் /ஆம்னாயம் -வேதம் அப்யசன-விடாமல் பாராயணம் பண்ணுவது..அரண்ய ருதிதம் காட்டில் அழுவது போல..வேத விரதானி- அன்வஹம் -நித்ய படி பண்ணுவது/. மேதம் மாமிசம் சேதம் வெட்டுவது பலானி- இதுவே பலன்..இஷ்டா பூர்தம்- தர்ம காரியங்கள் செய்தாலும் பஸ்மம்- ஜொலிக்காத அக்னி-ஆகுதி கொடுத்தால் போல..தீர்த்தானாம்- புண்ய தீர்த்த நீராடுதல்..

யானை குளியல் போல இருக்கும் /பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே மோஷம் ஞானம் கனிந்து பக்தி யாக மாறி மோஷம் மதி நலம்..ஊன் வாட உண்ணாது உயர் காவல் இட்டு உடல் பிரியா புலன் ஐந்தும் நொந்து ..தவம் உள்ள வால்மீகி  தபச்னி நாரதர் இடம் கேட்டார். ராமனின் கல்யாண குணங்கள் பற்றி….. பொருப்பிடையே நின்றும் புனல் குளித்து ..ஐந்து நெருப்பின் இடையே நீர் நிற்கவும் வேண்டா –விருப்புடைய வெக்காவை சேர்ந்தானை கை கூப்பி -விளக்கினில் விதியை காண்பார்..இளைப்பினை இயக்கம்  நீக்கி இருந்து-முன் இமையை கூட்டி அளப்பில் ஐம் புலன் அடக்கி  அன்பை அவர் கண் வைத்து துளக்கம் இல் சிந்தை செய்து –ஆங்கே விளக்கினை விதியில் காண்பார் மெய்மையில் கான்பிப்பாரே -கண்டவர் இல்லையே ..அவன் அனுக்ரகத்தால் தான் காண முடியும்,…கதிக்கு பதறி.. ..கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் –..பெரியவர் பாதங்களே துத்திகும் பரமன் அடி பணிந்து..தன் சரண் தந்திலன்அரங்கன்  ..தான் அது தந்து ..பெரியானை புந்தியால் சிந்தியாது.. ஓதி உரு என்னும் ஆம் பயன் என் கொல். மேம் பொருள் மேல் பாட்டு.வேதம் நான்கும் ஓதி சாதி அந்தணர்கள் எழும் நுமர்களை பழிப்பர் ஆகில் –.புலையர் போலும் ..மார்பில் பூணூல் வாராய் விடும்.. தோல் வார் போல .கர்ம சண்டாளர்கள் -உஜீவனம் வலி இல்லை..

வேத அப்யாசம்-திரு வடிகளை மறந்து -ஸ்ருது ஸ்மிர்த்தி அவனது ஆணைகள்..அவரையே மறந்து அப்யாசத்தாலே பயன் இல்லை..விரதம் செய்வதே -ரிஷி பத்னி கதை..வேர்த்து பசித்து ..குளம் வெட்டுவது பக்தர்களுக்கு ..கங்கை உள்ளே மீன் சம்பந்தம் இருந்தாலும் இழந் தது . மனு- ஞானம் இல்லாதவன் தீர்த்தம் ஆட வேண்டாம்.. ஞானம் உள்ளவனும் .திரு விக்ரமன் சிரேஷ்ட
பாத தீர்த்தம் என்ற உணர்வு வேணும்….லோகம்  அடங்க ஜெயிக்கிறான்-

———————————————————-

திரு நாம வைபவம் அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்..ஸ்ரீ மான் நாராயணன் பெயர்-சொல்லி-எந்த தாழ்ந்தவன் கூட ஆசை பட்டதை அடைந்து இருக்காமல் இருக்கிறான் ..வாக்கு முன் பிரவர்த்தி இன்றி கற்ப வாச துக்கம் இருந்து இருக்காது அந்தோ..அஜாமிளன் கதை –

ஸ்ரீ மன் நாம ப்ரோச்ய நாராயண ஆக்க்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சி தம் பாபி நோபி
ஹா ந பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேன ப்ராப்தம் கர்ப்ப வாஸாதி துக்கம்--26-

ஸ்ரீ மன் நாம ப்ரோச்ய நாராயண ஆக்க்யம்--ஸ்ரீ மன் நாராயணன் என்கிற திரு மாலின் திரு நாமத்தைச் சொல்லி
கே ந ப்ராபுர் வாஞ்சி தம் பாபி நோபி-எந்த பாபம் செய்தவர்களானாலும் தம் இஷ்டத்தை அடைய வில்லை
ஹா ந பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்-நம் வாக்கானது முன்னே அந்த நாராயண நாம உச்சாரணத்தில் செல்ல வில்லை
தேன ப்ராப்தம் கர்ப்ப வாஸாதி துக்கம் .—-அந்தோ அதனால் கர்ப்ப வாசம் முதலான துக்கம் நேர்ந்தது
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்-மாறில் போர் செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உன்னை எய்தலாகும் என்பர் -திருச் சந்தவிருத்தம் –
மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் -திருமாலை –
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –மூவாத மாக்கதிக் கட் செல்லும் வகை யுண்டே -என்னொருவர் தீக்கதி கட்ச் செல்லும் திறம் –

 

பொய் கலவாத அருளி செயல் விசுவாசம் வேணும் பொய் இலாத மா முனிகள்..உறுதியும் நம்பிக்கையும் வேணும். பச்சா தாபம் சாது சமாகமும் ஏற்பட்டது.. நரகமே ஸ்வர்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி..வைத்து நின்னை ..வந்து உன்னை எய்தல் ஆகும்-சிசுபாலனும் பெற்றானே ..கண்ணன் சேர்த்து சொன்னதால்-

கத்திர பந்தும் பராங்கதி கண்டு போனான் ..பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் இருக்கிறோம்..ஷத்ரியன் காட்டில் ஞானியை பார்த்து மூன்று எழுத்து சொல்லி கொடுக்க..அதனால் பெற்றான்.. நமனும் முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கம் ஆகும். கேசவ நாம ஏற்றம் ..நரகில் நின்றார்கள் கேட்க்க -சொல்ல வில்லை. நரகமே ஸ்வர்கம் ஆகும்.. புல் எழுந்து போயினவாம் ..அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து  ..அதற்கே கவல்கின்றேனே ..நா வாயில் உண்டே . மா வழி செல்லும் வழி உண்டே  தீ கதி கண் செல்கின்றார்மாதவன்  பேர் சொன்னால் ….தீது ஒன்றும் சாரா ..திரு மறு மார்பன்  நின்னை சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தார் ஆகில் வினையர் எழும் அரு வினை பயனை உய்யார் ..கெடும் இடர் ஆயின எல்லாம் கேசவா என்ன ..நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடமை கண்ட. அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கா என்று அழைப்பர் ஆகில் .பொறியில்  வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றோ.. அறிவு இன்றி வேற எதை பண்ணினாலும் லாபம் இல்லை இப் பொழுது தான் பார்த்தோம்..

ஸ்ரீ மன் நாராயணன் -திரு மால்.. நீயும் திரு மாலால் கோட் பட்டாயே..கொக்கை கட்டி அழுகிறார் ஆழ்வார் பிரி வாற்றாமை ..வெளுத்து உன்னையும் வஞ்சித்தானா ? பசலை நோய்..வஞ்சகன் கூட திரு மால் தான்..மிதுனத்தில் ஆழ்ந்தவர்கள்..முடி சோதி  முக ஜோதி மலர்ந்ததுவோ… அடி சோதி ..திரு மாலே கட்டுரையே –திருவே மாலா  மாலே திருவா . முகமே கிரீடமா போல..-

எந்த பாவி தான் பெறாமல் போனான்..கரு வரங்கத்துள் கை தொழுதேன்..-கற்ப ஸ்ரீ மான்கள்..அந்தோ சொல்லாமல் இழந்தேனே என்கிறார்-

———————————————–

 

மஜ்ஜன்மன பலமிதம் மதுகைடபாரே
மத் ப்ரார்த்த நீய மத நுக்ரஹ ஏஷ ஏவ
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத.….27

மஜ்ஜன்மன பலமிதம் மதுகைடபாரே-மது கைடபர்களை நிரசித்தவனே -அடியேனுடைய ஜன்மத்துக்கு இதுவே பலம் –
மத் ப்ரார்த்த நீய மத நுக்ரஹ ஏஷ ஏவ-என்னால் பிரார்த்திக்க தக்கதாய் என் விஷயத்தில் நீ செய்ய வேண்டியதான அனுக்ரஹம் இதுவே தான் –
ஏது என்னில் –
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய-ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக நாத…வாராய் லோக நாதனே -அடியேனை உனக்கு சரமாவதி தாசனாக திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
யஸ் சப்த பர்வ வியவதான துங்காம் சேஷத்வ காஷ்டாமபஜன் முராரே -தேசிகன்
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
இங்கனம் தேவரீர் திரு உள்ளம் பற்றினால் தான் அடியேன் ஜென்மம் சபலமாகும்

நம பத அர்த்தம்.. பிரணவதுடனும் நாராயண சேர்ந்து அர்த்தம் கொள்ளணும் ..ஓம் நம/ நம நம/ நாராயண நம /ஹார மத்திய மணி நியாயம்…ஸ்வரூப
உபாய புருஷார்த்த சிஷ்யை.. அனந்யார்க்க சேஷ பூதன் ஸ்வரூபம்..எனக்கு நான் இல்லை /அவனே உபாயம் .பொறுப்பு என்னது இல்லை /அவனுக்கு கைங்கர்யம் பண்ணுவதே புருஷார்த்தம் என் ஆனந்தத்துக்கு இல்லை.. தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே….ததீய சேஷத்வம் உண்மையான பொருள். அடியார்ந்த ..அடியார் அடியார்.. அடியோங்களே பக்த பக்தன்..பயிலும் திரு உடையார் எவேரேலும் என்னை ஆளும் பரமரே …. நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை ..நம் பிள்ளை நஞ்சீயர் சம்வாதம்.8-10-11- அல்லி கமல கண்ணன்.. தன் பிரபாவம் கேட்டால் கண்ணன் அடியார் பிரபாவம் கேட்டால் அல்லி கமல கண்ணன்.. பட்டரும் பிராட்டி பிரபாவாம் பெரிய பெருமாள் இடம் அருளி கவசம் நிறைய சாத்துவேன் ..பூரிப்பு ..

அடியார்க்கு அடியார் என்றால் உடன் சேவை.. . மத பக்த பக்தேஷு..அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு   அருள் தருவான் அமைகின்றான் -திரு வாட்டாறு எம்பெருமான் .. நெடியார்க்கு அடிமை பயிலும் சுடர் ஒளி..கண் சோறு ..என்தலை மேலே/ தேட்டறும் ..ஈட்டம் கண்டிட கூடுமேல்..

என் உடைய ஜன்மாவுக்கு மது கைடபர் அளித்தவனே..உன் உடைய பரிசாரக ப்ருத்ய ஆறு தடவை..சடகோபர் போல அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் தன் அடியான் சப்த -சேஷத்வ காஷ்டை எல்லை நிலம்..

கரணம் தப்பி விழுந்தால்..கண்ணன் இடம் விழுவார் மதுர கவி..கொடு மா வினையேன் -அவனையே பாடினேன் -அடியார் பெருமை பாட வில்லையே..மோஷமே ஒரே கதி கொடுப்பவர்கள் பாகவதர்கள்..விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி.. ஒரே ஜாதி..துக்கத்தையும் பகிர்ந்து கொள்வார்கள் விச்லேஷத்தில்../கொண்டும் அருளுவார்கள்..அவன் கண்டே அருளுவான்..முயல்கின்றேன் உன் தன் மொய் கழல் அன்பையே-மதுர கவி ஆழ்வார்.. எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்பு .. அக் குற்றம் அப் பிறப்பு அவ் இயல் வே நம்மை ஆட் கொள்ளும் -அமுதனார்..

இப் படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் -ஆறாவது -இது வருவது துர் லபம்-மா முனிகள் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் ….நம்பனை ..தொழு குலம் தாங்களே ..அடியார் குடிகள் ஆட்  செய்யணும் . ஏழ உடன் அருளியது சந்தஸ் அளவுக்கு உட் பட்டு..

————————————————-

 

நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா-மேகாதி பே சேதசா
சேவ்யே ஸ்வஸ்ய பதஸ்யா தாதரி ஸூரே நாராயணே-திஷ்டதி
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபய க்ராமேச மல்பார்த்ததம்
சேவாயை ம்ருக யாமஹே நரமஹோ-மூகா வராகா வயம்––28-

புருஷோத்தமே-புருஷோத்தமனாயும்
த்ரிஜகதா-மேகாதி -மூன்று லோகத்தார்க்கும் -எல்லா லோகத்தார்க்கும் -ஒரே கடவுளாயும்
 சேதசா சேவ்யே -நெஞ்சினால் நினைக்கத் தக்கவனாயும்
ஸ்வஸ்ய பதஸ்யா தாதரி -தனது இருப்பிடமான பரமபதத்தையும் அளிப்பவனாயும் உள்ள
ஸூரே நாராயணே–ஸ்ரீ மன் நாராயணனே தேவன்
நாதே ந திஷ்டதி சதி –நமக்கு நாதனாய் இருக்கும் அளவில் -அவனைப் பற்றாமல்
யம் கஞ்சித் நரம் புருஷாதமம் -யாதொரு மனிதனை புருஷர்களின் அதமனாயும் இருக்கிற
கதிபய க்ராமேச மல்பார்த்ததம்-சில கிராமங்களுக்கு கடவனாயும் -ஸ்வல்ப தனத்தை கொடுப்பவனாயும்
சேவாயை ம்ருக யாமஹே -சேவிப்பதற்குத் தேடுகிறோம்
அஹோ-மூகா வராகா வயம்—-ஆச்சர்யம் -இப்படிப்பட்ட நாம் ஊமைகளாயும் உபயோகம் அற்றவர்களாயும் இரா நின்றோம்
வயம் ம்ருக யாமஹே -என்று உத்தம -தன்மையாக -அருளிச் செய்தாலும் நீங்கள் இப்படி ஓடித் திரிகிறீர்களே -என்று பிறரை அதி ஷேபிக்கிறார்

நாதன் இருக்கும் பொழுது..விட்டு விட்டு..புருஷோத்தமன்..புருஷன்-பக்தர் ../அபுருஷ- அசித் /உட் புருஷ -முக்தன் உத்தர புருஷன் -நித்யர் /ஐந்து விரல்கள் போல..மேம் பட்டவன்-ஒரே சக்கரவர்த்தி–சுவாமி- மனசால் த்யானம் பண்ண பட்டவன்..தன் உடைய ஸ்தானம் அருளுபவன்..இப்படி பட்ட இவன் நிற்கும் பொழுது..கா குருஷன்- புருஷ அதமன்–எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்ய வில்லை என்பான் உத்தமன்.. ஒன்றுமே செய்யாமல் எல்லாம் செய்தேன் என்பான் அதமன்.. அல்ப கிராமம் ஈசன்.. அல்ப அர்த்தம் கூரை உண்டியே உடையே உகந்து ஓடும். ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடம்..இந்த்ரன் -மோஷம் கேட்க்க கொடுக்க முடியாததால் வருத்தம் தம் இடம் இல்லாதவன்  -வேஷ்ட்டி இல்லாதவன் இடம் வேஷ்ட்டி கேட்டல் போல..ஆதி பிரான் நிற்க-கபால நன் மோகத்த்தில் கண்டு கொள்மின்….பொலிந்து நின்ற பிரான் கருட வாகனும் நிற்க –..திஷ்டதி..இங்கு–சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே 

அல்ப அர்த்தம் –சேவை பண்ண சூத்திர தேவதைகள் பேச நின்ற சிவனுக்கும் .. நாயகன் அவனே..வேதம் ஒன்றாலே சொல்ல பட்ட பெருமை .. வேதம் இவன் ஒருவனையே சொல்லும்..பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே..புயல் மழை வண்ணர் மயல் புகு பொழில் சூழ் மால் இரும் சோலை .. அயன் மலை அடைவது அது கருமமே ..தனக்கு நிகராக வைத்து கொள்ளும் அவன் இருக்க ஸ்ரீ ரெங்க நாத மம நாத ..நா கொடுத்தவனை ஸ்தோத்ரம்  பண்ண வேணும்..

—————————————————–

 

மதன பரிஹர ஸ்திதம் மதீயே
மனசி முகுந்த பாதார விந்ததாம்னி
ஹர நயன க்ருசாநுநா க்ருசோஸி
ஸ்மரசி ந சக்ர பராக்கிரமம் முராரே-—29-

மதன -வாராய் மன்மதனே
பரிஹர ஸ்திதம் மதீயேமனசி முகுந்த பாதார விந்ததாம்னி-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடித் தாமரை கடுகு இருப்பிடமான என் நெஞ்சில் இருப்பை விட்டிட்டு
ஹர நயன க்ருசாநுநா க்ருசோஸி-சிவனுடைய நெற்றிக் கண்ணில் நின்றும் உண்டான நெருப்பினால் முன்னமே சரீரம் அற்றவனாக இருக்கிறாய் –
ஸ்மரசி ந சக்ர பராக்கிரமம் முராரே—-ஸ்ரீ கண்ணபிரானுடைய திரு ஆழி ஆழ்வானது பராக்கிரமத்தை நீ நினைக்க வில்லையோ
எம்பெருமானை அண்டை கொண்ட பலன் என் உள்ளத்தில் உள்ளது கிடாய் -அம்பரீஷ உபாக்யானம் முதலியவற்றில் கேட்டு அறியாயோ –

மன் மதனே -சாஷாத் மன் மதன் கண்ணன் இருப்பதால் வெளி ஏறு.. காமச்ரமம்-காம தேவனை சிவன் எரித்த இடம் அனங்கன்- அங்க தேசம்..முராரியின் சக்கர பிர பாவத்தை நினைவு படுத்தி கொள்..இளைத்து போய் இருகிறாய் சிவனின் முக் கண் எரிப்பால்..இருப்பிடம்-என் உடைய மனசில் முகுந்த பத அரவிந்த தாமரைகளுக்கு தாமம் இருப்பிடம். உன் இருப்பிடம் விலக்கி விடு ..

ஆசை -பேர் ஆசை -காமம்-சம்பந்தம் முதலில் காமம் ஆக மலரும்  பின்பு இதுவே குரோதம் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவை இரண்டும்.. இவை விரோதிகள் சத்ருவை ஜெயி-ஒருமையில் சொன்னான். அவித்யா தாய் வயிற்று பிள்ளைகள் இருவரும். ஆசை ஏற்பட்டு அடைய ஒட்டாமல் தடுப்பவர் மேல் கோபம் – பற்றுதல் இல்லாமல் கோபம் இல்லை.. வைதிக காமம் வேணும்..இப் பாரோர் சொல பட்ட மூன்று அறம் பொருள் இன்பம்….ஆராயில் தானே சீரார் இரு கலையும் எய்துவர்..மோஷமே இல்லை என்கிறார்..சேம நல் வீடும் நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் -வைராக்ய நிதி ராமானுஜர் அருளியது ..உத்தேச பிராப்த காமம்..கிருஷ்ண பக்தி..மதனன்-கரும்பு வில்.காம தேவா உன்னையும் உம்பியையும் தொழுதோம்..ஆண்டாள்..அனங்க தேவா..சாமன் காமனுக்கு தம்பி.. கிருஷ்ண காம அனுபவித்துக்கு ..கருப்பு வில் காம வேள்–என் மனசே இல்லை..திருவடி தாமரைகள் குடி புகுந்தன ..

வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் சிந்தனைக்கு இனியாய் புகுந்ததிர்  பின் வணங்கும் /வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட  வானவர் கொழுந்தே./உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றாய் -வெள்கி நான்  விலவர சிரித்திட்டேனே /கெட்டியாய் பிடித்தானே உருளும் பொழுது பிரகலாதன் / நெஞ்சமே நீள் நகராக / விஷ்ணு சித்தன் மனத்தே  கோவில் கொண்ட /

மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு மறப்பற என் உள்ளே மன்னினான்    தன்னை..தனி கடலே தனி உலகே  தனி சுடரே -இவை எல்லாம் விட்டு விட்டு வந்தான் ..

—————————————–

 

தத்தவம் ப்ருவாணாநி பரம் பரஸ்மாத்
மது ஷரந்தீவ சதாம் பலானி
ப்ராவர்த்தய ப்ராஞ்சலி ரச்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோ சராணி-–30-

தத்தவம் ப்ருவாணாநி -தத்துவத்தை சொல்லுகின்றனவாய்
பரம் பரஸ்மாத்-மேலானவற்றிலும் மிகவும் மேலான
மது ஷரந்தீவ சதாம் -சத்துக்களுக்கு மதுவை பெருக்கும்
பலானி இவ-பழங்களைப் போன்றனவாய்
ஜிஹ்வே-வாராய் நாக்கே
நாமாநி நாராயண கோ சராணி-ஸ்ரீ மன் நாராயணன் விஷயமான திரு நாமங்களை
ப்ராவர்த்தய -அடிக்கடி அனுசந்தானம் செய்
ப்ராஞ்சலி ரச்மி-அப்படி செய்வதால் உன்னை கை கூப்பி நிற்கின்றேன்

பரச்மாத் பரம் -உயர்ந்தவர்களில் உயர்ந்தவன்/ சதாம் சதுக்களுக்கு தேன் ஒழுகும் ரசம் ../நாராயணனை லஷயமாக கொண்ட நாமங்களை சொல்லு..உயர்வற உயர் நலம் உடையவன்..நாராயண பர ஜோதி  பர பிரம்மா..–தத்தவம் =உண்மை பொருள்..வீடுமின் உற்றவும் ஆதி மத்திய உபக்கிரமம் எண் பெரும் அந் நலத்து   ஒண் புகழ் ஈரில வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே – கல்யாண குணங்களுக்கும் இருப்பிடம் பன்னிரு திரு நாம பதிகம் நடுவில் கேசவன் தமர்…நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்..இரண்டாவது அர்த்தம் இது…சூழ் விசும்பு பதிகம் -வாழ் புகழ் நாரணன் -கீர்த்திக்கு இருப்பிடம்..மூன்றாவது அர்த்தம்..பத்ரி நாராயணன் சிங்காமை விரித்தான்..சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்கு ஆக ..ஒருவனே இருந்தான்.பர தெய்வம் வாசகம்.. உபய விபூதி நாதன்..

இஷ்வாகு குல தனம் நாராயணன் ஜகன்னாதன் -பிர பந்தம் முழுவதும் நாராயணன்..ஆயிரமும் திரு அரங்கனுக்கே -பட்டர்..பரஸ்மாத் பரம்..சமாசம்-சப்தம் சேரும் இடம்..தன்னை ஒழிந்த எல்லாவற்றுக்கும் இருப்பிடம்..ஆதாரத்வம்..நாரங்களை இருப்பிடமாக கொண்டவன் -அந்தர்யாமி..-வ்யாபகத்வமும் அந்தர்யாமித்வமும் நியமனத்வமும் சொல்லிற்று..

சத்துகளுக்கு மது ஓடி வரும் பழம் போல இருக்கும் இந்த திரு நாமம் -பஜ கோவிந்தம் நாக்கே – சொல்லு கை கூப்பி நன்றி சொல்வேன்.. பாட கேட்டு வளர்த்த தனால் பயன் பெற்றேன் மட கிளியை கை கூப்பி வணங்கினாரே ..-வெட்கம் -மடப்பம்- தன் உடைய சிஷ்யனை இருந்தாலும் பகவத் நாமம் சொன்னால் கௌரவிக்க வேணும்..

———————————————-

இதம் சரீரம் பரிணாம பேசலம்
பதத்ய வசியம் சலத ஸந்தி ஜர்ஜரம்
கிம் ஒளஷதை க்லிச்யசி மூட துர்மதே
நிராமயம் கிருஷ்ண ரசாயனம் பிப--31-

இதம் சரீரம் பரிணாம பேசலம்பதத்ய வசியம் சலத ஸந்தி ஜர்ஜரம்–இந்த சரீரமானது -நாளடைவில் துவண்டும் –
தளர்ந்த கட்டுக்களை யுடையதாய்க் கொண்டு சிதிலமாயும் அவசியம் நசிக்கப் போகிறது
கிம் ஒளஷதை க்லிச்யசி மூட துர்மதே-நிராமயம் கிருஷ்ண ரசாயனம் பிப-–வாராய் -அஞ்ஞானியே -கெட்ட மதி யுடையவனே –
மருந்துகளால் என் வருந்துகிறாய் -சம்சாரம் ஆகிய வியாதியைப் போக்குவதான ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற ரசாயனத்தை பானம் பண்ணு –

மூட துர்மதே– தெரிந்து கொள்வதை தெரியாதவன்/ தப்பாக தெரிந்து கொண்டவன் ஆத்மா நித்யம்  சரீரம் அநித்யம்  என்று தெரியாமல் தேகத்துக்கு ஒளஷதம்  சாப்பிட்டு -வேதனை படுகிறோம்.. கிருஷ்ண ரசாயனம் மருந்து  அவனே. உடல் மாறுதலுக்கு உட் பட்டது.. தளர்ந்து போய் சிதிலமாக போகும் ..மரம் சுவர் மதிள் எடுத்துமருமைக்கே வெறுமை பூண்டு  -புறம் சுவர் ஓட்டை மாடம்.புரளும் போது அறிய மாட்டீர் . புள் கவ்வ ../மின் நின் நிலையின மன் உயர் ஆக்கைகள் ..மின் உருவாய் பின் உருவாய் பொன்  உருவாய்-மூன்று  தத்தவம்…அவன் நித்யம் சொரூப சுபாவ விகாரம் இன்றி..ஜீவாத்மா ச்வாபம் மாறும்.. அசித் சொரூபமே மாறும்..அவிகாராய ..சதைக ரூபா ரூபாய -இரண்டும்..தளர்ந்து போன மூட்டு -சலத ஸந்தி ஜரஜரம்-குடிப்பாய்..

———————————————

 

தாரா வாரா கர வர ஸுதா-தே தநுஜோ விரிஞ்ச
ஸ்தோதா வேத ஸ்தவ ஸூரகணோ-ப்ருத்ய வர்க்க ப்ரசாத
முக்திர்மாயா ஜகத விகலம்-தாவகீ தேவகீதே
மாதா மித்ரம் வலரி புஸுதஸ் -த்வய்யதோக்யன் நஜானே -32-

தாரா வாரா கர வர ஸுதா-தேவரீருக்கு மனைவி திருப் பாற் கடல் மகளான பெரிய பிராட்டியார்
தே தநுஜோ விரிஞ்ச-மகனோ சதுர் முகன்
ஸ்தோதா வேத -ஸ்துதி பாடகனோ வேதம்
ஸ்தவ ஸூரகணோ-ப்ருத்ய வர்க்க -வேலைக்காரர்களோ தேவதைகள்
தவ ப்ரசாத முக்திர் -மோக்ஷம் தேவரீருடைய அனுக்ரஹம்
மாயா ஜகத விகலம்-தாவகீ -சகல லோகமும் தேவரீருடைய பிரகிருதி
தேவகீதே மாதா-தேவரீருக்குத் திருத் தாயார் தேவகிப் பிராட்டி
மித்ரம் வலரி புஸுதஸ் -தோழன் இந்திரன் மகனான அர்ஜுனன்
த்வய்யதோக்யன் ந ஜானே -அத அந்யத் த்வயி நஜானே -அதைக் காட்டிலும் வேறானவற்றை நான் அறிகிறேன் இல்லை –
கொஞ்சம் தான் அவனை பற்றி தெரியும் என்று சொல்லி நிறைய அருளிகிறார் …அதாக இதனால் அன்யது -வேற .அதைய அனோது/திரு பாற்கடல் வாராகர வரசுதா கடல் களில் சிறந்த பாற்கடல் பிறந்தவள் உன் பத்னி.அவள்..அடுத்து-…தனுனுஜா விரிஞ்ச -உன் பிள்ளை பிரம்மா-ஜகத்துக்கு பிதா மகன் ..ச்தூதா வேத-இவற்றை வேதங்களால் ..சொல்ல பட்டன ../ஓதுவார் ஒத்து   எல்லாம் பூவின் மேல் -இன்றியமையான அடையாளம் சாஸ்திர யோநித்வா அதிகரணம்.. சப்ததாலே தெரிந்து கொள்ள முடியும் அவனை//ஸ்தவ சுர கணோ ப்ருத்ய வர்க்க -முப்பத்து முக் கோடி தேவர்களும் தாச தாசி கணங்கள்…கள்வா எம்மையும்  .வெள்ளேறன் நான் முகன் புள் ஊர்தி கழல் பணிந்து யேத்துவர்களே.. …வரம் வாங்க கைலாச யாத்ரை போனார் ருக்மிணி உடன் ..கள்வா என்கிறார் பேரன் தாத்தா இடம்..

ப்ரசாத முக்திர்–சந்தோசம் அடைய பெரு  வீடு தந்தோம். பட்டர் திரு நெடும் தாண்டகம் சாதித்ததும் ஆனந்தத்தால் -மா வீடு கொடுத்தான்.. /உன் உடைய ஆச்சர்ய சக்தி தான் பிரகிருதி- மாயா../தேவகி உன் மாதா /.மித்திரன் -இந்த்ரன் பிள்ளை அர்ஜுனன்- வலரி ஸுத../ஆத்மா சக ..அன்யது தெரியாது.. ந ஜானே.. இப்படி பட்ட பெருமைகள் இருப்பதால் மற்று எவனையும் தெரியாது-

——————————————————

 

கிருஷ்ணோ ரஷது நோ ஜகத் த்ரய குரு-
க்ருஷ்ணம் நமச்யாம் யஹம்
க்ருஷ்ணே நாமர சத்ரவோ விநிஹதா
க்ருஷ்ணாய தஸ்மை நம
கிருஷ்ணா தேவ சமுத்திதம் ஜகதிதம்
க்ருஷ்ணச்ய தாசோ சம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டத சர்வ மேத்யதகிலம்
ஹே கிருஷ்ண சம்ரஷஸ்வ மாம் –-33-

கிருஷ்ணோ ரஷது நோ ஜகத் த்ரய குரு-மூன்று -எல்லா லோகத்தார்க்கும் தலைவனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மைக் காக்கட்டும்
க்ருஷ்ணம் நமச்யாம் யஹம்-நான் ஸ்ரீ கிருஷ்ணனை வணங்குகிறேன்
க்ருஷ்ணே நாமர சத்ரவோ விநிஹதா-க்ருஷ்ணாய தஸ்மை நம-யாவனொரு கிருஷ்ணனால் அசுரர்கள் கொல்லப் பட்டார்களோ அந்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்
கிருஷ்ணா தேவ சமுத்திதம் ஜகதிதம்-இந்த உலகம் கண்ணன் இடம் இருந்து உண்டா-நான் கண்ணனுக்கு அடியேனாய் இருக்கிறேன்
க்ருஷ்ணே திஷ்டத சர்வ மேத்யதகிலம்-இந்த ஸமஸ்த பிரபஞ்சமும் கண்ணன் இடத்தில் நிலை பெற்று இருக்கிறது
ஹே கிருஷ்ண சம்ரஷஸ்வ மாம் –ஸ்ரீ கிருஷ்ணனே அடியேனைக் காத்து அருள வேணும் –
பிரதமை முதல் எட்டு விபக்திகளும் இந்த ஸ்லோகத்தில் அமைத்து அருளி உள்ளார்

கிருஷ்ணன் நம்மை ரஷிகட்டும் /கண்ணனை நான் நமஸ்கரிக்கிறேன் /கிருஷ்ணனால் அமரர் சத்ருக்கள் அசுரர்கள் அழிக்க பட்டார்கள்/ மூன்று/கிருஷ்ணனுக்கு ஆய -நமஸ்காரம் நாலாவது வேற்றுமை/ /கண்ணன் இடத்தில் இருந்து ஜகம் உருவாயிற்று/ கண்ணன் உடைய தாசனாக இருக்கிறேன் ..ஆறாவது  /கிருஷ்ணன் இடத்தில் சர்வம் அகிலம் நிலை பெற்று இருக்கிறது/ ஹி கிருஷ்ணா கூப்பிடுகிறார் எட்டாவது விபக்தி.. .எட்டு வேற்றுமை உருபுகளும் அமைந்த ஸ்லோகம்

ரஷகத்வம் முக்ய கல்யாண குணம்..ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகன் இல்லை //நல்கித்தான் காத்து அளிக்கும் -நாரணனை கண்டக்கால்—வாசகம் கொண்டு அருளாயே..-சர்வ ரஷகன் என்பதால்.. குரு சுவாமி.. ஆயர் புத்திரன் இல்லை அரும் தெய்வம்..கண்ணனே தெய்வம்- முதல் ஆழ்வார்கள் நம் கண்ணன் கண்.- -.– தேவர் அல்லாரை தேவுமின் தேவு திரு மழிசை.ஆழ்வார்-அல்லது  இல்லை கண்ணே -சேர்த்து நம் ஆழ்வார் அருளினார்/ அநிஷ்டம் தொலைத்த்கு இஷ்டம் அளிப்பான்  ..-சர்வ ரஷகன்.. அநிஷ்டமும் இஷ்டமும் மாறும் அதிகாரிகளுக்கு ..குரு ஆச்சர்யராக இருந்தும் பிறந்தும் ரஷிகிறான் சஸ்திரமும்  சாஸ்திரமும் கையில் கொண்டு..

கீதாசார்யன் –அறிவினால் குறை  இல்லா ..நெறி எல்லாம் எடுத்து  உரைத்தான்..மாயன் அன்று ஓதின வாக்கு சேயன் அணியன் சிறியன் மிக  பெரியன் ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு -நித்யாத்வா நித்யங்கள்./முதல் அத்யாயம்.. .தேவாசுர விபாக ஆத்மா சாஷாத்காரம் பொருட்டு கர்ம ஞான யோகம் சொல்லி பக்தி சொல்லி தன் பெருமை சொல்லி பக்தி வளர வழி சொல்லி ..விபூதி சொத்து சொல்லி காண ஆசை பட்டவனுக்கு விஸ்வ ரூபம் காட்டி.சரண் உன் இந்த்ரியங்களை எண் இடம் வை என்று சொல்லி/ மறு படியும் இது விலை நிலம் உழவன் நல்ல குணங்களை பயிர் பண்ணனும்.. தேவ அசுர வித்யாசம் சொல்லி சாத்விக சரத்தை சொல்லி சரண் பற்று/பார்த்தன் அன்று ஓதிய ..மூன்று சோகம் அர்ஜுனனுக்கு உண்மை தெரிய வில்லை என்று ..ஆராய்ந்து மற்றவர்க்கு சொல்லு விரித்த குழலை சகிக்க மாட்டாத கண்ணன் ரத்னத்தை வெளியில் கொட்டி நெஞ்சு தடக் தடக் என்று சொல்ல இப்படி அருளுகிறான் ..,..

எது சரி -அவன் தானே சொல்லணும்.. சர்வ தரமான் அருளினான்..புறம்பு சொன்னது எல்லாம் இவன் நெஞ்சை சோத்திக்க தான் ..அடியேன் கண்ணனை நமஸ்கரிக்கிறேன்….போக்கிடம் இல்லை கையில் ஒன்றும் இல்லை..பிரத்யச்ரம் -நகாச்த்ரம் கருடாச்த்ரம்..நாராயனாச்த்ரதுக்கு பிரதி இல்லை..கை கூப்புவது தான் பிரதி..வில் நழுவியதும் ராவணன் -என்ன வீரம் வெறும் கை வீரன்..தோற்பதற்கு ராமன் பாக்கியம் பண்ண வில்லை..ஏஷ சர்வ ஆயுத விபீஷணன் கதையை கை கூப்பி நடுவில் வைத்ததால்../ராமனின் மர்மம் தெரிந்து வந்தனே-சுக்ரீவன்..அமர சத்ருகளை விநிஹிதம் பண்ணினான் ..முதல் திருவந்தாதி-அரவம் அடல் குரவை மல் குன்றம் விட்டு இருத்து /அரவம் விட்டு/அடல் வேழம் இருத்து-குவலையா பீடம்/ ஆன் மேய்த்து /குருந்தம் ஒசித்து /புள் வாய் கீண்டு/ குரவை கோத்து /குடம் ஆடி /முலை  உண்டு/ மலை அட்டு/ குன்றம் எடுத்த்கு .10 செஷ்டிதங்களையும் அருளி செங்கண் அவன் .. விரோதி முடித்தான் பூ பாரம் குறைத்தான்..அந்த கண்ணனுக்கு ஆய- சொன்னால் மந்த்ரம் ஆகும்..தஸ்மை நம..ஓம் கிருஷ்ணாய நம /கிருஷ்ணா தேவ சமுதிதம் ஜகதிதம்/கண்ணன் இடத்தில் இருந்து ஜகத் உற்பத்தி ஆகும் / வேர் முதல் வித்தை-கண்ணனை..

எல்லாம் சொத்து உருவானது லயத்து ரஷிக்க படுவதும்..-கிருஷ்ணா தேவ-அவன் இடத்தில் இருந்தே- ஏகாரம்..நிமித்த உபாதானசக காரி  .குடம் மண்-உபாதான காரணம்.. குயவன் -நிமித்த காரணம் /பகுச்யாம் -சங்கல்பித்து கொள்கிறான்.. அணுக்கள் பிரதானம் உபாதான காரணம் என்பார் ..பூர்வ பஷி..ஏக மேவ அத்வதீயம் சத்தாக இருந்தது ஒன்றாக இருந்தது ..மூல பிரகிருதி சரீரத்துடன் ஒன்றி இருக்கும்.. சரீரமே மாறி ஜகம் உண்டாகிறது.. ஒடுங்கி லயம் அடையும்..பூச்சி நூல் வெளி விட்டு கட்டி சுருட்டி கொள்வது போல..

ஏவ காரம் உபாதான காரணமும் என்று சொல்ல/வேர் முதலாய் வித்தாய்..முந்நீர் ஞாலம்படைத்த என்   முகில் வண்ணனே -அந் நாள்  நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்..க்ர்ஷ்ணச்ய  தாசம்  அஹம் -தேர் பற்றி எறிய அர்ஜுனன் இறங்கியதும்-

மகா விசுவாசம் வேணும் ..ஆயர் புத்திரன் இல்லை அரும் தெய்வம்..அன்ன கூட உத்சவம்  .கண்ணன் சொன்னான் -என்று கேட்டார்களே அந்த புத்தி வேணும்..அவனுக்கு தாசன் என்று பெருமை கொள்ளணும்..ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து வந்த பராத் பரன் என்று உணர வேணும்.. அவன் ஆதாரம்..  கிருஷ்ணா தேவ  சமுததிதம் ஜகத் இதம் –உள்ளே  வந்தாலும் அவனே ஆதாரம் சம்ரஷா மாம் அடியேனை ரஷிப்பி –நியாசம் -உன்னை அன்றோ களை கணா கருதுமாறே- .யானை ஒன்றை கொன்று யானை காத்தாய் கன்று குனிலா எறிந்தாய் கன்றுகளை காக்கிறாய் பார பஷம்–காக்கிற கோஷ்டியில் என்னை வை..அடுத்த ஸ்லோகத்தால் பெருமானின் வாத்சல்யம் கொண்டாடுகிறார்-

——————————————————-

 

தத் தவம் ப்ரசீத பகவன்! குரு மய்யநாதே,
விஷ்ணோ க்ருபாம் பரம காருணிக: கில த்வம்
சம்சார சாகர நிமக்ந மநந்த!தீனம்
உத்தரத்து மர்ஹசி ஹரே புருஷோத்தமோசி-—34-

தத் தவம் -வேத பிரசித்தனான நீ
ப்ரசீத -குளிர்ந்த திருமுகனாய் இருக்க வேணும்
பகவன்! -ஷாட் குண்ய பரிபூர்ணனே
க்ருபாம் குரு -அருள் புரிய வேணும் –
மய்யநாதே,அநாதே மயி -வேறு புகலற்ற என் மீது
விஷ்ணோ -எங்கும் வியாபித்து இருப்பவனே
பரம காருணிக: கில த்வம்-நீ பேர் அருளாளன் அன்றோ
சம்சார சாகர நிமக்ந -சம்சாரக் கடலில் மூழ்கினவனாய்
தீனம்-அலைந்து கொண்டு இருக்கும் அடியேனை
அநந்த!-தேச கால வஸ்து -த்ரிவித அபரிச்சேத்யன் ஆனவனே
உத்தரத்து மர்ஹசி –கரை ஏற்றக் கடவை
ஹரே-அடியார் துயரை தீர்ப்பவனே
புருஷோத்தமோசி-—புருஷோத்தமனாய் இருக்கிறாயே –
பாபிஷ்டனான என் மேல் சீறு பாறு என்று இராமல் வாத்சல்யம் முன்னிட்டு -பிரசன்ன முகமாய் –
பேர் அருளாளன் -புருஷோத்தமன் என்பதற்குத் தகுதியாக பரம கருணையைப் பரவச செய்து
சம்சாரக் கடலில் அலையும் அடியேனை கரை ஏற்றினால் தான் உன்னுடைய இந்த திரு நாமங்கள் விலை செல்லும் –

நீ புருஷோத்தமன்-அதமர்களை கை பிடித்து தூக்கி விடணுமே- சம்சார சாகர நிமக்னம்/ தீனன்/ அனந்தன் நீ  உத்தர்தம் -தூக்கி விட ஹரியாக இருகிறாய் ..அனாதே மை அனாதையாக இருக்கிற எனக்கு க்ருபா குரு கிருபையை செய்/ பகவானே விஷ்ணு சத்வம் வேதத்தால் சொல்ல பட்ட / சக -அவன் ஆகிய நீ ..எத்தனை சொல்லி என் அவன் அவன் தன சொல்லி முடிக்க முடியாத —உன்  மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு….கொல்லியம் பாவை குவளை அம் கண்ணி நின் தாள் நயந்து இருந்தாள்-இவளை-சொல்லு .எல்லாம் சொல்லி இவள் என்றது சொல்லி முடிக்க முடியாது போல..பகவான்- ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -கொண்ட -மற்றவர் களுக்கு பகவத் சப்தம்..

உபசாரத்துக்கு சொன்னது ..பக +அன்-உடையவன்..ரஷிக்க ஞானம் பலம் நன்றாக ரஷிக்க -.. ஒவ் ஒன்றும் அநாதை யான என்னை ரஷிக்க அறிவு ஒன்றும் இல்லா  ஆய குலம் -குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் நீ ..சாம்யா பத்தி மோஷம் போல நீயோ பகவான் நானோ தீனன் குளிர்ந்த திரு முகத்தோடு -பிரசீத -அனுக்ரகிக்கணும்.. ஆறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலை அடைவது போல உன் புக்கு இலங்கு சரணே வேணும்…விஷ்ணு-வியாபகன்…நீக்கமற இருகிறேர் ..ந்யந்தருத்வமும் உண்டு ..ராஜா ஆகாசம் இரண்டும் போல ..பரம காருணிகன்-அதை காட்ட அநாதை தீனன் ..உன் குணம் காட்ட நாங்கள் தப்பு பண்ணி கொண்டே இருக்கிறோம்.பகல் விளக்கு படாமல் இருக்க ..

சம்சார சாகர நிமக்னம் -அழுந்தி இருக்கிறோம் அனந்த !-கால தேச வஸ்து மூன்றாலும் முடிவு இல்லாதவன் சத்யம் ஞானம் அனந்தம் பிரமம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்..தீனம் ..உத்தர்த்தும் ..

ஹரணம்-அபகரித்தல் -பாபம் திருடி கொண்டு போவான் ..ஏழு தடவை சொல்லி-ஹரி-குரங்கு-ரஷசிகள் திருவடியை பார்த்து ஹரி ஹரி சொல்ல -வால்மீகி ஆச்சர்யம் பட்டார்..ஆதிகாவ்யம் சுரங்கம் போல ..அநந்ய கத்தித்வமும் ஆகிஞ்சன்யமும் சொலி ரஷிக்க கூப்பிடுகிறார்-

———————————————

 

நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் சதா ,
வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வ மவ்யயம்––35-

நமாமி நாராயண பாத பங்கஜம்-ஸ்ரீ மன் நாராயணனுடைய திருவடித் தாமரையை சேவிக்கின்றேன்
கரோமி நாராயண பூஜனம் சதா ,-எம்பெருமான் உடைய திருவாராதனத்தை இடை விடாமல் எப்பொழுதும் பண்ணுகிறேன்
வதாமி நாராயண நாம நிர்மலம்-குற்றம் அற்ற ஸ்ரீ மன் நாராயணன் உடைய திரு நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணுகிறேன்
ஸ்மராமி நாராயண தத்வ மவ்யயம்—-அழிவற்ற பர தத்துவமான ஸ்ரீ மன் நாராயணனை சிந்திக்கிறேன்
தம்முடைய மநோ வாக் காயங்கள் மூன்று கரணங்களும் ஸ்ரீ மன் நாராயணன் இடம் ஆழம் கால் பட்டமையை அருளிச் செய்கிறார்

நாலு தடவை நாராயண நாமம் /பர பிரமம் ஜோதிஸ் பந்து.. திரு வடி தாமரைகளை வணங்குகிறேன்/கை அவனையே பூஜிக்கணும் /வாய் குற்றம்  இல்லா நாராயண நாமம் சொல்லணும் /அழிவற்ற தத்வம் நினை /மனசு வாக்கு காயம் மூன்றும் ஒன்றாக -மகாத்மா / துர் ஆத்மா ஒன்றாக இல்லா விடில்..-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை தாய் -அரவிந்த லோசனன். தொலை வில்லி மங்கலம்-கேட்கையால் உற்றதுண்டு ..வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சரத்தை தன்னால் –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது…செல்வ நாரணன் சொல் கேட்டு நல்கி என்னை விடான்..சதா பூஜனம் பண்ணனும்

————————————————–

ஸ்ரீ நாத நாராயண வாசு தேவ
ஸ்ரீ கிருஷ்ண பக்த பிரியா சக்ர பாணே
ஸ்ரீ பத்ம நாபா அச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே !—-36-

அநந்த வைகுண்ட முகுந்த கிருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி
வக்தும் சமர்த்தோபி ந வக்தி கச்சித்
அஹோ ஜநாநாம் வயசநாபி முக்யம்-–37-

 

ஸ்ரீ நாத நாராயண வாசு தேவ–ஹே ஸ்ரீ லஷ்மி பதியே -நாராயணனே -வா ஸூ தேவனே –
ஸ்ரீ கிருஷ்ண பக்த பிரியா சக்ர பாணே-ஸ்ரீ கிருஷ்ணனே -பக்த வத்சலனே -திருக் -சக்கரக் கையனே
ஸ்ரீ பத்ம நாபா அச்யுத கைடபாரே-ஹே ஸ்ரீ பத்ம நாதனே -அடியாரை ஒரு காலும் நழுவ விடாதவனே -கடவன் என்னும் அசுரனை நிரசித்து அருளினவனே
ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே !—-சக்கரவர்த்தி திரு மகனே -புண்டரீ காஷனே-பாபங்களை அபஹரித்து அருளுபவனே -முராசுரனை நிரசித்து அருளினவனே

அநந்த -முடிவில்லாதவனே –
வைகுண்ட -ஸ்ரீ வைகுண்ட நாதனே
முகுந்த -ஸ்ரீ முகுந்தனே
கிருஷ்ண-ஸ்ரீ கண்ணபிரானே
கோவிந்த -கோவிந்தனே
தாமோதர -தாமோதரனே
மாதவேதி–ஸ்ரீ மாதவன் –என்று இப்படி ஸ்ரீ பகவான் திரு நாமங்களை
வக்தும் சமர்த்தோபி ந வக்தி கச்சித்-சொல்லுவதற்கு சமர்த்தனாக இருந்தாலும் ஒருவனும் சொல்லுவது இல்லை –
அஹோ ஜநாநாம் வயசநாபி முக்யம்—இவ்வுலகோர் விஷயாந்தரங்களிலே மண்டி துன்பப பருவத்திலேயே நோக்கமாய் இருக்கும் தன்மை ஆச்சர்யம்
இது என்ன கொடுமை என்று பர அனர்த்தத்தை சிந்தனையால் பரிதபிக்கிறார்

சரவணம் கீர்த்தனம்.. அர்ச்சனம் ஆத்ம நிவேதனம்-ஒன்பது வித பக்தி..வியாசன -துன்பம்..வக்தும் சொல்ல சமர்தொபி சமர்த்தன் ந வக்தி சொல்ல வில்லை கச்தித் அஹோ ஜனானாம்- கேட்டு போகிறார்களே /ஸ்ரீ நாத பெரிய பிராட்டிக்கு சுவாமி/சேர்த்து வைக்கிறாள்/நமக்கும் சுவாமி– மம நாதனும்/ ஸ்ரீ ரெங்க நாத மம நாத// அரங்கம் ஆளி என்  ஆளி /  நாராயண -வாத்சல்யம்/சௌசீல்ய/ சொவ்லாப்ய  /ஸ்வாமித்வம் /வாசு தேவ நீக்கமற நிறைந்து விளை ஆட்டாக இன்புறும் இவ் விளை ஆட்டு உடையவன்/ ஸ்ரீ கிருஷ்ண பூமிக்கு ஆனந்தம் கொடுக்கும் ருக்மிணி நாதன்../பக்த பிரியன்-.இதனாலாவது ஸ்ரீநாமம் சொல்ல  வேணும்/ சக்கர பாணே-தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்- வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி/ ஸ்ரீ பத்ம நாப -உந்தி தாமரை படைத்து பிரமனை நாபி இல் படைத்தவனே  /பத்ம நாபாவோ ..அச்சுத -நழுவ  விடாதவன் /கைடபருக்கு ஹரி விரோதி நிரசன் / ஸ்ரீ ராம-ரம்யதி- பார்கிறவர்களுக்கு ஆனந்தம் /பத்ம அஷ-தாமரை கண்ணனே..

தாமரை கண்ணனை விண்ணோர் பரவும் கமல கண்ணன் என் நெஞ்சில் உள்ளாய் தாமரை கண்ணால் நோக்காய்/ ஹரே முராரே அநந்த அளவிட முடியாத வைகுண்ட ஞானம் குறைவில்லா முகுந்த மோஷ அளிப்பவன் கிருஷ்ண கருப்பவனே கோவிந்த கோக்களை வாக்கை தாமோதரன் தழும்பு கொண்டவம் தாமோதரனை ஆமோ தரம் அறிய ..சுலபம் தெரிந்து கொள்ள முடியாத வைபவம்../மாதவன் பால் ..பிறவாறே….வக்தும் இதி– இருபது  திரு நாமங்களை சொல்ல சாமர்த்தியம் இருந்தாலும் சொல்ல வில்லை// போது எல்லாம் போது கொண்டு.. உன் திரு நாமம் செப்ப மாட்டேன் ..ஆசை மட்டும் போக வில்லை..கதறுகின்றேன் .இது மட்டும் தெரியும் அளித்து அரங்க மா நகர் உள்ளானே ..

கிருபை ஒன்றே வழி..உன் நினைவு மாறாமல் இருக்க அருள்வாய் ..கோர்வை அடைவு வைஷ்ணவம் விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அர்த்த பஞ்சகம்..அடிப்படை சொத்து நமக்கு..நாம் யார் சொல்ல வந்தது தத்வ த்ரயம்.. மூன்று உண்மை பொருள்கள் ..அத்வைதம் ஒன்றே -பிரமமே- தத்வம்-மற்றவை மித்யை-பொய் / சாங்க்யம் —  ஜீவாத்மாவும் அசித்தும் இரண்டு என்பார்கள்-துவயம் -கபிலர் /நாம் மூன்றையும் -அவன் ஈச்வரனாய் இருந்து தூண்டு விக்கிறான் -பராசரர் இதை தெளிவு  படைத்தினார்/ உண்மை பொருள்கள் தெரிய வந்ததும் -ஆசை வர ஆரம்பிக்கும் -அசித் உயர்ந்தது என்று நினைத்து  -ஐஸ்வர்யம்-அளவில்லா சிற்று இன்பம் – அஸ்திரம் /சித் உயர்ந்தது -கைவல்யம்-நித்யம் ஞான மயம் ஆனந்த மயம்-தானே பிரகாசிக்கும்  மற்றும் தனக்கு பிரகாசிக்கும் / ஈச்வரனே உயர்ந்தவன் -மோஷ-பிரம அனுபவம் – புருஷார்த்தங்கள்..

சீரார் திரு வேங்கடமே ஆராமம் சூழ்ந்த அரங்கம் -இங்கே -அங்கே நித்யம் -அடியார்கள் உடன் கூடி இருந்து -அடைய// முயற்சி-ஐஸ்வர்யம் ஓடி ஆடி பணம் சம்பாதிக்க/ ஆத்ம த்யானம் //பிரமம் அடைய- கர்ம ஞான பக்தி பிரபத்தி மார்க்கம்./. பிரமம் யார் தெரிய -வேதம் ஒன்றே உதவும். பிரத்யஷமும் அனுமானமும் காட்டாது ./பரிமித சக்தி அனுமானம் .பிரமம் அப்பால் பட்டது சாஸ்திர யோநித்வாத் /ஏகைக  நாராயண ஆஸீத் ந பிரம ந ருத்ரன் /ப்ருகத்வாத் தாம் பெரியவன்  ஆஸ்ரியவர்களை தனக்கு சமமாக பெரியவன் ஆக்கும் பிரமம் /ஸ்ரீ வைகுண்டம் பஞ்ச பிர காரம் ஷீராப்த்தி  அந்தர்யாமித்வம் விபவம் அர்ச்சை/ ஜகத் காரணத்வம் சரிய பதித்வம் அபரி மித கல்யாண  குணங்கள் திரு மேனி அழகு கொண்டவன்  அறிய அறிய மிகவும் /ஆர்த்தி பிறக்க /விரோதி கர்ம -ஜன்ம- சரீரம் -சம்பாதிக்கும் கர்ம சுழல்/வேதம் செய் சொல்வது புண்யம் செய் சொல்வதை செய்யா விடில் பாபம் செய்ய சொல்லாததை செய்வதும் பாபம் செய்ய கூடாததை செய்யாமல் இருபது புண்யம் /அநாதி கால கர்மா .ஆதமா கணக்கில் வந்து கொண்டே இருக்கும்–

கர்மா தொலைத்தால் தான் பிரம அடைய முடியும் தெரிந்து கொண்டோம்..தொலைக்க எவ்வளவு தெரிந்து கொள்ள -ஹரி சந்திரன் பட்ட கஷ்டம் – பின்னம் கால் அலம்பாத காரணம் -அரை நொடியில் சம்பாத்தித கர்மா தொலைய கோடி ஜன்ம எடுக்க வேண்டி இருக்கிறது பிராரப்த கர்மா -இவை .. வேறு தொலைக்க ஆரம்பிக்காத – சஞ்சித கர்மா/ஜன்மாவில் மறு படியும் பாப புண்யம்-இவை சஞ்சித கர்மாவில் சேரும்  /பிறவி=சரீர சம்பந்தம்/இறப்பு =சரீரம் தொலைத்து /

கருணை கிருபை தயை வடிவு எடுத்தவர் /கர்மம் அழிக்க  பிரமம் சக்தி அதிகம் /பெரியவன் ஜகத்தை படைத்தவன்.. அவனே தாய் தந்தை என்னை அடைய வழி வைத்து இருக்கிறாரே /அவன் இடமே பிரார்திக்கலமே /அர்த்த பஞ்சகம் பார்ப்போம்..மிக்க இறை நிலையும் உயிர் நிலை  ..வழி விரோதிகள் அடைந்த பின்பு கைங்கர்யம்../பக்தி யோகமும்  பிர பத்தியாலும் அடையலாம்.. விரோதி போகுமா ..கீதை புரட்டி பார்த்தோம்../பக்தி ஒன்றே வழி நினைந்து பாடி தொண்டு-முக் கரணங்களால்- புரிய /அருள் என்னும் வாள் வைத்து இருக்கிறார் /திரு மேனி நினைந்து  குணம்  நினைந்து -இதற்கும் விரோதிகள் உண்டே-இந்த்ரியங்கள் அடக்கணும் கர்மா யோகம் பண்ணனும் கட்டு பாடு .மூன்று வித த்யாக உணர்வுடன் /அவன் திருவடிகளே உபாயம் மகா விச்வாசதுடன் பிராத்தனை சரணா கதி /

மகா விசுவாசம் கிடைப்பது கஷ்டம்..நம் தாழ்வும் அவன் மேன்மையும் உணரனும்..அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் வேணும்..அதுவும் அவனது  இன் அருளே ..பக்தி யோகம் பிராரப்தி கர்மா முடிந்ததும்தான்  மோஷம் /பிர பன்னனுக்கு சரீரம் முடிந்த உடனே மோஷம்../இதை நம்பும் சாது சமாகமும் வேணும்..இவர்களே பகவான் -அடியவர்க்கு அடிமை..நாம சங்கீர்த்தனம்/ சத்வ  குணம் ஆகார சுத்தி /சரத்தை மேலும் மேலும் ஏற்பட்டது ..துடிப்பு மிக்கு வர -சம்சாரம் பார்க்கும் பொழுது அவ நம்பிக்கை/ அவனையும் அடியார்களையும் பார்க்க பேறு  தப்பாது என்று துணிவு ஏற்படும்..விரோதி கழிக்க கிருபை -சரம ஸ்லோகம்-விடுவிக்கிறேன் சோகம் படாதே ..திரு மேனி அனுபவமே கால ஷேபம்/ அடியார் சொல்ல ஆச்சார்யர் மூலம் சமாச்ரண்யம் பண்ணி கொண்டு ரகஸ்ய த்ரயமும் தெரிந்து கொண்டோம்..குற்றங்களை பார்க்காமல் மறக்கடிக்க  பிராட்டி /மிதுனத்தில் கைங்கர்யம்.. மனசில் ஏற்படும் எண்ணமே சரணா கதி..

பகவத் கைங்கர்யம் –அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ததீய அடியார்கள் பக்கல்/தன்னை போல் பிறரை நினைத்து -வைஷ்ணவ லஷணம்..

நாம சங்கீர்த்தனம் .பக்தி பண்ண -ஸ்ரீமன் நாம 26 ஸ்லோகம்  நமோ நாராயண திரு மந்திர அர்த்தம் ஸ்ரீ வல்ல – முதல் ஸ்லோகமே -அருளினார். 30 ச்லோகத்தலும் அருளினார் 36/37 வக்தும் -இப் படி சொல்ல சக்தி இருந்தாலும் சொல்லாமல் இழந்து போகிறார்கள் ..கர்மா தொலைக்க இது வழி. கவலை படுவதும் வைஷ்ணவ லஷணம்

கிருபை வடிவு -பிரார்த்தனை 3/4/5 சுலோகங்களால் மறவாமல் இருக்கணும்..நினைவு முக்கியம் 4 என் மனசில் நீ நீங்காமல் இருக்கணும் அசையாத பக்தி வேணும் .என்பிலாத பிறவி எய்தாலும் நின் கண் அன்பு மறவாமை வேணும். மரணம் ஏற்பட்டாலும் உன் மறவாமை வேணும்.. எங்கு வைத்தாலும் உன் திருவடி நினைவு வேணும் என்கிறார் 6 ஸ்லோகம் 27 ஸ்லோகத்தால் திரு நாம சந்கீர்தனத்தால் அடியார் அடியார் ..நினைவு மாறாமல் மதுர கவி ஆழ்வார் நிலை கேட்டார் சித்திரையில்  சித்தரை -நடு- நாம -அர்த்தம் சொல்ல அவதரித்தார் வாய்த்த திரு மந்த்ரத்தில் மத்யமாம் பதம் போல..ஜன்ம பலம் அடியார்க்கு அடிமை தானே..தொண்டர் அடி பொடி ஆழ்வார் -அடியார்க்கு ஆட்  படுத்தாய் பள்ளி எழுந்து அருளாய் என்று அருளியதும் / திரு பாண் ஆழ்வார் -அடியார்க்கு என்னை ஆட்  படுத்த விமலன் பேசித்தே பேசும் ஏக கண்டர்கள் ..

திரு நாம சங்கீர்த்தன மகிமை முதலில் அருளி/ பிராத்தனை பலன் போன்றதை அடுத்து அருளி/ மூன்றாவதாக சரணா கதி அடுத்த நிலை..7 ஸ்லோகத்தில் பண்ணி காட்டினார் ..தாமரையில் ஹம்ச பறவை திரு அடி தாமரைகளில் தம் மனம் இருக்க ..அந்திம ஸ்மரதி முடியாது என்று சேர்த்து அருளி இருக்கிறார் .ஒரே ஸ்லோகம் சரணா கதிக்கு ..பிரம்மாஸ்திரம் இது என்பதால் ..துவயமும் ஒரே தடவை தான் சொல்லணும்.முக் கரணங்களால் ஆச்ரயிக்கணும் என்று நாலாவது நிலை– 8th ஸ்லோகத்தில்..அருளி..ஷீர சாகரம் ஸ்லோகமும்/ 10th ஸ்லோகம் அமிர்தம் ஹரி சரணம் ச்மரிப்பது தான் கண் காத்து எல்லாவற்றுக்கும் அவனை விஷயம் 20 th ச்லோகத்தாலும் அருளி ..35th ச்லோகத்தாலும் இதை பண்ணி இடைப் பட்ட காலம் கழிக்க அருளுகிறார் சம்சார பயம் நீங்க ..

விரோதிகள் சம்சாரம் கர்மா போல்வன ..12/ 13/ 14/ 34/ 35 சுலோகங்களால் அருளினார் இரட்டையால் பீடிக்க பட்டு/ஓடமாக அவனை கொண்டு கடப்போம் /பக்தி என்னும் ஓடமும் அனுப்பு /சக்தன் புருஷோத்தமன் நீ ஒருவனே உபாயம் ..

சரீரம் வைத்து காலம் கழிக்கணும் ஒரே மருந்து மணி மந்த்ரம் எல்லாம் அவன் தானே ௧௭ பரம மருந்து அவன் திரு நாம சங்கீர்த்தனம் 18/ 22/ 23/ 24 /31 கண்ணன் என்னும் மருந்தை குடிப்பாய்

பிரமம் 21 சொரூபம் ரஷகன் /25 திரு வடி தாமரைகள் நினைவு இன்றி யாகம் யக்சம் வீண்/ 28 அவன் காத்து இருக்க மூடர்கள் வேறு எங்கோ போனோமே ..சம்பந்தம் மாதா பிதா ஜகத் காரண பூதன் வெளி இடுகிறார்-..33ஸ்லோகத்தால்  கிருஷ்ணனே ஜகத் காரணம்/8th விஷயம் இது

545 சூதரங்கள் 4 அத்யாயம்  ஸ்ரீ பாஷ்யம் 156 அதிகரணம் வேத கடலை தன மதியை மத்தாக கொண்டு கொடுத்தார் வியாசர் ..ஜகத் காரணம் பிரமம் முதல் அத்யாயம்/பூர்வ பஷி  வாதம் விலக்கினார் அடுத்து / சாதனா அத்யாயம் -உபாசனம் மூன்றாவதில் / பலா அத்யாயம் -சாம்யா பத்தி மோஷம்-நாலாவது

————————————————————

 

த்யாயந்தி யே விஷ்ணும் அநந்தம் அவ்யயம்-
ஹ்ருத் பத்ம மத்யே சததம் வ்யவஸ்திதம்
சமாஹிதாநாம் சததாப யப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்-38-

த்யாயந்தி யே விஷ்ணும் அநந்தம் அவ்யயம்-அபரிச்சின்னமாய் உள்ள -அழியாமல் நித்தியமாய் உள்ள -ஸ்ரீ மஹா விஷ்ணுவை எவர் த்யானம் பண்ணுகிறார்களோ
ஹ்ருத் பத்ம மத்யே சததம் வ்யவஸ்திதம்-ஹிருதய கமலத்தின் நடுவில் எப்பொழுதும் வீற்று இருந்து அருளுபவரும் -அடியார் விலக்காமை கிடைத்ததும் சடக்கென அருள் புரிய –
சமாஹிதாநாம் சததாப யப்ரதம்–விஷயாந்தர பற்று அற்று -சமாதியில் ஊன்றி இருக்கும் யோகிகளுக்கு சர்வ காலத்திலும் அஞ்சேல் என்று அபாய பிரதானம் பண்ணி அருளுபவரும்
தே யாந்தி ஸித்திம் பரமாம் ச வைஷ்ணவீம்-–அவர்கள் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ சித்தியை அடைகிறார்கள்-
ஷீர ஸாகர தரங்க சீகரா
சார தாரகித சாரு மூர்த்தயே
போகி போக சய நீய சாயீநே
மாதவாய மது வித் விஷே நம—39-
ஷீர ஸாகர தரங்க சீகரா-சார தாரகித சாரு மூர்த்தயே--திருப் பாற் கடலில் நக்ஷத்திரங்கள் படிந்தால் போலே அழகிய திரு மேனியை யுடையராய்
போகி போக சய நீய சாயீநே-மாதவாய மது வித் விஷே நம-–திரு வனந்த ஆழ்வான் உடைய திரு மேனி ஆகிற திருப் படுக்கையிலே கண் வளர்ந்து அருளுபவராய் -மது என்ற அசுரனை நிரசித்து அருளிய திரு மாலுக்கு நமஸ்காரம் –
யஸ்ய ப்ரியவ் சுருதி தரவ் கவி லோக வீரவ்
மித்ரே த்விஜன்மவர பத்ம சரவ்  பூதாம்
நேதாம் புஜாஷ சரணாம் புஜ ஷட்பதேன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண–40-
யஸ்ய ப்ரியவ் சுருதி தரவ் கவி லோக வீரவ்-யாவர் ஒரு ஸ்ரீ குல சேகர பெருமாளுக்கு -வேத வித்துக்களாயும் -கவிகளுக்கும் சிறந்தவர்களாயும் –
மித்ரே த்விஜன்மவர பத்ம சரவ் பூதாம்-ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாயும் உள்ள -பத்மன் -சரன் -என்னும் இருவர்கள் ஆப்த மித்ரர்களாய் இருந்தார்களோ
அம்புஜாஷ சரணாம் புஜ ஷட்பதேன-தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு-வந்து -போல் அந்தரங்கரான
தேன-அந்த
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண--ஸ்ரீ குல சேகர மஹா ராஜராலே இந்த ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்யப் பட்டது –
த்விஜன்மவர பத்மசரவ் –த்வஜன்மவரன் / பத்ம சரன் -என்றும் சொல்வர் / ஜாதி ஏக வசனமாகக் கொண்டு ப்ராஹ்மணர்களும் ஷத்ரியர்களும் இஷ்டர்கள் -என்பாரும் உண்டு –
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான பெரியாழ்வாரையும் -நம்மாழ்வாரையும் சொன்னதாகவும் -கொள்ளலாம் –

வெள்ளை பாற்கடலில் அலையில் திவலைகள் மோதி /கரு மேனி  மேல் படர நஷத்ரங்கள் போல கருப்பு திரு மேனியில்../பூத்தால் போல சாறு- அழகிய -போகி போக சாயின -திரு அரங்கத்தில்/சேவித்தோம்../மா தவாய -பார் கடல் கடையும் பொழுது வந்த தேவியால் வருடும் திரு வடிகள்/ விரோதிகளை தொலைக்க வல்லவனே

இந்த முகுந்த மாலை ராஜாவான குலேசெகரால் செய்ய பட்டது தாமரை கண்கள் படைத்த திரு வடி  விலகாத அரு கால் சிறு வண்டு அடி தளமும் தாமரை . தாமரை காடு .தேனை குளித்து கழிக்க ஆறு கால் படைத்த வண்டு இவர்../வேதங்கள் கற்ற பிரிய கவித்வம் துவிஜன்ம -பிராமணர்கள்  -பத்மன் சரண் -மிக நெருங்கிய தோழர்களாக கொண்டவர் ..துவிஜன்மவரன் ஒருவன் பத்ம சராவன் என்றும் சொல்வர் – ஷத்ரியன் உயர்ந்த எண்ணிக்கையில் அம்பு கூட்டங்கள் கொண்ட./.பெரியாழ்வாரையும் -நம்மாழ்வாரையும் தாமரை அம்பு பிடித்த மாறன்.-என்றும் சொல்வார்கள்..

சேர்பார்களை பஷிகள் ஆக்கி ..-ஆச்சார்யர்/ ஆறு கால் அவரின் திருவடி புத்திரன் பத்னி திரு அடிகள்..நாமும் பெரிய பெருமாளின் திரு வடிகளில் பிரவகிக்கிற  மது உண்ணும் வண்டு போல ஆவோம் என்று  பல சுருதி.

 

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலேசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: