ஸ்ரீ முகுந்த மாலை-ஸ்லோகங்கள்-6-11- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –
திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா -ஸ்வர்க்கத்திலாவது பூமியிலாவது -நரகத்திலாவது எனக்கு
நரகாந்தக பிரகாமம் -நன்றாக நாசனே உனது இஷ்டப்படி ஆகட்டும்
புண்ய பலனை அனுபவிக்க ஸ்வர்க்கமோ-பாப பலனை அனுபவிக்க நரகமோ -இரண்டையும் அனுபவிக்கும் பூமியிலோ
வாசம் கிடைக்கட்டும் -அதில் அடியேனுக்கு ஆனந்தமோ துக்கமோ இல்லை
அவதீரிதா சாரதார விந்தவ் -திரஸ்கரிக்கப் பட்ட சரத் கால-தாமரை யுடைய -சரத் கால தாமரையை விட மேம்பட்ட
சரணவ் தே மரணே அபி சிந்தயாமி -தேவரீருடைய திருவடிகளை -சகல கரணங்களும் ஓய்ந்து இருக்கும் மரண அவஸ்தையிலும் சிந்திக்கக் கட வேன் –
Divi va bhuvi va mamastu vaso
Narake va narakantaka prakamam
Avadhirita-sarada aravindau
Charanau the marane api chintayami –6
Lord, who is the killer of Narakasura.-Let me be in this world,-Or the ether world or nether world,-But make me remember even at my death,-Only your pretty lotus like feet

 

பூமியிலோ ச்வர்கத்திலோ நரகத்திலோ எங்கு வைத்தாலும் சம்மதம்.. சரத் கால தாமரையை வென்ற உன் பாதார விந்தங்களை சேவித்த பின்பு—எங்கு இருப்போம் எனபது முக்கியம் இல்லை .அவன் நினைவே வேண்டும் ….ஸ்ரீ ரெங்கத்தில் இருந்ததால் தான் மோஷம் எனபது இல்லை  தவ ராசன் படி துறையில் நீராடுவார் ராமானுஜர்  ஆளவந்தார் திரு வடி சம்பந்தம் ..வெள்ளை சாத்து உத்சவம். உள்ளே திரு தண்டம் சத்தி காஷாயமும்  சாத்தி மேலாக வெள்ளை வஸ்த்ரம்.. புறப் பாடு போது  திரு தண்டமும் -ரெங்கனின் செங்கோலும்- மூலவர் இடம் சாத்துவார்கள்…பெரிய நம்பியும் கூரத் ஆழ்வானும்  திரும்பி வரும் பொழுது -ஸ்ரீ ரெங்கம் தான் மோஷோ உபாயம் என்று தப்பாக நினைப்பார் என்று -அவன் திருவடி ஒன்றே உபாயம் -மனசு திருவடி மீது மாறாமல் இருக்க வேண்டும்..கருடன் 800 குதிரை காத்து பச்சை உடம்பு வெளுப்பு -தேட கருடன் -சாண்டிலி -குடிசை வந்து -பக்தி முகத்தில் தாண்டவம் ஆட -இவள் திவ்ய தேசங்களில் இருக்க கூடாதோ -நினைத்ததும் சிறகுகள் எரிந்தன ..பக்தன் இருக்கும் இடமே திவ்ய தேசம்..

ஊரிலேன் காணி இல்லை..போது எல்லாம் — குளித்து ..ஒன்றும் இல்லை என்றார் தொண்டர் அடி பொடி-அறிவு ஒன்றும் இல்லாத ஆய்  குலம்… புண்ணியம் யாம் உடையோம். சித்த புண்யம் நீ ..பாப புண்யம் சம்பாதிக்க பூமி-

கர்ப்பம்-ஆத்மா -ஸ்வர்கம் -நரகம்-மாறி மாறி வரும்..அடியான்-நரகாந்தகன் சொல்லி சாமர்த்திய பேச்சு விசுவாசமே அடி படை – அம் சிறை நாராய் அளியத்தாய்-கை கூப்பிகுகிறார்-பச்சி ஜாதி ஏற்றம்- சிறை வைத்தால் என்ன பண்ணுவேன் கேட்டது நாராய் – நல்கத்தான் ஆகாதோ ..வன்சிறையில்-

பராங்குச நாயகி தன்னையே சீதையாக நினைந்து -வன் சிறையில் வைத்தால் என்ன என்கிறாள். ராம தூதனுக்கு வாலில் நெருப்பு/ சீதை தூதனுக்கு ஆலிங்கனம்../நாரணனை கண்டக்கால்-பெயரை கேட்டு போக விட மாட்டான் அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் தரும் ரஷகன்..அகில புவன ஜன்ம.. பாவி நீ என்று  ஓன்று நீ சொல்லாய் பாவியேன் காண வந்தே -சேவிப்பதே முக்கியம் -வாய் திறந்தான் சொல்ல முடியவில்லை..கண் முன்னாள் சேவித்த பின்பு எல்லாம் ஒழிந்து மோஷம் பெறுவோம்..அதே போல நரகாந்தகனே நீ நரகம் கொடுத்தாலும் சம்மதம் என்கிறார்..நல நாரணன் நரகாந்தகன் -பெருமாள் திரு மொழியிலும் அருளுகிறார் நரகமே ஸ்வர்கம் ஆகும் நாமங்கள் உடைய நம்பி..-நரகம் தொலைத்தவன் நரகாசுரனையும் தொலைத்தவன்

நில மடந்தை தனை இடந்து புல்கினான் .ரஷிகிற நோக்கில்  தோன்றிய பொழுது பிறந்த  குழந்தை– அசுரர்ச்வாபம் – –  செய்குந்தா அசுரர் தீமைகள் செய் குந்தா.-பிரக் ஜோதிஷ்  புரம்- முராசுரனை கொன்று முடித்து அடுத்து நரகாசுரனை முடித்தான் ..சிறை படுத்திய 16,000பெண்டிர்களை திரு கல்யாணம் பண்ணி கொண்டான்..

ராமானுஜரால் கலியும் கெடும் கண்டு கொண்மின் திரி புரா தேவியார் -சுவாமி காட்டிய இடத்தில் விழுந்து சேவிகிறோம்..நாலு பதிகம்  தூது.பொன் உலகம் ஆளீரோ  புவனம் ஆளீரோ ..மகா விசுவாசம்-தூது போனதும் அவன் கட்டாயம் வருவான் உபய விபூதியும் இவளுக்கே தான் -குருவி காட்டிய இடத்தில் அவன் கூட சேர்ந்து வாழ்ந்து போவார் ..இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய்-மெய்-சத்யம்–அது போல இவரும் .சம்மதம் ..சரத் கால தாமரை வென்ற திருவடிகள் ..சரத -ஆண்டு ஆண்டு கால மாக அ ரவிந்தம் -அதிக மாக வரும் பாப கூட்டங்களை வெல்லும் திரு வடிகள்.. கங்குலும் பகலும் பதிகம்- எங்கனே தரிக்கும் உன்னை விட்டு என்கிறாள் அது போல மரணேபி-கூட சிந்தனை வேணும்..பக்தி யோகத்தில் எதை நினைந்து பிராணன் விடுகிறானோ அதே ஜன்மம் கிட்டும் ஜடபரதர் மான் போல பிறந்தார்..


 

க்ருஷ்ண த்வதீய பாத பங்கஜ பஞ்ஜ ராந்தம் அத்யைவ மே விசது மாநச ராஜ ஹம்ஸ
பிராண பிரயாண ஸமயே கப வாத பித்தை கண்டா வரோதநவி தவ் ஸ்மரணம் குதஸ்தே –7

க்ருஷ்ண-கண்ண பிரானே
த்வதீய பாத பங்கஜ பஞ்ஜ ராந்தம்-தேவரீருடைய திருவடி தாமரை களாகிய கூட்டினுள்ளே
அத்யைவ மே விசது மாநச ராஜ ஹம்ஸ-என்னுடைய மனசான ராஜ அம்சமானது -இப்பொழுதே நுழையக் கடவது –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே
பிராண பிரயாண ஸமயே-உயிர் போகும் போது
கப வாத பித்தை -கோழை வாயு பித்தம் இவற்றால்
கண்டா வரோதநவி தவ் -கண்டமானது அடைபட்ட அளவிலே
ஸ்மரணம் குதஸ்தே ––தேவரீருடைய ஸ்மரணம் எப்படி வரும்
ஸ்திதே மனசி ஸூஸ் வஸ்தே சரீரே சதி யோ நர –தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபமஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரிய மாணாந்து காஷ்ட பாஷாணா ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதம்

கிருஷ்ண வாக்கியம்..மரணம் அடியிலும் கூட -தான் மரணம் காலத்தில் ஆவது இல்லை.- எக் காலத்திலும் எந்தையே..

 

சரணகதர் அந்திம ஸ்மரதி வேண்டாமே- அப் பொழுதைக்கு  இப் பொழுதே சொல்லி வைத்தேன் -கபம்-முதலில் / வாதம்-மூட்டு வை  போல்வன கடைசியில் – பித்தம்-உஷ்ணம்- -மூன்றும் ..இருக்கும் பொழுது பகவான் என்ற சொத்து நினைவுக்கு வராதே .வைத்த மா நிதி கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கும் ..அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம் வராக சரம ஸ்லோகம் /

கிருஷ்ண -பூமிக்கு மகிழ்ச்சி  கொடுப்பவனே –கண்கள் சிவந்து -கொண்டல் வண்ணன் -தன்னை பற்றி சொல்லி -ஆத்மாவுக்கு சரீரம் ஆசை என்று காட்டி ஆழ்வாரை மயக்கினான் ..

ஞான மயன் ஆனந்த மயன் மனசு- ராஜ ஹம்சம்  என்கிறார்திருவடி தாமரை இதழ்கள் விரல்கள் ஏரி-பக்தர் உள்ளம் அந்த பிரதி பலிப்பை மாற்றாமல் இருக்க பிரார்த்திக்கிறார்..அடி கீழ் புகுந்த ஆழ்வார் தென் திருஅரங்கம் கோவில் கொண்டானே என்று அங்கெ இருந்தே அருளுகிறார் தெற்கு திசைக்கு திலகம் என்கிற அர்த்தம் முதலில் சொல்லி .அடி கீழே அமர்ந்து மேல் பதிகங்கள் அருளுகிறார்  …ஸ்ரீ ரெங்க ராஜ சரணான் புக ராஜ ஹம்சம் மா முநிகளும் அருளி இருக்கிறார்

———————————————-

சிந்தயாமி ஹரி மேவ சந்ததம் மந்த மந்த ஹசிதா நநாம் புஜம்
நந்த கோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் —8-

சிந்தயாமி ஹரி மேவ சந்ததம் -பாபங்களை போக்குமவனாய் இருப்பவனை எப்பொழுதும் சிந்திக்கிறேன் -த்யானம் செய்யக் கடவேன் -என்றவாறு
துக்க சாகரத்தில் ஆழ்ந்த வர்களும் கண்டு களிக்கும் படி
மந்த மந்த ஹசிதா நநாம் புஜம் –புன்முறுவல் செய்யும் தாமரை மலர் போன்ற திரு முகத்தை யுடையவனாய்
நந்த கோப தநயம் பராத்பரம் -நந்த கோபன் குமாரனான கண்ணா பிரானையே
ஸுலப்யம் குணம் விளங்கும் படி கட்டவும் அடிக்கவும் எளியனாம் படி நின்றவனாய் -பரத்வத்தில் வந்தால் ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயனுமாய்
நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் -நாரதர் முதலான முனிவர் கணங்களால் தொழப் பட்டவனாய் –

Chintayami harim eva santatam-Manda-hasa-muditananambujam
Nanda-gopa-tanayam parat param Naradadi-muni-vrinda-vanditam —8
Always I think of Hari.Whose smile adorns his lotus like face,

Who is the truth of truths,Who is the son of Nanda Gopa, And who is worshipped by sage Narada,And crowds of sages like him.

திரு மேனி இருக்கும் பொழுது எத்தாலும் பயம் இல்லை.. நாரத முனிவர்கள் கூட்டம் வணங்க படும் ..நந்த குமரன்.. தன் ஒப்பார் மிக்கார் இல்லாதவன்-ஹரி- பாபங்களை அபஹரிக்கிறவன் –இந்த மூன்று விசேஷணங்கள் இருக்கட்டும்..நான் நினைந்து கொண்டே இருப்பது வேற – மந்த மந்த ஹசிதம் புன் சிரிப்பு அத்தோடு கூடிய திரு முகத்தையே சிந்தித்து  இருப்பேன். ..தாமரை ஒத்து இருக்கிற திரு வாயை- சததம் -எப் பொழுதும் சுபாஸ்ர்யம் ஆச்ராயம்– பட்டர் சுத்த சத்வ மயம் அவன் திரு மேனி …தாபங்கள் த்ரயமும் தொலைக்கும் .சிரித்து இருக்கிற அம்புஜம் ..சம்பாஷன மந்த ஸ்மிதம் .கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும் -வைத்த அஞ்சேல் என்ற கையும்–  கவித்த முடியும் -முகமும் முருவலும் ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகளும் /குற்றம் கண்டு பயப் படாமல் இருக்க /காரியம் செய்ய  ஸ்வாமித்வம். கண்டு பற்றுகைக்கு  திருவடிகள்..பொன் அடியே அடைந்து /

பந்தும் கழலும் தந்து போ-போகு நம்பு  செவ்வாய் முறுவலும் –ஆகுலங்கள் செய்ய அழி தற்கே  நோற்றோம் நாம் — இணை கூற்றங்கள் -தூது செய் கண்கள் வருவதற்கு ஞானம் முற்ற வைக்க படுத்தும் பாடு..

கண்ணன் சிரித்துக் கொண்டே    அருளினான் கீதை..செய்ய வாய் மணியே என்னும்..கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும். நெஞ்சு நிறைந்தன..திரு மேனியால் மோஷம் ஞானத்தால் இல்லை .வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்த வாறு காணீரே -திருஷ்ட்டி பயம் அவளுக்கு இல்லை குறை தீர பெரிய ஆழ்வார் அருளுகிறார்.கற்பக கொடி போல மூக்கு/பூ புது பூ போல சிரிப்பு .கபோலம் சுபுகமும் மொட்டு போல..சந்ததம்-மறக்கவே முடியாது..இளைய பெருமாள் .குகன் குக பரிவாரங்கள் பெருமாளை வலம் வர -ஒரு இரவு முகத்தில் விழித்தாரை வடிவு அழகு  படுத்தும் பாடு..

சூர்பனகை கூட -தருனவ் ரூப சம்பனவ் சுகுமாரவ் மகா பலவ – -உண்ண புக்கு வாயை மறந்தால் போல .சிரிப்பால் ஆனந்தம் கொடுத்தான் நந்த கோபாலன் குமரன் -யசோதை இளம் சிங்கம் –

உரலிடை ஆப்புண்டு அழுகையும் அஞ்சு நோக்கும் -வேழ  போதகமே தாலேலோ–யானை போல இன்று –யசோதைக்கு அன்று யானை குட்டி ..சர்வேஸ்வரனை கட்டி -அ காரத்தை கட்டி ஆநிரை ஆடு மாடு பார்க்க போனாள்-நந்தன் வந்து அவிழ்த்து விட்டான்..நாக பழம் வாங்கி சாப்பிட -அவளோ கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்கி போ .சங்கு சக்கர ரேகைகளை பார்த்து ..பராத் பரம் தெய்வங்களுக்கு தெய்வம்..சாஸ்திரம் தெரிந்து கொள்ள முடியாது -இவள் கண்டு கொண்டாள்.. எங்கும் அமரர்க்கு அரியானை தமர்களுக்கு  எளியானை அமர தொழுவார்க்கு அமரா வினைகள் ..ஒப்பார் மிக்கார் இலையாயா மா மாயன் -இல்லை என்பதால் இதில் தரித்திரன் என்பர்..நாரதர் போல்வாரால் தும்புருவும் நாரதரும் இறைஞ்சி ஏத்த -பெருமாள் திரு மொழி –.தேசும் அடியோர்க்கு அகலுலாமே-

——————————————–

கர சரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீ நே ஸ்ரம முஷி புஜ வீ சிவ்யாகுலே அகதா மார்க்கே
ஹரி ஸரஸி விகாஹ்யா பீய தேஜோ ஜெ லவ் கம் பவம ரூபரிசின்ன கேத மத்ய த்யாஜாமி--9-

கர சரண ஸரோஜே-திருக்கைகள் திருவடிகள் ஆகிற தாமரைகளை யுடையதாய் -கை வண்ணம் தாமரை அடியும் அஃதே
காந்தி மந்நேத்ர -மீ நே- அழகிய திருக் கண்கள் ஆகிற கயல்களை யுடையதாய்
ஸ்ரம முஷி -விடாயைத் தீர்க்குமதாய்
புஜ வீ சிவ்யாகுலே -திருத் தோள்கள் ஆகிற அலைகளால் நிறைந்ததாய்
அகதா மார்க்கே-எம்பெருமான் ஆகிற தடாகத்தில்
விகாஹ்ய -குடைந்து நீராடி -க்ரீஷ்மே சீதமிவஹ் ரதம்–தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம் –
குளம் ஆழமான வழியை யுடைத்தாய் இருக்குமே -இவனும் கர்மா ஞான பக்தி பிரபத்தி கம்பீரமான உபாயமாக இருப்பான்
குளம் என்றால் தாமரை -மீன்கள் -அலைகள் உண்டே -நீர் நிரம்பி விடாய் தீர்க்கும் படி இருக்குமே
ஆபீய -பானம் பண்ணி
தேஜோ ஜெலவ்கம் -திருமேனியில் விளங்கும் தேஜஸ் ஆகிற ஜல சமூகத்தை
பவ மரூ பரிசின்ன -சம்சாரம் ஆகிற பாலைவனத்தில் மிகவும் வருந்திக் கிடந்த அடியேன்
கேத மத்ய த்யாஜாமி -அந்த சம்சார துக்கத்தை இப்போது விடுகிறேன் -தாப த்ரயம் போக்கப் பெற்றேன்

Kara-charana-saroje kantiman-netra-mine-Srama-mushi bhuja-vichi-vyakule agadha-marge
Hari-sarasi vigahyapiya tejo-jalaugham-Bhava-maru-parichinnah klesam adya tyajami –9
 

Exhasted by the difficult path of life so far,-I will drink the water from the pond of Hari,Where his hands and arms are the lotus flowers,And his shining eyes are the pretty fish,-And leave the pains and aches of this earth forever

ரிஷிகேசன் -நம் இந்த்ரியங்களை ஜெயிக்க வைக்கிறவன் கண்ணன் கழல்களை நினைமினோ-பணை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ .சுலபன் மேன்மை இரண்டும் சேர்த்து அருளினார் -தாப த்ரயத்தால் தவிக்கிறோம் -ஆத் ஆத்மிக ஆத் பௌதிக ஆத் தேவிக /துடிக்கிறோம் என்று தெரிவதே முதல் அதிகாரம் மோஷம் அடைய..கேதம்-கஷ்டங்கள் -விட்டு கொண்டே இருக்கிறோம்.. குளித்து வந்த பின்பு தாபம் படுத்தாது..ஹரி என்னும் சரஸ்-குளம்- இரங்கி தீர்த்தம் ஆடி..ஆபியே- குடித்தோம்..அக்கா தங்கை குளம் உண்டு- மேல் கோட்டையில்..தேஜோ ஜலம் குடித்து பவ சம்சாரம் மறு -காட்டிலே .தேஜஸ் -ஜலம் /கரம் திருவடிகள் தாமரை கள்/ கண்களே மீன் ..விடாய் தீர்க்க தோள்கள் அலை அடித்து ..அகாதம்-ஆழம் காண  முடியாத மார்க்கம்

பிரம அனுபவம் குளத்தில் நீராடுதல்/ நீராட போதுவீர் -பெரிய ஆழ்வார் பெண் பிள்ளை அருளியது போல….கை வண்ணம் தாமரை அடியும் அக்தே..தயரதன் பெற்ற மரகத மணி தடம்..தடாகம் ராமன் –சென் சொற்   கவிகாள் உயிர் காத்து ஆட செய்மின் -மற்ற ஆழ்வார்களை சொல்லுகிறார் ..சென் சொற் கவிகாள் என்று ..குளத்தில் ஆழம் மாறும்–.குண பிரவாகம் அவன் ..செல்வ   நீராட போதுமின் -கூட்டி கொண்டு போகிறாள் -..

பரத்வம் கணுக்கால் அளவு/கருணை முழம் தாள்/ சௌலப்யம் இடுப்பு/ வாத்சல்யம் -மார்பு / சௌசீல்யம் -குணவான் இதால் தான்-தலையே முழுகும் அனுபவித்து திரும்ப முடியாது .

குகன் -வேடர் தலைவன்/ சுக்ரீவன் -குரங்கு அரசன்/ விபீஷணன் -தலைவன்.. இடையர்கள் சுதாமா குசேலர் சாமான்யர்கள் உடன் கூடினான்

திரு முக மண்டலம் தாமரை குளம் பட்டர்..

வக்த்ரம் சரஸ் -திரு முக மண்டலமே குளம்..அதரம் மலர்ந்தால் போல ..கர்ண பாசம் கொடி போல தாமரையை சுற்றி .சபாரம் மீன் கண்கள்.. பாசி கொடி மூக்கு./ மகர மீன்-மகர குண்டலங்கள்  /சபர மீன் வகை /நீல காடு தலை மயிர் -வேணி ..கண்ணே அனுபவித்து கொள் நினைக்கும் பொழுதே தாப த்ரயம் போகும்.கடல் நிற கடவுள் எந்தை துயிலுமாறு  கண்டு ..வாரா அருவாய் …கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி .கொடியேன் பால் ஒரு நாள் காண வாராயே..திரு மேனி அழகே த்யானதுக்கு-சித்தம் ஆலிங்கனம்  பண்ணி  கொள்ளவே திரு மேனி ..நாக மங்கள சுவாமி..திரு நாராயண புரம் பக்கம் ..கொள்கின்றஇருள்  ..அன்று மாயன் குழல் ..சோழ தேச ஸ்திரிகள் சுருக்கு சுருக்கு என்று கோபம் வரும் பொழுது பேசுவது போல சுருண்ட கேசம்-தேசிகன்..முழங்கால் இருந்தவாறு காணீரே -சேஷ மகேச  சுரேசன் கணேச -ரமேசன் -கோபிக்கு முன் மடக்கு வெண்ணெய்க்கு ஆடுகிறான்..நந்த கோபந்தநயன் பராத்பரன்..

கருடன் இருக்க ஆதி சேஷன் கிடக்க நாச்சிமார்களும் இருக்க நின்று கொண்டே அழகை காட்டி கொண்டு இருக்கிறான் நம் பெருமாள் ..அமுதம் பருக தாப த்ரயங்கள் தீரும் ..ராஜ கோபால வடக்கு சமுத்ரம் தெருவின் பெயர்..மகாக்கிரம -வந்து அடைய படி கட்டுகள் உண்டு..

———————————-

சரஸிஜ நயனே ச சங்க சக்ரே முரபிதி மா விரமஸ்வ சித்த ரந்தும்
ஸூ க தரம பரம் நாஜாது ஜாநே ஹரி சரண ஸ்மரணாம் ருதேன துல்யம்–10-

சரஸிஜ நயனே-தாமரை போன்ற கண்களை யுடையவனாய்
ச சங்க சக்ரே-திரு வாழி திருச் சங்குகளை யுடையவனாய்
முரபிதி -முராசூரனைக் கொன்றவனான கண்ணபிரானிடத்து
மா விரமஸ்வ சித்த ரந்தும் -எனக்கு செல்வமான நெஞ்சே -க்ஷணமும் விட்டு ஒழியாமல் ரமிப்பதற்கு
ஸூ க தரம பரம் நாஜாது ஜாநே -மிகவும் ஸூ கமாய் இருப்பதான வேறு ஒன்றையும் அறிகின்றிலேன்
ஹரி சரண ஸ்மரணாம் ருதேன துல்யம் -எம்பெருமானது திருவடிகளை சிந்திக்கும் அம்ருதத்தோடு-வலக்கை ஆழி இடக்கை சங்குடைய தாமரைக்கு கண்ணன் இடம் இடைவிடாத நெஞ்சை செலுத்துவதே ஸ்வரூப அனுரூபமான இன்பம்

Sarasija-nayane sa-sankha-chakre-Mura-bhidi ma viramasva chitta rantum
Sukha-taram aparam na jathu jane-Hari-charana-smarana amrithena tulyam –10

Oh mind, never stop thinking for ever.-Of he who has lotus like eyes.-Of he who has the conch and the holy wheel,-And of he who has killed the asura called Mura,-For I do not know any other pleasure as equal or great-Than the memory of the nectar like feet of Hari.

திருவடி நினைவே அமிர்தம்- அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே.. அது போல மனசுக்கு -நின்றவா நில்லா நெஞ்சு -உபதேசிக்கிறார்.. பரமமான சரமமான -தாமரை கண்கள்..ச சங்கு சக்கரே-முரன் அசுரரனை முடித்தவன்..-சு சித்த மா விராமம்- ஒய்வு எடுத்து கொள்ளாதே–ஆசை இன்றி வேறு இடம் போகாதே- அழகு இல்லை என்று ஒய்வு இல்லை விரோதி நிரசனன் இல்லை என்று ஓய்வா -நான் ஒட்டி என் உள் நிறுத்துவான்– தான் ஒட்டி -காந்தம் இரும்பு போல- வலிய நெஞ்சு. அவன் காந்தன்..கொஞ்ச தூரம் போனதும் திரும்பி வா என்றால் அவன் கூட்டி கொள்வான் –நெஞ்சே நல்லை நல்லை.. துஞ்சும் போது விடாய் கொண்டாய்.. கண்டாயே நெஞ்சே –கருமங்கள் வாய்க்கின்று .

அழகன்-புண்டரீ காஷன்/ சங்கு சக்கரம் கொண்டவன்-ரஷகன். முரனை முடித்தானே …அனுபவிக்க முடியுமா-ஹரி சரணம் அமிர்தம் போன்ற நினைவு..-சுக தரம்-சுகம்/சுக தமம்/ சுக தரம்-போக்யத்வமும் உண்டு..

நம்பியை ..என் சொல்லி மறப்பனோ ..குறை ஒன்றும் இல்லையே -நம்பியை =பூரணன்..நங்கை/தென் குறுங்குடி நின்ற -அருகில் சேவை /அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை வர்ண கலவை உடன் சேவை-அழகும் உண்டு ../உம்பர் வானவர் ஆதி அம்  ஜோதியை-பராத் பரன் -பெருமை/ எம்பிரானை எனக்கு உபாகாரன் பக்தி வளரத்தானே ..கண் அழகை சொல்ல அத்தனை ஆசை சரஜித நயனன். அடுத்து சங்கு சக்கரம்/ சங்கோடு சக்கரம் பங்கய கண்ணன்/ வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன் /

திரு மேனி முழுவதும் வளர பார்த்தன -புருவம் மேல் அணை மூக்கு பக்க அணை கீழ் வராது மேல் நோக்கி தானே தூக்கி விடனும்..ஷமை காட்ட திரு கண்கள். ஸ்ரீ வைகுண்டத்தில் பகல் விளக்கு போல..தயை கிருபை காட்ட முடியாது..வளரும் பொழுது  சங்கு சக்கரங்கள் வரை போனவாம்…செங்கண் சிறு சிறுதே-திறந்து திறந்து மூடி கொள்கின்றன-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கய கண்ணனை பாட..தாமரை கண்ணன் புருஷோத்தமனின் அடையாளம்..கப்யாசம் புண்டரீகம் -யாதவ பிரகாசர்-கபி-குரங்கு  ஆசம் பிரித்து.உடையவர் கண்ணில் நீர வர உத்தமனின் உத்தம அங்கத்துக்கு அதமத்தின் அதமமான அங்கம் திருஷ்டாந்தமா ? கம் தீர்த்தம் குடிக்கும்…கம்பீர அமல ஆய்த ஈசானம்/அமலன்களாக விளிக்கும்..சுமிர்ஷ்ட நாளா.. ரவி கர விகசித புண்டரீக தல அமல ஆய்த நீண்டு.வியாக்யானம் —

ராமக  ராஜீவ லோஷன.தசரதன் -ராஜ நீஜரர் ராஷசர் -இரவில் சண்டை போட தாமரை கண்ணனை கூப்பிட்டு போகாதீரே…ஆயுதம்- விரோதி நிரசனன்..கால தாமதம் கூடாது என்று .கை கழலா  நேமியன்  நம் மேல் வினை கழிவான்  ..சென்று நின்று ஆழி தொட்டு ..அலங்காரத்துக்கு /அடையாளத்துக்கு ./அப்பனுக்கு சங்காழி அளித்தான் வாழியே./ ..சுக/ சுக தரம்/ சுக தமம் மிக உயர்ந்தது….அதை தவிர வேறு ஒன்றும் துல்யமாய் நமக்கு இல்லை..கதம் அந்ய தீஷிதி -ஆளவந்தார் போல ..ருசி ஜனகத்வம் பெருமை..ஐயப் பாடு அறுத்து தோன்றும் அழகன்/ ஞானம் வளர்க்க திரு மேனி..தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஆசையும் வளர்க்கும்- வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம்-திரு குறுங்குடி  சௌந்தர்யம்-திரு நாகை அழகனார்- அச்சோ ஒருவர் அழகிய வா -ஒன்பது தடவை அருளி இருக்கிறார் பொன் இவர் மேனி மரகதத்தின் பொன் இளர் ஜோதி..  இரண்டும். ருசி ஜனகத்துக்கு      தானே

நெஞ்சை தட்டி கொண்டே இருக்கணும் ..

—————————————————

மாபீர் மந்த மநோ விசிந்த்ய பஹுதா யாமீஸ் சிரம் யாதநா-நாமீ ந ப்ரபவந்தி பாப ரிபவஸ்  ஸ்வாமீ நநு ஸ்ரீதர
ஆலஸ்யம் வ்யப நீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் லோகஸ்ய வ்யாஸ நா பநோத நகரோ தாஸஸ்ய கிம் ந ஷம–11-

மாபீர் மந்த மநோ விசிந்த்ய பஹுதா யாமீஸ் சிரம் யாதநா-ஓ அற்பமான நெஞ்சே யமனுடைய தண்டனைகளை வெகுகாலம்
பல சித்தமாக சிந்தித்து உனக்கு பயம் உண்டாக வேண்டா –
தே -உனக்கு / பீ -பயமானது / மா பூத் -உண்டாக வேண்டாம் -என்றவாறு
நாமீ ந ப்ரபவந்தி பாப ரிபவஸ் -இந்த பாபங்கள் ஆகிற சத்ருக்கள் நமக்கு செங்கோல் செலுத்துமவை அல்ல
ஸ்வாமீ நநு ஸ்ரீதர –பின்னையோ என்றால் திருமால் அன்றோ நமக்கு ஸ்வாமியாய் இருக்கிறார்
ஆலஸ்யம் வ்யப நீய -சோம்பலை தொலைத்து
பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் -பக்திக்கு ஸூலபனான ஸ்ரீ மன் நாராயணனை த்யானம் பண்ணு
பத்துடை அடியவர்க்கு எளியவன் அன்றோ
லோகஸ்ய வ்யாஸ நா பநோத நகரோ -உலகத்துக்கு எல்லாம் துன்பத்தை போக்குகின்ற அவர்
தாஸஸ்ய கிம் ந ஷம-அவருக்கே அடிமைப் பட்டு இருக்கும் அடியேனுக்கு பாபத்தை போக்க மாட்டாதவரோ
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் போன்றவற்றை மடி மாங்காய் இட்டு லோகத்தார் துன்பம் போக்குபவன் அன்றோ
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று இசைந்து வந்து அடிமைப் பட்ட நம்மை ரஷியாது ஒழிவானோ

Mabhir manda-mano vichintya bahudha yamis chiram yatana
Naivami prabhavanti papa-ripavah svami nanu sridharah
Alasyam vyapaniya bhakti-sulabham dhyayasva narayanam

Lokasya vyasanapanodana-karo dasasya kim na kshamah –11

Oh my foolish idiotic mind,-Do not fret and think,Of the pains that God of death will give.–How can your foes and sin touch you ever,-Is not your master the great Lord Sridhraa? Leave out this indifference , And pray Lord Narayana, Who is easy to approach.-Will not that master.Remove the sorrows of his slaves in a jiffy? 

அடுத்த   ஸ்லோகத்தில் இடை யூறுகள்  பல உண்டே என்கிறது நெஞ்சு

பார்கிறான்– கேட்கிறான் நினைந்து ..இடைவீடு இன்று த்யானித்து –சிநேக பூர்வ பக்தி ..வியசனன்களை போக்கு அடிக்கிறான்..லோகத்தின் /தாசனின்..ரஷிதா ஜீவா லோகஸ்ய தன் வீட்டுக்கும் நல்லது பண்ணுவான். உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் அந்த புர காரியம் எப்பொழுது பார்க்க போகிறாய் ஆண்டாள் கேட்கிறாள் .,.,மந்த மனசே..யாதனாதா -யாமா திக்கு- நரகத்தில் துக்கம் பல விதம் பல தடவை பீதி ந பயப் படாதே.. அமி -இந்த .பாப கூட்டங்கள் நமக்கு சுவாமி இல்லையே..ஆட் படுத்த முடியாது ..ஸ்ரீ தரனே சுவாமி .

அங்க பிர பத்தி-கீதா பாஷ்யத்தில்/  ஸ்வதந்திர பிர பத்தி.-ரகஸ்ய த்ரய வியாக்யானம்..ஈஸ்வர திருவடிகளே ரஷிக்கும்..பக்த்யா ஆரம்ப  விரோதி பாபங்கள்/ ஈஸ்வரனை அடைய தடுக்கும் பாபங்கள்..இச்சாலே தானே போகும்..அவன் திரு உள்ளம் பிடித்தது புண்யம் பிடிக்காதது பாபம்–ராஜ குமரன் சிறை பட்ட கதை சம்பந்தம் தெரிவித்த பின்பு-மொத்த கதவும் தானே திறக்கும்..கைதியோ ராஜாவோ முயற்சி எடுக்க வேண்டாம்..சரணா கதி பண்ணினதும் -சிறை அதிகாரி போல பாபம் புண்யம்- தன் அடியே போகும்.. முகுந்தன் ஸ்ரீதரன் சுவாமி என்றதும் தன் அடியே போகும்..ஸ்ரீ தரன்- அவளுக்கு நாயகன் தரித்து கொண்டு இருகிறவன்.. தப்பு பண்ணி கொண்டு இருக்கிறோம் அவள் சந்நிதி வேணுமே மறைக்க/அவன் கண்ணை மூட..மறக்கடித்து -மிதுனமே  உத்தேசம் ..

பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே ..ஆலச்யம் -சோம்பல் ஒன்றே விரோதி ..பக்தி சுலபம் .த்யானம் பண்ணுவாய் நாராயணனை ..சுலபன் அவன் -பக்தியால் கிட்டுகிறான் .மற்று எதனாலும்  முடியாது –ஞான தரிசன  பிராப்தி திசை மூன்றுக்கும்பக்தி ஒன்றே வழி ..பக்தி சிதாஞ்சனம் மை போல..நாராயணன்-எங்கும் உள்ளவனை த்யானம் பண்ணு ..நம் உள்ளும் இருக்கிறானே ..நாற்ற துழாய் முடி நாராயணன்

மூன்று தடவை எல்லா நாமமும் அருளுவாள் ஆண்டாள் திரு பாவையில்..கந்தம் வீசி கோள் சொல்லி கொடுகிறது உள்ளே இருக்கிறான் ..கதவுக்கும் பூட்டுக்கும் அந்தர்யாமி நாராயணன் ..தாசர்களுக்கு நன்மை பண்ணாமல் இருக்க மாட்டான் .லோகம்- பிரயோஜனாந்தர்களுக்கே உதவுகிறான் அடியார்களுக்கு  கட்டாயம் உதவுவான்

வானோ மரு கடலோ.கானோ -பாபங்கள் காணாமல் போயின ..தாசன் என்பதால் நிர்பயம்-ஆளவந்தார் ..படி கட்டு கட்டி இருக்கிறார் படகு போல அக்கரை தண்டு விக்கிறான்

மாத்ராஷம் ஷீண புண்யான் ஷணம் அபி பவதோ பக்தி ஹீநான் பதாப்ஜே மாஸ்ரவ்ஷம் ஸ்ராவ்ய பந்தம் தவ சரிதம பாச்யா ந்யாதாக் யாநஜாதம் மாச்மார்ஷம் மாதவ துவாம் அபி புவநபதே சேதசாஸ் பஹ்னுவாநான் மாபூவம் த்வத் சபரியா வயதி கர ரஹீதோ ஜன்ம ஜன்மாந்தரேபி-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலேசேகர ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: