ஸ்ரீ முகுந்த மாலை-ஸ்லோகங்கள்-12-24- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் / ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

பவ ஜலதி கதா நாம் த்வந்த்வ வாத ஹதா நாம்
ஸூ தது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதநாம்
விஷம விஷய தோ யே மஜ்ஜ தாமப் லவா நாம்
பவது சரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் –12-

பவ ஜலதி கதா நாம்-சம்சார சாகரத்தில் விழுந்தவர்களாயும்
த்வந்த்வ வாத ஹதா நாம் -ஸூக துக்கங்கள் ஆகிற பெரும் காற்றினால் அடி பட்டவர்களாயும்
ஸூ தது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதநாம் -மகன் மகள் மனைவி இவர்களைக் காப்பாற்றுவதாகிற பாரத்தால் பீடிக்கப் பட்டவர்களாயும்
விஷம விஷய தோயே மஜ்ஜ தாம் -குரூரமான சப்தாதி விஷயங்கள் ஆகி-இப்படிப்பட்ட சம்சார சாகரம் கடக்க ஓடம் அற்றவர்களாயும்
பவது சரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் –மனிதர்களுக்கு விஷ்ணு ஆகிற ஓடம் ஒன்றே ரக்ஷகமாக ஆகக் கடவது –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் –

————————————————

பவ ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதம் அஹம் இதி சேதோ மாஸ் மகா காதரத்வம்
ஸரஸி ஜத்ருசி தேவே தாவகீ பக்தி ரேகா
நரகபிதி நிஷண்ணா தாரவிஷ்யத் யவஸ்யம்–13-

பவ ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம் -கதம் அஹம் இதி சேதோ–வாராய் மனமே -ஆழமானதும் ஸூயயத்னத்தால்
தாண்ட முடியாதுமான சம்சார சாகரத்தை நான் எப்படி தாண்டுவேன் –
மாஸ் மகா காதரத்வம் -என்று அஞ்சி இருக்கும் நிலையை அடையாமல் -அஞ்சாதே இருக்க -என்றபடி
ஸரஸி ஜத்ருசி தேவே தாவகீ -நிஷண்ணா–பக்தி ரேகா -தாமரை போன்ற திருக் கண்களை யுடைய எம்பெருமான் இடத்தில் பற்றி இருக்கும் உன்னுடைய பக்தி ஒன்றே
நரகபிதி தாரவிஷ்யத் யவஸ்யம்-நரகாசூரனைக் கொன்றவன் அன்றோ -நிஸ் சம்சயமாக தாண்டி வைக்கும்-

———————————————–

த்ருஷ்ணா தோயே மதன பவ நோத்தூத மோஹோர் மிமாலே
தாரா வர்த்தே தனய ஸஹஜ க்ராஹ சங்கா குலே ச
ஸம்சாராக்யே மஹதி ஜலதவ் மஜ்ஜதாம் நஸ்திரிதாமன்
பாதாம் போஜே வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச–14-

த்ருஷ்ணா தோயே-ஆசை யாகிற ஜலத்தை யுடையதும்
மதன பவ நோத்தூத மோஹோர் மிமாலே-மதன பவன உத்தூத மோஹ ஊர்மி மாலே -மன்மதன் ஆகிற வாயுவினால்
கிளப்பட்ட மோஹம் ஆகிற அலைகளின் வரிசைகளை யுடையதும்
தாரா வர்த்தேதார ஆவர்த்தே -மனைவி ஆகிற சுழிகளை யுடையதும்
தனய ஸஹஜ க்ராஹ சங்கா குலே ச -மக்கள் -உடன் பிறந்தவர்கள் -இவர்கள் ஆகிற
முதலைக் கூட்டங்களால் கலங்கியும் இருக்கிற
ஸம்சாராக்யே மஹதி ஜலதபெரிய கடலில்
மஜ்ஜதாம் நஸ்–மூழ்கிக் கிடக்கிற அடியோங்களுக்கு
த்ரி தாமன் –மூன்று இடங்களில் எழுந்து அருளி இருக்கிற
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் -அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே –
சர்வ வியாபகத்துவத்துக்கும் உப லக்ஷணம் –
வரத -ஹே வரதனே-வாராய்
பாதாம் போஜே– பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -தேவரீருடைய திருவடித் தாமரையில் பக்தியாகிற ஓடத்தை தந்து அருள வேணும்
காம்பினார் திருவேங்கடப் பொருப்ப நின் காதலை அருள் எனக்கு -கலியன் –
பக்தி -பல பக்தியை சொன்னவாறு -சாதனா பக்தியை அன்று-

——————————————————

மாத்ராக்ஷம் ஷீண புண்யான் ஷணமபி பவதோ பக்தி ஹீநாத் பதாப்ஜே
மாஸ் ரவ்ஷம் ஸ்ராவ்ய பந்தம் தவ சரிதம் அபாஸ்ய அந்யதாக்யா நஜாதம்
மாஸ் மார்ஷம் மாதவ த்வாமபி புவனபதே சேதஸா அபஹ் நுவாநான்
மா பூவம் த்வத் ச பர்யா வ்யதிகர ரஹிதோ ஜென்ம ஜன்மாந்தரேபி–15-

மாத்ராக்ஷம் -நான் கண்ணுற்று நோக்க மாட்டேன்
ஷீண புண்யான்-துர்பாக்கிய சாலிகளை
ஷணமபி பவதோ பக்தி ஹீநாத்- பதாப்ஜே-தேவரீருடைய திருவடித் தாமரைகளில் க்ஷண காலமும் பக்தி அற்றவர்களாக
மாஸ் ரவ்ஷம்-காத்து கொடுத்து கேட்க மாட்டேன்
ஸ்ராவ்ய பந்தம் -செவிக்கு இனிய சேர்க்கையை யுடைய
தவ சரிதம் அபாஸ்ய அந்யதாக்யா நஜாதம் -தேவரீருடைய சரிதங்களை விட்டு வேறான பிரபந்தங்களை –
சேதஸா மாஸ் மார்ஷம்--மனசால் -நினைக்க மாட்டேன்
மாதவ த்வாமபி -திருமாலே தேவரீரை
புவனபதே -வாராய் லோகாதிபதயே
அபஹ் நுவாநான் -திரஸ்கரிக்குமவர்களை
மா பூவம் த்வத் ச பர்யா வ்யதிகர ரஹிதோ ஜென்ம ஜன்மாந்தரேபி -ஜென்ம ஜன்மாந்தரங்களிலும் தேவரீருடைய
திருவாராதனம் இல்லாதவனாக இருக்க மாட்டேன் –
தம்முடைய திருட அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார்
குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை என்பார்களான பாவிகளை நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானுடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே
இவ்வாறு இருக்குமாறு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

முக்தி அளிப்பவன் முகுந்தன். /மு கு மோஷமும் இந்த லோக ஐஸ்வர்யமும் சகல பல பிரதன்/அவனே வைத்த மா நிதி ..கொடுப்பான் கேட்க்க கூடாது பக்தி கைங்கர்யமே கேட்கணும்..சரண்ய முகுந்தத்வம் குணம் திரு கண்ண புரத்தான் காட்டி கொடுத்தான் ஆழ்வாருக்கு ..மற்று ஒன்றையும் பார்க்க வேண்டாம்.. உன் சரிதை தவிர வேற கேட்க்க வேண்டாம்.நித்யம் சகவாசம் வேத குதிர்ஷ்டிகள் பாக்யர்கள் உடன் வேண்டாம்  திரு ஆராதனம் பண்ணி கொண்டே இருக்கணும் .

——————————————————–

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் முரரிபும்-சேதோ பஜ ஸ்ரீ தரம்-
பாணித்வந்தவ ! சமர்ச்ச யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய !ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம்
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-மூர்த்தன் நமா தோஷஜம்--.16th-உயிரான  ஸ்லோகம்-

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் -வாராய் நாக்கே -கேசியைக் கொன்ற கண்ணபிரானையே ஸ்தோத்ரம் செய் -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன் -கேச பாசம் யுடையவன் –
முரரிபும்-சேதோ பஜ -வாராய் நெஞ்சே முராசூரனைக் கொன்ற கண்ணபிரானையே பற்று
ஸ்ரீ தரம்-பாணித்வந்தவ ! -சமர்ச்ச -இரண்டு கைகளே திருமாலையே ஆராதியுங்கோள்
யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !-இரண்டு காதுகள் -அடியாரைக் கை விடாத எம்பெருமான் சரித்ரங்களையே கேளுங்கோள்
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய -இரண்டு கண்களே கண்ணபிரானையே சேவியுங்கோள்
ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம் –இரண்டு கால்களே எம்பெருமானுடைய சந்நிதியையே குறித்து போங்கோள் –
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-வாராய் மூக்கே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடித் தாமரைகளில் சாத்தின திருத் துழாய் கந்தத்தையே அனுபவி
மூர்த்தன் நம அதோஷஜம்-வாராய் தலையே எம்பெருமானையே வணங்கு-

Jihve kirthaya kesavam mura-ripum cheto bhaja sridharam
Pani-dvandva samarchayachyuta-kathah srotra-dvaya thvam srunu
Krishnam lokaya lochana-dvaya harer gacchanghri-yugamalayam
Jighra ghrana mukunda-pada-tulasim murdhan namadhokshajam 20
Oh tongue, sing the praises of Kesava,-Oh mind, praise the Lord who killed Mura,

Oh hands, serve the Lord Sridhara,Of ears , hear the stories extolling Achyutha-Oh eyes , see always lord Krishna,-Oh feet, Go to the temples of Hari,-Oh nose , smell the Thulasi ,From the two holy feet of Lord Mukunda,And Oh head, bow before Lord Adhokshaja.

கண்  காது   எல்லாம் அவனுக்கே..நாக்கே -கேசவனையே கீர்த்தனம் பண்ணு/ மனமே முராசுரனை முடித்த முராரியை பஜனை பண்ணு -ஸ்ரீ தரனையே அர்ச்சனை பண்ணு கைகளே /காதுகளே அச்சுதன் கதைகளை-நழுவ விடாதவான் அச்சுதன் -கேளுங்கள் /கண்களே -கண்ணனையே- கருத்தவனை – பார்ப்பதே கரு விழிகளின் பிரயோஜனம்../ஹரியின் கோவில் வாசம் நோக்கி கால்களே போகுங்கள் -மூக்கே முகுந்தனின் பாத துளசியை நுகரு ../தலையே விஷ்ணுவையே வணங்குவாய் -அவனையே விஷயம் ஆக்கணும்

அசித் போல ஞானம் மழுங்கி இருந்தோம்..சரீரம் படி ஞானத்தில் உயர்வு தாழ்வு உண்டு..கர்மத்தின் அடியாக ஜன்மம்..அதற்க்கு உரிய ஞானம் செடிக்கும் ஞானம் உண்டு ஓர் அறிவு/விலங்கினம் மீன் முதல் பறவை -கொஞ்சம் கூடி..அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது ..காருண்யனான   சர்வேஸ்வரன்  நீர்மையினால் அருள் செய்தான் –முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணனே ….அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் ….தன் இந்தரியங்களுக்கு  சொல்லி கொள்கிறார்.–அலைய விடாமல் இருக்க இது வழி ..10 இந்திரியங்களுக்கு தலைவன் மனசு ..போராட்டம் எப் பொழுதும் ..நிதானம் இழக்க வைக்கும் ..துர் திசை

மருந்து இந்த ஸ்லோகத்தில் அருளுகிறார் .விலக்கி அவன் இடம் சேர  வேணும் ..திமிரும் காளை போல இவை..அழகிய பெண் அவன்.-உள் நிலா ஐவர் உடன் இருத்தி .அடங்க ஆத்மா சாஷாத்காரம் ..அடங்கினால் தான் சாஷாத் காரம்..  சாத்விக சுத்த சத்வ மயம்-பார்க்க பார்க்க அறிவு மலரும்..சுபாஸ்ர்யம் .கூரத் ஆழ்வான் -முதலி ஆண்டான் -இருந்த காலம்..வழியில் கூரத் ஆழ்வானை கண்டாயோ.-ஒருவன் திருந்தியது கண்டு தந்தை சொன்னது..எப் பொழுதும் எதிராசன் வடி வழக்கு இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் ..விட்டு விட்டு -புல்கு பற்று அற்று- புறம்புள்ள பற்றுகளை  வாசனை யோடு விடுகையும் -ஆண்டான் அருளியது – ஒன்றை விட்டு கொஞ்சம் அவனை வைத்தால் எல்லாரையும் வெளியில் அனுப்பி -இடத்தை கொடுத்தால் மடத்தை கொள்வான்..திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள் ஒக்கின்றதே -சிலருக்கு மதி நலம் அருளிகிறான்…என் மனக்கே வந்து  இடை வீடு இன்றி மன்னி எனக்கே ஆட் செய்  எக் காலத்து என்று -தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே –

கேளா செவிகள் செவி அல்ல/உள்ளாதார்உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-நினைப்பதாவது  அவனுக்கு- புஷ்பங்களை கண்டக்கால் பொன் அடிக்கு என்று நினைத்தால் போதும்-வாங்கி சாத்த வேண்டாம்..என் நாவின் இன் கவி ஒருவர்க்கும் கொடுக்கிலேன் ..பேசினார் பிறவி நீத்தார் பிறர் உளான் பெருமை பேசி ..தென்னா தென்னா என்று  கேட்ப்பான் -இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே சமுத்ரம் உள்ளே மலையும் கூழாம்கல்லும் உள்ளது.வித்யாசம் இல்லை அது போல- நாமும் பிரமாவும்  பேசி முடிக்க முடியாது அவன் பெருமையை ..கேசவன்- கேசி கந்தா விரோதி நிரசனம் /பிரசச்த கேச பாசம் படைத்தவன் சௌரி ராஜன் -/மை வண்ண நறும் குஞ்சிகுழல்  /கேசவம் கீர்தய -பிரமனுக்கும் ருத்னனுக்கும்  முதல்வன்/கிலேச நாசனன்-நான்கும் ..கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன..

அடுத்து முராரியை நினைப்பாய்..நெஞ்சே -பகவத் குண  அனுசந்தானம் அபய ஹேது ..நம் தோஷ அனுசந்தானம் பய ஹேது ..மனோ வியாதி அஞ்சலி -அ காரத்தை ஜலம் போல உருக்கி விடும்..அச்சுதன் கதையை விடாமல் கேளு..பச்சை மா மலை போல் மேனி  பவள வாய் கமல செம்கண் -..அச்சுதா -நழுவதல் இல்லை -கமலம் மொட்டும் கண் மொட்டாது..கேட்கையால்யான் உற்றது உண்டு ..போதர கனவில் கண்டு சிரத்தை தன்னால்  ..வேட்கை மீதூறு வாங்கி /முடியானில் கரணங்கள் அவை யாக / கண் கை மற்ற  கரணங்களின் வியாபாரங்களை கேட்க்கும் ஆதி சேஷனுக்கு கண்ணும் காதும் ஒரே இந்த்ரியம் தான் ..கிருஷ்ணம் லோகைய -கருத்த கண்ணனை காண்.. கண்ணுக்கு மையாக வழித்து கொள்ளலாம் சஞ்சயனும் த்ருத்ராஷ்ட்ரனும் பேசி கொண்டது -பக்த சுத்த அந்த காரணத்தாலே பார்கிறேன் பக்தி என்கிற மை தீட்டி கொண்டு இருக்கிறேன்.. கண்ணன் என்னும் கரும் தெய்வம். கமல கண்ணன் என் கண்ணில் உள்ளான் காண்பான் அவன் கண்களாலே -அமலங்களாக விளிக்கும்பார்க்க முடியாது பார்வையே அவன்.. பார்த்தால் நம் கண் பார்த்தது போல தான் .. கண்ணும் சுழன்று பீளையோடு –பண்ணின் மொழியார் பைய நடமின் -அங்க்ரி -கால்களே ஹரி நோக்கி நடவுங்கள்..ஆச்சர்ய அனுஷ்டானமே நடை அழகு..மென் நடைய அன்னம் பறந்து விளை ஆடும்-ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நைந்து நைந்து -பசலை நோயால் முட்டு கொடுத்து கொண்டு -கசிந்த நெஞ்சினராய் –ஒசிந்த  திரு கோளூர்கே -திண்ணம் இவள் அங்கே  போனாள் தாயார் பாசுரம் …. ..தாராயினும் தன் கொம்பு அதானய்யினும் மண்ணாயினும் கொண்டு -துளசி குட்ட நாட்டு திரு புலியூர் தோழி பாசுரம்..

நடை உடை பாவனை பார்த்தால்-இவள் நேர் பட்டதே துளசி வாசனை வீசுகிறது திரு மாலுக்கே ஆட் பட்டாள்-பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நீர்  இருக்க கிளிகள் தாம் இருக்க நெஞ்சம் அல்லது வஞ்சம் அற்ற துணை இல்லை என்று தூது விட -என்னையும் மறந்து  திரும்பியே வருதல் இல்லையே துளசி கந்தத்தால் ..முகுந்தன் திருவடி யில் உள்ள துளசி கந்தமே நுகரனும் மூக்கே என்கிறார் ..திரு மாலை வணங்குவதே தலைக்கு -பணியா அமரர்.. மற்ற பேர் இடம்..சாஷ்டாங்க அபயம்- மனசு அகங்காரமும் புத்தியும் சேர்ந்து தலை கால் கை எட்டும் அடங்கி..

வாசா யதீந்திர மனசா வபுஷா கூராதி நாதா -மா முனிகள்/சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே/ வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது -ஆண்டாள்.

——————————————————–

ஹே லோகாஸ் ஸ்ருணத ப்ரஸூதி மரண வ்யாதேஸ் சிகித்சாமி மாம்
யோகஜ் ஞாஸ் சமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க்யாதய
அந்தரஜ்யோதி ரமேய மேகமம்ருதம் க்ருஷ்ணாக்ய மாபீ யதாம்
தத் பீதம் பரம ஒளஷதம் வித நுதே நிர்வாண மாத் யந்திகம் -17-

ஹே லோகாஸ் ப்ரஸூதி மரண வ்யாதேஸ் சிகித்சாமி மாம் -ஜனங்களே -பிறப்பி இறப்பு யாகிய வியாதிக்கு பரிஹாரமாக-
யோகஜ் ஞாஸ் சமுதா ஹரந்தி முநயோ யாஜ்ஞவல்க்யாதய-யோக முறையை அறிந்தவர்களான யாஜ்ஞவல்க்யர் முதலியா ரிஷிகள் யாதொன்றை கூறுகின்றார்களோ
இமாம் ஸ்ருணத -இந்த சிகித்சய்யை கேளுங்கோள்
அந்தரஜ்யோதி ரமேய மேகமம்ருதம் க்ருஷ்ணாக்ய மாபீ யதாம் -உள்ளே தேஜோ ராசியையும் -அளவிட முடியாததையும்
ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் பெயரை யுடையதாயும் உள்ள
அம்ருதம் ஏகம் ஆபீயதாம் -அம்ருதம் ஒன்றே உங்களால் பானம் பண்ணப் படட்டும்
தத் பீதம் பரம ஒளஷதம் வித நுதே நிர்வாண மாத் யந்திகம் – இந்த சிறந்த மருந்தானது பானம் பண்ணப் பட்டதாய்க் கொண்டு
சாஸ்வதமான ஸுக்யத்தை உண்டு பண்ணுகிறது –இதுவே பரம போக்யமான ஒளஷதம்
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதொரு -தேஜஸ் புஞ்சமாய் இருக்கும்
எழுமைப் பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே -திருவாயமொழி –

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்.. கேளுங்கோள் – சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வேன் கேளுங்கோள் -காது கொடுத்தால் போதும்..யாக்ஜா வர்கர் போன்ற முனிவர்கள்-மனன சீலர்கள்- நல்ல சாஸ்திரம் தெரிந்தவர்கள் யோக மார்க்கம் தெரிந்தவர்கள் காட்டும்  வகை  சொல்கிறார்.. இந்த சிகிச்சையை/பிறப்பு இறப்பு வியாதி முதலிய வற்றுக்கு..அந்தர் ஜோதி  வடிவாக  இருக்கும்..அமிர்தம் ஒன்றாக அளவிட முடியாத -சாப்பிடுங்கோ..கிருஷ்ண பெயர் பெற்ற அமிர்தம் ..பரம மான ஒளஷதம் .நிர்வாணம் -நிரந்தரமான சுகம் உண்டு பண்ணும்..முனியே நான்முகனே -ஜகத்தை ரஷிக்க நினைந்து கொண்டு இருக்கும் முனி..

மருந்து தேகத்துக்கு மட்டும் இல்லை ஆத்மாவுக்கு..தேட வேண்டாம் .சுயம் பிரகாசமான மருந்து..அந்தர் ஜோதி. தனக்கு தானாக ஒளி விடுகிறான். நிறைந்த ஜோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி உடன் -நாராயண பரம் ஜோதி..சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது ..துளக்கம் இல்லா நந்த வேத விளக்கு ….ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு ..அப்ரமேயம்- புத்திக்கு அப்பால் பட்டவன்..வாசாம் அகோசரம் /மொழியை  கடக்கும் பெரும் புகழ் ..பக்தியால் பெறலாம்..

பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டா /கண்ணன் என்னும் அமிர்தத்தை குடிக்கணும்..அமிர்தம் அருந்தினால் பிறப்பு போகாது.. ஆரா அமுதே ..சீரார் திரு குடந்தை. தீரா வினைகள் தீர்ப்பான்..கலியும் கெடும் கண்டு கொண்மின்..விசாதி பகை .நின்று இவ் உலகில் கடிவான் ..பிணி பசி மூப்பு துன்பம் ..களிப்பும் கவரும் அற்று பிணி மூப்பு இல்லா பிறப்பு அற்று ..அடியார் குளாங்களை கூடுவது என் கொலோ ..

 

————————————————-

ஹே மர்த்த்யா பரமம் ஹிதம் ஸ்ருணத வோ வஹ்யாமி சங்ஷேபதே
சம்சார ஆர்ணவ மாபதூர்மி பஹூளம் சம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா
நாநாஜ்ஞான மபாஸ்ய சேதஸி நமோ நாராயணா யேத்யமும்
மந்த்ரம் ச பிரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ரா வர்த்தயத்தவம் முஹு –18-

ஹே மர்த்த்யா-வாரீர் மநுஷ்யர்களே
பரமம் ஹிதம் ஸ்ருணத வோ வஹ்யாமி சங்ஷேபதே -உங்களுக்கு மேலான ஹிதத்தை சுருக்கமாக இதோ சொல்லப் போகிறேன் கேளுங்கோள்
சம்சார ஆர்ணவ மாபதூர்மி பஹூளம் -ஆபத்துக்கள் ஆகிற அலைகளால் மிகுந்த சம்சாரம் ஆகிற கடலினுள்ளே
சம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா -ஆழ அழுந்திக் கிடக்கிற
நாநாஜ்ஞான மபாஸ்ய-பல வித அஞ்ஞானங்களை விலக்கி
சேதஸி நமோ நாராயணா யேத்யமும்-மந்த்ரம் ச பிரணவம்-ஓங்காரத்தோடே கூடிய நமோ நாராயணாய என்கிற இது திரு மந்த்ரத்தை மனசிலே
ப்ரணாம ஸஹிதம் ப்ரா வர்த்தயத்தவம் முஹு –– அடிக்கடி வணக்கத்தோடு கூடிக் கொண்டு இருக்கும் படி அநுஸந்தியுங்கோள் –
அல்ப அஸ்திர விஷய போகங்களை விருப்புவதை விட்டு அஞ்ஞானத்தை தொலைத்து -எப்பொழுதும்
திரு அஷ்டாக்ஷரத்தை அனுசந்திப்பதே ஹிதம் -இத்தையே வ்ரதமாகக் கொள்ள வேணும் –

—————————————————

ப்ருத்வீ ரேணு ரணு பயாம்சி கணிகா பல்குஸ் புலிங்கோ அனல
தேஜோ நிஸ் வசனம் மருத் தநுதரம் ரந்தரம் ஸூ ஸூஷ்மம் நப
ஷூத்ரா ருத்ர பிதா மஹ ப்ரப்ருத்ய -கீடாஸ் சமஸ்தாஸ் ஸூ ரா
த்ருஷ்டே யத்ர ச தாவகோ விஜயதே பூமா வதூதாவதி–19

ப்ருத்வீ ரேணு ரணு -பூமியானது ஸூஷ்மமான துகளாகவும்
பயாம்சி கணிகா பல்குஸ் -ஜல தத்வமானது சிறிய திவலை களாகவும்
புலிங்கோ அனல தேஜோ -தேஜஸ் தத்வமானது அதி ஷூ தரமான நெருப்புப் பொறியாகவும்
நிஸ் வசனம் மருத் தநுதரம்-வாயு தத்வம் மிக அற்பமான மூச்சுக்கு காற்றாகவும்
ரந்தரம் ஸூ ஸூஷ்மம் நப -ஆகாச தத்வம் ஸூஷ்மமான த்வாரமாகவும்
ஷூத்ரா ருத்ர பிதா மஹ ப்ரப்ருத்ய -கீடாஸ் சமஸ்தாஸ் ஸூ ரா -சிவன் ப்ரஹ்மாதி தேவர்கள் எல்லாம் அற்பமான புழுக்களாகவும்
த்ருஷ்டே யத்ர ச தாவகோ விஜயதே பூமா வதூதாவதி -அப்படிப் பட்ட எல்லை இல்லாத யாதொரு உம்முடைய மஹிமையானது மேன்மையுற்று விளங்குகிறது – ஆலஷ்யந்தே -தோன்றுகிறது என்ற கிரியை வருவித்து கொள்ள வேண்டும் –

 

 

என் நினைந்து போக்குவார் . பூமா அவதூத அவதி எல்லை அற்ற பெருமை..ப்ருத்வி-அம் கண் மா ஞாலம் ..14 லோக 7 ஆவரணங்கள் l லீலா விபூதி கால் பங்கு –துகள் போல –தண்ணீரும் -கணிகா பல்கு-அக்நி தத்வம்-பொறி போல ச்புலிங்க லகு /மருது-காற்று நிச்வசனம் மூச்சு காற்று போல/ ஆகாசம் சின்ன துவாரம் போல //எல்லா தேவர்களும் -ருத்ரர்  பிதாமகன் தொடக்கமாக -புழு போல ..உன் உடைய பெருமை உடன் சேர்த்து ஒப்பிட்டு பார்த்தால் ..எல்லைக்கு உட்படாத பெருமை..

நளிர் மதி சடையனும்… யாவரும் அகப்பட ..ஓர் ஆல் இலை மாயனை ..ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்  அகப்பட கரந்து-சிறிது உடன் மயங்க ..மயில்  காலால் ஒன்றால் ஜகம் எல்லாம் தாங்குகிறான்  ..தேவரையும்படைத்தவனே — ..யாவரும் வந்து அடி வணங்கும் அரங்கன் ..உன் உடையதால் ஜெயிக்கும்..

—————————————————————

பத்தேன அஞ்சலினா நதேன சிரஸா-காத்ரைஸ் : சரோமோத்கமை :
கண்டே ந ச்வரகத் கதேந நயனே நோத் கீர்ண பாஷ்பாம்புனா!
நித்யம் தவச் சரணார விந்த யுகள த்யானாம்ருதா ச்வாதினாம்
அஸ்மாகம் சரசீருஹாஷா !சத்தம் சம்பத் யதாம் ஜீவிதம்...-20

பத்தேன அஞ்சலினா-சேர்க்கப் பட்ட அஞ்சலி முத்ரையாலும்
நதேன சிரஸா-வணங்கிய தலையினாலும்
காத்ரைஸ் : சரோமோத்கமை :-மயிர்க் கூச்சு எறிதலோடு கூடிய அவயவங்களினாலும்
கண்டே ந ச்வரகத் கதேந-தழு தழுத்த ஸ்வரத்தோடு கூடிய கண்டத்தினாலும்
நயனே நோத் கீர்ண பாஷ்பாம்புனா!-சொரிகிற கண்ணீரை யுடைய நேத்ரத்தினாலும்
நித்யம் தவச் சரணார விந்த யுகள த்யானாம்ருதா ச்வாதினாம்-எப்பொழுதும் தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற சிந்திப்பதாகிற அமுதத்தை அருந்துகின்ற
சரசீருஹாஷா !–தாமரை போன்ற திருக் கண்களை யுடைய பெருமானே
அஸ்மாகம் சத்தம் சம்பத் யதாம் ஜீவிதம்.–அடியோங்களுக்கு ஜீவனமானது எக்காலத்திலும் குறையற்று இருக்க வேண்டும் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -இச் சிந்தனையே அம்ருத பானம்
காலும் எழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா மயிர் கூச்சம் அற என தோள்களும் வீழ் ஒழியா
தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –என்று வேண்டினார் நம்மாழ்வாரும் –

 

தாமரை கண்ணனே-எங்களுக்கு எப் பொழுதும் ஜீவனம் குறை அற்று இருக்கட்டும்..கண்ட இடத்தில்- தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணையே அடைய..அழகர் இடம் ராமானுஜர் திரு அடி நிழலில் இருக்க கேட்டாரே கூரத் ஆழ்வான் ..,ஆக்கி வைத்த ஏற்றம் அவனது.. நித்யம் உன் திரு வடி தாமரை  அடிகளில் அமிர்தம் பருகும் இன்பமே வேணும்..கை கூப்பிய அஞ்சலி /வணங்கிய தலை/ உடம்பில் மயிர் கூச்சு எறிதல் கொண்டு/ தொண்டை தழு தழுத்து/ கண்ண நீர் கொட்டி/ பாஷ்ப அம்பு -இந்த நிலை நீ எனக்கு அருளு.. தேட்டறும் -ஆட்டம் மேவி ..நாத் தளும்ப நாரணா என்று உரைக்க /சேரும் நெஞ்சினராகி ..கும்பிடுநட்டம் எட ஆடி..கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி .நெஞ்சு உருகி .கடல் வண்ணர் இது செய்வார் காப்பர் யாரே பட்டு உடுக்கும் பனி கண்ணீர் ததும்ப -இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் சிட்டனே -இவள் திறத்து என் சிந்தித்து இருந்தாய் .. வஞ்சனே என்று கை தொழும்..என் நீர்மை ஈடு அளிக்கும் இது தகாது …

தொலை வில்லி மங்கலம் -அமுத மென் மொழியாளை மழை பொழுதால் ஒக்கும்-இரா பகல் வாய் வெருவி..இரும்பு போல் வலிய நெஞ்சம்  உருகும் வண்ணம் அவன் நீர்மைஅனைத்தும் சோறும் நீரும் வெற்றிலையே -என்றே என்றே கண்ணில் நீர் மல்கி ..தன ஜீவனத்தை தேடி போனால்.. என் ஜீவனத்தை எடுத்து கொண்டு போக வேண்டுமோ  ..அவளை பார்த்து கொண்டு இருப்பதே இவள் ஜீவனம்.. பெருமாளே என்று இருக்கும் அடியார் உடன் இருப்பதே ஜீவனம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையே ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

———————————————————

ஹே கோபாலக! ஹே க்ருபா ஜலநிதே! ஹே சிந்து கன்யாபதே!
ஹே கம்சாந்தக! ஹே கஜேந்திர கருணா!பாரீண ஹே மாதவ!
ஹே ராமானுஜ! ஹே ஜகத்ரய குரோ!ஹே புண்டரீகாஷா! மாம்
ஹே கோபி ஜன நாத! பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா--21..

ஹே கோபாலக! -ஆ நிரை காத்து அருளினவனே -குன்று எடுத்து கோ நிரை காத்து அருளினவனே –
ஹே க்ருபா ஜலநிதே!-கருணைக் கடலே
ஹே சிந்து கன்யாபதே!-திருப் பாற் கடல் திரு மகளான பெரிய பிராட்டியாருக்கு கணவனே
ஹே கம்சாந்தக! -கொடிய கம்சனை ஒழித்தவனே
ஹே கஜேந்திர கருணா!பாரீண -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அருளை பொழிய வல்லவனே
ஹே மாதவ!-ஸ்ரீ யபதியே –ஹே சிந்து கன்யாபதே-போலே -திரு நாம சங்கீர்த்தனம் விவஷிதம் என்பதால் புனர் யுக்தி தோஷம் வாராது –
ஹே ராமானுஜா– தம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவனே
ஹே ஜகத்ரய குரோ! -மூ உலகுகடக்கும்-அனைத்து -உலகுகடக்கும் – தலைவனே
ஹே புண்டரீகாஷா! -தாமரைக் கண்ணனே
ஹே கோபி ஜன நாத! -இடைச்சிகளுக்கு இறைவனே
மாம்- பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா--அடியேனை ரஷித்து அருள வேணும் -.உன்னைத் தவிர வேறு ஒரு புகல் அறிகிறேன் அல்லேன்

 

அநந்ய கதித்வம் -புகல் இடம் இல்லை ..ஆகிஞ்சன்யம்-சமர்பிக்க ஒன்றும் இல்லை.. இரண்டும் வேணும்..பல நீ காட்டி படுப்பாயோ/ நெறி காட்டி நீக்குவாயோ .. அதிகாரம் ஆசை மட்டுமே.. ஆசை உடையோர்க்கு எல்லாம்.. பேசி வரம்பு அறுத்தார்..அதிகாரம் வேறு ஒன்றும் இல்லாதது தான் அதிகாரம்..

கோபாலன்-ரஷகனே நீ-பசு மாடுகளை ரஷித்தவன்/பிரம்மா சிவன் இந்த்ரன்மட்டும் இல்லை –மாடு கன்றுகளை ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த வேத முதல்வன்..கோ=ஆத்மா ஆத்மாவை ரஷிப்பவன்/கல் எடுத்து கல் மாரி காத்தானே ஆத்மாநாம் மனுஷ்யன்..அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே….இட்டமான பசுக்களை இனிது மறுத்தி நீர் உஊட்டி –குனிந்து நாக்கால் நக்கி சாப்பிட்டு காட்டுவான் ..திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி..மாடு கன்றுகளை கூட- இல்லை- தான்- ரஷிப்பான்- அவன் திருவடிகளே கதி என்று இருக்கும்..ரஷிக்க கிருபை ஜல நிதி சமுத்ரம்-கிருபை நிறைந்த தயை சமுத்ரம்..நம் பு ண்யன்களால் இல்லை அவன் தயையால்  தான் காக்கிறான் ..

ச்வாபம் இவனுக்கு ரஷிப்பது..தோஷ போக்யத்வம்..குறைகளை குணமாக கொண்டு..தயா தேவிக்கி அபராத சக்கரவர்த்தி போல சமர்ப்பிக்க . நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையான் என்ற தம்மை தூக்கி அருளிய  பேர் அருளாளர் நம் ஆழ்வார் என்கிறார் .சிந்து கன்யா பதே- சமுத்திர ராஜ்யனின் புத்திரிக்கு  பதியே- புருஷ காரத்துக்கு இவளும் உண்டே.. தயை நீர் பூத்த நெருப்பு போல மூடி கொண்டு இருக்க ச்வாதந்த்ர்யம் தட்டி விட  இதனால் தானே தலை எடுக்குமாம் கல்யாண குணங்கள் .கம்சாந்தனகன்-விரோதி முடித்தாயே சக்தி படைத்தவன்.அந்தகன்-முடித்தான் /மல்லரை மாட்டிய தேவாதி தேவன்..சம்சாரம் சரீரம் காம குரோதங்களை தொலைத்து மோஷம் தருவான்..கஜேந்திர கருணா காட்டிய  -வல்லமை படைத்தவனே -வெள்கி நிற்ப-நாகணை மிசை நம்பிரான் சரண்-.அது போல சக்தி பக்தி இல்லாதவன் நான்..அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே..நின் செம் மா பாத பர்பு தலை மேல் சேர்..அநாதி காலமாக இந்தரியங்கள் ஆகிய முதலைகள் படுத்தும் பாடு..மாதவ ! பிராட்டி க்ஷணம் நேரம் கூட பிரியாமல் இருந்து  இறையும் அகலகில்லேன் என்று ..மது-வம்சம் யது குலம்/ மா -வித்யா ஸ்தானம் பிரவர்தகன்..ஹே ராமானுஜ !ஜகதாச்சர்யாராய் சகாயமாய் கொண்டாயே -பல ராமனுக்கு தம்பி ஆதிசேஷனே சகாயம்..அண்ணல் இராமனுசன் வந்து தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆனார்களே..

திரும்பி பார்க்காமல் அஞ்ஞானத்தால் மூடி இருக்கிறோம்..குருவாய் அவதரி ஜகத் திரைய குரு// கு-இருட்டு போக்குபவன்..ராமானுஜரே மூன்று ஜகத்துக்கும் குரு-சத்யம் சத்யம் என்று கூரத்  ஆழ்வான் அருளினாரே .//ஆச்சர்ய பதவியில் ஆசை பட்டு இருப்பான் திரு மந்த்ரம் வெளி இட்டான் -கீதாச்ர்யனாய் சரம ஸ்லோகம் அருளினான்.. லஷ்மி நாதன் குரு பரம்பரையில் முதல் ஸ்நானம் பிடித்தான்..

கண்களை காட்டி ரஷிப்பாய்-ச்ரமணி விதுரர்.. நெடும் நோக்கு -விரஜை ஸ்திரிகளின் கண் அடி படி பட்டு பயப்படுவான் .. மாம் பாலய -ரஷித்து விடு ..உன்னை தவிர இவை வேறு ஒருவர் இடமும் இல்லை ..ஓன்று கூட ஒருவர் இடம் இல்லை ..கோன் வசமி-16 கல்யாண குணங்களும் அவன் ஒருவன் இடம் மட்டும் தான் ..அநந்ய கதித்வம்  வெளி இட்ட ஸ்லோகம்.. பதிகம் முழுவதும் பெருமாள் திரு மொழியில் இவரே அருளியது போல –எங்கும் போய் கரை காணாது எங்கு போய் வுய்கேன்  வங்கத்தின் கூம்பு  ஏறும் மா பறவை போல்..வித்து வக் கோட்டு அம்மானே –தமேவ சரணம் கதா -காகாசுரன் மூன்று லோகமும் சுற்றி திரும்பி வந்து விழுந்தது போல..தரு துயரம்-குழவி அது போல் இருந்தேனே ..கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்..மருத்துவன் பால்  மாளாத காதல் நோயாளன் போல்.

————————————

இவனை மணி மந்த்ரம் மருந்து மூன்றும் மூன்று ஸ்லோகங்களால் அருளுகிறார்-

பக்த அபாய புஜங்க கருட மணி:-த்ரை லோக்ய ரஷா மணி:
கோபீ லோசன சாதக அம்புத மணி:சௌந்தர்யம் முத்ரா மணி:
ய: காந்தா மணி ருக்மிணீ கனகுச-துவந்த்வைக பூஷாமணி:
ஸ்ரேயோ தேவசிகா மணிர் திசதுனோ-கோபால சூடாமணி–22-

பக்த அபாய புஜங்க கருட மணி:-அடியார்களின் ஆபத்துக்கள் ஆகிற சர்ப்பத்துக்கு கருட மணியாயும்
த்ரை லோக்ய ரஷா மணி:-மூ உலகுகட்க்கும் -எல்லா உலகுகட்க்கும் ரக்ஷனார்த்த மணியாயும்
கோபீ லோசன சாதக அம்புத மணி:-ஆய்ச்சிகளின் கண்கள் ஆகிற சாதகப் பறவைகளுக்கு மேக ரத்னமாயும்
சௌந்தர்யம் முத்ரா மணி:-ஸுந்தர்யத்துக்கு முத்ரா மணியாயும் -அழகு எல்லாம் திரட்டி முத்திரை இட்ட பரம ஸூந்தரானாயும்
ய: காந்தா மணி ருக்மிணீ கனகுச-துவந்த்வைக பூஷாமணி:-மாதர்க்களுக்குள் சிறந்த ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டியின் நெருங்கிய இரண்டு ஸ்தனங்களுக்கு முக்கியமான அலங்கார மணியாயும்
தேவசிகா மணிர்-தேவர்களுக்கு ஸீரோ பூஷணமான மணியாயும்
-கோபால சூடாமணி-இடக்கை வலக்கை அறியாத -இடையர்களுக்குத் தலைவராயும் இருப்பவர்
ஸ்ரேயோ திசதுனோ-யாவர் ஒருவரோ அந்த ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு நன்மையை அருள வேணும்

 

முன் எனக்கு என்றார் இப் பொழுது கூட்டமாக -கோபால சூடா மணி எங்கள் அனைவருக்கும் கொடுக்கட்டும் எந்தாய் சிந்தா மணியே வந்து நின்றாய் மன்னி நின்றாய்/பக்த அபாய புஜங்க கருட மணி..முதலில்..பக்த அபாயம் தான் பாம்பு –கண்ணன் என்னும் கருட மணி.–.புலி துரத்த பாம்பின் நிழலில் ஒதுங்க….பொய் நின்ற  அருளியதும் பாம்புகள் போக ஆரம்பிக்க வானோ மரி  கடலோ –எங்கு போனது…கழிமின் தொண்டீரேகள் கழித்து தொழுமின் தொழுதால் ..வல் வினை மாய்த்து மோஷம் தருவான். நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன அடியே போகும் இச்சாலே..தரை லோகய ரஷா மணி -ரஷா பந்தனம் ..

நடந்தும் உமிழ்ந்தும் .. சால பல நாள் உயர்கள் காப்பான் .கோபி லோசன சாதக அம்புத மணி /அம்புத= மேக.சரணா கதன் கிருபை பொழிய தான் காத்து இருப்பன் பிர பன்ன சாதக அம்புத மணி…வான் மறந்த காலத்தும்  மா முகிலே பார்த்து இருக்கும் பறவை போல்/சௌந்தர்யம் முத்ரா மணி அழகை சேர்த்து பையில் போட்டு முத்தரை வைக்க இந்த மணி..அழகே ஆயுதம்.ஒரு நாள் முகத்திலே விழித்தாரை வடி வழகு படுத்தும் பாடு..

அச்சோ ஒருவர் அழகிய வா -நாகை அழகர் அவயவ சோபை…துன்னு மா மணி முடி  மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் -திரு கண்ண புரம்-பாசுரம்-அடி தளமும் தாமரை அங்கைகைகளும் பங்கயமே என்கின்றாளால்  முடி தளமும் பொற் பூணும்..கண்ண புரத் அம்மானை கண்டாள் கொலோ ..மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தார்க்கு மாலுக்கு -இழந்தது சங்கே..அழகுக்கு பறி  கொடுத்தாள்.அழகை வர்ணம்– ஒழித்து பராங்குச நாயகியை தோற்ப்பித்தான்..தேசும் அடியோர்க்கு அகலலாமே ..நீல மேனி ஐயோ ..அழகுக்கு சொந்தம்- பெண்கள் கூட்டத்துக்கு தலைவி ருக்மிணி -கனகுச துவந்த ஏக  -திரு மார்புக்கு பூஷா மணி -பிராட்டிபதக்கத்தில் அவனும் அவன் திரு மார்பு பதக்கத்தில் அவளும்..தேவர்களுக்கு சிகா மணி –பாசுபத அச்த்ரதுக்கு கைலாச யத்ரைபோகனும். கண்ணனை பிரதட்ஷனம் பண்ணி .தீர்த்தன் உலகு அளந்த சேவடி பூம் தாமம் சேர்த்து அவையே  சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து .-திசது -நமக்கு நல்லது கொடுக்கும்.. கோபால சூடா  மணி இடையர்களுக்கும் ..மணி வண்ணா -ஆண்டாள் இத்தால் அருளினாள்..மணி இருக்கிறவர் பயம் ஆழ்வார்கள் / நீரோட்டம் தெரியும் மணிக்குள் /கருணையே / விஸ் லேஷம் பொருக்க முடியாது முந்தானையில் வைத்து ஆளலாம் படி இவன்-

—————————————–

..அடுத்த ஸ்லோகத்தால் மந்த்ரமாக அருளுகிறார்-

சத்ருஸ் சேதைக மந்த்ரம் சகலம் உபநிஷத் வாக்ய சம் பூஜ்ய மந்த்ரம்
சம்சார உத்தார மந்த்ரம் சமுசித-தமஸ் சங்க நிர்யாண மந்த்ரம்
சர்வைஸ் ஐஸ்வர்ய ஏக மந்த்ரம் வ்யசன புஜக-சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்
ஜிக்வே ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம் ஜப ஜப-சத்தம் ஜன்ம சாபல்ய மந்த்ரம் —-23-

சத்ருஸ் சேதைக மந்த்ரம் -சத்ருக்களின் நாசத்துக்கு ஒரே மந்திரமாய்
உபநிஷத் வாக்ய சம் பூஜ்ய மந்த்ரம்-வைதிக வாக்யங்களால் மிகவும் பூஜ்யமாகச் சொல்லப் பட்ட மத்ரமுமாய்
சம்சார உத்தார மந்த்ரம்-சம்சாரத்தில் நின்றும் கரை ஏற்ற வல்ல மந்த்ரமுமாய்
சமுசித-தமஸ் சங்க நிர்யாண மந்த்ரம்-மிகவும் வளர்ந்து இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்க வல்ல மந்த்ரமுமாய்
சர்வைஸ் ஐஸ்வர்ய ஏக மந்த்ரம்-சர்வவித ஐஸ்வர்யங்களையும் கொடுக்க வல்ல முக்கிய மந்த்ரமுமாய்
வ்யசன புஜக-சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்-துன்பங்கள் ஆகிற சர்ப்பங்களால் கடிக்கப் பட்டவர்களைக் காக்கும் மந்தரமுமாய்
ஜன்ம சாபல்ய மந்த்ரம் –ஜன்மத்துக்கு பயன் தர வல்ல மந்த்ரமுமாய்
சகலம் ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரம்–ஸமஸ்த மான ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தையும்
ஹே ஜிக்வே ஜப ஜப-சத்தம்--வாராய் நாக்கே எப்போதும் இடை விடாமல் ஜபம் பண்ணுவாய் -என்று தம் திரு நாவுக்கு உபதேசிக்கிறார் –

 

வாக்கை அழைத்து சொல்கிறார் அடுத்து மனசுக்கு…சத்ருகளை  ஒழிக்க ஒரே மந்த்ரம்..கோபால சொத்து பெற என்றும்  ராம மந்த்ரம் புத்திர பாக்கியம்…..ஒத்தின் பொருள் முடிவும் இதுவே -மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு ..

-நெருக்கமாக வளர்ந்த அஞ்ஞானம் தமஸ்-கூட்டங்களை போக்கும் மந்த்ரம் அறியா காலத்தில் அடிமை உணர்வித்து..சர்வைஸ் ஐஸ்வர்ய மந்த்ரம்- வ்யசன பூஜைக சந்தஷ்ட சந்த்ரான மந்த்ரம்..மழலை  தீர வல்லார் காமர் மானே நோக்கியர்க்கே- பலன் ..தாவி வையம் கொண்ட தடம் தாமரை- அடிகள் சொல்ல  வில்லை..அது போல மதனர்..போல பகவானுக்கு மிக வேண்டியர் ஆக இருப்பார்கள் என்கிறார் -வ்யசன  புஜ க சந்தஷ்ட சந்த்ராண மந்த்ரம்  சம்சாரம் போக்கும் /அமுதத்திலும் இனியன் –ஜன்ம பலனுக்கு கிருஷ்ண மந்த்ரம் ..பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம்-
——————————————————–

வ்யாமோஹ பிரசம ஒளஷதம் முநிமனோ-வ்ருத்தி பிரவ்ருத்தி ஒளஷதம்
தைத்யேந்திர ஆர்த்தி கர ஒளஷதம் த்ரி ஜெகதாம் சஞ்சீவன ஏக ஒளஷதம்
பக்தாத்யந்த ஹித ஒளஷதம் பவபய பிரத்வம்சந ஏக ஒளஷதம்
ஸ்ரயே ப்ராப்தி கர ஒளஷதம் பிப மன ஸ்ரீ கிருஷ்ண திவ்ய ஒளஷதம் –24-

வ்யாமோஹ பிரசம ஒளஷதம்-விஷயாந்தரங்களில் உள்ள மோஹத்தை போக்க வல்ல மருந்தாயும்
முநிமனோ-வ்ருத்தி பிரவ்ருத்தி ஒளஷதம் -முனிவர்கள் மனசை தன்னிடத்தில் செலுத்திக் கொள்ள வல்ல மருந்தாயும்
தைத்யேந்திர ஆர்த்தி கர ஒளஷதம் -அசுரர்களில் தலைவனான கால நேமி முதலானவர்களை தீராத துன்பத்தை தரும் மருந்தாயும்
த்ரி ஜெகதாம் சஞ்சீவன ஏக ஒளஷதம் -மூ உலகோர்க்கும் -எல்லா உலகோர்க்கும் -உஜ்ஜீவனத்துக்கு உரிய முக்கிய மருந்தாயும் –
பக்தாத்யந்த ஹித ஒளஷதம்-– அடியவர்களுக்கு மிகவும் ஹிதத்தை செய்யும் மருந்தாயும் –
பவபய பிரத்வம்சந ஏக ஒளஷதம் -சம்சார பயத்தை போக்குவதில் முக்கிய மருந்தாயும்
ஸ்ரயே ப்ராப்தி கர ஒளஷதம் -நன்மையை அடைவிக்கும் மருந்தாயும் உள்ள -அடியார் குழாங்களை உடன் கூடுவதாகிய நன்மையைப் பயக்கும் மருந்து என்றபடி
ஸ்ரீ கிருஷ்ண திவ்ய ஒளஷதம் —ஸ்ரீ கண்ணபிரான் ஆகிய அருமையான மருந்தை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு –
ஹே மன -வாராய் மனசே
பிப -உட் கொள்ளாய் -தம் திரு உள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார் –
கண்ணபிரானை சேவிக்க எல்லா வித நன்மைகளும் மல்கித் தீமைகள் எல்லாம் தொலையும் என்றபடி –

 

மருந்தும் அவனே..வியாமோகம்-விஷயங்களில் ஆசை-அளவில்லா சிற்று இன்பம்-அதை போக்க மருந்து..வியாதி போக்கும் /சக்தி வளர்க்கும் /மற்றை நம் காமங்கள் மாற்று ..கைங்கர்யம் பண்ணும் பொழுது அகங்காரமும் ஆனந்தமும் படுவதை மாற்றி கொடுக்கும் மருந்தும் அவனே –வசிஷ்டர் முனிவர் மனோ விருத்தி த்யானம் தன் இடத்தில் திரும்ப வைக்கும் மருந்து- செடி ஓரம் செடி சூர்யன் பக்கம் போவது போல../தைத்யர் அசுரர்கள் காலநேமி கம்சன் போல்வாருக்கு துன்பம்  கொடுக்கும் மருந்து இவன் தான்/நண்ணா அசுரர் நலிவு எய்த./த்ரி  புவன -உஜ்ஜீவனதுக்கு ஒரே மருந்து./பக்தர்களுக்கு ஹிதம் காட்டும் மருந்து ..அடியார்கள் குழாம் கூடுவது காட்டி கொடுக்கிறான்..ஹிதம் நல்லது பிரியம் பிடித்தது..தாயாய் தந்தையாய் மற்றுமாய் முற்றுமாய் ../சம்சாரம் பயம் ஒழித்தும் /மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கே ..மருந்தும் விருந்தும் அவனே தான்.. பவ=சம்சாரம் அவிவேகம் -துக்க வர்ஷினி.துன்பம் மழை அகங்காரம் திருடர்கள் விரட்ட -இவனே மருந்து..நடுவே வந்து உய்யக் கொண்ட நாதன்..ஸ்ரேயே -நன்மை பிராப்தி கர ஒளஷதம்  ..பிப -குடிப்பாய் மனமே-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலேசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: