குஹ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரே திநே திநே
தமஹம் சிரஸா வந்தே ராஜா நாம் குல சேகரம்-
குஹ்யதே –-ஜனங்களால் கோஷிக்கப் படுகிறதோ –
திருவரங்கன் சர்வவித அனுபவமும் என்று கிட்டுமோ என்று தாம் பிரார்த்தித்த படி
நாட்டையும் உலகத்தையும் தம்மைப் போல் ஆக்கி -அனைவைரையும் -ஸ்ரீ ரெங்க யாத்திரை ஸ்ரீ ரெங்க யாத்திரை என்று வாய் வெருவும் படி
செய்து அருளிய ஸ்ரீ வைஷ்ணவ சிகாமணியான ஸ்ரீ குலசேகர பெருமாளை வணங்குகிறேன் -என்றவாறு –
வந்தே முகுந்தம் அரவிந்தளாய தக்ஷம் ,
குந்தேந்து ஸந்கத் தசனம் சிஷு கோப வேஷம் ,
இந்திராதி தேவ கண வந்தித பாத பீடம்
விருந்தாவனாலயம் காம் வா ஸூ தேவ ஸூநம் –
Vandhe mukunda maravindha dalayathaksham,
Kundhendu sankha dasanam Sishu gopa vesham,
Indradhi deva gana vandhitha pada peetham,
Vridhavanalaya maham Vasudeva soonum,
Salutations to him who has,-Long lotus like eyes,Teeth as white as moon, jasmine and conch,Whose feet is for ever worshipped,By Indra and other DevasWho lives in Brindavana
And who is the son of Vasudeva
தன் சரிதை கேட்டான் -மிதிலை செல்வி திரு வயிறு வாய்த்த மக்கள் சொல்ல -தனி கேள்வி.
.தேவகி நந்தன ச்ரேஷ்டா பக்கத்தில் இருந்தும் மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா -இங்கும் தனி கேள்வி.
.இன்பம் பயக்க எழில் மகள் மாதரும் தானும் கேட்டது திரு வாய் மொழி தானே..சொல்வதும் கேட்பதும் ஆனந்தம் அவன் திரு நாமங்கள்.
.40 ஸ்லோகங்கள் முகுந்த மாலையில்..கர்த்தா பிர பந்த முகுந்த வைலஷ்ண்யம் -மூன்றும் -ஆழ்வார்கள் வாழி
-பிர மாதா அருளி செயல்கள் வாழி -பிர பிரமாணம் .பாடப் பட்டவன் பிர மேயம் .குலேசேகரர் அருளியது .பாட்டுடை தலைவன் முகுந்தன் ..பெருமாள் திரு மொழி அருளி-.
குரு பரம்பரை சிந்தனம் உண்மைகளை கற்று கொடுக்கும்,..முதல் நான்கு ஆழ்வாரும் துவாபர யுகம்
கலி 42 நாளில் நம் ஆழ்வார் அவதாரம் அவருக்கு அடுத்து ஷத்ரியர் ராஜாவாக குலசேகரர் -தலை சிறந்த பூஷணர்-சேகரர்.
.மாசி புனர்வசு திரு வஞ்சி களம் ..திடவ்ரத ராஜாவுக்கு புத்ரர் -ராம பக்தியே வடிவு எடுத்தவர்..கிருஷ்ண பக்தி ஆழ்வாரே போல.
.சேர மன்னர் -மூவரையும் வென்று –கொல்லி காவலன் கூடல் நாயகன்கோழியர் கோன் /சேர சோழ பாண்டியர் /
கலி 28 வருஷம் அவதாரம் ..வைதிக படி 5105 வருஷம் ஆனது சரித்திர கணக்கு வேற. என்ன அருளினார்கள் என்பதே முக்கியம் ..
.நம் ஆழ்வாரை சந்தித்து இருப்பாரா ?..தொண்டர் அடி பொடி ஆழ்வார் தோட்டம் அழியாமல் மதில் கட்டினார் திரு மங்கை ஆழ்வார்..
-அருள் மாரி பெயர் பூ பறிக்கிற துரட்டி சூட்டி இருக்கிறார்..பேய் ஆழ்வாரும் திரு மழிசை ஆழ்வாரை திருத்தி பணி கொண்டார்.
..முதல் மூவரும் இடை கழியிலே சந்தித்தது தெரிந்தது..ராமாயணம் கதை கேட்டு -ஆபத்து தீர்க்க சேனை கூட்டி சண்டை போட மேற்கு சமுத்திர கரை போனார்
-தாம் இருக்கும் நிலை மறந்து கதையில் ஒன்றி-அனந்தாழ்வான் திரு முக்களத்தில் மஞ்சள் கிழங்கு தேடினது போல..பக்தி முற்றி கலக்கம்.
.அசாகாய சூரனை கொன்று முடித்தான் -சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி சந்தான கரணி ஒவ்ஷதை -ஸ்லோகம் சொல்லி மீட்டார் .
.தன்மையி பாவம் குலேசேகர பெருமாள்..ராமன் பெயரை சூட்டி .திரு மழிசை பிரான் போல.
.பெரிய பெருமாள்/ நம் பெருமாள் -ஸ்ரீ ரெங்கத்துக்கும் தொடர்பு ஸ்ரீ ராமாயணம் ..விபவம் அருளி -பிரதி நிதியாக அர்ச்சையில் பாட்டை முடிப்பார்கள்.
. இழவு தீர ஸ்ரீ ரெங்க யாத்ரை -நித்ய -பேர் ஓசை கேட்க்கும் வூரில் . நாமும் நித்யமும் .7 தடவை ஹரி நாமம் சொல்லி திரு அரங்கம் நோக்கி நடக்கணும்.
–ஸ்ரீ கௌஸ்துபம் அம்சம் –பரன் அன்பர் கொள்ளார்-அவர்களுக்கே வாரம் கொடு-குட பாம்பில் கை இட்டவன்
-தம் பிள்ளைக்கு பட்டம் கொடுத்து -சேர குல வல்லி நாச்சியார் பெண்ணை கூட்டி கொண்டு அரங்கனுக்கே திரு கல்யாணம் –
சந்நிதி -ஸ்ரீ ராம நவமி அன்று -திரு மகள் போல் வளர்த்தேன் ..செங்கண் மால் தான் கொண்டு போனான் ..அயோதியை சித்ர கூடம் திரு வித்துவ கூடு -பல திவ்ய தேசம் மங்களா சாசனம் அருளினார்.. முகுந்தனுக்கு சாத்த பட்ட மாலை –சப்தங்கள் என்ற முத்தால்
..பூசும் சாந்தம் என் நெஞ்சமே –சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்கவே-பா மாலை பூ மாலை இரண்டும் சாத்தினாள் ஆண்டாள்.
புஷ்பம் தண்ணீரில் தோய்த்து கட்டுவது போல சொல்களை பக்தியால் தோய்த்து -கட்டிய மாலையால் மாலை
-முகுந்தனையே -கட்டி வைப்பார்கள்..ஆழ்வாரே அருளினார்-.அவர் குலத்தில் பிற் பட்டு வந்தவர் அருளி இருக்கலாம்..
சுவாமி கட்டளை -முதலில் ஸ்ரீ பாஷ்யம் கற்று பிரவர்த்தனம் பண்ணனும் -அப்புறம் ஸ்ரீ ராமாயணம் பகவத் கீதை .. பின்பு அருளி செயல்.
. கடைசியில் ரகஸ்ய கிரந்தங்கள் ..முறையாக தெரிந்து கொள்ளணும்..இதில் நாற்பதே ஸ்லோகங்கள் .
முகுந்தன் திரு நாமங்களையே பூ மாலையாக தொடுத்த ஸ்தோத்ர மாலை –
.வேதார்த்த அர்த்தம் மட்டும் இல்லை..திரு நாம சங்கீர்த்தனமே வழி.–முகுந்த சப்தம் – மு கு தா -மோஷம் பூமியை கொடுப்பவன்.
முக்தி பிரதன்–ஆழ்வாருக்கு -9-10 திரு வாய் மொழி -மாலை நண்ணி -சரண்ய முகுந்தத்வம் குணம் காட்டி கொடுத்தான்
. உத்பலாவதகம் -மாமிசத்தில்-தேகத்தில்-ஆசை துறந்தவர்களுக்கு மோஷம் தருபவன். -திரு குலே சேகர புரம்-முகுந்தனுக்கு சந்நிதி உண்டு.
.பெருமாள் திரு மொழியில்- கண புரத்து இன் அமுதே –தாலாட்டு அருளி இருக்கிறார்..
சரணம் ஆகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.
.தனி மா தெய்வம்-ஓர் ஆல் இலை செல்வன் -மார்கண்டேயனும் கரியே-மோஷ பிரதன் இவன் ஒருவனே –
——————————————–
ஸ்ரீ வல்ல பேதி வர தேதி தயா பரேதி பக்தப் ப்ரியேதி பவலுண்ட ந கோவிதேதி
நா தேதி நாக சயநேதி ஜெகன் நிவாஸே த்யாலாபநம் பிரதிபதம் குரு மே முகுந்த –1-
ஸ்ரீ வல்ல பேதி -ஸ்ரீ யபதி என்றும்
வர தேதி -ஆஸ்ரிதர்களுக்கு அனைத்தையும் அளிப்பவன் என்றும்
தயா பரேதி -ஆஸ்ரிதர் படும் துக்கங்களை பொறுக்க மாட்டாத ஸ்வபாவனாயும்
பக்தப் ப்ரியேதி -ஆஸ்ரிதர்கள் மேல் வ்யாமோஹம் கொண்ட அன்பனே என்றும்
பவலுண்ட ந கோவிதேதி -சம்சாரத்தை தொலைக்க வல்லவனே என்றும்
நா தேதி -எனது ஸ்வாமியே என்றும் –
நாக சயநேதி -அரவணை மேல் பள்ளி கொள்பவனே என்றும் –
ஜெகன் நிவாஸே -உலகம் அனைத்தையும் தன் திரு வயிற்றிலே இடமாகக் கொண்டு அவற்றை நோக்கி ரக்ஷிப்பவனே என்றும்
த்யாலாபநம் பிரதிபதம்-அடிக்கடி சொல்லுமவனாக
குரு மே -அடியேனை செய்து அருள வேண்டும் –
முகுந்த –உபய விபூதியையும் அளிக்க வல்ல எம்பெருமானே –
லுண்டனம் -களவாடுகை -அபஹரிக்கை
கோவிந்தா -வல்லவன் / ஜெகன் நிவாஸ -சர்வ லோக வியாபகன்-பஹு வரீகி சமாகத்தால்
-பிரளய காலத்தில் திரு வயிற்றிலே வைத்து ரஷிப்பவன் –தத் புருஷ சமாஹம் -மாம் ஆலாபினம் குரு -பகவத் கிருபையே சாதனம் -என்றவாறு
Sri Vallabhethi Varadhethi Dhaya Parethi,
Bhakthi priyethi Bhavaluntana kovidhethi,
Nathedhi, Naga sayanethi, Jagannivasa,
Thyalapinam prathi dinam kuru maam mukunda
Oh my lord who can only give delivarance,-Please make me capable of chanting every day,
Thy names such as,-Lord of all beings, He who can give all boons,He who is the store house of mercy,He who loves all his devotees,He who can kill all problems of this world,
He who is Lord of every thing,He who sleeps on the serpent,And He who lives every where in this universe.
நான் கண்டு கொண்டேன் நாராயண என்னும் நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்
-மொய்ம் மா பூம் பொழில் பொய்கை … பதிகம் திரு நாமம் மகிமை சொல்லும்..
குருமாம் முகுந்தா மாம் மீ முகுந்த -பாடுவதை ஏற்படுத்து பாடுபவனாக ஆக்கு- ஆலாபினம்.. ஆலாபனம் -பாடுவதை
.. ஸ்ரீ வல்லபா வரதா தயா பரா -இதி-என்று கூப்பிடனும்..மீண்டும் இதி இதி என்கிறார்.
…மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று -ஆண்டாள் அருளினாளே -ஒவ் ஒன்றும் மோஷம் தரும்..ருசியினால் எல்லாம் சொன்னேன்
பக்த பிரியேதி பவ சம்சாரம் போக்கும் சாமர்த்தியம்
-கோவிதன்.அநதர்கள் யாரும் இல்லை நாக சயனம் ஜகன் நிவாசம் ஜகத்தை இருப்பிடம் ஜகத்தில் தானும் இருக்கிறான் பிரதி தினம் ஆக்கு ..
சத்தம் போட்டு பல தடவை திரு நாமம் சொல்லணும் -காரய -நடத்துவாய்– குரு -நீயே பாடிடு .
. பட்டரும் பிராட்டியை எழுத சொல்லி என் பேரை போட்டு கொள்கிறேன் என்றார் தத்வ தரிசினி வாக்யத்துக்கு ஏற்றம்
..காரய பாடுவிப்பாய் இல்லை பாடிடு..குரு என்கிறார்.. யானும் தானாய் ஒழிந்தானை.. யானாய் தன்னை தான் படி -ஆழ்வார்.
.வாச்ய பிர பாவம் போல அன்றி வாசிக பிர பாவம் ..லோகோ பின்ன ருசி -அதனால் பல திரு நாமங்கள் -குணங்களும் பல
-பல பலவே ஆபரணம் பேரும் பல பலவே ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் வைபவம் இறே-
-குருந்திடை கூறை பணியாய் -இவன் வந்து இருந்தால் வஸ்த்ரம் போய் விடும் .
.அடித்த பிள்ளையும் கை வலிக்கும் பொழுது அம்மே என்று சொல்ல பிராப்தம் போல இதற்க்கு இதுவே யோக்யதை கொடுக்கும்..
..வியாதி பரிகாரமாகா ந்யமித்தால் அப் பொழுதே செய்வார்..அர்த்தம் புரியா விடிலும் பலன் தரும்
அக்நி குழந்தை தெரியாமல் தொட்டாலும் சுடும். பலன் தருவது திரு நாம ஸ்வாபம்
தேட்டறும் திரல் வாழ்த்தி …மால் கொள் சிந்தை யராய்–பேற்றை அருளுவாய் .
.கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன -ஒரு தடவை சொன்னாலே போதும்..
.அஜாமளன் கதை -பிள்ளையை நாராயணா என்று கூப்பிட -விஷ்ணு தூதர்கள் வந்தார்கள்
..நமனும் –தன் தூதுவரை .செவி வழியே -சொன்னான்..கிட்டி நின்றி உதவும் .
.இரு கையும் விட்டேனோ திராவ்பதியை போல.திரு கோளூர் அம்மையார் -81 வாக்கியம் அருளினார் ..
-தானே பலன் கொடுக்கும்-ஆனந்தத்துக்கு சொல்லணும் – நெல் குத்துபவள் வேர்வை தானே வருவது போல
-நலம் தரும் சொல்..நின் நாமம் கற்ற ஆவலிப்பு -பெரிய காப்பு இது நமக்கு..
ராம -நாமி- -பலம் சுக்ரீவனுக்கு ராம நாம பலம் ஆழ்வாருக்கு ..பிர பன்னர் இருக்கும் இருப்பு -பட்டர் -நம்ஜீயர்-.திருட வருவது தெரிந்தும்
எதிரில் புலி வருவது தெரிந்தும் ததி ஆராதனம் போகும் பொழுதும் சகஸ்ர நாமம் சொல்லி ரஷிக்க கூடாது-
பிரயோஜனம் தனக்கு இல்லை தேவ தாந்த்ரதுக்கும் இல்லை ..ஓர் ஒருவர் உண்டாகில் இந்த நிஷ்டை இருக்கும்.
.சொல்லும் இன்பத்துக்கு தான் சொல்லணும்..ஆட்டம் மேவி அலர்ந்து ..அயர்வு -ஈட்டம் கண்டிடணும்..கும்பிடு நட்டம் இட்டு ஆடும்-கை தட்டுவதே தாளம்
ஸ்ரீ வல்லபன் -திரு கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இங்கு -ஆரம்பித்து பூ மேல் திரு -முடியும் .-லஷ்மிக்கு பிரியமானவன்
..நாதன் சுவாமி மாதவன் ஸ்ரீயபதி என்று எல்லாம் சொல்ல வில்லை பதி- உரிமை வல்லபன் =ஆசை உடன் இருக்கிறான்
-காந்தச்ய புருஷோத்தம -ஆள வந்தார் .ஸ்ரீ ஒற்றை எழுத்து திரு நாமம் சொல்லி முடிக்க முடியாது
காந்தஸ் தே புருஷோத்தமன் -உனக்கு ஆசை மிகுந்தவன் -போக படலம் -நீளா தேவியின் அனுபவத்தால் -நம் பாபங்களை மறைக்க
-தயை -பக்த தோஷசு அதர்சனம் ..பேதை தன் மா மணவாளன் தன் பித்தனே -மால்=பித்து -பித்து பிடிக்கணும் –
மயல் மிகுபொழில் சூழ் மால் இரும் சோலை ..அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன் / கோல மலர் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ..
கட்டிலையும் தொட்டிலையும் விடாத மாதா -வாத்சல்யம் -வால் லப்யம் காட்டி கொண்டு.
.பந்தார் விரலி அவனை அனைத்து கொண்டு -நப் பின்னை கொங்கை மேல் வைத்து கிடக்கும் மலர் மார்பா
-நாம் தான் பந்து ..இவனை அருளால் திருத்தும் அவனை அழகாலே திருத்தம்
சேவிக்க படுகிறாள் சேவிகிறாள்/கேட்ப்பிகிறாள் கேட்கிறாள்/ச்ருணோதி/பாபம் தொலைகிறாள் சேர்த்து வைக்கிறாள் ஆறு காரியமும் பண்ணி- புருஷ கார பூதை
ஓடம் ஏத்தி கூலி கொள்வாரை போல அழகை காட்டி திருத்துவாள் அவனை..அடியார்களுக்கு மோட்ஷம் தான் இவள் கேட்க்கும் கூலி
..லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி-பட்டர்-குண ரத்ன கோசம்.. ஸ்ரீ வல்லபனாய் இருப்பதால் வரதன் அடுத்து -எல்லாம் அள்ளி கொடுப்பான்
உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி நீ -அடியார்கள் கொடை வள்ளல் -கீதை -கை ஏந்தி கொடுக்க வைத்ததால்
-வரங்களை வெட்டி விளக்குகிறான் பிரம்மா கொடுத்த வர பலன்-வரத்தினில் சரத்தை வைத்து -கொடுத்து கொடுத்து கை நீண்டவன்
..அலம் புரிந்த நெடும் தட கையன் அலம் -போரும் வாங்கிண்டவன்கொடுக்க ஆரம்பிப்பான் .
.ஆக்வான ஹஸ்தம்-கடி ஹஸ்தம் வரத ஹஸ்தம் அபய ஹஸ்தம்.கொடுக்க வகிறவள் அவள் – வரத வல்லபாம்
தன்னையே காட்டி கொடுகிறானே-ஹோம குண்டத்தின் நடுவில் சேவை –
-தயா பரேதி-தயை இருப்பதால் கொடுக்கிறான்..தயையே வடிவு எடுத்து சேவை..-தயா சதகம் -உருவக அணி ..
கரும்பு -சாறு- வெல்ல பாகு- திரு வேங்கடத்தான் கரும்பு போல-விதுரன் கோஷ்டியா துதியோரதன் தயை தான்
-..சாறு வுசத்தி– அதை பிடித்து மலை – வெல்ல கட்டி -உனக்கு
-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -தயை இல்லா விடில் இவை இருந்தும் விருத்தம் .தோஷம்.
.நம் பாபம் பார்க்க ஞானம் இல்லை கை விட சக்தி இலை தயை தேவி தடுக்கிறாள்..
.மனிசர் வுய்ய -அகம் மகிழும் தொண்டர் வாழ -பக்தர் பிரியன் -அம்பரிஷன்-இஷ்வாகு குலத்தில் ராமர் முன் -சரித்ரம்-துர்வாசர் -அகம்து பக்த பராதீனன்
-நல்ல பெண்கள் பர்தாவை முந்தானை முடியில் வைத்து இருப்பது போல இவன் பக்தர்களுக்கு அடங்கி இருப்பவன் –
.தூராத மன காதல் தொண்டர் -.ஆராத மன களிப்பு ஆழ்வார் பிரிவு ஆற்றாமையால் -நீயும் திரு மாலால் நெஞ்சம் கோட் பாட்டாய்-
கட்டி கொண்டு அழுவார் காற்றை/விளக்கும் சுட -வஞ்சித்தானா உன்னையும் கடை கணித்து . ஒருத்திக்கு . மனம் வைத்து
. மற்று ஒருத்திக்கு அவளுக்கும் மெய்யன் இலை ..கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்.
.பக்தர் பிரியன்..ஞானிகள் காட்டும் பிரிதியை என்னால் காட்ட முடிய வில்லை நானும் ப்ரீத்தி காட்ட முயலுகிறேன்- கீதை.
.அருளினான் அவ் அரு மறையின் பொருள்….அருளாதநீர்-பட்டம் கொடுக்கிறார் சேவை சாதிக்க வில்லை என்று –
அருளி நீ அவர் ஆவி துவரா முன் ..ஆழி வரி வண்டே ..பவ -சம்சார சாகரம் /லுண்டான- போக்குவதில்/கோவிதக-சாமர்த்தியம் உள்ளவன்.
. மோஷம் தரும் முன் இதை போக்கனுமே ….தன்னை கண்டால் பாம்பை பார்க்கும் போல
அனந்தாழ்வான் -கரு நாகம் கடிக்க -கடி பட்ட கடித்த பாம்பு இரண்டு. பலம் இதற்க்கா அதற்க்கா–
கோனேரி தீர்த்தம் ஆடி இங்கே கைங்கர்யம்..இல்லையேல் விரஜா நீராடி அங்கு கைங்கர்யம் -பாம்புடன் ஒரே கூரையில் இருந்தால் போல
..நல நாரணன் நரகம் போக்குவான்- .கர்மா உந்த -ஜன்ம-அதில் கர்மம் -சுழல்-கர்ம பலத்தை க்ருபா பலத்தால் வெட்டுவான் .
..சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி..வ்யாபக மந்த்ரங்களில் நம முன் இருக்கும்..விரோதி நிவ்ருத்தி -அநிஷ்டம் போக்கி இஷ்டம் தருவான்
.நாதேதி ஸ்ரீ நாதன் -சுவாமி உடையவன் ஸ்ரீ ரெங்க நாத மம நாத யாரும் அநாதை இல்லை ..கிடாம்பி ஆச்சான் -அகதி சரணாம்.
கிருபையால் ரஷிக்கணும். ராமானுஜர் அவதரித்த பின்பு நாதன் இல்லாதார் யாரும் இல்லை…எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே-நாதன் -பர்த்தா-ஸ்ரீ நாத த்வாரகை –
மீரா -அவளுக்கே இருக்கும் த்வாரகை ..நாக சயநேதி -மடியில் -ஸ்த்ரி ஸ்தன ஆபரணம்-போல கிடக்கிறான்.
.உச்வாச நிச்வாசம் –இவனுக்கு டோலி போல .ஒளி பளிச் மூச்சு காத்து கண் சிமிட்டுகிறான் இருள் –
– பேரும் ஜோதி அனந்தன் -கருமணியை கோமளத்தை –நிவாச -விமானமும் வெளுப்பு
-கருப்பானது கடல் உண்ட மேகம் போல ரெங்கன் வர்ணம் மேல் நோக்கி வீச -அரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மன தூணை பற்றி நின்று
-உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே …சிந்தாமணி போல -சிந்தனை பண்ணுவதை கொடுப்பவர்
-வரதன்-ஜகன் நிவாசன் -=நர அயன /ஆஸ்ர்யம் இருப்பிடம் புகல் இடம் /அழியாத நித்ய வஸ்துகளின் திரள் களுக்கு இருப்பிடம்
-நியமிக்க உள்ளே புகுந்து எங்கும் வியாபித்து இருக்கிறான்..கறந்த பாலில் நெய்யே போல் – பெரியார் உபதேசம் கேட்டு த்யானம் பண்ணி தெரிந்து கொள்ளலாம் .
குருமாம் -வாயில் திரு நாமம் சொல்லும் படி பண்ணு. நீ தான் அனுக்ரக்கிகனும் அவன் செய்கையே உபாயம்
பிர பன்னர்களுக்கு திரு நாமம் சொல்வது உபாயம் இல்லை…ஆசை விடாளால் .
.உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட எந்தை எந்தை பிரானே..உன் நினைவே வாழ்வு-
-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தான்.. உணர்வினுள் உள்ளே இருத்தினேன்- அவனும் அவனது இன் அருளே ..
திருவுக்கும் திரு வாகிய செல்வா செல்வத்துக்கு அரசே இன்றி யமையாத ஸ்ரூப நிரூபக லஷணம் இவள் அவனுக்கு .
. மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போல இவனுக்கு அவள்
..பாதங்கள் பட்டு சிவந்தது குங்கும பூ அழுத்தி கன்னி சிவந்த திரு மார்பை பார்த்து இவனேபர தெய்வம்.
— உறை இல்லாத -நாக்கால் சுட்ட வடு ஆறாதே – எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தெய்வங்கள் .
. திரு இல்லாத தேவரை தேவேமின் .தேவு..ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமுதில் வந்த தேவியை பிரிந்தனை -வாலி சொல்கிறான்
பிராட்டி அசந்நிதியால் தான் ஒழிந்தான் என்று ..மாரீசனும் சீதா ராமனின் புகழ் சொல்லி ராவணனுக்கு உபதேசம் பண்ணுகிறான்.
.சால பல நாள்.. காப்பான் -கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே -ஆழ்வார்..
..ஈசானாம்-நம்மை நியமிகிறாள் -பொறுமை வளர்த்து விடுபவள் இவள் தான் ..லஷ்மி-லஷ்யம் -பார்க்க படுகிறாள் -கடாஷத்தாலே சத்தை அனைவரும்
…சுதா சகி சிந்து கன்யா .ரதி மதி ஸ்திதி சரஸ்வதி புத்திசமர்த்தி பக்தி எல்லாம் கிட்டும்
..முக்தி பூமி ஐஸ்வர்யம் இரண்டையும் கொடுப்பவன் முகுந்தன் திரு நாமங்களையே கொண்டு மாலை யாக சாத்தினார்..
———————————————————————–
ஜெயது ஜெயது தேவோ தேவகீ நந்தநோயம் ஜெயது ஜெயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீ வம்ச ப்ரதீப
ஜெயது ஜெயது மேக ஸ்யாமள கோமலாங்கோ ஜெயது ஜெயது ப்ருத்வீ பாரா நாஸோ முகுந்த —2-
ஜெயது ஜெயது தேவோ தேவகீ நந்தநோயம்-தேவகி மைந்தனான இந்த தேவனான கண்ணபிரான் வாழ்க வாழ்க –
தேவோ -ஸ்வ இச்சையாக லீலார்த்தமாக -அஜாயமானோ பஹுதா விஜாயதே
ஜெயது ஜெயது கிருஷ்ணோ வ்ருஷ்ணீ வம்ச ப்ரதீப-வ்ருஷ்ணீ அரச குலத்துக்கு விளக்காய் தோன்றின கண்ணபிரான் வாழ்க வாழ்க
தஸ்யாபி வ்ருஷ்ணீ பிரமுகம் புத்ர சதமாஸீத் –யாதோ வ்ருஷ்ணீ ச்மஞ்ஞா மேதத் கோதரமவாப -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஜெயது ஜெயது மேக ஸ்யாமள கோமலாங்கோ-காள மேகம் போன்ற கரிய பிரானாய்-அழகிய திருமேனியை யுடைய கண்ணபிரான் வாழ்க வாழ்க
ஜெயது ஜெயது ப்ருத்வீ பாரா நாஸோ முகுந்த -பூமிக்கு சுமையான துர்ஜனங்களை ஒழிக்குமவனான கண்ணபிரான் வாழ்க வாழ்க
Jayathu jayathu devo devaki nandhanoyam,
Jayathu jayathu krishno vrishni vamsa pradheepa,
Jayathu jayathu megha syamala komalango,
Jayathu jayathu prithvi bhara naso mukunda—2
Victory and victory to the son of Devaki,-Victory and victory to Krishna who belongs to family of Yadhu,Victory and victory to him who is black as a cloud and who has pretty limbs,Victory and victory to the Mukunda who lightens the earth .
பல்லாண்டு பாடுகிறார் -வில் இருத்து மெல் இயல் தோய்த்தாய் -இயம் சீதா மம சுதா -மம காரம் விட்டவனின் மம காரம்
-பத்ரம் தே- பல்லாண்டு பாடி .மனசில் சேர்த்தி பார்த்து -கண் எச்சில் படாமல் இருக்க-
ஸ்ரீ வல்லபனை சேர்த்து அருளிய குலே சேகரரும் ஜயது ஜெயது தேவோ என்கிறார் .-சங்கதி முதல் ஸ்லோகத்துக்கும் இதற்கும்
….துல்ய சீல வயோ விருத்தாம் சிறிய திருவடி அருளியது போல…ஜக நிவாசா-சொல்லி -லீலை உடன் ஸ்ருஷ்ட்டிகிறான் .
. பெரிய ஆழ்வார் நித்யம் பல்லாண்டு…கை தலத்தில் அரையர் அருளுவார் ..பல்லாண்டு என்னும் காப்பு இடும் பான்மையன் தாள்
.. மற்றவர்க்கு காதா சித்தம் ..தேவன் -பரத்வன்-விளை யாட்டாக படைத்து காத்து அழிப்பவன்..
தேவகி நந்தன் -எளிமை…பர அவர -கண்ணன் கழல்கள் நினைமினோ -மாதவன் ஆன படியால் மா மாயன் வை குந்தன் -லோக நாதா மாதவ பக்த வத்சலன்..
-அகில புவன ஜன்ம ச்தேம பங்க ..ஆதி லீலே -உலகம் ..அலகிலா விளை யாட்டு உடையார் அவர் .
.தேவ சப்தம். மற்றவர் பொல்லாத தேவர்..தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன் வேண்டி தேவர் இரக்க வந்து
-ஆயர் குலத்தினில் தோன்றும் தனி விளக்கு-தேவகி நந்தன -கௌசல்யை சுப்ரஜாரா -தெய்வ தேவகி புலம்பல் தாலோ
-தாயை இனில் கடை ஆயின தாயே –இங்கு தேவகி நந்தநோயம்-தாம் பெற்று அனுபவிக்க கொடுத்தால்/
தானே பெறாமல் அவனை அனுபவித்தால் வசு தேவன் மைந்தன்.. தேவகிக்கும் பின்பு மொத்த இன்பம் கொடுத்தான் –
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே- கம்சனை கொன்றதும் தாய் இடம் ஓடி -மிகுந்த பித்து -நெடு மால்-
தந்தை காலில் விலங்கு அரவந்து தோன்றிய தோன்றல் பின் -இழந்த அனுபவம் அனைத்தும் காட்டி கொடுத்தான்
-வையம் எழும் கண்டால் பிள்ளை வாயுளே முன்பு –.இதை காட்ட முடியாது..
மண்ணின் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பில் மன்னிட பெற்றிலேன் அந்தோ ..அடிசிலின் மிச்சல் உண்ண பெற்றிலேன்
-பேய் முலை .பித்தர் என பிறர் பேச நின்றாய் -அவளுக்கும் பால் சுரக்க இவன் குடித்தான் .
.ஆழ்வார் பாசுரங்களால் தான் ஸுலப்யம் புரிந்தோம் எய்தற்கு அறிய மறைகளை கொடுத்தார்கள் ..
விரஜை ஸ்திரிகள் கண் அடி பட சுற்றி வந்தானாம்.. மதுரை மக்களின் பாக்கியம் தான் உரு கொண்டு கண்ணன்..
.வேண்டி தேவர்கள் இரக்க வந்து பிறந்தான்..முறை முறை தம் தம் குரங்கிடை இருத்தி எந்தையே என் குல..
உந்தை யாவன் –இடை பெண் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பர பிரமம் விரலாலும் கடை கண்ணிலும் காட்ட-நந்தன் பெற்றனன்
..வங்கி புரத்து நம்பி வம்சம் -திரு நாராயண புரம் உடையவர் சந்நிதி கைங்கர்யம்-.நாலு கால் மண்டபம் திரு வந்தி காப்பு நடக்கும்.
.இடை பெண்கள் கோஷ்ட்டியில் சேர்வாராம்.. முரட்டு வைஷ்ணவர் கோஷ்ட்டி விட்டு..அவர்கள் நெய் உண்டீர் பொன்னால் பூணூல் இடுவீர்
பல்லாண்டு பாட இவர் ஜெய விஜயீ பவ பாட முரட்டு சமஸ் கிருதம் விட வில்லை -முதலி ஆண்டான் அருளினாராம்.
.கிருஷ்ண -பூ மண்டலம் மகிழ்ச்சி கொடுப்பவன்…உபதேச மார்க்கத்தால் கீதாசார்யன் இவனுக்கே தான் ..
கருத்த வர்ணம் படைத்தவர்/ கருணை/ மேகம் போல /தயா பரர் வர்ணம் ..
.பால் தயிர் எல்லாம் வெளுப்பு கரியான் ஒரு காளை வந்து வெள்ளி வளை கை பற்ற இதுவும் வெள்ளை..
தன்னை தவிர வெளுப்பு பிடிக்கும் சுத்த சத்வம் ..கரியான் ஒரு காளை வந்து. கண்ணன் என்னும் கரும் தெய்வம்..
கருப்பு படுத்தும் பாடு மிக பெரிசாம் கண்ணன் படுத்தும் பாடை விட ..அவள் செய்யாள் ..குழலும் கருப்பு…விருஷ்ணி வம்சம்-
வார்ஷ்னேயன்-அர்ஜுனன் கிருஷ்ணனை/ வம்சபூமிகளை உத்தரணம் பண்ண கீழ் குலம் புக்க கோபால வராகர்
/யயாதி சாபத்தால் யது இழந்தான்..ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு –மேக சியாமள கோமளாங்க
-தொட்டாலே சிவக்கும் திரு மேனி-புஷ்ப காசம் -மையார் கரும் கன்னி கமல மேல் செய்யாள் –
-கண்ணில் இருந்த கருப்பு உடம்பில் ஏற்ற /சிவந்த இவள் திரு மேனி பார்த்து அவன் கண் சிவந்தது.
.மின்னு மா மழை தவழும் -மேக வண்ணா -ஸ்வாபமும் நிறமும் மேகம் போல.
.வூழி முதல்வன் போல் மெய் கருத்து..வர்ணம் தானே காட்ட முடியும்.. கருணை காட்டியே பழக்க பட்டவன்.
.எங்கும் தீர்தகராய் திரிந்து..கொட்டி வெளுக்கும் மேகம் சப்தம் போடும்..கொடுக்க முடியா விடில் இவனும் சப்தம்
. தீராது வெளுக்க மாட்டான்..வந்தாய் போல் வாராதாய்-மேகம் போல..
முகில் வண்ணன் பேர் பாட . மழை .சமுத்ரம் மேல் கொட்டும் -இவனும் உபதேசம் பெற்ற அவர்கள் இடமே கொட்டுவான்.
கௌசல்யை இடமே தர்மம் சொல்வான். வசிஷ்டர் இடமே தர்ம சாஸ்திரம் சொன்னான் காட்டில் இருந்து வா என்றதும்..
. பட்டர் அனுபவம்-ரெங்க நாதன் கருணை மழை நிக்கட்டும் மேகம் அவன் ஆபரணங்கள் வான வில் மின்னல் தாயார்
-காள மேகம் மழை போல ஆதி சேஷன் மேல்/ கார் திகள் அனைய மேனி-கண்ணனே உன்னை /
கொண்டல் மீது அணவும் சோலை /கோமள அங்கம் -கோமள வல்லி தாயார் -புஷ்ப காச திரு மேனி
சீதைக்கு திரு ஆபரணங்கள் சாத்த பார்த்த உடனே சிவந்த திரு மேனி../கொடியார் மாட ..அசைவோ.கூசி பிடிக்கும் மெல் அடி
/தருணவ் ரூப சம்பனவ் சு குமாரவ்-/போதரு மா போலே பூவை பூ வண்ணா /
யாதவ சிம்ஹம் -வானவர் தானவர் அலற்றி-எவ்வாறு நடந்தினையோ/ நடந்த கால்கள் நொந்தவோ. கிடந்த நாள் கிடந்தாய் -பரிவு../
/ஆழி அம் கையானை ஏத்தாது அலற்றி -தலை மெல் ராமன் திருவடி வைக்க அன்று நான் பிறந்திலேன் -ராமானுஜர்/
நடக்க சொன்னதும் கோப்புடைய சீரிய சிங்கா சாசனம் அமர்ந்ததும் அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி.
.கன்று குணிலா எறிந்தாய் .கழல் போற்றி.-இரண்டாவது தடவை திரு வடிக்கு போற்றி -பாத பங்கயமே தலைக்கு அணியாய்.
பாதம் சேவித்து மறு படியும் போற்றி -உள் திருவடி சிவப்பை பார்த்ததும்..-கிரீடம் ரத்னம் சிவப்பு வீசி திருவடி சிவந்தது
/பெரிய பிராட்டி வருட சிவந்தது/ பராங்குச மனசின் பக்தி ராகம் -வர்ணம் -சிகப்பு ஏத்தி /பிரித்வி பார நாசன் பூ பாரம் தீர்பதற்க்கே பிறந்தான்
…தானே சின்ன குழந்தையாக/ பெரியவன் பாண்டவர் மூலம்..கீதையும் அருளி பீஷ்மர் ஆழ்வார் களையும் பாட வைத்த/
/ தத்வ உபதேசம் தத்வ தர்சினி உபதேசம்.//. கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மான் புத்தராகவும்/ .வேணு கோபாலன் வேணு தான் ஆசார்யன்..
பிர்த்வி பாரம் போனதும் முகுந்தன் மோஷ பிரதானவன் -உதங்கர் –
இன்று என்னை பொருள் ஆக்கி ..அன்று என்னை புறம் போக்கி -ஆழ்வார் போல..
.பிறந்த மாயா பாரதம் பொறுத்த மாயாஐவரை வெல்வித்த /மாய போர் தேர் பாகன்-
————————————————————————–
யோகம் -கிடைக்காத பொருள் கிடைத்தால் ஷேமம் அது நிலைத்தால் .யோக ஷேமம் வகாம் யகம்-திரு வடிகள்-கொடுத்து நிலை நிறுத்து கிறான்.
அனன்யா சிந்தை உடையவர்களுக்கு -அவனே உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை என்று நினைப்பவர் களுக்கு
-பிரிந்தால் தாங்காத துடிப்பு உள்ளோர்களுக்கு ..வினாடி கூட வாசு தேவனை நினைக்காமல் இருப்பவர்களுக்கு ..
..அவனும் விரக தாபம் பொறுக்காமல் மகாத்மாக்கள் விரகம் சகிக்காத மார்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் .
.திரு மூழி களத்தில் மேன்மை குணம் காட்டி கொடுத்தான் ஆழ்வாருக்கு ..அடுத்த நாலு ஸ்லோகங்கள் இதை அருளுகிறார்..
முகுந்த மூர்த்நா பிராணிபத்ய யாசே பவந்த மேகாந்த மியந்த மர்த்தம்
அவி ஸ்ம்ருதி ஸ்த்வச் சரணாரவிந்தே பவே பவே மே அஸ்து பவத் ப்ரஸாதாத் –3-
முகுந்த-புக்தி முக்திகளைத் தர வல்ல கண்ணபிரான்
மூர்த்நா பிராணிபத்ய யாசே -தலையால் சேவித்து -யாசிக்கிறேன்
பவந்தம்-தேவரீரை
ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்-இவ்வளவு பொருளை மாத்திரம் யாசிக்கிறேன்
அவி ஸ்ம்ருதி ஸ்த்வச் சரணாரவிந்தே அஸ்து -தேவரீருடைய திருவடித் தாமரைகளில் மறப்பு இல்லாமை இருக்க வேணும் –
ஜென்மம் களைந்து மோக்ஷம் அருள வேணும் என்று கேட்க வில்லை –
பவே பவே மே பவத் ப்ரஸாதாத் -எனக்கு பிறவி தோறும் தேவரீருடைய அனுக்ரஹத்தினால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் மறைப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி பாசுரம் –
.இன்றாகா நாளையாக இனி ..சிறிது உன் அருள் என் பாலது ..விசுவாசம் .நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலேன்
சுவாமி -தாசன் /பிதா -புத்திரன்/பதி -பத்னி /நாரமே இல்லை என்றால் வெறும் அயனம் தானே அவன் .
.இரண்டும் பிரியாத ..பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -பற்றிலை யாய் அவன் முற்றில் அடங்கே
.. அவன் சம மாக நடத்துகிறான் அதனால் பற்று இல்லாதவன் அவன் ../அது போல பற்று இன்றி முதல் வியாக்யானம்.
.பிரம்மாதி தேவர்களுக்கு கொடுக்க வில்லை செய்த வேள்வியர் கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ..
-அவனின் ஓர வஞ்சனை காரணம் ஆஸ்ரிதர் பட்ஷ பாதி..சர்வ ரஷகன் இல்லை.. விண்ணுளார் வியப்ப வந்த -ஆனைக்கு அன்று அருளை ஈந்த
-பற்றிலன் -பற்று உள்ளவன் பற்றை இல்லமாக கொண்டவன்.. அது போல நாமும் அவனை பற்ற வேணும்..
– .விலக விலக பயம்/ சேர சேர அபயம்..பரதன் துக்கம்-மாமன் வீட்டுக்கு பிரிந்து போன குற்றம்
புறப்பாடு அவனை அனைவர் இடம் கூட்டி போவது தான் ..நடந்து வந்து மாசுச என்று அனைவருக்கும் சொல்கிறான்.
.அவன் பால் மனம் செலுத்தினால் பயம் நீங்கி காம குரோதங்கள் அகலும்..அடுத்த ஸ்லோகம்-.ஒன்றையும் பிரார்த்தி வர வில்லை
உன் திருவடி மேல் அன்பு மாறாத தன்மை தர வேணும் ..இதை பெற்றால் வேற ஒன்றுமே வேண்டாமே .
.எத்தனை ஜன்ம எடுத்தாலும் -முகுந்தா -கூப்பிட்டு -தலையாலே வணங்கி யாசகம் பண்ணுகிறேன்..ஒரே பிரார்த்தனை ஏக அந்தம்
-பாத கமலங்களில் அவி ஸ்மிர்த்தி மறதி இன்மை -ஏற்பட வேண்டும்..யோக ஷேமம் கொடுக்கிறேன் என்று அவனே அருளி இருக்கிறானே
-கிடைக்காத அவன் கிட்டி நிலை நிற்ப்பான்… தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரி தலால் –
முக் கரணங்களின் வியாபாரமும் – தவம் உடைத்து தரணி தானே..அறிவுப்பு -அவன் அனுக்ரகம் எப் பொழுதும் உண்டு
-பிரார்த்தனை பசி எடுத்து குழந்தை கேட்பது போல .அவன் இடம் அவனை கேட்க்க வருவான் என்று காத்து இருக்கிறான்..
பிரார்த்திக்க வேண்டியது எனக்கு ஸ்வாபம் கொடுக்க வேண்டியது உன் ஸ்வாபம் ..
. எந்தையே என் உள் மன்னி மற்று எக் காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விரும்பும் அக்கார கனி.
-ஆழ்வார் இதில் கடிகை பெயர் இல்லை . பெருமாள் பெயரை தான் அருளி இருக்கிறார் ..
திரு மாலை ஆண்டான் -ராமானுஜர் -எப்பொழுதும் வேண்டும் ஆழ்வாருக்கு ஒரு தடவை வந்தால் போதும்
.மற்று இடத்தை மாற்றி எக் காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன் ..இது போல 12 நிர்வாகங்கள் -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப அர்த்தம் சொல்லுவார்கள்…..மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என் உள் புக்கானை கடிகை மிசை -அக்கார கனியை அடைந்து .உய்ந்து .போனேனே
..அபூத உவமை அக்கார கனி அது போல இந்த ஒன்றை கேட்கிறார் இதிலும் ..
மறப்பும் ஞானமும் நானும் உணர்ந்திலேன் -தெரிந்தால் தான் மறக்க -மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு மறப்பற
என் உள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியை ..-மந்திரத்தை மந்த்திரத்தால் மறவாது. .
..எண்ணிலும் வரும். -26 எண்ணினதும் வந்து விடுவான் சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்….நீயே அனுக்ரகித்து மறவாமை அருளு
..ஸ்திதே ..அகம் ஸ்மாராமி-அருளியதை நினைவு கூறுகிறார் .. இந்த வாக்கியம் மறக்க கூடாது
..ஒரே பொய்யை தவிர வேறு பொய்யே சொல்ல வில்லை இது பொய் ஆனால் கதை.
.நினைமின் நெடியான்-நீண்ட காலத்துக்கு நினைவில் கொள்வான்..சரண் என்று நெடியானே வேங்கடவா -பாசுரம்.
.பிறப்பின்மை பெற்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு ..உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் உன் ஆதீனம் தான் .
.நினைவும் ஞானமும் மறதியும் அவன் ஆதீனம் தான்நாதனுக்கு நாலாயிரமும் அளித்தான் எல்லா ஆழ்வார் பாசுரங்களும் நம் ஆழ்வார் தானே கொடுத்தார்
..எந்த ஆழ்வார் அருளினார் மறந்தாலும் நம் ஆழ்வார் அருளினார் என்று சொல்லலாம்
முகுந்தா பெற்ற பாவிக்கு விட போமோ நீ தான் மறதி இன்மை அருளணும்.. எத்தனை ஜன்மம் -இனி யாம் உறாமை .கேட்பாரே
——————————————————–
நாஹம் வந்தே தவ சரண யோர்த்வந்த்வ மத் வந்த்வஹேதோ -கும்பீ பாகம் குருமபி ஹரே நாரகம் நாப நேதும் –
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும் பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் -4-
நாஹம் வந்தே தவ சரண யோர்த்வந்த்வ மத் வந்த்வஹேதோ –அடியேன் தேவரீருடைய திருவடி இணையை
ஸூக துக்க நிவ்ருத்தியின் பொருட்டு சேவிக்கிறேன் அல்லேன்
-கும்பீ பாகம் குருமபி நாரகம் நாப நேதும் -கும்பீ பாகம் என்னும் பெயரை யுடைய பெருத்த கொடிதான்
நரகத்தை போக்கடிப்பதற்காகவும் சேவிக்கிறேன் அல்லேன்
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்-அழகாயும்-ஸூகுமாரமான கொடி போன்ற சரீரத்தையுடைய
அப்சரஸ் ஸூ க்களை இந்திரனது நந்தவனத்தில் அனுபவிப்பதற்காகவும் சேவிக்கிறேன் அல்லேன்
ஹே ஹரே-அடியார்களின் துன்பத்தை போக்குமவனே
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் -பிறவி தோறும் ஹிருதயம் ஆகிற மாளிகையில் தேவரீரை த்யானம் பண்ணைக் கடவேன் –
இப்பேறு பெறுகைக்காகத் தான் சேவிக்கிறேன் -என்று சேஷ பூர்ணம்
Naham vandhe thave charanayor dwndwamadwandha mahatho.
Kumbhi pakam guru mapi hare, narakam napanothum,
Ramya rama mrudhthu thanu latha anandhanena apirama
Bhave bhave hridaya bhavane bhaveyayam bhavantham.—-4-
I do not bow before your two great holy feet,-Oh God , to protect us from Kumbhi paka hell,Nor do I for playing in the pretty graden,Of sensuous tender bodies of bewitching damsels,But with a request to keep your memory,In the palace of my heart for ever,
From birth to birth.
பிந்து சரஸ் /கங்கோத்ரி /போல சின்ன சின்ன கைங்கர்யம் செய்வதே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்..அடுத்த ஸ்லோகம் -இதை விவரிக்கிறார் .
.பிரார்த்தித்து -பல்லாண்டு அருளியது .உன்னை அருத்தித்து வந்தோம் ஆண்டாள் அருளியது போல..அகம் ந வந்தே இதற்காக வந்தனம் பண்ண வில்லை சுக துக்கம் இன்மை யாகும் மோஷம் கிடைக்க வணங்க வில்லை.. துவந்தம் இன்மை முதலில்/.
.கும்பி பாகம் .கொடூரமான நரகம் தொலைக்க வணங்க வில்லை.அடுத்து ..
.நந்தன இந்த்ரன் தோட்டத்தில் அழகிய அப்சரஸ் ஸ்திரிகள் கொடி போன்றவர்கள் .அனுபவிக்க வணங்க வில்லை .. மூன்றுக்கும் இல்லை.
.ஹிருதய பவனத்தில் விடாமல் நீங்காமல் நெஞ்சம் என்னும் கோவில் ஆழ்வாரில் நீங்காமல் இருக்க வேணும்..
.சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே -வாழ்ந்தே போம் நல்லார் அறிவீர் -ஆண் பாவத்தில் ஊடல் ..பரிமள ரெங்கனை திரு மங்கை ஆழ்வார்
..மர்மம் பிடித்தால் எல்லாம் கிட்டும்..பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் -மருந்து சாப்பிட்டது ஆச்சார்யர் நம் பிள்ளை குளித்து வரும் பொழுது
திரு மேனி பின் பக்கம் சேவித்து வருவதை அனுபவிக்க ..திரு மேனி பரிவு -மற்றவை தானே வரும்.
.கை கூப்பி -களிறு -அதனுக்கு அருள் புரிந்தான் ..சரீரம் ரஷிக்க இல்லை கரச்த கமலம் சமர்ப்பிக்க தானே-
எம்மா வீட்டு திறமும் செப்பம். அம்மா அடியேன் வேண்டுவது ஈதே..வீடு வேண்டாம் மா வீடு வேண்டாம் எம்மா வீடு வேண்டாம்
லோக ஐஸ்வர்யமும்/ கைவல்யமும்/ மோஷமும் வேண்டாம் அதை பற்றி பேசவே வேண்டாம்..பிரஸ்தாபமும் பண்ணாதீர்
நின் செம் பாத பரப்பு தலை சேர்ப்பு.ஒல்லை /களிப்பு..கவரும் அற்று -உடன் கூடுவது என்று கொலோ.
துவந்தம் அற்று…ஹரே ஹரி-எம்பெருமான் அபகரிகிறான் பாபங்களை…வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் -அமுதனார்/
மனக் கடலில் வாழ வந்த மாய மணாள நம்பி/ விஷ்ணு சித்தன்– கோவில் கொண்ட./
பட்டர்-வைராக்கியம் உபதேசித்து .தான் திரு மேனியில் அலங்காரம் பண்ணி -கோவில் ஆழ்வார் என்ற நினைவிலே .
.பிரக லாதன் கெட்டியாக மார்பை பிடித்து மத்திய வர்த்தி பெருமாளின் திரு ஆபரணம் அசையாமல் இருக்க -மகா விசுவாசம்.
. வெள்கி போய் விலவர சிரிதிட்டு/ உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்ட சொல்ல காட்டினானே திரு மழிசை பிரான்..
இவன் உள்ளே வந்ததும் மற்ற எல்லாம் தானே வெளியில் போகுமே ..இதை தான் பிரார்த்திக்கிறார் .
. இவன் கூட இருந்தால் நரகம் சுவர்க்கம் மோஷம் எதை பற்றியும் கவலை பட வேண்டாமே .
.சீதை பிராட்டி ராமன் இடம் நரகம் ஸ்வர்கம் விளக்கம் கேட்டு சிரித்தாளே காட்டுக்கு போகும் பொழுது அது போல.
.நோற்று ஸ்வர்கம் புகுகின்ற அம்மனாய் -இதில் ஸ்வர்கம் கிருஷ்ண அனுபவம்.. விட்டு பிரிந்தால் நாடே சுடும். நரகம் கூடி இருந்தால் அதுவே ஸ்வர்கம் வேணும்.
—————————————————
நாஸ்தா தர்மே ந வஸூநிசயே நைவ காமோ பபோகே –யத்யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்மாநுரூபம்
ஏதத் பிரார்த்த்யம் மம பஹு மதம் ஜென்ம ஜன்மாந்தரே அபி த்வத் பாதாம் போருஹ யுககதா நிஸ்ஸலா பக்தி ரஸ்து ––5-
நாஸ்தா தர்மே-ஆமுஷ்மிக சாதனமான தர்மத்தில் ஆசையில்லை
ந வஸூநிசயே ஆஸ்தா--ஐஹிக சாதனமான பணக் குவியிலிலும் ஆசை இல்லை
நைவ காமோ பபோகே -விஷய போகத்திலும் ஆசையில்லை
தர்ம அர்த்த காமம் புருஷார்த்தங்கள் வேண்டாம் என்றவாறு
-யத்யத் பவ்யம் பவது -யது யது உண்டாகக் கடைவதோ அது உண்டாகட்டும்
பகவன்-ஷாட்குண்ய பூர்ணனான எம்பெருமானே
பூர்வ கர்மாநுரூபம்
ஏதத் பிரார்த்த்யம்-இதுவே பிரார்த்திக்கத் தக்கதாய் இருக்கும்
மம-அடியேனுக்கு
பஹு மதம் ஜென்ம ஜன்மாந்தரே அபி-ஜென்ம ஜன்மாந்தரங்களிலும் -எனக்கு இஷ்டமாய்
த்வத் பாதாம் போருஹ யுககதா நிஸ்ஸலா பக்தி ரஸ்து -தேவரீருடைய திருவடித் தாமரை இணையில் பதிந்து இருக்கிற பக்தியானது -அசையாமல் இருக்க வேண்டும்
என்னுடைய ஆவல் உன் திருவடியில் சேர்ந்ததாகி -ஜென்மங்கள் தோறும் நிலைத்து இருக்க வேணும் என்கை –
Nastha dharmenavasu nichaye naiva kamopabhoghe,
Yadyath bhavyam bhavathu bhagawan poorva karmanuroopam,
Ethath prarthyam mama bahumatham janma janamathoropi,
Twatpadambhoruha yuga gatha nischala bhakthirasthu.
No interest I have in Dharma,Nor in collection of wealth and assets,Nor in passion and making love,For what has been decided by you,Will come to me in the form of karmas of the past,But I have one soulful prayer to thee, my Lord,In this birth and what follows,
Let me have rock like faith,In thine two holy feet.
தர்மத்தில் ஆசை இல்லை..செல்வ கூட்டம் ஆசை இல்லை காம போகத்திலும் ஆசை இல்லை இவை கர்ம அதீனம்.என்று தெரியும்
.தர்ம அர்த்த காம மூன்றையும் வேண்டாம் .. பிழையாமல் ..கணக்கில் கீர்த்தியாய் -கோடி வர்க்கங்களின் கர்ம கணக்கை சரியாக வைத்து இருக்கும் கீர்த்தி.
.அசக்த்யா லோக ரஷாய-கீதை மூன்றாம் அத்யாய சங்கரக ஸ்லோகத்தில் -அருளியது போல
-உன் திருவடிகளில் அசஞ்சலமான பக்தி–தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை ..
.மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் ..எங்கும் போய் கரை காணாதா மா பறவை போல ..
பிரகலாதனும் -எத்தனை ஜன்மம் எடுத்தாலும் வரம் கேட்காத வரம்/ என்பிலாதா இழி பிறவி எய்தினும் நின் கண் பக்தி வேணும்
..அப்படி நிலையான பக்தி இருந்தால் கர்மங்கள் தானாகவே தொலையும்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலேசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்