ஸ்ரீ தாடி பஞ்சகம்-
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –
இதில்,
**இவர்
….நெருப்பு
…இடி
**சூரியன்
**சிம்ஹம்
**கருடன்
**அக்னி
**த்ரிதண்ட மஹிமை
**வேதத்துக்கு மாங்கல்ய சூத்திரம் எது?
————————————————————————————————————————-
பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹாநச் சார்வாக சைலாசநி
பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர் ஜைநே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி–1-
1-பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹாந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –
2-சார்வாக சைலாசநி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –
3-பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –
4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –
5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-
6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –
7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –
ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –
பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்
மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-
—————————————————————————————————————————————–
பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-
1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –
2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –
3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –
4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப ஸூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –
நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-
பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-
—————————————————————————————————————————————–
சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத் வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச் சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமாநுஜார்யா ப்ரதி கதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-
1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –
2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்
3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –
4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி
5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்
6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –
தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-
—————————————————————————————————————————————–
த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரி யுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-
த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே
2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –
3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –
4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –
5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்
6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று
7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்
ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-
—————————————————————————————————————————————–
பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5
1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –
3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –
4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –
5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply