ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் ..

சாஸ்திரம் சொன்னது ஆழ்வார் ஆச்சார்யர்கள் அருளியது..அனுஷ்டித்து காட்டியது..இரண்டு பாகம் கைங்கர்யம் நித்யம் செய்ய இச்சை கொண்டு ..குணத்தையும் செஷ்டிதங்களையும் அனுபவித்து உள்ளம் உருகி /மற்றவற்றில் ஆசை அற்று இறுப்பது என்கிறார் கூரத் ஆழ்வான்..

பரஸ்பர நீச பாவம் கொண்டு..அகங்கரிக்காமல் மம கரிக்காமல் தண்டம் போல் திசை பார்க்காமல் விழுந்து சேவித்து நமஸ்கரிகனும்..சாஷ்டாங்க பிரணாமம் மனசு புத்தி அகங்காரமும் அடங்கி செவிக்கணும்..

இப் படி இருப்பவர்கள் எனக்கு தெய்வம் என்கிறார் ..இவர்களுக்கு கைங்கர்யம் பண்ண வைக்கணும் பக்தர்களுக்கு பக்தர் ஆக இருக்க ..யமனும் தூதரும் பேசுவது ..வேறு பாடு இன்றி / தனக்கும் பிறர்க்கும் வேறு பாடு காணாதவன் -பிரம்மா தர்சனம் எல்லா வற்றில்லும் அவன் இருக்கிறான் கறந்த பாலுக்குள் நெய் போல விறகுக்குள் நெருப்பு போல எள்ளுக்குள் எண்ணெய் போல இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு ..யானை பூனை நாய் நாய் மாமிசம் உண்பவனுக்கும் வேறு பாடு பார்க்காதவன் வைஷ்ணவன்..அனைத்தும் பிரம்மாவை ஆத்மாவாக கொண்டவை ..வைஷ்ணவன் விஷ்ணு தாசன் ..விஷ்ணு அந்தர் ஆத்மா என்று புரிந்து கொண்டவன். அந்தர்யாமி ந்யமிகிரவன்.. வியாபகமும் ந்யம்கிறதும் உண்டு.. ஆகாசம் ராஜா போல ..

எல்லாம் அவன் ஆதீனம் என்று இருக்கணும்..புரிதல் வேதாந்த புரிதல் மட்டும் இல்லை சாஸ்திர ஞானம் இது ..பண்டிதர் சம தர்சனம் ..யஸ்ய ஆத்மா சரீரம்..எவன் இவனை தெரிந்து கொள்ளுவது இல்லையோ உடனே சொல்லும் அந்தர் ஆத்மா ஆக இருந்தும்..கால சேபம் கேட்டதும் தரை தட்டி காட்ட –தரை அசேதனம் .ஞானம் இல்லை ..நமக்கு உள்ளதே ..ஈடு பாடு இன்றி கேட்டு இருக்கிறோம்.. உள்ளுக்குள் இருக்கும் பிரமதையே தெரியாமல் இருப்பது  ..ஞானம் ஆனந்த மயன்  அணு மயன் சேஷ பூதன் ..படிப்பு பணிவு ஆகிய வற்றுடன் கூடிய பிராமணன் .இல்லாத பிராமணன் .. யானை -பசு /இவற்றில். வேறு பாடு பார்க்க கூடாது .. துணை நூல் மார்பில் அந்தணர் என்கிறார் திரு மங்கை ஆழ்வார் ..

பிரகலாதன் போல /நிந்தை துதி /மானம் அவமானம்/ சுகம்துக்கம்/வெற்றி தோல்வி/ நஷ்டம் லாபம்/ ரத்னம் மாணிக்கம்  வைரம் இவற்றோடு கல் மண்ணாங்கட்டிக்கு வேறு பாடு பார்க்காதவன்.. பெயரிளுபயோகத்திலும் விலையிலும் வித்யாசம் இருந்தாலும் இதனால் எனக்கு உபயோகம் இல்லை என்ற எண்ணம் வேணும்..பெருமான் திரு வடி கிடைத்த பின்பு..உலகத்து பொருள்கள் எல்லாம் புல்  போல எண்ணினார் ராமானுஜர்..நான் யார் என்று தெரிந்து கொண்டதால்..

பொறுமை உடன் இருக்கணும்..கங்கை பிரவாகம் போல ..இடது கை பட்டு கண்ணை பட்டால் நொந்து கொள்கிறோமா ?.வம்பு வர வெவ் வேறு என்று நினைப்பு வேணும்..எல்லாம் அவனுக்கு சரீரம் என்ற எண்ணம் வந்தால் பொறுமை வரும்..

 புறம் உண்டான பற்றுகளின் வாசனை  யோடு விட்டு …பரம வைதிகனை பற்றனும்..வீடு முன் முற்றவும்..ஆழ்வானும்  ஆண்டானும் பேசினது..ஆசை விட்டவர் அவர். ஆண்டான் தேவரீர் மட்டும் தான் ..பற்றிடுவோம்.. மெது மெதுவே ஆசை விடுவோம். தன அடியே விலகும்..அவன் பெருமை தெரிந்ததும். ஆசை வைக்கும் முயற்சி நம்மது வளர்க்க வேண்டிய பொறுப்பு அவன். மால் பால் மனம் சுளிப்ப மங்கையர்  தோள்  கை விட்டு .. . கலர் டிவி வந்ததும்  ப்ளக்  அண்ட் வைட் டிவி மேல் ஆசை போனது போல..உகந்து இருக்கையும்.. ஆச்சர்ய பிரேமை.. பக்தியும் விரக்தியும் உள்ள அவர் உடன் சக வாசம் கொண்டு..

எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும்.. விட்ட பின்பு ப்ரேமம் இல்லை என்றால் பிடிக்க வஸ்து இல்லாமல் போகும்..பேரு தப்பாது என்று துணிந்து இருக்கையும்..உறுதி வேணும் மகா விசுவாசம் வேணும்..மா சுச -விதியா அபிப்ராயமா ? விதிக்கிறார்..சோகப் பட்டால் விசுவாசம் இல்லை என்று பொருள்..சந்தேகம். பாபம் வலியது சக்தி இருக்கிறதா சத்ய வாக்கியம் மேல் நம்பிக்கை இல்லாததால் ….அடுத்து -பேருக்கு துவரிக்கை துடிப்பு வேணும்..உசத்தி யான வஸ்து என்பதால் ..ஆர்த்தி வேணும்.. இருக்கும் நாளில் பொழுது  போக்குக்கு உகந்து அருளின நிலங்களில் -திவ்ய தேசங்களில் ஆசை கொண்டு கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருக்கணும் ப்ரீத்தி உந்த கைங்கர்யம்..அடுத்து-௬- ரொம்ப கஷ்டம் இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும். பிறர் மேல் பொறாமை படாமல் இருக்கணும் அவரை தெய்வம் ஆக கொண்டு.. ஐந்து வந்தாலும் ஆறாவது வராது ..ஏழாவது திரு மந்த்ரத்திலும் துவயத்திலும் நியதனாய் இருக்கணும்..ஒன்றி இருக்கணும். உதடு துடித்து கொண்டே இருக்கணும்..ஸ்ரீ ரெங்கத்தில் அநு சந்தித்து கொண்டு அர்த்தத்துடன் -இருக்க அருளினார். ஆச்சர்ய ப்ரேமம் கனத்து இருக்காய் எட்டாவது..மோட்ஷம் தர உபதேசிதாரே.. ஆச்சர்யம் செய்த உபதேசம் தூயதாய் தோன்றனும்..சரீர கைங்கர்யம் பண்ணனும்..அவர் இட்ட வழக்காக இருக்கணும்..வாங்கிண்ட வஸ்துவின் உசத்தி தெரிந்தால் இதை பண்ணுவோம்..ஆசார்யன் பக்கலிலும் எம்பெருமான் பக்கலிலும் செய் நன்றி அறிந்து இருக்கணும்

ஞானமும்  விரக்தியும் சாந்தியும் உடையவர் உடன் சக வாசம் கொண்டு.இருக்கணும்..

பக்தி பிரபாவ ..அச்சுத திவ்ய தாம  ..வேதங்களில் ரகஸ்யமாக இருந்தவன் ஆழ்வார் இடம் வந்து உகந்து இருக்கிறான்….விக்ரகதொடு தாயாரோடு வசிக்கிறான்..பக்தியின் ஆதிக்யம் -பெருமானுக்கும் நமக்கும் நெருக்கம் அதிகம்.. சம்ச்லேஷத்தில் சுகம் விச்லேஷத்தில் துக்கம் கொண்டு..அனுபவமே நீர் ஊற்று போல இருக்கும்..பராங்குசர் பக்திக்கு எல்லை அற்று இருந்தவர்..சங்கு சக்கர லாஞ்சனம் கொண்டு துளசி மாலை தரித்து கொண்டு,ஊர்த்த புண்டரம் தரித்து கொண்டு..

வெளி அடையாளங்கள் இவை..இவை மட்டும் இருந்து உள் அடையாளம்  இல்லாமல் இருந்தால் பிரயோஜனம் இல்லை..வேல் அடையாளம் இல்லாமலும் இருக்க கூடாது..வேஷம் தடுக்கும் வெளியில் போகாமல் இருக்க ..பரா அன்னம் சாப்பிட கூடாது..பாப உருண்டை போல அவனுக்கு திரு ஆராதனம் பண்ணாமல் சாப்பிடும் அன்னம்..கலத்தது தான் உண்ணனும் ..
கிருஷ்ணா கிருஷ்ணா தத்வம் கண்ணன் வேட்க்கையே வடிவு எடுத்தவர்..ஆழ்வார் ..அர்ஜுனன் திருவடி பக்கம் இருந்தான் /துர்யோதனன் திரு முடி பக்கம் ..தம்பி அர்ஜுனன் தான் முதலில் கேட்கணும் என்றதும் உன் திருவடியே வேணும்..உன்னை அர்தித்து வந்தோம்/ உனக்கே நாம் ஆட செய்வோம்..பிரமம் அனைத்து வுள்ளும் இருக்கிறான் என்று நினைத்தான் பிரகலாதன்..மித்திரன் அமித்திரன் வேறு பாடு இல்லை..எம்பார் -பாம்பு வாயில் முள் குத்தி இருக்க எடுத்து விட்டார் ..அதுவும் ஜகத்தில் உள்ளது விஷத்தோடு சிருஷ்டிதான் ..அது அதன் குற்றம் இல்லை என்றார்..தெள்ளிய சிங்கம் ஆகிய தேவு –யாரோ உன் உள்ளத்தில் இருந்து தூண்டியவன் அவன் தான் உன்னை கேள்வி கேட்க்க வைத்தான் சாஸ்தா அவன் தான் ஆணை  இட்டு ஆட்சி செய்பவன்….ராமானுஜர் தமது ஆச்சார்யர்கள் திரு குமாரர்களை திருத்த போக கூடாத இடம் சென்று திருத்தின ஐதீகம்..700௦௦ சன்யாசிகள் 12000௦௦௦ பரம பாகவதர்கள் எண் நிறைந்த ஸ்திரீகள்  இருந்தும் முக் கோல் பிடித்து கொண்டு அங்கெ போய் ..அவன் உம்மை விட்டோம் விட்டோம் என்று  சொன்னாலும் உன்னை விடோம் என்று திருத்தினார்..
நீயும் பகவானுக்கு சொத்து என்று பிரகலாதன் தன தந்தை இடம் சொன்னது போல..பிரம்மா ராயன் போனதும் கூரத் ஆழ்வான்.பத்னி ஆண்டாள் கதறினால் பட்டார் இடம் அபசாரம் பட்டதால் நரகம் புகுவான் என்று..நாலூரானுக்கும் தம்மை போல அருள வேணும் என்று கேட்டு கொண்டது போல..பக்தன் கை ஏந்தி பழக்கம் இல்லை லோகத்தில் எந்த பொருளையும் கேட்க்க கூடாது..முக்தி கைங்கர்யம் மட்டுமே கேட்கணும் ஆச்சார்யர் ஆணை படி கேட்டார்..தம் இடம் அபசாரம் பட்டான் என்று ..சம தரிசனம்.. கண்ணை கொடும். உம்மையும் நம் ராமனுஜனையும் தவிர மற்ற எவரையும் பார்க்க கூடாது..10 லஷணையும் காட்டி கொடுத்தார் இத்தால் ..அனந்தாழ்வான் -பூ கைங்கர்யம்..பெரியாழ்வார் போல எண் வகை பூக்களும் சேர்த்து கைங்கர்யம் பண்ணினது போல..ஆண் பிள்ளை..அனந்த் ஆண்  பிள்ளையார் ..கரு நக பாம்பு கடிக்க -சரீரமும் பாம்பு. அநாதி காலமும் தொடர்ந்து படுத்தும். கடிச்ச பாம்பு கடி பட்ட பாம்பு எது வழிதோ.. விரஜா நதி சுவாமி புஷ்கரணியில் நீர் ஆடி இரண்டு இடத்திலும் கைங்கர்யமே பண்ணுவேன்.. தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்கணும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இது..பாம்போடு ஒரு கூரையில்  பயின்றார் போல என்கிறார் திரு மங்கை  ஆழ்வாரும்..சரீரம் ரொம்ப நல்லவன் என்று சொல்லி கொண்டு பெருமாளை தெரியாமல் மறைக்கும் தன்னை பாம்பு என்று சொல்லி கொள்ளாது..பேரே அனந்தன்..

கொக்குபோல/ கோழி போல/உப்பு போல உம்மை போல இருக்கும்..வெண்மை சொல்ல வில்லை கரியான் ஒரு காலை வந்து ..வெள்ளி வலை கை பற்ற திரு மான்கள் ஆழ்வார் வெள்ளி வளையல் போட்டு கொண்டு இருந்தால் அவருக்கு பிடித்தது என்று தங்க வளையல் விட்டு வெள்ளி வளையல்..கொக்கு-உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும்..சாஸ்திரம் வேதம் நிறைய விஷயம் சொல்லும்….நமக்கு என்று ஏற்பட்ட மோஷ ஆனந்தம் மட்டும்-உரு மீன் நமக்கு..சேனை யாகம் போன்றவை நமக்கு இல்லை..

கோழி கிளரும் எடிற மணி-கோதுமை அரிசி மணி எடுத்துக்கும். தேடி அவன் திரு வடிக்ளலே என்று ..அவனே உபாயம் பிராப்யம் .என்பதால் கொக்கு கோழி இரண்டும் சொன்னார்

உப்பு இருக்கிறது தெரியாது.. நிறைந்து வியாபித்து பண்டம் உசத்தும். கோஷ்டியில் சேர்ந்து கரைந்து நன்மை சேர்த்து இருக்கும் இடம் தெரியாமல் இருக்கணும்..

பொறுமை உடன் இருந்தீரே அது போல இருக்கணும்-உம்மை போல ..

இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏற் இட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று ஏற்று கொள்வது தான் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்.. பரதாழ்வான் போல .மந்தரையா ? கைகேயியா ? தசரதனா ? ராமனா?..மத பாபமே நான் க்கிகேயதேசம் போனது தான் தப்பு..என்று இல்லாத குற்றத்தை ..நானே பாபம் என்கிறான்..நானே தான் ஆயிடுக -ஸ்ரீ வைஷ்ணவ லஷண முத்தாய்ப்பு இது தான் பரம பாகவதர் தொண்டு.. அடியார் அடியார்.. அடியானாக இருப்பது தான் ..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: