ராஜா கப்பலில் போகும் பொழுது குழந்தை விழ தானே விழுவது போல ..தந்தை என்பதால் ..அவதரித்து நம்மை நம்ப வைக்க ..பக்தி பண்ணி காட்ட பலரும் இருக்க ..உஜ்ஜீவனதுக்கு .. மாதவனே வந்தாலும் நாம் ஜால வித்தை என்று நாம் ..வரா விடில் எட்டா கனி / வந்தால் எளியவன் தானே அவ மரியாதை பண்ணி /மனுஷ்யன் வித்தை காரன் ..இடர்ந்து எடுக்க வந்தவனை இகழ்ந்து ..நமக்கு தொடர்பு உள்ள மனுஷ்ய வுருவத்தில் வந்தும்..முன்பு மத்ஸ்ய கூர்ம வராக நரசிம்ஹா வுருவத்தில் வந்த பின்பு ..நம் ஜாதி இல்லை. மானை வலை போட்டு பிடிக்குமா போல / ஆண் யானையை பிடிக்க பெண் யானையை வைத்து பிடிக்குமா போல ..நமை கொண்டு இவர்களை திருத்த முடியாது என்று கன்னி வைத்து பிடிக்குமா போல ஆழ்வார்களை அவதரிக்க பண்ணினான்..பக்தி மார்க்கம் பரப்ப..
ஐப்பசி ஓணம் தொடங்கி..நித்ய சூரிகளின் சக்தி விசேஷத்தை வைத்து ..திருத்த பண்ணினான் ..திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் உனக்கே நாம் ஆட செய்வோம் என்று அருளினார்கள் .உபாயமும் பிராப்யமும் ஆரும் பெரும் வழியும் அடையுமிடமும் மருந்தும் விருந்தும் அவன் திரு வடியே என்று உபதேசிக்க /அனுபவம் அதிகம் உபதேசம் கொஞ்சம் /கண் நீர் வழிய நாக்கு தழு தலுக்கு /வீடு முன் உற்றவும் என்றும் கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் /இனி இனி என்று கூட்டி கொள்ள சொல்லுவார் இருபது தடவைகள் /லோகத்தை பிடித்தவர் வைத்து உபதேசிக்க வைராக்கியம் இருக்கிறவர் உபதேசிக்க சொல்ல/உபதேச கர்ப்பம் நாலாயிரமும் ..திரு நெடும் தாண்டகம் வரை அருள /அணைத்து ஜாதி ஆணும் பெண்ணும் பழ வகை பட்டவர்களும் எப்படி பட்டவரும் பக்தி அடையலாம் என்று காட்ட ..
சுமார் 4500 ஆண்டு வரை..5110 வருஷம் கலி பிறந்து..
இன்னும் எடுத்து கொண்ட முயற்சி பலன் பெற வில்லை..ஆச்சர்யர்களை பிறப்பித்தார்/ உபதேசம் பிரதானம்.. ஞான பாகம்முக்யம்..முதல்வர் காட்டு மன்னர் கோவிலில் ஸ்ரீ ரெங்க நாத முனி..வீர நாராயண பெருமாள்..823 வருஷம் அவதாரம் ..நடுவில் 3400 வருஷம் காலத்தின் கோலத்தால் தேய்ந்து போனது ..எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பாடினார் பிரேமம் அதிகம் எளியவன் என்று காட்டி கொடுக்கும் ..அது காணாமல் போன காலம்..லோகத்தை திருத்த இது முக்கியம். சங்கல்பத்தால் ஆரா அமுதே பதிகம் கேள்விக்க பண்ணினான்.. குழலில் மலிய சொன்ன ஆயிரம்..குரு கூர் சட கோபன் காதில் விழ பொறி தட்டித்து..குழல் இசை விட நன்றாக இருக்கும் ஆயிரம் பாடல்கள் என்று கேட்டதும். குருகூர் சென்று..வூர் பெரும் தம் பெரும் கேட்டு ..இந்த பத்து கூட தெரியாது. பராங்குச நம்பி-தெரிந்த பதினொன்று பாசுரம்-கண் நுண் சிறி தாம்பு-ஆழ்வாரை பற்றி எங்கள் ஆச்சார்யர் அருளியவை என்று சொல்ல.. இதை 12000 தடவை திரு புலி ஆழ்வார் அடி சென்று ந்யமதுடன் சொல்ல .ப்ரீத்தி அடைந்து ஆயிரம் கொடுத்து..அடுத்து மூன்று பிர பந்தமும் அருளி ..தம் அவயவம் போன்ற மற்ற ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களையும் கொடுத்து..வ்யாக்யானங்களையும் ..பவிஷ்ய ராமானுஜர் விக்கிரகமும் அருளி .. வந்த நம்பியை தம்பி தன்னோடும் போல ..
வரும் கால ஆச்சார்யர் என்று கோடி காட்டி..௧௦௧௭ வருஷம் சித்திரை ..கொசித் கொசித் மக பாஹா சுகர் ஆழ்வார் அவதாரத்தை கோடி காட்டுவதை போல கலியும் கெடும் கண்டு கொண்மின் ..விக்ரகம் மதுரகவி ஆழ்வார் தாமிர பரணி ஆற்று நீரை காய்ச்சி எடுத்து உருவாக்கின விக்ரகம்..அடுத்து தான் ஆழ்வார் விக்ரகம் வந்தது..அவர் தான் ஆழ்வார் திரு நகரியில் இன்று சேவிகிறோம்.. ராமானுஜ சதுர வேத மங்கலம்..மேலை அகத் ஆழ்வான் கீழை அகத் ஆழ்வான் கொண்டு /திரு கண்ணா மங்கை ஆண்டான்/ உய்யக் கொண்டார் .சிஷ்யர்/ ஈஸ்வர முனிகள் இவர் குமாரர்.. யமுனை துறைவர் அவர் குழந்தை..ஆடி உத்தராடம் நட்ஷத்ரம்..பேரனுக்கு வயசாக வில்லை.. மந்திரிகள் போல உய்ய கொண்டார்.. மணக் கால் நம்பி மூலம்..தூது வளை கீரை கொண்டு சாஸ்திரமும் பிரபந்தங்களும் விக்கிரகமும் சேர்ந்தது ..குரு பரம்பரையாக வாங்கி கொண்ட சொத்து இவை..சரிய பதி தொடங்கி/ அவிச்சின்னமாய் இடை வீடு இன்றி தங்களுக்கு என்று இல்லை..சங்கிலி தொடர் போல அர்த்தங்கள் சாஸ்திரங்கள் ரகஸ்ய த்ரயம் எல்லாம் வந்தன..ஹாரம் போல..யதிராஜர் நாயக போல..லக்ஷ்மி நாதன்/ லக்ஷ்மி/விஷ்வக் சேவர்/ நம் ஆழ்வார்/ நாத முனிகள்/ ஆளவந்தார் ..இது வரை. ராஜா ராஜ்ஜியம் கொடுத்து யமுனச்சர்யரை ஆள வந்தார் ஆகினார்..கீரை கொடுப்பதை நிறுத்தி..அதனால் கூப்பிட்டு ..தர வந்தோம் கிழிசல் வேஷ்டி உடன் ..பிரமத்தை கையில் வைத்து இருக்கிறோம்..கீதை அர்த்தம் சொல்லி/சொல்ல பட்ட அவனை காட்டும் என்று கேட்க்க/ இரண்டு தூண்கள் நடுவில் வைத்து நீண்ட அப் பெரிய வாய கண்களால் காட்டினது போல பிரிய தமருக்கு காட்ட வேண்டினார்.. அரசை துறந்தார் இத்தால்..
குளம் நாத யாமுன மத்யமாம். நடுவில் இவர்கள்….ஏரி வேணுமே..அதனால் ராமானுஜர் வரை பார்க்கணும்….பிரம்மா வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் ரிஷி பரம்பரை பொய்கை ஆழ்வார் பரம்பரை..உய்யக் கொண்டார் திரு வெள்ளரியில் அவதாரம்.. ஆதி சேஷன் /இலக்குவன்/பல ராமன் /நாலாவது யுகத்தில் ஐந்து ஆயுதங்களும் அம்சமாக -கேசவ சோமயாஜுலு திரு குமாரார் சித்திரை திரு வாதிரை அவதாரம்.. அன்றே அஞ்ஞானம் தொலைந்தது..அனைத்தும் இப்பொழுது தான் பலித்தது பகவானுக்கு ..வேதாந்த ஞானத்துடன் காருண்யம்–காரேய் கருணை ராமானுஜ –நாமோ குற்றங்களுக்கு இருப்பிடம்..மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா –நாரணர்க்கு ஆயினரே ..பார்த்த சாரதி பெருமாள் அனுக்ரகதுடன் அவதாரம்..இளையாழ்வார் /ராமானுஜர் எம்பெருமானார் உடையவர் யதிராஜர் கோவில் அண்ணன் இட்ட பெயர்கள்..யாதவ பிரகாசர் இடம் கால சேபம் கொண்டு பிணக்கு ஏற்பட்டு 16 வயசில் திரு கல்யாணம் 32 வயசில் துறவறம்..ராஜா தானி தலைநகரம் திரு அரங்கம்.. ஆளவந்தார் இடம் பல சிஷ்யர்கள்/ பெரிய நம்பி -மகா பூர்ணர்..காஞ்சி தேவ பெருமான் ஆளவந்தாரின் கடாஷம் பெற சங்கல்பிதார்..திரு கச்சி நம்பி-கரிய மாணிக்க பெருமாள் சந்நிதி ..பக்கம்–இளை ஆழ்வாரை காட்டி கொடுக்க ஆ முதல்வன்..வாய் முதல் அப்பனை என்ன சொல்லி மறப்பனோ..அது போல இவனே முதல்வன் என்று கடாஷித்து.. தேவ பெருமாள் இடம் அவர் பிரசாதத்தை வைத்து இவரை சம்ப்ராயததுக்கு ஆள் ஆக வேணும் என்று பிரார்த்தித்தார்..பெரிய நம்பிகளை விட்டு அழைத்து வர சொல்ல -சரம விமலா திரு மேனி தான் திரு கடம்பனூர் சந்நிதியில் ..அரங்கனை சேவிக்காமல் திரும்பினார் ..பெரிய நம்பி தேடி வர ஆறு வார்த்தை பெற்று ராமானுஜரும் வர மதுராந்தகத்தில் சந்தித்து மகிழ மரம் அடியில் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணி ..இருவரும் காஞ்சி வர..மனைவியர் பிணக்கால் சந்நியாசி ஆஸ்ரமம் பெற்று ராமானுஜர் பெயர் பெற்றார்..திரு அரங்க பெருமாள் அரையர் மூலம் தேவ பெருமாளை ஸ்தோத்ரம் பண்ணி நம் ராமானுஜரை தந்து அருளால் ஆகாதோ.. ஸ்ரீ ரெங்கம் வந்து உடையவர் பட்டம் பெற்றார்.. அதி பதி. பிரயத்தனம் இத்தால் பெருமாளும் பயன் பெற்றார் இன்றுநாயகம் கல் இரு பக்கமும் ஒளி வீசும் ..ராமானுஜ நாலு எழுத்து நாமம்-மோட்ஷம் மட்டுமே தரும். நாராயண நாமம் சம்சாரமும் முக்தியும் அழிக்கும்..கடல் கருணை போல லக்ஷ்மி நாதன். மேகம் எடுத்து சுத்தி பண்ணி மழை மலை மேல் விழ அருவிகள்..நாம் என்கிற பயிர் வளர .கோபம் ச்வாதந்த்ர்யம் இருக்கும் அவன் இடம்..நம் ஆழ்வார் தான் மேகம். உப்பு எடுத்து கருணையே திரு வாய் மொழி அமுதமாக -நாத முனிகள் மழை/ உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவி/ ஆளவந்தார் காட்டு ஆறு/ ஐந்து ஆச்சார்யர்கள் மூலம் ஏரி போல ராமானுஜர்..மதகுகள் 74 சிம்காசனாதி பதிகள் ..ஏற்ற கலங்கள்.வள்ளல் பெரும்பசுக்கள்.. ஆற்ற படைத்தவர் ராமானுஜர். பாத்ரம்மாற்றுவது தான் நம் வேலை. எதிர் கொண்டு மீது அழிக்கும் போல உபதேசிப்பார்கள்..கூரத் ஆழ்வான் முதலி ஆண்டான் எம்பார் மூவரும் பிரதான சிஷ்யர்கள்/பெரிய நம்பி-ரகஸ்ய த்ரயம். திரு மழை நம்பி-ராமாயணம். திரு அரங்க பெருமாள் அரையர் -திரு வாய் மொழி/திரு கோஷ்டியூர் நம்பி/ திரு கச்சி நம்பி..மூலம் அனைத்தும் பெற்றார் அவர் சம்பந்தி ஆவது தான் நாம் பண்ண வேண்டியது..
அதிகாரம் இல்லாதவருக்கும் மோட்ஷம் தருபவர்..74 பெரும் அவர் கூட இருந்தவர்கள்…. பஞ்ச சம்ஸ்காரம் பண்ணி- ஏர் படுத்தி வைத்த திட்டம்…புதிதாக கொண்டு வந்தது இல்லை..முதலில் சங்கு சக்கர லாஷனை பண்ணி கொள்வது.. ரஷை நமக்கு .. சேஷ பூதர் என்று நினைவு கொள்ள ..கண்ணனே துவார பாலகர் இடம் இதை வைத்து அடையாளம் பார்க்க அருளினார்/ புண்டரகம் -௧௨ திரு மண் காப்பு கேசவாதி பெருமாளும் தாயார் உடன் இருந்து ரஷிகிரார்கள்..ஸ்ரீ தேவி.விஷ்ணு பத்னி..போல..அடுத்து ராமானுஜ தாசன் பெயர்- எக் குற்றம் வேறு பாடு இன்றி அடியேன் ராமானுஜ தாசன்..ஆத்மா விஷயம் பற்றி..ஒரே நிலை ..பிரிவினை வாதம் மறைய ..அடுத்து மந்த்ரம் உபதேசம்..யாகம்-திரு ஆராதன க்ரமம்..
எதிராசர் இன் அருளுக்கு இலக்காகி சதுராக வாழ இவை வேணும்..பங்குனி உத்திரத்தில் ஏற்பாடு..புரிதல் நினைதல் தெரிதல்..புரிந்தால் பின்பு தவறு செய்ய மாட்டோம்..மோட்ஷம் போக சங்கிலி தொடர்..
அசமத் ஆச்சார்யர் என்று கூரத் ஆழ்வான் ராமானுஜரை சொல்ல..திரு மந்த்ரத்தை நர நாராயணன்/ த்வ்யம்விஷ்ணு லோகத்தில்/ தேர் தட்டில் சரம ஸ்லோகம் உபதேசம் மூன்றும் சேர்த்து ஸ்ரீ ரெங்க நாதன் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேசிக்க….பிள்ளை லோகம் ஜீயர் அருளியது அசமத் குரு ..எதி சேகர மத்யமாம் என்று அருளினார் ..குரு பரம்பரை முதல் இடம் தேர் பிடித்து கீதாசார்யன் ஆகவும் ஆசை..திரு நறையூர் நம்பி திரு மங்கை ஆழ்வாருக்கு பண்ணி வைத்தார்…பிள்ளை லோகாச்சர்யர்/கூர நாராயண ஜீயர் கூர குலோதம தாசர் திரு வாய் மொழி பிள்ளை மண வாள மா முனி வரை..நடாதூர் ஆழ்வான் நடாதூர் அம்மாள் கிடாம்பி அபுள்ளார் .கிடான்பி ஆசான் வம்சம்.. வேதாந்த தேசிகன்..பிரிவுகள் அன்று இல்லை..எதிராஜர் புனர் அவதாரம் மா முனிகள்..பூர்வாச்சர்யா பரம்பரை முற்று பெற்றது..வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை..அசமத் குருப்யோ நம / அசமத் பரம குருப்யோ நம /சர்வ குருப்யோ நம கூடஸ்தர் அடுத்து ஸ்ரீ மதே ராமானுஜாய நம
குல கூடஸ்தர் மூலம் சம்பந்தம்.அசமத் குருப்யோ பரம குருப்யோ சர்வ குருப்யோ ஸ்ரீமதே ராமானுஜாய நாம பராங்குச தாசர் ..ஸ்லோகம் வடிவில் சொல்லுகிறோம்.. இந்த ஹாரம் போட்டு கொண்டால் கள்வன் கண்ணன் வந்து நம் உடன் அள்ளி கொண்டு போவான் .வாய் வெருவி கொண்டே இருக்கணும். படி துறை போல ..குரு பரம்பரை..ஜப்தவ்யம் ..அருள் பெற இது ஒன்றே வழி ..எப்போதும் ராமானுஜர் வடிவழகு நினைந்து இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் என்போம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply