சுந்தர பாஹு ஸ்தவம் 99 to 106 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

99th ஸ்லோஹம்..
பார்க்கவ:கில பவந் பவாந் புரா
குந்த சுந்தர வநாசலேச்வர ,
அர்ஜுநச்ய பல தர்ப்பிதச்ய து
ச்செத்ச்யதி ஸ்மாரதி பாஹுகாந்ந்ம்
ஜமதக்னி முனிவர் -ரேணுகை -திரு அவதாரம்/ கோடாலி ஆயுதம் /கார்த்த வீர்யார்ஜுனனை கொன்று -21 தலை முறை பொருது அழித்திட்டான்..தெளித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் என்றும் அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்று அவன் அகல் விசும்பு அனைய -என்றும் திரு மங்கை ஆழ்வார் அருளி இருக்கிறார்..
உபாசனைக்கு உரிய அவதாரம் இல்லை என்றாலும் விரோதிகளை களைந்து ஒழித்த உபகாரத்துக்கு தோற்று துதிப்பது மாத்திரம் உண்டு –கோக்குல மன்னரை மூவெழுகால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனை போற்றும் புனிதன்..
ப்ருகு குலத்தில் தோன்றின படியால் -பார்க்கவ..
குந்த சுந்தர வநாசலேச்வர–குருந்த  மரங்களால் அழகிய திரு மால் இரும் சோலை மலைக்கு தலைவரே ! 
புராகிலபவான் பார்க்கவ: பவன்–பண்டு தேவரீர் பரசு ராமனாக திரு அவதரித்து  
பல தர்ப்பிதச்ய அர்ஜுனச்ய –வலிமை செருக்கு உள்ளவனான கார்த்தவீரார்ஜுனன் உடைய  
பாஹுகானனம் ச்செத்ச்யதி ஸ்மாரதி–புஜ  வனத்தை அறுத்து ஒழித்தீர்..
பாஹு கானனம் -கைகள் என்னும் காட்டை முடித்தவர் பல ராமன்  /வெட்ட போக நினைத்தீர் ..முடித்தீர்..ரோஷ ராமன் கருணா காகுஸ்தன் -தேசிகன்/ ரோஷ-கோபம்..போற்றும் புனிதன் ..உபகார ஸ்மிர்த்தி பண்ணுவார் /தீய அரசர்களை கொன்றார் என்பதால்..உபாசனத்துக்கு விஷயம் இல்லை /ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரம் கார்த்த வீர்ய அர்ஜுனன்/ததாத்ர்யர் காலம்.அத்திரி பிள்ளை முழுவதும் பிராமணர் ஜமதக்னி -பிராமணராக பிறந்து சத்ரியன்/ ராமன் ஷத்ரியர் கண்ணன் -ஷத்ரிய வைசிய இரண்டும் யுக வர்ண கிராமம்/ காலையில் நம் ஆழ்வாரோ/ /தீயது பண்ண ஆசை வேண்டாம் பிரார்த்தித்தான் கார்த்த வீர்ய அர்ஜுனன் தத்தாரியர் இடம் கர்மா தினம் என்பதால்..தேவேந்திரன் -மூன்று லோகம்/ கார்த்த வீர்யனுக்கு சக்தி சகல பலம் கொடுத்தான். கையும் வில்லுமாய் நிற்ப்பாய் பார்த்து குற்றம் பண்ண மாட்டார்கள் என்ற வரம்..புழு பூச்சி அகப் பட்டது போல ராவணன் அகப் பட்டான்..அங்கதன்-சொன்ன கதை..வலி கை இடுக்கில் இடிகினவன் ராவணன்..சாரு பாயாசம் மாறினதால் சம தக்னி சத்ரியன்/ திவாகரன் -சூர்யா வம்சத்தில் ராமன் /சந்திர வம்சத்தில் பிறந்தவர் பரசுராமன் -சத்யா வதி-ரிஷிகர் கல்யாணம் ..தாய்க்கும் மகளுக்கும் /மாற்றி சாப்பிட /தாயாருக்கு ஷத்ரிய பிள்ளைக்கு வைத்து இருந்தார்/ மாற்றி பிறப்பார்கள் பிள்க்லைக்கு இருக்காது பேரனுக்கு என்பதால் பரசுராமன் விஸ்வாமித்ரர் ஷத்ரியர் பிறந்தாலும் ராஜ ரிஷி ஆனார் ..நான்காவது பிள்ளை பரசு ராமன்..ரேணுகா தேவி -பதி விரத்தை இல்லை என்று வெட்ட சொல்ல …இரு நாலும் எட்டும் ஒரு நான்கும் ஒன்றும் 21 /கலியன்..
மன்னர் மாள வடிவாய மழு ஏந்தி-பரசுராமன் – உலகம் ஆண்டு../அரசு களை கட்ட..
100th ஸ்லோஹம்..
இது முதல் ஏழு ஸ்லோஹன்களால் ஸ்ரீ ராம அவதார ஸ்லோஹங்கள்
ஆஜ்ஜா தவாத்ர பவதீ விதிதா த்ரயீ ஸா
தர்மம் ததுக்தமகிலேன வநாத்ரி நாத !
அன்யூனமாசரிது மாஸ்திக்க சிஷனார்த்தம்
அத்ராவதீர்ய கில சுந்தர ! ராகவோ பூ;
வநாத்ரி நாத ! சுந்தர ! ராகவோ பூ;—பண்டு ராமனாக திரு அவதரித்தவரும் இப்போது அழகராக சேவை சாதிப்பவரும் ஒருவரே –வேதோதங்களான தர்மங்களை  குறைவற அனுஷ்டிக்க சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்தவர்..
பரம பூஜ்யமான வதம் ஸ்ருதிஸ் ச்ம்ருதிர் ம்மை ஆஜ்ஜா என்கிற படி தேவரீர் உடைய திவ்ய ஆஜ்ஜை யாக பிரசித்தமானது..
வேதோகிலோ தர்ம மூலம் -என்கிற படியே சகல வித தர்மங்களுக்கும் மூலம் ..அதில் சொல்லப் பட்ட சகல தருமங்களையும் ஆஸ்திக சிஷார்தமாக குறைவற அனுஷ்டிப்பதற்கு இந் நிலத்திலே திரு அவதரித்து ஸ்ரீமத் ரகு குல திலகர் ஆனீர்
தர்ம ஸ்தாபனம் முக்கியமாக கொள்ளப் பட்டது ராமோ விக்ரஹவான் தர்ம -பித்ரு வாக்ய பரி பாலனம் சரணாகத பரித்ரானம் -போன்ற சாமான்ய தர்மங்களையும் தான் அனுஷ்டித்து காட்டி ஆச்திகர்களையும் அனுஷ்ட்டிக்க செய்யவே ராம அவதாரம்..ஆஸ்திக சிஷனார்த்தம் –சிஷ்யனை நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைகாக ..
சுருதி -ஸ்ம்ரிதி -இரண்டும் அவன் ஆணை ..அகில தர்மத்துக்கும் மூலம் வேதம்..வேத போதோத இஷ்ட -வேதம் ஒத்துக் கொண்ட இஷ்டத்தை வதம் ஒத்துக் கொண்ட வழியில் பெறுவது தர்மம்..சிஷிப்பது -ரகு குலத்தில் அவதரித்து ராகவன் ஆனீர் /வேத மார்க்கம் சொல்லி தர /அனுஷ்ட்டிக்க / பித்ரு வாக்ய பரிபாலனம் /சாதாரண தர்மமும்  /வேதத்தின் விழுமியத சரணா கதி தர்மம் -விசேஷ தர்மமும் பண்ணி காட்ட –கபோத வியாக்யானம் புறா கதை /ஆஸ்திக சிஷனார்தம் அவதரித்தீர் ..நர நாரனனாய் சிங்காமை விரித்தால் போல -சுந்தரராகவன் அழகால் ஆநந்தம் கொடுப்பவர்
101 st ஸ்லோஹம்..
 வனகிரி பதிரீசிதேதி தேவை !
த்ரிபுரஹர த்ரிபுரக்ன சாபபன்காத் ,
வ்யகணி பரசுராம தர்சி தஸ்ய
ச்வகதனுஷ:பரிமர்ச்ச தர்சநாச்ச..
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் என்று பரத்வத்தை மறைத்து ஏர் இட்டு கொண்டாலும் ,இரண்டு செய்கைகளினால் தன உடைய பரத்வத்தை தேவர்கள் தெரிந்து கொள்ளும் படி ஆயிற்று..
த்ரிபுரஹர த்ரிபுரக்ன சாபபன்காத் –திரி  புரம் மூன்று எரித்த சிவ பெருமான் அந்த த்ரி புரம் சம்ஹாரம் பண்ணும் பொது வில் முறி பட்டது  ..அதை ஜனக குல அரசன் -தேவ ராதன் இடம் கொடுத்திட ..வம்ச பரம் பரையாய் வந்து  சீதை பிராட்டிக்கு கன்யா சுல்கமாக வைத்து , அதை முறித்து தன பேர் ஆற்றலை விளங்க செய்தான்..
பரசுராம தர்சி தஸ்ய ச்வகதனுஷ:பரிமர்ச்ச தர்சநாச்ச –ஆதி காலத்தில், தேவ சில்பியான விஸ்வ கர்மா இரண்டு சிறந்த விற்கள் நிருமிக்க பட்டன ..ஓன்று சிவ பிரான் கொண்டது ..மற்று ஓன்று ஸ்ரீ மகா விஷ்ணு ரிசீக முனிவர் இடம் கொடுத்து செல்ல /அது அவன் குமாரன் ஜமதக்னி இடம் /அவன் குமாரன் பரசு ராமன் இடத்தும் பரம் பரையாய் வந்தது..என் வில் வலி கண்டு போ என்று செருக்கி வந்த பரசு ராமனது கையில் நின்று வில்லை வாங்கி வளைக்க -அவன் தபோ பலம் பெற்ற சரித்ரம்
இந்த இரண்டு சரித்ரங்களால் பரமேஸ்வரன் என்று அறுதி இட்ட அவனே திரு மால் இரும் சோலை அழகர் ..

தோள் அழகன் ராமன் –சிறிய திருவடி தோற்ற துறை/ அங்கங்கள் அழகு மாறி-குலேசேகர்/ சேவித்த உடன்  ஈடு பட்டு தான் யார் என்று காட்டி கொடுக்க வைத்தது…/இக் கரையிலே விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்/ ஜடாயு மோட்ஷம்/ குரங்குகள் அணில் வைத்து சேது கட்டினது எல்லாம் பரத்வம் வெள்ளி பட்ட சரித்ரங்கள் ..சவ தனுசை/தன உடைய விஷ்ணு தனுஸ் என்பதால் தன உடையது என்றார் ..ஸ்பஷ்டமாக பரத்வம் வெளிப்பட்டது இரண்டு தனுசால்../நிமியின் சேஷ்ட குமாரன் தேவ ராதன் -வசிஷ்டர் இடம் புத்திர காமோஷ்டி யாகம்  கேட்க தாமதித்த தாள் வேறு ரிஷிகள் வைத்து பண்ண சாபம் /விதேகன் ஆனான் சாபத்தால்/நிமிஷம் -இமைக்கும் பொழுது நிமி இருப்பதால்/ உடம்பை கடைந்து மந்தனம் -தேவ ராதன் பிறந்தான்..மதனத்தின் போது உருவானவன் மிதிலா தேசம்/ மைதிலி/ விதேக ராஜ்ஜியம்/ வைதேகி/ ஜனகன் பெண் ஜானகி/ஜனகர் குடும்ப பெயர் -கடையும் போது ஜனித்ததால் தேவ ராகனுக்கும் ஜனகன் பெயர் உண்டு/ கலப்பை நுனி சீதா என்ற பெயர்/ மைதிலி பெயரும்../உலகேழும் திரிந்த  ருத்ரன் இடர் கெடுத்தான் /மகேந்திர கிரி நோக்கி பொய் தவம் செய்ய போனார் பரசு ராமன்– திரு குறுங்குடி தான் ..

மங்களா சாசனம் சொரூப விருத்தம் இல்லை/ பிரேம தசையில் தட்டு மாறி கிடக்கும்/ சக்கரவர்த்தி/ஜனக ராஜா திரு மகள்/ விஸ்வாமித்ரர்/ரிஷிகள் /யசோதை/ நந்த கோபாலன் /சுக்ரீவன்/ ஹனுமான் / ஜடாயு -ஆயுஷ்மான் ../தன வில்-தானாயும் ஆனான்-விரிஞ்சனோ விடவநானோ விஷ்ணுவோ என்று சொல்லாமல் விட்டார் கம்பர் ஹனுமான் சொல்லை ராமன் புகழும் போது../காது பெருக்குவாரை போல இரா மடம் வூட்டுவாரை  போல கேட்காமல் தருபவன் விஷ்ணு தானே / திரு புரம் எரிக்க என்ன கொடுப்பீர் சிவன் கேட்க -பசுபதி ஆனார்/பிரம்மா தேர் ஒட்டி/ அக்னி பானம் விஷ்ணு முனி /தானே பண்ணினே என்ற செருக்கு/ புரம் எரித்த சரித்ரம் ராமன் சேர்த்து திரு வில்லி கேணி பாசுரம்..

102nd ஸ்லோஹம்..
அ நவாப்தமாத்ரா கில லிப்ச்யதே ஜனை;
 நச லப்தமேததிஹா போகது மிஷ்யதே ,
அ நவாப்தமாத்ரா கில நாஸ்தி ராம  தத்
ஜகதீ த்வயா த்ருணமவைஷி சுந்தர !
சக்ரவர்த்தி திரு மகன் கூனி சொல் கேட்ட கொடியவள் தன சொல் கொண்டு -குவலயத் துங்க கரியும் பரியும் ராச்சியமும் எல்லாம் துறந்து கானகமே மிக விரும்பி போனது அவாப்த சமஸ்த காமனான தான் ஜகத்தை எல்லாம் தருணமாக நினைததனாலே என்கிறார்..
ராம சுந்தர! -பண்டு ஸ்ரீ ராமனாக திரு அவதரித்த அழகரே  !
 ஜனை; அத்ர அ நவாப்தம கில லிப்ச்யதே –இவ் உலகில் மனிசர் எல்லாம் தங்களுக்கு கிடைக்காத பொருள்களையே பெற விரும்புவது இயல்பு..
 நச லப்தமேததிஹா போகது மிஷ்யதே ,–அனுபவிக்க பாங்காக கிடைத்த வஸ்துவானது விரும்ப படுகிறதில்லை..சித்தமானதில் விருப்பம் உண்டாக ப்ரசக்தி இல்லாமையாலே ..ஆக கிடைக்காத வஸ்துவில் ஆசையும் கிடைத்து முடிந்த வஸ்துவில் ஆசை இல்லாமையும் உலக இயல்பு  
இனி எம்பெருமான் படி சொல்லுகிறது
அ நவாப்த  மாத்ர கில நாஸ்தி–அவாப்த சமஸ்த காமர் என்று புகழ் பெற்ற தேவரீருக்கு அனவாப்தமானது ஓன்று இல்லை இறே
தத் –ஆகையினாலே
 த்வயா ஜகதீ  த்ருணமவைஷி–பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும் அன்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமானே உபய விபூதி நாதரான தேவரீராலே இஷ்வாகு ராஜ்ஜியம் ஆனது மிக அற்பமாக காண பட்டது ஆனது பற்றியே நாடு துறந்து காடு சென்றீர்..
நின்ற-வாலி கொன்ற பின் / சயனித்த-தல சயனம்  /அமர்ந்த சித்ர கூடம் ..தாரை பார்த்து தும் -நீ -கை நீட்டி பேசுகிறாள் .இந்திரியம் ஜெயித்தவனே / அப்ரமேய அஷய கீர்த்தி என்கிறாள்..பெண் மண் ஒன்றும் வேண்டாதவன் நீ ஜிதேந்திரன் ..ஆப்த காமன் பிராப்த காமன் எல்லா ஆசைகளையுமடைந்தவன் /அபொழுது அலர்ந்த சென் தாமரையை வென்றது அம்மா -ராஜ்ஜியம் வேண்டாம் என்ற பொழுது ராஜ்ஜியம் இல்லை என்ற இருட்டு ஏற ஏற ராம சந்திரன் திரு முகம் வெளிச்சம்  மிகுந்து போகும்..இரு நிலையத்தை வேண்டாது -வானமே மேவி–தசரதன் புலம்பல் ..ஆசை என்றாலே கிடைக்காத பொருளின் மேல் தானே சாத்திய வஸ்துவில் ஆசை சித்த வஸ்துவில் இல்லை/திருவடி மதித்த ஐஸ்வர்யம் இலங்கை வேண்டாம் என்றான்–அடுத்த  ஸ்நானம் கைகேயி புத்திரன் கூட தான் என்கிறான் உடனே..திரை போட்டு பகவானை மறைக்கும் பிரகிருதி அதனால் மாயா..
103rd ஸ்லோஹம்..
சிகரிஷு விபிநேஷ்வப்யாபகா ச்வச்சதோயாசு
அனுபவசி ரசஜ்ஜோ தண்ட காரனியா வாசான்,
ததிஹா ததனுபூதவ்  சாபிலாஷோத்ய ராம !
ஸ்ரயசி வனகிரீந்த்ரம் சுந்தரீபூய பூய:
தண்ட காரணியம் கங்கை கோதாவரி சித்ரகூடாதி பர்வதங்கள் போல இங்கு உள்ள வனராஜிகள், நூபுர கங்கை போல்வன, திரு மலை முதலியன ஆனந்த்தை அனுபவிக்க அழகர் ஆகி உள்ளான்..
சிகரிஷு–சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும்..
 விபுநேஷு –தே வநென வனம் கதவா என்னும் படியான வனங்களிலும்  
அச்ச தோயச ஆபகாசு -நிர்மலமான தீர்த்தத்தை உடைய மந்தாகின்யாதி நதிகளிலும்  
தண்ட கரண்ய வாசான்,அனுபவசி –அரண்ய வாஸ ஸுகத்தை அனுபவித்தீர் 
தத் -இங்கனே திரு உள்ளத்திற்கு பாங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே
இஹ பூய ததனுபூதவ்  சாபிலாஷ -மீண்டும் அவ அனுபவங்களை செய்து போர  திரு உள்ளம் பற்றினவராய் கொண்டு  
 சுந்தரீபூய வனகிரீந்த்ரம் ஸ்ரயசி–அழகராகத் திரு அவதரித்து திரு மால் இரும் சோலை மலையை உறைவிடமாக கொண்டு அருளிற்று  ..
பரம ரசிகர் -புதிய திரு நாமம் ராமனுக்கு ..அனுபவிக்க காட்டுக்கு போனார் /மலைகளையும்/வனங்களையும்/தண்டகன் -இஷ்வாகு வம்சம் ராமனுக்கு முன் -அவன் பெயரால் ..தண்ட காரண்யம் ..பெருத்த அடர்ந்த காடு /சிலக் கை வேடர் -ஆகிஞ்சன்யம் வேண்டும் என்று சொத்தை பரிப்பார்கள்/ஆற்றங்கரைகள் 
கங்கை சரயு பம்பா தீரம் -சரஸ் பொய்கை இது /சீதை யை விட்டு அங்கு அனுபவிக்க -இங்கு ஏறு திரு டையானாக  பிராட்டி உடன் சேர்ந்து ரசிக்க வந்தார்  /அனுபவசி -நிகழ காலம் பிர பதயே போல ருசிக்காக /இப்போ அனுபவிப்பது போல இருக்கிறது ..தொடர்ந்து என்பதால் ..காமாத கிரி சித்ர கூடத்தில் இன்றும் இருக்கிறது -கிரி ராஜ் பெயர் இதற்க்கு கோவர்த்தனம் கிரி ராஜ் கிருஷ்ணா அவதாரத்தில்.. ஆழ்வாரின் த்யாஜ்ய தேகத்தில் வியாமோகம் இங்கு அங்கு பரதன் வேண்டி கொண்டும் ஏற்க வில்லை/காட்டு பக்கம் போனதால் பாதுகை -பக்த பரதனை பார்க்காமல் பித்ருய் வாக்ய பரி பாலனதுக்கு போனதால் கோபித்து போனதாம்..வந்த நம்பியை தம்பி தன்னோடும் /மரவடியை பணயம் வைத்தான் ..வாட்டாற்றன் வந்தார் ஆறாம் பத்தில் /திரு மொஹூர் அழைத்து போஹா தயார்/ கள் அழகர் தேஹதொடு கூட்டி செல்ல ஆசை கொண்டார்  /வேர் சூடும் மண் கொண்டு பற்றுவது போல அவர்கள் ஜ்ஜானியை விக்ரகதொடு ஆதரிக்கும் /கோதாவரி சொல்ல வில்லை கைங்கர்யம் இழந்தது நூபுர கங்கை -கள்ளை குடித்தவாறு  ஆடி ஓடி பெருகுகிறது  இங்கே /திருவை தொலைத்து அங்கெ இங்கே ஏறு திரு உடையான் ..
104th ஸ்லோஹம்..
உபவன தருஷண்டைர் மண்டிதே கண்டசைல
ப்ரனயிபவது தந்தோத்காயி கந்தர்வசித்தே ,
வனகிரி தடா பூமி ப்ரச்தரே சுந்தர ! தவம்
 பஜசினு ம்ருகயானானுத் ரவச்ராந்தி சாந்திம்
தண்ட காரண்ய வாசத்தில் நேர்ந்த சிரமம் ஆறுவதற்கு இந்த திரு மலையில் வாசத்தை உகந்தீர் போலும்..
ம்ருகயானானுத்ரவ  ச்ராந்திசாந்திம் வனகிரி தடா பூமி ப்ரச்தரே  பஜசினு–பண்டு பஞ்சவடியில் மாரீச மாயா மிருகத்தின் பின்னே தொடர்ந்து சென்றதால் உண்டான ஸ்ரமத்தின் பரிஹாரத்தை இந்த தாழ் வரையிலே அடைகின்றீர் போலும்
உபவன தருஷண்டைர் மண்டிதே–ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் ஆயிரம் பூம் பொழிலும் உடைய மால் இரும் சோலையதே -என்கிற படியே பூம் சோலைகள்  நிரம்ப பெற்றது
கண்ட  சைல ப்ரனயி  பவது தந்தோத்   காயி கந்தர்வ  சித்தே –கந்தர்வர்களும் சித்தர்களும் பாறைகளின் மீது வீற்று இருந்து எம்பெருமான் உடைய திவ்ய சரிதைகளை உரக்க பாடுகின்றார்கள் ..விடாய் தீர பெறுகிறீர் போலும்..
..நடந்த கால்கள் நொந்தவோ – பாசுரம் போல ஸ்ராந்தி =ஆயாசம் சாந்திம்= போக / மிருகத்தின் பின் ஓடிய ஆயாசம்..பொழில் சூழ்ந்த இடம்/மரக் கூட்டங்கள் பல /கந்தர்வர்கள் சித்தர்கள் குழல் யாழ் இசைத்து புகழ் பாடும் விருப்பத்துடன் -கண்ட சைல = பெரிய பாறை மேல் /
105th ஸ்லோஹம்..
கூலேப்தே கில தஷினச்ய நிவாசன் தூரோத்ராம்பேதி கான்
தைதயா நேக பதத்ரினாச்சின இதயம் கிம் வதந்தி ச்ருதா ,
தத்ரைவேச்வரமம்பசாம் விஜயதாஸ் தஸ்மாத் வநாத்ரீச்வர
 ஸ்ரீமன் சுந்தர சேது பந்தனமுகா க்ரீடாஸ் தவாடம்பரம்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்கதி -விபீஷண வாக்கியம் ..கடல் அரசன் முகம் காட்டாது ஒழிய அம்பு தொடுத்த வாறே அஞ்சி நடுங்கி ஓடி வந்து –வட புறத்திலே தருமா குலாம் என்கிற தீவில் சத்ருக்கள் பாக்கள் பிரயோகித்து நொடி பொழுதிலே கொன்று ஒழித்தான் ..பெருமாளின் சத்ய காமத்வ சத்ய சங்கல்பத்வங்கள் வெளியாகின்றன ..இருந்தும் கடலில் ஆணை கட்டி ,இலங்கை சென்று ,பரி ச்ரமங்கள் பட்டு அஹஸ்தியரால் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்க பட்டு ராவண வதம் செய்தது எல்லாம் எதற்கு ?
..நடந்த கால்கள் நொந்தவோ – பாசுரம் போல ஸ்ராந்தி =ஆயாசம் சாந்திம்= போக / மிருகத்தின் பின் ஓடிய ஆயாசம்..பொழில் சூழ்ந்த இடம்/மரக் கூட்டங்கள் பல /கந்தர்வர்கள் சித்தர்கள் குழல் யாழ் இசைத்து புகழ் பாடும் விருப்பத்துடன் -கண்ட சைல = பெரிய பாறை மேல் / எதி வா ராவண ஸ்வயம் -அவன் வரணும் என்று காரியம் பண்ணினான் ..சேது பந்தனம் போன்ற விளையாட்டுகளை நடத்த பண்ணினான்/அம்பசாம் ஈஸ்வரன் =கடல் அரசன் /ஆடம்பரத்துக்கு பண்ணினாய் ..த்ரி லோக்யம் பூஜிக்க பரம பவித்ரம் சேது பந்தனம் பிராட்டி இடம் பெருமாள் காட்டி அருளியது /
106th ஸ்லோஹம்..
ரகு குல திலக ! தவம் ஜாதுசித் யாதுதான 
ச்சலம்ருக ம்ருகயாயாம் சம்ப்ரசக்த:புராபூ:
ததுபஜநித கேதச்செதநாயாத்ய காயன் –
மதுகரதறு ஷண்டம் ரஜ்யசே கிம் வநாத்ரிம் ? 
ராஷச வேட்டை ஆடின ஆயாசம் தீரவோ /
யாது தானார் -அரக்கர்கள் கேதம்-துன்பம் வருத்தம்..
காயன் – மதுகரதறு ஷண்டம் ரஜ்யசே கிம் வநாத்ரிம் ? பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மது பருக–பெரி ஆழ்வார் அருளி செய்த படியே வண்டினம் முரலும் சோலைகளை உடைய இத் திரு மலையிலே இப்போது உகந்து வர்திகிக்கிரீர் போலும்
 /பத்து கால் பூச்சி -ராவணன்/சலம் மிருகம்-கபட மிருகங்கள்
அரசர்கள் மிருகங்களை கொள்ள வேட்டை ஆடுவது போல பெருமாளும் அரக்கர்கள் ஆகிற மிருகங்களை முடித்ததாக அருளி செய்த படி
..பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை..அனாயசேன அழித்தமை சொன்னதாயிற்று..
இந்த ச்லோஹத்தொடு ராம அவதாரத்தை தலைக் கட்டி அருளுகிறார்..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: