சுந்தர பாஹு ஸ்தவம் 93 to 98 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

93rd ஸ்லோஹம்..

ஸ்வப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி ப்ரமண கரணை:கிஞ்ச பணின:

விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வயதி விதுததுக்தாப்தி சலிதை:

அவிஷ்பந்தோ நந்தன் விகசதர விந்தேஷன ருசி:
புராபூஸ் சிம்ஹாத்ரே;ப்ரியதம ஹரே ! கச்சப வபு:
சிம்ஹாத்ரே;ப்ரியதம ஹரே ! –வாரீர் திரு மால் இரும் சோலை மலைக்கு அன்பரான அழகரே
புரா—பண்டுஒரு காலத்தில்  
ஸ்வப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி ப்ரமண கரணை:–தன உடைய முதுகின் மீது முந்துற முன்னம் வந்து நின்ற மந்தர மலையை சுழற்றியதனாலும் –ஸ்ரேஷ்டம் என்று பொருளில்  ப்ரஷ்டாத்ரி என்று மந்தர மலையை அருளி
கிஞ்ச பணின:  விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வயதி விதுத துக்தாப்தி சலிதை:— மந்தர மலையை மத்தாக நாட்டி சுழற்றின அளவு அன்றிக்கே வாசுகி நாகத்தை-பணின:- கடை கயிறாக பூட்டி இடம் வலம் கொள்ள இழுப்பதனாலே அசைதல் உற்ற திரு பாற் கடலின் அசைவினாலும்
அவிஷ்பந்தோ-தான் சிறிதும் அசைதல் அற்று  
நந்தன் -ஆஸ்ரிதர்கலான தேவர்களின் காரியம் தலைக் கட்ட பெறுகிறது என்று திரு உள்ளம் உகந்து
விகச தர விந்தேஷன  ருசி:-அப்போது அலர்ந்த செந்தாமரை திரு கண் அழகை உடைய.
கச்சப வபு:–ஆமை வடிவை உடையவர் ஆனீர்
..தம் உடலை பேணாமல் பிரண தஜன மனோரத பரி பூரணத்தையே விரதமாக கொண்டவர் என்கிற குண அதிசயம் அனுசந்திக்க பட்டது…
அநந்த பல சக்தையே-கூர்ம ஸ்லோகம்..சவே மகிமையில் பிரதிஷ்டை –அவரை தாங்க வேற  வேண்டாம் .. பூர்வமே இகம் ஆசீம் — முன்பே இங்கு இருந்தார்..அதனால் பரா -பண்டு/வென்றி தரும் பத்தும் மேவி கர்ப்பார்க்கே  ஆழி எழ -சக்தி பல அவதாரங்கள் சொல்லும் பதிகம் இது /அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே -பாசுரம்/ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-கடலில் சேராமல் எதிர்த்து போகும்/அர வூரு சொலாய் மலை தேய்க்கும் ஒலி -வாசுகி மலையுடன் தேய்க்கும்  ஒலி /சாறு -அமுதம் என்னாமல்/கடல் மாறு சுழன்று அழைக்கும் ஒலி /பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசனே –பிரசச்த கேச பாசம் ஆமைக்கு /கேசவனின் கேசம் !..பெருமைகளில் ஒன்றும் குறையாமல் பிறக்கிறான்/ கேசவத்வம் குறையாது/..இந்திரியங்களை  அடக்க ஆமை உள் இழுத்து கொள்வது போல -கீதை/ஸ்ரியா-லஷ்மி உடன் கூர்ம சேவை என்கிறார்..சோதி ஆர் அமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்  விலங்கல் தெரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகன் ….அரவு ஓன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் வெள்ளை வெள்ளம் முழுதும் குழுமப இமையோர் நின்று கடைய பரு வரை முதுகில் நின்று சுழல கிடந்தது துயிலும்  அடல் ஆமையான அவனே சரண் ..அலையாமல் கடைந்த அம்மான்..
94th ஸ்லோஹம்..
ஜகத் ப்ரலீனம் புனருத்தி தீர்ஷத;
சிம்ஹா ஷிதிஷின் நிலயச்த சுந்தர ,
புரா வராஹச்ய தவேய முர்வரா 
தம்ஷ்ட்ராஹ் வயேந்தோ:கில லஷ்ம லஷிதா . ..
கோல வராஹா திரு மேனியின் பெருமை —
சிலம்பின் இடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கண கணப்ப திருவாகாரம் குலுங்க நிலா மடந்தை தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் என்றும்
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பரும்பருல கேளிநோடும் உடனே மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை ஆறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு பால் ஒடுங்க வளர் சேர் ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி அது என்றும்
 சிம்ஹா ஷிதிஷின் நிலயச்த சுந்தர -சிம்காத்ரியான திரு மால் இரும் சோலை மலையிலே எழுந்து அருளி நின்ற அழகரே ஷிதிஷித் -பர்வதம்
புரா ப்ரலீனம்  ஜகத்  புனருத்தி தீர்ஷத வராஹச்ய தவேய-பண்டு ஒரு கால் பிரளய ஆர்னவ மக்னமான ஜகத்தை புனருத்தாரம் செய்ய நினைத்து அருளின வராஹா ரூபியான தேவரீர் உடைய
தம்ஷ்ட்ராஹ் வயேந்தோ—கோரப் பற்கள் என்னும் சந்திரனுக்கு–  நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப —
தவேய முர்வரா கில  லஷிதா லஷ்ம–சஹ்யங்கள் நிறைந்த இந்த பூமியானது ஒரு களங்கம் ஆஹா அன்றோ காணப் பட்டது ..பூ மண்டலம் முழுவதுமே கோரப் பல்லிலே ஏக தேசமாக காண பட்டது -இதனால் வராஹா மூர்த்தியின் வைபுல்யம் அளவிட முடியாது என்கிறார்..பெரும் கேழலார்/மகா வராஹா–மக்கள் பக்தியில் வளர ஆசை பட்டாள் பூமி பிராட்டி தானே வலிய புகுந்தாள்….லஷ்ம -அங்கம் முயல் போன்ற களங்கம்..யான் அறிந்த நல்லவர் ஜஜான பிரான்..சரம ஸ்லோஹம்..முதல்/ பாசி தூர்த்த -பேசி இருப்பனவள் /பேச்சு இது தான்..மாசு உடம்பின் அபிமானம் இல்லா உருவம் –பன்றிகளும் உடன் கூடி விளையாடும் மெய்ப்பாடு உப மானம் இல்லா உரு/தேசு உடை தேவர்..தேசுசு உடை தேவர் எங்கள் ஆழ்வான் விஷ்ணு சிதீயன் விஷ்ணு புராண வியாக்யானம் .ஜகத் பதே -பொய்க்கு பதி இல்லை -சமானமாக வேறு ஒருவர் இல்லை..மாதிரம் -திக்குகள்  மண் சுமந்த  வட மேரு தலைமை பீடம் ஏழு கடலும் பாதம் சேர –ஏக தேசமாக எல்லாம் ஒடுங்க ஆதி முன் ஏனமாகி – அரண் ஆய மூர்த்தி..அற்புத திரு மேனி..லகு -வாயினால் பாடி மனசினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழும் உபாயம்..சூகரம் அருளிய சுகர உபாயம்..எளிய உபாயம்..யக்ஜா வராக பெருமாள் பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியில் வைத்தாய் -ஆஸ்ரித ரட்ஷனத்தில் உள்ள பாரிப்பு–கிடந்தது  இடந்து அளந்து உமிழ்ந்து பலவும் பூமி பிராட்டிக்கு  மகா லஷ்மியை -பிரதம பரிகரம்  மார்பில் வைத்து -இவளோ அபிமத தாயார்.. மலை/மண்/ கடல் நீர் நிலை அசையாமல் கொண்டான்  ..
95th ஸ்லோஹம்.
.நாவாயு:பச்பந்தே யயது ரதவாச்தம் சசரவீ
திசோ நச்யன் விச்வாப்ய சலதசலா சாசலகுலா .
நபச் ச பிரச்ச்யோதி க்வதிதமபி பாதோ நரஹரவ்
 த்வயி ச்தம்பே சும்பத்வ புஷி சதி ஹே சுந்தர புஜ!
தூணில் தோன்றிய பொது உண்டான சம்பவம் அருளுகிறார்..
அங்கண் மா ஜ்ஜாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய்–காற்று அசைய வில்லை சந்திர சூர்யர்கள் உதிக்க வில்லை திசைகள் தென் பட வில்லை  பர்வத சமூகங்களோடு கூடிய சமஸ்த பூ மண்டலமும் ஆடி அசைந்தது ஆகாசமும் விகாரப் பட்டது கடல் நீரும் கொதிப்பு அடைந்தது..
தேவரீர் நரசிங்க உருவினராய் கொண்டு ஹிரண் யாசுர  கருக ஸ்தம்பத்தில் பிரகாசித்த வடிவை உடையவரான அளவில்..
த்வயி நரஹரவ்ச்தம்பே சும்பத்வ புஷி சதி–தேவரீர் உடைய திவ்ய ஆக்ஜைக்கு கட்டுப் பட்டு..
நாவாயு:பச்பந்தே–சதா கதியாய் இருக்க கடவனான வாயுவும் கூட அசைந்திலன்..
நபச்ச பிரச்ச்யோதி–ஆகாசமும் சரிந்து  கடலில் ஆழ்ந்தது–அபூத வுவமை..எங்கும் ஆகாசம் உள்ளது..
க்வதிதமபி பாதோ–கடல் நீரும் கொதிப்பு அடைந்தது  
நதிகளும் வெப்பம் அடைந்தது சீதையை பிரிந்த ராமன் குளிக்கும் பொழுது..
சிங்க வேள் குன்றம் பாசுரம் -அல்லி மாதர் புல்க நின்ற –ஆயிரம் தோளன்..
அந்தியம் போதில் அரி  உருவாகி-தூண் அசேதனம் -தாய் -வருத்தம் பட்டு-பல்லாண்டு பாடுகிறார் குழந்தை என்பதால்  ..ஸ்தம்பம் -ஸ்திரீ லிங்கம் வேண்டும் என்று  தூணா தேசிகன்..வீர ராகவர் பாகவத வியாக்யானம் ..பிரகலாதன் அவதாரம் -மத்வர் -துவைதம் பூர்வ பாஷம் விவரணம் அதிகம் இல்லை ராமானுஜர் அவதாரம் அடுத்து  வந்ததால்-எல்லார் வாக்யமும் சத்யம் ஆக்கினார் /அழகியான் தானே அரி உருவம் தானே..பிளைந்து வளைந்த உகிறானே..
96th ஸ்லோஹம்..
அராலம் பாதாலம் த்ரிதச நிலய:ப்ராபிதலய:
தரித்ரீ நிர்த்தூதா யயுரபி திச:காமபி திசம் ,
அஜ்ரும் பிஷ்டாம் போதி:குமுகுமுதி கூர்ணன் சுரரிபோ;
விபிந்தானே வஷஸ் த்வயி நரஹரவ் சுந்தர புஜ !
இரணியன் உடலை பிளந்த போது உண்டான சம்பவம்  சொல்லுகிறது..
பாதாலம் அராலம்–பாதாள் லோகமானது தலை தடு மாறாயிற்று.
த்ரிதச நிலய ப்ராபிதலையா–தேவர்களின் குடி இருப்பான சவரக லோகமும் லயம் அடைந்ததாய் ஆயிற்று ..ஸ்வர்கம் இருக்கும் இடமே தெரிய வில்லை
தரித்ரீ நிர்த்தூதா–பூமி மிகவும் நடுக்கம் அடைந்தது
யயுரபி திச:காமபி திசம்–திக்குகளும் ஏதோ ஒரு திக்கை அடைந்தன -திசைகளும் மறைந்தன–தெற்கு வடக்கு மாறலாம் தென் திரு வரங்கத்தாய் வேங்கடத்தான் அடியில் அமர்ந்து நம் ஆழ்வார் அருளியதால்..
அஜ்ரும் பிஷ்டாம் போதி:குமுகுமுதி கூர்ணன்–கடலும் குமு குமு என்கிற ஓசையோடு சுழன்று கொந்தளித்தது.
.அளந்திட்ட தூணை அவன் தட்ட -அவனே அளந்து வைத்த தூணை அவனே தட்டினான் ..ஆங்கே -அதிலே வளர்ந்தான்..எல்லா தூணிலும் இருந்தான்.. மற்ற தூணிலும் சேவிக்கலாம் தேசிகன்..உளம் தொட்டு -தேடி பார்கிறான் எங்காவது இருக்கிறதா என்று..
97th ஸ்லோஹம்..
நக கரக சக பிரதிக்ரதி ததைத்ய வஷச்ஸ்தஅலீ-
சமுத் தருதிரஸ் சடாஸ் சுரிதபி பிம்பிதம் ஸ்வம் வபு:
விலோக்ய ருஷித: புன: பிரதிம்ருகேந்திர  சன்காவசாத்
 ய ஏஷ நரகேசரீ ச இஹா த்ருச்யதே சுந்தர:
பிரகலாத ஆழ்வானுக்கு துரோகங்கள் செய்ததனால் வந்த சீற்றம் முன்பு சொல்லி இதில் மற்று ஒரு சீற்றம் உண்டானதை அருளுகிறார்..
தன்னை பார்த்தே கோபம்.. பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஒரு கடுவன் என பேர்ந்து–பேய் ஆழ்வார் பாசுரம்-அது போல பிம்பிதம் -மிருகங்கள் நீரிலே பிரதி பிம்பம் கண்டு சீறுவது ஓன்று உண்டு அது தன்னை சொல்லுகிறார்–அத்வீதியம் என்று இருக்கும் போது/ 
நக கரக சக பிரதிக்ரதி ததைத்ய வஷச்ஸ்தஅலீ-சமுத் தருதிரஸ் சடாஸ் சுரிதபி பிம்பிதம் ஸ்வம் வபு–திரு நகங்களான ரம்பத்தின் நுனியால் கிழித்த மார்பின்  /பீரிட்டு கிளம்பிய ரத்தத்தின் பெருக்கில் தோன்றிய பிம்பிதம்–பிரதி பிம்ப ரூப மான தம் உடைய திரு மேனியை தாமே பார்த்து
ருஷித: புன: பிரதிம்ருகேந்திர  சன்காவசாத்–தமக்கு எதிராக தோன்றிய மற்று ஒரு சிங்கமோ இது என்கிற சந்கையினால் முன்னிலும் அதிகமாக சீற்றம் உற்றனரோ 
ஏஷ நரகேசரீ ச இஹா த்ருச்யதே சுந்தர:—அவர் தாமே இத் திரு மலையில் அழகராக சேவை சாதிகின்றார் என்று ஐக்கியம் அனுசந்திதார்..
சிம்ஹ ஜாதியின் மெய்ப்பாடு சொல்லிற்று 
ஒரே நாமம் =ஆயிர நாமம் போல் ஆங்கு அதற்க்கு பொருப்பிலன் ஆகி கண்டா கர்ணன் போல /ஹிரண்ய கசிபு பட்டணம் ஆழ்வார் போனாலும் குட்டி சுவர் பக்கம் முக்காடு போட்டுண்டு இருக்க செல்வ நாரணன் பெயர் கேட்டார் /மல்கும் கண்பனி..தெள்ளிய சிங்கமா தெளி  இல்லாத சிங்கமா-சிநேகத்தில் காட்டுவதில் தெளிவு பாசம் கண்ணை மறைத்தது  ..ஜானி பிரியத்தில் நூற்றில் ஒரு பங்கு கொடுக்க முடிய வில்லை கீதை நின் கண் அன்பு மாறாமை வேண்டும்.. உன் இடத்தில் வரம் கேட்க்காத வரம் வேணும் ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைவது நாமா? வேய் மறு தோள் இணை மெலியுமாலோ உன் தோள் மெலிகிறது -ஆழ்வார்.
ஆழ்வார் –வானம் சூரியன் பொன் வயிறோன் கோப அக்னி ரத்தம் எல்லாம் சிகப்பு
தலை அவிழ் கோதை  மாலை –விடுதி புஷ்பம் கோதை-இருபால்  தயங்க  /மாலை நெருக்கி தொடுக்க பட்ட மாலை/எரி கான் இரு தடம் கண் அரியாக அன்று பரியோன் சினங்கள் அவிழ -கொழுக்க வைத்தார்கள் இவனை -பரியனாகி என்றார் திரு பாண் ஆழ்வாரும்..சாகா வரம் கொடுத்து கொழுக்க வைத்து இருக்கிறார்கள்..சினம் =செருக்கு வளை உகிர –மறவோன் அகம் மதியாது -ஒரு உகிரால் பிள எழ விட்ட -வையம் மூடு பெரு நீரில் மும்மா பெரிதே..பிம்பம் பார்த்து கோபம் பீரிட்டு எழுந்தது .. அவனும் திரு மாலைகள் சாத்தி கொண்டு வந்ததை கலியன் அருளுகிறார்..
98th ஸ்லோஹம்.
ஷிதிரியம் ஜனிசம்ஹ்ருதிபாலனை:
நிகிரனோத்கிரநோத்தரனைரபி,
 வநகிரீச! தவைவ சதீ கதம்
 வரத! வாமன!பிஷணமர்ஹதி
வாமன அவதாரத்தில் ஈடு பட்டு பேசுகிற ஸ்லோஹம்.
.பெரிய திரு அந்தாதி -சீரால் பிறந்து சிறப்பால் வளராது ,பேர் வாமனாகாக்கால் பேராளா !மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீரேற் பரிதே, சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து–இதை தழுவிய ஸ்லோஹம் இது..
திரு மால் இரும் சோலைக்கு தலைவனான வரம் தரும் வாமன மூர்த்தியே !இப் பூ மண்டலம் முழுவதும் படைத்தல்,துடைத்தல்,காத்தல்,உண்டு,உமிழ்தல்,இடந்து எடுத்தல் முதலான செயல்களினால் சர்வாத்மனா உனக்கே அன்றோ வச்யமாய் நின்றது ..இதனை ஒரு பையல் பிஷுவாய்ச் சென்று யாசித்து பெற்றது என் கொல் ? என்று கேட்கிறார்..
சதுர் முக முநேக ஸ்ருஷ்டித்தும் ஸ்வேன ரூபேண ரசித்தும் பொறுக்கிற பிரகாரங்களாலே உனக்கே ஸ்வம்மான இந்த தரை லோக்யத்தை ஒரு பையல் தன்னதாக அபிமானித்து இருந்தான் ஆகில் அவனை நேர் கொடு நேரே தண்டித்து வாங்கலாமாய் இருக்க அது செய்யாதே யாசகனாய் சென்று பல் பன்னிரண்டும் காட்டி இறந்து தானோ பெற வேணும் ?
பெறுவதற்கு வேறு உபாயம் அறிந்திலையோ ?வரத ! வரம் தரும் பெருமாள் என்று விருது வகித்து அலம் புரிந்த நெடும் தடக் கையனே இருந்து வைத்து ,பிஷுகனாய் ஆகலாமோ ?
மகாபலியான வன் ஒவ்தார்யம் என்று ஒரு தர்ம உபாசத்தை என்று கொண்டு இருந்தான் –அதற்க்கு தக்கவாறு யாசக வேஷம் கொண்டு காரியம் பார்த்தான்..
பிறப்பில் பல் பிறவி பெருமான் போல வரத வாமன – செராததை சேர்த்து பிரார்த்திக்கிறார்..நிக்கினம் =உண்பது உமிழ்வது உதரணம்-இடந்து /மூன்றும் உன் வசம் /ஸ்ருஷ்ட்டி ரஷனம் அழித்தல் உன் வசம் -எல்லாம் உன்னது  என்ற பொது எப்படி பிச்சை எடுத்தாய் /ஆழ்வார் மடி பிடித்து கேட்கிறார் உதங்கர் போல மாறு உளதோ இம் மண்ணின் மிசையே மாறனில் மிக்கு ஓர்  தேவும் உளதே -தெய்வம் உண்டோ..மால்+ தனில் =மாறனில் பிரித்து அவனையும் ஆழ்வாரையும்..பெற்றோர்கள் இகழ பிறந்தாய் /ஆல மர வித்தின் அரும் குரள் ஆனான் —
ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில் -தைத்யவ்தார்யேந்திர யாச்ஜாவிஹதிமபநயன் -என்கிற ச்லோஹத்தில் இதை கண்டு கொள்வது..
வஜ்ர பாணி –ரேகைகளுடன் அவதரித்தான் -உபேந்த்ரன்-சீரால் பிறக்க வில்லை வளர்ந்ததும் -சிறப்பால் வளராது..பேராளன் பெயர் வாமன ஆகாக்கால் –வாமம் =சுகம் திரு மேனி செவிகிரவர்களுக்கு சுகம் தருபவன் வாமனன்..மார்பார புல்கி -அணைத்து கொண்டாயே .ஆழ்வார் கேட்டார் ..ஆஸ்ரிதர்  வாட்சல்யதால் செய்த காரியம்…தர்ம ஆபாசம் பொய் தோற்றம் கொண்டவன் மகா பலி..சரவண நட்ஷத்ரத்தில் அவதாரம். துவாதசி விஜயா முகூர்த்ததில்.கோட்டம் கை வாமன னாய் செய்த கூத்துகள் ..சந்தியா தேவதை–இவ் உலகும் அவ உலகும் சேர்த்து வைக்கும் நாராயணன் சேவிக்கும். அசவ் ஆதித்ய பிரம்மா.. மான் தோல் பூமி தேவி கொடுக்க /பிரம்மா கமண்டலம் தர /குபேரன் யச்சதலைவன் பிச்சை எடுக்க பாத்ரம் கொடுக்க/நர்மத நதி கரையில் அஸ்வ மேத யாகம் பண்ணிய மகா பலி இடம் பூணல் போட்ட அன்றே பிச்சைக்கு வந்தார்..மாணி குறளனே தாலேலோ ..கொள்வன் நான் -மாவலி- மூவடி-மூன்றே வார்த்தை – ஸ்தோத்ரம் பண்ண தெரியாமல்—என்று மண் கொண்ட எந்தாய் .. பசு செல்வம் பெண்ண பல சொல்ல வேண்டாம் என்றான் – பெண்ணை பிரார்த்திக்கும் அவதாரம்  இது இல்லை ..முழு நீர் வையம் உண்ட -மாணியாய் நிலம் கீண்ட மாயன்..காமரு  சீர் அவுணன் -கொண்டாடுகிறார் அவனாசி சேவித்த பாக்கியம் -சுக்கிர கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்/ சிலிர்த்து வளர்ந்தான்/ அண்டம் மீது போகி /உலகு எல்லாம்  தளவி கொண்ட எந்தாய் /உலகம் அளந்த பொன் அடி/ கங்கை தீர்த்தம் விழும் போது கமண்டல தீர்த்தமும் விழ /மூன்று பத்திலும் பாடினால் ஆண்டாள்..சுருக்குவாரை இன்று சுருகினாய் / மண் அளந்த தாளாளா..பாலகன் என்று பரிபவம் செய்யேல் சிறுமையின் வலியை மா பலி இடம்கேள்..தாடாளன் இடது திரு கை நீட்டி..பொற்கையில் நீர் ஏற்று நாடகம் /வேதத்துக்கு விஷயம் ஆக்கினாய்/வரதனாகி இருந்து வாமனன் ஆகணுமா ?.
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: