சுந்தர பாஹு ஸ்தவம் 87 to 92 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

87th ஸ்லோஹம்..
ஸ்ரீமன் மகா வனகிரீச ! விதீசயோஸ் தே
மத்யே து விஷ்ணுரிதி ய:பிரதமாவதார:
தேநைவ சேத் தவ மகிம்னி ஜநா: கிலாந்தா;
த்வன்மத்யச்ய பாவ மவகம்ய கதம் பவேயு;
ஸ்ரீமன் சப்தம் மலைக்கும் அழகருக்கும் சேரும்
.
விதீசயோஸ்   மத்யே து விஷ்ணுரிதி தேய:பிரதமாவதார:–பிரமன் சிவன் என்னும் இவர்களின் இடையே தேவரீர் விஷ்ணு என்று முதன் முதலாக திரு அவதாரம் செய்தது யாது ஓன்று உண்டு
தேநைவ  தவ மகிம்னி ஜநா: அந்தாஸ் சேத்–அது கொண்டே ஜனங்கள் தேவரீர் உடைய பெருமையில் குருடர்களாக ஆவர்களானால்– தேவரீர் உடைய மகிமையை உள்ளபடி உணராதே விபரீதமாக கொள்வார்கள் ஆகில் என்ற படி..த்வன்மத்யச்ய பாவ மவகம்ய கதம் பவேயு; ?–தேவரீர் மத்ஸ்ய அவதாரம் செய்து அருளின படியை அறிந்து என் ஆவார்களோ ?.
 தேவ யோனியில் அவதரித்தே பிரமித்து இருப்பார்கள்  இப்படி நீச யோனிகளில் ஜனித்து இருந்தால் கேட்கணுமோ ப்ரஹ்மேச மத்திய கண நா -அதி மானுஷ் ஸ்தவம்..
மத்யே விரிஞ்ச-பிரம்மா  கிரிசம்-சிவன்  பிரதம அவதார பட்டர்/அணைவது அரவு அணை மேல்  பூம் பாவை ஆகும் புணர்வது இணைவனாம் எப் பொருள்க்கும் -படுக்கை பத்னி பிள்ளைகள் உண்டு / இருவர் அவரும் முதலும்  தானே- காரணம் அவனே–இணைவனாம் -நடுவில் இணைந்து இருக்கிறான்..
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ..ஒன்றே முதலாகும் மூன்றுக்கும்என்பர்..ஹிரண்ய கர்பர்- ..கோவிந்தன்-மாடுகளின் பின் போவான் அவனை தெரியாதவர் நாராயணன் வைபவம் தெரியுமா தாமோதரன் தரம் அறிவாரோ ..மீனாக  அவதரித்ததும் உன் பரத்வம் தெரியாதவர் .ஜகத்துக்கு ஆதி ஜ -விஷ்ணுவின் திரு நாமம்..ஏற் ஆளும்  இறையோனும் திசை மகனும் திரு முகளும் கூறாளும் தனி உடம்பன்–இவர்களுக்கும் இடம் ..அவள் கூட -என்ன சவ்சீல்யம்..ரஷிப்பத்தின் பொருட்டு விஷ்ணு அவதாரம்..ஈர கையால் தடவி ரட்ஷிப்பதை தான் வைத்து கொண்டான் ..விஷ்ணுவாக பிறந்ததை புரியாதவன் மனுஷ்ய மத்ஸ்ய சரீரம் எடுத்து கொண்டு இருப்பதை புரிந்து கொள்வார்களோ ?..நல அரன் நாரணன்  நான் முகனுக்கு ..நல விசெஷனம் அரனுக்கு.. சரீரம் முடிப்பதால்/ நல்லவன் /ராமன் இடம் நல்ல எண்ணத்துடன் பேசினார் /ஷட் அர்த்த நயனன் ஸ்ரீமான் என்கிறார் சிவனை வால்மீகி/விஷ்ணு பக்தரில் முதல்வன் சம்பு/அதனால் நல அரன் ..அரன் அதிகன் அரி அதிகன்/அரியும் சிவனும் ஓன்று -இல்லாதவர் வாயில் மண் போல /என்று பேசும் அறிவிலிகள்/உலகளந்த அரி அதிகன் சேர்த்து சொல்கிறார் கம்பர்..சந்தேகம் இன்றி தெரிய நிசய புத்தி தெரிய //நின் அகத்தின் அன்றே தாமரையின் பூ/
88th ஸ்லோஹம்..
ஹே தேவ ! சுந்தர புஜ ! த்வமிஹாண்ட மத்யே
சவ்லப்யதோ விசத்ருசம் சரிதம் மஹிம் ந:
அங்கீகரோஷி யதி தத்ர சுரை ரமீபி:
ஸாம்யான் நிகர்சா பரி பாலநமேவ ஸாது . 
பிராம ருத்ராதிகளோடு சமமாக பிரதி பத்தி பண்ணும் அதில் காட்டிலும் நிகர்சா பிரதிபத்தி பண்ணுவதே நலம் என்று அருளி செய்கிறார் இதில் ..புருஷோத்தமனை ஷூத்ரர்களோடு சமமாக நினைப்பதும் குறைய நினைப்பதுவும் துல்யமே எனபது கருத்து..
ஹே சுந்தர புஜ ! தேவ !த்வம்  சவ்லப்யதோமிஹாண்ட மத்யே–வாரீர் சுந்தர தோள் உடைய பெருமாளே ! தேவரீர் சவ்லப்ய குணத்தினால் இவ் அண்ட மத்யத்திலே திரு அவதரித்து
மஹிம் ந: விசத்ருசம் சரிதம் அங்கீகரோஷி யதி –தேவரீர் உடைய பரத்வதிற்கு எதிர் தட்டாய் இருக்கிற நிலைமையை ஏற்று கொள்ளும் அளவில்
தத்ர-அந் நிலை தன்னிலே
 அமீபி:சுரை–இந்த தேவர்களாலே
ஸாம்யான் நிகர்சா பரி பாலநமேவ ஸாது . –சாம்ய பிரதி பத்தி கொள்ளும் அதில் காட்டிலும் அபகர்சா பிரதி பத்தி கொள்ளும் அதே நன்றாகும்..இரண்டும் அவிவேக கருத்தியம்–இப்படி சாம்யத்தை பிரமிப்பதற்கு உறுப்பான விஷ்ணு அவதாரம் செய்வது விட மத்ஸ்ய கூர்மாதி சஜாதீயமான அவதாரம் செய்வது மேல்..
ஒத்தாரை மிக்காரும் இல்லை /என்னை காட்டிலும் வேறு பட்டதில் -உயர்ந்தது இல்லை கீதை /அவனுக்கு அவனே சமம்..சாம்யம் சொல்வது விட தாழ்வு சொல்வதே மேல்/ தங்கம் அடித்தாலும் உருக்கினாலும் கவலை படாமல் குந்துமனிக்கு சமம் என்றால் வருந்தும்/ மிகுனர்  இலன் /பிரமன் ருத்ரன் கூடவும் இந்திரன் தம்பியாக அவதாரம் விட மனுஷ்ய மத்ஸ்ய அவதாரமே மேல்..தனக்கே தன தன்மை அறியாதவன் அவன் –
சாம்யமும் உயர்ந்தவரும் இல்லை என்ற தாரித்ரம் இவனுக்கு உண்டு..
89th ஸ்லோஹம்..
இஹாவதீர்ணச்ய வநாத்ரிநாத !
தே நிகூஹத:ஸவம் மஹிமானமைச்வரம்,
உமாபதே;கிம் விஜய;ப்ரியங்கர:
ப்ரியங்கரா வேந்த்ரஜிதச்த்ரபந்தநா..
தன பெருமையை தானே மறைத்து காட்ட  அவன் சரித்திரங்களை கொண்டே எம்பெருமானையே ஒரு கேள்வி கேட்பதாக அருளி செய்கிறார் இதில்….
மைச்வரம் ஸவம்  மஹிமான நிகூஹத:இஹாவதீர்ணச்ய தே–சர்வேச்வரத்வ நிபந்தனமாய் சவ சித்தமான பெருமையை மறைத்து கொண்டு இந்த லீலா விபூதியில் அவதாரங்களை செய்து அருளா நின்ற தேவரீருக்கு..
உமாபதே; விஜய;ப்ரியங்கர:கிம்? இந்த்ரஜிதச்த்ரபந்தநா ப்ரியங்கராவா ?.
—உமா பதியான சிவனை தோற பித்து -பாணாசுர யுத்த வ்ருத்தாந்தம் என்பதை விட உமா பதியான சிவன் வெற்றி பெரும் படி செய்தது -எம்பெருமான் சிவ பிரான் இடத்தில் புத்திர வரம் கேட்பது -விஜயம் சொல்லுக்கு  கர்த்தா கர்மம் என்று கொண்டு–கள்வா! எம்மையும்   ஏழ உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா! என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள் ஊர்தி கழல் பணிந்து யேத்துவரே-திருவாய் மொழி( 2-2-10 ) -ருக்மிணி பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேணும் என்று தாத்தா பேரன் இடம் கேட்ட விருத்தாந்தம் -இந்த செயல் திரு உள்ளத்துக்கு உகப்பானதா ? அல்லது இந்தரஜித்தின் மாய அஸ்த்ரத்தாலே கட்டு உண்டு கிடந்தது திரு உள்ளத்துக்கு உகப்பானதா / அஸ்த்ர பந்தனம் –பரத்வம் இல்லை என்று தெரிந்த சரித்ரம்/
சங்கிக்கும் படி இருக்கும் உண்மை கதைகளை சொல்லி /அவர்கள் வேண்டி கொண்ட படி நடந்து கொண்டான்/ தாமரை கண்கள் கொண்டு அர்ச்சிதான்-போய் கதை தாள் சடை நீண் முடி/ ஏலாத கதை/ சரபம் கதையும் இது போல/நரசிம்ஹர் கோபம் தணிக்க வந்த தேவதை என்பர் ராகு கால பூஜை எத்தை தின்னால் பித்தம் போகும் போல இந்த  கதைகள் /இடை செருகல் இவை..சரபம் விட்டில் பூச்சி போல போனது/ பிரயங்கிரா தேவதை புதுசு/சமஸ்க்ருதம் மூல புஸ்தகம் தெரியாமல் கதை கட்டி விட்டு இருக்கிறார்கள்..ஏமாற்ற / வைபவம் மறைத்து கொண்டு இருக்கும் இரண்டு சரித்ரத்தில் எதில் உமக்கு உகப்பு என்று கேட்கிறார்../ஏறிட்டு கொண்ட ச்வாதந்த்ரதால் -சரித்ரங்கள்..காளி தாசன் ராஜாவை அந்த புரத்தில் உதைத்த காலுக்கு சலங்கை போடணும் என்று அருளினாரே ..ராஜா ச்வாதந்த்ர்யம் குழந்தை காலை கொண்டு உதய் பட்டது போல..வளர்த்ததனால்பயன் பெற்றேன் வருக என்று கை கூப்பி வணங்கும் ..அடங்கிய சரக்கு என்று கிளி விட்டதாம் .. ராமானுஜர் போகும் பொழுது  பெரிய நம்பி தெண்டம் சமர்ப்பிக்க கண்டு கொள்ளாமல் போனது போல..தன ஆசை பட்ட படி விநியோகம் செய்வது அவர் இஷ்டம்./ஆளவந்தார் எழுந்து அருளினது போல இருந்தது சேவித்தேன் என்றார் பெரிய நம்பி/பிரபல வாக்கியம் கொண்டு துர் பல வாக்ய விரோதம் சொல்லணும்..

 .90th ஸ்லோஹம்

 புசசோத் புச்சந மூர்ச்ச நோத்ததிதுத வ்யாவர்த்தி தாவர்த்தவத்
சம்வர்த்தார்ணவ நீர பூர விலுடத் பாடீந திவ்யாக்ருதே:
சிம்ஹாத்ரீச !ந வைபவம் தவ கதம் ச்வாலஷ்ய  மாலஷ்யதே
பத்மா ஷச்ய ஜுகுஷதோபி விபவம் லஷ்மீ தர அதோ ஷாஜ !
புசசோத் புச்சன மூர்ச்ச நோத்த திதுத வ்யாவர்த்தி தாவர்த்தவத்
சம்வர்த்தார்ணவ நீர பூரவிலுடத் பாடீன திவ்யாக்ருதே:தவ–மீனாய் அவதரித்த போது,வாலை உயரத் தூக்குவது,குறுக்கே  பரப்புவது ,ஆகிய இசசெயல்களினால்,நடுக்கம் உற்றதாக செய்யப் பட்டதும் சுழற்சி உடையதாக செய்யப் பட்டதுமான ,பிரளய ஆர்ணவத்தின் நீர் வெள்ளத்தாலே புரளா நின்ற திவ்ய மத்ச்யாக்ருதியைக் கொண்ட தேவரீர் உடைய..
ச்வாலஷ்யம்   வைபவம்  கதம் ந லஷ்யதே –நன்கு காணக் கூடிய வைபவம் எங்கனே காண முடியாமல் போகும் ?
விபவம் ஜுகுஷதோபி பத்மா ஷச்ய தவ–தேவரீர் உடைய பெருமையை மறைத்து கொள்ள வேணும் என்று தேவரீர் விரும்பின போதிலும் -எனபது தாத் பரியம்..பத்மாஷச்ய -செந்தாமரைக் கண்ணரான தேவரீர் அவதாரத்தில் அக் கண்ணை மறைத்து கொள்ள முடியும் ஆகில் மற்று உள்ள பெருமைகளையும் மறைத்து கொள்ள முடியும் என்று காட்டின படி .. “பீஷ்ம துரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மது சூதான!கிம் அர்த்தம் …புக்தம் வ்ருஷல போஜநம்” –என்று அதிஷேபிக்க வந்த துரியோதந்னும் “கிம் அர்த்தம் புண்டரீகாஷ” -என்று பரவசமாக சொல்லும் படி ஆயிற்று..
அதோ ஷாஜ –யாரை பற்றினால் கீழே விழ முடியாதோ அவன் ../உள் பக்கம் நோக்கி திருப்பிய புலன்களால் அறிய படுபவன்….பாடின -பெரிய /விருடத் -புரண்டு/கொழும் கயல்—பிறந்த பொழுதே பெரிதான  –ஈசன் /நீர பூர -நீர் பெருக்கு/பிரளய ஆர்ணவம் நீர் /ஆவர்த்தனம் -நீர் சுழலை உருவாக்கி /வ்யாவர்த்தித -சுழற்றி விட்ட படியால் /புச்ச -வால்/பேர்ந்து உதறி -மாரி மலை முழஞ்சில் பாசுரம் -தண்டாகாரமாய் புண்டாகாராமாய் போல/தேவரீர் வாலை அசைத்தால் கடல் அசைகிறது மகா பிரபாவம் பெருமை தெரிகிறதே ../மறைக்க திரு உள்ளம் கொண்டு தாமரை கண்ணன் உடன் வந்தீரே ..யோகீந்தர்கள் தெரிந்து கொள்ளுகிறார்கள்..
91st ஸ்லோஹம்..
சாசலாவட தடாக தீர்க்கிகா ஜாஹ்நவீ ஜாலவிவர்த்தித: ஷயே ,
ஸ்ருங்கசங்கமித நைவ்ர் மநோரபூ;அக்ரதொண்டஜ வபுர் ஹி சுந்தர!
கருத மாலா நதி கரை /சத்யவ்ரதர் ராஜ ரிஷி ..நூறு யோஜனை நீளமும் தக்க பருமனும் கொண்ட  மீன் /ஓடம் வர கொம்பில் கட்டி -லஷம் யோஜனை நீளமும் பதினாயிரம் யோஜனை பருமனும் ஒற்றை கொம்பும் ஸ்வர்ண வர்ணமும் ,மநோஹர ரூபமும் வாய்ந்தவர்..பிரளய ஆபத்தில் இருந்து பிரஜைகளை காத்தும், வேதங்களை உபகரித்தோருளினதும் மத்ஸ்ய அவதார சரிதம் ..இது தன்னை இதிலும் அடுத்த ச்லோஹத்தாலும் அனுசந்திகிறார் 
அண்ட ஜவ புஸ சந்-மத்ஸ்ய திரு மேனியை உடை யாராய் கொண்டு  
அசலா =பூமி /அவடம் =பள்ளம் /தடாகம் =ஏறி தீர்க்கிகா =நடை வாவி /ஜாஹ்நவீ =கங்கை இவற்றின் தீர்த்ததினால் வளர செய்ய பட்டவராய் /பூமி யில்  விட்டு பள்ளத்தில் விட்டு பின்பு கடலில் விட்ட கதை /ஜாஹ்நவீ ஜலதி வர்த்தித என்ற பாடம் திரிந்து ஜலவிவர்த்தித  .ஆகி இருக்கும்..மனோ;அக்ரத:ஸ்ருங்க சங்கமித நைவ்:அபூ
 –சத்யா வரதரை மநுஎன்கிறார் அவர் முன் நிலையில் தன சிரசில் தோன்றிய கொம்பில் கட்டப் பட்ட படகை உடையீர் ஆனீர் என்ற படி..திராவிட தேசத்தில் நடந்த சரித்ரம்/கங்கை போன்ற பெருமை உடைய வைகை ஆறு-ஜான்வி-என்பதால் ….நெடு வெள்ளம் கொண்ட காலம் -பிரளயத்தில்..முது முன் நீர் –வயந்து உய்யக்  கொண்ட தண் தாமரை கண்ணன்..மத்ஸ்ய புராணத்தை உபதேசிக்கிறார் ராஜாவுக்கு /மாய மத்சம் சாரங்க பாணி என்று / மச்ய -கமல லோசனன்..குட்டிகளை பார்த்து பார்த்து ரசிக்கும் என்பதால்..சமுத்ரத்தில்தாமரை காடு வந்தால் போல தாமரை கண் பார்வை வீசி வேதம் தேட ..டோலி அலைகள் வீசி..முட்டையில் பிறந்த திரு மேனி-/மாத்ரு கர்பத்தில் ராமன் கிருஷ்ணன் அவதரித்து போல மெய்ப்பாட்டை குறைக்காமல்../அசல -பூமி அவட -பள்ளம் /குளத்தில்-தடாக / நதி கங்கை பள்ளத்தில் வளர்ந்தார் /ஜலதி சமுத்ரம்/அவட ஜல சப்தம் தனித்து கிடைக்காது..
92nd ஸ்லோஹம்..
பிரளயஜா நீரபூர பரிபூரிதஸ்வ நிலயாவாசன் நவதன
 பிரமாத அசரன்யபூத சரணார்த்தி நாகி  சரணம் பவன் ச்வக்ருபயா ,
சலதுத தீரிதாம்பு கலுஷீக்ரியாத்யா கமனச்வப்ருஷ்ட வித்ருதா
அசலகுல ஏஷமீந்த நுராத்ரா சுந்தரபுஜோ வநாத்ரி நிலய..
இந்த ஸ்லோஹமமும் மத்ஸ்ய அவதார வர்ணன் பரம்

பெரிய திரு மொழி11-4-1- பாசுரமும் இந்த ஸ்லோகமும் பொருள் ஒற்றுமை /வருத்த பங்கியும் ஒரே வகையில் /பாதம் தோறும் 23 எழுத்து கொண்டது இந்த ச்லோஹம்.. அந்த பாசுரமும் அடி தோறும் 23 எழுத்து கொண்டது .
.நிலையிடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடுமூட
 விமையோர் தலையிட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன
அரணாவன் அவன் என்னும்அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே ..
ச்வக்ருபயா—-தன உடைய இயற்க்கை இன் அருளாலே
பிரளயஜா நீரபூர பரிபூரித  ஸ்வநில  யாவாசன்ந வதன
 பிரமத்  அசரண்யபூத சரணார்த்தி நாகி  சரணம் பவன் –பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தினாலே நிரப்பப்பட்ட தம் தம் இருப்பிடங்களை -ஸ்வநில -உடையவர்களாய் ,அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவர்களாய்  தடுமாறினவர்களாய்- பிரமத் – நாதன் அற்றவர்களாய் ,புகல் இடம் விரும்புவர்களான தேவர்களுக்கு–நாகி– தஞ்சமாய் கொண்டு..
சலதுத தீரிதாம்பு கலுஷீக்ரியாத்யா கமன–அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச
கமனச்வப்ருஷ்ட வித்ருதா  சலகுல ஏஷ மீந்தநு–முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதன் உள்ளே சஞ்சரிப்பவரும் முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்ய அவதார பெருமாள்..

பிரசன்னா வதனம் உடையவர் ஆக்கினான் -பவன் -கிருபையால்/ மாசுச ஒரு சொல்லே போதும் மாற்ற..அண்டதக்கு அப்பால் இனிது விளையாடும் ஈசம் எந்தை..கலக்கமும் இல்லை இங்கே அழகரை சேவிக்கலாம்..
அத்ர சுந்தரபுஜோ வநாத்ரி நிலய;–இங்கு திரு மால் இரும் சோலை மலை உறையும் சுந்தரத் தோளராக காட்ஷி தருகின்றார்..
கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

One Response to “சுந்தர பாஹு ஸ்தவம் 87 to 92 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்”

 1. Vasudevan Says:

  AdiYen Ramanuja Dhasan.

  Swami thiruvadigaLile Swagigalukku pallaandu.

  AdiyEn have been thoroughly enjoying the posts in my gmail Inbox on a regular basis. Your blog is a treasure trove of sath vishayam, especially your research in 4000 Dhivya prabhandham.

  AdiyEn am one of the moderators of a google group and would like to invite Swamin to contribute your articles, through this blog to that group, as it would reach a whole lot of Baghavathas, who yearn for such knowledge, albeit in the cyberspace, especially seelamillaa siriya gyanaththan like AdiyEn.
  In this regard, adiyEn would like to know a little more about Dhevareer., dhevareer thirunaamam, dhevareer thiruvamsam, dhevareer’s Aacharyan thiruvamsam, and most importantly dhevareer’s email ID. If swamin consents to do so, then adiyEn request you to kindly send these to my email ID. adiyEn shall send an invite.

  Aazhvaar Yemperumaanaar Jeeyar ThiruvadigaLe Charanam

  AdiyEn Ramanuja Dhasan
  Vasudevan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: