சுந்தர பாஹு ஸ்தவம் 81 to 86 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

81st  ஸ்லோஹம்,,

லோகான் சதுர் தச த்தத் கில சுந்தரச்ய,
பங்க்தீ குநோத்தரித சப்த வ்ருதீத மண்டம்,
அண்டானி சாஸ்ய சு ச்த்ரும்சி பரச்சதானி
 க்ரீடா விதேரிஹா பரிச் சததாம கச்சன்
லீலா விபூதி யோகத்தை இதிலும் அடுத்த ஸ்லோஹத்திலும் அனுசந்த்திது அருளுகிறார்
சதுர்தச  லோகான் த்தத்  ,பங்க்தீ குநோத்தரித சப்த வ்ருதீத மண்டம்,–பத்தி நான்கு லோகங்களையும் தன உள்ளே அடக்கி கொண்டு இருப்பதும் , மேலே ஒன்றுக்கு ஓன்று பதின் மடங்காக பெருக்கப் பட்ட வைசால்யத்தை உடைய சப்த ஆவரணங்களை  உடையதுமான  இவ் அண்டமும் ..
அஸ்ய சு ச்த்ரும்சி பரச்சதான- அண்டா னி ச-கீழ் சொன்ன அண்டத்தோடு மிகவும் ஒத்து இருக்கின்ற நூற்றுக் கணக்கான அண்டங்களும்  
ரிஹா சுந்தரச்ய க்ரீடாவிதே  பரிச்சததாம கச்சன்–இங்கு உள்ள அழகருக்கு க்ரீடா பரிகரங்கலாய் இரா நின்றன ..அண்டக் குலத்துக்கு அதிபதியாய் அவற்றை லீலா உபகரணமாக கொண்டவரான அழகர் இத் திரு மலையிலே சேவை சாதிகின்றார்..அகில அண்ட பிரம்மாண்ட கோடி / பாரத வருஷம் -9000  யோஜனை விஸ்தீரணம் 90000  மைல் .கர்ம பூமி இது ..7 குல பர்வதங்கள் தாங்கி  கொண்டு இருகின்றன.. தீபம் பிரித்து -ஜன்போத் தீபம் நடுவில் .புஷ்கரத் தீபம் கடைசியில் /நவ கண்டங்களாக பிரித்து -பாரத வருஷம் பாரத கண்டே -மேருக்கு தெற்கு பக்கத்தில் ..பிரித்து பாகவதத்தில் ..64 லஷம்  கடைசி தீபம் மட்டும் ..தூய நீர் கடலும் அவ்வளவு விஸ்தீரணம் ..பூ /புவ 1 லஷம் சுவ 2 லஷம்/இந்திர லோகம் மகர் லோகம் இ கோடி யோஜனை அடுத்து அழியாது காலி செய்து ஜன தப சத்யம் ..லோகம்/ சூர்ய மண்டலம் சந்திர மண்டலம் நஷத்ரம் துருவன் சுக்ரன் அங்காரகன் குறு சனி சப்த ரிஷி மண்டலம் சிசுமார சகரம் வாசுகியால் கட்ட பட்டு /

82nd  ஸ்லோஹம்..

-சுர நர திர்யகாதி பஹூ பதாக பினனம் இதம்
 ஜகத் அதச அண்டம் அண்டவரநி ச சப்த ததா ,
குண புருஷவ் ச முக்த புருஷாச்ச வநாத்ரி பதே:
உபகரணாநி நார்ம விதயேஹி பவந்தி விபோ:
சுர நர திர்யகாதி பஹூ பதாக பினனம் இதம்
 ஜகத்—தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் என்கிற பல வகைப் பட்ட விசெஷணங்களால் வேறு பட்டு இருக்கிற இந்த ஜகத்தும் , சுர நர திர்யக் ஸ்தாவர ஆத்மக ஐந்து சமூக விசிஷ்டமும் ஆன இவ் வுலகும்,
அதச அண்டம் சப்த அண்டவரநி ச — இவ் வளவேயும் அன்றிக்கே அண்டமும் ஏழு ஆண்ட ஆவரண்ங்களும் ..
குண புருஷவ் ச—.பிரக்ருதியும்…ஜீவாத்மா வர்க்கமும் 
முக்த புருஷாச்ச— பிரகிருதி சம்பந்த விநிர் முக்தர்களான புருஷர்களும் .-முக்தியை விரும்பும் புருஷர்கள்-விண்ணுலாரிலும் சீரியரே-திரு விருத்தம் 
..ஆக இவ்வளவும் 
வநாத்ரி பதே: விபோ: நர்ம விதயேஹி உபகரணாநி பவந்தி —திரு மால் இரும் சோலை எம்பெருமானுக்கு பரி கரங்கள்  …
லோகம் முன்பு பார்த்தோம்..1 யோஜனை =10 மைல். இதில் உள்ள அநேக சுறா நர திரைக் முதலிய பேதங்கள் கொண்ட பலரும் உளர் …குண புருஷர்கள் -முக் குணம் கொண்டவர்கள் / சத்த யுக்தாநாம்-கூடியே இருப்பவர்கள் என்று  நித்ய யோகத்தை எதிர் பார்த்து இருப்பவர்கள் -முமுஷுகளையும்-அது போல முக்த புருஷர்கள் என்கிறார் இதில் ..எல்லோரும் அவனுக்கு லீலா உபகரணங்கள் /பக்தர்கள் -சம்சாரிகள் முமுஷுக்கள் என்ற இரு வகை..  /அவித்யை -கல்வி இன்மை -ஐந்து வகை -தம -தேக ஆத்மா அபிமானம் ,மோக-,மாமா காரம்  ,மகா மோக, தாமிஸ்ர, அந்த சம்வித- மரண பயம்  /மரம் புதர் கோடி புல் பூண்டு ஆக பிறக்கும்..ஸ்தாவரங்கள்/திர்யக்-பக்க வாட்டில் போகும்..28 வகை பிராணிகள் 9 இரட்டை கொம்பு -மாடு ஒட்டகம் போல்வன /ஒட்டறை குதிரை /5 நகத்துடன் -13 /பட்டாம் போச்சி நிறைய வகை உண்டு 27 லஷம் /குரங்கும் முசுவும் படையா பல வகை குரங்குகள்..அடுத்து மூன்றாம் ஸ்ருஷ்ட்டி -மேல் நோக்கி போகும் -சுரர்கள் /நான்காவது கீழ் நோக்கி நம் போல்வார்../தேவ அசுர பித்ரு மனுஷ்யர் பிரிகிறார் அடுத்து..முதலில் அசுரர் கணுக்கால் -முழங்கால் இரவில் ரஜோ குணம் தமஸ் கொஞ்சம் சத்வம் இல்லை/ அடுத்து தேவர்கள் பகல் பலம்/ பித்ரு சாயங்காலம்-உச்சி பொழுது தாண்டிய காலம் கொதிக்கும் காலம்../ மனுஷ்யர் காலையில் பிராத காலம் ..ரஜோ தமசால் மூட  பட்டு /பசிவந்து அடுத்து  -ரஷசர்களை படைதான் அடுத்து ..கோபம் -யஜ்ஜர் காக்கவும் /அப்ரியம் கேசம் உசந்து சர்ப்பம் பிறந்தது அதில் இருந்து சீக்கிரம் சர சர ஓடுவதால் சரபம் ஆகி மெதுவாக போகும் இரண்டு வகை..கந்தர்வர்கள் அடுத்து..
83rd  ஸ்லோஹம்..
ஜ்ஜானி நஸ் சதத யோகிநோ ஹி யே
சுந்தரான்க்ரி  பர பக்தி பாகின:
முக்திமாப்ய பரமாம் பரே பதே
நித்ய கிங்கர பதம் பஜந்தி தே
முக்தர்களான புருஷர்களை பிரஸ்தாவம் செய்து அருளின படியால் அவர்களை விசேஷிகிறார் இதில்
ஜ்ஜானி நஸ் சதத யோகிநோ ஹி யேசுந்தரான்க்ரி  பர பக்தி பாகின: முக்திமாப்ய பரமாம் பரே பதே நித்ய கிங்கர பதம் பஜந்தி தே தேஷாம் ஜானி நித்ய யுகத ஏக பக்திர் விசிஷ்யதே என்றும் ஜ்ஜாநீ து ஆத்மைவ மீ மதம் என்றும் கீதையில் புகழப் பட்டவர்கள் -திரு மால் இரும் சோலை அழகர் உடைய திரு அடிகளிலே பக்தியை செலுத்திய மோஷத்தை அடைய முடியும் சதத யோகிநா  என்கிற பதம் தேஷாம் சதத யுக்தாநாம் -போல எப்போதும் கூடி இருந்து அனுபவிக்க விரும்புவர்கள் என்ற படி
சுந்தரான்க்ரி பர  என்றும் சுந்தரான்க்ரி பத என்றும் இரு வகை பாடம் ..பத அங்க்ரி எனபது திருவடி புநருக்தி சங்கை வேண்டாம் பதம் -ஆஸ்பதம்  அழகர் திரு வடிகளை ஆச்பதமாக கொண்ட பக்தியை உடையவர்கள்..
அழகர் திருவடிகளிலே பக்தியை செலுத்தினவர்கள் அபுநராவ்ருத்தி லஷணமான மோஷத்தை பெற்று திரு நாட்டிலே நித்ய கைங்கர்ய சாலிகள் ஆகின்றனர்..
 பத பக்தி பர பக்தி என்ற இரண்டு பாடம் அங்க்ரி -ஆஸ்பதம் என்ற அர்த்தத்தில் ..ஜான தசை ஜஜான தரிசன பிராப்த  மூன்று பக்தி அவஸ்தைகள் /குண புருஷன்/ முக்த புருஷன் என்றார் முன் ..அசின் மிஸ்ரம்/ விசுதாத்மா என்று ஆளவந்தார் இரண்டு வகை சொன்னார் கீதை 15 அத்யாய சங்கரக ஸ்லோகத்தில் ..பர பக்தி பழுத்து பழுத்து திரு நாட்டில் நித்ய கைங்கர்யம் அடைவார்கள்..அழகர் திருவடிகளில் பர பக்தி ஏற்படுவது  முதல் நிலை ..சம்ச்லேஷத்தில் இன்பம் விச்லேஷத்தில் துக்கம்/ விடாய் துடிப்பு தரிசனம்..திரு மேனி காணும் அளவே போய் -திரு மடல்..சூழ் விசும்பு பர ஜ்ஜானம் . -9 பர பக்தி திரு பிரம்பு முன்பு தாண்டி .கொண்டல் வண்ணனை -பரஜ்ஜானம்..என்னது உன்னதாத்மா அறிவார் ஆத்மா என்று அவன் மதம்
84th  ஸ்லோஹம்..
தேவஸ்ய சுந்தர புஜச்ய வநாத்ரிபர்த்து:
 ஹை சீல வத்த்வ மதவா சரித வத்சலத்வம்
 ஐச ஸ்வபாவ மஜ ஹத் பிரி ஹாவதாரை;
யோலஞ்ச்சகார ஜகதாச்ரித துல்யதர்மா..
இனி மத்ஸ்ய கூர்மாதி விபவ அவதாரங்களை அநுபவிக்க திரு வுள்ளம் பற்றி அதற்கு அவதரணிகை போல இது முதல்அடுத்து மூன்று ஸ்லோஹன்களை அருளி செய்கிறார்  அஜோபிசன் அவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபிசன் ப்ரக்ருதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாம் யாத்மா மாயயா-கீதை போல —

பிறவாதவன் பிறக்கிறான்  குறையாதவன் குறைத்து கொள்கிறான்
ஈஸ்வரன் ஆணை இடுபவன் தசரதன் , யசோதைக்கு ஆணைக்கு உட்பட்டு இருக்கிறான்

–அஜஹத் ச்வபாவனாய் கொண்டும் மனுஷ்ய சஜாதீயனாய் கொண்டும் விபவ அவதாரங்கள் செய்து அருளினது சவ்சீல்ய பிரயுக்தாமோ ! அல்லது ஆஸ்ரித வாத்சல்ய நிபந்தனமோ என்கிறார் இதில் ..

யாவர் ஒரு அழகர் சர்வேச்வரத்வத்திற்கு ஏற்ற ஸ்வரூப ரூப குண விபவாதிகளை -சர்வ ஜ்ஜத்வ சர்வ சக்தித்வாதிகளை விடாது இருக்கின்ற திரு அவதாரங்களினால் இந் நிலத்தில் அடியார்களான மனுஷ்யாதிகளோடு துல்ய சீலராய் கொண்டு இந்த ஜகத்தை அலங்கரித்து அருளினாரோ /அந்த திரு மால் இரும் சோலை மலை தலைவரான சுந்தர தோள் உடைய பெருமாள் உடைய சீல குணமோ அல்லது ஆஸ்ரித வாத்சல்ய குணமோ ஆச்சரியம் ஆனது.
.சமம்  ஆக படி இரங்கி வந்தான் -ஜகத்துக்கு அலங்காரமாக..சௌசீல்யம் /ஆஸ்ரித வாத்சல்யம் கலக்கிறான் குற்றம் பார்க்காமல்..என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் ..இமையோர் தலைவா..அவதாரத்துக்கு அவதாரிகை ஸ்லோஹம்..

85th  ஸ்லோஹம்..

சிம்ஹாத்ரிநாத! தவ வாங்கு மனஸாதிவ்ருத்தம்
 ரூபம் த்வதீந்த்ரிய முதாஹா ரஹஅச்ய வாணீ
எவஞ்ச ந த்வமிஹா சேத சமவாதரிஷ்ய;
த்வத் ஜஜான பக்தி வித யோத்ய முதாப விஷ்யன்..
எம்பெருமான் அவதாரங்கள் செய்து அருளாவிடில் சுருதி ச்ம்ருத்யாதி சகல சாஸ்திரங்களும் நிர் விஷயங்களாய் ஒழியும் என்று சொல்லி அவதாரத்தின் ஆவச்ய கதையை முதலிகிறார் இதில்..
உபநிஷத் தேவரீரர் உடைய அவாக் மனச கொசரமான திரு உருவத்தை அதீந்த்ரியம் என்று ஓதி வைத்தது ..கண்ணால் காண முடியாதது என்றது ..இங்கனே ஓதி இருப்பதற்கு ஏற்ப தேவரீரும் இந் நிலத்திலே போந்து விபவ அவதாரங்களை செய்து அருளாமல் இருந்து விட்டீர் ஆகில் ஒருவர் கண்ணுக்கும் இலக்கு ஆகாது இருந்தீர் ஆகில் ..சாஸ்த்ரங்களில் நிதித்யாசிதவ்ய: என்றும் அரச்ச யேத் என்றும் பரணம் யேத் என்றும் நித்யம் ப்ரதஷிணீ குர்யாத் என்றும் விதிக்க பட்டுள்ள வழிபாடுகளுக்கு விஷயம் இன்றிக்கே ஒழியும்..
மனுஷ்யர்களை நோக்கி ப்ரவர்தித்த சாஸ்த்ரன்களிலே விஹிதங்கலாய் இருந்துள்ள விதிகளுக்கு ஒரு இலக்கு கிடையாதே போனால் அந்த சாஸ்திரங்கள் நிர் அர்த்தங்களாகுமே..ஸ்ருதிஸ் ச்ம்ருதிர் மாமி வாஜ்ஜா -என்ற திரு முக பாசுரமும் பழுதே யாம் அத்தனை இறே..அங்கன் ஆகாமைக்கு திரு அவதாரங்கள் செய்து அருளினார்..
..பிரமாணதாலே கர்ம பக்தி ஜஜான /பிர பத்தி யோகம் -சொல்லி /அர்ச்சனை செய் போன்ற விதி வாக்யங்கள்/அதை பண்ண நீ வேணுமே– இச்சா விகாரதுக்கும் அவதாரம்..உபாச்யங்கள் முக்ய அவதாரம் /சொரூப சக்தி ஆவேசம் /அர்ச்சை திரு மேனி..நான்கு வகை.. /போற்றும் புனிதன்..ஆவேச அவதாரம் என்பதால் உபாச்யம் இல்லை..

கர்த்ருத்வம் உண்டு ஜீவாத்மாவுக்கு ஜ்ஜானம் உடையவன் ச்வதந்த்ரன் இல்லை பர தந்த்ரன் என்ற எண்ணம் வேணும்.. நம சப்தம் இதற்க்கு பிறந்தது/ மகாரத்தால் அநந்ய சேஷத்வம் சொல்லி …ஜ்ஜத்ருத்வதுக்கு விஷயமே சேஷத்வம்..அசித் சமம் இல்லை ஜ்ஜாதா கர்த்ருத்வம் இருப்பதால்..ஜகத் காரனத்வதை த்யானம் பண்ணு -எங்கு இருகிறாய் என்று காட்ட அவதாரம்..நம் கண்ணுக்கு இலக்கு ஆவதற்கு /உபாசன வகைகளை கீதையில் அருளி இருக்கிறான் .. இவை அவதாரம் சேஷடிதம் இருந்தால் தானே முடியும்..
சிருக்கனுக்கும் வந்தான் கஜேந்தரனுக்கு  வந்தான் ..சிறு குழந்தைகளுக்கு பக்தி வளர்க்க விஷயம் ஆக்கினான்..விளக்கினை விதியில் காண்பர் – குழந்தையோ வந்தான் என்று நம்பி தூங்குகிறது ..யாரும் அறிவு எளிய எம்பெருமான்..
86th  ஸ்லோஹம்..
யே பக்தா பவதேக போக மனசோ நன்யாத்ம சஞ்சீவ நா; தத் சம்ச்லேஷன தத் விரோதி நித நாத்யர்த்தம் வநாத்ரீச்வர !, மத்யேண்டம் யதவாதராஸ் சுர நராத்யாகார திவ்யாக்ருதி;தேனைவ த்ரிதசைர் நரைச்ச ஸுகரம் ச்வப்ரார்த்தித ப்ரார்த்தனம்..
நன்யாத்ம சஞ்சீவ நா;பவதேக போக மனசோயே பக்தா –அனந்யோ பாயர்களும் அனந்யோ பேயர்களும் ஆன யாவர் சில பக்தர்கள் உளரோ என்ற படி  களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்  களை கண் மற்று இலேன் -என்றும்-உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் என்றும் அனுசந்தித்து இருக்கும் அவர்களான பக்தர்கள்..
 தத் சம்ச்லேஷன தத் விரோதி நித நாத்யர்த்தம்..
அப் படிபட்ட பரம பக்தர்களோடு சம்ச்லேஷிக்கவும்
 அவர்களது விரோதிகளை நிரசிக்கவும் 
ஆதி சப்ததாலே தர்ம சம்ச்தாபன திற்காகவும் 
..பரித்ராணாய சாதுநாம் படியே /சாமான்யமான 
பரித்ரானம் சங்கல்ப மாத்திர சாத்தியம் ஆகலாம் 
அதற்காக வந்து பிறக்க வேண்டாமே .
.தத் சம்ச்லேஷணம் சங்கல்பம் ஆகாதிறே..  
 சுர நராத்யாகார திவ்யாக்ருதி;மத்யேண்டம் யதவாதராஸ்–தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர சஜாதியராய் திவ்யமான வுருவத்தை கொண்டு அண்டங்களின் இடையே அவதரித்தீர் எனபது யாது ஓன்று உண்டு..
தேனைவ–இப் படி அவதரித்ததனாலேயே
 த்ரிதசைர் நரைச்ச– தேவர்களாலும் மனுஷ்யர்களாலும்
ஸுகரம் ச்வப்ரார்த்தித ப்ரார்த்தனம் ஸுகரம்—தம் தமக்கு வேண்டியவற்றை வேண்டி கொள்வதானது எளிதாக செய்துகொள்ளல் ஆயிற்று ..திரு அவதாரங்களை செய்து, கண்ணுக்கு
 புலப்பட்டு நிற்கவே அன்றோ அவரவர்கள் வணங்கி
வழி பட்டு வேண்டியவற்றை யாசிப்பதற்கு அவகாசம் உண்டாயிற்று ..அவதாரம் செய்து அருளா விடில்
கண்ணில் காண நேராது ஆகையினாலே ஒருவர் ஓன்று வேண்டி
கொள்ள அவகாசம் இல்லை ஆகும் இறே
..

பாகவத அபசாரம் பொறாமையால் அவதாரம் -நம்பிள்ளை சிஷ்ட பரித்ரானாம் பிரதானம் முதலில் அருளியதால் -ராமானுஜர் நிர்வாகம்..அந்தர் அதிகரணம்/ கீதா பாஷ்யத்தில் அருளியது வைத்து இந்த ஸ்லோஹம் ..சூத்திர வாக்யங்களை கொண்டு ஒருங்க வைத்தார்/ தொழும் காதல் களிற் அளிப்பான். புள் உஊர்ந்து தோன்ற்றினையே—. சுடர் ஜோதி மறையாதே –ஆழ்வாரும் அருளி இருக்கிறார்..சம்ச்லேஷன ஆசை -தொழும் காதல் –காப்பான் இல்லை அள்ளிப்பான்/ ஆசைக்கு பிரயோஜனத்துக்கு ஆனான் ..தன்னை கொடுத்தான் அதற்க்கு தான் வாகனம் தேடி புள் வூர்ந்தான் ..வான் உளார் அறியலாகா நீ யானைக்காகி ..மழுங்காத ஜ்ஜானமே படையாக -சக்கரமும் கருதும் இடம் சென்று பொருத்தும்..பிரார்த்தனை தெரிந்த ஜ்ஜானம் இடர் ஆர் இடரை நீக்காய் –தரிசன விரோதியை தொலைக்க சொன்னது ..தாமரையை திரு வடியில் இட்டு சமர்ப்பிக்க ஆசை /களேபரம் சரீரம் ரட்சிக்க கூப்பிட வில்லை/ஒரு நாள் காண நீ வாராய்/யானையால் வேதாந்த அர்த்தம் புரிகிறது..தத் சம்ச்லேஷன கூடுவதற்கும்/தத் விரோதி நிரசன இரண்டு காரணம் அருளுகிறார் /உபாயம் உபயம் அவனே-வேறு யாரும் இல்லை – என்று இருக்கிற பக்தர்களுக்கு வருகிறான்..உன்னால் அல்லால் யாவராலும் குறை தீரேன்/ நாராயணனே நமக்கே பறை தருவான் /அனுபவிப்பதே ஏக போகம் இவர்களுக்கு ..உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் ..பிரியா அடிமை என்னை கொண்டாய்/குடந்தைகிடந்த  திரு மாலே -பிராட்டி இருக்கிறாள்/கைங்கர்யம் பிரார்த்தனை உபாயத்தில் சொல்ல வில்லை ஈட்டில் அருளியது….

யாரு  எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்.. ஆறு =உபாயம்../நின் பாதமே ஆறாக சரணாக /உபாய பரம் தான்பிரகரணம் .. ஆறுகளை காட்டும் பொழுது பாதத்தை காட்டி கொடுத்தாய் என்று நிர்வாகம்..த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் சரண்/நாம் தான் சும்மாடு போல ஆக்கினோம்..அனைவரும் பிரார்த்திக்க என் நின்ற யோனியுமாய் -எங்கும் எது ஆவவாது  அவதாரம் செய்கிறான் ..ஜடாயு மோட்ஷம் பெற்றான்/ சமுத்திர ராஜனுக்கு விரோதி காட்ட அவர்களை கொன்றானே -பிரார்த்தித்து  செய்ய அவதாரம்..குசேலர் ஐஸ்வர்யம் கேட்காமலே பெற்றார் /புடவை பெற்றாள் சிந்தயந்தி பெற்றாள்/கூப்பிடு கேட்க்கும் இடம் அமுதம் /தேவர்கள் பிரார்த்தனைக்கும் அவதாரம்..
 
கூரத் ஆழ்வான் திருவடிகளிலே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளிலே சரணம்..


 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: