சுந்தர பாஹு ஸ்தவம் 75 to 80 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

75th ஸ்லோஹம்..
சத்ர சாமுர முகா: பரிச்சதா; சூர்ய; பரிஜநாச்ச நைத்யகா;,
சுந்தரோ உரு புஜ மிந்ததே  சதா ஜஜான சக்தி முக நித்ய சத்குணா:
அழகர் உடைய பரிஜன பரிச்சத கல்யாண குணா சம்ருத்தியை அருளி செய்கிறார் இதில்
நைத்யகா;, சூர்ய–நித்ய கைங்கர்ய பாகிகளான சூரிகளும்
பரிஜநா—பரி ஜனங்கள் என்று பேர் பெற்றவர்களும்
சத்ர சாமுர முகா: பரிச்சதா—குடை சாமரம் முதலிய எடுபிடி சாமான்களும்
ஜஜான சக்தி முக நித்ய சத்குணா:—ஜஜான சக்தி பளைச்வர்யாதி களான நித்ய கல்யாண குணங்களும்
சுந்தரோ உரு புஜ  சதா மிந்ததே  —சுந்தர தோள் உடையானை அடைந்து எப்போதும் விளங்கா நின்றன..
மண்டக படி சேவை ஏகாந்தமாக கிடைக்கும் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -மண்டக படி சேவை ஏகாந்தமாக கிடைக்கும் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -பரிசனங்கள் அவர் அவர் தேவிகளுடன் /எடுபிடி சாமான்களுன் அவனை அடைந்து விளங்கு கின்றன /தாள விருத்தம் ஆள வட்டம் /பிருன்காரம் திரு காவேரி கலச பானை /படிக்கம் -ஏந்தி கொள்ளும் பொன் வட்டில்/
 76th ஸ்லோஹம்..
த்வார நாத காண நாத தல்லஜா;பாரிஷத்ய பத பாகிநஸ் ததா
மாமகாச்ச குரவ;புராதநா: சுந்தரம் வணமஹீத்ரகம் ச்ரிதா:
சண்ட பிரசண்டாதிகளான த்வார பாலக ஸ்ரேஷ்டர்களும் ,குமுத குமாஷாதிகளான கண நாயக ஸ்ரேஷ்டர்களும்
“பாரிஷத்யா: பரச்சதம் “என்கிற படியே பாரிசத்ய பதவ்யபதேச் யர்களானவர்களும் ஸ்ரீ பராங்குச பரகால யதிவராதிகளான நம் முன்னோர்களும் திரு மால் இரும் சோலை அழகரை பணிந்து வுய்நது போந்தார்கள் என்றார் ..தல்லஜ சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம்..துவார பாலகர்கள் -கண நாதர்கள் ஏன் உடைய பழைய குருக்கள் அழகரை அருளிய ஆழ்வார்கள் ஆதி செஷன் நகர பாலர்கள்  கருடன் கோபுர பாலகர்கள் /சண்ட பிரசண்டர் துவார பாலகர்கள் -கிழக்கு பகுதியில்/பத்ரன் சுபத்திரன்-தெற்கு /ஜெய விஜய மேற்கு / தாதா விதாதா வச்டக்கு திக்கில் /வாசல் காப்பார்கள்..
77th ஸ்லோஹம்..
ஈத்ருசை: பரிஜனை: பரிச்சதை:
 நித்ய ஸித்த நிஜ போக பூமிக;
 சுந்தரோ வனகிரேஸ் தடீஷுவை
ரஜ்யதே சகல த்ருஷ்ட்டி கோசர:
கீழே சொல்லப் பட்ட அனந்த கருட விஷ்வக் சேனாதிகளான பரி ஜனங்களோடும் சத்திர சாமராதிகளான பரிச்சதங்களோடும் அழகர் திரு மால் இரும் சோலை தாழ் வரையிலே அனைவரும் கண்ணாரக் கண்டு களிக்கலாம் படி எழுந்து அருளி இருந்து சேவை சாதித்து அருளும் ஆற்றை அனுபவித்து பேசுகிறார் இதில்..
ஈத்ருசை: பரிஜனை: பரிச்சதை: சஹா பூர்வோக்த பிரகாரங்களான பரிசான பரிச்ச்தங்கள் ஒடேகூட,-கீழே சுந்தரஷ்ய வனசைல வாசின  என்கிற ச்லோஹம் தொடக்கி முந்தின ச்லோஹம் அளவாக ஐந்து ச்லோஹன்களிலே அருளி செய்தவற்றை சேர பிடித்து -ஈத்ருசை என்று அருளி செய்த படி
நித்ய ஸித்த நிஜ போக பூமிக;  நித்ய ஸித்த என்றது சதா ஏக ரூபமான என்ற படி  நிஜ போக பூமி என்று தனக்கு அசாதாரணமான நலம் அந்தம் இல்லாதோர் நாடாகிய நித்ய விபூதியை சொல்லுகிறது ..வைகுண்டே து பரே லோகே சரியா சார்த்தம் ஜகத் பதி: ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ என்கிற படியே ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனான எம்பெருமான்
சகல த்ருஷ்ட்டி கோசரசுந்தரோ –சகல ஜன நயன விஷய பூதரான அழகராய் கொண்டு..
வனகிரேஸ் தடீஷூ ரஜ்யதே திரு மால் இரும் சோலை மலை அடிவாரத்திலே திரு உள்ளம் உகந்து வர்த்திகிறார் ..திரு நாட்டிலே நம் போல்வார் உடைய கண்ணுக்கு இலக்கா காமல்  இருக்கிற குறை தீர அங்குத்தை நிலைமையோடே இங்கே இனக் குரவர்கள் உட்பட சகலர்க்கும் சஷூர் விஷயனாய்க் கொண்டு சேவை சாதிக்கிறார்..
சார்ங்கத்தின் அம்சம்கலியன் ./நம்பிள்ளையும் கார்த்திகையில் அவதாரம்..கலி கன்றி தாசர் திரு நாமம் இவருக்கு .நலம் =போகம் அந்தம் இல்லா நாடு நித்யம் அவன் இவன் என்று கூறேன்மின்  இவன் அவன் -சகல மனிஷருக்கும் ஆக  இருப்பதால் ..மண்டூக முனிவர் சாப விமோசனம் பெற்ற இடம்..ஸ்ரீ வில்லி புதூர் பக்கத்தில் அழகர் கோவில் உண்டு காட்டு அழகர்..சுதபா முனிவருக்காக சேவை சாதிக்கிறார்/ புனத்தினை கிள்ளி புது ஆவி காட்டி  உன் பொன் அடி வாழ்க இன குறவர்  புதியது உண்ணும் திரு மால் இரும் சோலை -எந்தாய் -எனக்கு பிதா ஆனவர் இனக் குறவருக்கும் இல்லை எனக்கும் என்று உறவை வழிப் படுத்தி கொள்கிறார் பட்டர் அவர்கள் கூட இருந்து சேவித்தார் //பெரி ஆழ்வாரும்  ஆண்டாளும் இதே பெருமாளுக்கு கண்டு அருளி பண்ணி அருளுகிறார்கள் /முதலி ஆண்டான் வங்கி புறத்து நம்பி -நெய் உண்பீர்  பட்டு நூல் உடுப்பீர் என்று சொல்ல இவரோ  ஜெய விஜயீ பவ முரட்டு சமஸ்க்ர்தம் அங்கும் போக வில்லையே என்றார் /மலையாள கொண்டு போக முயல -18 படிக்கட்டு தலைவன் கருப்பு -காட்டி வென்றான் /உம்பரால் அறியலாக இவனை அனைவரும் பார்க்க சர்வ சுலபன்..
78th ஸ்லோஹம்..
ஆக்ரீட பூமிஷூ சுகந்திஷூ பவ்ஷ்பிகீஷூ
 வைகுண்ட தாமனி சம்ருத்த சூவாபிகாஸூ
 ஸ்ரீ மல்ல தாக்ருஹவதீஷூ யதா ததைவ
லஷ்மி தரஸ் சஜதி சிம்ஹகிரேஸ் தடீஷூ
 நலம் அந்தம் இல்லாதோர் நாடாகிய ஸ்ரீ வைகுண்டத்தில் திரு உள்ளத்திற்கு மிகவும் இனிதாக வசித்து அருளும் பெருமானுக்கு இத் திருமலை தாழ் வரையில் வாசம் ருசிக்குமோ ? என்று சிலர் சங்க்கிக்க கூடும் என்று எண்ணி அவ இருப்போடு இவ் இருப்போடு வாசி இல்லை என்று அருளி செய்கிறார் இதில்..வைகுண்ட தாமனி -ஸ்ரீ வைகுண்டம் ஆகிற நித்ய விபூதியிலே
சம்ருத்த சூவாபிகாஸூ-வாவித் தடங்கள் நிரம்பியவையாயும்  
 ஸ்ரீ மல்ல தாக்ருஹவதீஷூ-அழகிய கோடி மண்டபங்களை உடையனவாயும்  
பவ்ஷ்பிகீஷூ-புஷ்பங்கள் நிறைந்தன வாயும்  
சுகந்திஷூ-நறு மணம் மிக்கவையாயுமாய் இருக்கிற  
ஆக்ரீட பூமிஷூ-விஹாரோப யோகிகலான உதயான வனங்களிலே
லஷ்மி தரஸ் யதாசஜதி-சரிய பதியான எம்பெருமான் எவ் விதமாக திரு உள்ளம் உகந்து வர்த்திகிறானோ
 ததைவ சிம்ஹகிரேஸ் தடீஷூ சஜதி— அவ் விதமாகவே திரு மால் இரும் சோலை தாழ் வரைகளிலும் திரு உள்ளம் உகந்து வர்த்திகிறான் ..இத்தால் திரு மலை பூலோக வைகுண்டம் என்றதாயிற்று
நூபுர கங்கை -விரஜ நதி போல/சஜதி= ஆசையுடன் பேரென் என்று இருகிறவன்..புஷ்பங்கள் நறுமணம் விகாச  ஸ்தானம் விளையாடும் தோட்டம் நிறைந்த /கொடி மண்டபங்கள்..அபிரக்ரமான /வைகுண்ட தாமம் லஷ்மி தரன் -அது போல =ததைவ /காண்பவர்களுக்கு உண்டு /அதே ஆனந்தம் அழகருக்கு இங்கும்..அட்டிகை பட்டு புடவை சூடிய தாய் அங்கு / அழுகிற குழந்தை வியாதி போய் மடியில் அமர்ந்த தாயின் ஆனந்தம் இங்கு / அங்கு முக்தர் ஆக்குவது வேலை இல்லை/ஆயிரம் பூம் பொழிலும் மால் இரும் சோலை அதே ..
நீர் மண்டபம் புஷ்ப மண்டபம்  கொடி மண்டபம் /நீர்  நிலை நிறைந்த ஸ்ரீ ரெங்கம் /கொடி மண்டபம் தோட்ட உத்சவம் காஞ்சி பல்லவ உத்சவம்-ஹம்சத்தை தேசிகன் இங்கே தூது விடுகிறார் தோட்டத்தில் இறகை வீச சொல்கிறார் / புஷ்ப மண்டபம் சிந்து பூ மகிழும் திரு வேங்கடம் இவற்றையே அருளுகிறார்..
79th ஸ்லோஹம்..
ஆநந்த மந்திர மஹா மணி மண்டபாந்த:
 லஷ்ம்யா புவாஸ் பயஹிபதவ் சஹா நீலயா ச,
நிஷ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய சனைக சேவ்ய;
நித்யம் வசந் சஜதி சுந்தரதோர் வநாத்ரவ்.
ஆநந்த மந்திர மஹா மணி மண்டபாந்த:–ஸ்வரூப ரூப குண விபூதிகளோடும் நித்ய முக்தர்களோடும் கூடி இருக்கும் இருப்பை அனுபவித்தனால் உண்டாகும் மஹா ஆனந்ததிற்கு பிறப்பிடம் ஆன திரு மா மணி மண்டபத்தின் உள்ளே
 ஹிபதவ் லஷ்ம்யா புவா நீலயாச  சஹா –திருவனந் ஆழ்வான்  மீது  ஸ்ரீ தேவி ,பூ தேவி ,நீலா தேவி களோடும் கூட
நிஷ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய சனைக சேவ்ய;–திரிபாத் விபூதி ஆகையாலே எண் நிரந்த நித்ய முக்தர்கள் அன்றோ அங்கு இருப்பது ..அவர்களுக்கு மாத்திரமே   சேவ்யனாய் இருக்கின்ற-சுந்தரதோ-சுந்தர தோள் உடைய பெருமாள்
வநாத்ரவ் நித்யம் வசந் சஜதி–திரு மால் இரும் சோலை மலையில் நித்ய வாச ரசிகராய் நின்றார்..
விரஜையை மறக்கும் படியான நூபுர கங்கையும் திரு மா மண்டபத்தையும் மறக்கும் படியான திவ்ய ஆலய மண்டப சந்நிவேசமும் இங்கு இருக்கையாலே திரு நாட்டில் வாசத்தையும் மறந்து இங்கே வர்த்திக்கிற படி …சஜதி -சத்தோ பவதி என்ற படி..

ஆஸ்தானம் -ஆனந்த நிலயம் என்ற  பெயர் பெற்று இருக்கும் ..தெளி விசும்பு திரு நாடு/ குந்த =குறைவு/ வை குண்ட ஆனந்தத்துக்கு குறை இல்லை ..இது இருள் தரும் ஜ்ஜானம்/ திவ்ய ரத்ன மணி மா  மண்டபம் / மணி-அழகு உயர்வு ஆனந்தம் -அனுபவம் மா -விசாலம் /உடன் அமர் காதல் மகளிருடன் /நிஸ் சங்க்ய -எண்ண முடியாத /வைகுண்ட கத்யம் -ஆதாரம்..பாரிக்கணும் அக்ரூர யாத்ரை/ திரு வேங்கட யாத்ரை /அர்ச்சிராதி மார்க்கம் நினைவு வேணும்..தச குணிதம் பத்து மடங்கு -ஏழு ஆவரணங்கள் /காரிய காரண லோகங்கள் கடந்து –மகான் அஹன்காரன் -காரிய /மூல பிரகிருதி -காரண /பரம பதம் -அது கடைசி/பர்மா வாக் மனசுக்கு எட்டாதது/சனக ..நினைவுக்கு அப்பால் பட்ட/ அநுகூலமே வடிவு எடுத்தவர் அனுபவிக்க திவ்ய நித்ய முக்தர்கள்..பரிமாணம் ஐஸ்வர்யம் ச்வாபம் வரை அறுத்து சொல்ல முடியாத / நூறு மதில்கள் அங்கும்..ராஜாவுக்கு அடையாளம் பயந்து இல்லை/சதஸ் ஆயிரம் கோடி தோட்டம்/நானா வித ரத்ன தூண்கள் /வர்ணம் சுகந்தம் புஷ்பம் எல்லாம் சுத்த சத்வ மாயம்..பாரி ஜாத மரங்கள்/கிரீட சைலத்தை கருடன் திரு மலைக்கு எழுந்து அருள பண்ணினார்-க்ரீடாத்ரி பெயர்  / அசாதாரண-அவனுக்கும் பிராட்டிக்கும் தனி மண்டபங்கள் வூஞ்சல் வசந்த பூ சாத்தி போல்வன   சாதாரண சேர்த்தி மண்டபம் போல்வனவும் /பூவை சுகம்= பைங்கிளி சாரிகா= பூவை /பந்து தூதை /..

மணி முது பவள படி கட்டுகள் /திவ்ய தீர்த்தம். சுத்த சத்வ அமர்த்த ரசம்..கோகிலம் ஹம்ச பறவைகளின் குரல் /நீராழி மண்டபம் /நூறு நூறு ஆயிரம் ஆயிரம் /பிச்சேற்ற வல்லதாய் /பக்தி பாரவச்யத்தால் ..புஷ்ப பர்யங்கள் கட்டில்/நானா புஷ்பம்/ வண்டுகள் பிருங்கா -காந்தர்வ சங்கீதம் அகில் சந்தன மரம் மந்த மாருதம் புஷ்ப தூவல் /திவ்யபோக பர்யங்கத்தில் /யார் உடைய பெயரால் ஸ்ரீ வைகுண்டம் பெயர் பெற்ற பிராட்டிகள் உடன்/அனந்த கருட விஷ்வக் சேனர் -ஆக்ஜை-ஏவி பண்ண கொள்ள ஆசை படுவர்/துல்ய சீல/திறந்து கொண்டே இருக்கிற திரு கண்களுடன் .அதி நிர்மல ஒளி-அமர்த்த சாகரம் கல்யாண குண கடல் /கிரீட மகுட சூடா வதம்சம் பூஷணங்கள் பல வைஜயந்தி வன மாலை தரித்து கொண்டு /சங்கல்பத்தால் நடத்தி கொண்டு/மாசுச வார்த்தை பணித்து ..த்யான யோகத்தால் -கண்டு -அழகர் இடம் சேவிக்கணும் இவனே அவன் என்ற எண்ணத்துடன்..
 
80th ஸ்லோஹம்..
பிரத்யர்த்தி நி த்ரிகுண்ணாக பிரக்ருதேரசீம்னி
வைகுண்ட தாம நி பராம் பரநாம் நி நிதயே,
,நித்யம் வசந் பரம சத்வமயேபி ,அதீத
யோகீந்திர வான்மனச ஏஷ ஹரிர் வநாத்ரவ்..
ஆவரண ஜாலம் போலே பரத்வம் ….பெருக்காறு போலே விபவங்கள் ; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சை அவதாரம்–
வைகுண்ட தாமநி நித்யம் வசந் ஏஷ ஹரிர் வநாத்ரவ்–இவ் அழகர் திரு நாட்டிலே எழுந்து அருளி இருப்பவர் ஆயினும் இத் திரு மலையில் சந் நிஹிதராய் நின்றார்..
பிரத்யர்த்தி நி த்ரிகுண்ணாக பிரக்ருதேரசீம்னி –சத்வ ரஜஸ் தமோ குணங்கள் என்னும் முக் குணங்களின் கூட்டவர் ஆகிய மூல பிரக்ருதிக்கு எதிராக உள்ளது..
பரம சத்வமயேபி –சுத்த சத்வமாய் இருக்கை
அசீம்னி— லீலா விபூதியின் பரிமாணம் -எல்லை கண்டு கூற பட்டு இருகின்றது அங்கன் இன்றி நித்ய அங்குசித ஜானர்களுக்கும் அளவிட ஒண்ணாத பரிமாணத்தை உடைத்தாய் இருக்கும்..
பராம் பரநாம்நி—  பரம ஆகாசம் என்னும் பெயரை உடையது
நிதயே வைகுண்ட தாமநி –நித்ய விபூதி என்ன படுகிற ஸ்ரீ வைகுண்ட லோகத்திலே
அதீத
யோகீந்திர வான்மனச ஏஷ –சப்தம் அந்தமாக கொண்டு வைகுண்ட தாமாவுக்கு விசெஷணம் /பரதம் அந்தமாக கொண்டு அழகருக்கு விசெஷணம் சப்த அந்தமாக கொள்ளுதல் சிறக்கும் .யோகி ஸ்ரேஷ்டர்களின் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாததுமான ஸ்ரீ வைகுண்டத்திலே..
யோகிகளின் /எட்டாதவர் -வாக்குக்கும் மனசுக்கும் .இங்கே எட்டும் இடத்தில் உள்ளார் ..பரம சத்வம் /எல்லை அற்று இருப்பதாய் /பராம்பரம் பரம ஆகாசம் என்ற பெயர் உடன்/ அசேதனம் -பிறக்கு /நித்யம்/ மாறுதல் /முக் குண மயமாய் இருக்கும் .. கம் -ஆகாசம் /தமாசை தாண்டி இருக்கும் / விகாரம் அற்று ஆனந்ததக்கு மூலம் பரம பதம்..மூன்று மடங்கு பெரிசு..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: