சுந்தர பாஹு ஸ்தவம் 69 to 74 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

 69th  ஸ்லோஹம் ..

யஸ்யா; கடாஷன மனுஷன மீச்வரானாம்

ஐஸ்வர்யா ஹெதுரிதி சர்வஜநீ நமேதத் ,

ஸ்ரீஸ் சேதி சுந்தர நிஷேவனதோ நிராஹூ:

தம் ஹி சரிய:ஸ்ரியமுதா ஹூ ருதார வாச:

கடந்த முப்பது ச்லோஹன்களால் அழகர் உடைய கேசாதி பாதாந்த திவ்ய அவயவ வர்ணனம் செய்தார் ..இனி ஸ்ரீ பூமி நீளா தேவிகள் ஆகிய திவ்ய மகிஷிகளின் சேர்க்கையையும் ,சேஷ சேஷாசனர் கருட பிரமுக

 நித்ய சூரிகளின் பரிசர்யா  விசேஷங்களையும் அனுபவிக்க திரு உள்ளம் பற்றி

ஸ்ரீ மகா லஷ்மியின் நித்ய யோகத்தை அருளி செய்கிறார்இதில்..

யாவளொரு பிராட்டியின் கடாஷம் ஆனது இந்திரன் முதலிய 

தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது எனபது சர்வ ஜன சம்மதம் ஆனதோ ,அந்த பிராட்டியும்  அழகரை ஆச்ரயித்தே ஸ்ரீ என்று திரு நாமம் பெறுகிறாள் அழகர் தாமும் திரு வுக்கும் திருவாகிய செல்வராய் விளங்குகிறார் என்கிறார்  

யஸ்யா; கடாஷன யாவளொரு பிராட்டியின் கடை கண் பார்வை யானது

மனுஷன மீச்வரானாம் ஐஸ்வர்யா ஹெதுரிதி சர்வஜநீ-ஈஸ்வரர் என்று பேர் பெற்றவர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஐஸ்வர்ய ஹெதுவாகின்ற்றது  எனபது நிர்விவாதமாய் இருக்கின்றதோ

 சுந்தர நிஷேவனதோ ஸ்ரீஸ் சேதி நிராகூ–அந்த பிராட்டி தானும் அழகரை ஆச்ரயிப்பதனாலேயே ஸ்ரீ என்று பேர் பெறுகிறாள் என்று ஸ்ரீ சப்த நிர்வசன கர்த்தாக்கள் கூறுகின்றார்கள்..ஸ்ரீ சப்தம் ஆறு  வையான வயுத் பத்திகள் உள்ளன ..அவற்றில் ஸ்ரயாதே எனபது ஒரு வ்யுத்பத்தி ..எம்பெருமானை பற்றி ஸ்வரூப லாபம் அடைபவள் என்ற படி மலர் மகள் விரும்பும் 

நம் அரும் பெறல் அடிகள் என்றதாயிற்று ..இனி பிராட்டிக்கு எம்பெருமானாலே ஏற்றம் எனபது போல எம்பெருமானுக்கும் பிராட்டியாலே ஏற்றம் எனபது உண்டிரே அது சொல்லுகிறது நான்காவது பாதத்தினால்

 ருதார வாச:தம் ஹி சரிய:ஸ்ரியமுதாஹூ–திரு வுக்கும் திருவாகிய செல்வா -திரு மங்கை ஆழ்வார் /க;ஸ்ரீ:சரிய:-ஆளவந்தார் ..திருவே துயில் எழாய்-உதாரவாக்குள்ளாகிறார் திரு மங்கை ஆழ்வாரும் ஆளவந்தாரும் ஆழ்வானும் பட்டரும் -ஆராயிர படி

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவதிலும்  29 th ஸ்லோஹத்தில் முதல் இரண்டு பாதங்களில் வாசி இல்லை/ மூன்றாவது பாதம் -தாம் ஸ்ரீ ரீதி த்வதுபசம் ச்ரயனான் நிராஹோ இங்கே அழகரின் திரு நாமம் இட்டு அருளி இருக்கிறார்..

உதார வாக்கு  படைத்தவர்கள் திரு மங்கை ஆழ்வார் -திரு வுக்கும் திருவாகிய செல்வா/ஆளவந்தாரும் கூரத் ஆழ்வானும்/பராசர பட்டரும் ..சரியம் ஸ்ரீ என்பதால்.. அழகு அதனையும் காட்டில் எறிந்த விளக்கு போல இன்றி அனுபவிக்க இவள் இருக்கிறாள்.. ரசனை இருப்பவள் கூட இருக்கிறாள் — சுவையன் திருவின் மணாளன்.. அழகை நம்மையும்  அனுபவிக்கவும் பண்ணுகிறாள் /ஐயப் பாடு நீங்கி ஆதாரம் பெருக அழகு /பிருஷ காரம் பண்ண இவளும் இருக்கிறாள் ..சர்வ ஜனனீம் -பேச்சுக்கே இடம் இன்றி அனைவராலும் ஒத்து கொண்ட விஷயம் ..நிர் விவாதம் ..  ஈஸ்வரர் களுக்கும் ஷணம் தோறும் அடிகடி ஐஸ்வர்ய ஹேது இவளின் கடாஷமே .ஸ்ரிகி= ஸ்ரேயதே ./ஸ்ரியதே =தான் ஆச்ரயிகிறாள் / ஸ்ரேயதே =நம்மால் ஆஸ்ரையிக்க படுகிறாள்/ச்ருணோதி கேட்டு கொள்கிறாள்  /ஸ்ராவயதி-கேட்பிகிறாள்/ஸ்ரனாதி-வேரி மாறாத பூவில் இருப்பாள் வினை தீர்ப்பாள்/ஆழ்வார் திரு நகரி நான்கு பக்கமும் திரு வேங்கடமுடையான் சன்னதி உண்டு /பூர்வ உத்தர வாக்கியம் இரண்டும் இங்கே தான் வைத்தார் .. வினைகளை களைந்து /சேர்த்து வைப்பவள் ஆறு உத்பதிகள் உண்டு..நப்பினை நங்காய் திருவே துயில் எழாய் என்று அவனை எழுப்புகிறாள்..அவளுக்கு நிழல் போல இருவரும்-பூதேவியும் நீளா தேவியும்..வலிய சிறை புகுந்தாள்..திரு வில்லா தேவரை -..மலர் மகள் விரும்பும் -பூசி பிடிக்கும் மேல் அடிகள்..நள்ளி அலவன் விருத்தாந்தம்  ..திரு நறையூர்/ திரு சேறை ஸ்ரீ வில்லி புத்தூர்.
உப லஷண முறையில் பிரமத்தை சொல்லி-குருவி உட்கார்ந்த நிலம் தேவ ததனின் நிலம் போல ..அடையாளம் சொல்லி பிரமத்தை புரிய வைக்க முடியாது பூர்வ பட்ஷம்..சரிய பதித்வம் இது போல சொல்லப் பட்டது ..ஆகையால்–அதனால் கர்ம பாகம் முடிந்து ஆசை பிறந்து இதற்க்கு வருகிறான்  அதற்க்கு பின் பிரம்மா விசாரத்துக்கு வருகிறான்..  சொரூபம் சுவாபம் இரண்டுக்கும் அடையாளம் . மீனுக்கு எங்கு தொட்டாலும் தண்ணீர் போல இவளும்.அவனுக்கு ..புஷ்பத்துக்கு பரிமளதாலே  ஏற்றம் .ரத்னம் -ஒளி /தனியாக மணம் ஒளி இல்லை அவனை ஆச்ரயிகாமல் இவளும் இல்லை/ஸ்ரத்தையா தேவகா -சேர்ந்தே தெய்வ தன்மை அடைகிறான் –கடாஷம் நன்கு விழுந்ததால் பிரமம் ஆனான் -பட்டர்..துர்வாசர் சாபம் /மகா பலி -அடிகடி இழந்து கடாஷத்தால் இந்தரனும்  ஈஸ்வர தன்மை பெற்றான்..அதிதி பிள்ளைகள் தேவர்கள்-இந்த்ரன் மூத்த பிள்ளை வாமனன் கடைசி பிள்ளை  மீண்டதை திரும்பி தந்ததால்  அதீந்த்ரன் .. இவளின் கடாஷம் மறைத்து மகா பலி ஸ்ரீ இழந்தான்   திதி பிள்ளைகள் அசுரர்கள் ..
அமிர்த சகஜா- அமிர்தம் கூட பிறந்தவள்  /லஷிதம் =பார்க்க படுகிறது அதனால் லஷ்மி திரு நாமம் /

 70th ஸ்லோஹம்..

திவ்ய அசிந்த்ய மகாத்புத உத்தம குணைஸ் தாருண்யா லாவண்யக
 பிராயை ரத்புத பாவ கர்ப்ப சத்தா பூர்வ பரியைர் விப்ரமை:,
ரூபாகார  விபூதி பிச்ச சத்ருசீம் நித்யாநபேதாம் ச்ரியம்
 நீலாம் பூமி மபி த்ருசீம் ரமயிதா நித்யம் வநாத்ரீச்வர
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல வாயர் கொழுந்துக்கும் கேள்வன் என்கிற படியே ஸ்ரீ பூ நீளா தேவிகளின் பெருமையையும் அப் பிராட்டிமார்களை அழகர் ரசிப்பித்து அருளும் பரிசையும் பேசுகிறார்..
திவ்ய அசிந்த்ய மகாத்புத உத்தம குணைஸ்–அப்ராக்ருதங்களாயும் இப் படிப் பட்டவை என்று சிந்திக்க முடியாதவைகளாயும் 
மிக ஆச்சரியங்களாயும் ,உத்தமங்களாயும் இருக்கின்ற 
வாத்சல்ய காருன்யாதி ஆத்மா குணங்களாலும்  
தாருண்யா லாவண்யக
 பிராயை –யவ்வனம் லாவண்யம் போன்ற திவ்ய மங்கள விக்ரக குணங்களாலும்..
ரத்புத பாவ கர்ப்ப சத்தா பூர்வ பரியைர் விப்ரமை:, —ஆச்சரியமான அபிப்ராய விசேஷங்களை உள்ளே உடையவைகளாய் அப் பொழுதைக்கு அப் பொழுது அபூர்வங்களாய் ப்ரியங்களாயும் இருக்கின்ற விலாசங்களாலும்..
ரூபாகார  விபூதி பிச்ச—ஸ்வரூப விக்ரக விபவங்களினாலும்  
சத்ருசீம்-துல்ய சீல வயோவ்ருத்தாம் , துல்ய அபிஜன லஷணாம், ராகவோர்ஹதி வைதேஹீம், தஞ்சேய மஸி தேஷணா ,–என்றும் பகவன் நாராயணா அபி மத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவைச்வர்ய சீலாத்ய நவதிசய அசன்கேய கல்யாண குண
காணாம் என்றும் சொல்லுகிற படியே..
நித்யா நபேதாம் ச்ரியம்–நித்ய அநபாயினி யான ஸ்ரீ மகா லஷ்மியும்..
ஈத்ருசீம் பூமிம் நீளாம் அபி –பூர்வோக்த விசேஷண விசிஷ்டைகளான பூமி நீலை களையும்
ரமயிதா நித்யம் வநாத்ரீச்வர: —திரு மால் இரும் சோலை அழகர் இடை யாராது ரசிப்பிக்கும் தன்மையர் ..இத்தால் அழகரை பற்றுவார்க்கு காலம் பார்க்க வேண்டாதே புருஷகார சாந்நித்யம் எப்போதும் உள்ளது என்றார்..
தாங்க படுபவள் ஸ்ரீ தேவி தாங்குபவள் பூ தேவி /அல்லி மலர் போக மயக்குகள் /குற்றம்  செய்யாதவர் யார்? குற்றம் செய்தவர் யார்? குற்றம்  என்றால் என்னது ? என்று மூவரும் கேட்ப்பார்கள்..ஸ்வரூபம் ரூபம்   விபூதி -செல்வம் இத்தால் ஒத்தவர்கள் / இவள் கண் கருத்தது  அவன் திரு மேனியால் இவன் கண் சிவந்தது அவள் திரு மேனியால் /உனக்கேர்க்கும் கோல மலர் பாவை /பெரிய திரு நாள் தசமி நாச்சியார் கோலம்..விழி விழிக்க உம்மால் போகாது -பட்டர் /பொன் உலகம் ஆளீறோ புவனி  முழுதும் ஆளீறோ-அறிவிப்பது தான் நம் கடமை உறுதி மகா விசுவாசம் ..பராங்குச நாயகிக்கு .. எல்லாம் கொடுத்த பின்பு  குருவி காட்டின இடத்திலே வாழ்ந்து போவார்கள்-ஈடு/உபாய உபயம் .இருவரும் ..சாத்ர்ச்யம் ஏற்புடையவள் சமம்  இல்லை/காட்டு அழகிய சிங்கர் நன்றாக சேவிக்கலாம் /பிராட்டி திரு வடிக்கு தம் கை அணை-திரு இட எந்தை ../ செல்வம் தருபவள் ஸ்ரீ தேவி/செல்வமாகவே பூமி பிராட்டி அனுபவிக்க நீளா தேவி /கோவை வாயாள் பொருட்டு -ஆயர் தம் கொழுந்து நப்பின்னை பிராட்டி/ஒரு கொம்பை அணைக்க ஏழு கொம்பை முறித்தான்….ஈட்டிய வெண்ணெய் சாப்பிடவும் இந்த கொம்பை அணைக்கவும் அவதரித்தான் கண்ணன்..வைகுண்டேய பரே லோகே ஸ்லோஹம் சொல்லி லிங்க புராணம்..மலர் மகள் வலப் பக்கமும் இருவரும் இடப் பக்கமும் இருக்க நடுவாக வீற்று இருக்கும்..
 71st ஸ்லோஹம்
அந்யோந்ய சேஷ்டித நிரீஷன ஹார்த்பாவ
பிரேம அநுபாவமதுர பிரணய பிரபாவ:,
ஆஜச்ரந  வ்யதரதிவ்ய ரசாநுபூதி:
 ஸ்வாம் ப்ரேயசீம் ரமயிதா வனசைலநாத
பெருமாளுக்கும் பிராட்டிக்கும்
சர்வாத்மனா வுள்ள சுமநச்யம் பேசப் படுகிறது
சேஷ்டித -புருவ நெறிப்பு,புன் சிரிப்பு ,முதலான விலாச வியாபார விசேஷங்கள்
நிரீஷண –கடைக் கண் பார்வை
 ஹார்தபாவ -உள்ளே உறையும் அபிப் பிராயம் ..
தாருண்யா லாவண்யாதிகளின் அனுத்யானம்
பிரேம அநுபாவ –பிரேம அதிசயம் ஆகிய இவற்றால் 
மதுர பிரணய பிரபாவ:பரம போக்யமான அநு ராக அதிசயத்தை உடையவரான
வனசைலநாத:   திரு மால் இரும் சோலை அழகர்
ஆஜச்ர நவ்யதர திவ்ய ரசாநுபூதி:–அநவரதம் உண்டாயிருக்க செய்தேயும் அப் பொழுதைக்கு அப் பொழுது அபூர்வமாய் தொன்று கின்ற அப்ராக்ருதமான ஆனந்த அனுபவத்தை உடையவராய் கொண்டு
 ஸ்வாம் ப்ரேயசீம் ரமயிதா —தம் உடைய தேவியாரை ரசிப்பியா நின்றார்..
அந்யோந்ய திவ்ய தம்பதிகளுக்கு பரஸ்பரம் அனுபாவ்யமான படி என்றார்..
கரும் கடல் பள்ளியை நீங்கி – திரு பார் கடலில் இருந்து 12 வருஷம் பின்பு சந்திகிறார்கள் ராமனும் சீதையும் வில் இருக்கும் பொழுது -மனசை மாற்றி கொள்ளும் படியான அந்யோந்யம்.. ஹாரோபி -நடுவில் ஸ்பரிச தடங்கல் என்று ஒழித்தாள்..மித்ர பாவேன என்கிறான் அவன் மித்திரன் என்கிறாள் அவளும்..சவ் மனசு இருவருக்கும் ..கர்பவதிக்கு பிடித்தது தபோ வனம் கேட்டு பெற்றாள் கங்கா தீரத்தில் ரிஷிகள் நடுவில் இருக்க ஒரே ஆசை ..நாடகம் அரங்கேற்றம் தன தலையில் குற்றம் ஏற்று கொண்டான் ..குரங்குகளை சேவிக்க பண்ண சீதை பிராட்டியை நடந்து வர சொன்னான் பெருமாள் /அலங்காரம் -இங்கித ஜ்ஜானம் ..தீபத்தை பார்க்க கண் வலிக் காரனுக்கு பொறுக்காது என்று தன மேல் ஏற்று கொண்டவன்..சக தர்ம -கிருபையே தர்மம் ரட்ஷனம் தர்மம் இருவருக்கும்..கோல திரு மா களோடு/ திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் குடந்தை கிடந்த திரு மாலே ..பிராப்யம் மிதுனதுக்கே..ருதுக்கள் ஆனந்தமாக ராமனும் சீதையும்/தகப்பனார் பார்த்து வாய்த்த கல்யாணம் /அன்பு வளருகிறது ஹ்ருதயம் மாற்றி கொண்டனர்..
தாமரை தாதுக்கள் கொண்டு வரும் காற்று -சீதை இல்லாமல்-மூச்சு காத்து போல ..மால்யவானில் தனித்து நான்கு மாதம் இருந்தான் பெருமாள் ..மனதையும் உடலையும் அபகரித்து போகும் காற்று –பட்டுடுக்கும் பாவை பேணாள் பாசுரம் போல ..தாமரையில்  பிறந்தவள் பத்மாசினி -விட்டு பிரிந்ததால்  நலிய அந்த தாதுக்களை கொண்டு வந்ததாம் ..கேசரம் தாது கேசரி சிங்கம் தாதுக்கள் சிங்க உரு கொண்டு வருகிறதாம் ..மரத்தின் நிழலில் தங்கி தங்கி வந்ததாம் இளைப்பாறி தெம்பு கூட்டி விரக தாபம் கூட்ட சக்தி உடன் வந்ததாம் ஒலி கொடுத்து சீதை உச்வாசம் நிச்வாசம் போல ஏமாற்றி வந்தது /படை உடன் வந்தது ..அரூபம் ரூப வாசிகளை துணை கூட்டி கொண்டு வந்ததாம் ..மனதை அபகரிப்பதால் மனோகர ../மாயா சிரஸ் காட்டும் பொழுது நான் உயர் உடன் இருக்கும் பொழுது அவனும் இருக்கணும் ஸ்வரூப சத்தை இது தான் /சைதன்ய வல்லப நிம்பார்கர்  போன்ற எல்லாம் வைஷ்ணவ சம்ப்ரதாயம் நமது ஸ்ரீ  வைஷ்ணவ சம்பிரதாயம் -மிதுனமே உத்தேசம்..
72nd ஸ்லோஹம்
சுந்தரச்ய வனசைல வாஸினோ
போகமேவ நிஜ போகமாபஜன் 
சேஷஎஷ இதி சேஷதாக்ருதே;
ப்ரீத்தி மா நஹி பதிஸ் ஸ்வனாமணி 
அநந்த கருட விஸ்வக்சேனர் களாகிற நித்ய சூரிவரர் களின் பரிசர்யா விசேஷங்களை எடுத்து உரைக்கிறார் இது முதல் அடுத்த மூன்று ச்லோஹங்களால்
சேஷாத்ரி என்ற திரு நாமம் திரு வேங்கட மலைக்கு போலவே திரு மால் இரும் சோலை மலைக்கும் உண்டு..திருவனந் ஆழ்வான்  தானே திருமலையாக வடிவெடுத்து எம்பெருமானுக்கு 
பரம ஆனந்த சந்தோஹா சந்தாயாக ஸ்தான
 விசேஷமாக அமைந்து இருக்கிறபடி  .. இப் படிப் பட்டவிலஷனமான சேஷத்வம் தனக்கு வாய்த்த படியால் திரு அநந்த ஆழ்வான் சேஷன் என்கிற தன திரு நாமத்தாலே மிகவும் உகப்பு உடையான் என்கிறார்..
அஹிபதி -சர்ப்ப ராஜனான திரு அநந்த ஆழ்வான்  சுந்தரச்ய போகமேவ நிஜ போகம் ஆபஜன்– அழகர் உடைய ச்வேச்சா விஹார அநுபவத்தையே தன உடைய உடலுக்கு சாபல்யமாக நினைத்தவனாய் –சர்ப்பத்தின் உடலுக்கு -போகம் -வடமொழியில் ..பகவத் போகத்தையே சவ போகமாக கொண்டான் சேஷதாக்ருதே-லஷணம் உடைய
  சேஷத்வம் சித்தித்த படியாலே /இவன் சேஷன் என்று பலரும் சொல்லும் படியாக தனக்கு வாய்ந்த சேஷ நாமத்திலே போற வுகப்பு உடையான்
..பிராப்யத்துக்கு இளைய  பெருமாளை போல /சரீரம் வைத்து கைங்கர்யம் / பெரிய உடையார்  பிள்ளை அரையர்  சிந்தயந்தி இவர்களும் கைங்கர்யதுக்கே .. தேகம் தன அடைவே போயிற்று /சேஷத்வம் =பரார்த்தம் ச்வார்ததம் எதிர் மறை/ முமுஷுக்கு அறிய வேண்டும் ரகசியம் மூன்று முக்கியம்..ச்வாதந்த்ர்யம் ஜீவாத்மாவுக்கு உண்டு ..நான் ஆத்மாவுக்கு என்ன சொல்லணும் கேள்வியே தப்பு நான் =ஆத்மா /தேக ஆத்ம விவேகம் வேணும் ஜட பரதர்  காலத்தில் இருந்து சொல்லி கொடுக்கிறார்/ மோட்சத்தில் ஆசை  இருந்தால் இது வேணும்/விலகி இருக்கணும்..அவனையே நினைத்தால் அவனுக்கு சம மாக ஆக்குவான் /சேஷத்வமே-கைங்கர்யம்-களை அற்ற -சவ போகய புத்தி அற்று இருக்கணும்..ஆசை பிரீதி ஒன்றையே எதிர் பார்கிறான்..அனுபவத்தில் குறை ஒன்றும் இல்லை ஸ்லோஹங்களில்..புருஷம் சததோத்தித்த -தன்னையே உயர்த்தி கொள்ளணும் இதையே வேண்டி கொள்ளணும் பக்தி வளரணும்..மனசில் கொண்டு வாழனும் ..பரார்த்தம் புரியணும்..நான் செய்கிறேன் என்ற எண்ணம்  நல்லது செய்ய மட்டுமே  வேணும் ..பலம் சேஷன்-௧௪ லோகங்களையும் தாங்குகிறார் ஆதி சேஷன்..அநந்தன்-அவனையே மடியில் சிந்தாமணியை போல -ரட்ஷனதுக்கே இருக்கிறான் ..அவனது மேன்மைக்கே உழைக்கிறான் ..கைங்கர்யம் ஆதிசேஷன் /நாட்டை ஆழ விஷ்வக் சேனர்..
சேஷத்வதுக்கு இலக்கணம் ஆதி சேஷன் சர்ப்பம் ஒரு தலை நாகம் பல தலை பாம்பு /அவர் அனுபவமே தனக்கு போகமாய் /தன உடைய சரீரத்துக்கு பலமாய்/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே /புஷ்பம் பிறர்க்கு என்று இருப்பது போல சித்தான நாமும் இருக்கணும் ..தனக்கும் பிறர்க்குமாய் இருப்பது முதல் நிலை/எனக்கும் ஈஸ்வரனுக்கும் நாடு நிலை/ அவனுக்கே என்று இருப்பது நோக்கம்..அவன் ஆனந்த பட்டது கண்டு ஆனந்தம் அடையணும்..படிக்கை யான கைங்கர்யம் என்ற ஆனந்தம் இல்லை.. அதை கண்டு அவன் உகக்க அதை கண்டு ஆனந்தம் ..அவரை தவிர எதையும் பார்க்க கூடாது…உறகல் உறகல் ..என்று இவரையும் பார்த்து பொங்கும் பரிவால் அருளுவார் /சென்றால் குடையாம் ..பலவித  கைங்கர்யம்..சஷுஸ் ஸ்ரவாஸ் ஓன்று ஒன்றும் செயல் விரும்ப உள்ளதெல்லாம் தான் விரும்ப ஆசை பட்டார் ஆழ்வார்..
 
73rd ஸ்லோஹம்
வாஹநாசன விதான சாமராத் யாக்ருதி;
ககபதி ச்த்ரயீமைய:,நித் யதாச்யரதி 
ஏவ யஸ்ய ஏஷ சுந்தர புஜோ
வநாத்ரிக:த்ரயீமைய:, ககபதி
–வேதாத்மா விஹகேச்வர: என்று வேத ஸ்வரூபி யாக
சொல்லப் பட்ட  பெரிய திருவடி..
வாஹநாசன விதான சாமராத் யாக்ருதி சந்–தாசஸ் சகா வாஹனம் ஆசனம் த்வஜோ யச்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய –என்று ஆளவந்தார் அருளி செய்த படியே சமய அனுகுணமாக வாகனமாயும் ஆசனமாயும் விதானமாயும் சாமரமாயும் மற்றும் பல வாயும் வடிவு எடுத்தவனாய் கொண்டு..
யஸ்ய நித்ய தாச்யரதி –யாவர் ஒரு அழகருக்கே நித்ய கைங்கர்ய நிரதராய் நின்றாரோ
ஏஷ சுந்தர புஜோ வநாத்ரிக:அப்படி பட்ட சுந்த தோளுடைய பெருமாள் திரு மால் இரும் சோலையில் உறைகின்றார் ..அடியேன் இடத்திலும்  அது போல சகல வித கைங்கரியங்களையும் கொண்டு அருள வேணும்..
தாஸ்ய ரதி -கைங்கர்யத்தில் விருப்பம் /மேலாப் பறப்பான் வினதை சிறுவன். சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை /வேதங்கள் தான் சிறகு/தாசன் சக நண்பம் ஆசனம் தவசம் விதானம் அனைத்தும்/.கண்கள் காயத்ரி/ கருட தண்டகம் கருட  பஞ்சாசத்-தேசிகன்/தலை திரிவில் யஜு நாம தேயம்/ கல் கருடன் சேவை /திரு கண்ண மங்கை கருடன் / மரத்தினில் கருடன் மூல மூர்த்தி கர்நாடக -/அம சிறை பறவை /வெம் சிறை புள/ கூட்டி கொண்டு போனால்
74th ஸ்லோஹம்
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய வை
 ப்ரபுக்த சிஷ்டாச்யத சைன்ய சத்பதி:,
சமஸ்த லோகைக துரந்தாஸ் சதா
கடாஷ வீஷ்யோச்ய ச சர்வ கர்மஸு.. 
சைன்ய சத்பதி:, ஸ்ரீ சேனா பதி ஆழ்வான்..
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய வை ப்ரபுக்த சிஷ்டாச்யத  –திரு மால் இரும் சோலை மலை தலைவரான அழகர் உடைய போனகம் செய்த சேடம் உண்பாராய் கொண்டு சேனை முதலியார்க்கு  சேஷசநன் என்றே திருநாமம்– த்வதீய புக்தொஜ்ஜித சேஷ போஜனர் -பிரியேண சேனாபதினா -ஆளவந்தார்   ..
அச்ய கடாஷ வீஷ–ஜகத் ஸ்ருஷ்ட்டி ஆதி சகல வியாபாரங்களிலும் அழகர் உடைய கடாஷ வீஷணம் ஒன்றையே எதிர் பார்ப்பவராய்
சதா  சமஸ்த லோகைக துரந்தாஸ் –ஸ்ரீமதி விஷ்வக் சேன ந்யச்த சமச்தாத்மைச்வர்யம்  என்றும்  ஸ்ரீ ரெங்க சந்த்ரமச மிந்திரியா விஹர்த்தும்  வின்யச்ய விச்வசித சின்நயன அதிகாரம் யோ நிர்வஹதி என்றும் சொல்லுகிறபடியே எப்போதும் சமஸ்த லோக நிர்வாஹராய் விளங்கா நின்றார்..
ஜகத் வியாபார சக்தி உண்டு பிராப்தி இல்லை முக்தர் களுக்கு .
.ஜகத் நிர்வாக கைங்கர்யம்/ பிரம்மா மாத்துவார்/ போனகம் செய்த -பிரசாதம் சேஷ அசன -உண்டு வாழ்வார் கலத்தது உண்டு….அனைத்து கர்மங்களும் திரு கண் பார்வையை பார்த்தே பண்ணுவார்..

கார்த்திகை யானும்  கரி முகத்தானும் -முருகனும் பிள்ளையாரும் என்பார் தப்பாக /சூத்திர வதி/விஸ்வக் -பல திசைகளிலும் சேனை விஷ்வக் சேனர் அவனுக்கே பெயர்
கூரத் ஆழ்வான்  திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: