சுந்தர பாஹு ஸ்தவம் 57 to 62 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

57th ஸ்லோஹம்..

சௌந்தர்யா  அம்ருத ஸார பூர பரிவா ஹாவர்த்த கர்த்தாயிதம்
 யாத:கிஞ்ச விரிஞ்ச சம்பவன் பூம் யம்போஜ சம்பூதிபூ:
நாபிச் சும்பதி கும்பி கும்ப நிப நிரப்பாத ஸ்தனஸ் வர்வதூ
சம்புக் தத்ரு மஷண்ட சைலவசதே ராரூட லஷ்ம்யா ஹரே:   
கொப்பூழ் தன்னை அநுபவிகிறார் இதில்..கொப்பூழில் கமலப் பூ  அழகர்..
 கும்பி கும்ப நிப நிரப்பாத ஸ்தனஸ் வர்வதூ சம்புக் தத்ரு மஷண்ட சைலவசதே ராரூட லஷ்ம்யா ஹரே நாபிச் சும்பதி–யானையின் கும்பச்தலம் போன்று இருக்கும் கொங்கை தலங்களை உடைய தேவ மாதர்கள் வந்து இறைஞ்சி ஏத்தி அநுபவிக்கும் இடமான திரு மால் இரும் சோலையை உறை விடமாக உடையவரும் ஏறு திரு உடையான் என்ன பெற்றவருமான அழகரின் திரு நாபி எப் படிப் பட்டது என்னில்..
சௌந்தர்யா  அம்ருத ஸார  பூர பரிவா ஹாவர்த்த கர்த்தாயிதம் யாத:— சௌந்தர்யம் ஆகிற அமுத ஆறு பெருக புக அதிலே தோன்றிய சுழி போல /அழகரின் திரு மேனி அடங்கலும் பெரு வெள்ளம் கொத்து பெருக அந்த சௌந்தர்ய பிரவாஹத்தின் வேகத்தினாலே உண்டான சுழி–சுற்றோரம் திரைந்து எழுந்து நடுக் குழித்திட்ட சுழி போல் சுந்தரமாம் உந்தி மலரும் –
விரிஞ்ச சம்பவன் பூம்யம் போஜ சம்பூதிபூ:— உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை  என்றும் தன நாபி வலயத்து பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க என்றும் சொல்லுகிறபடியே நான்முகனுக்கு பிறப்பிடமாக உள்ளது..
நாபி சும்பதி -நாபி கமலம் விளங்கு கிறது / சோலை ஷண்ட/ஏறு திரு உடையானின் ..சவரக லோக வது- ச்வர்வது /வது வரன் போல  ..ஸ்தான -ச்வர்வது/ கும்பி =குடம்/ கும்ப =யானை தலை கவிழ்த்தால் போல /சம்புக்த =வணங்க பட்ட / மலைக்கு வர்ணனை /கொப்பூழில் எழு கமல பூ அழகர் .சௌந்தர்ய அமிர்த சாறு / வெள்ள பரிவாகம் நூபுர கங்கை விட வேகமாய் இருக்கும் ஆவர்த்த -சுழி/எதற்கு சுழல் ஏற்ப்பட்டது /வரதராஜ ச்த்வதில் சொன்னார் -விஷமா கதி அகலமாக ஓடி -தோள் கல் அகலம்/ இடுப்பு சிருத்ததால் சுழன்றது ..பள்ள தன்மையே நாபி /பாகவத அனுபவ ரச விவசர்கள்/ அபிநிவேசம் ஈடு பாடு தான் வாசுகி போல /பரி பிராமித =சுழல விடப் பட்ட /அழகு தான் பால் கடல் க்ஜானமே மத்து..விரிஞ்ச சம்பவன் பூமி அம்போஜ பிரமனை படைத்து இருப்பிடமாய் இருக்கும் தாமரை

58th ஸ்லோஹம்..

சுந்தரச்யகில சுந்தர பாஹோ;
ஸ்ரீ மஹா தருவநாசல பர்த்து:,
ஹந்த யத்ர நிவசந்தி ஜகந்தி 
ப்ராபித க்ரசிம தத் த நு மத்யம் ..
இடை அழகை அநுபவிகிறார்..
அழகரின்  எந்த மத்யத்தில் பிரளய காலத்தில் உலகங்கள் எல்லாம் உறைகின்றனவோ அது எவ்வளவோ பருத்து இருக்க வேணுமே ..அப்படி இன்றி க்ருசமாய் இருகிறதே அந்தோ!-விஸ்மயம் தோற்ற அருளி செய்கிறார் ..அண்டர் அண்ட பகிர் அந்தத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட – என்றும்- மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி -என்றும்-சொல்லுகிற படி சகல சராசரங்களையும் உள்ளே கொண்டு திரு வுதரம் பெருத்து 
அன்றோ விளங்க வேணும்..உண்டது உருக்காட்டாதே   சிறுத்து கிடக்கிற படி என்னோ !உத்தம புருஷர்களின் உதரம் பிரக்ருத்யா க்ருசம் என்றது ஆயிற்று -பிராபிதக்ரசிம-அடைவிக்க பட்ட க்ருசத்வத்தை உடையது
தனு மத்யம்-சமஸ்த பதமாக கொண்டு தனு என்று திரு மேனியையும் /வ்யச்தமாய் கொண்டு சூஷ்மமான என்றும் கொள்ளலாம்  ..
இடுப்பு சின்னது சின்ன ச்லோஹம் ..பரம புருஷ லக்ஷணம் இடுப்பு இளைத்து / ராமன் சீதை மத்யத்தில் சுமத்யமா இடை குறைந்த சீதை இடையில் இருக்க லக்ஷ்மணன் கடைசியில்..ஹந்த -ஆச்சர்யம் /எல்லாம் வைக்கலாம்  இருந்தாலும் சூஷ்ம மான இடம் / யாத்ரமத்யே  ஜகந்தி நிவசந்த்தி -அந்த உயர்ந்த இடம் /தாணு மத்யம் சூஷ்ம மான பகுத்து / தத் அந்த உடம்பின் மத்யத்தில் என்றும் கொள்ளலாம்..நிவசந்தி ஜகந்தி வர்திகின்றன -வர்த்தமான காலம் .அர்ஜுனன் பார்த்து சொல்கிறான் எப்போதும் இருக்கும்

 59th ஸ்லோஹம்..

 பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்
ஹஸ்தி ஹஸ்த யுகலாப சுவ்ருத்தவ்
ராஜத: கிராமக்ருசவ் ச சதூரு
சுந்தரச்ய வன பூ தர பர்த்து: 
வனபூதர பர்த்து சுந்தரச்ய சதூருராஜத:–  அழகரின் திரு துடைகளை அநுபவிகிறார்
 பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்-
ஸ்ரீ ஆதி ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றி மது கடைபர்கள் வேதங்களை கொள்ளை கொண்டு கடலில் மூழ்கி மறைந்து விட உலகு பேர் இருள் மூடி நலிய ,எம்பெருமான் கடலில் புகுந்து துடையில் இறுக்கி முடித்தான் வரம்
பழுதாமைக்காக துடையில் இறுக்கி முடித்தான்..
ஹஸ்தி ஹஸ்த யுகலாப சுவ்ருத்தவ்–யானையின் இரண்டு துதிக்கைகளோடு ஒத்தவை /உருண்டு இருக்கும் /ரம்பாஸ்தம்பா: கரிவரகரா:-என்று வரதராஜ ஸ்தவத்திலும் அருளி இருக்கிறார்..
அகரமான கிரிசம் முன்பு பார்த்தோம்/ முழுக்க  இளைத்து இதுவோ மேலே பருத்து கீழே இளைத்து இருக்கும் தொடைகள் /கீடம் -சிறு புழுக்கள் /பிஷ்ட -பொடி பொடி ஆக்கினான்/ முன் பரி முகமாக -கொழுப்பு சக்திதான் இரண்டு திவலையாக இருந்து மது கைடபர் ஆனதாம் /வேத அபகாரம் குரு பாதகம் தைத்ய பீடாதி ஆபத் விமோசனன்- கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டேன் /கதய த்ரயத்தில் தான் பிர பன்னனுக்கு சரணா கதி உபதேசம்/ கீதை ஸ்ரீ பாஷ்யம் வேதார்த்த சங்க்ரகம் – மற்றவர்கள் சொன்னதை விளக்கினார் அவற்றில்–.எம்பெருமானார் தரிசனம்..தாயார் திரு கையில் லீலா பத்மம் தேன் ஒழுக பிரம்மா குழந்தைக்கு பால் ஊட்ட /ஹஸ்தி =யானை ஹஸ்த -துதிக்கை  யுகள -இரட்டை அபூத வுவமை ..பிராபித கிரசமம் ..யானை துதிக்கை போல /வாழை தண்டை  போல/மரகத  தூணை போல/அன்று அரியாய்- கீறுவதற்கு பலமாய் இருந்த தொடைகள்

60th ஸ்லோஹம்.

யவன வருஷ ககுதோத்பேத நிபம் நிதராம்

பாதி விபோருபயம் ஜானு சுபாக்ருதிகம்

 சுந்தர புஜ நாம் நோமந்தர மதி தாப்தே:

சந்தன வனவிலசத் கந்தர வருஷ பபதே:

அழகரின் முழம் தாள்களை அனுபவிகிறார்  ..

யானையின் இரண்டு துதிக்கைகளோடு ஒத்தவை /உருண்டு இருக்கும் /ரம்பாஸ்தம்பா: கரிவரகரா:-என்று வரதராஜ ஸ்தவத்திலும் அருளி இருக்கிறார் யவன வருஷ ககுதோத்பேத நிபம் நிதராம் பாதி விபோருபயம் ஜானு சுபாக்ருதிகம் சுந்தர புஜ நாம் நோமந்தர மதி தாப்தே:சந்தன வனவிலசத் கந்தர வருஷ பபதே:அழகரின் முழம் தாள்களை அனுபவிகிறார்  மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தர தோள் உடையான் -நாச்சியார் திரு மொழி என்றும் சந்தன பொழிலின் தாள் சினை நீழல் ….மால் இரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே  பெரிய திரு மொழி என்றும் அழகரின் முழம் தாள் இணை யவனமாகிற வருஷப ராஜத்தின் முசுப்புக்கள் தான் முழம் தாள்களாக மிளிர் கின்றன ..யுவா குமார -என்றது ருக் வேதமும் ..யுவா அகுமார என்று பத பாடம் ..அகுமார என்றது கவ்மாரம் கழியும் தசையும் யவனம் வந்து தலை காட்டும் தசையுமாய் இருக்க பெற்ற நிலைமை ..அது தான் யவனம்..

சந்தன பொழிலின்  தாள் பொழில் நீளம் மால் இரும் சோலை தொழுமின்-திரு மங்கை ஆழ்வார்..காளை மாட்டின் திமில் க்குத் முசுப்பு போல இருக்கும் முழம் கால்கள் /கரியான் ஒரு காளை வந்து வெள்ளி வளை கை பற்ற /நான்கு கதி /பஞ்ச கதியும் சேவிகிறோம் சிங்கம் போல பர்வத குகையில் இருந்து வரும் பொழுது/தேஜஸ் தோற்றும் யானை பெருமை /புலி காளை பாம்பு /காகுத்தனும் வாரானால்/ ககுச்த வம்சம்..தேவேந்தரன் ககுதின் திமிலில் அமர்ந்து தேவர்களை ஜெயித்தவன்..அதே திமில் இரண்டு முழம் தாள் /எழில் மதத்தின் ..தவழ்ந்தான்  முழம் தாள் இருந்தவா காணீரே ..நீ இங்கே நோக்கி போ சந்த்ரனை யசோதை கேட்டாள் சிறுமையின் வார்த்தையை மாவலி இடை சென்று கேள் /மங்களம் கொடுக்கும் மங்களம் வடிவுடன் இருக்கும்  ..

61st ஸ்லோஹம்..

அதோ முகந்யஸ் தப தார விந்தயோ:

உதஞ்சி தோத்தாத்த சுநால சந்நிபே ,

விலன்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹஅதோ த்ருசவ்

வநாத்ரி நாதஸ்ய சு சுந்தரச்ய மே.

அழகரின் திரு கணைக் கால்களை அனுபவிகிறார் இதில்..

இதில்  திருவடிகள் கீழ் முகமாக வைக்க பட்ட தாமரை மலர்கள் /திரு கணைக் கால்கள் நாள தண்டங்கள்..

வநாத்ரி நாதஸ்ய சு சுந்தரச்ய-திரு மால் இரும் சோலை மலை தலைவரான அழகர் உடைய..

அதோ முகந்யஸ் தப தார விந்தயோ:  உதஞ்சி தோத்தாத்த சுநால சந்நிபே ஜங்கே,விலன்க்ய–அதோ முகமாக வைக்க பட்ட திரு வடித் தாமரைகளின் உடைய வருத்தா காரமாய் ஆயுதமாய் இருக்கின்ற அழகிய நாள தண்டங்களை ஒத்த திரு கணைக் கால்களை தவிர்த்து..

மே. த்ருசவ்க்வ நு ரம்ஹத:-என் உடைய கண்கள் ஆனவை வேறு எங்கு செல்லும் ! எங்கும் செல்லாது இத் திரு கணைக் கால்களையே அனுபவித்து நிற்கும்..அதோ முகமாக திரு வடி தாமரைகளை வைக்க வேண்டிய காரணம் -திரு மலையின்   போக்யதா அதிசய பிரயுக்தமான ப்ரீதி விசெஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என நினைத்து கீழ் முகமாகக பட்டன .. 

திரு வடி சொல்லி கணை காலை சொல்கிறார் ..
கவிழ்த்து வாய்த்த தாமரை /பச்சை நாள் தான் கணைக் கால்  உயர்ந்தும்  பருத்தும் இருக்கும்
விலன்க்ய -விலக்கி போக முடியாது ..ஜனன பதவி ஜானத்த்வம் விட்டு போவான் ..
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி -அதோ முகம்..முகம்திரு மலையின்  உச்சி முகந்து முத்தம் கொடுக்க….ஒண் சுடர் விண் சேரி நான் முகன்  ..

62nd ஸ்லோஹம்..

சுசுந்தரச்யாச்ய பதார விந்தே
பதார விந்தாதிக சவ்குமார்யே
அதோன்யதா தே பிப்ர்யாத் கதம்
 நு ததாசனம் நாம சஹாச்ர பத்ரம்..
இதிலும் அடுத்த ஸ்லோஹத்திலும் அழகர் உடைய திருவடி இணைகளும் ஆசன பத்மமுமான சேர்த்தி அழகை அநுபவிகிறார்..
தண் தாமரை சுமக்கும் பாத பெருமானை -திரு வாய் மொழி /அடி ஜோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ /குளிர்தியிலும் பரிமளத்திலும் செவ்வியிலும் தாமரை பூ தோற்று போயிற்றாம் வெற்றி பெற்ற திரு வடியை சுமக்க வேண்டியதாக அருளுகிறார் -தண்  தாமரையின் மீது விளங்கும் பாதன் என்னாமல் தண்  தாமரை சுமக்கும் பாதன்..
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் ..தண்  தாமரை சுமக்கும் / அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ..ஆயிரம் இதழ் கொண்ட தாமரை சொவ்குமார்யத்தில் ஏற்றம் குளிர்ந்து வெண்மை செவ்வி மாறாமல் மணத்துடன் மென்மை..அதக =ஆகையால்..மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து  /ஒண் மிதி -அழகிய மிதி ..தலைக்கும் மெத்து மெத்து என்று இருந்தது..தாய் அணைப்பது போல..
கூரத்  ஆழ்வான் திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: