சுந்தர பாஹு ஸ்தவம் 14 to 20 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

14th ஸ்லோஹம்

பீதாம்பரம் வரத சீத லத் ருஷ்டி பாதம்
ஆஜா நுலம்பி பூஜை மாய த கர்ண பாசம்
ஸ்ரீமந்  மஹா வனகிரி இந்திர நிவாச தீஷம்
 லக்ஷ்மீ தரம் கிமபி வஸ்து மம ஆவிரச்து
கீழ் வரை திரு மலையின் வளம் சொல்லி தலை கட்டினார் ..இனி அழகரின் துதியிலே ஒருப்படு கிறார் ..கிமபி வஸ்து மம ஆவி ரஸ்து -அழகர் என்கிற பரஞ்சோதி என் கண் முன்னே நெஞ்சின் உள்ளே தோன்ற கடவது ..அது எப்படி பட்டது என்னில்
பீதாம்பரம் -பீதக வாடை பிரானார் என்கிற படியே பீதாம்பர தரமாய் இருக்கும் ..
வரத சீதல  திருஷ்டி பாதம்  வேண்டுவார் வேண்டின வரங்கள் எல்லாம் அளிக்க வல்ல
 சீதள மான  கடாஷ வீஷணத்தை உடையதாய் இருக்கும்
ஆஜாநுலம்பிபுஜம்—-முழந்தாள் அளவும்
 தொங்குகிற புஜங்களை உடைத்தாய் 
ஆயுத கர்ண பாசம் -தோள் அளவும் நீண்ட திரு செவி மடல்களை உடையதாயும் 
ஸ்ரீ மந் மஹா வந கிரீந்திர நிவாச தீஷம்  -திரு மால் இரும் சோலை மலையிலே நித்ய வாச நிரதமாய் இருக்கும/
லக்ஷ்மீ தரம் -பூவார் திரு மா மகள் புல்கிய மார்பதாயும் இருக்கும்
இப்படி பட்ட விலக்ஷண வஸ்து அடியேனுக்கு விளங்க வேணும்..வண்டு குயில் எல்லாம்  ஆழ்வார்கள்/ மான் போல ஆச்சார்யர்கள் ..த்யான ஸ்லோகம்
கரை போட்டு இருக்கிற மஞ்சள் பட்டாடை பீதாம்பரம் ..அயன் மலை அடைவது அது கருமமே –மலையே பாடி வந்தார் அடுத்து ..முடி சோதியாய்  உன் முக சோதி ..கட்டுரையே ..மலையின் ஒரு அவயவமாய் அவனையும் அனுபவித்தார் .முடியார் திரு மலையில் மூண்டு நின்ற மாறன் அடி வாரம் தன்னில் அழகர் வடி  வழகை பற்றி .முடியும் அடியும் பல் கலனும் முற்றும் அனுபவித்தார் முன் ..அது போல் ஆழ்வானும்..
முடி சோதியாய் அடி சோதி பல்கலனும் முற்றும் அனுபவித்தார் 
.மாசூணா சுடர் உடம்பை சுட்டு உரைத்த நன் பொன் .பரஞ்சோதி என்னும் .
முதல் பதிமூன்று ஸ்லோகங்களிலும் ஆழ்வானும். அனுபவித்து விட்டு
 இப்போ பீதாம்பரம் ஆரம்பிக்கிறார் ..இடையில் தரித்த -மனசை ஈர்த்தது ஆழ்வார் முடியை சொல்லி ஆரம்பிக்கிறார் நாயகி  பாவத்தில் அவர் எதையும் அனுபவிக்கலாம் ஆச்சார்யர் வியாக்யானம் தான் அருளுவார்கள் ..வூரும் நாடும் தன்னை போல் பிதற்றும் கலியும் கெடும் கண்டு கொண்மின் .சீதள குளிர்ந்த திருஷ்டி கடாஷம் அனுபவித்தார் ..திரு கைகள் முழந்தாள் அளவு/ காரண பாசம் அடுத்து -ஸ்ரீமன் மகா பெருத்த மலையில் தீஷை எடுத்து கொண்டு –பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் போல …திரு மலை ஆழ்வார் மேல் ..திரு மலை ஆழ்வார் பெயர் திரு வாய் மொழி பிள்ளைக்கும் அதே பெயர் .ரஹச்யம் விளைந்த  மண் கொண்டு வந்து கட்டினார் மா முனிகள் ..உயந்த வஸ்து மனக் கண்ணில் விடாமல் இருக்கணும் .பீதக ஆடை பிரானார் -.பிரதம முதல் குரு -விராட் ஸ்வரூபம் பாகவதம் இரண்டாவது ஸ்கந்தம் ..த்யானதுக்கு வழி திவ்ய மங்கள விக்ரகதோடு சேவிக்க உபதேசித்தார் சுகர்..பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி சமுத்ரம் தான் பீதாம்பரம் ..கரை தான் நுரை ..
மன்னார் குடி ஏக வஸ்த்ரம் வெண் பட்டில் கரு நீல கரைபோட்டு அதில்  தங்க சரிகை போட்டு இழுத்து கச்சம் கட்டி சேவை -ஏகாந்தத்தில் சேவிக்கணும்..-சமர்ப்பித்த பின்பு கச்சம் கழற்றி விடுவார்கள் ..ரிஷப கதிக்கு மணி வாசிப்பர்கள் /காளைமாடு ஓடுவதால் ..ஸ்வர்ண குடை முத்து குடை திரு மேனி முழுவதும் வஸ்த்ரம் அபாய ஹஸ்தம் மட்டும் தனித்து இருக்கும் .வீணை ஏகாந்தம் ..கைலி மாத்தறது முக்கியம்..வியாழ கிழமை ஒரே வர்ண ஆடை ..சௌரி கொண்டை சாத்தி மஞ்சள் l ஆடை .. சுந்தர சேவை ..துவர் ஆடை உடுத்து ஓர் செண்டு சிலுப்பி -நாக பழ கரை பட்டு விடும் என்று யசோதை -மான் தோல் மர உரி-ஜீன்ஸ் போல -குடையும் செருப்பும் கொடாதே –சகுந்தலை ஆடை பார்த்து மற்ற பெண்கள் தாங்கள் ஆண்களாக பிறக்க விலை என்று ..ராமனை பார்த்து ரிஷிகள் நினைத்தது போல -எதை சாத்தி கொண்டாலும் பீதாம்பர அம்சம் தான் ..அழகர் மலை கண் கடாஷம் -புகை மூட்டதொடு -அறுபத்து நாலு சதுர் யுகம் பார்த்த பெருமாள் சௌரி ராஜன் ..திரு வடி திரு மஞ்சனம் தான்  –..
திரு மேனி ரட்ஷனம்  ..பெரிய ஆழ்வார் பாவனையில் அர்ச்சை அவதாரத்தை நாம் ரட்சிக்கணும்..
பரிவு நிறைந்து இருக்கணும்.. கடாஷம் பிரார்த்திகிற -பூதராக்கிய நெடும் நோக்கு ..புனிதர் ஆக ..சபரி பார்வை பட்டதும் மோட்ஷம் ..திரை போட்டு மறைக்க கூடாது என்னை ரட்சிக்க நான் –இவன் நினைவு மாறினால்.. அவன் நினைவு எப்ப்தும் உண்டு அது சாபல்யம் அடைய ஒருங்கே பிரள வைத்து திருவாய் மொழி ..ஆ முதல்வன் கடாஷத்தால் எம்பெருமானார் .வூமை பெற்றார்/  சிரமணி விதுர ரிஷி பாதணிகள் பெற்றார்கள் -உன் தாமரை கண்களால் நோக்காய் ..சத்வ குணத்துடன் இருக்க ..செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவே..நீண்ட புஜங்கள் சுந்தர தோள் உடையான் ..திரு காதுகள் அடுத்து ..திரு ஆபரணங்களில் காது காப்பு  ஆச்சர்யம் –மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே ..உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்  கேளாய் .கூப்பீடு கேட்க்கும் இடம் திரு பாற் கடல் ..சப்த சக : தீஷை கொண்டு இருக்கிறான் ..மனதுக்கும் வாக்குக்கும் எட்ட வில்லை தாயாரை பற்றுகிறார் ..தாள் கண்டார் தாலே கண்டார் இவள் கடாஷத்தால் சக்தி பெற்று லக்ஷ்மி தரம் ..அவயவ சோபை/ திரு ஆபரண சேர்க்கை /ஆடை அழகு /திரு மலை அழகு -இதுவும் அவனின் ஒரு அவயவம் போல் தான் ..லக்ஷ்மி தரமும் திரு மார்பு நாச்சியார் அழகும் திரு ஹார மார்பு ஆபரணம் இவளே ..
 15th ஸ்லோஹம்
ஜனி ஜீவா நாப்யய விமுக்தயோ எதோ 
ஜகதாமிதி சுருதி சிரஸ் சுகீயதே 
ததிதம் சமஸ்த துரிதைகபேஷம் 
வந சைல சம்பவமஹம் பஜே மஹ :
  இனி வேதாந்த பிரக்ரியை யாலே ஸ்துதிக்க வ்பக்ரமிகிறார்-யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ,ஏன ஜாதானி ஜீவநதி ,யத் பிரயந்த்யபி சம்விசந்தி தத் பிரம
ஜகதாம்
 ஜனி ஜீவனாப்யய விமுக்தய -ஜகதுக்களுக்கு உத்பத்தி ஸ்திதி லயங்களும் மோஷ பிராப்தியும்
யதா சுருதி சிரஸ் சுகீயதே -யாதொரு பரஞ்சோதி இடத்தின் இன்றும் ஆகின்றன என்று வேதாந்தந் களிலே ஒதப் படுகின்றனதோ 
சமஸ் த துரித ஏக  பேஷஜம்  -சகல பாபங்களுக்கும் அரு மருந்தாய்  
வன சைல சம்பவம் -திரு மால் இரும் சோலை மலையிலே தோன்றிற்றாக உள்ள
ததிதம் மஹ -அப் படிப் பட்ட பரஞ்சோதியை
அஹம்  பஜே நான்   பஜிகிறேன்..
மோஷ பிராப்தி தனியாக வீடாம் தெளி தரு நிலைமை யது ஒழிவிலன் என்று ஆழ்வாரும் /சம்சார விமோசன என்று ஆளவந்தாரும்  அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி என்று கீதையிலும் அருளி செய்தது போல..
ஜகத் காரணத்வம்/சிருஷ்டி ரட்ஷனம் லயம் /விமுக்த -மோட்ஷம் -ஒரே மருந்து இவன் ..பரந்ஜோதிஸ்..நீ பரமாய் நின்ற பின் ..மஹா -ஒளியை குறிக்கும் –உபமானம் இதற்க்கு இல்லை ..மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனே ..மருந்தும் அவனே .. நிர்வாணம் பேஷஷம் பிஷஷு போல -சம்சாரம் வியாதி ..இருக்காதற்கு மருந்து சரணா கதி -ஒரு தடவை போதும்..அமலன் ஆதி பிரான் ..ஆதி -ஜகத் காரண பூதன் அமலன் -அண்டினவர் குற்றங்களையும் போக்குவான் அடியவர்களுக்கு மோட்ஷம் அளிகிறவன்-தேசிகன் ..வைகுண்ட பிராப்தி இவன் ஒருவனாலே தான் முடியும் -நன்றே செய்க அன்றே செய்க -சரணா கதி ..ஓவஷதம் -இவன் தான் ஏக பேஷஷம் -ஒரே மருந்து ..புத்துணர்வு மலையில் ஏறினாலே ..ஏகாந்த அனுபவம் முக்கியம் தொட்டி திரு மஞ்சனம் துவாதசி  அவன் திரு வடி பட்ட தீர்த்தம் .நோய் போம் மருந்து  எது என்று தெரிந்து கொள்ள நாய் போல திரிந்தேன் ஆழ்வார் என்கிறார் கம்பர் சடகோபர் அந்தாதியில்
16th ஸ்லோஹம்
சத் ப்ரஹ்மாத்ம பதைஸ் தராய் சிரஸி யோ  நாராயனோக்த்யா ததா 
 வ்யாக்க்யாதோ  கதி சாம்ய லாபத விஷயா நன்யத்வ போதோஜ்ஜ்வலை:
நிஸ் துல்யாதி காமத் விதிய மம்ருதம் தம் புண்டரீ கேஷனம் 
 பிராரூட சரியம் ஆஸ்ரே வநகிரே: குன்ஜோதிதம் சுந்தரம்..
பர  பிரமத்தின் ஸ்வரூப /ரூப /குண /விபூத் யாதிகளை சம்சய விபர்யய மற நிர்ணயிக்க –சகல சாகா பிரத்யயன்யத்தாலும் /சகல வேதாந்த பிரத்யயன்யத்தாலும் செய்ய வேணும்..அர்த்தத்தின் அங்க உப அங்காதிகளை நேராக அறிக்கைக்காக /அந்யோந்ய விரோதம் பிறவாத படி விஷய விபாகம் பண்ணி ,தனக்கு அபிமிதமான அர்த்தங்களோடு சேரும் அவற்றை சேர்க்கை ..இதையே -கதி சாம்ய -என்ற பாத்தாலே விவஷிகிறார்..சாந்தோக்யத்தில் -சதேவ சோமய இதம் ஆக்ரா ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -என்று காரண வஸ்து -சத்-உள்ளது என்று தெரிவித்து  மேலே பிரம்மா வா இத மேவ ஆக்ரா ஆஸீத் -என்று அந்த காரண வஸ்து பிரம்மா சப்ததாலே அந்த காரண வஸ்து பெரியது என்று தெரிவித்து ….மாமா யோநிர் மஹாத் பிரம என்றும் தத் க்ஜானம் பிரம சம்ஜ்ஜிதம் -என்பதால் அந்த காரண வஸ்து ஆத்மா வா இதமேக எவாக்ரா ஆஸீத்  நாந்யத் கிஞ்சன மிஷத்  என்றும் நாராயணனே என்றும் நாராயண அனுவாகமும் சூபாலோபநிஷத்தும் நிஷ் கருத்து கொடுத்தன..ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான:-என்ற அவனே திரு மால் இரும் சோலையில் சேவை சாதிக்கிறான்..
நிச்துல்யாதிகம்-ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயா –ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே -என்பதால் -இந்துரிந்துரிவ ஸ்ரீமான் ககனம் ககனாகாரம் சாக்ராஸ் சாகரோபமா: ராம ராவனயோர் யுத்தம் ராம ராவநோயோரிவ போல தானே தனக்கு வுவமன் என்றும்  தன ஒப்பான் தானாய் வுளன் காண என்றும் அருளி செய்தது போல
அத்விதீயம் அம்ருதம் -ரசோ வை ச -என்றும் எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திரு மால் இரும்  சோலை கோனே -என்றும் விலக்ஷன திவ்ய அமிர்தம் -பரம போக்யன்
புண்டரீகேஷணம்-தாமரை போல் கண்ணான் /தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ மஷிணீ போல
ப்ராரூட ச்ரியம்–நாறு நறும் பொழில் மால் இரும் சோலை நம்பிக்கு -ஈறு திரு வுடையான் ..மேலே ஆரூட ஸ்ரீ என்றும் ஆரூட லஷ்மையா ஹரே -என்றும் அருளி செய்கிறார் ..பிராட்டி தானே ச்வயம்வரித்து வந்து சேர பெற்ற பெருமாள்
வநகிரே: குஞ்ச்ஜோதிதம் சுந்தரம் ஆச்ரையே–குஞ்சம் ஆவது லதாக்ருஹம் .. அந்த அழகரை அடி பணிகின்றேன் என்றார்
குஞ்சம் -தோட்டம் அதில் தோன்றிய சுந்தர தோளன்..குன்ஜோதிதம் சுந்தரம் ..கதி சாம்யம்/கதி = நடையும் ஒரே கருத்து என்கிறார் ….சத் பிரமம் ஆத்மா மூன்று சொல் -பொது சொல் உள்ளதா இல்லாததா  -சத் தான் /அடுத்து சின்னதா பெரிசா பெரிசு தான் பிரம்மா /ஆத்மா அடுத்து ..மூன்று சொல்லும் நாராயணன் என்று கதி சாம்யதால் அருளுகிறார்….த்ரயீ சிரஸ் =வேதாந்தத்தில் ..ததா வ்யாக்க்யாதோ -உரை எழுத பட்டதோ ..லபத போத -கிடைத்த அறிவு /பிராரூட  சரிய =ஏறு திரு உடையான்-ஏறி அமர்ந்தாள் பிராட்டி / எப்போதும் ஸ்ரீ சம்பந்தம் உடையவன் /அடிகடி அருளுவார்../சாக -வெள்ளாடு பசு பொது சொல்/குடை பிடித்தவரை- மாணவரை கூப்பிடு /சிறப்பு சொல்/அது போல் நாராயண  சிறப்பு  சொல் சத் பிரம்மா ஆத்மா பொது சொல்கள்..நிச்துல்ய அதிகம் அத்விதீயம் அம்ருதம் புண்டரீகேஷணம்.. லதா க்ருஹம் செடி வீட்டுக்கு..
 17th ஸ்லோஹம்
பதிம் விச்வஸ் யாத்மேச்வரமிதி பரம் பிரம புருஷ :
பரம் ஜ்யோதிஸ் தத்வம் பரமிதி ச நாராயண இதி ,
ஸ்ருதிர் ப்ரஹ்மேசாதீன் ததுதித விபூதீம்ஸ்து க்ருணதீ
 யமா ச ஆரூட ஸ்ரீஸ் ச வனகிரி தாமா விஜயதே
பதிம் விச்வஸ் யாத்மேச்வரம் என்றும் நாராயணபரம் பிரம என்றும் விச்வமே வேதம் புருஷ என்றும் பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய  என்றும் தத்வம் நாராயண: பர : என்றும் நாராயண  ஏ வேதம் சர்வம் என்றும் சுருதி வாக்யங்களை சேர்த்து அருளுகிறார்
ப்ரஹ்மேசாதீன் ததுதித விபூதீம்ஸ்து க்ருணதீ–பிரமன் சிவன் முதலிய தேவர்களை பகவத் விபூதி களாகவே தெரிவித்ததாய் கொண்டு
யம்  ஆஹா -யாவர் ஒரு அழகரை பேசி நின்றதோ -நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே , நாராயணாத் ருத்ரோ ஜாயதே -போல
ச ஆரூட ஸ்ரீஸ் ச வனகிரி தாமா விஜயதே–வேதாந்த சித்தனான அந்த எம்பெருமானே ஏறு திரு வுடையான் என்கிற திரு நாமத்தோடு தெற்கு திரு மலையில் சர்வோத் கர்ஷ சாலியாக விளங்குகிறான்
விஜயதே விளங்குகிறான் ஜெயிக்கிறான் தாம= இருப்பிடம் /வன கிரி =மலை காடு -இருள் செறிந்து இருக்கிறது மலையா காடா பிரமை . சுருதி வாக்யங்களை சேர்த்து -இதி -என்று அருளி செய்கிறார் .பர பிரமம் – பிரமம் -அசித்  உடன் ஒப்பிட்டு பார்க்கும் பொது ஆத்மா உம பிரம்மா ..நாராயணா பர பிரம்மா -அவனை விட உயர்ந்த பர பிரம்மா உண்டு என்று தப்பாக சொல்வார் சிலர் ..சர்வம் கல் இதம் பிரமம் -அனைத்தும் சரீரம் ..ஆத்மாவாக கொள்ளாத வஸ்து இல்லை..எதத் ஆத்மகம் ..அந்தர் யாமியாய் கொண்டது ..பிரசாதம் அநுக்ரகம்..சம்பிரசாதம் -முக்தாத்மா ஆதல்….பிரம்மா ஈசாதீன் தத் -நாராயணன் இடம் உதித்த -விபூதி ..யம் ஆஹா -யார் ஒருத்தனை பேசித்தோ அவனை அழகனாய் சேவை .. மா  சூனாசுடர் உடம்பு -பரஞ்சோதி ..ஆத்மேச்வரம் தனக்கு தான் ஈஸ்வரன் ..புருஷ சுக்தம் நாராயணனை தான் சொல்லும் ..தத்வம் பரம் இதி ..பரமிதி-பொது சொற்கள் -அப்புறம் – சகாரம் சொல்லி நாராயணன்  இதி – கொண்டு கூட்டு பொருள்  கொள்ளணும்  சேரும் ….
பெண்ணுக்கு பெண்கள் கோஷ்டியில் வெட்கம் எதற்கு -பட்டர்..கேட்பவர்க்கு கேட்பதை கொடுப்பவன் புருஷன் பரம் ஜோதிஸ் -.தானே ஒளி விடும் தனக்கும் பிரகாசிக்கும் .எல்லாம் ஆத்மாவும் சுத்த சத்வ அசித்தும் -ஸ்ரீ வைகுண்டம் போல -தனக்கு ஸ்ரீ வைகுண்டம் என்று தெரியாது நான் ஆத்மா என்று ஆத்மா ச்வச்மை பிரகாசம் ..-சம்சார சம்பந்தத்தால் மறைக்க படுவதால் -இவை பரம் ஜோதி இல்லை.. அந்த ஓன்று தான் தடைக்கு அப்பால் பட்டு பரி பூர்ணம் ..சொரூப ஸ்வாப விகாரம் இல்லை ..சித் ஸ்வரூப விகாரம் இல்லை ..ச்வாபம் மாறும் .. சுக துக்கம் அநுபவித்து அதனால் அவனே பர தத்வம் ..சாஸ்திரம் இன்றி நேராக பார்த்து தெரிந்து கொள்ளலாம் கண்ணுக்கு நேராக -அழகரை கண்டு கொண்டு தெரிந்து கொள்ளலாம் …..
 18th ஸ்லோஹம்
பிருதிவி ஆதி ஆத்மாந்தம் நியமயதி யஸ் தத்வ நிகரம்
 தத் அந்தர்யாமி தத்வ புரவிதி தஸ் தேனா பகவான்
 ச எஷஸ் ஐஸ்வர்யம்  நவி ஜஹத சேஷம் வநகிரீம்
சமத் ஆசீனோ நோ விசது ஹ்ருதயம் சுந்தர புஜ :
ஒவ் ஒரு தத்வத்திலும் அந்தர்யாமி /சரீரமாகவும் கொண்டு அவற்றால் அறிய படாத நிர்வாகன் -நியமிக்கிறான்-சுந்தர தோள் உடையான் -சுருதி பிரதி பாதிதன் -நம் உள்ளத்துள் புகுந்து வர்த்திக்க கடவன்..
அஜோபிசந் அவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபி சந் பிரக்ருதிம் சுவாம அதிஷ்டாய சம்பவாமி ஆத்மா மாயயா என்றும் ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த  என்றும் தன பாரமேச்வர பிரகாரம் ஒன்றையும் விடாமல் மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை  என்ற ஆழ்வார் பாசுரம் போல அங்குத்தை வாசம் ஸாதனம் இங்குத்தை வாசம் ஸாத்யம்..
அனைத்துக்குள்ளும் உறைகிறான் இருத்தும் வியந்து ..பிருதிவி தொடக்கமாக ஆத்மா வரையிலும் –சோமபாமல் சாஸ்திரம் சொல்லும் ..தத் அந்தர்யாமி ..நியமிக்கிறான் ..பிரவ்ருத்தி நிவ்ருதிகளை ..தத் வபுகு -திருமேனியாக கொண்டு ..இருத்தும் தெரியாமல் இருக்கிறோம் ..உள் இருந்தும் தோஷம் தட்டாமல் அவதார ரகசியம் .. ஆசீனாக -அத்யாசீனாக -சமத்யாசீனாக -நகராமல் பேரென் என்று இருக்கிறான் ..முன் சங்க காலத்திலும் ..திரு கடிதானமும் என் உடை சிந்தையும் –சாதனமும் சாத்தியமும் ..தபஸ் பண்ணி வந்து இருக்கிறான் ..ஒருக்கடித்து உள்ளே உறையும் பிரான் ..ஏணியில் ஏறி வந்தாலும் உதையாமல் நன்றி உடன் -வாசனை கிருதக்ஜா கந்தம் -தாய பதியிலே ..எந்த 12 வருஷம் ஆழ்வான் வருவாரோ என்று பல யுக காலம் இருந்து மேலும் இருக்கிறான் ..பிருதிவி அப்பு தேஜஸ் –சூரியன் சந்திரன் – மனசு பிராணன் வாயு –விக்ஜானம் அதனையும் -இருந்து ஆட்சி செலுத்தி இருந்தாலும் தெரிந்து கொள்ளாமல் –ஆத்ம தத்வமும் சொல்லி இதையே சொல்ல சித் தத்வம் க்ஜானம் இருந்தாலும் தெரிய வில்லை அசித் சமம்..ஜடா பொருள் போல இருக்க கூடாது..
பிரகிருதி-சத்வாதி குணம் அநந்தம் மாற கூடிய சக்திகள் விசித்திர நிலை  அடைய  பிரதானம் /ஜடம் /போகத்தும் மோட்ஷதுக்கும் சாதனம் அனுஷ்டிக்க  வேணும் -போக்யமாயும் பாக உபகரணமாகவும் போக ஸ்தானம் தென்றல் தோட்டம் வெள்ளிச்சம் வாசனை போக்தா -அனுபவிக்க ..மூன்றும் ஈஸ்வர ஆதீனம் ..சொரூப ஸ்திதி பிரவிருத்தி இவை.. புருஷ காலம் -சங்கல்பம் பின் தொடர்ந்து போகும்..சாந்த அனுவர்த்தி -திரு வுள்ளம் அறிந்து போவார்கள் நித்யர் ..சேஷத்வம் இருவருக்கும் உண்டு ..கத்யத்தில் ..எஸ் தத்வ நிகரம் -என்கிறார் ஆழ்வான் ..ஜீவ ச்வாதந்த்ரம் உண்டு -ஸ்வரூப நாசம் வேற ரூப நாசம் வேற -விஷ அன்னம் சாபிடாதது போல ..ஸ்திதி பிரவர்த்தி -சாமான்ய காரணம் .ஸ்ருஷ்ட்டி கிருபா ஆதீனம்  கர்மாவால் இல்லை ..அதனால் தான் நின்றனர் இருந்தனர் திரிந்தனர் கிடந்தனர் பாசுரம்..அருளி செயலிலே போது போக்குவார் நம் பிள்ளை போல்வார்.. ஆகாசம் போல் இன்றி உள் இருந்து-அந்தர் ஆத்மா -இருந்தும் – ந்யமிகிறார் ..அந்தர் யாமி -நியமிகிறவன்..வாசனை பலத்தால் மறைக்க படுகிறான் ..எதிர் அம்பு கொத்து கேள்வி கேட்கிறான் ..ஸ்வரூப சவாக விபாவம் இன்றி பெருமைகள் குறையாமல் விரதத்துடன் இருக்கிறான்..அமூலம் ஆதாரம் இன்றி சூஷ்ம காலத்தில் ஒட்டி கொண்டு இருந்தோம் ..நாமும் தொடு உணர்ச்சியும் கண்ணும் அவன்..
என்றும் உண்டு இனிமேல் நீங்காமல் இருக்கபிராதிப்பது –அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன்.. பிறவாமை உண்டா  –உள்ளத்துக்குள் இருக்கிறான் நாம் அடிமை சேஷத்வ க்ஜானம் பிறந்த பின்பு தான் ஜன்மம் எடுத்தது போல ..பழுதே பலபகலும் போயின என்று அழுதோம் ..நான் இனிமேல் மறக்காமல் இருக்கணும் என்றே பிரார்த்தனை ..கண்கள் போனது ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவனின் திரு மண் காப்பு கோணலாக இருந்தது என்ற நினைவால் என்றார் ..ஆழ்வார் ஆச்சார்யர் நைச்ய அனுசந்தானம் பண்ணி கொள்வார்கள் ..நிர்கேதுகம் -தகுதி இருந்தவாருக்குள் -ருசி இருக்கிற தகுதி  மட்டும் வேணும் -எதிர் -ஆசை உடையார்களுக்கு எல்லாம்  ஆரியர்காள் கூறும் ..இன் நின்ற நீர்மை இனி யாமுறாமை கேட்டதும் கொடுக்க வில்லை/நச்சு பொய்கை ஆகாமைக்கு /பிற பந்தம் தலை கட்ட /நாடு திறந்த /ஆர்த்தி அதிகார பூர்த்தி-துடிப்பு தான் அதிகாரம் ..நம் ஆழ்வாருக்கே காத்து இருக்க வைத்தார் ..  பர பக்தி பர கஜான திரு புளிங்குடி கிடந்தது வர குண மங்கை அமர்ந்து வைகுந்தத்தில் நின்று  –போகய பாக துவரை – அவரையும் இன்னும் உயர  எதிர் பார்கிறார் ..அகர்ம வச்யர்கள் -பாபம் இல்லை ..நியத கர்ம -பாபம் புண்யம் மாறி மாறி வரும் ..கர்மங்கள் ஜன்மம் கொடுக்கும் ..சுகம் துக்கம் நியதமாக ஈடு கட்ட முடியாது..கண்ணனே ராமனே துக்கம் அனுபவித்தார்கள் ..அதனால் தான் மோட்ஷம் போக துடிகிறாரகள்..பரி பக்குவம் ஆக அவன் முயல்கிறான் -பக்தி உழவன் ..பல ஜன்மங்கள் பழுதே போனாலும் இன்று வந்து புகுந்தான்
19th ஸ்லோஹம்..
பிரத்ய காத்மனி கதாப்ய சம்பவத்
 பூம பூமி ம்பி வக்தி யம் சுருதி;
 தம் வநாத்ரிநிலயம் ஸூசுந்தரம்
சுந்தராயதபுஜம்  பஜாமஹே
அந்தர் யாமியாய் இருந்தும் தோஷம் இன்றி ஹேய பிரத்யநீகத்வமும் கல்யாணை கதா நத்வமும் அவனுக்கு அசாதாரணமாய் இருக்கிற படியை அருளி செய்கிறார்..
முதல் அத்யாயம் -மூன்றாவது பாதம் -பூமாதி காரணத்தின் பிரமேயம்..
தோள்கள் அழகு -நீண்ட-சிறிய திருவடி தோற்ற இடம் ராமனின் தோள் அழகு -அழகுக்கு தக்க வாசத் ஸ்தலம்  இது ..அபி வக்தி =நன்கு சொல்கிறது..பூமியாக= இருப்பிடம் .பூமா =பெருமை அதிசயம் ./வேறு எந்த ஆத்மாவிடம்  எப்போதும் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பெருமை ..ஆத்மா வேறு பரமாத்மா வேறு ..எயக்யாபத்தி மோட்ஷம் இல்லை ஒன்றாக முடியாது ..அஷ்ட குணங்கள் -அபகத பாப்மா போன்ற ..நாரதர் சனத் குமாரார் உபதேசம் பிராமம்நாமம் வாக்கு மனசு சங்கல்பம் கடையில் -பிராண சப்தம் — பிரத்யக ஆத்மா -நிறைய உபதேசம் 23 கண்டம் வரை ..வேறு கண்ணால் பார்க்க வில்லையோ  காதால் கேட்க்க வில்லையோ அது தான் பூமா -இது ஆத்மா தான் என்பர் பூர்வ பட்ஷி ..ஆத்மா அறிந்தவன் சோஹம் தாண்டுகிறான் ..வியாசர் அடுத்த சூத்ரத்தில் தர்மங்கள் அவனுக்கே-பரமாத்மாவுக்கு – ஒவ்வுகிற படியால் -பிரத்யக ஆத்மாவுக்கு வராது ..அமிர்தம் -மோட்ஷ பிரத்வ குணம் அவன் இடம் தான் ..சவே மகிமை  பிரதிஷ்டை -சரீரத்துடன் சிருஷ்டியா இந்த  சரீரம் யப்போ  சிருஷ்டி ? ..நாம் அவனை ஆதாரமாக கொண்டு -அவனோ தன மகிமையில் ஆதாரம் ..இந்த தன்மை பிரத்யக ஆத்மா இடம் இல்லை..சர்வ வியாபகம் அவனுக்கே தான் ..மகாத்மா விபுவா ? ..ஏக காலத்தில் எந்த சரீரத்தில் -சர்வ சரீரத்தில் இருக்கும் தன்மை அவன் இடம்தான் ..பிராண/ முடிக்கும் பொதுபூமா சொன்னாலும் நடுவில்  16 சத்ய சப்தம் பிரம்மா என்கிறது …. ரத நாபி அறத்தை போல  -சக்கரம் கோக்குவது போல இதன் இடத்தில்  கோக்கபடுகிறது..அபகத பாப்மா /திவ்ய /தேவ விள்ளையாட்டாக/ ஏக -ஒருவனே..
20th ஸ்லோஹம்..
வந்தேய சுந்தர புஜம் புஜ கேந்திர போக
 சக்தம் மஹா வனகிரி பிரணய பிரவீணம்
 யம் தம் விதுர் தஹாராமஷ்ட குணோ பஜுஷ்டம்
ஆகாசம் ஒவுபநிஷ தீஷூ சரஸ்வ தீஷூ
தஹராகாசம்  மத்யத்தில் உள்ள வஸ்து-அஷ்ட குணம் உடமை -பரமாத்மாவே..
அபஹத  பாப்மத்வம்  முதலாக சத்ய சங்கல்பம் ஈறாக -அவனே சுந்தர பாஹுவாக சேவை சாதிக்கிறான் ..அரவணை மேல் பள்ளி கொண்டு அருளுமவர் ..அனந்தன் உடலுக்கு போகம்..பூஜை கேந்திர போக சக்தம் ..சோலை மலை வாசத்தில் ரசிஹராய் இருப்பர். ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதமான தேவ பெருமாளை -அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -என்கிறார் பூதத் ஆழ்வார் /அனந்தசயம் த்வாம் -என்கிறார் ஆழ்வானும்..அது போல அழகரையும் சேஷ சாயியாக அருளுகிறார் இங்கே ….
தகர -சிறிய-சூஷ்ம மாக .. ஆகாசம் -இடை வெளி ..தேடி கண்டு பிடி -அதற்குள் இருபவனை ..பூதாகாசமா ஜீவாத்மாவா பரம ஆத்மா வா -என்ற கேள்வி.. தஹர -உதரேப்ய; மேல் சொல்ல பட்ட ..ஏதம் என்று சொல்ல பட்ட இடத்தில் தக ஆகாசம் இருக்கு ..பிரம்மா லோகத்தை இத்தால் சொன்னார் கதி சப்தத்தால் -அடையும் இடத்தில –சப்ததாலும் .லிங்கம் -அடையாளம் பார்த்தாலும் ..அவனின் கல்யாண குணங்களை உபாசிக்கணும்..முழுவதுமாக ஒளி விடுவதே ஆகாசம் .திட விசும்பு முதலில் உண்டாகி கடைசியில் லயம் ஆவதால்..பிரளயம் வந்தால் ஆகாசம் ஒளி விடாதே ..தகர அதிகரண அர்த்தம் ..புஜக =பாம்பு புஜகேந்திர  -அவர்களுக்கு அரசன் -ஆதி சேஷன்.. பாபங்கள் ஒளிந்தவர் அபகத பாபமா -இருந்து கதம் ஒழியனும்..எப்போதும் இல்லை ..அபாவம் -அத்யந்த பாபம் முன்னாடி இல்லை பல வகை../விசராக -மூப்பு இல்லை விமிர்த்து வி சோக -விசொகத்வம் /சாப்பிட வேணும் என்ற ஆசை இல்லை ..பசியால் சாப்பிட்டால் கர்மா தீனம் இச்சை தீனமாக வெண்ணெய் சாப்பிட்டார் / அபி பாசக தண்ணீர் குடிக்க / சத்ய காம /சத்ய சங்கல்பன் -ஆகிய எட்டும் ..கூடிய அவனை சேவித்தேன் என்கிறார்..தகரம் ஆகாசம் அதிகரனத்தை சொல்லி -பூஜை கேந்திர போகம் -ஆதி சேஷ பர்யங்கம்  இன்றியமையாத அடையாளம் …துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்..வேதார்த்த சங்கரகத்தில் சேஷ சாயி என்கிறார் திரு வேங்கடத்தானை ராமானுஜரும்..சயன பேரர் மால அலன்காரார்/கண்ணனும் வெள்ளையும் சிலபதிகாரத்தில் கண்டேன் என்கிறார் கண்ணனும் பல ராமனும்..
தகர -சிறியது புரியாது என்று இதிலே மஹா வனகிரி-எதிர் மறை..
கூரத் ஆழ்வான்   திரு வடிகளே சரணம்  .
ஆழ்வார்  எம்பெருமானார் ஜீயர்  திரு வடிகளே சரணம்   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: