அமலனாதி பிரான்-ஐந்தாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

ஹாரத்தின் கூடிய திரு மார்பு -அந்த புரம் இழுக்க ..எனக்கு பற்றாசான பெரிய பிராட்டி இருக்கும் ..எனக்கு சொரூப அனுரூபமான கைங்கர்யம் செய்ய ..பரத்வம் சௌலப்யம் உடைய வயிறு -கிட்டே போனால் அழகால் ஆட பட்டு ..அங்கு போக ஒட்டாதே அதற்க்கு பட்டம் கட்டிய உதர பந்தம் மேல் இட்டு நின்று இவரை   பாட வைக்க ..ஒரு கால விசேஷத்தில் -காதா சித்தம் –பிரளயதிலும் பால்ய கண்ணன் இருந்த பொழுது மட்டும் தானே .எப்போதோ ..ஆனால் எப்போதும்  -அது கதா இது சதா …அப்படி அன்று ஏறே திரு மார்பு ..அகல கில்லேன் இரையும் என்று உறை மார்பா –மனசு -சகர ஆயுதம்/அஸ்த்ர பூஷன் ..ஸ்ரீ வத்சன்  அசேதனம்-திரு மறு -கௌஸ்துபம்  — ஜீவாத்மா – இரண்டையும் எப்போதும் கொண்ட திரு மார்பு ..கூரத் ஆழ்வான் திரு மறு வின் அம்சம் -பீடமாக கொண்டு பெரிய பிராட்டி..காந்தச்தே – அந்த புரத்துக்கு முக திரை மாயா மூல பிரகிருதி தான் ..ஹாரம் -ஸ்ரீ வத்சன்/கௌஸ்துபம்..அதனால் தான் திரு ஹார மார்பு ..பெரிய பிராட்டிக்கு ..கோவில் கட்டளையாக உள்ள ஏற்றம் ..வன மாலை /துளசி பரத்வம் சொல்ல /அச்சு தாலி ஆமை தாளை -ஐம்படை தாலி கண்ணனை ரட்சிக்க –சௌலப்யம்  பிர காசம் .. விசாலமான மார்வுக்கு சிற்றிடை நிகரோ ?–இறுமாப்பு காட்டு இசித்து கொள்ள ..நெஞ்சையும் கரண்ணாதிகளையும் -அடியேனை அடிமை  கொண்டது

சுமக்க முடியாத பழ வினைகள் /பற்று =தொடர்பு /அறுத்து போக்கி /என்னை -பாபங்களுக்கு இருப்பிடம் /தன வாரம் =அன்பு ஆக்கி வைத்தான் ..பாப்பம் தொலைத்து அன்பு பக்தி வளர –இவை மட்டும் இல்லாமல் அன்றி என் உள் புகுந்தான் ….கோர =கடிமையான மா =பெரிய தவம் செய்தனன் கொல்–செய்ய வில்லையே .எப்படி இவை-மூன்று உதவிகள் – பண்ணினான் ..நிர் ஹேதுகமாக..திரு ஹார மார்பு அன்றோ அடியேனை ஆட கொண்டது ..என்னை தன வார ஆக்கி என்றவர் திரு ஹார மாறவு என்றதும் அடியேன் ..சிறிய திருவடி தூதன் தாசன் என்றது போல /பாபம் போக்கினது என்னை.. பின்பு அடியேன்

சர்வேஸ் வரனும் ஒரு நிலை நின்று தள்ள வேண்டும் படியான பாரம் என் உடைய பழ வினைகள் ..கிள்ளி  களைந்தான் ராவணனின் தலைகளை ..சம்கரிப்பதும் சிருஷ்டியும் நரகத்தில் தான் ..நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் ..பழ -அநாதி கால கர்மா ..அசித் சேர்க்கையும் அன்றே உண்டு ..கூடு பூரித்து சேமித்து வைத்து இருக்கிறோம்..சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி ..அகம் துவா ..அவனே வந்து பண்ண வேண்டும் ..நாலாவது பாசுரத்தில் ராக துவேஷம் போக்கி /அடி விஷய சுகம் பிராவண்யம் அஹங்காரம் மம காரம் மதிள்  -விவேக அம்பு கொண்டு மனோ ராட்ஷசதனை கொன்றதை சொல்லி -விவேகம் ஏற்பட சாத்விகர் ஆக இருக்கணும் .கர்மம் தொலையனும் ..

திரி விதமாய் –தத்வ த்ரயம்/ரகஸ்ய பத  அச்சர மண்டப முனி த்ரயங்கள்/மானச காயக வாக்கு/முக் காலம் /பாகவத  பாகவத  நானா வித அபசாரம் -பழ வினைகள் ..பிரம்மா  கல்ப கோடி  கால  அனுபவம் அரை ஷணத்தில் சம்பாதிக்கிறோம்..பற்று அறுத்து -அடி தளம் நீக்கி ..சவா சனமாக போக்கி ..நித்ய சூரிகளுக்கு பாப சங்கை உண்டாகிலும்  நமக்கு இல்லை என்னுமா போல வேரோடு எறிந்து..அக்ஜானம் -அவித்யை  வாசனையும் -ருசியும் வாசனையும் கர்ம-  வாசனையும் தாக்குதல் ஈடு பாடு தேகம்  வாசனையும் ருசியும் பிறவி மூன்றையும் ஒழித்து ….சாத்திய தர்மத்தால் போக்க ஓன்று ஒன்றாக அடைவே போக்கணும். சித்த தர்மத்தால் ஓட்ட அனைத்தையும்போக்கினான்
என்னை -பாபத்துக்கு போக்கடி அறியாத என்னை..கொள் கலம்– பாப பெரும் கடல் ..அவன் பஷத்தில்சேர்த்தான் ..வார மாக்கி வைத்தான் ..என் காரியம் தனக்கு கூறாக –நீ என்னை அன்றி ஏலேன் ..என்னை தன வார மாக்கி ..தன்னையே பற்றும் படி வைத்தான் ..பாபமே செய்து பாவி ஆனா என்னை ..அபராதமே நிரூபக தர்மம்..அபராத சகர வர்த்தி..நோவு பட்டோம் என்ற அனுதாமும் இல்லாத என்னை ..வைத்தான் -அனைத்தையும் அவனே செய்தான் ..எதிர்த்தேன் விலகினேன் தன பேராக வைத்தான் தான் ஒட்டி வந்து . சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் .வேறு கொண்டு தம்முள் என்னை வைதிடாமையால் -விலக்கி வைக்க வில்லை ..நமன் கூறு கொண்டு -திரு மழிசை ஆழ்வார்..

நாராயண அர்த்தம் ஐந்து ஆறாவது பாசுரங்களில்..சித்தோ உபாயம் அவன் ..அஜீர்ணம் தொலைத்து சக்கரை பொங்கல் தருவது போல பாபம் போக்கி ..அகம் துவா சர்வ பாபோ மோஷ இஷ்யாமி ..வாரம் ஆக்கி -அருகில் வைத்தான் ..பாபம் மடியில் இருந்த நான் திரு அருகில் இருக்கிறேன் ..என் பாபம் தனக்கு பாரமாக ஏற்று ஒழித்தான் .சந்தான சொத்து வைத்தால் போல வாரிசாக வைத்தான் ..தாத்தா சொத்து நமக்கு தன அடியே கிடைக்கும் திரு பாண் ஆழ்வாரை தந்தை என்று எண்ணினால் .. வாய்த்த தன்றி என்னுள் புகுந்தான் ..விடாய்த்தவன் ஆற்றாமை தீர தடா கத்தில் புகுந்தது போல ..அவனுக்கு தான் இவரை அடைய பேர் ஆசை ..நெஞ்சுள் -உள்ளே புக..பிரிந்து தரிக்க அவனால் முடிய வில்லை.. வாலி புக்க இடத்தை குகையை அடைத்து –இரண்டு அரசா -ஆத்மா /பர மாதமா ..எப்போதும் இருந்தாலும் நாம் ஒதுக்க கொள்ள வில்லை..திருத்தி சொரூப க்ஜானம் கொடுத்து பின்பு புகுந்தான் ..ஆபாச விஷயத்தில் சௌகரி  விருத்தாந்தம் ஐம்பது பெண்கள் இருந்தது போல இவர் இடமே இருந்தான் ..கைங்கர்யத்தில் ஆதி செஷன் கொண்ட பல உருவம் போல ..இத்தால் அல்லது செல்லு கிறது இல்லை அவனுக்கு ..

மூன்று பெரும் — திரு வாட்டாறு / திரு மோகூர் காள மேகம்/ திரு மால் இரும் சோலை பெருமாள் வந்து நம் ஆழ்வாரை ….சரீரம் விழ வில்லை .. பாசுரம் பிறந்த சரீரத்தில் ஆதாரத்துடன் போக்க மனம் இல்லை ..இருள் தரும் மா க்ஜாலத்தில் இருந்து இப் படி அருளியவரை நித்யருக்கு காட்ட …அது போல இவர் நெஞ்சத்துள் புகுந்தான் …நெஞ்சமே நீள் நகர் /புத்தி தர்ம பூத க்ஜானம்.. விலகினால் மீண்டும் வாசனை வரும் என்ற நினைப்பால் புகுந்தார் ..இதற்க்கு என் செய்தோம் கோர மா தவம் –ஜடாயு போல அவன் தன ஸ்வரூபம் கெட ஆற்றம்  கரை யில் கிடந்தது கோர மா தவம் இருந்தானாம் ..அகம் ஸ்மராமி  போல ..பெற்ற பேரு கனத்தால் கோர மா தவம் ..திரு ஹார மார்வம் –என் திரு மகள் சேர் மார்வன் ..நாம் அவளது ..அவன் அவள் கேள்வன் போல..தாய் மடியில் ஒதுங்கியதால் வந்த பேரு ..சீதா ராமன் இடம் சிறிய திருவடி கண்ட ரட்ஷா கதவம்  ..பிரிந்த போதே மன்றாடினாள் ..சேர்ந்த போது சேர விட சொல்ல வேண்டுமோ .. ஹாரம் அழகை மறைக்க உடலாம் இதனை. அங்கங்கள் அழகு மாறி..

அழகுக்கு தோற்ற அடிமை கூலிக்கு சேவகர் போல ..இப்போ சொரூப ரீதியாக அடிமை. தூதோகம்  தாசோகம்..ஆட கொண்டது மிதுனத்தில் கைங்கர்யம் ..ராஜ புத்ரனை தேடி கண்டு பிடித்து முடி சூட்டுமா போல..அழகினில் அழுந்தினாரை குணத்தால் -சரிய பதித்வதால் பிழைப பித்தான் ..சர்வ வ்யாபிகத்வம் சொல்லு கிறது இந்த பாசுரத்தில் ..என் உள் புகுந்தான் அந்தர் யாமி பிராமணத்வம் ..ஆனந்தம் க்ஜானம் விட சேஷத்வம் முக்கியம் -அடியேன் உள்ளான் உடன் உள்ளான் போல ..என்னை சொல்லி அடியேனை சொன்னது இழந்த சேஷத்வம் பெற்று -முடி சூட்டியதை ..ஸ்வரூப விரோதி / ஆஸ்ரேயன விரோதி /வுபாய விரோதி /உபய விரோதி /போக விரோதி ஐந்தையும் கழித்து -மேன்மை-திரு மார்பு  அழகைஹார மார்பு  காட்டி ..போக்யதை நெஞ்சில் பிர காச தோடு புகுந்தான் -காரணம் கண்டு பிடித்தார் -அன்றோ -பிர சித்தம் தோற்ற ….வேற சிலரை திருத்த  கிடக்க உஊரில் ஆற்றங்கரை சோலை பல அழகை காட்ட வேண்டி இருந்தது -தொண்டர் அடி பொடி ஆழ்வாருக்கு .. .இவருக்கு மார்பு ஒன்றே அமைந்தது ..

ஸ்ரீ ரெங்க மங்கள நிதி ..பெரிய பிராட்டியின் நிவாசத்தால் நிகர் இலாத ஏற்றம் திரு மார்புக்கு ..இந்திரிய கிங்கர னாய் இருந்த என்னை- கர்ம கலாப பாபங்களை ..ஸ்ரீ ரெங்க மங்கள நிதி ..பெரிய பிராட்டியின் நிவாசத்தால் நிகர் இலாத ஏற்றம் திரு மார்புக்கு ..இந்திரிய கிங்கர னாய் இருந்த என்னை- கர்ம கலாப பாபங்களை ..திரு இல்லா தேவர் இல்லை.. விண்ணவர் கோன் சூத்ரன் ஆனா என் பக்கல் இரங்கினான்.. சேஷ பூதனான தனக்கு ஸ்ரிதரனே கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தி ..திறம்பாத சிந்தனைக்கு சிக்கென காட்டிக் கொடுக்கிறார் . சர்வ சஹிஷ்ணுவாய்-பொருது கொண்டு  .சௌலப்ய காஷ்டையுடன்  விரோதியாத ஸ்வாமித்வம் -அரங்கத்து அம்மான் -கிடந்த தோற கிடை அழகை காட்டி கொண்டு -பூர்ண மான சேஷி அடையாளம் திரு- வை மார்பில்  வைத்து கொண்டு..அழகு வெள்ளம் இட்டு போவதை கரை கட்ட ஹாரம் ..ச்வாபிகா மான சேஷ சேஷி பாவம் -அடிமை.ஆட கொண்டதே -கைங்  கர்யம் கொண்டது பாசுரம் பாடும் கைங் கர்யம் ..அநிஷ்ட நிவர்த்த கதவம்-பழ வினை பற்று அறுத்து / இஷ்ட பிரா பகத்வம்-தன வாரமாக்கி வைத்தான்  /உள்ளும் புறமும் வியாபித்து -என் உள் புகுந்தான் நித்ய /கிருபை -கோர மா தபம் /உபாயதுக்கு பிர தான மான சௌலப்யம்-அரங்கத்து/பிராப் யத்துக்கு பிர தான மான ச்வாமித்வமும் -அம்மான் / சர்வ அனு கூல மான சரிய பதித்வம் -திரு மார்பு /பூஷண திரு விக்கி யோகமும் – மார்பு /தாச பூதனுடைய சொரூபமும் -அடியேனை/தாசா பலம் -கைங்கர்யமும் -ஆட கொண்டதே -ஆய அர்த்தம் பத்து அர்த்தங்களும் உள்ள பாசுரம் இது .

திரு பாண் ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: