திவ்ய பிரபந்தத்தில் திரு கண் கடாஷ மகிமை பாசுரங்கள் ..

பெரி ஆழ்வார் திருமொழி

விண் கொள் அமரர்கள் வேதனை தீர  முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து திண கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் ! வந்து காணீரே 1-2-16

தாமரை கண்ணனே தாலேலோ 1-3-3

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும்  வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள் 1-3-9

வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்புலீ ! கடிதோடி வா 1-4-3

துச்சோதனனை அழல  விழித்தானே !அச்சோ அச்சோ  1-8-5

பாரதம் கை செய்த அத தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே ! அப் பூச்சி காட்டுகின்றான் 2-1 -1

செம் கண் அலவலை வந்து அத தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே 2-1-2

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள் எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே ! எங்கள் அமுதே 2-3-11

பொற்றிகள் சித்திர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமேகோல் கொண்டு வா 2-6-7

அம் கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல்லார்கள் தாம் முறைப் பட்ட அங்கு அவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல் இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே 2-10-10

குடையும் செருப்பும்  குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே !கடிய வெங்கான் இடைக் கன்றின் பின் போன சிறுக் குட்டச் செங்கமல அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் ! 3-3-4

பல் ஆயர் குழாம் நடுவே கோல செந்தாமரைக் கண் மிளிரக் குழல் வூதி இசை பாடி 3-4-7

ஒண் நிறத்  தாமரைச் செங்கண் உலகளந்தான் 3-8-9

செங்கண் நெடுமால் ஸ்ரீதரா ! என்று அழைத்தக்கால் நங்கைகாள் ! நாரணன் தம்மன்னனை நரகம் புகாள் 4-6-2

திரு மங்கை மலர்க் கண்ணும் காட்டி நின்று 4-9-1

திருவாளன் இனிதாகத் திருக் கண்கள்  வளர்கின்ற திருவரங்கமே 4-9-10

சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் ! திரு மால் இரும் சோலை எந்தாய் ! 5-3-7

திருப் பாவை

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் -1

ஆழி மழைக் கண்ணா ! -4

போதரிக் கண்ணினாய் ! -13

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் -14

மைத் தடம்  கண்ணினாய் ! நீ உன் மணாளனை -19

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் போலே செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ ? திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் -22

செங்கண் திரு முகத்துச் செல்வத் திரு மாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் -22 -30

நாச்சியார் திரு மொழி

திரு வுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்கெனக் கருள் கண்டாய் 1-6

சிற்றிலை நன்று கண்ணுற நோக்கி நாம் கொளுமார்வம் தன்னை தணி கிடாய் 2-2

செய்ய தாமரைக்  கண்ணினாய் ! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே 2-4

கள்ள மாதவா ! கேசவா ! உன் முகத்தன கண்கள் அல்லவே 2-5

தூ மலர்க் கண்கள் வளரத் தொல்லை இராத் துயில்வானே 3-8

பூப் புனைக் கண்ணிப் புனிதனோடு என் தன்னை காப்பு நாண் கட்ட 6-4

செங்கன் கருமேனி வாசுதேவன் உடைய அம் கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா ! உன் செல்வம் சால அழகியதே 7-7

என் அரங்கத்து இன் அமுதர் குழல்  அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்  எழு கமலப் பூ வழகர் எம்மானார் 11 -2

கார் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னை கண்டீரே ? 14-4

பெருமாள் திருமொழி

கடல் வண்ணர் கமலக் கண்ணும் ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக வென்று கொலோ வுருகும் நாளே ?  1-6

பெரும் திரு  மார்வனை மலர்க் கண்ணனை மாலை யுற்று  எழுந்தாடி பாடி திரிந்து  அரங்கன் எம்மானுக்கே 2-8

தயிர் கடையக் கண்டு ஒல்லை நானும் கடையவன் என்று கள்ள விழியை விழித்துப் புக்கு 6-2

ஒருத்தி தன்னை கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன பால் மருவி மனம் வைத்து  மற்று ஒருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து 6-3

கண்ணுற்றவளை நீ கண்ணா விட்டுக் கை விளிகின்றதும் கண்டே நின்றேன் 6-5

அம்புயத் தடம் கண்ணினன் தாலோ ? 7-1

வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி 7-2

உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் 7-3

தடம் கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை இன்பத்தை இன்று என் தன கண்ணால் பருகு வேருக்கு இவள் தாய் என நினைந்த  அளவில் பிள்ளைமை  இன்பத்தை இழந்த பாவியேன் 7-4

தண் அம் தாமரை கண்ணனே ! கண்ணா ! 7-6

எழில் கொள் நின் திருக் கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே 7-7

அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செம் சிறு வாய்  நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே 7-8

கண புரத்து என் கரு மணியே ! 8-1/8-10

நெய் வாய் வேல் நெடும் கண் நேர் இழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை ? 9-2

செவ் வரி நல கரு நெடும் கண் சீதைகாகி  சின விடையோன் சிலை இறுத்து 10-3

திரு சந்த விருத்தம்

நின் தமர் கண் உளாய் கொல் ?-45

எங்கள் செம் கண் மாலை யாவர் காண வல்லரே ? -75

கடல் கிடந்த நின் அலால் ஓர் கண் இலேன் எம் அண்ணலே ! -95

மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே 1-5

திரு மாலை

பச்சை மா மலை போல் மேனி  பவள வாய் கமல செம் கண்  அச்சுதா ! அமரர் ஏறே ! ஆயர் தம் கொழுந்தே ! -2

இனித் திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே தனிக் கிடந்தது அரசு செய்யும் தாமரை கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ் வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி அரும்புதிரு மாலோ ! என் செய்கேன்பாவியேனே ? -18

தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே ? -20

அமலனாதி பிரான்

திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -1

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் அரங்கதமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே-8

என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -10

பெரிய திருமொழி

சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் 1-8-1

பண்டு ஆல் இலை மேல் சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் 2-2-5

தடம் ஆர்ந்த கடல் மல்லைத் தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவன் 2-5-10

கயல் நெடும் கண் துயில் மறந்தாள் 2-7-5

ஓவி நல்லார் எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் அழகியதாம் இவர் ஆர் கொல் ? என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-7

காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என் ஆவி ஒப்பார் இவர் ஆர் கொல் ? என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-8

நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பண்ணித்தது உண்டு நஞ்ச முடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன் அஞ்சுவன் மற்று இவர் ஆர் கொல் ?என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-9

தாமரைக் கண்ணன் இடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி 2-9-2

உறியார்ந்த நறு வெண்ணெய்ஒளியால் சென்று ஆங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க தறி யாரந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை 2-10-6

கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம் பொன் செய் திரு வுருவம் ஆனான் தன்னை 2-10-9

அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் தேவர் வணங்கு தண் தில்லைச் சித்திர கூடத்துள்ளானே 3-3-7

பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு  பேழ் வாய்  சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே 3-3-8

அவ வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே 3-4-5

கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்வில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் ! 3-4-9

காழிச் சீராம விண்ணகர் என் செம் கண் மாலை 3-4-10

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் 3-9-10

வாள் நெடும் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா 3-10-6

மானாய மென் நோக்கி  வாள் நெடும் கண் நீர் மல்கும் 5-5-3

பொரு கயல் கண் மை எழுதாள் 5-5-5

மாழை மான் மட நோக்கி வுன் தோழி 5-8-1

தேவாதி தேவனை செம் கமலக் கண்ணனை6-8-3

வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும் கல்லார் கடும் கானம் திரிந்த களிறே ! 7-1-5

தூயாய் ! சுடர் மா மதி போல் உயிர்கு எல்லாம்  தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா ! 7-1-9

சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே7-3-4

அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து 7-4-2

தென் அழுந்தையில் மன்னி நின்ற அம் கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே 7-6-1

திருவுக்கும் திருவாகிய செல்வா ! தெய்வத்துக் கரசே ! செய்ய கண்ணா ! 7-7-1

மறையோர் தங்கள் கண்ணினை கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே 7-10-9

வடித் தடம் கண் மலர் அவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் 8-1-5

நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் காணுமோ ! கண்ண புரம் என்று காட்டினாள் 8-2-2

பைம் கண் மால் விடை யடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த செம் கண் மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வழியே  8-3-3

மலர் மங்கை வடிக் கண் மடந்தை மான் நோக்கம் கண்டான் கண்டு கொண்டு உகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-1

மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் 8-8-1

என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி எனது இளம் கொங்கையும் நோக்குகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா ! 9-2-1

மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம் தாயின நாயகர் ஆவர் தோழி ! தாமரைக் கண்கள் இருந்தவாறு 9-2-3

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ? ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல் ? யான் அறியேன் தாமரை கண்கள் இருந்தவாறு 9-2-6

அணி கெழு தாமரை அன்ன  கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா ! 9-2-7

கொங்கு அலர் தாமரைக் கண்ணும் வாயும் அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா ! 9-2-9

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ ? 9-5-7

செங்கண் நெடிய திருவே ! செங்கமலம்  புரை வாயா ! 10-4-2

களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெருந்தோள் நெடுமாளைப் பேர் பாடி ஆட 11-3-2

தான் விழுங்கி உய்யக் கொண்ட கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி 11-6-7

திரு நெடும் தாண்டகம்

கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக் கட்டுரையேயார் ஒருவர் காண்கிர்ப்பாரே ? -3

பனி நெடும் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் -11

நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் 12

கைவண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும்  அரவிந்தம் அடியும் அஹ்தே 21

மின் இலங்கு திரு வுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத் தலமும் கண்ணும் வாயும் 25

முதல் திரு வந்தாதி

செங்கண் அடலோத வண்ணர் அடி -16

கோல கரு மேனி  செங்கண் மால் 19

மூவடியால் சென்று திசை அளந்த செங்கண் மாற்கு 21

பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த செங்கண் மால் கண்டாய் தெளி  29

உண்டு அட்டெடுத்த செங்கண் அவன் 54

ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் 65

திறம்பாது என் நெஞ்சமே !செங்கண் மால் கண்டாய் ஆறாம் பாவம் என்று இரண்டும் ஆவான் -96

இரண்டாம் திருவந்தாதி

உண்டதுவும் தான் கடந்த ஏ  எழ உலகே தாமரைக் கண் மால் ஒருநாள் வான் கடந்தான் செய்த வழக்கு -18

செங்கண்மால்  நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -44

எங்கள் பெருமான் !இமையோர் தலை மகன் ! நீ செங்கண் நெடுமால் ! திரு மார்பா ! 97

செங்கண் நெடியான் குறள் உருவாய் மாவடிவில் மண் கொண்டான் மால் 99

மூன்றாம் திருவந்தாதி

மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் ஆங்கே -4

கண்ணும் கமலம் கமலமே கைத் தலமும் மண் அளந்த பாதமும் மற்று அவையே -9

செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் என்  நாளும் நாளாகும் -17

முன் உலகம் உண்டு உமிழ்ந்தய்க்கு அவ வுலகம் ஈர் அடியால் பின் அளந்து கோடல் பெரிது ஒன்றே ? என்னே !திருமாலே !செங்கண் நெடியானே !எங்கள் பெருமானே ! நீ இதனைப் பேசு -20

வண்டு  அறையும் பங்கயமே  மற்றவன் தன நீள் நெடும் கண் காட்டும் திறம் -55

திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்  பெருமான் அடி சேரப் பெற்று -59

வண் தாமரை நெடுங்கண் மாயவனை -84

கலந்து மணி இமைக்கும் கண்ணா ! நின் மேனி மலர்ந்து மரகதமே காட்டும் -87

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கன் தென் அமரும் பூ மேல் திரு -100

நான்முகன் திருவந்தாதி

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம் -69

கார் செறிந்த கண்டத்தான் என் கண்ணான் காணான்-73

திரு விருத்தம்

புண்டரீகத்  தங்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்-23

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே -43

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம்  ஒருவர் நம் போல் வரும் கேழ்பவர் உளரே ? தொல்லை வாழியம் சூழ் பிறப்பு மருங்கே வரப் பெறுமே ? சொல்லு வாழி மட நெஞ்சமே ! -45

உயர்ந்தோரை இல்லா அழற்  அலர் தாமரைக் கண்ணன் -58

கண்களாய துணை மலரே -67

திரு நெடுங்கண் வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் 74

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதய மலைவாய் விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் எரி கொள் செந்தீ வீழ்அசுரரை போல எம் போலியர்க்கும் விரிவ சொல்லீர் இதுவோ ? வையம் முற்றும் விளரியதே 82

மைப் படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்  வைதிகரே மெய்ப் படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார் -94

திருவாசிரியம்

சோதி  வாயவும்  கண்ணவும் சிவப்ப -1

தாமரை காடு மலர்க் கண்ணோடு கனி வாயுடையதுமாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன -5

பெரிய திருவந்தாதி

எங்கள் மால் ! செங்கண் மால் ! -2

என் உடைய  செங்கண் மால் ! -30

செங்கண் மால்  நீங்காத மா கதியாம் வெம்  நரகில்  சேராமல் காப்பதற்கு நீ கதியா நெஞ்சே நினை சேர்க்கும்ம 46

ஓன்று உண்டு  செங்கண் மால் ! யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ  நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் -53

சிறிய திரு மடல்

நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் -11

ஈர் ஐந்து சிரம் அறுத்துச் செற்று உகந்த செங்கண் மால் 42

ஓரானை கொம்பொசித்து ஓரானை கோள் விடுத்த சீரானை செங்கண் நெடியானை தென் துழாய் தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் பேர் ஆயிரமும்பிதற்றி -76

பெரிய திரு மடல்

இமையாத் தடம் கண்ணார் அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு -35

கரு நெடுங்கண்  செவ் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் கன்னி -52

மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் பன்னு கர தலமும் கண்களும் பங்கயத்தின் பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் -75

அரி வுருவமாகி எரி விழித்து 100

திருவாய் மொழி

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய் 1-1-4

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம் மா வாய் கீண்ட செம் மா கண்ணனே 1-8-2

கண்ணா வான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே 1-8-3

அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் 1-9-3

காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுளானே 1-9-8

கமலக் கண்ணன் என் கண்ணினுளான் காண்பன் அவன் கண்களாலே 1-9-9

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பராவு நுண் நேர் இடை மார்வனை எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே ! 1-10-3

செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ ?இனி யான் என் மணியை1-10-10

செந்தாமரை தடம் கண் செங்கனி வாய் எம்பெருமான் அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே ? 2-1-9

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே 2-2-1

தாமரைக் கண்ணன் எம்மான்  மிகும் சோதி மேல் அறிவார் யாவரே ? 2-2-5

செம் தாமரை தடம் கண் செங்கனி வாய்  செங்கமலம் செந்தாமரை அடிக்கள் 2-5-1

செந்தாமரை கண் கை கமலம் திரு இடமே மார்பம் 2-5-2

என் உள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் 2-5-3

அப் பொழுதைத் தாமரைப் பூ கண் பாதம் கை கமலம் 2-5-4

என் அம்மான் கண்ணனுக்கு நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம் 2-5-5

துளக்கம் உற்ற அமுதமாய் எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே 2-6-2

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை 2-6-3

ஈசன் கரு மாணிக்கம் என் செங்கோலக்   கண்ணன் விண்ணோர் நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணன் 2-7-1

தீதவங்க கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம் 2-7-3

விட்டிலங்கு செஞ்சோதிதாமரை பாதம் கைகள் கண்கள் 2-7-5

திரு விக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் 2-7-7

வாமணன் ! என் மரகத வண்ணன் ! தாமரைக் கண்ணினன் ! 2-7-8

சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இரா பகல் வாய்  வெரீ இ 2-7-9

கட்டு உரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா 3-1-2

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனி வாய் கரு மாணிக்கம் 3-3-3

பங்கயக் கண்ணன் என்கோ ? பவளச் செவ்வாயன் என்கோ ? 3-4-3

செய்ய தாமரை கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் 3-6-1

மரை கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் 3-6-2

கரிய மேனியன் செய்ய தாமரை கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே 3-6-5

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை 3-7-1

கோலமே ! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே ! 3-8-8

செந்தாமரைக் கண்  உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன் 3-10-2

துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள்  செய்து தன தெய்வ நிலை  உலகில் புக உய்க்கும் அம்மான் 3-10-6

மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் 4-5-2

மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் 4-5-3

பெரிய  கோல தடம்  கண்ணன் விண்ணோர் பெருமான் 4-5-6

குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் 4-6-5

காண வந்து என் கண் முகப்பே தாமரை கண் பிறழ 4-7-4

நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண் அற முயல் ஆழி அம் கைக் கரு மேனி அம்மான் தன்னையே 5-1-6

கார்வண்ணன் கண்ண பிரான் கமலத் தடம் கண்ணன் 5-1-11

என் செய்ய தாமரை கண்ணன் என்னை நிறை கொண்டான் 5-3-2

இம் மண் அளந்த கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால் 5-4-4

செஞ்சுடர் தாமரைக் கண் செல்வனும் வாரானால் 5-4-9

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே 5-5-1

தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே 5-5-5

கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே 5-5-6

செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே 5-5-8

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் …..செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ 5-6-4

செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் ! செந்தாமரை கண்ணா ! தொளுவனேனை உன்தாள் சேரும் வகையே சூழ் கண்டாய் 5-8-5

அரி ஏறே ஏன் அம பொற் சுடரே ! செங்கண் கரு முகிலே ! 5-8-7

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே 6-1-7

போகு நம்பி ! உன் தாமரை புரை கண் இணையும் செய்ய வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே ? 6-2-2

நின்  செய்ய வாய் இரும கனியும் கண்களும் விபரீதம் 6-2-3

உவகையால் நெஞ்சம் உள் உருகி  உன் தாமரைத் தடம்  கண் விழிகளின் அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் தகவு செய்திலை 6-2-9

கெண்டை ஒண் கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல  மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து 6-4-2

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே 6-5-1

செந்தாமரைக் கண்பிரான் இருந்தமை காட்டினீர் மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினோடு அன்று தொட்டும் 6-5-5

பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி 6-5-8

கோல செம் தாமரை கண்ணற்க்கு  என் கொங்கலர் ஏலக் குழலி இழந்தது சங்கே 6-6-1

செய்ய  தாமரை கண்ணற்க்கு கொங்கலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் மங்கை இழந்தது மாமை நிறமே 6-6-2

திரு கோளூர்க்கே சென்று தன திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே 6-7-5

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவரும் ஆய நின்ற மாயன் என் ஆழி பிரான் 6-8-7

செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே ! எனது உயிரே  ! 6-10-9

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்  சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் 7-2-1

என் செய்கின்றாய் ? என் தாமரைக் கண்ணா ! என்னும் கண்ணீர் மல்க விருக்கும் 7-2-2

கோல மா மழைக் கண் பனி மல்க விருக்கும் என் உடைக் கோமளக் கொழுந்தே 7-2-7

வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி தாமரை கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் 7-3-1

தாமரை கண்களுக்கு  அற்று தீர்ந்தும் 7-3-3

தாமரை கண்ணாவோ ! தனியேன் தனியாளாவோ !தாமரை கையாவோ !உன்னை என்று கொல் சேர்வதுவே ? 7-6-1

வந்து எய்தும் ஆறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் அந்தரம் மேல் செம் பட்டோடு அடி உந்தி கை மார்வு கண் வாய் செஞ்சுடர் சோதி விடவுறை என் திரு மார்பனையே 7-6-6

ஏழையர் ஆவி  வுண்ணும் இணைக் கூற்றம் கொலோ ? அறியேன் ஆழி அம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ ?அறியேன் சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் தோளியர்காள் !அன்னைமீர் ! என் செய்கேன் ?துயராட்டியேனே 7-7-1

வெங்கண் வெங்கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே ! 7-8-2

கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே ! எனக்கு ஓன்று அருளாய் 7-8-4

பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவள வாய் மணியே !ஆவியே ! அமுதே ! 7-8-1

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர 7-8-2

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் 8-1-10

காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர்கோன் நாங்கள் கோனைக் கண்டால் 8-2-2

திரு செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத் திருவடி என்றும்  திரு செய்ய கமலக் கண்ணும் செவ் வாயும் செவ் வடியும் செய்ய கையும் திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமல மார்பும் செய்ய உடையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தை யுளானே 8-4-7

மாயக் கூத்தா ! வாமனா ! வினையேன் கண்ணா ! கண் கை கால் தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா 8-5-1

நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் தேநீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா ! 8-5-4

செந்தண் கமலக்  கண் கை கால் சிவந்த வாயோர் கரு ஜாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே ! 8-5-7

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டால் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள்ளானே  8-8-1

கரு மாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் 8-9-1

இவ் உலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திரு குறளன் 8-10-3

நல்ல கோட் பாட்டு உலகங்கள் மூன்றி னுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர் சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர்மக்களே 8-10-11

தொண்டர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் 9-2-1

தொண்டர்க்கு அருளி  தடம் கொள் தாமரைக் கண்  விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூவுலகும் தொழ விருந்தருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே 9-2-3

முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் 9-2-5

கண்  இணை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக 9-2-9

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திரு மாலே ! வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா ! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே 9-4-1

கண்டு கொண்டு என் கண் இணை ஆரக் கழித்து பண்டை வினை யாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் அண்டத்து அமரர் பெருமான்அடியேனே 9-4-9

கோலத் தாமரைக் கண் செவ்வாய் வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல் 9-5-7

தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ  நண்ணினான் 9-5-9

ஆர் உயிர் பட்டது எனதுயிர் பட்டது ? பேர் இதழ் தாமரைக் கண் கனி வாயது ஓர் கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள் சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே 9-6-9

குளிர் மூழிக் களத்துறையும் செக் கமலத் தளர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக் கமலதிலை போலும் திரு மேனி அடிகளுக்கே 9-7-3

வடி வேல் தடம் கண் மடப் பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் எவை கொலோ ? 9-8-2

திரு நாவாய்   வாளேய் தடம் கண் மடப் பின்னை மணாளா 9-8-4

மனாளான் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன்  9-8-5

அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரிஏறே எம் மாயோன் 9-9-1

தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப் பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ 9-9-3

செய்கோல தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி  9-9-9

சுரி குழல் கமலக் கண் கனி வாய் கால மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே  10-1-1

அலங்கலங்கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்  10-1-2

மணித் தடத் தடி மலர்க் கண்கள் செவ்வாய் அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் 10-1-9

தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ !தகவிலை தகவிலையே நீ கண்ணா ! 10-3-1

ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா 10-3-3

வடித் தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா 10-3-6

தூ மலர்க் கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட மா மணி வண்ணா ! உன் செங்கமல வண்ண மென் மலர் அடி நோவ நீ போய் ஆ மகிழ்ந்து உகந்தவை மேய்க்கின்று  உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொள் ஆங்கே ? 10-3-7

வசி செய் வுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக விடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ வுகககும் நல்லவரோடும் உழி தராயே 10-3-8

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன் நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே 10-4-1

திரு மெய் உறைகின்ற செங்கண் மால் நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே  10-4-2

வாள் கெண்டை ஒண் கண் மடப் பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே 10-4-3

தலை மேல் தாள் இணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் 10-6-6

திரு பேரான் கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே 10-8-7

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே 10-9-6

முனியே ! நான் முகனே ! முக் கண் அப்பா ! என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா ! தனியேன் ஆர் உயிரே !என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே 10-10-1

எனக்கு ஆரா அமுதாய் எனதாவியை இன் உயரை மனக் காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் புனைக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்  உனகேற்கும் கோல மலர்ப் பாவைக் கண்பா ! என் அன்பேயோ ! 10-10-6

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: