திரு விருத்தம் -6..

தடாவியவம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டுக்

கடாயின  கொண்டொல்கும் வல்லியதேனும்  அசுரர் மங்கக்

கடாவிய வேகப் பறைவையின் பாகன் மதன  செங்கோல்

நடாவிய கூற்றம் கண்டீர்  உயிர் காமின்கள் ஜாலத்துள்ளே ..

அவதாரிகை

-நாயகி உடைய முழு நோக்கிலே அக்ப பட்ட நாயகன் ” தந்தாம் சத்தை கொண்டு தரித்து இருக்க வேண்டுவார் இஸ் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள் “என்கிறான்..

நாயகன்-ஸ்ரீ வைஷ்ணவர்கள்..நாயகி-ஆழ்வார்..ஆழ்வார் செயலில் ஈடு பட்ட  ஸ்ரீ வைஷ்ணவர்கள் சம்சாரத்தில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகில் இவர் அருகில் போவது தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்

தடாவியவம்பும்—பரந்த வாய் அம்பும் ..,காணக் கோலாய் இருக்கை..வில்லோடு கூட அடுத்து பிடித்த அம்பு ..புடை பெருத்து இருக்கை

தடாவிய-வளை வாய் அம்பு ..கோடி வருகிறது மர்மத்தில் படுகை..பிடித்த பிடியிலே பயங்கரமாய் இருக்கை ..

முரிந்த சிலைகளும்-அகர்க்மகமாய் அகர்த்ரு கமாய் இருக்கை ..அம்பும் சிலைகளும் என்பான் என் என்னில் -அம்பு என்கிறது ஜாதிப் பன்மையாலே . ( பார்வை ஓன்று தானே கண்களும் புருவமும் இரண்டு ).சிலைகளும் என்கிறது இரண்டாகையாலே ..அம்பும் சிலைகளும் என்று உபமான மாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில்-சர்வதா சாத்ருச்யம் உண்டாகையாலே

போக விட்டுக் கடாயின  கொண்டொல்கும் வல்லியதேனும்..ஆர் எதிராக இவற்றை விடுவது என்று தன பக்கலிலே இட்டு வைத்தது -தன உடைய சரித் துவத்தோடே பாவம்  போக விட்டு கடாயின அம்பையும் முடிந்த சிலைகளையும் தன பக்கலிலே பிரத்யாஹரித்து .( ஆழ்வார் தமது திரு கண்கள் திறக்காமல் இருந்தமை-வைபவம்- வெளி இடப் படுகிறது ).ஒடுங்குகிற வல்லியே ஆகிலும்  தனக்கு என ஒரு கொள் கொம்பை பற்றி அல்லாது நிற்க ஒண்ணாத அளவிலும் செயல்கள் இப்படியாய்இருக்கை.

அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறைவையின் பாகன்—-பிரதி பட்ஷம் முடியும் படிக்கு ஈடான மிடுக்கை  உடைய பெரிய திருவடியை நடத்துகிற நிர்வாகன் சர்வேஸ்வரன் காண வந்த சோழரோபாதி எதிரிகளை முடிக்கைக்கு தானே அமையும் ..பறவையின் பாகன் என்கிறது -சர்வேச்வரத்வசூசகம்

மதன  செங்கோல் நடாவிய—-இவளை பிராட்டி யாக உடையவன்  காமனுடைய ஆக்ஜையை நிர்வக்கிற

கூற்றம்–அவனை போல் பாணங்களாலே மோகிக்க பண்ணுகை அன்றிக்கே  தானே முடிக்கை என்கிறது..

உயிர் காமின்கள் ஜாலத்துள்ளே—-ஜீவிக்க நினைத்து இருப்பார் தந்தைமை நோக்கிக் கொள்ளுங்கோள்

அவள் திருக் கண்  பார்வையாலே எம்பெருமான் இடம் நம்மை சேர்த்து நம்மை முடித்தே விடுகிறாள்

ச்வாபதேசம்-சம்சாரத்திலே  குடியும் தடியுமாய் ( வீடு மக்கள் ) இருக்க  நினைத்தார் ஆழ்வார் திருப் புளிக் கீழே இருக்கும் இருப்பு காண செல்லாதே  கொள்ளும் கோள் –என்கிறது

சுவாமி நம் பிள்ளை திரு வடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: